PDA

View Full Version : கவிச்சமர்



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

ஆதவா
12-05-2007, 01:47 PM
அண்ணா நாங்கள் இருவரும் முந்திக்கொண்டோம்... :)

தாமரை
12-05-2007, 01:47 PM
தெய்வமாகும் செயல்தான்
காதல் அடியே
நீ பக்தி செய்யடி
பாட்ட மாத்து

தாமரை
12-05-2007, 01:51 PM
அண்ணா நாங்கள் இருவரும் முந்திக்கொண்டோம்... :)
ஆரம்பிக்க வேண்டிய வார்த்தை வேண்டுதல்களோடு..

ஆதவா
12-05-2007, 01:51 PM
வேண்டுதல்களோடு நிற்கிறேன்
நீ வேண்டுமென்றுதான்
வேண்டாமென்று சொல்கிறாய்
வேண்டல் வீண்தானா?

ஆதவா
12-05-2007, 01:53 PM
எழுதிவிட்டேன்..

ஆதவா
12-05-2007, 01:54 PM
அரம்பிக்க வேண்டிய வார்த்தை வேண்டுதல்களோடு..

யுரேக்கா யுரேக்கா!!!

தாமரை
12-05-2007, 01:57 PM
யார் அந்த ரேகா

தாமரை
12-05-2007, 01:58 PM
வீண்தானா
ஆயிரக்கணக்கில் கவிதைகள்
கட்டுக் கட்டு வாழ்த்து அட்டைகள்
ஒரு கண்ணசைவில்
எல்லாம் சொல்லிவிட்டாயே

ஆதவா
12-05-2007, 02:00 PM
சொல்லிவிட்டாயே
உன் காதலை கவிதையாக!
எழுதிய கவிதைகளுக்கும்
அனுப்பிய அட்டைகளுக்கும்
அர்த்தம் விளங்கியது
நான் என்பதற்குந்தான்

ஆதவா
12-05-2007, 02:00 PM
யார் அந்த ரேகா

ரேகா என் தோழிதான்... ஹி ஹி தவறு கண்டுபிடிக்கும் தோழி :love-smiley-008:

மனோஜ்
12-05-2007, 02:03 PM
நான் என்பதற்குந்தான்
நாலும் படும் அவஸ்தை
மாற்றிட இயேசுவை
வேன்டியே மன்றட
மாறுமா இந்த நான்
இறைவா துனை செய்

தாமரை
12-05-2007, 02:03 PM
என்பதற்கும்தான்
எனக்கு நேரமில்லை
என்ன என்கிறாயா
அதைச் சொல்லத்தான்
நேரமில்லையே

ஆதவா
12-05-2007, 02:05 PM
மனோஜ் முந்திக் கொண்டார்.... அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்

தாமரை
12-05-2007, 02:06 PM
அவர் தவறாக அல்லவா ஆரம்பித்து இருக்கிறார்

ஆதவா
12-05-2007, 02:06 PM
துணை செய் தோழி
துணை ஒன்றைத்
தேடத்தான்

ஆதவா
12-05-2007, 02:07 PM
முந்திய எழுத்தை சேர்த்திக் கொண்டார்.. நானும் கவிதை எழுதிவிட்டேன்....

தாமரை
12-05-2007, 02:10 PM
நீரும் விதிமாறி
மூன்றே வரிகளில்...
ஓவியா அரிவாளுடன்
வந்து கொண்டு இருக்கிறார்
-------------------------

தேடத்தான்
ஓடிப் பார்த்த நீர்
களைத்து வியர்த்து
நின்றபோது
கடல்

மனோஜ்
12-05-2007, 02:13 PM
கடல் கடந்து வந்தபின்னும்
கனவினில் வந்து
தொல்லை கெடுக்கும்
உன் கனவு தொல்லைகள்
என்று நிஞமாகும்
( செல்வன் அண்ணா விலங்கும் மனிதனும் விட்டுடிங்களே வாங்க)

தாமரை
12-05-2007, 02:15 PM
நிஜமாகும் போது
நிழல்கள்
பயங்கரங்களாகலாம்
தள்ளியே நில்
நிழல் மனிதர்களிடம்

சுட்டிபையன்
12-05-2007, 02:18 PM
கலக்குறீங்களே எல்லோரும் சேர்ந்து :D

மனோஜ்
12-05-2007, 02:18 PM
மனிதர்களிடம் இயேசு
கருனைகான்பித்தார்
மனிதனோ அவரிடம்
தன் குணத்தை கான்பித்தான்
இன்னமும் அவர் இறக்கத்துடன்

அரசன்
12-05-2007, 02:20 PM
இறக்கத்துடன் இருப்பவன்
இறைவனாகிறான்.
இல்லாதவனே
இருளோடு வாழ்கிறான்!

ஓவியா
12-05-2007, 02:22 PM
வாழ்கிறான்
வாழ்வின் அர்த்தம்
தெரியாமலே!!

தாமரை
12-05-2007, 02:24 PM
இரக்கத்துடன் பார்க்காதே
நான் இறங்கி விட மாட்டேன்
வெறுமே தாங்கி நிற்பவை கால்
எழச் செய்வது இதயம்

தாமரை
12-05-2007, 02:25 PM
தெரியாமலேயே
காதலிக்கிறேன்
உனக்கும்
எனக்கும்

அரசன்
12-05-2007, 02:26 PM
தெரியாமலே போவதால்
தெளியாதது
என் அறிவல்ல!
உன் சிந்தனைதான்!

மனோஜ்
12-05-2007, 02:26 PM
இதயம் அதில் நி
உதயம் அதில் நான்
உலகம் அதில் உறவுகள்
என்ன நடக்கும் நம் காதலுக்கு ?

தாமரை
12-05-2007, 02:27 PM
காதலுக்கு மரியாதை
பார்த்து விட்டு வந்த
காதலர்கள்
மாட்டிக் கொண்டார்கள்
மரியாதைதான்

ஆதவா
12-05-2007, 02:37 PM
மரியாதையாக
உன் காதலைச் சொல்லுடி
சொன்னால்
மறு ராதையாக மாற்றுவேன்
இல்லையேல்
மரி யா தைத்தவள் நீயோ (மரி- இற, யா - எது, தைத்தவள் - மனதை தைத்தவள்)
என்று போவேன்.

தாமரை
12-05-2007, 02:43 PM
போவேன்
போய்விடுவேன்
எனக்கென்ன வந்தது
கண்ணில் பார்க்கும் உன்னை
நெஞ்சில் பார்த்துக் கொள்கிறேன்

தாமரை
12-05-2007, 02:44 PM
உணவருந்தச் செல்கிறேன்

ஆதவா
12-05-2007, 02:55 PM
போவேன்
போய்விடுவேன்
எனக்கென்ன வந்தது
கண்ணில் பார்க்கும் உன்னை
நெஞ்சில் பார்த்துக் கொள்கிறேன்

பார்த்துக் கொள்கிறேன்
போய் வாருங்கள்
உணவருந்த..
கவிச்சமர் என்றும் ஓயாது
நாம் எழுதுவோம்
கவிதை தீராது.

மனோஜ்
12-05-2007, 03:08 PM
தீராது தீராது கற்பனைகள்
வராது வராது இயலாமைகள்
பொகாது பொகாது மனகுழுப்பங்கள்
மிளாது மிளாது துன்பங்கள்
சோராது சோராது வாழ்கை படிகள்

அல்லிராணி
12-05-2007, 03:27 PM
படிகள்
ஏறி இறங்கிய கால்களில்
மிதிபட்டு
காலால் இடறியவன்
படிகட்டைப் பார்த்துச் சொன்னான்
சனியன்

lolluvathiyar
12-05-2007, 03:44 PM
சனியன் பிடித்த காதல்
பனியனை கிழிக்க வைத்தது
என் அவரசர தேவை
காதல் என்னும் மாயை அல்ல
பனியன் என்னும் மானம்

அல்லிராணி
12-05-2007, 03:53 PM
மானம்
குடிகாரத் தந்தைக்கும்
குழாயடிச் சண்டை அம்மாவிற்கும்
சைட் அடிக்கும் சகோதரங்களுக்கும்
என் காதலால்
போனதாம்

lolluvathiyar
12-05-2007, 04:02 PM
பி.கு : இது கவிதை அல்ல பாராட்டு
அற்புதம் அல்லிரானி உன் கவிதை பாராட்டுகிறேன். கசந்தாலும் உன்மை உன்மையெ


