PDA

View Full Version : கவிச்சமர்



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

மயூ
19-05-2007, 01:45 PM
சாம்பலாக மாறிவிட்டேன்
இப்போ என்னை மன்னிப்பாயா?
இல்லை மீண்டும் தண்டிப்பாயா?
மன்னித்தால்
மீண்டும் காதலனாக காதலிக்கிறேன்
தண்டித்தால்
தண்டனை பெற்ற
காதலனாகக் காதலிக்கிறேன்
காதலனாக மட்டும் முடியாது
என்று என் மனதை
கருவறுத்து விடாதே!

ஆதவா
19-05-2007, 01:56 PM
கருவருத்துவிடச் சென்ற
பாங்கியொருத்தி
பிள்ளைக் கனவு கண்டாள்
பேறு காலத்துச் சுகம்
தேறுமா இனி நமக்கென
நினைத்துக் கொண்டாள்
கருவழித்தல் ஏன்?
ஆம்
நடந்துதான் ஆகவேண்டும்
இல்லையென்றால்
அக்னியும்
அருந்ததியும்
ஒளிந்துகொள்ளக் கூடும்
அவள் வார்த்தைகளினின்று
திறவுகின்ற எல்லாமே
பொக்கிஷமோ?
வெறும் மண் குடமோ?
நினைவழுந்த மேனியெங்கும்
வியர்வழுத்து
வீதிக்குத் திரும்பினாள்.
ஏனோ...
கொலை செய்யாள் பத்தினி..

ஓவியா
19-05-2007, 02:02 PM
ஆதவா வர வர உங்கள் கவிச்சமர் கவிதைகள் நீளமாகிகொண்டே போகின்றன.

குட்டியா எழுதினா படிக்க வசதியாக இருக்கும்.

இது என் கருத்து. கொவிக்காதீங்க சின்ன தல.

சுட்டிபையன்
19-05-2007, 02:05 PM
பத்தினி வேடம்
தரித்தவரெல்லாம்
பத்தினி இல்லை
திரௌபதி வேடம்
தரித்தவரெல்லாம்
திரௌபதியுமில்லை

ஆதவா
19-05-2007, 02:14 PM
திரவுபதியுமில்லை பத்தினியென் றாங்கே
தருக்கக் கேட்டேன் செவிகளிலே - யாரியம்பியது
உருவெடுத்த உயிரெலாம் உணர்வெடுத்த உயிரென
கருத்துளைத்த விட்டிலால் ஞான வெளிச்சமுண்டோ?
அவள் பத்தினியே என்றேகிச் சென்றார்கள்
சுவரோ டொட்டும் பல்லியாய்ச் சென்றேன்
கண்ணர்களின் கூட்டத்தில்

ஓவியா
19-05-2007, 02:23 PM
கூட்டத்தில் கோவிந்தா
போடு போட்டுக்கொண்டேயிரு
தனிமையில் என் காதலுக்கு
நாமம் போடாதே!!!

ஆதவா
19-05-2007, 02:29 PM
போடாதேயென்று சொன்னாலோ குறைந்துவிடாதே
கூர்மம் கண்களில் அப்பிக் கொண்டு
ரெளத்திரம் தெறிக்க போடா டேய் என்று சொல்லு
தேயென்று சொன்ன நெஞ்சம் தேய்ந்துவிடும்
அனல் கக்கிய கண்களை பிறகு
அடக்கிவிடு.

சுட்டிபையன்
19-05-2007, 02:31 PM
அடக்கி விடு
என் ஆணவத்தை
என் தேவதை
உனது காதலன்
என்ற
கர்வத்திலிருக்கிறேன்
என் ஆணவத்தை
அடக்கிவிடு நீ

nparaneetharan
19-05-2007, 02:34 PM
நாமம் போட்டே என்னை
நாசமாக்கி விட்டாயே
காமம் கொண்ட பிசாசே
உன்னை நம்பி மோசம் போய்விட்டேனடா
பக்தி என்ற பெயரில்
என்னை சக்தியற்றவள் ஆக்கிவிட்டாய்
கண் மூட நினைத்தேன்
காலம்கூட உதைத்துவிட்டது
நிர்க்கதியில் நீந்துகின்றேன்
இக்கதி யார் தீர்ப்பார் ?

ஆதவா
19-05-2007, 02:44 PM
பரணீ.... தாமதம் என்றாலும் உங்கள் வரிகளிலிருந்தே ஆரம்பிக்கிறேன்... மன்னி சுட்டி.... நீங்கள் இருப்பதே தெரியவில்லை.. :D

---------------------
தீர்ப்பார் சில தீர்ப்புகள்
தீரார் வீட்டில்
வேடிக்கை செய்துகொண்டிருக்கும்
பெண்களின் பிணக்குகள்

nparaneetharan
19-05-2007, 02:57 PM
பிணக்கோடுதான் வந்தேன்
இணக்கமாய் உன்னை சேர்ந்தேன்
மணக்கும் இல்வாழ்வில்
பல சுகங்கள் களித்து நிற்கின்றேன்
சுகமான சுமையே தினம் உறவாகி
புதிதாய் பிறக்கின்றேன்

ஆதவா
19-05-2007, 03:05 PM
பிறக்கின்ற பொழுதுகளில்
வதனங்கள் மேம்படும்
வதைபட்ட தருணங்கள்
தோற்றுவிடும்

nparaneetharan
19-05-2007, 03:08 PM
தோற்றுவிட்ட காதலிற்காய்
தொலைந்துவிடவில்லை
துவண்டுவிடவில்லை
பிறந்தெழுந்தேன்
புதிதாய் உலகை கண்டேன்
சுற்றுகின்ற பூமிதனில்
மாறுகின்ற வாழ்க்கைதனில்
நிற்கின்றேன் நிலையாக

ஆதவா
19-05-2007, 03:12 PM
நிலையான நிலையில்
நின்றிருக்கவில்லை மனிதன்
நிலையற்ற
நிலவுலகில்

தீபா
19-05-2007, 05:51 PM
நிலையான நிலையில்
நின்றிருக்கவில்லை மனிதன்
நிலையற்ற
நிலவுலகில்

நிலவுலகில் எங்கே தேடுகிறாய்
என்னை..?
நான் இருக்கும் இடம்
சொர்க்கம் என்று சொன்னாயே?

ஓவியா
19-05-2007, 05:59 PM
சொன்னாயே - அன்று
சொல்லாமல் சொன்னாயே
கேட்காமலே சொன்னாயே
கடலையை கடக்க
என்ன வழி என்று
சொல்லாமல் சொன்னாயே

தீபா
19-05-2007, 06:05 PM
சொன்னாயே - அன்று
சொல்லாமல் சொன்னாயே
கேட்காமலே சொன்னாயே
கடலையை கடக்க
என்ன வழி என்று
சொல்லாமல் சொன்னாயே

சொன்னாய் என்னிடம் பல
சொன்னாய் ஆயின்
சொல்லவேண்டியது சொன்னாயா?

ஓவியன்
20-05-2007, 03:58 AM
சொன்னாயா என்கிறாயே?
சொல்லாமல்
புரிவது தானே காதல்.
காதலில்
வார்ததைகளை விட
மெளனமே வலிது.

சுட்டிபையன்
20-05-2007, 04:26 AM
மௌனமே வலிது
தேசத்தின்
ஓலங்களை விட
எமது மக்களின்
மௌனமே வலிது

சக்தி
20-05-2007, 05:32 AM
வலிது தான்
பெண்ணே
ஈட்டியின்
கூர்முனையை
காட்டிலும்
உன்
விழிப் பார்வை

ஓவியன்
20-05-2007, 06:40 AM
உன் விழிப் பார்வைக்காக
காத்திருந்தன என்
கண்கள்
உன் ஒரு சொல் வார்த்தைக்காக
விழித்திருந்தன என்
செவிகள்.
ஆனால் நீ வீசியதோ
ஏளனப் பார்வையும்,
சுடுஞ்சொற்களும் தானே?

மயூ
20-05-2007, 06:54 AM
தானே வருவதா காதல்
இல்லை என்பேன் நான்
முகம் பார்த்து
உளம் அறந்து.
கற்பனையில் உன்னை
மனைவியாக்கி குடும்பம் நடத்தி
அதில் நம்பிக்கை உண்டானால்தான்
காதல் வரும்!

ஓவியன்
20-05-2007, 07:07 AM
காதல் வரும்!
காதல் வரும் என்று
உன் பின்னே திரிந்தேன்.
வந்ததோ உன்
அப்பனும் அண்ணனும் தான்.
காதலல்ல.

அன்புரசிகன்
20-05-2007, 07:18 AM
காதலல்ல நீ சொன்னது.
வாழ்தல்லல்ல எனக்கிருப்பது.

காதலுண்டு என்வார்த்தையில்.
வாழ்வில்லை உன் உதட்டில்

மயூ
20-05-2007, 07:26 AM
உதட்டில் ஓர் வார்த்தை
செயலில் ஒரு வார்த்தை
அடுக்குமா பெண்ணே?

