PDA

View Full Version : கவிச்சமர்Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

சுட்டிபையன்
10-05-2007, 02:37 PM
மன்றத்தில் எதற்க்கும் பஞ்சம் இருக்கும் ஆனால் கவிஞர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை, இதோ உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறு வேலை அதுதான் கவிச்சமர்

ஒருவர் முதலில் ஒரு கவிதை எழுதுவார் அவர் முடிக்கும் கடைசி சொல்லில் அல்லது கடைசி வரியில் அடுத்தவர் கவிதை வடிக்க வேண்டும் முதலாதவரின் கவிதைக்கு எதிராகவோ இல்லை அதை சம்பந்தப் படுத்தியோ. அது சம்பந்தப் படாமலோ இருக்கலாம்

குறைந்தது 4 வரிகளாவது இருக்க வேண்டும்

இதோ முதல் கவிதையை எங்கள் மன்றத்து ஆஸ்தான கவிஞன் ஆதவன் ஆரம்பிப்பார்

அக்னி
10-05-2007, 02:39 PM
எங்கே ஆதவன் இன்னும் உதிக்கவில்லை..?

சுட்டிபையன்
10-05-2007, 02:41 PM
எங்கே ஆதவன் இன்னும் உதிக்கவில்லை..?

தலை பார்வையிட்டுக் கொண்டிருக்கிண்றார் வெகுவிரைவில் கவிதை வரும் அதன் பின்னர் உங்கள் விளையாட்டுக்களை காட்டுங்கள்

ஆதவா
10-05-2007, 02:44 PM
முதலில் வாழ்த்துக்கள் சுட்டி. முன்பு எனக்கு மடல் இட்டதும் நீர்தானே!! வெகு நாட்களாகிவிட்டது இந்த சமர் தொடங்க....
தீடீரெனக் கேட்பதால் ஏதோ எழுதுகிறேன்... நன்றாக இல்லையென்றால் மன்னிக்க....

கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..

மனோஜ்
10-05-2007, 02:46 PM
பாவி அவள் கூறினால்
உள்ளத்தில் உள்ளவைகள்
உருக்கி வைத்தால்
உருகிடும் கவிஞர்கள்
வடிபப்து நிஞமே
உண்மையை கூறினேன்
ரசிகன் நானே

ஆதவா
10-05-2007, 02:52 PM
மனோஜ்.. நான் முடித்தது பாவி என்ற வார்த்தையில் கவிதையை வேறு இடத்தில் உபயோகிக்கவும்.. தற்சமயம் மாற்றவும்..

தாமரை
10-05-2007, 02:53 PM
கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..

பாவி யாகிப் போனேன் - நீ
பாராது போனதாலே
காவி யாகிப் போகும் - ஆடை
கந்தலான மனமே
ஆவி யிருகி அழுது - கண்ணீர்
ஆறாகி வருமே
தேவி எந்தன் ராகம் - உனைத்
தேடித்தேடி அழுமே!

ஆதவா
10-05-2007, 02:55 PM
அடடே!! செல்வன் அண்ணா முந்திக்கொண்டார்... சரி அடுத்தடுத்து வருவோம்... தற்சமயம் அண்ணாவின் அடியைப் பின்பற்றி வருவோம்.

அரசன்
10-05-2007, 02:59 PM
பாவியடி நான்! - உன்
அழகை ரசிக்காமல் இருந்ததால்!
உன் முகம் உரசியதில்
சிராய்ப்புகள் என் இதயத்துக்கு!
இருந்தும் மருந்து போடவில்லை.
காரணம் என் மனதில்
ஆறாமல் இருக்கும்
உன் நினைப்புக்காக!

ஆதவா
10-05-2007, 03:00 PM
அழுமே எந்தன் கவிதைகள்
நீ நின்று சுவாசிக்காததால்
தொழுமே எந்தன் காதல்
நீ நின்று நேசிக்காததால்
விழுமே என் வியர்வைகள்
நீ நின்று ஆசிக் காததால்
உழுமோ காதற் பயிற்
நீ நின்றுஇதை வாசிக்காததால்?

சுட்டிபையன்
10-05-2007, 03:01 PM
அழுமே எனதுள்ளம் உன்னைத்தேடி
அதுவறிந்தும் உன்மனம் கசியவில்லை
என் காதல் உனக்கு செல்லாக் காசு
உன் மௌனம் எனது மரணம்
அதை புரிந்து கொள்வாயா
என் மனதறியா காதலியே........?

ஆதவா
10-05-2007, 03:01 PM
மூர்த்தி....தாமசமாகிவிட்டது......

இப்போது தொடங்கவேண்டிய வரிகள் "வாசிக்காததால்"

சுட்டியும் லேட்... நான் முந்திக் கொண்டேன்...

தொடங்கவேண்டிய வார்த்தை வாசிக்காததால்

சுட்டிபையன்
10-05-2007, 03:02 PM
ஆஹா கவி சமர் ஆரம்பமே வெகு ஜோரக இருக்கிண்ரது எல்லோருக்கும் வாழ்த்துகக்ள்

முதல் கவி பாடிய ஆதவனுக்கு 500 இபணம்
அதன் பின்னர் 3கவிகளுக்கு தலா 100

மனோஜ்
10-05-2007, 03:03 PM
வாசித்துவிட்டால் என்னை
தன் இமையாலும்
உபதேசித்து விட்டால்
தன் வார்த்தையால்
நான் தான் கல்நோஞ்சன்
நீ கூறிய வார்த்தைகளை
மனதினில் பூட்டியதால்

ஆதவா
10-05-2007, 03:05 PM
மனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..

ஆதவா
10-05-2007, 03:10 PM
பூட்டியதால் நெஞ்சம்
சொன்ன சொல்லை மறுக்கிறது.
வாட்டியதால் கண்கள்
குருதி அடித்து ஓடுகிறது
மாட்டியதால் இதயம்
அலறியடிக்க மறுக்கிறது
சூட்டினால் ஒருவேளை
உண்டோ என் காதல் உயிர்?

தாமரை
10-05-2007, 03:10 PM
பூட்டியதால் உன்னை இதயத்தில்
பூத்ததே ஒரு காதல் பூ
இருட்டிலும் மலரும்
இனிமையாய் மணக்கும்
உன் நினைவுகள்
கண்கள் மூடி
இதயம் திறந்து
சிந்திக்கிறேன்
பூட்டிய மனதில்
முட்டிப் போராடிய நீ
திறந்த இதயத்தில்
அமர்ந்துவிட்டாய்

ஆதவா
10-05-2007, 03:12 PM
இருவரும் ஒரே நேரத்தில்.... எந்த வார்த்தை வைத்து ஆரம்பிக்க?

தாமரை
10-05-2007, 03:12 PM
உயிரே!
ஏன் உயரே போகிறாய்
என்னவள் இன்னும் வரவில்லை
அவள் முகம் காண
உனக்குமா துணிவில்லை?

அரசன்
10-05-2007, 03:13 PM
மனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..


வார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. புரிய வையுங்களேன் ஆதவா.

மனோஜ்
10-05-2007, 03:15 PM
வார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. புரிய வையுங்களேன் ஆதவா.
எனக்கும் தேரியவில்லை ஆதவா
உங்க பாணியில் சிவப்பு நிற எழுத்துகள் கொடுங்கள்

ஆதவா
10-05-2007, 03:16 PM
ஒரே நேரத்தில் நான்கு பேர் இப்போது இருக்கிறோம்... அதனாலேயே கவிதைகள் கொஞ்சம் முந்தி வருகிறது... அடுத்து யாரப்பா?

சுட்டிபையன்
10-05-2007, 03:19 PM
வாழ்த்துக்கள் கவிகளே போட்டி தொடரட்டும்
100 பணம் வென்றவர்கள்
மனோஜ்
செல்வன்
மூர்த்தி


எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

ஆதவா
10-05-2007, 03:19 PM
அதில்லை மனோ!! நான் சொன்ன வார்த்தைக்கு சற்று தூரத்தில் எழுதிவிட்டீர்கள்.. அதுதான்.... வார்த்தை மாற்றம் என்பது சிறிதளவு இருந்தால் சுகம்..

நான் சொன்ன வார்த்தை வாசிக்காததால்... ஆனால் நீங்க தொடங்கிய வார்த்தை வாசித்துவிட்டால்....

இதே செல்வன் அண்ணா என் வார்த்தையான உயிர் க்கு உயிரே என்று மாற்றியிருக்கிறார்.. அது சரி... அர்த்தம் மாறவில்லை... இந்தளவு மாற்றம் போதும் என்று நினைக்கிறேன்...

தொடருங்கள்

மதி
10-05-2007, 03:19 PM
சீக்கிரம் அடுத்து யாராவது கவிதை எழுதுங்கப்பா...
எவ்ளோ நேரம் தான் காத்திருக்கிறது...