இனி கவியை தொடருங்கள்

மானம்
குடிகாரத் தந்தைக்கும்
குழாயடிச் சண்டை அம்மாவிற்கும்
சைட் அடிக்கும் சகோதரங்களுக்கும்
என் காதலால்
போனதாம்

ஓவியா
12-05-2007, 04:14 PM
போனதாம்
போனதாம்
போனதாம்
போனதாம்
போனதாம்
8 மணி
பல்லவன் பஸ்
7: 59ற்க்கே
போனதாம்

அல்லிராணி
12-05-2007, 04:16 PM
போனதாம்
காலம்
இளமை
இன்னும் என்னென்னவோ
நிற்பது
நம் காதல்மட்டுமே

சுட்டிபையன்
12-05-2007, 04:18 PM
போனதாம் போனதாம் என்று
சொல்லிக் கொண்டிருப்பதில்
உன் நேரம் போகிண்றது
அதை நீ அறிவீயா.........?
போனதை போய் பிடிக்க
முயற்ச்சி செய் இல்லை
அதை விட சிறந்த ஒன்றை
தேடிச் செல், இனியும் போனதை
நினைத்து கூச்சலிடாதே

அல்லிராணி
12-05-2007, 04:20 PM
லேட்டு கண்ணா லேட்டு

காதல்மட்டும் எனக் கிளப்பு அதிர்வேட்டு

ஓவியா
12-05-2007, 04:21 PM
காதல் மட்டும்
இல்லையென்றால்
பூமிக்கு இல்லை
இத்தனை தலைசுற்றல்

ஷீ-நிசி
12-05-2007, 04:21 PM
போனதாம்
காலம்
இளமை
இன்னும் என்னென்னவோ
நிற்பது
நம் காதல்மட்டுமே


காதல் மட்டுமே
குயவனையும்
கயவனாய் ஆக்கும்...

காதல் மட்டுமே
கிழவனையும்
புலவனாய் ஆக்கும்..

சுட்டிபையன்
12-05-2007, 04:22 PM
காதல் மட்டுமே உனது கதை
அதை விட்டால் வேறு
வேலையில்லை உனக்கு
உன்னைத்திருத்த யாருமில்லை
இருந்தாலும் நீ திருந்தப் போவதில்லை
நான் சென்று வருகிறேன்..........

அல்லிராணி
12-05-2007, 04:22 PM
தலைச் சுற்றல்
வாந்தி மயக்கம்
மசக்கை அல்ல
வீட்டில் இருந்து
அலுவலகம் செல்வதற்குள்
காற்றில் மாசு

ஷீ-நிசி
12-05-2007, 04:23 PM
காதல் மட்டும்
இல்லையென்றால்
பூமிக்கு இல்லை
இத்தனை தலைசுற்றல்

தலைசுற்றல் என்பது
தலை சுற்றலல்ல....
சுற்றுவதற்கு
உன் தலை ஒன்றும்
சுற்றுலாவுமல்ல

ஓவியா
12-05-2007, 04:24 PM
காற்றில் மாசு
கண்ட நீ
காரணமில்லாமல் - என்
காதலில் மாசு
காண்கிறாயே
காதலா

அல்லிராணி
12-05-2007, 04:25 PM
காதலா
அது என்ன ஜந்து
உரித்து
உயிரெரித்து
கல்லறையில்
தெய்வமாய்

சுட்டிபையன்
12-05-2007, 04:26 PM
காதலா உனக்கு
என் மேல் காதலா.........?
இல்லை காமமா.........?
காமத்தை காதல்
என்று சொல்லும்
உன்னை காதல் செய்து
என் காதலை வீணடிக்க
விரும்பவில்லை நான்.......

சுட்டிபையன்
12-05-2007, 04:27 PM
தெய்வமாய் நீ
என் நெஞ்சில்
எந்தன் தாயே
இன்றைய
அன்னையர் தினத்தை
கொண்டாட
என்னை தேடி
வா என் அன்னையே

ஓவியா
12-05-2007, 04:27 PM
அன்னையே
தெய்வமாம்
எனக்கு மட்டும்
கல்லாய்

சுட்டிபையன்
12-05-2007, 04:29 PM
கல்லாய் தோன்றுகிறாள்
கல்லறையில் வாழும்
என் தெய்வம் அவளை காண
நாள் கோடி காத்திருக்கிண்றேன் நான்
அதை அவள் அறிவாளா....?

அல்லிராணி
12-05-2007, 04:30 PM
அறிவாளா
என் மனது
என்னை விட
அதிகமாக

சுட்டிபையன்
12-05-2007, 04:33 PM
கல் என்றார்கள்
என்னை பார்த்து
கல்லை எடுத்து
வீசினேன் அவர்களிடம்
அதன் பின்னர் படி
என்று சொன்னார்கள்
படித்தேன் அதன்
பின்னரும் படி எங்கிறார்கள்
என்னத்தை படிக்க?
இப்போது படிக்கும்
கல்லறை காவியத்தையா?

ஆதவா
12-05-2007, 04:44 PM
அடுத்து யாரப்பா? நான் வரட்டா?

ஆதவா
12-05-2007, 04:50 PM
காவியத்தையா நம்புகிறாய்?
ஒழுக்கமிருப்பதாய்க் கூறிக்கொண்டு]
ஒன்பது மனைவி கட்டுவார்கள்
அழகான மனைவி இருந்தாலும்
கற்புக்கரசி பட்டம் கொடுத்துவிட்டு
வேசியர் வீட்டுக்குப் போவார்கள்
இன்னும் எத்தனை?
சொல்லவே தயக்கமப்பா!
காவியத்தை நம்புகிறாயா இன்னும்?

அல்லிராணி
12-05-2007, 05:05 PM
இன்னும் வேண்டும்
இன்னும் வேண்டும்
ஊரையே வளைத்து போட்ட கும்பலுக்கு
சுடுகாட்டில்
ஒரு சட்டி சாம்பல்

ஆதவா
12-05-2007, 05:11 PM
சாம்பலையும்
தின்னுத்தான் வாழ்கிறார்கள்
ஊரில் சிலர்

அல்லிராணி
12-05-2007, 05:36 PM
சிலர் எடுத்துக் காட்டுகள்
சிலர் பாடங்கள்
சிலர் படிப்பினைகள்
சிலர் என்னைப் போல
படித்துக்கொண்டிருப்பவர்கள்

தாமரை
12-05-2007, 07:06 PM
படித்துக் கொண்டிருப்பவர்கள்
மாணவர்கள் அல்ல
அவர்களுக்குப் போதிக்க
ஆசிரியர்கள்!

ஓவியா
12-05-2007, 07:11 PM
ஆசிரியர்கள்
வருவார்கள்
போவார்கள்
கற்றவைகள்
நிரந்தரம்

மனோஜ்
12-05-2007, 07:14 PM
நிரந்தரம் எது நிரந்தரம்
இந்த உலகம் இதில்
உள்ளவை அனைத்தும்
அநித்தியம் நிற்பது
நித்தியம்

தாமரை
12-05-2007, 07:30 PM
நித்திய பிரம்மச்சாரி
மாமி மெஸ்
மேன்சன்
சல்லடை பனியன்
கால்வலிக்க அலைச்சல்
தேவை
கனவுத் தொழிற்சாலையில்
ஒரு
நிரந்தர வேலை

ஆதவா
12-05-2007, 07:33 PM
நிரந்தரவேலை
எனக்கு இதுதான்
ஊரை ஏமாற்றுவதும்
ஊழல் பண்ணுவதும் (அரசியல்வாதி)

ஓவியா
12-05-2007, 07:39 PM
நிரந்தர வேலை
ஒன்று கூடிவரவே
பாச அண்ணன்
மாமியார் வீட்டு
அப்பக் கரண்டியுடன்
இணைத்து வைத்தான்
தங்கயின் கையை

ஆதவா
12-05-2007, 07:43 PM
ஏனுங்க.. நான் சொன்னது பண்ணுவதும் ல... நீங்க லேட் பண்ணீட்டீங்க... அதனால கவிதையை மாற்றி அமையுங்க

ஓவியா
12-05-2007, 07:51 PM
உங்க அளவிற்க்கு எங்களுக்கு 2 நிமிடத்தில் கவிதை எழுத முடியாது அதனால், சிரமபட்டு எழுதிய கவிதயை மற்றி அமைக்க மனமில்லை ஆதவா, மன்னிக்கவும்.

