PDA

View Full Version : கவிச்சமர்



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

மதி
15-05-2007, 03:34 AM
உயிர் போகுதடி
நீ தந்த வேதனையில்
உண்டா இல்லையா
பதில் சொல்லாது ஏனிந்த
பார்வை பார்க்கிறாய்.!

ஓவியன்
15-05-2007, 04:25 AM
பார்கிறாய்
உன் செளகரியத்தையும்
சொந்தத்தையும்.
பார்க்கவில்லையே
என் வேதனையையும்
காதலையும்?

ஆதவா
15-05-2007, 04:30 AM
காதலையும்
காமத்தையும்
புதைத்துவிட்டு
பெண்களைத் தேடி
அலைகிறார்கள்
வேடமிட்டவர்கள்

ஓவியன்
15-05-2007, 04:35 AM
வேடமிட்டவர்கள்
நாமிருவரும் - காதலர்களாய்.
ஆனா(ல்)
வாங்கிக் கட்டியது
நான் மட்டும் - உன்
அண்ணனிடம்.

ஆதவா
15-05-2007, 06:53 AM
அண்ணனிடம் சொல்லி
கவிச்சமருக்கு அழையுங்கள்
இன்றைய பதிவுகள்
கம்மியாக இருக்கிறது,

மதி
15-05-2007, 07:45 AM
இருக்கிறது என்றெண்ணி
இல்லாதது தேட
இருக்கிறதோ நானில்லாதது
கண்டு வேறிடம் இருப்பதற்கு
தேடி போய்விட்டது..

ஓவியன்
15-05-2007, 07:46 AM
இருக்கிறது என்னிடம்
உன் நினைவுகளும் கனவுகளும்.
இருக்கிறதா உன்னிடம்
என் இதயமும் எதிர்காலமும்?

பிச்சி
15-05-2007, 07:49 AM
எதிர்காலத்தைத்
தூக்கி எறிந்துவிட்டு
நடந்து கொண்டிருக்கிறது
நிகழ்கால மனிதம்
பின்னால் வருத்தப்படப் போகும்
எதிர்காலத்தைப் பற்றிய
வருத்தமில்லாமல்

ஓவியன்
15-05-2007, 07:51 AM
வருத்தமேயில்லாமல்
சொல்லிவிட்டாயே?
உன்னைக் காதலித்ததற்காக
வருந்துகிறேன் என்று.

பிச்சி
15-05-2007, 07:58 AM
என்றாவது சூரியனைத்
தொட்டுப் பார்த்திருக்கிறாயா?
பொங்கியெழும் அலைகடலில்
மண்டியிட்டு நிறுத்தியிருக்கிறாயா?
பூக்கள் விரியும் சப்தம்
கேட்டிருக்கிறாயா?
புன்னகைக்கான நரம்புகளை
கண்டுபிடித்திருக்கிறாயா?
காதலித்துப் பார்.
காரணம் புரியும்

மனோஜ்
15-05-2007, 08:05 AM
என்று நீ என்னை சந்தித்தாயே
அன்று தொடங்கியது இந்த காதல்
இன்று வரை அதை உள்மனதில்
என்று இந்த காதல் உன் மனதில்

தாமரை
15-05-2007, 10:20 AM
மனதில் உறுதி வேண்டும்
இத்தனையையும் சகித்துக் கொண்டு
இனியும் உயர்வோமென
எண்ணக் கூட

ஷீ-நிசி
15-05-2007, 10:44 AM
எண்ணக் கூட
நேரமில்லை எதையும்...
ஓடுகின்ற வேகத்தில்!

ஆதவா
15-05-2007, 11:39 AM
வேகத்தில் எல்லாமே
விட்டுச் செல்லுகிறோம்.
மூலையில் கிடக்கும்
முதியவனையும்
முயற்சியில் விளைந்த
மகனையும்

தாமரை
15-05-2007, 11:52 AM
மகனையும் மகளையும்
பொத்தி வளர்க்காதே
போற்றி வளர்
உனக்குத் தெரியாதது
அவர்களுக்குத் தெரிந்தால்
கேட்டு தெரிந்து கொள்
அவர்களின் தோழனாயிரு
அவர்களிடம் பேசு.
கதைகள் சொல்
கதைகள் கேள்
அவர்கள் மட்டுமல்ல
நீயும் வளர்வாய்.

சுட்டிபையன்
15-05-2007, 11:52 AM
மகனையும் தாயாயையும்
காணவில்லை இது
நேற்றைய பத்திரிகைசெய்தி
தாயும் மகனும் படு கொலை
இது இன்றைய பத்திரிகை செய்தி

சுட்டிபையன்
15-05-2007, 11:55 AM
வளர்வாய் மகனே
எந்தன் தேசத்தின்
வீரம் காக்கா
எந்தன் தலைவனின்
மானம் காக்க
ஊருக்காய் வளர்வாய்
என் மகனே

தாமரை
15-05-2007, 11:58 AM
மகனே விளையாடு
உடலை உறுதியாக்கு
கலைகள் பயில்
மனதை நேராக்கு
புத்தியை கூராக்கு
நிமிர்ந்து நில்
உன் நிழல்போதும் எனக்கு.

சுட்டிபையன்
15-05-2007, 12:06 PM
உன் நிழல் போதும் எனக்கு
வாழ்க்கை முழுவதும் துணைக்கு
உந்தன் நிழல் விடும் மூச்சுக்காற்றை
சுவாசித்து வாழ்ந்து முடிப்பேன்
ஓர் ஜென்மம்

ஓவியா
15-05-2007, 12:16 PM
ஓர் ஜென்மம் பொதுமா?
ஒரு உறவை
வென்று வெற்றிக்காண
இந்த ஓரு ஜென்மம்
போதுமா

ஆதவா
15-05-2007, 12:28 PM
போதுமா?
நாட்டைக் கவனிக்கிறேனென்று
வீட்டை நீ
கோட்டை விட்டாயே?
முண்டாசுகவி கணவனே!
போதுமா உனக்கு?

தாமரை
15-05-2007, 12:30 PM
உனக்கு யார் வேண்டும்
என் இதயக் கதவைத்
தட்டி விட்டு
மௌனமாய் நிற்பவளே!

ஓவியன்
15-05-2007, 12:43 PM
நிற்பவளே என் இதயத்தில்
இன்னமும் பசுமையாக.
நிற்கிறதா உன் உள்ளத்தில்
இன்னமும் என் எச்சங்கள்?
ஆமென்றால் புதைத்துவிடு
அவற்றையும் சேர்த்து
என் கல்லறையில்.

தீபா
15-05-2007, 12:48 PM
கல்லறையில் கிடக்கும்
காய்ந்துபோன
சருகுகளையும்
வணங்கிவிட்டு வாருங்கள்
தினமும் புஷ்பாசிசேகம்
செய்கின்றன.
இறந்தவர் இடத்தில்.

தாமரை
15-05-2007, 12:50 PM
இடத்தில் என்ன இருக்கு
வலத்தில் என்ன இருக்கு
மனைவி அருகில் நின்றால்
மகிழ்ச்சி

தீபா
15-05-2007, 12:52 PM
மகிழ்ச்சியாக
இருந்தது பயிர்கள்
இரவு பெய்த மழையில்
உறக்கமிழந்த விவசாயியை
கண்டுகொள்வாரில்லை

ஓவியன்
15-05-2007, 12:55 PM
மகிழ்ச்சி எல்லாம்
தொலைந்து போனது.
என் மனைவி
உன் புகைப் படத்துடன்
வந்தபோது.

தீபா
15-05-2007, 12:56 PM
வந்தபோது
அட வந்தபோது
அட கவிதை வந்தபோது
நேரம் தாண்டிவிட்டது
பாருங்கள் ஓவியன்

சுட்டிபையன்
15-05-2007, 12:57 PM
புகைப்படத்துடன் வந்த
உன்னைக் கண்டபோதுதான்
என்னுடைய மடத்தனம் புரிந்தது
உன்னிடம் ஏன் புகைப்படம்
கொடுத்தோமன்று

தாமரை
15-05-2007, 01:01 PM
கண்டுகொள்வாரில்லை
முதிர்கன்னி
முதியோர்
முடியாதோர்
மூவரையும்

-----------------

வந்தபோது
உன்னைக் கண்டு
தலைகுனிந்தேன்
செருப்பு
திருட்டு போய்விடக்கூடாதே

------------------

ஓவியன்
வரையா ஓவியம்
ஒயிலாய் வளைந்து
தரையில் தேடியது
உன்னை ஓவியா!