சுட்டிபையன்
10-05-2007, 03:20 PM
இப்பகுதியில் அறிஞ்சர் ஒரு கவிதை எழுதும் பட்சத்தில் அவருக்கு 2000 பணம் பரிசு வழங்கப்படும்

இந்த அறிவிப்பு அறிஞருக்கு மட்டுமே

தாமரை
10-05-2007, 03:21 PM
ஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா?

மதி
10-05-2007, 03:22 PM
ஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா?
:ohmy: :ohmy: :aktion033:

ஆதவா
10-05-2007, 03:25 PM
சுட்டி சமாளி.
-------------
அடுத்து நான் எழுதவா?

அக்னி
10-05-2007, 03:25 PM
இப்பகுதியில் அறிஞ்சர் ஒரு கவிதை எழுதும் பட்சத்தில் அவருக்கு 2000 பணம் பரிசு வழங்கப்படும்

இந்த அறிவிப்பு அறிஞருக்கு மட்டுமே

உங்களிடம் 1700 அல்லவா இருக்கிறது.

தாமரை
10-05-2007, 03:26 PM
நீங்கல் எழுதிய இரு நிமிடங்களில் அடுத்த கவிதை வரும்

மதி
10-05-2007, 03:26 PM
சபாஷ் சரியான போட்டி..!

ஆதவா
10-05-2007, 03:27 PM
துணிவில்லை என்னிடம்
தூறலுக்குள் ஒளிந்துறங்கும்
உன்னிடம் வார்த்தை சொல்ல
ஏ மழையே
நீயாவது சொல்லிவிடு
என் காதல் தூதை,
இரக்கமில்லாமல்
உன்னைக் கொல்லும்
என் காதலியிடம்...

மனோஜ்
10-05-2007, 03:27 PM
காதலியாய் நீ இருக்க
காதலனாய் நானிருக்க
காதல் உலகினில் பறந்திடலம்
என எண்ணிடும் வேலையில்
வந்ததடி என் முன் என் உறவுகள்
உன் எதிரியாய்

தாமரை
10-05-2007, 03:29 PM
காதலியிடம் என்ன கண்டாய்
அம்மா குமுறினாள்
அப்பா அடிக்க வந்தார்
அக்காவும் அண்ணனும் பொருமித்
தீர்த்தனர்
ஆமாம்
யார் இவர்கள்?

மதி
10-05-2007, 03:29 PM
காதலியிடம் சொல்லச் சொன்னேன்
அவள் என் காதலி என்று
நண்பனும் சொன்னான்
அவள் என் காதலி என்று.

மதி
10-05-2007, 03:30 PM
இப்ப என்னங்க பண்றது..?

சுட்டிபையன்
10-05-2007, 03:30 PM
ஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா?
நீங்கள் எல்லாருமே அறிஞர்கள்தானப்பா இல்லை என்று சொல்லவில்லை

:ohmy: :ohmy: :aktion033:
:icon_tongue:

சுட்டி சமாளி.
-------------
அடுத்து நான் எழுதவா?
இது சுட்டிக்கும் அறிஞருக்கும் நடக்கும் ஒரு சிறு போட்டி

உங்களிடம் 1700 அல்லவா இருக்கிறது.

அதெல்லாம் சுட்டிக்கு ஜுஜுப்பி:062802photo_prv:

மனோஜ்
10-05-2007, 03:30 PM
மனோஜ், ஓவியா, சுட்டிபையன், stselvan, ஆதவா
இது நடக்காது
நா பிறகு வருகிறோன்

தாமரை
10-05-2007, 03:32 PM
எதிரியாய் யாரோ
என் திரியில் வருவாரோ
உதிரியாய் இருந்தாலும்
உறுதியாய் இருப்பாரோ
கதிரும் பதரும்
கல்லும் புல்லும்
எதுவும் புரிபடாமல்
ஆயிரம் கவிதைகள்
தெளிக்கப்படுமோ

ஆதவா
10-05-2007, 03:32 PM
அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்..

தாமரை
10-05-2007, 03:34 PM
நான் உணவருந்தி வருகிறேன்.. தொடருங்கள்

ஆதவா
10-05-2007, 03:35 PM
தெளிக்கப்படும் கவிகள் யாவும்
ஆதவனுடைய கவியே
விளித்து நீங்களும் எழுதுங்கள்
அவனடி வார்த்தை பற்றியே
குளித்து மூழ்குங்கள் என்
காதல் கவிகளிலே - நாளும்
களித்து மகிழுங்கள் என்
ஒவ்வொரு வரிகளிலே

மதி
10-05-2007, 03:35 PM
நானும் கிளம்ப நேரமாகிவிட்டது...
நாளை பார்க்கலாம்...
அட..அட..அட...
மாறி மாறி போட்டிக் கவிதைகளை படிப்பதே தனிசுகம் தான்..

அக்னி
10-05-2007, 03:38 PM
வரிகளிலே
கவி கோர்க்க முன்னரே,
வருகிறதே
பல கவிதைகள்...
புரிகிறதா நண்பர்களே
எனது வேகம்..?

சுட்டிபையன்
10-05-2007, 03:39 PM
வாழ்த்துக்கள் கவிஞர்களே தொடருங்கள் உங்கள் போட்டியை

ஓவியா
10-05-2007, 03:40 PM
அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்..

இப்படி சொல்லி விட்டு 3 நிமிடத்தில் நீங்களே ஒரு கவிதையை போட்டு விட்டாயே!!!!!!!!!!

நான் எழுதிய கவிதையை அழிக்கும்படி செய்துவிட்டாய்.

ஆதவா
10-05-2007, 03:40 PM
வேகம் உம்முடையது நன்று என்று
மோகம் கொண்டு நானும்
தேகம் சிலிர்க்க எழுதுகிறேன்
சோகம் மிகுந்த கவிதை
" மறந்திடாதே காதலியே "

ஆதவா
10-05-2007, 03:42 PM
அக்கா மன்னிக்க.. அந்த கவிதைக்கு எதிர்கவிதை என்னால் இடமுடியும் என்பதால் இட்டேன்.... மன்னிக்க வேண்டுகிறேன்..

தாமரை
10-05-2007, 04:15 PM
காதலியே
மன்னிக்க
காதல் வலியே
காதல் வரலியே!

மனோஜ்
10-05-2007, 04:15 PM
காதலியே என் சோகத்தை
உன்னிடம் சொல்ல நினைத்திடும்
நேரத்தில் நான் உன்அருகில் இல்லை
நீயும் என்னருகில் இல்லை

ஓவியா
10-05-2007, 04:18 PM
கவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல்

இல்லை என்று கூறுவதால்
இருக்கும் என் காதல்
இல்லாமல் போகாது
இல்லையென்பதுதான் - காதலில்
இருக்கும் என்ற வசனமாம்.

தாமரை
10-05-2007, 04:23 PM
வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்..

வசனமாம் என் கவிதை
வசவுகள் வந்தன
விமர்சனமாக
விஷமாக
விமர்சனங்கள் போகட்டும்
விசனங்கள் வேகட்டும்
சொந்த சனங்கள்
சொல்வதென்ன
காதலா காவியமா?

ஷீ-நிசி
10-05-2007, 05:42 PM
காவியம் ஆக உதவும்
சில காதல்கள்....
காதல் ஆக உதவும்
சில காவியங்கள்....

அரசன்
10-05-2007, 05:50 PM
காவியங்கள் படைத்தேன்
கவிதைகளால்.
கண்மணியே
உன்னைக் கண்ட பின்பு!
கலைந்து போனது-என்
காவியக் கனவு-நீ
என்னை நீங்கி சென்றதால்!

ஓவியா
10-05-2007, 05:53 PM
நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!

அரசன்
10-05-2007, 05:57 PM
இருந்திருப்போம்
இருவரும் ஒன்றாக
என் இதயத்தில்! - அதில்
காணவில்லையடி - உன்
இதயத்தை!

ஓவியா
10-05-2007, 06:02 PM
உன்
இதயத்தை
நீயே வைத்துக்கொள்
என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் செல்
அது என்றுமே
உன்னுடையதுதான்.

அரசன்
10-05-2007, 06:11 PM
அது
என்றுமே உன்னுடையதுதான்!
உனக்காக பிறந்த
என்னுடைய இதயம் மட்டுமல்ல.
என் உயிரும்தான்!

ஆதவா
10-05-2007, 06:14 PM
என்னங்க சூடு குறைஞ்சு போச்சு போல இருக்கே!!!