யாராவது வந்து தொடரட்டும்.

ஆதவா
12-05-2007, 07:54 PM
கையை இழந்தவன்
கண் அற்றவன்
கூன் ஆனவன்
ஊன் அல்லாதவன்
எல்லோரையும்
பிஷை என்கிறோம்
நாம் இழந்தவைகளை
அறியாமல்

மனோஜ்
12-05-2007, 08:09 PM
அறியாமல் செய்த தவறுகள்
மன்னித்தவர் இயேசு ஆனால்
அவரை மன்னித்தா இந்த உலகம்
காரணம் மன்னிப்பு மனிதனுக்கு
மரணமே இயேசுவிக்கு

ஆதவா
12-05-2007, 08:11 PM
இயேசுவுக்கு ஒரு மடல்
பிரித்தார் மடலை
என் கதை கண்டார்
விழிகள் கொண்டார்
விழித்துக் கொண்டேன்
இரவில்

ஓவியா
12-05-2007, 08:14 PM
இரவில் வந்தான்
இதயம் தந்தான்
இரவல் கேட்டான்
இணையும் முன்பே
இறந்தும் போனான்

ஆதவா
12-05-2007, 08:19 PM
போனான் என்று
புலம்பாதே
இங்கே மணி இரண்டாயிற்று
நித்திரை தேவி
நித்த நிமிடமும்
நினைக்கிறாள் என்னை
போகிறேன் தூங்க
இனி இச்சமரில்
என்னவோ எழுதீட்டு போங்க..

தாமரை
13-05-2007, 02:01 AM
போங்க என்பது
போகச் சொல்லுவதில்லை
வாங்க வாங்க
என்பதும்
வரச்சொல்லுவதில்லை
பெண்ணே
எல்லாமே என்னை
ஏங்கச் சொல்கின்றன..

ஆதவா
13-05-2007, 02:04 AM
சொல்கின்றன
என் தோல்வியின் காரணங்கள்
இன்னும் கொஞ்சம்
தயார்படுத்திக் கொள் என்று

தாமரை
13-05-2007, 02:17 AM
என்று என்று என்று
என்றென்றும்
அன்று வந்ததன்று
அன்று என்று ஒன்று
ஒன்றன்று அன்றன்று

ஆதவா
13-05-2007, 02:21 AM
அன்றல்லதென்று
என்று
ஒன்று தள்ள
வென்று வருவது
என்று?

தாமரை
13-05-2007, 02:25 AM
என்று
உளமாற உறுதி கூறுகிறேன்
மந்திரிக்கு
இது மட்டுமே நினைவில் இருந்தது
பதவி பிரமாணத்தில்

ஆதவா
13-05-2007, 03:14 AM
"பிரமாணத்தில் இடருவேன்
பரமானந்தத்தில் உழலுவேன்
தரமான ஆட்சியா என்றறியேன்
வருமானம் எவ்வள வறியேன்."
ஒரு அரசியல்வாதியின் மனம்

சுட்டிபையன்
13-05-2007, 03:21 AM
மனம் விட்டு சொல்லும்
என் காதலை புரிந்து
கொள்ள உனக்கு
மனம் இல்லையா...?
சொல் ஒரு வார்த்தை
உனது மனதில் எனக்கு
ஓரிடம் உள்ளது என்று
அந்த ஒரு சொல்லில்
உயிர் வாழ்வேன்
நூறாண்டு

தாமரை
13-05-2007, 03:49 AM
நூறாண்டு வாழ வாழ்த்தி
கண்ணீர் துளிக்கும் கண்கள்
ஒரு புறம் ஆனந்தம்
மறுபுறம்
வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி
தலைகுனிந்தவள் மனதில்
கதம்ப உணர்வுகள்
திருமணம்

அல்லிராணி
13-05-2007, 03:51 AM
திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்
இங்கிருந்து தான்
எத்தனை சாதனையாளர்கள்
தத்துவ வாதிகளாய்
கவிஞர்களாய்
வியாபாரிகளாய்
அரசியல்வாதிகளாய்
திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்

ஓவியன்
13-05-2007, 03:52 AM
திருமணம் என்ற பெயரில்
நடத்தி வைக்கப் பட்ட
சடங்குகள்
சம்பிரதாயங்கள்.
பிரயாசித்தமாகுமா
புரிந்து கொள்ளப்படாத
இதயத்திற்கு?

சுட்டிபையன்
13-05-2007, 03:53 AM
"திருமணம்" பலவாண்டு கனவு
ஆன பின்னர்தானே புரிந்து
கொண்டேன் அது வாழ்க்கை இல்லை
வாலிபத்தின் வாழ்க்கைக்கு
அடிக்கப்பட்ட சாவுமணி

தாமரை
13-05-2007, 03:59 AM
பல்கலைக் கழகம்
பல்லும் போனது
கனவு
கலைந்தும் போனது
கலகம் மட்டுமே
வேலை நிறுத்தங்களில்
தொலைந்து போனது
கல்வி

-----------

இதயத்திற்கு
வலியில்லை
வாழ்வதற்கு
வழியுமில்லை
அடகு வைத்தேன்
திருமணத்தில்

-----------

சாவுமணி
அடிக்கப்பட்டது
செத்ததற்கு முன்னா பின்னா
செத்தவனுக்கு கவலையில்லை
சுற்றி இருப்பவனுக்கு
ஆயிரம் கவலை

சுட்டிபையன்
13-05-2007, 04:03 AM
ஆயிரம் கவலை எங்கிண்றாய்
எதற்க்காக கவலைப் படுகின்றாய்........?
கவலைகளிற்க்கு காரணம் கவலைகள்தான்
அவற்றை ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு
புறப்படு புது மனிதனாய்

அல்லிராணி
13-05-2007, 04:04 AM
மனிதனாய்
மனிதன் வாழ்வதற்கு
உதாரணம்
ஆயிரம் விலங்குகள்

சுட்டிபையன்
13-05-2007, 04:08 AM
விலங்குகளை குறைவாக
எடை போடாதே
அல்லிராணியே
அவற்றிற்க்கு மனிதரைவிட
மனிதம் அதிகம்

அல்லிராணி
13-05-2007, 04:16 AM
மனிதம் அதிகம்
ஒருகிலோ இரண்டு கிலோ
என்று
விலங்குகளை
எடை போட்டு
சமைத்து சாப்பிட்டுக்கொண்டு.

மதி
13-05-2007, 05:44 AM
சாப்பிட்டுக் கொண்டு
இருந்தேன்
வாசலில்
அம்மா தாயே பிச்சை போடு.

ஆதவா
13-05-2007, 05:54 AM
பிச்சை போடு என்று
கேட்ட குரலுக்கு
போடமுடியவில்லை
கையில் சிகரெட்டுடன் நான்

மதி
13-05-2007, 05:56 AM
நான் யார்
கேள்விக் கணைதொடுத்தது
என் மனம்
விந்தை பாருங்கள்
மனம்கூட நான் தானே!

ஆதவா
13-05-2007, 05:57 AM
தானே என்று சொல்லித்
தானே அவன்தானே
தன்னைத் தானே
அழித்துக் கொள் வானே

மதி
13-05-2007, 06:01 AM
வானே விண் மீனே
வர்ணித்தேன் அவளை
பின்னாளில்
இடிஅ மீனாய்
மனம் வதைத்தாளே

ஆதவா
13-05-2007, 06:12 AM
வதைத்தாளே என் தாய்
சீக்கிரம் வீட்டுக்கு வரவில்லையென
ஆதலால் மதி
பாதியில் விட்டுச் செல்லுகிறேன்
மீதி தொடருங்கள்

ஓவியன்
13-05-2007, 06:22 AM
தொடர்வதற்குத் தானே
இருக்கிறேன் - நீ
போன பாதையெல்லாம்,
படர்வதற்குத் தானே
இருக்கிறேன் - நீ
பற்றிய இடமெல்லாம்.