-----------------

புகைப்படத்துடன்
ஜாதகம் வந்தால்
சுமார்!
புகைப்படம் மட்டுமே வந்தால்
அழகு
ஜாதகம் மட்டுமே வந்தால்?

சுட்டிபையன்
15-05-2007, 01:04 PM
முடியாதோர் மூவரையும்
அரவணைக்க முந்நூறூ
பேர் வரிசையில்
நின்று ஒப்பாரி
ஆனால் காப்பாற்றா
முன்வருவோர்
யாருமில்லை

தாமரை
15-05-2007, 01:14 PM
யாருமில்லை என்று
திருடிய கைகள்
எல்லோர் முன்னும்
விலங்குகளில்
எல்லோர் முன்னும்
கொள்ளையடித்த கைகள்
யாருக்கும் தெரியாமல்
கோட்டைகளில்
நாற்காலிகளைத் தாங்கிக் கொண்டு

ஓவியன்
15-05-2007, 01:20 PM
தாங்கிக் கொண்டுதானிருக்கிறேன்
மனதில் இன்னமும்
உன் பெண்மையை.
ஏங்கிக் கொண்டுதானிருக்கிறேன்
கனவுகளிலும் உன்
அண்மையை.

சுட்டிபையன்
15-05-2007, 01:24 PM
உன் அண்மைக்காக
அமெரிக்காவை
விட்டு விட்டு
வந்துவிட்டேன் ஜில்லாவுக்கு.
ஆனால் நீ என்னை உதறிவிட்டு
இன்னுமொருவனுடம் அமெரிக்காவுக்கு

தாமரை
15-05-2007, 01:24 PM
அமெரிக்காவிற்கு
சைனா மிது கோபம்
ஈரானில் குண்டு போட்டு
உலக சமாதான உச்சி மாநாட்டை
நடத்தியது பிரிட்டனில்

ஓவியன்
15-05-2007, 01:26 PM
உண்மைக்காக
வாழ்வதென்றால் நீ
என்னோடல்லவா
வாழவேண்டும்.

சுட்டிபையன்
15-05-2007, 01:30 PM
பிரிட்டனில் அவ்ளைப் பார்த்தேன்
அமெரிக்காவிலும் அவளை பார்த்தேன்
ஆஸ்திரேலியாவிலும் அவளை பார்த்தேன்
ஆபிரிக்கா காட்டிலும் அவளைப் பார்த்தேன்
யார் அவள்........? என் மந்து நிறைந்த காதலி
வானத்து நிலா

ஓவியா
15-05-2007, 01:31 PM
வாழவேண்டும்
வருமையின்றி
வசந்தமாய்
வாழையடி
வாழையாக
வாழவேண்டும்

சுட்டிபையன்
15-05-2007, 01:33 PM
ஒரு முறை எழுதிய கவிதையை எடிட் பண்ணுவதை தயவு செய்து நிறுத்தவும் நண்பர்களே

சுட்டிபையன்
15-05-2007, 01:34 PM
வாழவேண்டும் ஓராயிரமாண்டு
நானும் நீயும்
உயிர் பிறவா சகோதரர்களாய்
ஓர் அன்னை வயிற்றில்

தாமரை
15-05-2007, 01:58 PM
நிலா
யார் சுட்ட தோசை
யார் தின்கிறார்கள்
குழந்தைக்குப் புரியவில்லை
யோசித்துக் கொண்டே
மம்மு தின்றது

ஓவியா
15-05-2007, 02:54 PM
மம்மு தின்றது (சோறு)
மாடி வீட்டு
நாய்க்குட்டி
மம்மு குடித்தது (கஞ்சி)
ஏழைவீட்டு
குழந்தை

தீபா
15-05-2007, 03:11 PM
குழந்தையின்
அழுசத்தம் அறியாமல்
ஆழ் நித்திரையில் அவள்
ஒரு வேளை
வேலைப் பளுவாக இருக்கலாம்

மனோஜ்
15-05-2007, 04:21 PM
இருக்கலாம் இருக்கலாம் என்று
பலவேலைகள் கடத்தினேன்
இன்று இல்லாமலே ஆனாது
உன் காதல் என் இருக்கலாம்
என்ற தவறுதல் என்னத்தால்

ஓவியா
15-05-2007, 04:23 PM
எண்ணத்தால்
நிதம் நிதம்
நான் உன்னையும்
நீ என்னையும்
உரசிக்கொள்கிறேம்

தாமரை
15-05-2007, 05:46 PM
உரசிக் கொள்கிறோம்
அவன் கருப்புதான்
ஆனால்
என் தரம்
அவன் அறிந்து சொன்னால்தான்
உண்டு

ஓவியா
15-05-2007, 05:49 PM
உண்டு
விட்டேன்
உரங்கியும்
விட்டேன்
இன்று நாள்
கழிந்தது.

தாமரை
15-05-2007, 05:51 PM
கழிந்தது தோஷம்
வாழை மரத்துக்கு
தாலி கட்டி
கத்தியால் வெட்டி
அடுத்தது
பெண்

ஓவியா
15-05-2007, 05:55 PM
பெண் என்றால்
கடமையை மறந்து விடலாம்
நீ ஆண்
கடமையை மறவாதே
தாத்தாவாம் பாட்டியாம்
உன் ஒரே பரிசு
நம் வாரிசு.

தாமரை
15-05-2007, 05:57 PM
வாரிசுச் சண்டை
ஊர் இரண்டு பட்டது
அனாதைக் குழந்தை
அழுதுகொண்டிருந்து

ஓவியா
15-05-2007, 06:00 PM
அழுதுகொண்டிருந்து
குழந்தை
அன்னயின் மனம்
அதற்க்கு எப்படி
தெரியும்.

தாமரை
15-05-2007, 06:05 PM
தெரியும்
உன்னில் இருக்கும் என்னை
புரியவில்லையே
என்னில் இருக்கும் உன்னை

சக்தி
15-05-2007, 06:08 PM
உன்னை
தேடித் தேடி
தொலைகின்றேன்
என்னைத்- தேடி
யார் வருவார்?

தாமரை
15-05-2007, 06:11 PM
வருவார் உன் தந்தை
என்று சொல்லி வளர்த்த பிள்ளை
வருவார் வருவார் என
காத்திருந்த கண்கள்
ஊர்க்கண்களின் ஏளனப் பார்வை
எல்லாவற்றுக்கும் பதிலாய்
அவன் வந்தான்
பிணமாய்

ஓவியா
15-05-2007, 06:14 PM
பிணமாய் ஜனநாயகம்
துக்கதிற்க்கு அடையாளமாய்
எல்லோரு கையிலும்
கருப்பு மை.

தாமரை
15-05-2007, 06:15 PM
கருப்பு மைக்கு
உன் கண்மேல் காதலடி
உன் கண்ணுக்கோ
கருப்பு மேல்தான்

சக்தி
15-05-2007, 06:22 PM
மேல்தான்
அன்பே
உன்னை
பார்ப்பதை விட
உன் நினைவுகளை
சுமப்பது மேல்தான்

ஓவியா
15-05-2007, 06:23 PM
கருப்பு மேல்தான்
கார்குழலாக
கருமேகமாக
காரிருளாக
கண்மனியாக

கண்மணி
15-05-2007, 06:27 PM
கண்மணியாக
வளர்த்த பெண்
பணம் கொடுத்து
பாழும்கிணத்தில் தள்ளப்பட்டால்
வரதட்சணை திருமணம்

சக்தி
15-05-2007, 06:33 PM
திருமணம்
அது
இருமனம்
இணையும்
ஒருகனம்

கண்மணி
15-05-2007, 06:39 PM
ஒரு கனம் தூக்கி
ஒரு கனம் இறக்கி
ஓடிய வாழ்க்கை
தலைக்கனம் தள்ளி
ஒரு கணம் யோசித்திருந்தால்

யோசிக்காமல்
திருமணம்
இன்று
எழ முடியாமல்
ஆயிரம் கனம்

ஓவியா
15-05-2007, 06:43 PM
ஆயிரம் கனம்
என் இதயத்தை
அழுத்தினாலும்
ஒரு பார்வை பார் - ஓவி
ஓடி வந்து விடுகிறேன்.