ஓவியன்
20-05-2007, 07:28 AM
பெண்ணே!
என்னிடம் உன்
எச்சங்கள் ஏராளம்.
உன் காதலைத் தவிர.

பி.கு-தபு சங்கரின் வரிகளை என் பாணியில் மாற்றியது இந்தக் கவிதை.

அன்புரசிகன்
20-05-2007, 07:32 AM
காதலை தவிர வேறில்லையா?
சாதனைக்கு எண்ணமில்லையா?
சாதல் தான் வேண்டுமா?

ஓவியன்
20-05-2007, 07:35 AM
வேண்டுமா
வெற்றி உன் வாழ்க்கையில்?
காதலித்துப் பார்.

அன்புரசிகன்
20-05-2007, 08:41 AM
காதலித்துப்பார் உன் விம்மம் உடையுமாம்.

உள்ளத்தின் விம்பம் தெரியும் நீ காதலிக்கப்பட்டால்.

சக்தி
20-05-2007, 08:45 AM
காதலிக்கப்பட்டால்
ஜென்ம பலன்
காதலித்தால்
ஆத்ம பலன்

அன்புரசிகன்
20-05-2007, 08:52 AM
பலனுக்காக காதலா?
நலனுக்காக காதலா?

வழி பிறக்கவேண்டும் காதலிக்கப்பட
வழி ஏற்ற வேண்டும் காதலிக்க

lolluvathiyar
20-05-2007, 08:52 AM
பலன் எதிர்பாத்து காதலித்தால்
மிஞ்சாது போகும் பலம்

சக்தி
20-05-2007, 08:58 AM
பலம் பார்த்து
வருவதல்ல
காதல்-இங்கு
மனம் பார்த்து
வருவதுதான்

ஓவியன்
20-05-2007, 09:01 AM
வருவது தான்
உன் வருங்கால மாப்பிள்ளையா?
பாவம் அவரிடமாவது
உண்மையாய் இரு.

சக்தி
20-05-2007, 09:12 AM
உண்மையாய் இரு
உள்ளங்கள்
ஒன்று படும்
உன் காதல்
தன்நிகர் பெரும்

ஓவியன்
20-05-2007, 09:49 AM
உண்மையாய் இரு
உள்ளங்கள்
ஒன்று படும்
உன் காதல்
தன்நிகர் பெறும்

பெறும் எம் காதல்
கோடி என்றிருந்தேன்.
பெறும் அவன் செல்வம்
கோடி என்று போனாய்!.
வெறும் கவிதைகளுடன்
கோடியே தஞ்சமானேன்.

சூரியன்
20-05-2007, 10:07 AM
தஞ்சமானேன் உன்னோடு
உன் உயிரில் கலந்து
பிரியாமல் இருப்பேன்
நீ இறக்கும் வரையிலே

சக்தி
20-05-2007, 10:19 AM
நீ இறக்கும் வரையிலே
உன் முகம்
எனக்கு ஆதரவு
மறைந்த பின்பு
உன் நினைவுகள்

சூரியன்
20-05-2007, 10:33 AM
நினைவுகள் மட்டும் அல்ல
நாம் பழகிய இடமெல்லாம்
நம் காதலை நினைவுட்டும்
காலெமெல்லாம்.

சுட்டிபையன்
20-05-2007, 12:03 PM
காலமெல்லாம் வாழ்ந்திட
எங்கள் தமிழன்
பெயர் சொல்லும்
எங்கள் தேசம்
தாயகமாக
எப்போது கிடைக்கும்?

ஓவியன்
20-05-2007, 12:10 PM
கிடைக்கும் தாயகம்
வெகு விரைவில்.
பறந்திடும் துயரங்கள்
இறக்கை கட்டி.

மயான வீதிகள்
களை கட்ட,
களை கட்டிய
மயானங்கள் களையிழக்க,
வருவார்கள்
எங்கள் மறவர்கள்
ஒளிக் கீற்றாய்.

சமைத்திடலாம்
தாயகம் ஒரு மனதாய்.

மயூ
20-05-2007, 01:20 PM
மனதாய்ப் படைத்த தாயகம்
வளர்வது கண்டு பூரிப்போம்
அயல் நாடுகளின்
நட்பு நாடாவோம்
உலகின் நட்சித்திரமாவோம்!
சிங்கப்பூரே சிலாகிக்குமளவுக்கு
சிலு சிலுவென்று வளர்வோம்

ஓவியன்
20-05-2007, 01:25 PM
வளர்வோம் என்று விட்டீர்
பன்மையில் அதுவே
வளர்சியின் முதற்படி.

தகர்த்திடுவோம் தடைகளை
படைத்திடுவோம்
புது யகம்.

சக்தி
20-05-2007, 02:32 PM
புது யுகம்
படைத்திட
பிறந்திட்ட
இளைஞர்கள்
கையில்
மது பாட்டில்கள்

ஓவியா
21-05-2007, 01:40 AM
மது பாட்டில்கள்
காலியானதாம்
கோழி உடல்கள்
புதைக்கபட்டதாம்
உண்ணாவிரத
போராட்டத்தின்(ல்)
கூட்டனி வெற்றியாம்

ஓவியா
21-05-2007, 01:55 AM
கொஞ்ச நாளாகவே இந்த பக்கம் நல்லா ஓடுது. நன்றி கவிஞர்களே.

தாமரை
21-05-2007, 03:22 AM
வெற்றியாம் விருதாம்
விண்ணதிர வெடிமுழக்கமாம்
மேடைகள் தோரணங்கள்
ஊர்வலங்கள்
இன்றைய குப்பைகள்
நாளை நமக்கு
உணவு.

சக்தி
21-05-2007, 03:35 AM
உணவு
ஓர் நல்ல மருந்து
உண்க வேண்டும்
நன்கு தெரிந்து
இல்லையெனில்
அதுவே உனக்கு
கடைசி விருந்து

மயூ
21-05-2007, 04:53 AM
விருந்து உண்டு களிக்கவா
உன் நினைவில் திளைக்கவா
இரண்டுமே ஒன்றுதான்
இறுதியில் திகட்டிவிடும்

சக்தி
21-05-2007, 05:20 AM
இறுதியில் திகட்டிவிடும்
நிலையல்ல
நான் கொண்ட காதல்
உன் முத்தம் போல்

மயூ
21-05-2007, 05:26 AM
முத்தம் போல் திகட்டாது
நம் நம்காதல் என்றாய்
பின்னாளில்
முத்தம் போல் திகட்டியது
நம் காதல் என்பாய்.
பேதையே காதல்
எனும் போர்வையில்
வாலிப உள்ளங்களை
வேர் அறுக்காதே!

சக்தி
21-05-2007, 05:38 AM
வேர் அறுக்காதே
மயோ நீயா சொன்னது
சமுதாய விருச்சத்தில்
கிளைகளாய் லஞசம்
கனிகளாய் போதை
இலைகளாய் பொய்யும் புரட்டும்
இவைகளை
வேராறுக்கவிடில்
அவை
நம்மை தின்று விடாதோ

தாமரை
21-05-2007, 05:43 AM
முத்தம்போல் ஏதோ ஒன்று
ஈரமொற்றி
இதயம் எரிந்தது காதல்
தீப்பற்றி

மயூ
21-05-2007, 05:43 AM
விடாதோ இந்தப் போதை
கெடாதோ இந்த கானல்
பெறாதோ மனம் தெளிவு
நிலவு கூட தெளிவாக இல்லை
அவள் சுவடு மட்டும்
அழகாகப் புரிகின்றது
என்னவளே ஏன்?
இந்தக் கொடுமை
நான் உன் காதலன் தானே?

ஓவியன்
21-05-2007, 05:52 AM
தானே காதலித்து விட்டு
தானே என் பின்னால்
நித்தமும் சுற்றி விட்டு
தானே கவி என்று சொல்லி
ஏதேதோ கிறுக்கி விட்டு
நான் உன் காதலனா?
என்று கேட்டால்
நான் என்ன செய்ய?

மயூ
21-05-2007, 05:56 AM
என்ன செய்ய?
நல்ல கேள்வி கேட்கிறாய்
அன்றே கேட்டாயா
இந்தக் கேள்வியை??
நான் அலையும் போது
அதை இரசித்தாய்
அதில் மகிழ்ந்தாய் களித்தாய்
இப்போது கேட்கிறாய்
என்ன செய்ய..??

சக்தி
21-05-2007, 05:58 AM
என்ன செய்ய
வேண்டும் என
நீ தான்
சொல்லவேண்டும்
நீயே
நானாக இருக்க
நான் என்ன செய்ய

ஷீ-நிசி
21-05-2007, 06:02 AM
என்ன செய்ய முடியும்
என்னால்..
ஏனிப்படியென்று வருந்துவாய்
பின்னால்...