மதி
13-05-2007, 06:25 AM
தொடருங்கள்
அவள் சொன்னது
நானெழுதிய கதையை
தட்டாமல் தொடர்ந்தேன்
அவளின் நிழலாய்

ஓவியன்
13-05-2007, 06:31 AM
தொடருங்கள்
அவள் சொன்னது
நானெழுதிய கதையை
தட்டாமல் தொடர்ந்தேன்
அவளின் நிழலாய்

நிழலாய் இருந்தேன்
நீ குடை வேண்டுமென்றபோதெல்லாம்.
மழையாய் இருந்தேன்
நீ வறண்டிருந்த போதெல்லாம்.
உணவாய் இருந்தேன்
நீ பசித்திருந்தபோதெல்லாம்.

கணவனாக இருக்க மட்டும்
தடை ஏன் கூறினாயோ??
நீ மணமாகாத போதும்.

அரசன்
13-05-2007, 08:37 AM
போதும்
இன்றே நிறுத்திவிடு.
அறுவைச் சிகிச்சையின்றி
இதயம் மாற்றும்
உன் செயலை!

ஓவியன்
13-05-2007, 08:41 AM
செயலை,
சொல்லை,
மனதை ஏன்
எல்லாவற்றையுமே
இழந்து விட்டேன் - உன்னைப்
பார்த்த பின்னர்.

gragavan
13-05-2007, 09:13 AM
பின்னர் செய்வதை
முன்னர் செய்வதும்
காதலுக்கு அழகுதான்
திருமணம் பின்னர் வரட்டும்
முன்னர் நீ வா

ஓவியன்
13-05-2007, 09:24 AM
வா என்றழைத்தது உன் இளமை
தாவென்று கேட்டது என் கயமை
உன்னைத் தர வைத்தது எங்கள் தனிமை
இப்போ(து) உனை மறக்க
எனை வைத்தது உன் இயலாமை.

மதி
13-05-2007, 09:25 AM
வா என்றழைத்தாய்
வந்தேன்
தா என்றதும் இதயம்
தந்தேன்
போ என்கிறாயே
பொய் தானே சொல்கிறாய்..!

மனோஜ்
13-05-2007, 09:31 AM
சொல்கிறாய் நான்
காதலன் என்று
நான் நினைப்பதும் அவைதான்
உனறுமா உறவுகள்
உறவில் இனைந்திட

மதி
13-05-2007, 09:45 AM
இணைந்திட நினைத்தோம்
தம்பதிகளாய்
முடியவில்லை
நம் பிள்ளைகளாவது
இணையட்டும்..!

ஓவியா
13-05-2007, 10:31 AM
இதயம் ஒரு இம்சை


இணையட்டும்
இதயங்கள்
இரண்டும்
இல்லற வாழ்வில்

இல்லையேல்
இருதியாய்
இணைந்தே
இறப்போம்
இன்றே!!!!

அன்புரசிகன்
13-05-2007, 11:13 AM
இறக்கநினைத்தால் இறந்துவிடு

இன்றே முடிவெடுத்துவிடு
இறக்கநினைத்தால் இறந்துவிடு
வாழநினைப்பவர் பலருண்டு.
அவர்களுக்கு வழிகொடுத்தவிட்டு
சென்றுவா...
ஆனாலும் நீ வென்றுவிடவில்லை

ஓவியா
13-05-2007, 11:16 AM
ரசிகா 'இன்றே' என்ற சொல்லில் ஆரம்பிக்கவேண்டும்.

கடைசி எழுத்தில் தொடங்க வேண்டுமப்பா.

தாமரை
13-05-2007, 12:06 PM
வென்று விடவில்லை
அதற்காக
தோற்றும் போகவில்லை

வெல்லவும் தோற்கவும்
காமன் இருக்கிறான்
எனக்கேன் கவலை

ஓவியா
13-05-2007, 12:08 PM
கவலை
காணாமல் போக
கல்லுக்கடையிலே
கதியானேன்

gragavan
13-05-2007, 12:12 PM
கதி என்று வந்தால்
சதி செய்வது ஏன்
பதி என்று சொல்ல
விதி இல்லையோ!

தாமரை
13-05-2007, 12:12 PM
கதியானேன்
துரித கதியானேன்
விதி துரத்த
நிதி துரத்த
தப்பித்துச் செல் என
மதி துரத்த

....... (கல்யாண பத்திரிக்கை குடுக்கப் போகணும். 3 மணி னேரம் கழித்து வருகிறேன்)

gragavan
13-05-2007, 12:13 PM
கதியில நான் பாடீட்டேன். கல்யாணப் பத்திரிக்கை...சொல்லவே இல்லையே தாமரை.

தாமரை
13-05-2007, 12:16 PM
கதியில நான் பாடீட்டேன். கல்யாணப் பத்திரிக்கை...சொல்லவே இல்லையே தாமரை.
நீங்கள் பாட வேண்டிய வார்த்தை துரத்த
அண்ணன் மகனின் கல்யாணப் பத்திரிக்கை..

சரி சரி நான் வரும் வரை தொடருங்கள்

ஓவியன்
13-05-2007, 12:18 PM
கதி என்று வந்தால்
சதி செய்வது ஏன்
பதி என்று சொல்ல
விதி இல்லையோ!

இல்லையோ உன் இதயத்தில்
எனக்கொரு இடம்??
ஆமென்கிறதே என் பெயரில்லா
உன் கல்யாண அழைப்பு.

ஓவியா
13-05-2007, 12:36 PM
கல்யாண அழைப்பு
காதலனின்
கல்யாண அழைப்பு

காணாமல் செல்ல
காதலியென்ன
கண்ணில்லா
கற்ச்சிலையா!

கரைச்சேரா
காதல்தான்
கண்ணீரில்
கரையுமா??

அன்புரசிகன்
13-05-2007, 12:39 PM
கரையுமா உன்மனம்
அதிலே என் ஜனனம்.
வந்தால் உனக்கு வந்தனம்.

ஓவியன்
13-05-2007, 12:40 PM
கரையுமா நீலம்
வானத்திலிருந்து.
கலையுமா உன் நினைவுகள்
என் மனசிலிருந்து.

அன்புரசிகன்
13-05-2007, 12:56 PM
கரையுமா நீலம்
வானத்திலிருந்து.
கலையுமா உன் நினைவுகள்
என் மனசிலிருந்து.

மனசிலிருந்து கலைந்தது.
வர்ணங்களும் நனைந்தது
நீ வந்து போனது
முடியவில்லை என்மனது

ஓவியன்
13-05-2007, 01:02 PM
மனசிலிருந்து கலைந்தது.
வர்ணங்களும் நனைந்தது
நீ வந்து போனது
முடியவில்லை என்மனது

என்மனதுக்குத் தெரியவில்லை
கள்ளமும் கபடமும்.
உன்மனதுக்கும் தெரியவில்லை
என்னிதயமும் காதலும்.

ஓவியா
13-05-2007, 01:12 PM
காதலும்
கண்ணீரும்
வேண்டாமாம்
கல்யாணமும்
கச்சேரியும்
கைக்கூட வாழ்த்துக்கள்.

gragavan
13-05-2007, 01:14 PM
ஏதோ தவறு நடக்குது. மொதல்ல என்னோட கதிக் கவிதைய முன்னாடி காட்டுச்சு. அடுத்து ஒரு பின்னூட்டம் போட்டா தாமரையோடது முன்னாடி வந்துருச்சு.

அன்புரசிகன்
13-05-2007, 01:14 PM
காதலும் மனிதமும் பொதுவானது.
அனுபவிக்க இதமானது.
பரிதவிக்கவிடுவது
எக்காதலில் உள்ளது

gragavan
13-05-2007, 01:16 PM
வாழ்த்துச் சொல்ல
ஆயிரம் பேர்
ஆயிரத்தில் நான் ஒருவன்
பழைய காதலன்

ஓவியன்
13-05-2007, 01:18 PM
வாழ்த்துக்கள்!
வலியுடன் சொன்னபோது,
வார்த்தையும் வர மறுத்தது
காதலியின் திருமணத்தில்.

அன்புரசிகன்
13-05-2007, 01:20 PM
வாழ்த்துச் சொல்ல
ஆயிரம் பேர்
ஆயிரத்தில் நான் ஒருவன்
பழைய காதலன்

பழையகாதலனென நீ கூறுகிறாய்...
பழைய காதலியாக நானிலையோ
பழையகாதலனாக நீ இருந்துவிடு.
புதுக்காதலியாக நானிருந்து-விடுகிறேன்.

gragavan
13-05-2007, 01:25 PM
விடுவது என்றால்
உயிர்தான் இருக்கிறது
உணர்வெல்லாம்
கற்பூரம் கொளுத்திவிட்டாயே

ஓவியன்
13-05-2007, 01:29 PM
கொளுத்திவிட்டாயே
என் கடிதங்களை - அதில்
என் மனசும் இருக்கிறது
என்று அறியாமலேயே!..