மனோஜ்
15-05-2007, 06:44 PM
விடுகிறேன் என் கவலைகளை
கனம் என் மனதை
வாடட்டினாலும் இக்
கனம் நீ என்னுடன்
மனம் மகிழ்கிறது
பனம் இல்லவிட்டாலும்
இனம் புரியா இன்பம்

சக்தி
15-05-2007, 06:47 PM
ஓடி வந்து விடுகிறேன்
பெண்ணே
ஓர் வார்த்தை சொல்
உலகமென்ன
இந்த பிரபஞ்சத்தையும்
தாண்டி உன்னிடம்
வந்து விடுகிறேன்

கண்மணி
15-05-2007, 06:47 PM
வந்துவிடுகிறேன்
சொல்லி விட்டுப் போனவன்
கடல் மேல்

சுட்டு விட்டதா சிங்களம்
கட்டி விட்டதா கடற்புலி

கடல் மடியில் புதைந்து
காணாமல் போனானா?
கரையில் கரையும் மனம்

கண்மணி
15-05-2007, 06:48 PM
இன்பம் துன்பம்
இணை பிரியா கைகள்
சொந்தம் பந்தம் சோகம்
எல்லாம் வாழ்க்கையின் அங்கம்

சக்தி
15-05-2007, 06:56 PM
அங்கம்
குலுங்காமல்
அன்ன நடை
போட்டவளே
உந்தன்
சலங்கையொலி
சொல்லுமடி
என் நெஞ்சம்

ஓவியா
15-05-2007, 06:58 PM
அங்கம்
அழகற்று
அமைந்தாலும்
அன்பு
அழியாமல்
அணைத்திடும்

ஆதவா
15-05-2007, 07:01 PM
அணைத்திடும்
தனிமையில் வாழும்
இளம் விதவையின்
விலைபேசுகிறார்கள்
ஊர் பெரியவர்கள்

சக்தி
15-05-2007, 07:14 PM
பெரியவர்கள்
சொன்னார்கள்
ஜாதி இரண்டொலிய
வேறில்லை
இங்கோ
ஜாதியைத் தவிர
வேறில்லை

மனோஜ்
15-05-2007, 07:24 PM
வேறில்லை ஆனால்
மரமனது என் காதல்
மாற்ற மில்லை மருந்தானது
உன் பார்வை சிற்றம் இல்லை
சிறப்பானது என் காதல்

ஆதவா
15-05-2007, 07:26 PM
வேறில்லை
இதில்
வேரின்றி
வேறில்லை
காதல்.

சக்தி
15-05-2007, 07:35 PM
காதல்
விழிகளில்
பயணம்
இதயத்தில்
முடிவு

தீபா
15-05-2007, 07:41 PM
முடிவுகள் உண்டு
எல்லாவற்றிற்கும்
சில வருடங்களில்
மனிதனுக்கும்
பல வருடங்கள் கழித்து
சூரியனுக்கும்

ஆதவா
15-05-2007, 08:14 PM
சூரியனுக்கும் பூமிக்கும்
இடையே சண்டையாம்
தீர்த்து வைக்க கிளம்புவார்கள்
அமெரிக்கா வீரர்கள்

ஷீ-நிசி
16-05-2007, 03:53 AM
சூரியனுக்கும் பூமிக்கும்
இடையே சண்டையாம்
தீர்த்து வைக்க கிளம்புவார்கள்
அமெரிக்கா வீரர்கள்

இது கலக்கல்.....

தாமரை
16-05-2007, 04:02 AM
வீரர்கள்
ரத்தம்
துடைப்பவர்கள் அல்ல
கண்ணீர் துடைப்பவர்கள்

சுட்டிபையன்
16-05-2007, 04:14 AM
கண்ணீர் துடைப்பவர்கள்
உற்ற உறவினர்களல்ல
உயிர் பிரியா
நண்பர்கள்

ஆதவா
16-05-2007, 05:41 AM
நண்பர்கள்
உயிர் கொடுப்பவர்களல்ல
உயிரெடுப்பவர்கள் :D

சுட்டிபையன்
16-05-2007, 05:55 AM
உயிரெடுப்பவர்கள்
நண்பர்களில்லை
உறவுகள்தான்

ஆதவா
16-05-2007, 06:01 AM
உறவுகள்தான்
கட்டிவைத்தன
என் காதலின்
உணர்வுகளை

சுட்டிபையன்
16-05-2007, 06:06 AM
காதலின் உணர்வுகளை
உனர்ந்து கொள்ள
ஆயிரம் ஜென்மங்கள்
நீ என் காதலியாக
வரவேண்டும்

ஆதவா
16-05-2007, 06:09 AM
வரவேண்டும்
இன்னொரு பூமி
விஞ்ஞானமில்லா
உலகில் வாழவேண்டும்
அதற்கென இயற்கையாய்
வரவேண்டும்
இன்னொரு பூமி

சுட்டிபையன்
16-05-2007, 06:13 AM
பூமிக்காதலனுக்கு
வானத்து காதலி
கொடுக்கும் முத்தம்
மழை

ஆதவா
16-05-2007, 06:17 AM
மழை நின்று
அழிக்கிறது
மழை இன்றியும்
அழிக்கிறது

சுட்டிபையன்
16-05-2007, 06:35 AM
அழிக்கிறது இயற்க்கை
இந்த உலகத்தை
அதை தடுப்பவர்
யாரிங்கு?

தாமரை
16-05-2007, 08:53 AM
யாரிங்கு
என் இதயச் சுவர்களெல்லாம்
கிறுக்கோ கிறுக்கென்று
கிறுக்கியது
அழிக்க அழிக்க
கவிதையாய் வருகிறதே!

சுட்டிபையன்
16-05-2007, 10:09 AM
கவிதையாய் வருகிறதே
உன்னுடைய பளிங்கு
முகத்தை பார்க்கும் போது
நீ என்ன கம்பனின் மகளா?

தாமரை
16-05-2007, 10:12 AM
மகளா
அழுதது கள்ளிப் பால்
கிழவிகளின் உள்ளம்
இன்னும்
எத்தனைப் பாவம்
என்னை செய்ய வைக்கப் போகிறாய்
இறைவா!

சுட்டிபையன்
16-05-2007, 10:16 AM
இறைவா......?
கழுகுகள் வட்டமிட்டு
பிஞ்சுகளை கவ்விய
போது வராத நீ
எப்போதுமே கற்சிலைதான்

தாமரை
16-05-2007, 10:25 AM
கற்சிலைதான்
கற்பித்ததோ
கற்றதோ தெரியவில்லை
காலங்களைத் தாண்டி
ஏதோ ஒரு செய்தியைத்
தாங்கிகொண்டு

ஆதவா
16-05-2007, 10:30 AM
தாங்கிக் கொண்டு
நிற்கிறேன்
பல(ர்) ஏச்சுகளையும் பேச்சுகளையும்
எவருக்குத் தெரிகிறது
என் கரைந்துபோன இளமை

மதி
16-05-2007, 10:54 AM
இளமை மேகங்களை
தென்றலாய் வந்தவள்
மெல்லிதாய் தள்ளி
எள்ளி நகையாடினாள்
இன்னும் நீ
பார்த்துக் கொண்டிருக்கிறாயா?

ஆதவா
16-05-2007, 11:07 AM
பார்த்துக் கொண்டிருக்கிறாயா
குப்பையில் மேயும் நாயையும்
கூடவே உண்ணும் மனிதனையும்

ஓவியன்
16-05-2007, 11:17 AM
மனிதனையும் உண்ணுகின்றன
மனிதாபிமானமில்லா கூட்டங்கள்
அரச அலுவலகங்களில் லஞ்சமாய்.

ஆதவா
16-05-2007, 11:18 AM
லஞ்சமாய் கிடைத்தது
உன் காதல்
என் கவிதைக்கு

சுட்டிபையன்
16-05-2007, 11:21 AM
காதல்
தமிழிலே
அர்த்தமில்லாத
ஓர் வார்த்தை
இந்தக் காதல்

ஓவியன்
16-05-2007, 11:21 AM
காதலை லஞ்சமாக்கி
என் கவிதையைப்
பறித்துக்கொண்டாயே?

ஆதவா
16-05-2007, 11:22 AM
மன்னிக்கவும் வார்த்தை மாற்றிவிட்டேன்..

சுட்டிபையன்
16-05-2007, 11:22 AM
ஐயோ ஆதவா என்னப்பா இது...........?