சக்தி
21-05-2007, 06:04 AM
பின்னால்
வருவது வரட்டும்
பெண்ணே
இப்பொழுது
காதலிப்போம்

மயூ
21-05-2007, 06:04 AM
பின்னால் நான் வந்தணைத்தேன்
என்ன இது இன்று அலுத்தாய்
இன்றோ அணைக்கவில்லை
என்பதால் அலுக்கின்றாய்
பெண் மனம்
கடலிலும் ஆழம் என்பது
உன்னால் தானோ கண்ணே?

சக்தி
21-05-2007, 06:09 AM
கண்ணே
அமுதே
முத்தே
என வர்ணிக்கத்தான்
நினைக்கிறேன்
உன்னை கண்டதும்
வார்த்தை வரவில்லை ஏனோ?

மயூ
21-05-2007, 06:14 AM
ஏனோ வரவில்லை?
தெரியவில்லையா?
அல்லது நடிப்பா? காரணம்
அவன் மீது நீ கொண்ட காதல்

சக்தி
21-05-2007, 06:17 AM
நீ கொண்ட காதல்
நிஜமானால்
என்னை கொன்றுவிடு
நிரந்தரமாய்
உன் விழியால்
தினம்தினம் என்னை
கொல்வதை விட

ஓவியன்
21-05-2007, 07:03 AM
விட முடியவில்லையே
என் காதலை - நீ
என் எட்டாக் கனி
என்று தெரிந்த போதும்.

தொட முடியவில்லையே
உன் இதயத்தை - நீ
என்னுள்ளே முழுதுமா(க)
வியாபித்த போதும்.

மயூ
21-05-2007, 07:11 AM
போதும் உன் போதனைகள்
ஏமாந்து விட பேதையல்ல
காலம் கடந்தாவது காரிகை
புரிந்தாள், தெளிந்தாள்,
காதல் வெறும் காமந்தான்.

சுட்டிபையன்
21-05-2007, 07:13 AM
காதல் வெறும் காமந்தான்
என்று சொல்லி காதலை
கொச்சை படுத்துபவர்கள்
நிஜ மனிதர்களா.........?

மயூ
21-05-2007, 07:19 AM
மனிதர்களா இவர்கள்?
காதலின் போர்வையில்
காமுறத் துடிப்பவர்கள்
காலம் கடந்தாவது
அறிந்து கொண்டேன்..
காமம் இன்றி காதல் இல்லை

ஓவியன்
21-05-2007, 07:20 AM
மனிதர்களா.........?
இல்லை விலங்குகளா?
பச்சைக் குழந்தையைக்
கடத்திப் போய்க்
கொன்றவர்கள்.

ஓவியன்
21-05-2007, 07:24 AM
இல்லை
இனியும் உன் மனதில்
எனக்கு ஒரு இடம்

இல்லை
இனியும் என் மனதில்
வேறு ஒருத்திக்கு
ஒரு இடம்.

ஷீ-நிசி
21-05-2007, 07:33 AM
ஒரு இடம் உண்டு
கிடைத்தால்.....

மின்மினிப்பூச்சி போல
மிதப்பேன் வானில்
பட்டாம்பூச்சிபோல
சுவைப்பேன் தேனில்

ஆம்!
அது அவளின் உள்ளம்

ஓவியன்
21-05-2007, 07:47 AM
உள்ளத்தைக் கழற்றி உன்
காலடியில் வைத்தேன்.
காலால் மிதித்துவிட்டுப்
போகிறாயே?

மனோஜ்
21-05-2007, 07:55 AM
போகிறாயே என்று தான் நினைத்தேன்
போகிறவள் திருபி பார்தில்
போகிறவள் திரும்புவாள் என்று
இன்றும் திரும்பிபார்கிறோன்
நம்பிக்கையுடன்

ஓவியன்
21-05-2007, 07:59 AM
நம்பிக்கையுடன் தானே
காத்திருந்தேன்.
தும்பிக்கையான் சன்னிதியில்.

நம்பியைக் கையோடு
அழைத்து வந்து
தும்பியைப் போல
அடித்து விட்டாயே?

பி.கு - இங்கே நம்பி என்பது காதலியின் அண்ணனின் பெயர்.:sport009:

மனோஜ்
21-05-2007, 08:04 AM
விட்டாயே என்று நினைத்தும்
விட்டாபடில்லை இன்னும் நம்பி
விரட்டி அடிக்கிறான் காரனம்
இருவருக்குள்ளும் இன்று
காதல்

ஓவியன்
21-05-2007, 09:11 AM
காதல் என்ன
கண்ணா மூச்சியா?

ஆமாம் என் இதயக் கதவைத்
தட்டி விட்டு
ஒளித்துக் கொள்கிறதே?.

விகடன்
21-05-2007, 09:42 AM
சுய கௌரவம் கூச்சம் என்ற இரண்டு பூட்டுக்களை வைத்து பூட்டியிருந்தால் காதல் அது என்ன செய்யும்?

அக்னி
21-05-2007, 10:51 AM
ஒளித்துக் கொள்கிறதே...
உன் விழிகள்...
உன் இமைகளின் பின்னே...
எனக்காக ஒளிராதா...?
ஒளித்துக் கொண்டால்...
உன் விழிகள்...
என் இமைகளின் பின்னே...
என்றென்றும் ஒளியாதா..?

சக்தி
21-05-2007, 11:16 AM
ஒளியாத
கண்களும்
உன்னை பார்த்து
ஒளிர்கின்றதே
பெண்ணே
எத்தனை வோல்ட்
மின்சாரம் வைத்திருக்கிறாய்
உன் கண்களில்

அக்னி
21-05-2007, 11:37 AM
கண்களில்
விம்பம் தலைகீழ்தான்...
ஆனால்,
கண்களின்றி
விம்பமும் கானல்நீர்தான்...

சக்தி
21-05-2007, 11:43 AM
கானல் நீர் தான்
பெண்ணே
நீ இல்லாமல்
என் வாழ்க்கை

ஓவியன்
21-05-2007, 11:49 AM
வாழ்க்கையில்
நான் தவறிச் செய்த
தவறு - என் காதல்.

அக்னி
21-05-2007, 12:37 PM
காதல்,
ஏகாந்த அமைதிக்குள்,
தொப்புள் கொடியூடாக,
எனக்குள்
முதலில் உயிர்ப்பிக்கப்பட்ட
முதல் உணர்வு...

சுட்டிபையன்
21-05-2007, 12:39 PM
முதல் உணர்வு
உணர்ந்த பின்னர்தான்
வலி என்று உணர்ந்தேன்
காதலை

அக்னி
21-05-2007, 12:44 PM
காதலை
நிரூபிக்க சாகச்
சொன்னாய்...
செத்தேன்...
நிறைவேறியது,
எனது காதலும்...
உனது காதலும்...

சுட்டிபையன்
21-05-2007, 12:51 PM
காதலும் கண்ணீரும்
எப்போதுமே பிரியாதவை
இந்த நிரந்தரமில்லா
பூமியில்

lolluvathiyar
21-05-2007, 02:06 PM
பூமியிலே பிற்ந்த பின்
காதல் வரும் பின்
கவிதை வரும் பின்
வசந்தம் வரும் பின்
பிரிவு வரும் பின்
அழுகை வரும் பின்
வெறுப்பு வரும் பின்
மரனம் வரும்

சக்தி
21-05-2007, 02:27 PM
வரும் காலம்
நம் கையில்
காத்திருக்கிறான்
குப்பைதொட்டிச் சிறுவன்

அன்புரசிகன்
21-05-2007, 02:30 PM
சிறுவனாக நானிருக்க
என்னை சீராட்ட வாராயோ

பருவம் வந்து வாட்டுகிறது.
என்னைத்தாலாட்ட ஆளிலையோ?

அமரன்
21-05-2007, 02:44 PM
சிறுவனாக இருந்து விட்டால்
உலகில் நிலைத்திருப்பேன்
வயதுக்கு வந்த என்னை
களவாடி சென்றுவிட்டாய்
காதல் தேசத்துக்கு

சக்தி
21-05-2007, 02:46 PM
ஆளில்லையோ
என அஞ்சாதே
உன்னை
தாயாய் தாலாட்டும்
தொட்டில்
என் கரங்கள்

விகடன்
21-05-2007, 05:00 PM
கரங்கள் பல இருந்தாலும் - அவரவர்
காதலிற்கு சிறகாகாதே!

அவை தாலாட்ட துடிக்குமே - அன்றி
தாரமாக்க உதவாதே!

அன்புரசிகன்
21-05-2007, 07:40 PM
உதவாதே கூறினான்
உதவினேன் நான்.
பார்க்காதே என்றான்.
பார்த்தேன் நான்
வழியாதே என்றான்.
உடைந்தேன் நான்.