அன்புரசிகன்
13-05-2007, 01:37 PM
அறியாமல் நான் அறிந்தது
சொல்லாமல் நான் சொன்னது
எல்லாமே வார்ந்து முடிந்தது
உனது கலப்படத்தால்.

gragavan
13-05-2007, 01:46 PM
கலப்படம் செய்தால்
வருவது காதல்
என்னுயிரோடு
உன்னிதயம் கலந்ததை
என்ன சொல்ல

அன்புரசிகன்
13-05-2007, 01:49 PM
சொல்ல இனிப்பது காதல்
செயலால் இனிப்பது தாய்மை.

gragavan
13-05-2007, 01:52 PM
தாய்மை எனப்படுவது
யாதெனின்
யாதொன்றும் அன்பு எனவாகச்
சொலல்

அன்புரசிகன்
13-05-2007, 02:02 PM
சொல்லல் சிறந்தால் நல்விளக்கம்
கல்லல் சிறந்தால் நற்பண்பு
தள்ளல் சிறந்தால் நற்காதல். :D (காதலர் யாரும் அடிக்க வந்திடாதீங்க)

விகடன்
13-05-2007, 02:20 PM
சொல்லல் சிறந்தால் நல்விளக்கம்
கல்லல் சிறந்தால் நற்பண்பு
தள்ளல் சிறந்தால் நற்காதல். :D (காதலர் யாரும் அடிக்க வந்திடாதீங்க)

அடடா!
நம்ம ஓவியனுக்கு எல்லாத்தையும் (அதாவது முதலிரண்டையும்) விட தள்ளல் நன்றாக வருமே...:sprachlos020:

அப்படியானால்...

என்ன ஓவியரே?
அன்புரசிகன் சொல்வது உண்மைதானா?:sprachlos020:

பிச்சி
13-05-2007, 02:36 PM
நற்காதலை
நகைத்துக் ஒண்டு ஏற்கும் பூக்கள்
விரிந்த மொழியில்
சிக்கித் தவிக்கும் வண்டுகள்
சிறகின் ஒலியில் மீண்டு எழும்
மகரந்தங்கள்
மரணத்தை நேரில் காணும் சூரியன்கள

அல்லிராணி
13-05-2007, 02:38 PM
சூரியன்கள்
தூரம் போகப் போக
நட்சத்திரங்கள்
அருகில் வந்தால்
மதுரை

பிச்சி
13-05-2007, 02:45 PM
மதுரை மல்லியில்
மதி மயக்கும் ஈக்கள்
சொறிந்த பூக்களின்
உள்ளுக்குள் ஈரமிகுந்த
கவிதைகள்

தாமரை
13-05-2007, 02:48 PM
கவிதைகள்
நெஞ்சில்
தொண்டைக் குழிகளில்
காகிதங்களில்
காற்றினில்
எங்கெல்லாம் தான்
இறந்து போகின்றன.

அடுத்தவர் நெஞ்சில்
நாற்றை பிடுங்கி விட்டால்
ஆயுள் கெட்டி

அல்லிராணி
13-05-2007, 02:53 PM
கெட்டி அப்பர் (கைலாச நாதர் கோவில் - தாரமங்கலம்)
கட்டிய கோவிலில்
சிங்கத்தின் வாய்க்குள் உருளும் உருளைக்கல்
இதிலென்ன அதிசயம்
சில சமயம்
கவிதைகளும் தான்
என் வாயில்
வெளியேயும் வராமல்
உள்ளேயும் போகாமல்

பிச்சி
13-05-2007, 02:54 PM
ஆயுள் கெட்டியான
மலர்கள் உலகிலே இல்லை
கடுவளியில் மரித்துப் போகா
மரங்களும் இல்லை
ஊழ்வினையில் உதிர்ந்திடா
உண்மையும் இல்லை
புறக்கண்ணில் வீழ்ந்திடா
பெண்மையும் இல்லை

பிச்சி
13-05-2007, 02:54 PM
அச்சோ அல்லிராணி அக்கா முந்திட்டாங்கோ.. சாரி அக்கா

தாமரை
13-05-2007, 02:59 PM
போகாமல் என் உயிர்
போனதும் என்னுயிர்
என்ன செய்யச் சொல்லுகிறாய்
தலைகவிழ்ந்து
சோகத்துடனே இல்லை நாணத்துடனோ
போகாமல் போய்க்கொண்டு
என் உயிர்

பிச்சி
13-05-2007, 03:04 PM
என் உயிர்
பகல், இரவோடும்
பூ வண்டோடும்
இலைகள் பனியோடும்
கலந்தது போலவே
உன்னோடு
கலந்தது :icon_08:

அல்லிராணி
13-05-2007, 03:09 PM
கலந்தது
பிசைந்தது
உருட்டியது
நிலாச்சோறு ஊட்டிய அன்னையின் கைகள்
வாங்கித் தின்ற கைகள்
வராது என்று தெரிந்த பின்பும்

தாமரை
13-05-2007, 03:31 PM
தெரிந்த பின்பும்
திரியாத அன்பு
அன்னைக்குக் காதலிக்கும் மட்டுமே உண்டு
தவறு செய்பவனே
திரியாமல்
திரிக்காமல்
திரும்பி வா

பிச்சி
13-05-2007, 03:39 PM
திரும்பி வா
மென் அலையே
கரைகள் உடைந்து நிற்கிறது
வானம் கலைந்து நிற்கிறது
வர்ணங்கள் இழந்துபோய்
வானவில் சோபிக் கிடக்கிறது
சிப்பிகளும் மீன்களும்
சின்னச் சின்னக்
கிளிஞ்சல்களும் மரக்
கொத்திகளும் கண்ணீர் துளிர்க்கிறது
திரும்பி வா மென் அலையே
பிரபஞ்சக் கடல்
வற்றித் தவிக்குது
கொஞ்சம் நீர் கொடு.

தாமரை
13-05-2007, 03:46 PM
நீர்கொடு
தாகம் மட்டுமாவது
தணித்துக் கொள்கிறேன்
கெஞ்சியது
தனிமனிதனல்ல
தமிழ்நாடு

அன்புரசிகன்
13-05-2007, 04:10 PM
தமிழ்நாடு காக்குமா - எம்மை
அவருக்கு படை தருமா- இல்லை
சாவடிக்க படை தருமா - எம்மை..

தாமரை
13-05-2007, 04:13 PM
எம்மை ஆளுவது
நாங்களேவாம்
நம்ப முடியவில்ல
கைவிரலில் கரும்புள்ளி
சூட்டப் பட்ட கிரீடமா
இல்லை
சூடுபட்ட தழும்பா

gragavan
13-05-2007, 04:14 PM
எம்மைக் தேடித் தேடி
உம்மைக் கண்டேன்
நம்மைக் காண்பது எப்போது

gragavan
13-05-2007, 04:16 PM
தழும்புகள் எல்லாம்
கதை சொன்னால்
நூறு பாரதம் நாம் காதலில்

தாமரை
13-05-2007, 04:16 PM
காதலில்
கவிழ்ந்த படகுகள்
கடந்து விடுகின்றன
கடந்த படகுகள்
கவிழ்ந்து விடுகின்றன
தலைசுற்றுகிறதா
அதுதான் காதல்

gragavan
13-05-2007, 04:30 PM
காதலில் தோல்வி
இருவருக்கு
மோதலில் தோல்வி
ஒருவருக்கு

அன்புரசிகன்
13-05-2007, 04:33 PM
ஓருவருக்கு ஒருவரானால் நீ ராஜா
ஒருவருக்கு பலரானால் நீ புள்ளிராஜா.

தாமரை
13-05-2007, 04:34 PM
இருவராய் இருந்தால் அதுஎன்ன காதல்
இரவலாய் கிடைக்காது இதயம்

தாமரை
13-05-2007, 04:36 PM
ஓருவருக்கு ஒருவரானால் நீ ராஜா
ஒருவருக்கு பலரானால் நீ புள்ளிராஜா.