சுட்டிபையன்
16-05-2007, 11:22 AM
மன்னிக்கவு, அதற்க்கு முதலே நான் கவிதை பதிந்து விட்டேன்

ஆதவா
16-05-2007, 11:22 AM
இந்த காதலினால்தான்
என் கவிதைகள்கூட
தடம்பிறழாமல் செல்கின்றன

சுட்டிபையன்
16-05-2007, 11:23 AM
பறித்துக்கொண்டாயே
எனது இதயத்தை,
எனது இதயத்தை
கொடுத்தற்க்கா
என்னுயிரை எடுக்கிறாய்

சுட்டிபையன்
16-05-2007, 11:25 AM
செல்கின்றன காலங்கள்
என்னை விட்டு
உன் நினைவுகளோடு

ஆதவா
16-05-2007, 11:25 AM
எடுக்கிறாய் என்னுயிரை
காதல் என்ற
கொலைக்களனில்
கொடுக்கிறேன் நான்
உனக்காக
மிக சாமர்த்தியமாக

ஓவியன்
16-05-2007, 11:33 AM
சாமர்த்தியமாக
சொல்லிவிட்டாய்
உனக்கு திருமணமென்று
பிராயிசித்தமாய்
உன் கண்களில்
இரு துளிகள் மட்டும்.

சுட்டிபையன்
16-05-2007, 11:35 AM
துளிகள் மட்டும்
வரவில்லையென்றால்
பெண்கள் எப்பவோ
எல்லாமிழந்திருப்பார்கள்

தாமரை
16-05-2007, 11:45 AM
எல்லாமிழந்திருப்பார்கள்
நம்பிக்கையையும்
நண்பர்களையும் தவிர
நல்லவர்கள்

சுட்டிபையன்
16-05-2007, 11:48 AM
நல்லவர்கள்
செல்வத்தையும்
ஆணவத்தையும்
சேமிப்பதில்லை

ஓவியன்
16-05-2007, 11:50 AM
நல்லவர்கள் நம்
நண்பர்கள் இல்லையென்றால்
உன் திருமணத்தில்
மெளனமாக
இருந்திருப்பார்களா?

ஆதவா
16-05-2007, 11:51 AM
சேமித்துவைப்பதில்லை
நான்
என் கவிதைகளையும்
உன் கண்ணீரையும்

ஓவியன்
16-05-2007, 11:53 AM
கண்ணீரையும்
காதலையும்
அடகு வைத்து
வாங்கிவந்தேன்
கவிதைகளையும்
ஓவியங்களையும்.

சுட்டிபையன்
16-05-2007, 11:53 AM
கண்ணீரையும்
உனது பிரிவையும்
தவிர வேறேதும்
நிரந்தரமிலை
எனக்கு

சுட்டிபையன்
16-05-2007, 11:55 AM
ஓவியங்களையும்
உனது புன்னகையையும்
தவிர நான் தரிசிக்க
வேறேதுமில்லை

ஆதவா
16-05-2007, 11:55 AM
ஓவியங்களைப் புதைத்துவிட்டுதான்
ஓவியன் உணவுக்குச் செல்ல நேருகிறான்
தூரிகைகள் எலிகளுக்குப் பிணம்
வர்ணங்கள் நிலத்தை அழித்து
கோலமிடுகிறது
ஓவியங்கள் மட்டும் எப்போதோ
ஒருமுறை விற்கப்படுகிறது

தாமரை
16-05-2007, 11:56 AM
எனக்கு ஒன்றுமில்லை
நாளை வீட்டுக்கு வந்திடுவேன்
தைரியம் சொன்ன அப்பாக்கள்
வராமலே பொய்விட்டிருக்கிறார்கள்
நீயும் அதையே சொன்னாயே
அண்ணா
-------------------------------
விற்கப்படுகிறது
பாசம்
கடமை
காதல் எல்லாமே
வாங்க
எவ்வளவு கூட்டம்?

ஆதவா
16-05-2007, 11:58 AM
அண்ணா
என்று அன்போடு அழைத்தவர்கள்
இன்று மறந்திருக்கக் கூடும்
தேர்தலன்று மீண்டும் பிறப்பார்
போஸ்டரில்
அதே அண்ணா

தாமரை
16-05-2007, 12:03 PM
அண்ணா!
நீ இருந்தவரை
உன்னைத் திட்டியவர்கள்
இல்லாத பொழுது
பெருமை பேசினார்கள் என்முன்
திருந்தினாரே என மகிழந்தேன்
புறம் பேசுகிறார் அந்தப்புரம்
என அறியும்வரை

ஆதவா
16-05-2007, 12:06 PM
அறியும்வரை
அப்பன் சொல்
அறிந்தபிறகு
அவள் சொல்

சுட்டிபையன்
16-05-2007, 12:25 PM
அவள் சொல் கேட்க
ஓராயிரம் காதுகள்
வேணுமென்று
ஊர் சொல்கிறது
இந்த செவிடன்
அதை கேட்க
எங்கே போவன்....?

ஆதவா
16-05-2007, 12:26 PM
எங்கே போவேன்
ரூபாய்க்குக் கூட
போகாத
இந்த கவிதைகளை
வைத்துக் கொண்டு

ஓவியன்
16-05-2007, 12:26 PM
சொல்
நீ சொல்லிஅனுப்பிய
அந்த சொல்.
தொலைத்துவிட்டதே
என் சொற்களையெல்லாம்.

ஆதவா
16-05-2007, 12:27 PM
ஓவியன்... சுட்டி முந்திவிட்டார்

ஓவியன்
16-05-2007, 12:28 PM
ஆமா!!
நான் கொஞ்சம் லேட்டாயிட்டேன்.

சுட்டிபையன்
16-05-2007, 12:30 PM
வைத்துக்கொண்டிருந்த
என் செல்வமெல்லாம்
கூடியிருந்தே
முடித்து விட்டார்கள்
என்று கூடும் கூட்டமுமில்லை
செல்வமும் இல்லை
இதுதான் உலக வாழ்க்கை

ஆதவா
16-05-2007, 12:30 PM
சொற்களையெல்லாம்
தாங்கிக் கொண்டு
போருக்குப் புறப்படுகிறது
என் கவிதைகள்
வென்று வருமா உன்னை?

சுட்டிபையன்
16-05-2007, 12:31 PM
என் சொறகளையெல்லாம்
ஒன்றுசேர்த்து கோர்த்த
மாலையாக உனக்கெழுதிய
காதல் கடிதம்

ஆதவா
16-05-2007, 12:32 PM
தவறான பதிவு

ஆதவா
16-05-2007, 12:33 PM
காதல் கடிதம்
எழுதுவதற்குள்
என் ஆயுள் வியர்வைகள்
கொட்டி தீர்த்தன
ஏனோ தெரியவில்லை
கடிதத்தில் வார்த்தை இல்லை

ஓவியன்
16-05-2007, 12:37 PM
இல்லை
உன் காதலில்
உண்மை - அதையுணர
இல்லையே
என் நெஞ்சத்தில்
வன்மை.

ஆதவா
16-05-2007, 12:39 PM
வன்மை நிறைந்தது
வாழ்க்கை
தொட்டியில் நான் கண்ட
பிச்சைக் காரனை
ஏளனமாகப் பார்த்துச் செல்லும்
வன்மை நிறைந்தது வாழ்க்கை
ஏறெடுத்துக் கேட்க
நாதியில்லை
வன்மையோடு வன்மையாக
பூமி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது

தாமரை
16-05-2007, 12:39 PM
இல்லை
தாய் சேய் பாசம்
அன்பு காதல் நட்பு
இவைகளுக்கு மத்தியில்
இன்னொன்று

ஆதவா
16-05-2007, 12:41 PM
அண்ணா முந்திவிட்டேன்

ஓவியன்
16-05-2007, 12:42 PM
இருக்கிறது
இன்னமும் என் காதல்
உன்னைச்சுற்றிக் கொண்டு
நீ என் நண்பனோடு
சுற்றிக் கொண்டிருப்பது
அறியாமல்.

சுட்டிபையன்
16-05-2007, 12:43 PM
இருக்கிறது வாழ்க்கை
வாழ்ந்து பார்க்கலாம்
உயிரினும் மேலான
தாய்க்காக

ஆதவா
16-05-2007, 12:43 PM
அறியாமல் செய்த தவறுகள்
தெரியாமல் செய்த தவறுகள்
புரியாமல் செய்த தவறுகள்
எல்லாமே செல்லட்டும்
கடவுள் என்ற தவறில்
-------------
தாய்க்காக வாழும் காலம்
இருபத்தி ஐந்துவரை
தாரத்திற்கு ஐம்பது
ஆண்டுகள்

ஓவியன்
16-05-2007, 12:43 PM
சுட்டி நான் முந்திட்டேனே!