ஓவியா
10-05-2007, 06:14 PM
என் உயிரும்தான்
என் உடலும்தான்
என் உள்ளமும்தான் - அனைத்தும்
என்னைகாக்கும்
என் ஏசு பிரானுக்கே

ஆதவா
10-05-2007, 06:17 PM
என்னாங்க ரெண்டு பேரும் விதியை மீறிறீங்க.... கடைசி வார்த்தைதானே எடுத்துப் போட்டு கவிதை எழுதணும்... நீங்க கடைசி வரியே எடுத்துப் போடறீங்களே... ஓவி அதுக்கும் மேல போய் கடைசி வரிக்கும் முந்தின வரியைத் தூக்கிப் போட்டு எழுதறாங்க,....

சுட்டி..... விதிகளை சரியா கொடுப்பா..

அரசன்
10-05-2007, 06:21 PM
ஏசு பிரானையே
ஏசியபோதும்
ஏசாதிருந்தது - இந்த
ஏழையின் திருவுள்ளம்!

ஓவியா
10-05-2007, 06:23 PM
இப்படியெல்லாம் சொன்னா நாங்க கேட்டு விடுவோமா!!!!

நான் இப்படிதான் பாடுவேன், ஏன்னா நான் மன்ற கவிஞசர்,
மூனு பதக்கம் நெஞ்சிலே குத்தி இருக்கேன்......உங்கனாலே ஆனத பார்த்துக்கோ ஹி ஹி ஹி
ஹி ஹி ஹி (சும்மா சும்மா மமதை இல்லபா)


இப்ப என்னாங்கிறீங்க தலிவா.

கூடாத? சரி செய்யாலே.

வேனும்னா ஒரு மன்னிப்பு கூவிகிறேன். அம்புட்டுதான். :love-smiley-073:

அரசன்
10-05-2007, 06:26 PM
என்னாங்க ரெண்டு பேரும் விதியை மீறிறீங்க.... கடைசி வார்த்தைதானே எடுத்துப் போட்டு கவிதை எழுதணும்... நீங்க கடைசி வரியே எடுத்துப் போடறீங்களே... ஓவி அதுக்கும் மேல போய் கடைசி வரிக்கும் முந்தின வரியைத் தூக்கிப் போட்டு எழுதறாங்க,....

சுட்டி..... விதிகளை சரியா கொடுப்பா..


கடைசி வரி சில நேரங்களில் சிக்குமல்லவா அதனால்தான்.

ஷீ-நிசி
10-05-2007, 06:26 PM
இப்படியெல்லாம் சொன்னா நாங்க கேட்டு விடுவோமா!!!!

நான் இப்படிதான் பாடுவேன், ஏன்னா நான் மன்ற கவிஞசர்,
மூனு பதக்கம் நெஞ்சிலே குத்தி இருக்கேன்......உங்கனாலே ஆனத பார்த்துக்கோ ஹி ஹி ஹி
ஹி ஹி ஹி (சும்மா சும்மா மமதை இல்லபா)


இப்ப என்னாங்கிறீங்க தலிவா.

கூடாத? சரி செய்யாலே.

வேனும்னா ஒரு மன்னிப்பு கூவிகிறேன். அம்புட்டுதான். :love-smiley-073:


அதானே! ஸ்பெஷல் கவிஞருக்கு இந்த சலுகை கூட காட்டலைன்னா எப்படி....:sport009:

ஆதவா
10-05-2007, 06:35 PM
கடைசி வரி சில நேரங்களில் சிக்குமல்லவா அதனால்தான்.
அப்படி சிக்கும்போது எழுதுங்க... ஆனா முழு வரியையும் அல்ல.. அது சரியான சமராக இருக்காது..... கடைசி வார்த்தை ஓகே

ஓவியா
10-05-2007, 06:35 PM
அதானே! ஸ்பெஷல் கவிஞருக்கு இந்த சலுகை கூட காட்டலைன்னா எப்படி....:sport009:

ஷீநிஷி,
உங்க பின்னூட்டம் கண்டு எனக்கு கூச்சமே வந்து விட்டது....
உங்க கவித்திரன்முன் நான் ஃநத்திங் பேபி :love-smiley-073:

பென்ஸ்
10-05-2007, 06:36 PM
ஏன்...
ஏன்...
எதனால... இம்புட்டு ஸ்பீடு...
செல்வன் ... தொடங்கியாச்சான்னுதானே கேட்டேன்... இப்படி செய்கிறீரே,,

ஆதவா
10-05-2007, 06:38 PM
அதானே! ஸ்பெஷல் கவிஞருக்கு இந்த சலுகை கூட காட்டலைன்னா எப்படி....:sport009:

அதெல்லாம் முடியாது... அவுங்க மூனு நீங்க ஒன்னு வாங்கியிருந்தாலும் எல்லாரும் சமம்தான்.... :D :sport009:

தாமரை
10-05-2007, 06:39 PM
ஏசு பிரானையே
ஏசியபோதும்
ஏசாதிருந்தது - இந்த
ஏழையின் திருவுள்ளம்!

திரூவுள்ளம் இல்லையோ
காதல்
பெருவெள்ளம் பாய்ந்திட
கவிதை கருவெல்லாம்
உனைச் சூல்கொண்டு
கற்பனையை பிரசவித்திட

ஆதவா
10-05-2007, 06:40 PM
கடைசி வார்த்தை திருவுள்ளமா?

அரசன்
10-05-2007, 06:41 PM
அதெல்லாம் முடியாது... அவுங்க மூனு நீங்க ஒன்னு வாங்கியிருந்தாலும் எல்லாரும் சமம்தான்.... :D :sport009:"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" எனும் ஆதவாவின் வாக்கிலும் உண்மையுள்ளதே. தங்கள் நீதிக்கு தலை வணங்குகிறேன்.

தாமரை
10-05-2007, 06:43 PM
பிரசவித்திட..

ஆதவா
10-05-2007, 06:45 PM
பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
உன் பெயர் சொல்லியே அழுகிறது.
ஒரு தாயாக வேண்டாம்
ஒரு செவிலியாகவாவது
இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...

தாமரை
10-05-2007, 06:47 PM
கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
கண்களை மூடினேன்
உன் திருமுகம்
கவிதையாய்
கவிதைக்கு
கவிதையே

அரசன்
10-05-2007, 06:48 PM
கவிதை எழுத
காதலிக்க வேண்டுமாம்!
நானும்
காதலிக்கிறேன்
என் கவிதையை!

ஆதவா
10-05-2007, 06:49 PM
கவிதையே எழுதி எழுதி
காதல் தொலைத்துவிட்டேன்
இப்போது
காதல் எழுதி எழுதி
எல்லாமே தொலைத்துவிட்டேன்.

தாமரை
10-05-2007, 07:03 PM
தொலைத்துவிட்டேன்
மனம் முதலில்
மதி பிறகு
நிம்மதி இறுதியாக

ஆதவா
10-05-2007, 07:11 PM
இறுதியாக எழுதப்பட்ட
இரு கவிதைகள்
நம் மடியில் உறங்குகின்றன
பால் மனம் மாறாமல்

அரசன்
10-05-2007, 07:11 PM
இறுதியாகவும், உறுதியாகவும்
சொன்னாள்,
என்னை மறந்துவிடு என்று!
இதயம் பறிபோனதென்னவோ
எனக்குதான்!

தாமரை
10-05-2007, 07:12 PM
மாறாமல் இருந்து விடு
நீயாவது
மாறுவது
உன்னாலாவது
மாறிப் போகட்டும்

ஆதவா
10-05-2007, 07:14 PM
அடடே!! தூள் கவிதைகள்..

ஆதவா
10-05-2007, 07:54 PM
போகட்டும் உன்னோடு
இக்கவிதையின் துளிகள்...

நீ அருகிலிருக்கும் தருணங்களில்
எழுதி வடித்தது இவைகள்.
நீ பிரிந்த நாள் முதல்
கவிதை வரைவதற்கும்
தூரிகைகள் சஞ்சலப்படுகிறதே!!