புள்ளிராஜா விளம்பரத்தைக்
பார்த்த மகன் கேட்டான்
வருமாப்பா?
அப்பனுக்கு
பதில் சொல்ல தெரியவில்லை
அணைத்தார் தொலைக்காட்சியை
அருகே அழைத்து
அணைத்தார் மகனை
பாடபுத்தகத்தைப் படி

ஓவியா
13-05-2007, 04:45 PM
படி அரிசி
ஒரூபாய்
அண்ணாத்திட்டம்
கிலோ அரிசி
இரண்டுரூபாய்
கலஞர்திட்டம்
அறுவடையானது ஓட்டு
அமோக மகசூல்

தாமரை
13-05-2007, 04:48 PM
அமோக மகசூல்
அடிமாட்டு விலை
வானம் பொய்த்தது
விற்பதற்கு ஒன்றுமில்லை
என்றும்
பொறுமிக் கொண்டு
உழவனின் கும்பி

ஓவியா
13-05-2007, 05:20 PM
கும்பிக்கு
கஞ்சி
கதர்ச்சட்டைக்கும்
அதேதான்

கிடைத்தால் விரைப்பாய்
இல்லாவிட்டால்
துவண்டு
சுருக்கம் சுருக்கமாக
வரிகளோடு

அது கவிதையா!
இது கவிதையா!!!

தீபா
13-05-2007, 05:21 PM
எனக்கும் சொல்லிக் கொடுங்கள்
கவிச் சமர் எப்படி விளையாடுவது?

தாமரை
13-05-2007, 05:24 PM
சமர் என்பது விளையாடுவதில்லை
போராடுவது
முதல் பதிவிலிருந்து படியுங்கள்

அரசன்
13-05-2007, 05:25 PM
எனக்கும் சொல்லிக் கொடுங்கள்
கவிச் சமர் எப்படி விளையாடுவது?

ஒருவர் முடிக்கும் கவிதையின் கடைசி வரி, உங்கள் கவிதையின் முதல் வரியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

தீபா
13-05-2007, 05:27 PM
ஓ அப்படியா
அப்படியென்றால்
எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
எனக்கு வேகமாக டைப்
பண்ணி கவிதை எழுத தெரியாது
ரெண்டு நாளாய் படித்தேன்
உங்கள் வேகம் எனக்கு பத்தாது

நன்றி

அரசன்
13-05-2007, 05:30 PM
ஓ அப்படியா
அப்படியென்றால்
எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
எனக்கு வேகமாக டைப்
பண்ணி கவிதை எழுத தெரியாது
ரெண்டு நாளாய் படித்தேன்
உங்கள் வேகம் எனக்கு பத்தாது

நன்றி



முயன்றால் முடியாதது ஏது?

தீபா
13-05-2007, 05:38 PM
முயன்றால் முடியாதது
எம்மை அறிவது

தாமரை
13-05-2007, 05:39 PM
முயன்றால் முடியாதது
எம்மை அறிவது
M இப்படித்தான் இருக்கும்
அறிந்து கொள்ளுங்கள்

அரசன்
13-05-2007, 05:40 PM
கவிதையாக வடிக்கிறேன்!
கலங்கிய என் மனதில்
கன்னியாகவே
அவளை!

தாமரை
13-05-2007, 05:42 PM
அவளை
பற்றிய பேச்சு
ஊருக்கு கிடைத்த அவல்
அவளுக்கோ
அவன் பேச்சு மட்டுமே
மூச்சு

தீபா
13-05-2007, 05:43 PM
அவளை என்று
ஆரம்பிச்சு கவிதை
எழுதினால்
நான் எழுதுவது சரியாகுமா?

அரசன்
13-05-2007, 05:45 PM
மூச்சு நின்றாலும்
என்னை விட்டு பிரியாது.
என்னவளின் நினைப்பு!

ஓவியா
13-05-2007, 05:47 PM
முச்சு முட்டுதடா
இதயத்தில் பாரம்
உடற்ப்பயிர்ச்சியோ
உணவு குறைப்போ
எடையை குறையடா கண்ணா

தாமரை
13-05-2007, 06:02 PM
நினைப்பு என்மீது
அம்மாவுக்கு
அப்பாவுக்கு
அண்ணனுக்கு
தங்கைக்கு
எனக்கு
அவன்மட்டுமே

ஓவியா
13-05-2007, 06:09 PM
அவன் மட்டுமே
ஆண்டவனின் அன்பில்
ஆசி பெற்றால் போதுமா!!
பூவுடன் சேர்ந்த நாராக
நான் இடது நின்று
மணக்க வேண்டாமா!!

தாமரை
13-05-2007, 06:19 PM
வேண்டாமா
வேண்டாமா
அப்புறம் ஏன்
வேண்டுதல்

ஓவியா
13-05-2007, 06:28 PM
வேண்டுதல்
வேண்டாமய்
வேண்டுதல்

அல்லிராணி
13-05-2007, 06:31 PM
வேண்டுதல்
ஆடுகோழி என்றால்
உயிர்
தன்னிடமிருந்து
என்றால் மட்டும்
மயிர் (முடி)

அன்புரசிகன்
13-05-2007, 07:09 PM
முடி என் காதல் சின்னம்.
என்று உன் அன்பு பிரசன்னம்...

gragavan
13-05-2007, 08:12 PM
பிரசன்னம் எங்கே
காதலிக்கு அல்ல
காதலுக்கு

மனோஜ்
13-05-2007, 08:19 PM
காதலுக்கு நன் இளயவன்
காதலிக்கு நான் இனியவன்
காத்தவர்களுக்கு நான் கொடுடியவன்

gragavan
13-05-2007, 08:28 PM
கொடுடியவன்னா என்னங்க?

ஓவியா
13-05-2007, 09:00 PM
கொடியவன் என்று சொன்னாயே - மலர்
கொடி அவனது என்று சொல்லவில்லையே -மலர்
கொடி அவனது என்றால்
கொடியவன் அவனே!!

ஹி ஹி ஹி சும்மா வந்துச்சு தட்டி விட்டேன்.

ஆதவா
13-05-2007, 11:47 PM
அவனே சிறந்தது
அவனே உயர்ந்தது
அவனே எல்லாம்
என்று
அவனியில்
அழுதுகொண்டு புரிந்துகொள்வாள்
இல்லச்சிறை முதலாளி

ஓவியா
13-05-2007, 11:50 PM
முதலாளி வீட்டு
நாய்க்குட்டிக்கும்
உண்டு
இன்னொரு
முதலாளி வீட்டு
நாய்க்குட்டியின் துணை

ஆதவா
14-05-2007, 12:08 AM
துணையின்றி
துரும்பேது? வாழ்வுத்
துள்ளல்தான் ஏது?
சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்
எந்தத் துணையுமின்றி
வாழக் கூடுமென்று...
தானாய் புரியும்வரை

தீபா
14-05-2007, 12:28 AM
புரியும்போது புரிந்துகொள்வாய்
புன்னகை செய்த காரணத்தை
புரியாமலே போனால்
என் கண்ணீர் செய்த காரணம்
புரிந்துகொள்வாயா?

ஆதவா
14-05-2007, 12:44 AM
புரிந்து கொள்வாயா?
நீ கேட்ட ஆடம்பரங்கள்
ஆபரணங்கள்
உனக்காகவே வாழும்
என்னிடம் மாட்டாது என்று..

தாமரை
14-05-2007, 01:24 AM
என்று
கேட்டுக் கொண்டே
காத்திருந்தாள்
ஒருத்தி
சென்று கொண்டே
இன்னொருத்தி
காத்திருந்தவள்
காத்திருந்தாள்
சென்று கொண்டிருந்தவள்
வென்று கொண்டு

ஆதவா
14-05-2007, 01:28 AM
கொண்டு வருவதற்கு
என்ன இருக்கிறது
கொண்டு செல்ல?