மனோஜ்
21-05-2007, 07:49 PM
நான் மட்டுமே பார்த்த முகம்
நாட்கள் கடந்ததும் மறவா முகம்
உற்றுக்கள் சுரக்கும் தளிர் முகம்
உறவுக்காய் ஏங்கிடும் என் முகம்

ஓவியா
21-05-2007, 07:50 PM
உடைந்தேன் நான்
உலோகமான பின்னும்
உன் வரவால்
உருகி - இன்று
உடைந்தேன் நான்

ஓவியன்
22-05-2007, 07:46 AM
நான் என்பதிலிருந்து
நாமாக்கி
மகிழ்வித்து விட்டு
மீண்டும் என்னை
நானாக்கிவிட்டுப்
போனவளே!

நீ உன்னோடு
அள்ளிப் போன
வர்ணங்களுக்காக
காத்திருக்கிறேன்
மீண்டும் ஒரு
ஓவியம் வரைய.

அன்புரசிகன்
22-05-2007, 09:19 AM
வரைந்திடவேண்டும் காவியம்.
கரைந்திடவேண்டும் நாவிலும்.
நரைந்திடவேண்டும் காதலிலும்
பரந்திடவேண்டும் வாழ்விலும்.

ஷீ-நிசி
22-05-2007, 09:29 AM
வாழ்விலும், தாழ்விலும்
உடனிருப்பேன் என்றாய்
வாழ்விலிருந்தபோது!
இன்று தாழ்விலிருக்கிறேன் நான்!
எங்கே இருக்கிறாய் நீ?

சக்தி
22-05-2007, 09:30 AM
வாழ்விலும் சாவிலும்
உன்னை பிரியேன்
என் சத்தியம் சொன்னவளே
இன்று என்னை
தனியாக்கி போனதென்ன
சொல்லொன்றும்
செயலொன்றாய்
வேறுபட்டு நின்றவளே
என்னை
களவாடிப் போனதென்ன

ஷீ-நிசி
22-05-2007, 09:56 AM
போனதென்ன நிழலே!

இரவில் கூட தொடரும்
நிழலல்லவா நீ! -உன்
உடலில் வாழ விரும்பும்
நிஜமல்லவா நான்!

அன்புரசிகன்
22-05-2007, 12:20 PM
நான் என்றால்
நீ
நாம் என்றால்
காதல்சின்னம்.

அக்னி
22-05-2007, 01:01 PM
காதல்சின்னம்..!
கல்லறையாய்
இருந்தால் மட்டுமே,
உயிர்வாழும்
யதார்த்தம்...

அன்புரசிகன்
22-05-2007, 01:14 PM
யதார்த்தமாக இரு
மனிதனாவாய்
யதார்த்தத்தை மீறு.
காவியனாவாய்.

arashan
22-05-2007, 01:51 PM
காவியனாக இருப்பேன்
என் காதலிக்காக
என் உயிர் போன்ற
கவிதை படைப்பேன்.

சூரியன்
22-05-2007, 02:05 PM
படைப்பேன் ஒரு காவியம்
என் காதலின் பெருமைக்காக,
வரைவேன் ஒரு ஓவியம்
என் தேவதை என்னை பார்ப்பதற்க்காக!!

arashan
22-05-2007, 02:08 PM
பார்ப்பதற்க்காக அவளை படைக்கவில்லை
உன்னை தோற்கடிக்கப்பதற்காக
படைத்தவள்
அவள்

lolluvathiyar
22-05-2007, 02:54 PM
அவள் இனி போதும்
அவளை நினைத்து
வாழ்கையை இழந்து
நிம்மதியை தொலைது
போதும் போதும்

அக்னி
22-05-2007, 06:57 PM
போதும் எனக்கு
உணவு...
உண்டபோது வந்த உணர்வு...
போதுமா எனக்கு
உணவு...
உண்டதும் எழுந்த உணர்வு...

அன்புரசிகன்
22-05-2007, 07:21 PM
உணர்வுடன் உயிர்
உயிருடன் நீ
ஆவலுடன் நான்.

அக்னி
22-05-2007, 07:26 PM
நான் வேண்டாம்
என்று ஓடிப்போனேன்,
இருந்தும்
துரத்திவருகின்றதே
இந்த வார்த்தை...
"நான்"


உடைந்தேன் நான்
உலோகமான பின்னும்
உன் வரவால்
உருகி - இன்று
உடைந்தேன் நான்

தாமரை
22-05-2007, 07:58 PM
நான்
என்னைத் தேடி
என்னுள்
கண்டதோ உன்னை

சக்தி
23-05-2007, 02:27 AM
உன்னை காணும்
விழி உறங்காது
உறக்கம் என்னை
விழுங்காது
உன்னை கண்டதும்
என்னில் கண்ணீர் பூக்கள்
என்னை வாழ வைப்பது
உன் காதல் சொற்கள்

தாமரை
23-05-2007, 02:31 AM
சொற்கள் காட்டிய
சொர்க்கங்கள்
இன்னொரு தேர்தல்
கடந்து போனது
விழித்த போது
பசித்த வயிறு

சக்தி
23-05-2007, 03:03 AM
வயிறு
வலிக்க சிரிக்க
வைத்தேன்
கதைகள் சொல்லி
நீயோ- என்
நெஞ்சு வலிக்க
செய்ததென்ன

தாமரை
23-05-2007, 03:58 AM
செய்ததென்ன
இதயம் பரவி
நரம்புகளில் விரைந்து
மூளையை ஊடுருவி
என்னைப் பைத்தியமாய்

ஷீ-நிசி
23-05-2007, 04:01 AM
செய்ததென்ன இக்கொடுஞ்செயல்
வீழ்ந்ததிங்கே இளம் பிஞ்சுகள்!
உங்கள் வான் தாக்குதலில் இறந்ததே!
எங்கள் மான் குட்டிகள்!

ஷீ-நிசி
23-05-2007, 04:03 AM
பைத்தியமாய் அலைந்தேன்
வைத்தியனாய் நுழைந்தாய்!
தைத்துபோனாய் உன்னை
நைந்துபோன என் இதயமதில்!

தாமரை
23-05-2007, 04:31 AM
இதயமதில்
இதயம் மதில் மேல்
பூனையாய்
தாவத்தயாராய்

ஆதவா
23-05-2007, 04:41 AM
தாவத் தயாராய் உள்ளது
தமிழ்ச் சிங்கங்கள்
எதிரிகளே! கேளுங்கள்
எங்கள் பிடறிமுடி
அறுக்க முற்பட்டு
சீழ்வடியச் செல்லாதீர்....

தாமரை
23-05-2007, 04:50 AM
செல்லாதீர்
தடுக்கப்பட்டவர் நின்றதாய்
சரித்திரமில்லை
நின்றவர்கள் வென்றதாய்
சரித்திரம் இல்லை
சரித்திரம் இருக்கிறது
சென்று கொண்டே இருப்பவருக்கு
வாழ்க்கைப்பயணம்

அல்லிராணி
23-05-2007, 05:13 AM
வாழ்க்கைப்பயணம்
பதிந்து போனத் தடங்களில்
சாதனைகளும் சரித்திரங்களும்
பதியாமல் போனது
மனதின் வலி

மயூ
23-05-2007, 05:16 AM
வலி கண்டு அயரப்போவதில்லை
பழி கண்டு சுருளப்போவதுமில்லை
தமிழன் வீறு கொண்டவன்
செருக்குக் கொண்டவன்
அவன் வழியே அவனைச் செல்லவிடு

அல்லிராணி
23-05-2007, 05:25 AM
செல்லவிடு அம்மா
உன் இறகுகளுக்குள் என்னை
பொத்தி வளர்த்தது போதும்
வானத்தை அளந்தும்
பூமிக்க்குப் பாய்ந்தும்
இரைதேடி துணைதேடி
போகிறேன் இனி
என் வாழ்வுதேடி

மயூ
23-05-2007, 05:35 AM
வாழ்வு தேடி வந்தேன்
இறுமாப்புடன்
இன்று புரிகின்றதம்மா
உன் தாய்மடி
பஞ்சு மெத்தை என்பது
உலக போதையில் நனைந்து
மதுவில் குளித்து
உலகத்தை அளக்கப் புறப்பட்டேன்
இன்று எதுவும் இல்லாமல்
உன் தாய்மடி தேடித் தவிக்கின்றேன்
கிடைக்குமா?

sadha
23-05-2007, 05:59 AM
கிடைக்குமா ? இன்றேனும் ஒரு நல்ல பதில்
தன்னை பார்த்துச் சென்ற வரனிடமிருந்து
ஏக்கத்தில் ஏழை முதிர் கண்ணி ...

ஷீ-நிசி
23-05-2007, 06:05 AM
முதிர் கன்னி
எப்பொழுதுமே அவளொரு
புதிர் கன்னி!

விடை வேண்டி காத்திருப்பாள்
பெண் பார்க்கும் படலங்களில்!