தாமரை
10-05-2007, 07:59 PM
சஞ்சலப்படுகிறதே
இளமனது
இவள் மனது
இதயத்தில்
ஒரு தராசு
பாசமும் காதலும்
தட்டுக்கள் உயர்ந்து இறங்க
உணவிறங்கவில்லை
யாரின் இதயமும் இரங்கவில்லை
கடைசியில் சாதித்தாள்
அவளுக்கு ஆயிரம்
இரங்கல் கவிதைகள்

ஆதவா
10-05-2007, 08:03 PM
கவிதைகள் புலப்படுகிறது
கண்களின் மொழிமாற்றத்தில்
காதல் புலப்படுகிறது
இதயத்தின் ஒலிமாற்றத்தில்
காமம் புலப்படுகிறது
தேகத்தின் சுகமாற்றத்தில்
சோகம் புலப்படுகிறது
இவையனைத்தின் பரிமாற்றத்தில்

தாமரை
10-05-2007, 08:06 PM
பரிமாற்றத்தில் தடுமாற்றம்
இதயம் பரிமாறி
இதயத்தில் இளைப்பாறி
இதையும் அதையும்
இடம்மாற்றி
காதல்

ஆதவா
10-05-2007, 08:09 PM
காதல்
என்னை நோகடிக்கிறது
இந்த பாழாய்ப் போன
கவிதைகளை எழுதச் சொல்லி

தாமரை
10-05-2007, 08:18 PM
சொல்லிச் சென்றவளே
சொல்லாமல் மயங்கும்
இதயம் புரியுமா உனக்கு
புகை வண்டியில் சன்னலோரத்தில்
எட்டிப் பார்த்து
கையசைக்கையில்
ஆடிப் போனது என் மனது
அடுத்த கோடை விடுமுறை வரை
நினைவுகளைச் சுமந்து
பிளாட்பார பெஞ்சுகளில்
என் மனக் கீறல்கள்
பதியப் படும்
உன் பெயராக

தாமரை
10-05-2007, 08:32 PM
அடுத்து யாரு

ஆதவா
10-05-2007, 08:35 PM
அடடே கவனிக்கலை... நானே வருகிறேன்

ஆதவா
10-05-2007, 08:38 PM
உன் பெயர் அந்த பட்டியலில்
கண்டபோது துடித்துப் போனது
உன்னைக் காதலித்த உள்ளம்.
எப்படி?
ஏன்?
எனக்குத் தெரியாத வஞ்சம்.
பாதகத்தில் ஒரு கலையாக...
உன்னால் இழுத்துவரப்பட்டு
காவல் அறையில்
எனக்கான கேள்வி கேட்கப்பட்டது
" அந்த பிராஸ்டியூட் உன் காதலியா?"

ஆதவா
10-05-2007, 08:40 PM
அண்ணாச்சி நான் தூங்கப் போறேன்... இங்கன மணி 1.11. நித்திரை தள்ளாடுது... நாளை சந்திப்போம்... இதே போட்டியோட...

தாமரை
10-05-2007, 08:41 PM
காதலியா மனைவியா
நீ
நான் இன்னும்
மகிழ்ச்சியாய் இருக்கிறேனே

மனோஜ்
10-05-2007, 09:12 PM
இருக்கிறேனே என்று நீ நினைப்பாய்
உண்மையில் நான் இல்லை உன்
இதயம் தான் இங்கு இருக்கிறது
பெண்னே நீ சென்றால் நான்
இங்கில்லை இறைவனிடம்

ஓவியா
10-05-2007, 09:59 PM
இறைவனிடம்
கேட்டு கேட்டு
சலித்து விட்டது
என் முகவரியை

இனி ஒருமுறை
அவன் இல்லை
என்று சொன்னால்
கல்லறை மட்டுமே
கதி.....இது நிஜம்.

sinnavan
10-05-2007, 10:15 PM
இது நிஜமானால்
உம் அன்பை விட்டு
பிரியும் நெஞ்சங்கள் பல..
இதுவே கனவானால்
உம் அன்பில் திளைக்கும்
நெஞ்சங்கள் பல...

அறிஞர்
10-05-2007, 10:16 PM
ஒரே நாளில் இத்தனை கவிதைகளா... கலக்கல் தான்..

ஆதவா
11-05-2007, 01:50 AM
சின்னவன்.... அழகாய் கவிதத எழுதுகிறீர்கள்.... போட்டிகளில் பங்கேற்கலாமே? கவிஞர் அறிமுகமும் கொடுக்கலாமே?

ஆதவா
11-05-2007, 02:09 AM
நெஞ்சங்கள் மறுக்கிறது
கண்கள் அதைக் கண்டு
அலறுகிறது
என்ன செய்வேன் காதலியே
உன் ஒருத்திக்காக
என் இளமை வீண்படுவதா?

தாமரை
11-05-2007, 02:25 AM
வீண்படுவதா தடத்தோள்கள்
வீண்படுவதா உரமேறிய கைகள்
வீண்படுவதா வீரநெஞ்சம்
வீண்படுவதா வெற்றித் திருமுகம்
வா தலைவா
வெற்றிக்க் கொடிகட்ட
;;;
;;;
''''

என் கட்சியில்
கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்

ஆதவா
11-05-2007, 02:29 AM
எந்த வார்த்தையில் ஆரம்பிக்க?

தாமரை
11-05-2007, 02:31 AM
மாட்டேனென்கிறார்கள்

ஆதவா
11-05-2007, 02:47 AM
மாட்டேனென்கிறார்கள்
சிலர் மணம் முடிக்க..
அவர்களுக்குத் தெரிவதுண்டா
தாம்பத்தியம் அறுசுவையுணவு
பிரம்மச்சரியம் கடும்நோன்பு

தாமரை
11-05-2007, 02:48 AM
கடும் நோன்பு
விரத வீரியம்
இல்லாவிட்டால்
காதல் இவ்வளவு
தெய்வீகமா?

ஆதவா
11-05-2007, 03:06 AM
தெய்வீகமா காதல்
என்று சந்தேகப்படுகிறாய்
தெய்வம் தான் காதல்
என்று சந்தோசப் படுகிறேன்
எது உண்மை?

தாமரை
11-05-2007, 03:16 AM
உண்மை
உன்மேல் காதல் உண்மை

பி.கு:
பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்.

ஆதவா
11-05-2007, 03:19 AM
எதில் துவங்குவது? உண்மை? எனின்? (எனின் இல் முடியாதே எனக்கு....)

தாமரை
11-05-2007, 03:20 AM
எனின்
நான் என்செய்ய
என்று ஆரம்பியுங்கள்

ஆதவா
11-05-2007, 03:27 AM
நான் என்செய்ய
நுதலும் செவிகளும்
நோண்டிய ஓர்புறமும்
துஞ்சலைத் துலைத்துவிட்டு
நெஞ்சதிடம் கரைத்தனவே
வில்லுமோர் விழிகள்
சொல்லுமோர் பாக்களில்
ஊன் தவிர்க்கக் கண்டேன்
உளமாறச் சொன்னேன்.
நிந்தனை ஏதுமில்லை
நிந்தனையே நினைக்குமடி

தாமரை
11-05-2007, 03:32 AM
நினைக்குமடி ஊர்
ரோஜாக்களைப் பறித்து
மந்திரிகளை வரவேற்க
யானைகளின் கால்களில்
சிதறவிடும் ஊர்..
பூக்கள் நசுங்கின
நாமும் நசுங்கினோம்
யானையும் மணியோசையும்
மந்திரிகளின் அடிபொடிகளும்
முடிந்தவரை காலி செய்ய
ஊர் மட்டும் மயானமாய்
அன்று
நினைக்குமடி ஊர்..

தாமரை
11-05-2007, 03:44 AM
ஆதவா! இன்னும் யாராவது வந்து எழுதட்டும். இனி 5 கவிதைகள் வரை நாம் அடுத்த கவிதை பதிவதில்லை என இருப்போம்.. உம்மிரு கவிதைக்கு மத்தியிலோ என்னிரு கவிதைகளுக்கு மத்தியிலோ 5 கவிதைகள் இருக்க வேண்டும் என உறுதி எடுப்போம்.. மக்கள் எழுதட்டும்

மதி
11-05-2007, 03:47 AM
ஊர் என்னை சொன்னது
காதல் பைத்தியம் என்று
சொல்லிவிட்டு போகட்டும்
பைத்தியக்காரர்கள்..!

மதி
11-05-2007, 03:48 AM
ஆதவன், செல்வன்...
இருவரது கவிதைகளும் அருமை...
சட்டென எதிர்கவிதை புனைந்து தொடுக்க
ஒரு கவியரங்கமே நடத்தியிருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்..இருவருக்கும்..
ஓரத்தில் பார்வையாளனாக நான்..

தாமரை
11-05-2007, 08:49 AM
சமர் என்றால் போர்
இங்கே நடப்பது
போரா
இல்லை "போரா"
யாராவது வந்து எழுதுங்களேன்.

சுட்டிபையன்
11-05-2007, 08:51 AM
அடடா ஒரு நாளில் 110 பின்னூட்டத்தை தாண்டிவிட்டதா
கவிகளுக்கு பாராட்டுக்கள்

சுட்டிபையன்
11-05-2007, 08:55 AM
பைத்தியக்காரர்கள் உள்ள
உலகமடா இது
பணப்பைத்தியம்
நிலப்பைத்தியம்
பொன் பைத்தியம்
பெண் பைத்தியம்
இப்படி ஆயிரமாயிரம்
பைத்தியங்கள் சேர்ந்த
உலகத்தில் ஒருவன்
மட்டும் தெளிவுள்ளவானாய்
வாழ்வதெப்படி.........?