தாமரை
14-05-2007, 01:41 AM
செல்ல மாட்டேன்
நான் சொன்னபோது
நீ ஒப்புக்கொள்ளவில்லை
செல்லாக்காசு என்றாய்
இப்போதாவது
புரிந்து கொண்டாயா
நான்
செல்லாத செல்வன்

அல்லிராணி
14-05-2007, 01:56 AM
செல்வன்
செல்லும் வரை
செல்வம்
செல்லாவிட்டால்
புதையல்

ஆதவா
14-05-2007, 01:58 AM
புதையல் புதைந்துள்ளது
தெரிகிறது சிலருக்கு
மண்ணிலும் பெண்ணிலும்

அல்லிராணி
14-05-2007, 02:00 AM
பெண்ணிலும்
ஆண்மை உண்டு
கணவர்களையும்
மாமியார்களையும்
வதைக்கும் பொழுது

ஆதவா
14-05-2007, 02:06 AM
பொழுது புலர்ந்த வேளையினில்
தொழுது எழுந்த காலைக்குயில்
கோவிலுக்குச் செல்லும்
பாவி நான் உடன் செல்வேன்.
தினங்கள் ஓடியது.. அவளுக்கு
சினங்கள் கூடியது
பின் தொடர்வதேனென்றாள்
என் அன்னை முகம் கண்டதில்லை
உன்னைக் காணும் வரை என்றேன்
ததும்பியது கண்ணீர்
எனக்கும் அவளுக்கும்

(நன்றி: யாரோ ஒருவர்)

தாமரை
14-05-2007, 02:12 AM
அவளுக்கும் ஆசை வந்தது
கடலை சாப்பிட்டுக் கொண்டே
கடலைப் பார்த்துக் கொண்டு
கடலை போட
மட்ட மத்தியான வெய்யிலில்
வேர்கலியா என்றேன்
வேர்க் கடலை என்றாள்

அல்லிராணி
14-05-2007, 07:12 AM
என்றாள் என்றாலும்
என்னவளின் மனம்
என்ன எண்னுகிறதென
நானறிய மாட்டேனா
அவள் விரல் ஸ்பரிசமும்
முகச்சுருக்கங்களும்
விரிந்து சுருங்கிய நாசித்துவாரங்களும்
பளபளத்த கண்களும்
நான் விட்டுப் போகமாட்டேன்
விட்டால்
அவள் விட்டுப் போய்விடுவாள்.

மதி
14-05-2007, 07:58 AM
போய்விடுவாள் என
நினைத்திருந்தேன்
போவேனா என்றிருந்தாள்
என்னவள் கண்ணோடு
கண்ணோக்கினேன்..
முத்தத்தை பரிசாய் பெற்று
மிச்சமாய் தந்தாளே
மெட்ராஸ்-ஐ

அன்புரசிகன்
14-05-2007, 07:58 AM
போய்விடுவாள் அவள்
காய்ந்திடுவான் இவன்
மேய்ந்திடுவர் அவர்

மனோஜ்
14-05-2007, 08:07 AM
கொடியவன் என்று சொன்னாயே - மலர்
கொடி அவனது என்று சொல்லவில்லையே -மலர்
கொடி அவனது என்றால்
கொடியவன் அவனே!!

ஹி ஹி ஹி சும்மா வந்துச்சு தட்டி விட்டேன்.

அருமை ஒவியக்கா கோடியவன் என்றால் கோடிகளில் ஒருவன்

அவர் செல்வார் என்று இருந்தேன்
இல்லை இனியும் பொறுத்தால்
விளைவது உதிரமே பொறுத்தது நிறுத்தி
பெருவது அடைவேன்

ஓவியன்
14-05-2007, 08:44 AM
போய்விடுவாள் என
நினைத்திருந்தேன்
போவேனா என்றிருந்தாள்
என்னவள் கண்ணோடு
கண்ணோக்கினேன்..
முத்தத்தை பரிசாய் பெற்று
மிச்சமாய் தந்தாளே
மெட்ராஸ்-ஐ

மெட்ராஸ்-ஐ தந்தாய்,
ஜல தோசம் தந்தாய்,
இன்னும் என்னென்னவோ
பெயர் தெரியா பல தோசம்
தந்தாய் - எல்லாம்
தரத் தெரிந்த உனக்கு,
ஏன் இன்னமும்
உன் இதயத்தைத்
தரத் தெரியவில்லை?

மனோஜ்
14-05-2007, 08:51 AM
தெரியவில்லை எனக்கு இந்த
உலகினில் உள்ள பாவங்கள்
செய்யவும் நினனைக்கவில்லை
அனால் நடப்பது பாவங்களின்
அனைத்து கூட்டு முயற்ச்சி

ஓவியன்
14-05-2007, 08:57 AM
தெரியவில்லை எனக்கு இந்த
உலகினில் உள்ள பாவங்கள்
செய்யவும் நினனைக்கவில்லை
அனால் நடப்பது பாவங்களின்
அனைத்து கூட்டு முயற்ச்சி

கூட்டு முயற்சியால்
உருக் கொண்டு
கொலை முயற்சிகளால்
காயமுற்று
சதி முயற்சியால்
சின்னா பின்னமானது
நம் காதல்.

மனோஜ்
14-05-2007, 09:14 AM
நம் காதல் அது நம் மனதில்
நம் மனம் அது உறவினில்
நம் உறவுகள் அது நம்பிரிவினில்
நம் பிரிவு அது உடலினில்

ஓவியன்
14-05-2007, 09:21 AM
உடலினில் பட்ட வலி
மனதையும் ஊடறுத்தது.
அடித்தவன் உன்
அண்ணனாமே - அதுவும்
நீ சொல்லி..

மனோஜ்
14-05-2007, 09:27 AM
நீ சொல்லி சென்ற வார்த்தைகள்
இன்றும் என் மனதினில் முற்களாக
முற்களிலும் ரோஜா மலறும்
என்று என்னி காத்திருக்கும காதலன்

அன்புரசிகன்
14-05-2007, 10:31 AM
காதலன் நானே
காதலி பெண்ணல்ல
ரசிக்கும் இசையே.

மனோஜ்
14-05-2007, 10:43 AM
இசையே என் மனதின் ஆறுதல்
இயேசுவின் துதியே என் மாறுதல்
இன்றும் உயிருடன் என் உடல்
இருப்பது அவரின் அன்பு

அன்புரசிகன்
14-05-2007, 10:52 AM
அன்புக்கு ஏது விலை.
கிடைக்கும் போட்டால் வலை.
இதுவே என் நிலை

மனோஜ்
14-05-2007, 10:57 AM
நிலைகள் பல கடந்தேன்
நினைத்திட்டால் அது கொடுமை
காலங்கள் பல கடந்தும் கருனையில்
அவர் இனிமை இன்றும் அது உண்மை

அன்புரசிகன்
14-05-2007, 11:07 AM
உண்மைகளுக்கு கலக்கம்
பொய்களுக்கேது விளக்கம்
சொல்பவர்களுக்கு தேவை ஞானம்

ஆதவா
14-05-2007, 11:11 AM
ஞானத்திலே கண்ட ஊனத்திலே
மானத்திலே கெட்டு போனதிலே
கானத்திலே கண்ட நூனத்திலே
வானத்திலே விட்ட நாணத்திலே
மோனம் இழந்தாளடி
ஈனள் ஆனாளடி

தாமரை
14-05-2007, 01:56 PM
ஆனாளடி
ஆனாலடி
ஆணாலடி
ஆணால் அடி

அமரன்
14-05-2007, 02:12 PM
அடிவானம் சிவக்கிறதே-அது
உதயமா அஸ்தனமா என
சந்தேகிக்க வைத்துள்ளது
உன் காதல் தந்த வலி

தாமரை
14-05-2007, 02:14 PM
வலி அடிமனதில்
எந்தத் தாய் கையேந்தினாலும்
மனைவி விரட்டிய
அம்மாவும்
இப்படித்தானோ!

sarcharan
14-05-2007, 02:17 PM
இதயமில்லா மிருகம்!!

தாய்க்காய் மனைவியை கைவிடுபனும்
மனைவிக்காய் தாயை கைவிடுபனும்

அமரன்
14-05-2007, 02:18 PM
இப்படித்தானோ நீயும் துடித்தாய்
தெரியவில்லை
நான் பெத்த மகன்
என்னையும் வீட்டைவிட்டு
துரத்தும்வரை

தாமரை
14-05-2007, 02:37 PM
துரத்தும்வரை
ஓடுவதில்லை வாழ்க்கை

திரும்பி நின்று
துரத்துபவரை நோக்கி
வள் என
சில முறையாவது
முறைக்கும் நாய்

நீ மனிதன்

அக்னி
14-05-2007, 03:19 PM
மனிதன்...
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
நடுவே..,
ஆறறிவு பெற்றுப் பிறந்ததால்,
இறக்கும்வரை..,
ஊசலாடும் ஜீவன்...