படலங்கள் மட்டும்
மாறிக்கொண்டே இருக்கின்றன -அவளின்
அவலங்கள் மட்டும் மாறாமல்.....

sadha
23-05-2007, 06:16 AM
மாறாமல் இருப்பது
மாற்றங்கள் மட்டும்
இங்கு மாறிக்கொண்டு இருக்கிறதே
மனிதனின் தேடல்கள் !

மயூ
23-05-2007, 06:30 AM
தேடல்கள் இல்லாவிட்டால்
மனிதம் இல்லை
மனிதம் இல்லாவிட்டால்
நினைக்கவே முடியவில்லை
சில வேளை பூமியே
சொர்க்கமாகியிருக்கும்.

ஷீ-நிசி
23-05-2007, 06:36 AM
சொர்க்கமாகியிருக்கும்
நீ என்னோடு கலந்திருந்தால்
நரகமாகிவிட்டதே
நீ என்னை விலகி சென்றதால்!

தாமரை
23-05-2007, 08:57 AM
சென்றதால் மலர்ந்தேன்
உன் பார்வை எனைத் தடவி
வருமோ எனக் காத்திருப்பேன்.
பார்வையை என்மீது
குத்தி நிறுத்தாதே
மனம்
குறுகுறுக்கிறது

ஆதவா
23-05-2007, 08:59 AM
குறுகுறுக்க வைக்கிறது
கோழி இறகுகளின் நளினமும்
உடன் உன் விரல்களின் ஸ்பரிசமும்.

ஷீ-நிசி
23-05-2007, 09:09 AM
ஸ்பரிசமும் தீண்டி
வருஷமும் ஆனதடி!
சித்திரையில் வருவேன் என்றவளெ
அதுவரை உன்னை என்
நித்திரையில் வருடுவேன் நான்!

shangaran
23-05-2007, 09:27 AM
என் நித்திரை கலைத்த சித்திரமே!
உன் பிரிவால் எனை வாட்டாதே நித்தமுமே,
உன் நிழலாய் நான் வரவா அனுதினமே,
அதுவரை, நீயே என் உயிரின் உறைவிடமே.

ஷீ-நிசி
23-05-2007, 09:50 AM
உறைவிடமே என்
பிறப்பிடமே அம்மா!
உனை பிரிந்து வாழும் நிலை,
என் வாழ்வில் இறைவன் எழுதிய
வாக்கியத்தின் பிழை!

தாமரை
23-05-2007, 09:58 AM
பிழை திருத்தம்
ஆண்டவன்
ஆணைப் படைத்து
பின்
பெண்ணைப் படைத்தது!

ஷீ-நிசி
23-05-2007, 10:11 AM
படைத்தது படைத்தாய்
இறைவா.....
ஒன்றோடு நிறுத்தியிருக்ககூடாதா!?

மதி
23-05-2007, 10:30 AM
நிறுத்தியிருக்கக் கூடாதா..
உன்னிடம் என்னிதயம்
கொடுத்ததை
உலகம் என்னை
இதயமற்றவன் என்கிறது..

ஷீ-நிசி
23-05-2007, 10:38 AM
என்கிறது நான் ஏழையென
உன் மனது!
ஆச்சரியமில்லை இதுதானே
பெண் மனது!

ஓவியன்
23-05-2007, 10:50 AM
மனதுக்குள்
வெடிக்கும் மத்தாப்பு
உனைக் காணும் போதெல்லாம்.

கைகளைச் சிறகுகளாக்கிக்
காற்று வெளியில்
பறந்திருக்கிறேன் கனவிலே.

சுட்டெரிக்கும்
சூரியனுக்குக் கூட
குடை பிடிக்க
முயன்றிருக்கிறேன்.

வேதனைகளைச்
சாதனைகளாக்க சபதங்கள்
பல எடுத்திருக்கிறேன்.
இப்படி இன்னமும்
நிறைய....

இது எல்லாம்
உன் காதல்
படுத்தும் பாடு தானடி.

ஷீ-நிசி
23-05-2007, 11:01 AM
பாடுதானடி
இயேசுவை கடவுளாக்கியது! -நீ
படுத்தும் பாடுதானடி
என்னை கவிஞனாக்கியது!

ஓவியன்
23-05-2007, 11:03 AM
கவிஞனாக்கியதும்
உன் காதலே
இன்று எனை
பைத்தியமாக்கியதும்
உன் காதலே!

ஷீ-நிசி
23-05-2007, 11:10 AM
காதலே நிம்மதி!
காதலி தருவாள்
சமாதி!

ஓவியா
23-05-2007, 11:16 AM
சமாதி
கட்டாமலே
புதைத்தாயே!

ஓவியன்
23-05-2007, 11:17 AM
சமாதிகளுடன்
ஓய்ந்து விடுவதில்லை
காதலும் போராட்டங்களும்.

ஷீ-நிசி
23-05-2007, 11:19 AM
புதைத்தாயே ஒருமுறை
என்னை உன்னில்...
திருமண பத்திரிக்கை நீட்டி,
புதைத்தாயே இம்முறை
என்னை மன்னில்!

மயூ
23-05-2007, 01:02 PM
மண்ணில் நடக்கிறேன்..
கடற்கரை எங்கும்
உன் கோலவிழிகளாகத் தெரிகின்றதே
இதுததான் காதலா?
இல்லை வெறும் போதையா?

lolluvathiyar
23-05-2007, 01:09 PM
போதையா என் நினைவு
போதை பொருளாய் என்னை
நினைக்கும் உன்னை காதலித்த
நான் அறிவிலந்த பேதை

மயூ
23-05-2007, 01:33 PM
பேதை விழிகளில் மோகம் கொண்டேன்
அவள் வார்த்தை யாலத்தில் கலங்கி விழுந்தேன்
கடைசியில் தெரிந்தது..
நான் கண்டது வெறும் கானல்தான்!!

sadha
23-05-2007, 01:45 PM
கானலாய் தான் போனது
உன்கரம் பிடிப்பேன் என்ற எண்ணம்
என் காதலுக்கு காலனாய்
அந்த அயல் நாட்டிலே பணி புரிபவன் வந்ததால்

மயூ
23-05-2007, 02:11 PM
வந்தால் என்ன?
என் மனம் உன்னிடம் இல்லை என்றாகிடுமோ?
ஏன் இந்தத் தயக்கம்?
ஏன் இந்தக் குளப்பம்.
எனக்குத் தேவை உன் சம்மதம்!

மதி
23-05-2007, 02:16 PM
சம்மதமா என்றால் சொல்
அப்பாவிடம் சொல்லி
இன்றே பேசிவிடுவோம்
சம்பந்தம்.

மயூ
23-05-2007, 02:24 PM
சம்மதம் வேண்ட நான் பைத்தியமா
இல்லை சம்மதம் தர என் தந்தை பைத்தியமா
ஓடிவிடுவோம் கண்ணே
உனக்குத் தேவை என்மேல் நம்பிக்கை

ஷீ-நிசி
24-05-2007, 04:10 AM
நம்பிக்கை என்பது
காதலில் இல்லாவிட்டால் -உன்னை
நம்பி கை பிடிக்க
அவள் எப்படி வருவாள்?

தாமரை
24-05-2007, 04:21 AM
வருவாள்
உனக்கென ஒருத்தி
சொல்லி சமாதானப்படுத்தியவன்
மணந்தது
என் காதலியை!

ஷீ-நிசி
24-05-2007, 04:28 AM
காதலியை சொந்தமாக்கிடு
வாழ்க்கை வசந்தமாகிடும்!

sadha
24-05-2007, 06:05 AM
வசந்தம் என்றெண்ணி
உன் கரம் பிடித்தேன்- ஆனால்
கசந்து விட்டது இந்த
கல்யாண வாழ்க்கை !

மயூ
24-05-2007, 06:10 AM
வாழ்க்கை புரியவில்லை உனக்கு
அனைத்தும் சர்க்கரையாகுமா?
அங்ககங்கே எறும்பும் இருக்கலாம்
இதற்காக வாழ்க்கையே வேண்டாம்
என்பது சரியா பேதையே?

ஷீ-நிசி
24-05-2007, 06:18 AM
பேதையே
சரிதானா நீ செல்லும்
பாதையே?!
ஒருவருக்கு மேல்
பகிர்ந்துகொண்டால்
வந்திடும் உனக்கும்
வாதையே!

மனோஜ்
24-05-2007, 08:39 AM
வாதையே எனில் நீக்கியே
வாழ்வினில் இன்பம் அடையவே
வார்த்தை பல தந்து
வாழ்வில் உயரவே தன் இரட்சிப்பை
வழங்கியவர் என் இயேசுவே

சுட்டிபையன்
24-05-2007, 01:36 PM
இயேசுவே மரணித்து
உலகை காப்பற்றினீர்
அன்று
உயிருடனிருந்தே உலகை
அழிக்கிறார்கள் பலர்
இன்று

தாமரை
24-05-2007, 01:47 PM
இன்று நல்லநாள்
காலண்டர் சொன்னது
பஞ்சாங்கம் சொன்னது
தெருக்கோடி
கல்யாண மண்டபத்திலிருந்து வந்த
மேளதாளம் சொன்னது
பூகம்பமே நீயேன் வந்தாய்?