சுட்டிபையன்
16-05-2007, 12:44 PM
ஆஹா கவிகளின் மோதல் பலமாகவுள்ளது

ஓவியன்
16-05-2007, 12:45 PM
தவறில்
தவறி வந்தகாதல்
தவறாகவே போய்விட்டது
இறுதியில்.

சுட்டிபையன்
16-05-2007, 12:45 PM
தவறில் பிறந்து
தவறாக வாழ்ந்த வாழ்க்கை
உன் காதலோடு
மரணித்துவிட்டது

சுட்டிபையன்
16-05-2007, 12:46 PM
ஆஹா ஓவி மறுபடியுமா?

சுட்டிபையன்
16-05-2007, 12:47 PM
இறுதியில்
உயிர் வாழ்வது
எனது காதல் மட்டும்
இறந்தது நமது காதல்

ஆதவா
16-05-2007, 12:47 PM
இறுதியில்
கொண்டு செல்ல ஒன்றுமில்லை
ஆகவேதான்
நெற்றியில் ஒருரூபாய்

ஆதவா
16-05-2007, 12:49 PM
அடடே இம்முறை நான் பிந்திவிட்டேன்
------------------
நமது காதலை
நாம் தொலைத்துவிட்டோம்
ஊரைவிட்டு ஓடிப்போய்

சுட்டிபையன்
16-05-2007, 12:50 PM
ஓடிப்போய்
மூச்சு வாங்கிய
போதுதான்
உனது மூச்சுக்காற்றின்
இனிமையை நான்
உணர்ந்தேன்

ஆதவா
16-05-2007, 12:56 PM
உணர்ந்தேன் அய்யனே ! பெருமானே!
உனது அருமை பெருமைகளை
உன்னை நிதமும்
தொழாமல் போனது என் தவறு
அழாமல் காத்திடு
விழாமல் பார்த்திடு

ஓவியன்
16-05-2007, 12:56 PM
உணர்ந்தேன்
உனது மூச்சுக்காற்றுக் கூட
நரகமாக இருக்குமென்று
உனக்கு ஜலததோசம்
வந்தபோது.

சுட்டிபையன்
16-05-2007, 12:58 PM
பார்த்திடு
இறுதிவரை
உன்னை உடலில்
சும்ந்த
உனது தாயை

ஓவியன்
16-05-2007, 01:08 PM
உனது தாயைக் கூட
பொய் சொல்ல
வைத்த நம் காதல்
காலம் போட்ட
தப்புக் கணக்குத்தானோ?

தாமரை
16-05-2007, 01:29 PM
கணக்குதானோ
ஜோதிடமும்
எண்ணியலும்
சம்மந்தம் பேசலும்
காதலும்
இன்னும்
ஆணுடன் பெண்ணை
இணைக்க உதவும்
அத்தனையும்!

சுட்டிபையன்
16-05-2007, 01:36 PM
அத்தனையும் நனவா
இல்லை கனவா........?
உன் கூட வாழ்ந்த
காலங்கள் யாவும்

sarcharan
16-05-2007, 01:43 PM
கண்ணகுதானோ
ஜோதிடமும்
எண்ணியலும்
ஆணுடன் பெண்ணை
இணைக்க உதவுவதெல்லாம்

ஹ்ஹ்ம்ம் எப்படி இத இன்னிக்கு பதிக்கணுமுன்னு தோணியது?

தாமரை
16-05-2007, 01:44 PM
யாவும் யாக்கையில்
யவ்வனம்
யாண்டுரைத்திடவோ
யாராக்கினரோ
யுக்தியில்

சுட்டிபையன்
16-05-2007, 01:47 PM
யுக்தியில்
உத்தி கண்டுபிடித்து
ஆரம்பித்த தொழில்
நடுத்தெருவில்

தாமரை
16-05-2007, 01:53 PM
நடுத்தெருவில்
தவறாக எழுத ஆரம்பித்தார்கள்
நடு தெருவில்
சரியாக புரிந்து கொண்டார்கள்
நட்டார்கள்
கொடிக்கம்பங்கள்

சுட்டிபையன்
16-05-2007, 01:58 PM
கொடிக்கம்பங்கள் நட்டார்கள்
கொடிகளாக அவர்கள்
மனைவிமாரின் சேலைகள்
அவர்கள் மனைவிமாரோ
நிர்வானமாய் வீட்டில்

தாமரை
16-05-2007, 02:02 PM
வீட்டில் நிம்மதியில்லை
ஒட்ட மறுக்கும் மனைவி
ஒட்டிக் கொண்ட மச்சினன்
திட்டிக் கொண்டே அப்பா
புலம்பிக் கொண்டே அம்மா
ஒருநாள் மட்டும் காணாமல் போனேன்
அமைதி
நிம்மதி என்னில்
மறுநாளிலிருந்து
மறுபடியும்

சுட்டிபையன்
16-05-2007, 02:06 PM
மறுபடியும்
வீட்டிற்க்கு வந்தேன்
ஒட்டியபடி என் மனைவி
தனது பொட்டும் பூவும்
திரும்பிவிட்டதென்றால்

sarcharan
16-05-2007, 02:08 PM
அத்தனையும் நனவா
இல்லை கனவா........?
உன் கூட வாழ்ந்த
காலங்கள் யாவும்

அருமை.
எண்ணித்தான் பார்க்கிறேன்
எண்ண முடியா
எண்ணங்களை

சுட்டிபையன்
16-05-2007, 02:13 PM
அருமை.
எண்ணித்தான் பார்க்கிறேன்
எண்ண முடியா
எண்ணங்களை

உங்கள் பாராட்டுக்கு நன்றி சரவணா

கவிச்சமருக்கு விமர்சனப் பகுதி தனியாக உள்ளது http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9311&page=5 அங்கே உங்கள் விமர்சனங்களை கொடுக்கலாம்

தாமரை
16-05-2007, 02:16 PM
திரும்பிவிட்டதென்றால்
உத்தமர்களின் உயிர்
மாறிவிடுமோ உலகம்
இல்லை
மாய்த்திடுமோ

ஆதவா
16-05-2007, 03:16 PM
மாய்த்திடுமோ
சாய்த்திடுமோ
ஓய்த்திடுமோ
வேய்த்திடுமோ
முதுமை?

சக்தி
16-05-2007, 03:20 PM
மாய்த்திடுமோ?
அன்றி-உன்
விழிகளில்
வழிந்திடும்
அமுதம் என்னை
காத்திடுமோ?

ஆதவா
16-05-2007, 03:23 PM
ரோஜா! முதுமையில் ஆரம்பியுங்கள்

சக்தி
16-05-2007, 03:34 PM
முதுமை
அது
யாரும் விரும்பா
அனுபவம்.

ஆதவா
16-05-2007, 03:37 PM
அனுபவத்தில்
விளைகிறது
முதிர்ச்சி என்ற பழம்

ஓவியா
16-05-2007, 03:46 PM
பழம்
பழுத்தால்
சந்தைக்கு
நான்கு பேர் வாங்க

பெண்
பழுத்தாலும்
சந்தைக்கு
நான்கு பேர் காண.

ஆதவா
16-05-2007, 03:48 PM
காண கண்கள்மட்டும் உண்டு
சில காளையர்களுக்கு
சிலர் இவர்களுக்கு மத்தியில்
இதயங்களில் காண்கிறார்கள்
புரிந்துகொள்ளுங்கள்

சக்தி
16-05-2007, 03:55 PM
புரிந்துகொள்ளுங்கள்
பெண்களே
பெண்மையின் இலக்கணம்-தாய்மை
தாய்மையின் இலக்கணம்- சேய்மை
சேய்மையின் இலக்கணம்- தனிமை

ஆதவா
16-05-2007, 03:56 PM
தனிமையின் கொடுமையை
ஒரு பிரம்மச்சாரியிடம்
அல்லது
முதிர்கன்னியிடம்
கேட்டுப் பாருங்கள்

ஓவியா
16-05-2007, 03:57 PM
பாருங்கள்
பைத்தியங்களை

தனிமை
அவனுக்கு
வெறுமை
எனக்கு
கொடுமை

எங்களுக்கு
இனிமை

ஆதவா
16-05-2007, 03:58 PM
அக்கா நான் முந்திவிட்டேன்...
-------------------
இனிமையிலும்
இனிமை
உன்னைப் போல
ஒரு சகோதரி
கிடைத்தது

சக்தி
16-05-2007, 03:59 PM
பாருங்கள்
வலிய பாரதம்
இளைஞர்கள்
கையில்
பீடிச்சுருட்டாய்

ஆதவா
16-05-2007, 04:00 PM
அருமை ரோஜா...

ஓவியா
16-05-2007, 04:01 PM
தம்பி நான் சமாளிச்சுட்டேன். ஆதவனின் அக்காவா கொக்கா.

கிடைத்தது
வரம்
கீழ்பக்கத்தில்

ஆதவா
16-05-2007, 04:03 PM
கீழ்பாக்க மருத்துவமனை
நோயாளிகள்
மன நோயாளிகள்
நம்மிடையே சுற்றும்
மனிதர்கள்
மனதால் நோயாளிகள்

சக்தி
16-05-2007, 04:05 PM
பக்கத்தில்
நீ
இருந்தால்
சொர்க்கதின்
சுகம் வேண்டாம்

சக்தி
16-05-2007, 04:18 PM
நோயாளிகள்
மருத்துவத்தில்
மட்டும் குணமடைவதில்லை
அன்பினாலும்-ஆனால்
அன்பே நோயானால்?

அக்னி
16-05-2007, 04:19 PM
அன்பே நோயானால்,
வேண்டாம்,
எனக்குக் கண்ணீர்...
சோகத்தில்
என்னை நனைக்க..!
அன்பே நீயானால்,
வேண்டும்,
எனக்குக் கண்ணீர்...
சந்தோஷத்தில்
உன்னை நனைக்க..!

சக்தி
16-05-2007, 04:29 PM
உன்னை நனைக்க
உயிர்துளி
மழை நீரும் கொட்டுதடி
ஆனால்-நீயோ
கருப்புக்குடை கொண்டு
தடுக்கப் பார்க்கிறாய்
இயற்கையில்
மனிதன் எழுதிடும்
மாற்றம் என்ன
விலை தருமோ யார் அறிவார்?

மனோஜ்
16-05-2007, 05:14 PM
அறிவார் என் மனதை
ஆக்குவார் என் வாழ்வை
இக்கட்டில் என் துனையாய்
ஈடுக்கட்டுவர் என் துன்பத்தில்
உறுதிபடுத்துவார் என் இதயத்தை
ஊக்கமளிப்பார் என் செயல்களில்
ஐயத்தை என் மனதில் நீக்குவார்
ஒருமனபடுத்துவார் என் முயற்சிகளை
ஓயாது என் நடைகளை காப்பார்
ஓளசதமாய் என் வாழ்வில் இருப்பார்
ஃத்தினை என்னுள் தருபவர் என் இயேசு

அக்னி
17-05-2007, 02:23 AM
இயேசு..!
அன்று,
சிலுவை சுமந்தார்...
எமக்காக...
உயிர்த்தெழுந்தார்...
எமை மீட்க...
இன்று..,
உயிர்த்தெழுந்தவரை
அழைத்துவந்து,
நிரந்தரமாய்
அறைந்துவிட்டோம்
நாம் வணங்க...

ஆதவா
17-05-2007, 02:25 AM
நாம் வணங்கத்தான்
அன்னையுண்டு
அதை கோவிலில்
துலாவுவதேன்?

அக்னி
17-05-2007, 02:33 AM
துலாவுவதேன் என்றால் தேடுவதேன் எனும் பொருளா ஆதவா?

ஆதவா
17-05-2007, 02:35 AM
ஆம்... அப்படி கூட ஆரம்பியுங்கள்

சுட்டிபையன்
17-05-2007, 04:09 AM
துலாவுவதேன்....?
நிர்வானமாய் உள்ளவனிடம்
சென்று துளைத்து
துலாவுவதேன்...?

ஆதவா
17-05-2007, 04:59 AM
துலாவுவதேனோ
நானும் உன்னிடம்
துலாவுவதேனோ?

மயக்கும் விழிகளும்
காற்குழல் பூமுடிச்சும்
தேன் பாய்க்கின்ற செவிகளும்
தெவிட்டாத இன்னிசையும்
பண் பாடும் நாவிதழும்
நல்லொழுக்கம் பேணும்
ஐவிரலும்
பெண்மைக் கேதுவான
தேன்குடமும்
கால்கொலுசும்

துலாவுவதேன்
நான்
உன்னிடம் ?

பிச்சி
17-05-2007, 09:38 AM
உன்னிடம் இருக்கிறது
என் கால் கொலுசின் ஓசையும்
முத்துக்களின் சினுங்கலும்
வளையல் உடைந்த சப்தமும்.

லோலாக்கின் அலையிலே விழுந்த நீ
எப்போது போடப் போகிறாய்
என் கால்விரலுக்கு மெட்டி? :thumbsup:

தாமரை
17-05-2007, 09:40 AM
மெட்டி ஒலி
நின்றுவிட்டது
ஆஹா ஆஹா
இனியாவது
நேரத்திற்கு சோறு

அக்னி
17-05-2007, 10:11 AM
சோறு..!
இன்றைய சமூகத்தின்
முதற் கனவு..!
நெருப்பிற்குப் பணம்..,
தண்ணீருக்கும் பணம்..,
அரிசி எட்டாத விலையில்..,
வேலை இல்லாத நிலையில்..,
சோறு..,
பெருமளவில்,
கனவாக மட்டுமே,
பொங்கப்படுகின்றது...
சாம்பல்..,
தாராளமாக,
பூத்துக்குலுங்குகின்றது...
அடுப்படிகளில்...

தாமரை
17-05-2007, 10:17 AM
அடுப்படிகளில்
கரிபடந்த முகங்களில்
மின்னலாய்
குழந்தையிட்ட முத்தம்

அக்னி
17-05-2007, 10:21 AM
முத்தம்...
நீயும் நானும்
குழந்தையாய் இருக்கையில்
தந்தேன்...
சுற்றம் ரசித்தது...
அதையே,
நானும் நீயும்
பருவத்தில் வளர்ந்ததும்
தந்தேன்...
சுற்றம் எதிர்த்தது...
அன்பை ஏற்றவர்கள்,
காதலை எதிர்ப்பதேனோ..?

மதி
17-05-2007, 11:12 AM
எதிர்ப்பதேனோ?
என் காதலை எதிர்ப்பதேனோ
அம்மா..
மகளிர்சங்க தலைவியாய்
காதலர்களை சேர்த்த நீ
இன்று
என் காதலை எதிர்ப்பதேனோ?

அக்னி
17-05-2007, 11:56 AM
எதிர்ப்பதேனோ..?
தெரியவில்லை சரியாக...
இருந்தும் ஏக்கம்
இருக்கிறது,
தொட்டுப் பார்க்கவும்..,
சுவைத்துப் போகவும்...
தொட்டால்
அம்மா திட்டுவாரோ..?
சுவைத்தால்
அப்பா கத்துவாரோ..?
சிறுவன் என்னை
வாட்டும்..,
என் எதிர்ப்ப தேனோ..?

மனோஜ்
17-05-2007, 05:56 PM
தேனோ நீ
என்இதயத்தில் வடிகிறாய்
மானோ நீ
என் நினைவுகளில் ஓடுகிறாய்
அக்னியே நீ
என்னை உன் பார்வையில்ச சுடுகிறாய்

சுட்டிபையன்
18-05-2007, 04:01 AM
சுடுகிறாய் சூரியனாக
நீ கோபப்படும்
நேரங்களில்
தென்றலாக குளிர்கிறாய்
நான் கோபப்படும்
நேரத்தில்

மயூ
18-05-2007, 04:55 AM
நேரத்தில் புரியவில்லை
புரிந்த பின்பு
ரணத்தினால் கனக்கின்றது!
என்னவளே
இன்னுமா புரியவில்லை
நான் மீண்டும்
தாய் மடி தேடுகின்றேன்

தீபா
18-05-2007, 06:06 AM
தேடுகின்றேன் என் காதலனை
கவிதை ஒன்றை எழுதிப் போனான்
மறுப்பெழுதி நிராகரித்தேன்
பூ ஒன்றை வைத்துப் போனான்
மிதித்துவிட்டு மதிப்பழித்தேன்
இப்போதோ
தேடுகின்றேன்
அந்த கவிதை எழுதிய
நாயகனை

மயூ
18-05-2007, 06:13 AM
நாயகனைத் தேடி வந்தாய்
நாய் உருவில் நான் நின்றேன்...
காதலனை நீ தேடுகின்றாய்..
மன்னித்துக்கொள்..
நான் வழி தவறிய ஒரு ஆடு
தேடுகின்றேன் மேய்ப்பானை !!!!