தாமரை
14-05-2007, 04:21 PM
ஜீவன் பிரிந்தது
பூதவுடல் பிணம் பாடி யென
புதுப்பெயர் சூட்டப்ப்ட்டு
உடல் அழிக்கப்பட்டது
அழுதவர்கள்
மனம்தேறி
சொத்துச் சண்டையை
ஆரம்பித்து
ஆனந்தமாய் வாழ்ந்தனர்

Manimegalai
14-05-2007, 05:55 PM
வாழ்ந்தனர்
வலியுடன்
முதியோரில்லதில்
வாழ்வாங்கு
வாழும்
வாரிசுகளின்
ஒருநாள்
வருகைக்காக

தாமரை
14-05-2007, 05:57 PM
வருகைக்காக
பிஞ்சுப் பாதங்கள்
நான்கு மணிநேரம்
கொளுத்தும் வெய்யிலில்
வந்தார்
கையசைத்துச் சென்றார்
தூவிய ரோஜா இதழ்களை
நசுக்கின
கார் சக்கரங்கள்

Manimegalai
14-05-2007, 05:59 PM
கார் சக்கரங்கள்
நசுக்கிய எழுமிச்சை
எதிர் குடிசையின்
இரவு கஞ்சிக்கு

ஆதவா
14-05-2007, 06:04 PM
கஞ்சிக்கு எரிகிறது
இவளின் கற்பு
கைம்பெண்.

தாமரை
14-05-2007, 06:12 PM
கைம்பெண் என்றால்
இளக்காரமா?
எங்களுக்கும்
ஆளத்தெரியும்
இந்தியாவை

ஆதவா
14-05-2007, 06:14 PM
இந்தியாவை சீர் தூக்கி
நிறுத்தப் போகிறார்கள்
இளைஞர்கள்
வேலையின்றி.

தாமரை
14-05-2007, 06:15 PM
வேலையின்றி
யாருமில்லை
வேலை செய்ய
மனமின்றி மட்டுமே

ஆதவா
14-05-2007, 06:25 PM
மட்டும் விதியும்
புதுக்கவிக்கல்ல
இலக்கணம்.

(மட்டு - அளவை)

தாமரை
14-05-2007, 06:31 PM
இலக்கணம்
இக்கணம்
சிலருக்கு கனம்
இலக்கை
அடைவதற்கு

ஆதவா
14-05-2007, 06:34 PM
அடைவதற்குத்
திரிகுதுகள்
அக்ஞானம் பிடித்தவர்கள்
அத்தியாவசியத்தில்
அத்தியாயம் தொலைத்து
செல்லத் துடிக்குதுகள்
வியாக்ஞானம் பிடித்தவர்கள்

ஆதவா
14-05-2007, 06:34 PM
அடைவதற்குத்
திரிகுதுகள்
அக்ஞானம் பிடித்தவர்கள்
அத்தியாவசியத்தில்
அத்தியாயம் தொலைத்து
செல்லத் துடிக்குதுகள்
வியாக்ஞானம் பிடித்தவர்கள்

தாமரை
14-05-2007, 06:36 PM
பிடித்தவர்கள்
பிடிக்காததாய்
பிடிகொடுக்காமல்
சொல்லிப்போனார்கள்
வரதட்சணை

ஆதவா
14-05-2007, 06:38 PM
பிடித்தவர்களுக்கு
எல்லாம் பிடித்தது.
பாவம் அந்த
சோசியக் காரனுக்குப்
பிடிக்காமல் போனது

ஆதவா
14-05-2007, 06:39 PM
அண்ணே! எழுத்து மாத்திப்புட்டீங்களா? இப்போ வரதட்சனையா?

தாமரை
14-05-2007, 06:40 PM
ஆமாம்

ஆதவா
14-05-2007, 06:40 PM
வரதட்சணைக் கொடுமையில்
மாமியார் ஸ்டவ் வெடித்து பலி
நடக்கலாம்
எதிர்காலத்தில் எதுவும்

தாமரை
14-05-2007, 06:43 PM
எதுவும்
உன்னெதிரே
இலட்சியமில்லையடி
இலட்சணமில்லையடி
நான் கூடத்தான்
உன் அருகில் இருந்தால்தான்
அழகு

ஆதவா
14-05-2007, 06:47 PM
அழகு தமிழின் பெருமை
பாடல் வரிகளில்
பாடியதென்னவோ டமிலில்
போக்கிரிப் படப்பாடல்

தாமரை
14-05-2007, 06:49 PM
படப்பாடல்
ஒளிபரப்பப் பட்டது
குழந்தைகள் வாயில்
அர்த்தம் தெரியாத
முணுமுணுப்பு
அம்மா முகத்தில் பெருமிதம்
அப்பாவின் கைதட்டல்
அவர்களுக்கும் தான்
அர்த்தம் புரிந்திருக்கவில்லை

ஆதவா
14-05-2007, 06:59 PM
புரிந்திருக்கவில்லை

நீ எழுதிய கவிதைத் தொகுப்பின்
கடைசி பக்கக் கையெழுத்துக்கள்

அடிவானில் சுருங்கும் சூரியனின்
அடிபட்ட துளைக்குள்
நீ அப்பும் மருந்துகள்

விண்ணிலே ஏறிச் சென்று
கலைந்துகிடக்கும்
கோலப் புள்ளிகளை
நிரல் படுத்தும் சேவைகள்

எதுவும் புரிந்திருக்கவில்லை
எல்லாம் எனக்கென்று

தாமரை
14-05-2007, 07:04 PM
எனக்கென்று
எல்லா உலகங்களும்
நீயும்
உன் காதலும்

gragavan
14-05-2007, 07:22 PM
காதலும் மோதலும்
இரட்டைப் பிள்ளைகள்
தத்துப்பிள்ளை சாதல்

தாமரை
14-05-2007, 07:24 PM
சாதல்
இல்லா சாதல்
சாதித்தவர்களுக்கு மட்டுமல்ல
சாதிக்க நினைத்தால்கூட

gragavan
14-05-2007, 07:28 PM
நினைத்தால் கூடப் போதும்
நூறாண்டு வாழ்வேன்
அதுதான் மறந்த பின்னும்
வாழவைக்கிறது

மனோஜ்
14-05-2007, 07:31 PM
வாழவைக்கிறது இன்றும்
நினைவில் நின்ற அந்த நாட்கள்
நீயும் நானும் கலந்திட்ட நாட்கள்

அல்லிராணி
14-05-2007, 07:32 PM
வாழவைக்கிறது
உன் தூரத்துப் பார்வையும்
என் கிட்டத்துப் பார்வையும்
கண்ணாடிக் கடையை

gragavan
14-05-2007, 07:35 PM
வாழவைக்கிறது
உன் தூரத்துப் பார்வையும்
என் கிட்டத்துப் பார்வையும்
கண்ணாடிக் கடையைஅருமை அருமை

மனோஜ்
14-05-2007, 07:48 PM
கடையை நோக்கி சென்றொன்
என்னவலுக்கு ஒரு பரிசு அளிக்க
எதையும் எடுக்க வில்லை
காரணம் பிடிக்க வில்லை
இதயத்திற்கு எத்த விலை கொடுப்பது

அல்லிராணி
14-05-2007, 07:49 PM
கொடுப்பது
கொள்ளுவது
முறை மாறி
கொல்லுவது மட்டுமே நிலைத்த
திருமணம்

மனோஜ்
14-05-2007, 07:59 PM
திருமணம் அதில்
ஒரு மணம்
இல்லேல் இருமனம்
கடைசில் பிரிமனம்

தாமரை
14-05-2007, 09:14 PM
பிரிமனம்
பிரிமணம் (விவாகரத்து)
பிரித்தமனம்
நரிமனம்
வக்கீல்

ஓவியா
14-05-2007, 10:11 PM
வக்கீல் வீட்டு
வாசலிலே
வாழா வெட்டிகளின்
வாழ்க்கை மடல்
வந்து வந்து போகுது

தாமரை
15-05-2007, 02:41 AM
போகுது
விக்கல்களுக்கு இடையிடையே
வானத்தை குத்திட்டு
நிலைத்த பார்வையில்
மனைவியின் அருமை உண்ர்ந்து
அவளை நோக்கி
அந்தக் கிழவனின் உயிர்