பிச்சி
25-05-2007, 07:42 AM
வந்தாய் கண்ணனே
மலர் வண்ணனே
இப்போதாவது.

செங்காந்தள் வர்ணத்தில்
பூசிய மொட்டுக்களாய்
இதயத்தில் புதைந்த
நிலவொன்று
விக்கித் தவிக்கிறது.
சிரிப்பை நிறுத்திவிட்டு
சீர்படுத்து அந்த நிலவை.

விகடன்
25-05-2007, 08:05 AM
நிலவை சீர்ப்படுத்துவதை விடுத்து
உன்னை சீர்ப்படுத்திக்கொள்.
ஏனெனில்,
நிலவின் ஒளி நீ (பூமி) செய்யும்
சுழற்சியில்தான் தரித்து நிற்கிறது.

சக்தி
25-05-2007, 08:07 AM
அந்த நிலவை
கொய்து வாருங்கள்
என்னவளுக்கு
விளையாட பந்து தேவையாம்

sadha
25-05-2007, 10:04 AM
அந்த நிலவை
கொய்து வாருங்கள்
என்னவளுக்கு
விளையாட பந்து தேவையாம்

காதலிக்கு பந்து பொறுக்கிப் போடக்கூட அவ்வளவு சோம்பேறித்தனமா?

நீங்களே பறித்துக் கொடுங்கள்

அக்னி
25-05-2007, 04:38 PM
தரித்து நிற்கின்றது...
உன் பார்வையோரம்
என் இதயம்..!
தெறித்துப் போகாமல்
பார்த்துக்கொள்...
உன் பார்வையும்
என் இதயமும்...


காதலிக்கு பந்து பொறுக்கிப் போடக்கூட அவ்வளவு சோம்பேறித்தனமா?

நீங்களே பறித்துக் கொடுங்கள்

சதா உங்கள் விமர்சனங்களை
கவிச்சமர் விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9311)
பகுதியில் கொடுங்கள்.

நன்றி...

மனோஜ்
26-05-2007, 09:24 AM
இதயமும் கணத்து விட்டது
உனக்காக நான் ஏங்கி ஏங்கி
தேனை தேடும் தேனீ
உண்னை தேடும் நான்

சுட்டிபையன்
26-05-2007, 09:30 AM
நான்
எங்கு சென்றாலும்
என்
முன்னாலும்
பின்னாலும்
வருகிறாயே
யார் நீ...?
உன் நிழல்

மனோஜ்
26-05-2007, 09:34 AM
உன் நிழல் பார்க்கவும்
உன் முகம் பார்க்கவும்
உன் விழுயில் படவும்
நான் படும் பாடு எனக்கு
மட்டும் சொர்க்கம்

அமரன்
26-05-2007, 09:34 AM
உன் நிழல் கூட
துடிக்கிறது-எனைப்
பார்ப்பதற்கு
என் நிழல்கூட
மறுக்கிறது-நீ
நண்பனின் காதலி

அக்னி
26-05-2007, 09:36 AM
நண்பனின் காதலி,
என்னைக் கவர்ந்த
எனக்கு உயிரான
என்றும் என்னுடைய
அன்புச் சகோதரி...

சுட்டிபையன்
26-05-2007, 09:44 AM
சகோதரியின் நண்பி
என்னைக் கவர்ந்த
எனக்கு உயிரான
என்றும் என்னுடைய
அன்புக் காதலி...


:D:D:D:D:D

மயூ
26-05-2007, 06:07 PM
காதலி உன்னை யாசிக்கிறேன்
என்னை மண்ணாள
வைப்பாய் என்று நினைத்தேன்
நீயோ மண் கவ்வ வைத்தாய்..
இருந்தாலும் நேசிக்கின்றேன்

அமரன்
26-05-2007, 06:12 PM
இருந்தாலும் நேசிக்கிறேன்
என்கல்லறையைக்கூட
நீ பார்க்காத போதும்
எனதருமை சமாதானமே

விகடன்
26-05-2007, 06:20 PM
எனதருமை சமாதானமே!
எங்கிருந்தாலும் வராயோ? - நீயின்றி,
அஸ்த்தமிக்கும் சூரியனைப்போல் நம்
அவனியெங்கும் நிறைந்திருக்கிறது.

ஓவியன்
29-05-2007, 09:25 AM
நிறைந்திருக்கிறது
என் மனதில்
இன்னமும்
உன் நினைவுகள்

நிறைவேறுமா
இவ் அவனியில்
என் காதல்?

அக்னி
29-05-2007, 11:35 AM
காதல்,
எட்டாவிட்டால்,
கட்டாயப்படுத்தாதே...
தானாக வந்தால்,
மதிப்பு...
இழுத்து வந்தால்,
கிடைக்கும் மிதிப்பு...

மனோஜ்
29-05-2007, 02:29 PM
மிதிப்பு மட்டுமா எனக்கு
நீ கொடுத்த பரிசு
எதிர்ப்பு முறைப்பு
கடிப்பு உதைப்பு
அனைத்தையும் ஒன்றாய் கலந்து
உன் கொடுப்பில்

தாமரை
29-05-2007, 02:34 PM
கொடுப்பில் கொள்ளலில்
விடுப்பில் சென்றது வீராப்பு
கொடுத்துக் கொண்டே
மாமனார்!

மனோஜ்
29-05-2007, 02:45 PM
மாமனார் ஆவர் என்று
உன் தந்தையை நினைத்தேன்
ஆனால் அவர் ஆனது என்
எமனாக

தாமரை
29-05-2007, 02:53 PM
எமனாக யாரையோ
எதிர்பார்த்துப் புலம்பி
சாக மறுக்கிறார்
வாழவும் மறுக்கிறார்

அறிஞர்
29-05-2007, 03:07 PM
மறுக்கிறார் என்றெண்ணி
மற்றவளை நான் நோக்க....
பொங்கி எழுந்து
எனக்கே உரியவளானால்
என்னவள்..

தாமரை
29-05-2007, 03:11 PM
என்னவள் வாய்க்கு
என்ன அவல்
எண்ண முடியாது
எண்ணவும் முடியாது
இன்று நீ
நாளை நான்

மனோஜ்
29-05-2007, 03:18 PM
நான் செய்தால் அது தன்டனை ஆனால்
மறுக்கிறார் தான் செய்யும் குற்றம்
மறைக்கிறார் தான் செய்யும் அநியாயம்
பொறுகிறார் பாறாட்டுக்கள்
மோடை அதில் பொன்னாடையுடன்

ஆதவா
29-05-2007, 03:19 PM
நான் வந்துவிட்டேன்
சமருக்கு
சமராட
முடிந்தால் சமரிடுங்கள்
பார்ப்போம்..

(சத்தியமா இது கவிதைதான்,, :D)

தாமரை
29-05-2007, 03:21 PM
பார்ப்போம்
ஒருகை பார்த்திடுவோம்
பாராமலே சொன்னார்
அரசியல்வாதி

அக்னி
29-05-2007, 03:24 PM
அரசியல்வாதி
அல்ல நாம்
கூட்டணி வைக்க,
சமராட வந்த
மன்றத்து உறவுகள்...

(இதுவும் கவிதைதான்)

தாமரை
29-05-2007, 03:27 PM
உறவுகள் பிரிவுகள்
வேறு வேறல்ல கண்ணே!
உன்னைக்
கொண்டிருக்கும்பொழுது

ஆதவா
29-05-2007, 03:38 PM
கொண்டிருக்கும்பொழுது
கொள்ள வருவதில்லை
கொண்டிருக்கா பொழுதுகளில்
அள்ள வருபவைகள்
பணமும் காலமும்...

lolluvathiyar
29-05-2007, 03:46 PM
காலமும் செய்த கோலம்
என்காதல் வெற்றி மாயம்
விளைவு திருமன கோலம்
மீண்டும் வருமா வாலிபம்
இறுதியில் சம்போ சிவம்

சுட்டிபையன்
02-06-2007, 10:48 AM
சிவம்
அன்பே சிவம்
என்று சொல்லியே
மனிதரை
வதைத்தது போதும்
தூய மனிதனாக

ஆதவா
02-06-2007, 01:44 PM
மனிதனாக ஒன்று சொல்வேன்
கேளுங்கள் தெய்வங்களே
பொருளை உருவாக்குபவனுக்குப்
பொருளின் மதிப்பு தெரிவதில்லை
பொருள் உருவான பிறகு
உருவாகியவன் அருமை புரிவதில்லை.
உணர்தலே உன்னதம்
ஆகவே
உம்மிருவரிடைச் சண்டை விடும்.
நல்ல ஒளியே பூமியில் படும்

தாமரை
05-06-2007, 04:41 PM
படும்
பட்டபின்னால்
படும்

அக்னி
05-06-2007, 09:12 PM
படும் கதிருக்குத்
தெரியுமோ..,
தான் ஆதவனின்
கரம் என்று...