தீபா
18-05-2007, 06:22 AM
மேய்ப்பானை
ஏய்ப்பார்கள்
இருக்கவே இருக்கிறார்கள்
தானும் ஒரு
மேய்ப்பான் என்று
அறியாமல்

மயூ
18-05-2007, 06:29 AM
அறியாமல் செய்வதாகவே
எண்ணினேன், ஆனால்
அறிந்து செய்கின்றேன்
புரிந்து செய்கின்றேன்
என் மன உழைச்சலுக்கு
மட்டும் உன்னை வடிகாலாக்க
நான் ஒன்றும் பாவியில்லை!!!

தீபா
18-05-2007, 06:37 AM
பாவியில்லை நான்
உன்னைக் காதலித்த
பாவியில்லை நான்

தேவியில்லை நான்
காதலிக்கும்படியான
தேவியில்லை நான்

சாவியில்லை நான்
உன் மனக்கதவைத் திறக்கும்
சாவியில்லை நான்

நான் யாரோ?
என்ன தோன்றுமோ
உனக்கு?

lolluvathiyar
18-05-2007, 06:43 AM
உனக்கு நான்
எனக்கு நீ

நமக்கு யார்

மயூ
18-05-2007, 06:45 AM
யார் என்பதா??
யாம் என்பதா??
உனக்குத் தெரியவில்லையே!

தீபா
18-05-2007, 06:46 AM
நமக்கும்
உண்டு
உலகத்திலுள்ளோர்

தீபா
18-05-2007, 06:49 AM
தவறி எழுதிவிட்டேன். மன்னியுங்கள்


தெரியவில்லையா
உன் கண் முன்னே
செத்து விழும் பூச்சிகளை?

மயூ
18-05-2007, 06:52 AM
பூச்சிகளைக் கண்டதால்தான்
பின்வாங்குகின்றேன்..
நீ பூமரமாய் இருந்திருந்ததால்
இன்று நீ என் மடியில்

சுட்டிபையன்
18-05-2007, 07:00 AM
என் மடியில்
உந்தன் குழந்தை
என் காதலியே
மாமாவாக நான்

ஆதவா
18-05-2007, 07:15 AM
நான் இழந்தவைகள்
ஏராளம்
நேற்று பூத்த பூக்களையும்
நாளை இறக்கும் பூச்சிகளையும்
தவிர்த்து

மதி
18-05-2007, 08:38 AM
தவிர்த்துப் பார்த்தால்
தவித்துப் போகிறேன்
பார்..
புகைப்படத்தில் கூட
உன் நிழலாய் என்னை
ஒட்டியிருக்கிறேன்..!

ஆதவா
18-05-2007, 08:44 AM
ஒட்டியிருக்கிறேன்
பல போஸ்டர்கள்
என் கையிலே

செயற்கைத் தேனெடுத்து
கைபரப்பி சுவரப்பி
ஒட்டியிருக்கிறேன் பல.

எனக்கென்ன சாதி?
எனக்கென்ன மதம்?
எனக்கென்ன கட்சி?
எதுவுமில்லை
எதுகொடுத்தாலும்
ஒட்டுவேன்

நானொரு ஒட்டுண்ணி
ஒட்டுவதாலேயே
உயிர் வாழ்கிறேன்

நிச்சயம் ஒரு புகழுண்டு
நான் ஒட்டியதாலுண்டு..

ஹா ஹா.
பசைகளுக்குப் பின்னால்
ஒளிந்திருக்கும் என் விரல்
அச்சுகள்
எவரின் கண்களுக்கும்
தெரியப்போவதில்லை

மனோஜ்
18-05-2007, 05:39 PM
தெரியப்போவதில்லை என் காதல் உனக்கு
புரிவதில்லை என் அன்பு உனக்கு
அழிவதில்லை என் காதல் எனக்குள்
உதிர்த்திடு பெண்ணே உன்னை எனக்குள்

அக்னி
18-05-2007, 06:00 PM
உன்னை எனக்குள்
வைத்துக்கொள்ளத்,
துடிக்கின்றேன்...
நீயானால்
ஏன் விலகிப் போகின்றாய்..?
நான்
கல்லறை என்பதாலா..?

அமரன்
18-05-2007, 06:06 PM
கல்லறை சேர்ந்து
காவியமானது காதல்
கலங்கமில்லா என் காதல்
கண்ணீரில் மிதக்குது

ஆதவா
18-05-2007, 06:34 PM
மிதக்குது மனிதம்
ஒரு குளத்தில்
சொல்லுது மனிதம்
அங்கே நீர்
பல சுவை என்று

மயூ
19-05-2007, 05:44 AM
என்று இந்நிலை நீங்குமோ?
அக்கரைக்கு இக்கரை
பச்சையா?
இல்லை இக்ககரைக்கு
அக்கரை பச்சையா?
கானல் நீரைப் பருக
ஓடாதே!!
ஒரு கணம்
உன் ஊரை உறவைப் பார்!!!

சுட்டிபையன்
19-05-2007, 06:19 AM
பார் உன்
கண்ணைத் திறந்து
உன் கண் முன்னே
உன் சன்னிதானத்தில்
உன் மக்கள்
மரணித்திருப்பதை!
உன்னிடம் தஞ்சம்
கோரியவர்கள் உயிரை
நீயே எடுத்து விட்டாயே
கற் சிலையே....!
உனக்கெதற்க்கு சன்னிதானம்
வா என்னுடம்
உனக்கு கலையகத்தில்
ஓரிடம் வாங்கித் தருகிறேன்
அங்கே இருந்து உன் அழகை
வருபவர்களுக்கு காட்டு

மயூ
19-05-2007, 06:37 AM
காட்டு நின் திருமுகம்
பாரெங்கும் கோர முகம்
அன்பொழுகும் ஆறு முகத்தானே
எங்கே நீ எங்கே?
மாரடித்து நான் அழ
மடி மீது குளந்தை தவிக்க
இன்னுமா உனக்கு மெளனம்..
வருவாய் .. நீ வருவாய்..
காத்திருக்கின்றேன்

lolluvathiyar
19-05-2007, 09:27 AM
காத்திருகின்றேன்
காத்திருந்தேன்
காத்துகொண்டே இருப்பேன்
நீ வருவாய் என
வருவாய் என்பது நம்பிக்கை
வரமாட்டாய் என்பது நிஜம்

மனோஜ்
19-05-2007, 10:15 AM
நிஜத்தில் கலந்திட
நினைவுகள் ஒருங்கிட
நிமிடத்தில் மலர்ந்திட
நிசப்தமாய் நின்றிட
நீ மட்டும் தனித்திட
நான் கலங்கிட
உறவுகள் மகிழ்ந்திட
உறக்கம் இல்லாது நான் இங்கு
தூக்கத்தில் நீ அங்கு

ஆதவா
19-05-2007, 10:23 AM
அங்கு ஒரு மனவியல் மாநாடு
சொல்லிக் கொண்டார்கள்

காதல் தவறல்ல
அன்றைய தலைமுறை

டேட்டிங் தவறல்ல
இன்றைய தலைமுறை

புணர்தல் தவறல்ல
நாளைய தலைமுறை

மெய் சிலிர்த்து கூட்டம்
கலைந்தது.
பண்பாடு இவர்களின் காலுக்குள்
சிக்கி மிதிபட்டது.

அக்னி
19-05-2007, 10:26 AM
மிதிபட்டது பூமி
உன் காலடியில்
என்றாலும்,
பூமி உன்னைத்
தாங்குவதாய் சொல்லி
தப்பிவிடும்
தந்திரம்தான்
மனிதனின்,
ஆறாம் அறிவோ..?

ஓவியன்
19-05-2007, 10:28 AM
மிதிபட்டது என்
வாழ்க்கை உன் கால்களால்
மிதிப்பது நீ தானே என்று
விட்டு விட்டேன்
இன்று அந்த காதலையே
மிதித்து விட்டாயே?

ஓவியன்
19-05-2007, 10:28 AM
வாழ்த்துக்கள் அக்னி - முந்தியமைக்கு.

ஆதவா
19-05-2007, 10:38 AM
மிதித்துவிடப் பார்க்கிறாய்
நான் தெய்வமாய் வணங்கும்
என் காதலை..