தாமரை
11-05-2007, 09:29 AM
வாழ்வதெப்படி
நூல் எழுதியவர்
பணம் சம்பாதித்தார்
வாழ்ந்து விட்டார்

ஆதவா
11-05-2007, 09:54 AM
அண்ணா இங்கே இன்று யாரும் வரவில்லை போலும்... நாம் நடத்தலாம் போர்...

ஆதவா
11-05-2007, 09:57 AM
விட்டார் பல தொழில்கள் - மதி
கெட்டார் வாய்ச்சொல் கேட்டு
பட்டார் பல அடிகள் அவரே
இட்டார் ஒரு மொழி
" பலதொழில் நேர்"

ஷீ-நிசி
11-05-2007, 10:02 AM
மொழி தேவையில்லை
விழி பேசும் காதலுக்கு..

உடல் தேவையில்லை
ஊடல் தேவையில்லா காதலுக்கு..

ஆதவா
11-05-2007, 10:04 AM
ஷீ!! நான் கொடுத்த வார்த்தை நேர் ஆச்சே!!!

மதி
11-05-2007, 10:07 AM
விட்டார் பல தொழில்கள் - மதி
கெட்டார் வாய்ச்சொல் கேட்டு
பட்டார் பல அடிகள் அவரே
இட்டார் ஒரு மொழி
" பலதொழில் நேர்"
:ohmy: :ohmy: :violent-smiley-004: :violent-smiley-010:

ஆதவா
11-05-2007, 10:11 AM
:D :D :D

மதி தொட்டார் ஒரு
மதி கெட்டார் கவி
மிதி மிதி என்று
மிதித்து விடப்போகிறார்,,, :D :D

(இது போட்டி கவிதை அல்ல)

ஷீ-நிசி
11-05-2007, 10:11 AM
நேர் நேர் தேமா
அவர் என் மாமா
இலக்கணமில்லாதது
என் கவிதை...

இக்கணமே விழுந்திடும்
உனக்கும் ஓர் கவிதை!

பெண்ணே நீ கேட்டால்....

ஆதவா
11-05-2007, 10:20 AM
கேட்டால் என்ன?
நீ தாராது போவாயா?
சொற்கள் சிக்காத
கிறுக்கல்
ஒரு காகிதத்தில் தருகிறேன்
கேட்கிறேன்
தாராது போவாயா?
ஒரு விமர்சனமாவது.

தாமரை
11-05-2007, 10:39 AM
விமர்சனமாவது
உன்பார்வை
விரிந்து சுருங்கி
பளிச்சிட்டு படபடத்து
உன் பார்வை
என் சுப்புடு

ஷீ-நிசி
11-05-2007, 10:47 AM
சுப்புடு விமர்சித்தால்
அது இசைக்கு மரியாதை -நீ
எப்படி விமர்சித்தாலும்
அது என் கவிதைக்கு மரியாதை!

தாமரை
11-05-2007, 10:55 AM
மரியாதை
கம்பீரமாய் வெளியில்
தலை நிமிர்ந்து சென்றார்

கிணற்றடியில்
அவள் அழ
அந்த கிணற்று நீர்
உப்பானது.

மதி
11-05-2007, 11:01 AM
உப்பானது கடல்
அட
பெண் மீனுக்கும்
இதே நிலை தானா?

அல்லிராணி
11-05-2007, 11:39 AM
நிலைதானா
பெண்களின் மனம்
நீர் நிலைதானா
அழுத்தம் அதிகரித்து
கரையுடையும்
இல்லை
நினைவுகள் வறண்டு
வெடித்து விடும்
நீர்நிலைதானா

அக்னி
11-05-2007, 12:00 PM
நீர்நிலைதானா...
உன் மனம்..?
அதில்,
ஓர் குமிழிதானா...
என் காதலின் ஆயுள்..?

தாமரை
11-05-2007, 12:03 PM
ஆயுள் தண்டனை அல்ல
ஆயில் தண்டனை..
ஆயுசு முழுதும்
நியாய விலைக் கடையில்
எண்ணை வாங்க
கியூவில் நிற்கக் கடவது..

ஆதவா
11-05-2007, 12:12 PM
ஆஹா!! போட்டி கவிதைகள் அருமை... செல்வன் அண்ணாவின் குறும்புக் கவிதைகள் ம்... பலே!! ஆயில் " கவிதை சூப்பரப்பு....

இதோ களமிறங்கிவிட்டேன்...

அக்னி
11-05-2007, 12:13 PM
கடவதுவா அல்லது நிற்கக்கடவதுவா?

ஆதவா
11-05-2007, 12:13 PM
எதுவேண்டுமானாலும் தொடங்குங்க அக்னி... நிற்கக் கடவது சரிவரும் என்று நினைக்கிறேன்

ஆதவா
11-05-2007, 12:17 PM
என்னப்பா !!! தொடங்குங்கப்பா!!

அக்னி
11-05-2007, 12:19 PM
நிற்கக்கடவது... என் கண்ணீர்...
நிற்கக்கடவது... என் இதயம்...
நிற்கக்கடவது... என் மூச்சு...
இவற்றோடு,
நிற்கக்கடவது... உன் நினைவும்,
நிரந்தரமாய் என் ஆன்மாவோடு...

ஆதவா
11-05-2007, 12:20 PM
ஆன்மாவோடு
ஆழ்ந்துறங்கும்
வஞ்சத்தை கொஞ்சம்
தட்டி எழுப்பு
இங்கே
வஞ்சத்தை வஞ்சத்தால்
அறுக்கவேண்டுமாம்

தாமரை
11-05-2007, 12:24 PM
அறுக்க வேண்டுமாம்
எழுதச் சொன்னார்கள்
கவிதை
என்னை

அக்னி
11-05-2007, 12:25 PM
அறுக்கவேண்டுமாம்... என்னை.
அழகாய் அலங்கரித்து
பொட்டிட்டு, மாலையிட்டு,
மங்களமாய் மஞ்சள் நீரூற்றி,
அறுக்கவேண்டுமாம்... என்னை.
கடவுள் கேட்டாரா மனிதா..?
நீதி கேட்கும் நான்,
உன்னால்
சாவுக்கு நேர்ந்துவிடப்பட்ட
ஓர் ஆடு...

ஆதவா
11-05-2007, 12:30 PM
ஓர் ஆடு என்னை
வெறித்துப் பார்த்தது..
"எப்படியும் தின்னப்படும்
எனக்கு இப்போதாவது கொடு
இரு பிடி தழைகள்."
வெறும் காசு மட்டுமே
என்னிடம்
மனிதம் எப்போதோ
தொலைந்துவிட்டது

தாமரை
11-05-2007, 12:32 PM
தொலைந்துவிட்டது
எனத் தேடிய இதயம்
என் அருகிலே
என்னை
இதயமில்லாதவன் என
திட்டிக்கொண்டே

அக்னி
11-05-2007, 12:41 PM
திட்டிக்கொண்டே...
போவது உன் வார்த்தை
ஆனால்,
என்னைக்
கட்டிக்கொண்டே போகுது
உன் பார்வை...

மதி
11-05-2007, 12:42 PM
திட்டிக்கொண்டே இருந்தாள்
என் மனையாள்
இன்று அவள் திட்டுவது
கூட திகட்டிவிட்டதே!

செல்வரே..நீங்க சொன்ன டெக்னிக் தான்...!

மதி
11-05-2007, 12:43 PM
உன் பார்வைத் தீ
சுட்டதனால்
வெந்துவிட்டதடி என் இதயம்
வா
முத்தமென்ற மருந்தால்
அதை குணப்படுத்து

தாமரை
11-05-2007, 12:45 PM
குணப்பட்டுத்து
உன்பார்வை துளைத்த காயத்தை
நீயே குணப்படுத்து
உதடுகளால்
உன் எச்சில் மருந்திட்டு

மதி
11-05-2007, 12:54 PM
மருந்திட்டுப் பார்த்தேன்
ஆறவில்லை
ஆறா ரணம்
ஆக்கியது ஆரோ??

ஆதவா
11-05-2007, 01:03 PM
யாரோ ஒருத்தி
தூதுவிட்ட அன்னப் பஷியாக
தோளமர்ந்து துடைக்கிறாய்
என் கண்ணீரை
பார்க்கும் கூட்டமெல்லாம்
காதல் என்றே சொல்கிறது

தாமரை
11-05-2007, 01:05 PM
சொல்கிறது மனது
இது தவறென்று
இருக்கட்டுமே
தவறு தவறென்று சொல்வது
நான்
தவறத்தானே

மதி
11-05-2007, 01:07 PM
தவறத் தான் இருந்தேன்
உன் சிற்றிடை
வளைவுகளில்
மனம் வழுக்கி...

ஆதவா
11-05-2007, 01:07 PM
வழுக்கிய பாறைபோலவே
மனதை வைத்திருக்கிறாய்
எப்படி நான்
தங்கி இளைப்பாற?

அக்னி
11-05-2007, 01:07 PM
சொல்கிறது என் மனம்
உன்னைக் காதலிக்கச் சொல்லி..,
கொல்கிறது உன் மனம்
என் காதலை தள்ளி...

ஆதவா
11-05-2007, 01:09 PM
அடடே! அக்னி.. கவிதை பிரமாதம்.... ஆனால் கொஞ்சம் தாமசம்.

அக்னி
11-05-2007, 01:10 PM
கொஞ்சமல்ல நிறையவே ஆதவா...

தாமரை
11-05-2007, 01:11 PM
வழுக்கி போகுது காலடியில்
என் காலம்
கடந்து போவோர்
நானிருக்கும் ஸ்மரணையின்றி
சுற்றி வந்து
முகர்ந்து பார்க்கும் நாய்..
பக்கத்தில் துணி விரித்து
பணம் பண்ணும்
அதனினும் கீழானவன்..
சறுக்கிச் செல்கிறது நினைவு..

மதி
11-05-2007, 01:12 PM
மதி முந்தி
ஆதவன் பிந்தி..
அதனால் வழுக்கி..
..
மந்தியென சொல்லாதவரையில் சந்தோஷமே...:D

அக்னி
11-05-2007, 01:14 PM
இளைப்பாற
என் மனம் என்ன
சத்திரமா?
நிலையாக
வந்தால் எனக்குள்
நீ இருப்பாய்
பத்திரமா...

தாமரை
11-05-2007, 01:15 PM
பத்திரமா கண்மணி
பார்த்துக் கொள் உடம்பை
பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்
அது வரை
பத்திரம்

மதி
11-05-2007, 01:15 PM
இளைப்பாற
என் மனம் என்ன
சத்திரமா?
நிலையாக
வந்தால் எனக்குள்
நீ இருப்பாய்
பத்திரமா...
அட்டகாசம் அக்னி

மதி
11-05-2007, 01:17 PM
பத்திரமும் வந்தது
என் பாகமும் வந்தது
சொத்தெல்லாம் வரவாக
செலவானதே உறவுகள்...

ஆதவா
11-05-2007, 01:19 PM
உறவுகளை ஒதுக்கிவிட்டு
உன்னியிரினுள் இணைந்திவிட்டேன்
தமிழ்மன்றமே!
கவிதைகளின் கடலே!

தாமரை
11-05-2007, 01:19 PM
உறவுகள்
உரசல்கள்
உரல்கள்
உடல்கள்
மயான அமைதி

மதி
11-05-2007, 01:21 PM
கடலே..
ஏனிப்படி ஆர்ப்பரிக்கிறாய்?
அவள் முகம் காணா
என் தவிப்பு
உனக்கும் தெரிந்துவிட்டதோ?

தாமரை
11-05-2007, 01:27 PM
தெரிந்து விட்டதோ
இனிப் பொறுத்துப்
பயனில்லை
காலில் விழுந்துவிட வேண்டியதுதான்..
..
தினமும் நடப்பதுதானே!

மதி
11-05-2007, 01:46 PM
நடப்பது தான் என்று
எத்தனை நாள் தானிருப்பது?
இவளாவது காதலை
ஏற்கமாட்டாளா?

lolluvathiyar
11-05-2007, 01:49 PM
ஏற்கமாட்டாளா
ஏற்கமாட்டாளா?
என்று ஏங்குவதை விட
தேடி பிடி ஏற்பவளை
நிண்று வடும் வீண் ஏக்கம்

அக்னி
11-05-2007, 01:54 PM
ஏக்கம் எனக்கு மட்டுமா..?
அது
உனக்குத் தரமாட்டாதா
சிறிதேனும் தாக்கம்..?

ஆதவா
11-05-2007, 05:17 PM
தாக்க முற்றுக்
கிடந்த இவனைநீ
தேக்கப் படுத்தினாய்
மன்றமே
நாக்கதிரச் சொல்கிறேன்
என்றும் நீ வாழியே!

ஷீ-நிசி
11-05-2007, 05:24 PM
வாழியே என் தோழியே!

மணமாகாதிருந்தால்!
என் காதலா..
மணந்திருப்பேன் என்றாய்!

மணமானாதாலே..
என் காதலை....
மறந்திருப்பேன் என்றாய்!

ஆதவா
11-05-2007, 05:30 PM
என்றாய் சொன்னாள்
அவளொரு பரமஸ்த்ரீ என்று
என்றாவது கொள் அவளை
நினக்குச் சதி என்று.
ஆம் தேவர்காள்.
தாய் சொல்லக் காத்திருக்கிறேன்
எமக்கேதும் வேண்டா காதல்

(என்றாய் = என்+தாய்)

தாமரை
11-05-2007, 05:33 PM
காதல்
இனிப்பாய்
புளிப்பாய்
துவர்ப்பாய்
கசப்பாய்
உப்பாய்
காரமாய்
சுவையானதாமே
எனக்குச்
சுவை மறந்துவிட்டது..

ஏதோ வாழ்கிறேன்
யாருடனோ
ஏனோ

ஷீ-நிசி
11-05-2007, 05:36 PM
காதலின் மா! ரணம் தீயென
காலமெல்லாம் எனைக்கொல்லும்!
சாதலின் காரணம் நீயென
ஞாலமெல்லாம் உனைசொல்லும்!

ஆதவா
11-05-2007, 05:37 PM
ஏனோ என்று தானோ
உன்னைத் தானோ
நானும் மானோ என்றுநினைத்
தேனோ.. அதைகவியால்
சொல்லுவேனோ

நானே வந் தேனே
புள்ளி மானே எந்தன் தேனே
ஊனே எந்த உயிரே

gragavan
11-05-2007, 06:38 PM
ஊனும் உயிரும்
ஊணாய்த் திங்கும்
காதல் தேனாகுமா?
தேன் குழவியாகுமா?

தாமரை
11-05-2007, 08:18 PM
குழவியாகுமா என்
உள்ளம்
உலகை மறந்து
உண்மையாய் சிரிக்க

மனோஜ்
11-05-2007, 08:20 PM
சிரிக்க தான் செய்கிறொன்
உன் செய்கைகளை பார்த்து
இரண்டு மனதாய் நீயும நானும்

தாமரை
11-05-2007, 08:29 PM
நானும் முயற்சிக்கிறேன்
இமயம் தொடலாமா
நிலவைத் தொடலாமா என்று
உன் இதயம் தொட
வேறெங்குதான்
பயிற்சி செய்ய?

மனோஜ்
11-05-2007, 08:34 PM
செய்ய தான் நினைக்கிறோன்
நீ என்னை புரிந்து கொள்வாய்
என்று ஆனால் இன்று வரை
அது நடப்பதாக தெரியவில்லை

தாமரை
11-05-2007, 08:40 PM
தெரியவில்லை உன் மனது
தள்ளித் தள்ளி நிற்கிறாய்
தலைகுனிந்து போகிறாய்
நீ பெண்ணா
நான் பெண்ணா

ஆதவா
11-05-2007, 08:59 PM
பெண்ணா ஓவியமா?
பண்ணிசைக்கும் காவியமா?
கண்ணா ? காதலா ?
புண் துடைக்கும் மருந்தா?
மண்ணா மலையா?
நீ எதுவோ? என் தோழியே!

தாமரை
11-05-2007, 09:03 PM
தோழியே
துவண்ட போது
என் தலை கோதி
தூக்கி நிறுத்தியவளே
நான் நிமிர்ந்தேன்
நீ ஏன்
தலை குனிந்தாய்

ஆதவா
11-05-2007, 09:12 PM
குனிந்த தலை நிமிரவில்லை
சதியே நீ
மணத்திற்கு முன்னால்
இன்று நிமிர்ந்த தலை
குனியவில்லை
அடியே
மணத்திற்குப் பின்னால்

தாமரை
11-05-2007, 09:15 PM
பின்னால்
பின்னல்

ஜடையிலும்
நடையிலும்

ஆதவா
11-05-2007, 09:18 PM
நடையிலே கண்டுகொண்டேன்
நீ பேசன் ஷோ மங்கை
உடையிலே தெரிந்துகொண்டேன்
நீ தேசத்தின் நாச நங்கை

தாமரை
11-05-2007, 09:23 PM
நங்கைகளின்
நவராத்திரி விரதம்
பொம்மைகளுக்குப் பூஜை
சுண்டல் நைவேத்தியம்
பாட்டிலும் கூத்திலும்
கணவரோ பசியோடு.

ஆதவா
11-05-2007, 09:25 PM
பசியோடு ஆட்கொள்ளும்
நித்திரைகளே கேளும்
உமக்கென்று ஒரு வயிறிருந்தால்
உண்மை உணருவீர் நாளும்.

gragavan
11-05-2007, 09:27 PM
நாளும் நாளும்
தோளும் தோளும்
உரசிச் சொல்கின்ற
அன்பிற்கும் உண்டோ
உடைக்கும் நாள்?

தாமரை
11-05-2007, 09:28 PM
நாளும் கோளும்
தோள் சேர்த்து
கவிழ்த்து விட்டன..
ஜோசியருக்கு

gragavan
11-05-2007, 09:31 PM
ஜோசியரிடம் சொல்வேன்
காதல் பிறந்த பொழுது
முடிந்தால் எழுதட்டும்
காதலுக்கொரு ஜாதகம்

பென்ஸ்
11-05-2007, 09:33 PM
தாமரை...
பதில் கவிதைகளுக்கு இனி குறைச்சல் இல்லை என்ரு இருந்தேன்.... பதில் கவிதைகளே மன்றத்தை அலங்கரிக்கிறதே...
ஆதவ, தாமரை, ஷீ, மதி, அக்னி, மனோஜ், சுட்டி, ஓவி, மூர்த்தி... யப்பா.. கலக்குறிங்க....
நான் எஸ்கேப்.....

தாமரை
11-05-2007, 09:35 PM
ஜாதகம் பார்த்தேன்
ஏழில் கேது
அவளைப் பார்த்தேன்
என்னிலை சேது

ஆதவா
11-05-2007, 09:38 PM
சேது சமுத்திரம் என்றார்கள்
ராமர் பாலம் என்றார்கள்
கடற் கொள்ளையர்கள் என்றார்கள்
ஈழத்து வீணர்கள் என்றார்கள்
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
மீன் பிடிக்கச் செல்லுகிறது ஒரு கூட்டம்

gragavan
11-05-2007, 09:39 PM
சேது கட்டிக்
கடலைக் கடந்தாராம்
அவளோடு நான் போடும்
கடலையைக் கடக்க
அவளைக் கட்டவா!

தாமரை
11-05-2007, 09:39 PM
கூட்டத்தில் போனேன்
கைதட்டினேன்
பிரயாணியும்
நூறு ரூபாயும்
அடுப்பு எரிந்தது
கொஞ்ச நாட்களில்
நாடும்

gragavan
11-05-2007, 09:40 PM
கூட்டம் போட்டு பேச
காதல் பொதுவுடமை இல்லை
கூட்டம் இல்லாமல் பேச
காதலில் பொது உடைமை இல்லை

gragavan
11-05-2007, 09:40 PM
நாடும் வீடும்
கூடி வந்தால்
காதல் பிழைக்கும்
இல்லையேல்
கவிதை பிழைக்கும்

தாமரை
11-05-2007, 09:43 PM
பிழைக்கும் பிழைக்கும்
ஒரே ழ தான்
அதனால்தான்
சிலர்
பிழை செய்து பிழைக்கிறார்கள்

ஆதவா
11-05-2007, 09:45 PM
பிழைக்கிறார்கள் குருடர்கள்
பாடல் பாடிக் கொண்டு
தயங்காமல் வீசுங்கள்
அதற்குண்டான கூலியை..

gragavan
11-05-2007, 09:58 PM
கூலி கொடுத்தாலும்
வேலி பிரிக்குமா வெள்ளாடு

பென்ஸ்
12-05-2007, 03:12 AM
வெள்ளாடு தோல் உடுத்தி
புலியை மனதில் வைத்து
சிங்காரித்து சிரிப்புடன்
வீதியில் அலைகிறார்
மாட்டியவர் யவரும் மீண்டதில்லை

தாமரை
12-05-2007, 03:42 AM
மீண்டதில்லை
வலையில் சிக்கிய
மீன்களும்
மீன்களில் சிக்கிய
ஆண்களும்

ஆதவா
12-05-2007, 05:34 AM
ஆண்களும் பெண்களும்
செய்யும் பொதுவான தவறு
காதலிப்பது.

தாமரை
12-05-2007, 05:38 AM
காதலிப்பது
சுவாசிப்பது
இதயம் துடிப்பது
எல்லாவற்றையும்
ஒன்றாகவே நிறுத்தமுடியும்

ஆதவா
12-05-2007, 05:45 AM
நிறுத்தமுடியாத வினை பலவுண்டு
நெஞ்சைச் சுரண்டும் சிகரெட்டு
ஈரல் தின்னும் மது
வாழ்க்கை மட்டுமா
உயிரையே அழிக்கும் மாது
இன்னும் எத்தனை?
நிறுத்தமுடியாத வினை ஒன்றுண்டா
உன்மீது நானிழைத்த காதலன்றி?

அல்லிராணி
12-05-2007, 06:04 AM
காதலன்றி
வேறும் உண்டு
அன்பின் பிறவகைகள்
காதல் வந்தால் அவையெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமல் போகும்
காதல் ஒரு கண்ணாமூச்சி
துன்பம் போல் இன்பம்
இன்பம் போல் துன்பம்

பிச்சி
12-05-2007, 07:28 AM
துன்பம் இல்லாமல்
துயரம் நீங்காமல்
ஏதும் காதல் இருந்தால்
சொல்லுங்கள்
விழி திறக்கக் காத்திருக்கிறேன்

- பிச்சி

மனோஜ்
12-05-2007, 08:42 AM
காத்திருக்கிறேன் அவள் வருகைக்கு
விழிமேல் விழிவைத்து
இதயத்தில் ஆசைவைத்து
வருவாளா என்னவள் தருவாள
அள்இதயத்தை என்னிடம்

ஆதவா
12-05-2007, 09:04 AM
என்னிடம் என்ன இருக்கிறது?
ஆயுள் கடந்த புன்னகையும்
அரவேக்காடு அனுபவமும்
உடன் பிடித்துக் கொள்ள
கைத்தடியும்
பெத்துப்போட்ட பிள்ளையும்
என்னிடம் என்ன இருக்கிறது?
எடுத்துக் கொள்ள?

மனோஜ்
12-05-2007, 09:08 AM
கொள்ள தான் நினைக்கிறோன்
என் ஆசைகளை என் காதலை
ஆனால் முடியவில்லை ஏன்
என்று தெரியவில்லை
உண் முகம் கண்டு

ஆதவா
12-05-2007, 09:45 AM
கண்டு வெதும்பிய காட்சிப் பிறழலில்
மொண்டு ததும்பிய சாட்சிச் சுழல் நான்

வாசகி
12-05-2007, 09:53 AM
கண்டுபிடித்த கண்களை கொன்றுவிடுங்கள்-அவளைக்
காணாவிட்டாள் படித்திருப்பேன்.
கடமைகளை முடித்திருப்பேன்
அவள் திருடிச்சென்றது என்
மனதைமட்டுமல்ல எதிர்காலத்தையும்.

மனோஜ்
12-05-2007, 10:49 AM
எதிர்காலத்தையும் எதிர் நோக்கி
எதிரிகளையும் எதிர் நன்று
எதுர்பவர்களையும் சமாதனபடுத்தி
எதிர்நோக்கி நின்றோன்
அவள் வருவாள் என

gragavan
12-05-2007, 10:58 AM
வருவாள் என
காத்திருந்தால்
அரிவாள் வருதே

ஆதவா
12-05-2007, 11:52 AM
வருதே அரிவாள்
அவள் வருவாள்
எனக் காத்திருந்தால்

:D :D :D

தாமரை
12-05-2007, 12:24 PM
காத்திருந்தால்
காதல் காலத்தில்;
மொட்டை வெய்யிலிலும்
சுகமடி

இன்று ஏ.சி ஷோரூமில்
காத்திருக்க முடியவில்லை
நீ சேலை எடுக்கும் வரை

ஆதவா
12-05-2007, 12:26 PM
எடுக்கும் வரை
எனக்குத் தெரியவில்லை
திருட்டென.. அது
எடுத்தபின்தான் அறிகிறேன்
திருட்டென..

தாமரை
12-05-2007, 12:28 PM
திருட்டென நான்
அறிந்து செய்யவில்லை
திருப்பித் தரவும்
மனமில்லை
இதயம்

ஆதவா
12-05-2007, 12:31 PM
இதயம் என்பதே
இழக்காதிருந்தேன்
உன்னை ஓர்விழியால்
காணும் வரை

ஓவியன்
12-05-2007, 12:34 PM
இதயம் என்பதே
இழக்காதிருந்தேன்
உன்னை ஓர்விழியால்
காணும் வரை

இழப்பதும் சுகமே
உனக்காக இழப்பது என்றால்
இறப்பதும் சுகமே
உனக்காக இறப்பதென்றால்.

சுட்டிபையன்
12-05-2007, 12:39 PM
கண்டு வெதும்பிய காட்சிப் பிறழலில்
மொண்டு ததும்பிய சாட்சிச் சுழல் நான்


வருவாள் என
காத்திருந்தால்
அரிவாள் வருதே


வருதே அரிவாள்
அவள் வருவாள்
எனக் காத்திருந்தால்

:D :D :D


இழப்பதும் சுகமே
உனக்காக இழப்பது என்றால்
இறப்பதும் சுகமே
உனக்காக இறப்பதென்றால்.

என்னப்பா போட்டி விதிமுறைகளைத்தாண்டி போகின்றது.............?:icon_blush:

ஓவியன்
12-05-2007, 12:42 PM
என்னப்பா போட்டி விதிமுறைகளைத்தாண்டி போகின்றது.............?:icon_blush:

அட எனக்கு விதிமுறை தெரியாதுப்பா, இப்பதான் வந்தேன்.

மன்னிச்சுக்கோங்க சாமி!

அல்லிராணி
12-05-2007, 12:42 PM
இதயம் என்பதே
இழக்காதிருந்தேன்
உன்னை ஓர்விழியால்
காணும் வரை

வரைகடந்து
வரையறுத்து
வரும்வரை
அவரை
என் நெஞ்சில் வரை

தாமரை
12-05-2007, 12:49 PM
வரையெழும்
வங்கக் கடலெழும்
நிலவெழும்
கதிரெழும்
இவை எழ மறந்தாலும்
உன் நினைவெழும்

ஷீ-நிசி
12-05-2007, 12:55 PM
நினைவெழும் கணங்களில்
நித்திரையில்லை,
என் விழித்திரையில்....
நான் விழித்திருக்கையில்!

அரசன்
12-05-2007, 12:59 PM
விழித்திருக்கையில்
நினைவுகள் அலைமோதுகின்றன.
உறக்கத்தை ஒதுக்கிவிட்டேன்,
உன் நினைவுகளுக்காக!

அல்லிராணி
12-05-2007, 01:01 PM
விழித்திருக்கையில்
உலகம்
என்னை பழித்திருக்கிறது
நான்
உறங்கிய பின்னோ
சிலை எடுத்து
மாலைசூட்டி...

மயங்கத்தான் போனேன்
ஓட்டு வாங்கிய பின்னர்
எல்லோரும் போனபின்னர்
நான் அனாதையாய் இருக்கையிலே
என்னை எழுப்பிய
காகத்தின் எச்சம்

ஓவியன்
12-05-2007, 01:01 PM
விழித்திருக்கையில்
நினைவுகள் அலைமோதுகின்றன.
உறக்கத்தை ஒதுக்கிவிட்டேன்,
உன் நினைவுகளுக்காக!

உன் நினைவுகளுக்காக
என் நினைவுகளைத் தொலைத்தேன்
உன் உறவுக்காக
என் உறவுகளைத் தொலைத்தேன்.

தாமரை
12-05-2007, 01:03 PM
உன் நினைவுகளுக்காக
என் நினைவுகளைத் தொலைத்தேன்
உன் உறவுக்காக
என் உறவுகளைத் தொலைத்தேன்.
தொலைத்தேன் கனவுகளை
உறக்கம் மயக்கமான வேளைகளில்
விழித்த போது
விழிகள் கூசியது
என்னிலை கண்டு
உள்ளமும்

அரசன்
12-05-2007, 01:05 PM
தொலைத்தேன் - இந்த
தொலைத் தூர தேனை!
மலைத் தேன் - இவள்
மதியில் மயங்கி
மலைத்தேன்!

ஷீ-நிசி
12-05-2007, 01:07 PM
தொலைத்தேன் கனவுகளை
உறக்கம் மயக்கமான வேளைகளில்
விழித்த போது
விழிகள் கூசியது
என்னிலை கண்டு
உள்ளமும்

உள்ளமும் கேட்கிறது!
காதலா, குடும்பமா?!
இல்லமும் கேட்கிறது!
காதலா, குடும்பமா?!

அல்லிராணி
12-05-2007, 01:09 PM
உள்ளமும்
உள்ளே இருந்தவனும்
காணவில்லை
இதயம் இழந்த பின்
மாரடைப்பாம்
ம்ம்ம்
கிண்டல் செய்கிறார்கள்

அல்லிராணி
12-05-2007, 01:11 PM
குடும்பமா?
தனிக்குடித்தனம்
விவாகரத்து வழக்கு
பிள்ளைகள் ஹாஸ்டலில்
நான் வெற்றிக்காக வெறியுழைப்பில்
இதில்
குடும்பமா

ஆதவா
12-05-2007, 01:43 PM
குடும்பமா குட்டியா
பந்தமா சொந்தமா
பாசமா காமமா
என்று பாராது
வீணே பிறந்திருக்கிறார்கள்
பிரம்ஹச் சாரிகள்

அல்லிராணி
12-05-2007, 01:47 PM
பிரம்மச்சாரிகள்
ஒற்றுமையாய்..
ஒருவருக்கொருவர் உயிர் கொடுத்து
காதல் வளர்த்து
கல்யாணம் செய்து
பிரிந்தார்கள்

ஆதவா
12-05-2007, 01:51 PM
பிரிந்தார்கள் என்றாலும்
அவர்கள் எவ்வாறு
பிரம்ஹச்சாரிகள்?
ப்ரம்ஹச்சரியம் என்றால்
என்னவோ?

அரசன்
12-05-2007, 01:54 PM
என்னவோ
தெரியவில்லை.
என்னருகில் நீயிருந்தால்
என்
பாலைவனமும் சொலைவனமாகிறது!

அல்லிராணி
12-05-2007, 01:54 PM
என்னவோ
ஏதோ என கலங்காதே
நான் கடைபிடிப்பது
ப்ரம்மச்சாரியம்
நீ
ப்ரம்மத்தின் ஆச்சர்யம்

அரசன்
12-05-2007, 01:55 PM
என்னவோ
ஏதோ என கலங்காதே
நான் கடைபிடிப்பது
ப்ரம்மச்சாரியம்
நீ
ப்ரம்மத்தின் ஆச்சர்யம்நான் முந்திக் கொண்டேனாக்கும்

அல்லிராணி
12-05-2007, 01:56 PM
சோலைவனமாகிறது
அந்த அடர்ந்த காடு
நீ வந்த பின்பு
நீ போனாலோ
பாலைவனம்

பின் குறிப்பு ; இது காதல் கவிதை அல்ல
காடழித்து நாடாக்கி, மழைபொய்த்து மனிதன் கைவிடும் பாலைவனத்தைப் பற்றிய புலம்பல்.

ஆதவா
12-05-2007, 01:58 PM
பாலைவனத்தில்
பூக்கள் தேடுகிறேன்
மாலை நேரத்தில்
புள்ளிசைக்கு ஏங்குகிறேன்
வேலையும் ஓடவில்லை
எனக்கு என்னாயிற்று?
ஒருவேளை
இதுதான் காதலோ?

அரசன்
12-05-2007, 01:59 PM
காதல்
ஒரு கண்ணாம்பூச்சி!
தேடினால் ஓடிவிடும்.
ஓடினால்
தேடிவரும்

தாமரை
12-05-2007, 02:02 PM
தேடிவரும் சொந்தங்கள்
கண்களுக்கு தெரிவதில்லை
வராமல் போய்விட்ட
அந்த ஒரே ஒருவரைப் பற்றி
வாய்க்கு வாய் புலம்பல்

ஆதவா
12-05-2007, 02:02 PM
அஞ்சு பேரு இருக்கீங்க... விளையாடுங்க... நான் கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சி பேசிட்டு வரேன்....

gragavan
12-05-2007, 02:29 PM
புலம்பல் இலவசம்
காதல் தோல்வியோடு

தாமரை
12-05-2007, 02:30 PM
தோல்வியோடு
தோள்கொடுத்து
தோல்விக்கும்
வெற்றிக்கு
வழிகாட்டு

ஓவியா
12-05-2007, 02:36 PM
வழிகாட்டு
உன் காதலில்
நான் திக்கு திசை
தெரியாமல்
தவிக்கிறேன்

gragavan
12-05-2007, 02:37 PM
வழிகாட்டும் தெய்வம்
வலி காட்டுமானால்
எது தெய்வமாகும்

தாமரை
12-05-2007, 02:44 PM
தவிக்கிறேன்
தெய்வத்திற்கும்
பக்தருக்கும் மத்தியில்
புகை மூட்டம்
கண்ணெரிச்சல்
வியர்வை
பல வித மணங்கள்
ஆனால்
எல்லோரும் நல்லாயிருக்க.
வேண்டுதல்களோடு

ஆதவா
12-05-2007, 02:45 PM
தெய்வமாகும் செயல்தான்
காதல் அடியே
நீ பக்தி செய்யடி