அல்லிராணி
09-06-2007, 07:37 PM
என்று சொன்னாள்
எனக்குள் மொட்டவிழ்த்து
பூத்தமலராள்
சொல்ல முடியாமல் நான்

அமரன்
09-06-2007, 08:25 PM
முடியாமல் நான் இருக்கையில்
இருகையெனத் தழுவாமல்
நழுவினாழே
உடுத்தவள்.

ஆதவா
09-06-2007, 10:28 PM
உடுத்தவள் போதும்
எடுத்தவள் தருவாளா?

ஓவியன்
11-06-2007, 06:45 AM
தருவாளா மீள
என் வர்ணங்களை!
கலைந்து போய்
காய்ந்துபோய்க்
கிடக்கிறதே என் தூரிகை!.

இனியவள்
11-06-2007, 07:09 AM
தருவாளா மீள
என் வர்ணங்களை!
கலைந்து போய்
காய்ந்துபோய்க்
கிடக்கிறதே என் தூரிகை!.

தூரிகை கொண்டு ஒவியம் வரைய முயன்றேன்
என் முயற்சிகள் தோல்வியடி
உன் அழகின் முன்னே

ஓவியன்
11-06-2007, 07:12 AM
முன்னே
உன் அழகின் முன்னே
என் அகங்காரங்கள்
சரணாகதியாகிறதே??

இனியவள்
11-06-2007, 07:18 AM
முன்னே
உன் அழகின் முன்னே
என் அகங்காரங்கள்
சரணாகதியாகிறதே??

சரணாகதியாகிறதே என் இதயம்
உன் நட்பு என்னும் சொர்க்கத்துக்குள்

தாமரை
11-06-2007, 07:22 AM
சொர்கத்துக்குள்
எல்லா இன்பமும் உண்டாம்
பொய் சொல்கிறார்கள் அவர்கள்
அதெப்படி
நீ இங்கே இருக்கும்பொழுது!

ஓவியன்
11-06-2007, 07:25 AM
சொர்கத்துக்குள்
எல்லா இன்பமும் உண்டாம்
பொய் சொல்கிறார்கள் அவர்கள்
அதெப்படி
நீ இங்கே இருக்கும்பொழுது!

இருக்கும்பொழுது
தெரிவதில்லை
தண்ணீரின் அருமை.

இல்லாத போது
தேவையில்லை
கண்ணீரின் மகிமை.

தாமரை
11-06-2007, 07:35 AM
மகிமை காணீர்
வசனங்களில்
அவற்றில் அமைந்த
சொற்களில்
அவற்றில் அடங்கிய
எழுத்துக்களில்
அவற்றில் அமைந்த
வளைவுகளில்
அவள்.

ஓவியன்
11-06-2007, 07:38 AM
அவள் என்னை
அவலாய் எண்ணியதால்
அவமாய் முடிந்ததே
என் காதல்.

தாமரை
11-06-2007, 07:42 AM
காதல் சொன்னவள்
காத்திருக்கிறாள்
காதல் கேட்டவன்
காத்திருக்கிறான்
காதலோ போய்க் கொண்டிருக்கிறது
ஏற்பாரும் எதிர்ப்பாரும் இல்லாமல்
யாராலும் அடையாளம் காணமுடியாமல்

இனியவள்
11-06-2007, 07:44 AM
காதல் சொன்னவள்
காத்திருக்கிறாள்
காதல் கேட்டவன்
காத்திருக்கிறான்
காதலோ போய்க் கொண்டிருக்கிறது
ஏற்பாரும் எதிர்ப்பாரும் இல்லாமல்
யாராலும் அடையாளம் காணமுடியாமல்

காணமுடியாமல் தவித்தேன் என் அன்னையாக
நட்பு என்னும் அன்புக்கரம் நீட்டினாய் நீ
இப்பொழுது என் அன்னையாக மாறி விட்டாய் நீ

ஓவியன்
11-06-2007, 07:45 AM
காணமுடியாமல் காதல்
இருப்பதனால் தான்
காணமுடிகிறது
தோப்புக்களிலும்
கடற்கரைகளிலும்
காதல் ஜோடிகளை.

அமரன்
11-06-2007, 07:57 AM
காதல் ஜோடிகளைப்
பிரித்து
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்.

இனியவள்
11-06-2007, 08:41 AM
காதல் ஜோடிகளைப்
பிரித்து
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்.

சொல் சொல் என்கின்றாயே
நான் எதை சொல்வேன்
என்னை விட்டு உறவுகள் பிரிந்ததையா
இல்லாவிடின் பிறந்த இடத்தை விட்டு
இடம் பெயர்ந்ததையா சொல்
எதை நான் சொல்ல உனக்கு

ஓவியன்
11-06-2007, 08:55 AM
உனக்கு எனக்கென்று
பிரித்துப் பேசாதே!
எமக்கு எங்களுக்கு என்று
ஒன்றாய் தோள் சேர்!,
வெற்றி எமதாகும்.

டாக்டர் அண்ணாதுரை
11-06-2007, 08:56 AM
நீ சொல் மனசாட்சியே....
'உறவுகளை அவிழ்த்துவிட்டு வா' என்கிறாள்...
அவிழ்த்துபோட இதுவென்ன அவளது உடையா?
சுயநலச்சேற்றில் குளிக்க அழைக்கிறாள்.....
நீயே சொல் மனசாட்சியே....
சேறா.....உறவா?

ஷீ-நிசி
11-06-2007, 09:00 AM
நீ சொல் மனசாட்சியே....
'உறவுகளை அவிழ்த்துவிட்டு வா' என்கிறாள்...
அவிழ்த்துபோட இதுவென்ன அவளது உடையா?
சுயநலச்சேற்றில் குளிக்க அழைக்கிறாள்.....
நீயே சொல் மனசாட்சியே....
சேறா.....உறவா?


சேராஉறவு அவள்
ஒருநாளும்!

ஓவியன்
11-06-2007, 09:09 AM
சேராஉறவு அவள்
ஒருநாளும்!

ஒரு நாளும் சேர்வதில்லை
சமாந்தரக் கோடுகள்.

அன்பே
நானும் நீயும் கூட
சமாந்தரக் கோடுகளோ?

தாமரை
11-06-2007, 09:39 AM
கோடுகளோ பிரிப்பது உலகை
அட்ச ரேகைகளுக்கிடையே
பயணிக்க அச்சம்...
தீர்க்க ரேகைகளுக்கிடையே
பிரச்சனைகளை
தீர்க்க முடியவில்லை
கடகத்தை கேன்ஸர் அரிக்க
மகரம் கண்ணீர் வடிக்க
நிலநடுக்கோடு ஆகுமோ இடுகாடு...

ஓவியன்
11-06-2007, 09:48 AM
இடுகாடுகள் நிரம்பி வழிகின்றன
வீதிகள் வெறிச்சோடிப் போகின்றன.

இலங்கை அரசின்
சாதனை சமீபத்திய சாதனையிது.

தாமரை
11-06-2007, 09:52 AM
சாதனையிது
ஊரெல்லாம் தோரணம்
பந்தல்கள் குழல் விளக்குகள்
ஒலிபெருக்கிகள்
அலறிச் சொல்ல
மௌனமாய் குத்திய ஓட்டு.

ஓவியன்
11-06-2007, 09:56 AM
ஓட்டுகளிற்காக
எங்களிடம் கையேந்தியவர்கள்

நாங்கள் எங்கள்
வீடுகளிற்காகக் கையேந்திய போது
கண்டுகொள்ளவேயில்லை.

இனியவள்
11-06-2007, 09:56 AM
சாதனையிது
ஊரெல்லாம் தோரணம்
பந்தல்கள் குழல் விளக்குகள்
ஒலிபெருக்கிகள்
அலறிச் சொல்ல
மௌனமாய் குத்திய ஓட்டு.

ஓட்டு ஓட்டு என்று
கேட்டு வந்த அரசியல் வாதிகளுக்கு
ஓட்டு போட்டு
ஓட்டாண்டியானார்கள்
மக்கள்

பி.கு :- தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும்

இனியவள்
11-06-2007, 10:01 AM
ஓட்டுகளிற்காக
எங்களிடம் கையேந்தியவர்கள்

நாங்கள் எங்கள்
வீடுகளிற்காகக் கையேந்திய போது
கண்டுகொள்ளவேயில்லை.

கண்டு கொள்ளவேயில்லை நீ
நான் உன்னைச் சுற்றிய போது
இப்பொழுது நான் இன்னொருவன் பின்னால்
சுற்றுவதைக் கண்டு ஏன் உனக்கு கோபம்
என் பார்வை இன்னொருவன் மீது
திரும்பும் போது தான் உன் பார்வை என் மீது
திரும்பும் என்று தெரிந்து இருந்தால்
நான் வீணடிது இருக்க மாட்டேன் எனது நேரத்தை

ஓவியன்
11-06-2007, 10:03 AM
நேரத்தைத் தொலைத்து விட்டுத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என் காதலின்
காலடித் தடத்தில்.