நீ நாத்திகக் காரி
மறுத்துப் போகிறாய்
நான் ஆத்திகக் காரன்]
ஆதரித்து பேசுகிறேன்
நம் மோதலில்
காணாமல் போனது
மிதிபட்ட நம் காதல்

ஓவியன்
19-05-2007, 10:39 AM
அறிவோ?
ஆமாம் அது என்னிடத்தே
கொஞ்சம் குறைவுதான்.
இருந்திருந்தால் உனை
நான் நம்பியிருப்பேனா?

ஆதவா
19-05-2007, 11:14 AM
நம்பியிருப்பேனோ
அப்பனை என்று
தள்ளி இருந்தானாம்
ஒருவன்

தள்ளி இருந்தவன்
தன் ஒழுக்கம் ஒழுகி
தண்ணி" யாய் இருந்தான்
மாதுக்கள் மடியில்
திராட்சை ரசம் நாவில்
தகப்பன் இல்லாமல்
தகிடுதத்தம் போட்டான்

பிறகென்னவோ தெரியவில்லை
தாய் நினைவுகள்
தந்தை கண்டிப்புகள்
கண்ணுக்குள் கூடு கட்ட
வீடு சென்றான்

வரவேற்றான் தந்தை.

நம்பியிருப்பேனோ என்று
உதைத்து வந்தவன் இவனோ
என்று திகைத்து விக்கிட்டான்
மகன்

ஓவியன்
19-05-2007, 11:46 AM
மகன் இவன்
எந்தன் மகன் இவன்
என்று போற்றினீர்களே அப்பா!
உந்தன் பெருமைக்கு
காரணி எந்தன்
வானுயர்ந்த
வளர்ப்புமுறையல்லவோ!

ஆதவா
19-05-2007, 11:49 AM
வளர்ப்பு, முறையல்லவா?
அஃதில்லாவிடில்
அது முறை அல்லவா?

lolluvathiyar
19-05-2007, 12:21 PM
அல்லவா வவை அழித்தால் அல்லா
அல்லவா லவை அழுத்தால் அல்வா

சுட்டிபையன்
19-05-2007, 12:23 PM
அல்வா கேட்கும்
போது இனித்தது
வாங்கிக் கொடுத்தேன்
அல்வா கொடுத்த
போ கசக்கிறது

அக்னி
19-05-2007, 12:24 PM
அல்வா வில்
ல் ஐ
அழித்துக் கேட்கின்றேன்...
லொள்ளு வாத்தியாருக்கு,
ஏன் இந்த அவா..?

சுட்டி முந்தி விட்டார்...

மயூ
19-05-2007, 12:26 PM
அவா கேட்டா
என்று வாங்கினேன்.
அவா சொன்னா
என்று செய்தேன்
கடைசியில் அநாதையாய்
தெருவில் நின்றேன்! :)

சுட்டிபையன்
19-05-2007, 12:29 PM
அவா கேட்டா
என்று வாங்கினேன்.
அவா சொன்னா
என்று செய்தேன்
கடைசியில் அநாதையாய்
தெருவில் நின்றேன்! :)

அது உண்மைதானே மயூரேசா:cool008:

தெருவில் நின்றேன்
பேருந்துக்காக
பேருந்தும் வந்தது
அதில் நான் ஏற
முயலுகையில்
நீ இறங்கினாய்
உன் கையில்
உன் குழந்தை

gragavan
19-05-2007, 12:30 PM
அல்லவா வவை அழித்தால் அல்லா
அல்லவா லவை அழுத்தால் அல்வா
என்ன சொல்றீங்கன்னே புரியலை. ஏதோ எழுத்துப் பிழை மாதிரி தெரியுது..ஆகையால அல்லவா-லயே நானும் தொடங்குறேன்.

அல்லவா
என்று கேட்டாய்
கொல்லவா
என்ற சொல்
மறந்து போனதோ!

சுட்டிபையன்
19-05-2007, 12:33 PM
அல்லவா வவை அழித்தால் அல்லா
அல்லவா லவை அழுத்தால் அல்வா


என்ன சொல்றீங்கன்னே புரியலை. ஏதோ எழுத்துப் பிழை மாதிரி தெரியுது..ஆகையால அல்லவா-லயே நானும் தொடங்குறேன்.

அல்லவா
என்று கேட்டாய்
கொல்லவா
என்ற சொல்
மறந்து போனதோ!


அவர் சொல்வது

அல்லவா இதில் கடைசியக உள்ள வா என்பதை எடுக்க அப்போ அல்ல அவர் குறிப்பிடுவது அல்லா

அடுத்து அல்லவா இதில் வா முன்னாடி இருக்கும் லவை எடுக்க அப்போது அல்வா


புரிகிறதா ராகவா?

ஓவியன்
19-05-2007, 12:41 PM
போனதா?
உம் பிணி காற்றோடு
மயூரேசா
போதுமே இனி
இந்த விளையாட்டு
புகுந்து விளையாடும் இனி
உம்(ன்) பாட்டில்.

சுட்டிபையன்
19-05-2007, 12:43 PM
பாட்டில் இசை போலே
என்னுள் கலந்தவளே
என்னை மட்டும் தனியே
தவிக்க விட்டு
போனதென்னவோ....??

ஓவியன்
19-05-2007, 12:48 PM
போனதென்னவோ?
என்று கேட்டுவிட்டீர்!
போகுதே என் ஆவி,
எந்தன் பணியுடன்.
போதலையே நேரம்
மன்றம் வர.

மயூ
19-05-2007, 12:51 PM
மன்றம் வர தெரியவில்லை
வீடு வாசல் புரியவில்லை
காடு மேடு தெரிகின்றது
காவி உடை இரசிக்கின்றது
ஆண்டவா உன் சந்நிதியில்
விரைவில் இடம் தா!!

அக்னி
19-05-2007, 12:53 PM
தா... தை...
இது ஜதியல்ல...
என்
இதயத்தை நீ
மிதிக்கும் ஓசை...

மயூ
19-05-2007, 12:58 PM
ஓசை கேட்டு விழித்தேன்
இதயத் துவாரம்
தேடி நீ வெளியே விரைகின்றாய்
நில் நில் என்கிறேன்
நீ தொடர்ந்தும் விரைகிறாய்
ஏன்? ஏன்? ஏன்?
இடம் சரியில்லையா?
அழகு இல்லையா?
உன்னிடம் இருந்து
பதில் இல்லை!

சுட்டிபையன்
19-05-2007, 01:00 PM
ஓசை கேட்கிறதா.......?
என் இதயம் உன்
பெயரை உச்சரிக்கும்
ஓசை உனக்கு
கேட்கவில்லையா
இல்லை கேட்காதது
போல் நடிக்கிறீயா?

மயூ
19-05-2007, 01:07 PM
நடிக்கிறாயா நங்கையே
இப்போ எங்கே உன இளநகை
முகத்தில் இருந்த குறுநகை
நடிப்பு நடிப்பு
சீ.. போ...
என் முகத்தில் விழியாதே!

gragavan
19-05-2007, 01:09 PM
விழியாத விழிகளிலும்
கனவுகள் வருவாம்
காதலுக்குக் கண்ணில்லையே

மயூ
19-05-2007, 01:10 PM
கண்ணில்லையே காதலுக்கு
என்றாய் அன்று
கண்ணில்லாத காரிகையா
உன்னைக் காதலிக்க
என்கிறாய் இன்று

gragavan
19-05-2007, 01:16 PM
இன்று மட்டுமா
என்றும் நன்றுதான்
உன் நினைவிருக்கும் நெஞ்சம்

சுட்டிபையன்
19-05-2007, 01:22 PM
நெஞ்சத்தில் உன்னை
சுமப்பதால்தான்
என் இதயம் துடிக்கிறது
நான் கல்லறையில்
உறங்கிக்கொண்டிருக்கும் போதும்

மயூ
19-05-2007, 01:24 PM
போதும் உன் நாடகம்
எதற்கு இந்த வேடம்
நீ என் நாடகத்தின் நாயகியல்ல
நான் உன் நாயகனுமல்ல
போதும் போதும்
நிறுத்துவிடு
ஆசை காட்டி மோசம் செய்யாதே!

ஆதவா
19-05-2007, 01:41 PM
செய்யாத தவறுகள்
செய்யக் கூடிய பிழைகள்
எல்லாம் ஒரு சேர
புவியின் கருவுக்குள்
புதைக்கப்பட்டு
பின் எடுக்கப்படவேண்டும்
தலையில் பூசும்
சாம்பலாக..