தாமரை
11-06-2007, 10:05 AM
தடத்தில் தேடினேன்
உன் காதலை
கைதவறிப் போனவளே
நான்
கால்தவறிப் போனேன்

அமரன்
11-06-2007, 10:06 AM
கால்தவறிப்போனேன் நான்
காதல் வீதியில்
காதலே போனது
அவள் (வி)மிதியில்

அக்னி
11-06-2007, 10:06 AM
எனது நேரத்தைக்
களவாடிப் போனது
உனக்குப் பாவமா?
எனக்குப் பரிகாரமா?

அக்னி
11-06-2007, 10:07 AM
மன்னிக்க... பிந்தி விட்டேன்....
தொடர்ச்சி அமரன் வரிகளிலிருந்து...

ஓவியன்
11-06-2007, 10:09 AM
கால்தவறிப்போனேன் நான்
காதல் வீதியில்
காதலே போனது
அவள் (வி)மிதியில்

மிதியில் விழி வைத்து
என் மதியைத் தொலைத்துக்
காத்திருந்தது
உன் வருங்காலக்
கணவனின் அறிமுகத்திற்காகவோ?

தாமரை
11-06-2007, 10:09 AM
மிதியில் சுகம்
உன் கால்கள் மிதித்தால்
மகளே
நீ குழந்தையாய்
இருந்த பொழுது
இப்பொழுது வலி
ஏன் தெரியுமா
அன்று நீ சிரித்தாய்
இன்று அழுகிறாய்.

தாமரை
11-06-2007, 10:11 AM
அறிமுகத்திற்காகவோ
நரிமுகத்திற்காகவோ
என்னுடன் தனியே பேசவேண்டுமாம்
வியாபாரிக்கு

அமரன்
11-06-2007, 10:12 AM
வியாபாரிக்கு விருப்பம்
இலாபம்
என் பாதிக்கு விருப்பம்
என்னவோ,
தெரிந்து விட்டால்
நானும் ஒரு (நல்ல)சம்சாரி

தாமரை
11-06-2007, 10:13 AM
சம்சாரி
அடிக்கடி
சொல்லும் வார்த்தை
ஐ யாம் ஸாரி

ஓவியன்
11-06-2007, 10:14 AM
வியாபாரிக்குத் தெரிவதில்லை
வாங்குபவர்களின் அருமை பெருமை
விற்றுவிட்டால் முடிந்து விடும்
அவன் தவிப்பு.

இனியவள்
11-06-2007, 10:15 AM
சம்சாரி
அடிக்கடி
சொல்லும் வார்த்தை
ஐ யாம் ஸாரி

ஸாரி என்று சொல்லி விட்டு நீ சென்று விட்டாய்
நீ சொன்ன அந்த வார்த்தை கேட்காமல் நானும் சென்று விட்டேன்
இந்த உலகத்தை விட்டு

அமரன்
11-06-2007, 10:15 AM
சம்சாரி
அடிக்கடி
சொல்லும் வார்த்தை
ஐ யாம் ஸாரி
சாரி
அது காரிகை
கேட்பது.
சாரி
இது கொண்(ற)டவன்
சொல்வது

ஓவியன்
11-06-2007, 10:15 AM
ஸாரி சொல்லப் போய்
வாங்கி வந்தேன்
ஒரு நல்ல சாரி.

தாமரை
11-06-2007, 10:18 AM
ஸாரி என்று சொல்லி விட்டு நீ சென்று விட்டாய்
நீ சொன்ன அந்த வார்த்தை கேட்காமல் நானும் சென்று விட்டேன்
இந்த உலகத்தை விட்டு

விட்டுச் செல்வது
உன்னையல்ல
சொத்தையல்ல
உலகத்தை அல்ல
என்னை

இனியவள்
11-06-2007, 10:19 AM
விட்டுச் செல்வது
உன்னையல்ல
சொத்தையல்ல
உலகத்தை அல்ல
என்னை

என்னை நீ விட்டுச் சென்றததால் தான்
நான் உன் நினைவுகளை விடமால் சுமக்கின்றேன்

அமரன்
11-06-2007, 10:21 AM
சுமக்கின்ற கருவறையைக் கூட
கல்லறை சுமக்கின்றதே
கல்லறையும்
தாய் ஜாதியோ

ஓவியன்
11-06-2007, 10:21 AM
என்னை விட்டு விட்டு
என் நிழலை நீ
பற்றியதை
என்னவென்பது?

அக்னி
11-06-2007, 10:22 AM
சுமக்கின்றேன்..,
எத்துணை பாரம்,
அதனால் தானோ
என் சிறு சரிவு...
சிந்தனையுடன்
அந்தரத்தில் பூ..!

இனியவள்
11-06-2007, 10:23 AM
சுமக்கின்ற கருவறையைக் கூட
கல்லறை சுமக்கின்றதே
கல்லறையும்
தாய் ஜாதியோ

ஜாதியோ மதமோ தேவை இல்லை
நம்மிருவருக்குள் அவை வேண்டும் உனக்கு என்றால்
நான் தேவை இல்லை உனக்கு

அமரன்
11-06-2007, 10:23 AM
என்னை விட்டு விட்டு
என் நிழலை நீ
பற்றியதை
என்னவென்பது?
என்ன என்பது
விதியின் வலியை
வாசல் வந்த வசந்தம்
வீசும் எறிகணைக்குப்
பலியாகிவிட்டதே.

ஓவியன்
11-06-2007, 10:24 AM
ஜாதியோ பேதமோ
துப்பாக்கிகளுக்குத் தெரிவதில்லை.

இனியவள்
11-06-2007, 10:26 AM
என்ன என்பது
விதியின் வலியை
வாசல் வந்த வசந்தம்
வீசும் எறிகணைக்குப்
பலியாகிவிட்டதே.

மன்னிக்க வேண்டும் எனக்கு விளங்கவில்லை நீங்கள் முடித்த சொல் ஜாதியோ திரும்பி எப்படி என்ன என்பதில் தொடங்கும்
தவறு இருந்தால் மன்னிக்கவும்

ஓவியன்
11-06-2007, 10:28 AM
இந்த திரியினது வெற்றிகரமான 100 வது பக்கத்தில் நாங்கள் இப்போது இருக்கிறோம் நண்பர்களே!

அமரன்
11-06-2007, 10:29 AM
மன்னிக்க வேண்டும் எனக்கு விளங்கவில்லை நீங்கள் முடித்த சொல் ஜாதியோ திரும்பி எப்படி என்ன என்பதில் தொடங்கும்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
என்ன விளங்கவில்லை இனியவள். கவிதையா ஆரம்பித்த சொல்லா?
ஆரம்பித்த சொல்லாயின் அடுத்ததாக ஓவியன் பதிந்த கவிதையின் அந்தம் என்பதி என்று இருக்கின்றது. அதனாலேயே ஆரம்பித்தேன். இதில் மன்னிப்பு தேவையில்லை. நண்பர்கள் எமக்குள் அது அவசியம் இல்லை.

அமரன்
11-06-2007, 10:30 AM
தெரிவதில்லை
சமாதானத்தின் தேவை
மானம் கப்பலேறும் வரை

சிவா.ஜி
11-06-2007, 10:33 AM
ஜாதியோ பேதமோ
துப்பாக்கிகளுக்குத் தெரிவதில்லை.

தெரிவதில்லை சில நேரம்
அவள் வார்த்தைக்கு அர்த்தங்கள்
தெளிவின்றி இருப்பதால் என்
வாழ்வில் அநேக அநர்த்தங்கள்

இனியவள்
11-06-2007, 10:34 AM
தெரிவதில்லை
சமாதானத்தின் தேவை
மானம் கப்பலேறும் வரை

வரையரை தேவையில்லை
நீ என்னுள் இருக்கும் வரை

அக்னி
11-06-2007, 10:36 AM
வரைபுகளில் தெரிவதில்லை
நானும் நீயும்
நடந்த தடங்கள்...

சிவா.ஜி
11-06-2007, 10:38 AM
வரையரை தேவையில்லை
நீ என்னுள் இருக்கும் வரை

வரை என்னை உன்னுள்
வளரும் நம் காதல் நமக்குள்
திரையிடாதே உன் இதயத்துக்கு
முறையென்று ஒன்றுண்டு
முறையாய் வந்து உரை

அக்னி
11-06-2007, 10:38 AM
:nature-smiley-002: :nature-smiley-002: 1000 பதிவுகள் கண்ட:nature-smiley-002: :nature-smiley-002:
:nature-smiley-002: :nature-smiley-002: கவிச்சமர்...:nature-smiley-002: :nature-smiley-002:
:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: