PDA

View Full Version : கவிச்சமர்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27

kampan
15-08-2007, 11:27 AM
உன் பார்வை தண்மையா தனலா?
விளங்காமல்
தவிக்கிறேன்...
விளங்க வைக்க
வருவாயோ − இல்லை
விலக்கி விட்டு போவாயோ??


போவாயோ என்று
பூ வண்டைப்பார்த்து சொல்லலாம்
வான் நிலவைப்பார்த்து சொல்லலாம்
உடல் உயிரைப்பார்த்து சொல்லலாம் ஆனால்
பூ மகளே நீ என்னைப்பார்த்துச் சொல்லலாமோ?

aren
15-08-2007, 01:08 PM
சொல்லலாமா
வேண்டாமா
என்று பல நாட்கள்
காத்திருந்தேன்
இன்று
சொன்னபிறகுதான்
தெரிந்தது
நீ என்னுடைய
இந்த வார்த்தைக்காக
தவம் கிடக்கிறாய் என்று!!!

பூமகள்
15-08-2007, 01:11 PM
சொல்லலாமோ
என*
எத்தனித்த
தருண*மெல்லாம்
வார்த்தையின்றி
கண்களால் ம*ட்டும்
க*விபாடிக்
காத்திருக்கிறேன்...!

சிவா.ஜி
15-08-2007, 01:23 PM
காத்திருக்கிறேன்
எனச் சொல்வதைவிட
பூத்திருக்கிறேன் எனச் சொல்
உன் புன்னகை பூக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் உன்னருகே வேண்டும்!

பூமகள்
15-08-2007, 03:25 PM
நான் உன்னருகே வேண்டும்
நித*ம்
உன்னோடு
ஊட*ல் செய்ய*..
ஊடலே பின்
உறைந்து,
உடைந்து,
உள்ளங்க*ளித்திட*
உன்னருகே வேண்டும்
நித*ம்....!

அமரன்
15-08-2007, 03:28 PM
நிதம்
பிறக்கும் விதிகளால்

காத்தலும் காக்கப்படுவதும்
இனிமை
என்னருகில்
நீ இருந்தால்.

அழித்தலும் அழிக்கப்படுதலும்
இனிமை
உன்னகருகில்
இன்னொருவன் இருந்தால்.

இனியவள்
15-08-2007, 05:58 PM
உன்னருகில் இன்னொருவன்
இருந்த்ததால் என்னருகில்
இன்று வெறுமை குடிகொண்டிருக்கின்றது...

அமரன்
15-08-2007, 06:00 PM
வெறுமையைக் கொண்டிருக்கும்
சேரிகளில்
கருமைகளை நிரப்புகிறன
அரசியல் காக்கைகள்.
கைவிரலில்
அடையாளமிட்டு.

இனியவள்
15-08-2007, 06:35 PM
கைவிரலில் அடையாளமிட்டு
வாக்கு செலுத்திச் சென்ற
அடையாளத்தை அழித்து
மீண்டும் குத்துகின்றாய்
பொய்வாக்கு..

ஓவியா
15-08-2007, 08:58 PM
பொய்வாக்கு..
பொசுங்கும்
பொன்னாய் போடுவேன் என்று − நீ
பொய்த்ததை பொட்டலம் கட்டி
பொசுக்கு, காதலுக்கு
பொன், பொருள் வேண்டாம்

விகடன்
16-08-2007, 03:53 AM
பொருள் வேண்டாம்
அருள் தா...
போகும்வரை உன்னோடு
நானிருப்பேன் என்று.

aren
16-08-2007, 04:26 AM
நானிருப்பேன் என்று
என்னிடம் உறுதி
கொடுத்தாய்
அதை நம்பி
வெளியே வந்தவுடன்
உன் முகத்தைக்
காணவில்லையே
உன் முகவரியையும்
காணவில்லையே!!!

பூமகள்
16-08-2007, 04:42 AM
காணவில்லையே,
உனை
கண்ட நாள் முதல்
எனை...
தேடித் தேடி பார்த்துவிட்டு
உனைத் திருடிச்சென்றேன்..
நானாய் மாற்ற...

இனியவள்
16-08-2007, 07:41 AM
மாற்ற நினைக்கின்றாய்
உன்னை நானாக
ஆணவன் வந்து
தடுக்கின்றது புயலாக*

பூமகள்
16-08-2007, 07:57 AM
புயலாக நீ
பூவை எனை
வீழ்த்த வந்தாயோ.....
வீழ்வேனென்று நினைத்தாயோ...??

சிவா.ஜி
16-08-2007, 08:02 AM
வீழ்வேனென்று நினைத்தாயோ
என்னால்
விழுந்தவர் எத்தனை...
வலையின் கிழிசல்
சொல்லும் எண்ணிக்கையை!

kampan
16-08-2007, 08:30 AM
எண்ணிக்கையை இட்டு நான் கலங்குவதில்லை
மனத்தில நம்பிக்கையுண்டு
நிச்சயம் சீக்கும் ஒரு நாள் மீன்
என் மன வலையில்

அமரன்
16-08-2007, 08:39 AM
வலைக்குத் தப்பிய -மீன்
தலை உன்வீட்டில் எப்படி...!
ஓ..
கண்வலையில் சிக்கியதால்
மனவலையில் வீழ்ந்ததுவோ...!

பூமகள்
16-08-2007, 05:30 PM
வீழ்ந்ததுவோ உன்
கூந்தல் மலர்கள்...
எனை
வீழ்த்த எண்ணி....???!!!
வீழ்ந்ததும் ஓ என*
வீரிட்டது என்னுள்
நானே
காயமின்றி
களவாடப்பட்டதால்...

அமரன்
16-08-2007, 05:35 PM
களவாடப்பட்டும்
வாட்டமில்லையே
கொடியின் முகத்தில்...!

சூடியவன் உயிரில்
கலந்தவிட்டதோ
கொடியின் உயிர்...!

பூமகள்
16-08-2007, 05:43 PM
உயிர் நீ
என்றாய்...
உருகித்தான் போனேன்...!!

பின்..
உயிரை விடு
என்றாய்...
எரிந்துதான் போனேன்...!!

அமரன்
16-08-2007, 05:50 PM
எரிந்துதான் போனேன்
எறிந்த உன் பார்வையில்
இருந்த
அக்கினி கதிர்களால்..!

அன்புக்
கதிர்களின் வீச்சில்
கதிர்விடும்
எட்டாவது அதிசயம்
எட்டா அதிசயமாகிடுமோ...!

பூமகள்
16-08-2007, 06:03 PM
1.
எட்டா அதிசயமாகிடுமோ...
எட்டாவததிசயமாகிடுமோ...
நம் காதல்.....

மற்றொன்று....

2.
எட்டா அதிசயமாகிடுமோ
என எண்ணிப்பார்த்த
வேளைகளில்
எட்டி நின்று
வேல்விழியால்
எனை
எட்டியவள் நீயடி....!

அமரன்
16-08-2007, 06:12 PM
நீயடித்த அம்புகள்
நீரைக்கிழித்தது போல்
இருதயத்தைக் கிழித்ததடி..

அந்தக் கணத்தில்.
ஒருதயம் விரும்ப
மறுதயம் வெறுக்க
தொடர்ந்து
துடிக்குது இதயம்−உன்
பெயர் முணுமுணுத்தபடி..

காயங்கள ஆறிட
சேர்வாயா
என் புயம்...!

ஓவியன்
16-08-2007, 06:22 PM
என் புயங்களின் மேலே
நம்பிக்கை வைத்து
உன்
பயங்களை எல்லாம்
உதறி விட்டு,
என்னோடு
வருவாயா அன்பே...........?

அமரன்
16-08-2007, 06:26 PM
அன்பே..
ஒளிந்தும்
ஒளிர்ந்தும் பார்க்கும்
நிலவு
ஒரு நாள் முழுதும்
உன் முகம்பார்க்காது
எப்படி இருக்கிறது..!

பூமகள்
16-08-2007, 06:26 PM
புயம் சாய்ந்து
உன் கை
ப*ற்றி
நெடுதூர*ம் வ*ந்தேன்..
விட்டுச் செல்ல*வே
இட்டு வந்தாயென*
இய*ம்பிவிட்டு
போனதென்ன*.......!!!!

ஓவியன்
16-08-2007, 06:31 PM
அன்பே..
ஒளிந்தும்
ஒளிர்ந்தும் பார்க்கும்
நிலவு
ஒரு நாள் முழுதும்
உன் முகம்பார்க்காது
எப்படி இருக்கிறது..!

இருக்கிறது
இன்னமும் உன்
நினைவுகள் என்னிடம்
பத்திரமாக.........!

இருக்கிறதா
இன்னமும் என்
கவிதைகள் உன்னிடம்
பத்திரமாக............?

இலக்கியன்
16-08-2007, 06:33 PM
போனதென்ன
மலருந்தும் மலராத
மொட்டுக்கள் சருகாகி

நறுமணம் வீசியவர்கள்
நடைப்பிணங்களாக

ஆண்டு ஓன்று
ஆனாலும் நீங்காது
உங்கள் நினைவு

பூமகள்
16-08-2007, 06:38 PM
உன்னிடம்
பத்திரமாக இருக்கிறதா...
நான்
கடைசியாய்
விட்டு வந்த
உனக்கான*
கண்ணீரும்...
உயிர் கொன்று
கொடுத்து
வ*ந்த*
ந*ம*க்கான*
காத*லும்....!

அமரன்
16-08-2007, 06:51 PM
காதலும் நமக்காக
காத்துக்கிடந்ததுவோ
கடந்து செல்கையில்
கவர்ந்து செல்கிறதே இதயங்களை...!

பூமகள்
16-08-2007, 07:08 PM
இதயங்களை இறகாக்கி
இமயம் தொட
வைத்தவனே...!
இடையொருவள்
வந்தமையால்
இவள் மற(றுத்)ந்து,
போவாயோ??
பள்ளத்தாக்கில்
நான் மட்டும்...!

பூமகள்
17-08-2007, 02:10 PM
நான் மட்டும்
நடந்து வந்தேன்..
காற்றென்னை
கை பிடித்து
வழி நடத்தியது....
காதில் மெல்ல கிசுகிசுத்தது..
தூதனுப்பியது
இயற்கை என்று....!!

aren
17-08-2007, 02:23 PM
என்று இயற்கைக்
காற்று
தூது அனுப்பும்
என்று காத்திருந்தேன்
ஒரு நான் காற்றில்
அனுப்பிய வார்த்தை
அவள் காதில் விழுந்து
புன்னகையுடன் திரும்ப
அதைக் கண்ட
என் மனம்
சிறகடித்துப் பறக்க
கால்கள் என்ன செய்வது
என்று தெரியாமல்
தத்தளிக்க
மேலும் சொல்ல
வார்த்தைகளைத்
தேடினேன்
வார்த்தைகள்
வராமல் தடுமாறினேன்
புரிந்துகொண்ட
கண்கள்
கை கொடுத்தது
கண்களாலேயே
பேசினேன்
பதில் அவள்
கண்கள்மூலம்
கிடைத்தது!!!!!

கண்கள் பேசும்
மொழியின்
பெயரென்ன?

புரியாமல் நான்
காதலைப்
புரிந்துகொண்ட
என் கண்கள்
என் காதுகள்
மூலம் வரும்
ரீங்காரத்திற்கு
ஒத்து ஊதுவதுபோல்
நடனமாடுகினறன!!!!

இதுதான் காதலா?
மறுபடியும்
புரியாமல் நான்!!!!

பூமகள்
17-08-2007, 02:36 PM
நான் புரியாமல்
மறுபடியும் பார்த்து
வைத்தேன்...
உற்று உற்று
குறும்பாய்ச்
சிட்சை த*ரும்
சிஞ்சினியொத்த*
உன் விழி சொல்லும்
கதையறியாமல்..
சிதடானேன்...!!
குறிப்பு:
அர்த்த*ங்க*ள்..

சிட்சை − பயிற்சி, தண்டனை
சிஞ்சினி −வில்லினுடைய* நாண்
சித*டு − பேதைமை

aren
17-08-2007, 02:40 PM
சிதடாக நின்றேன்
ஒன்றும் புரியாமல்
அவன் என்னைக்
காதலிப்பதாக
சொன்னபொழுது!!!

நானும் உன்னைக்
காதலிக்கிறேன்
என்று சொல்ல
மனது துடிக்கிறது
வார்த்தை வர
மறுக்கிறது!!!

ஏன் இந்த ஓரவஞ்சனை
வஞ்சனையில்லாமல்
பேசும் என் வாய்
சரியான சமயத்தில்
இப்படி
சண்டி செய்கிறது!!!

புரியாமல் நான்
மறுபடியும்!!!

தீபா
17-08-2007, 05:23 PM
மறுபடியும் நுழைந்துவிட்டேன்
கவிச்சமருக்குள்
கருவை நொறுக்கி
உயிருள் திணித்து
குறுகத் தரித்து
நெடுக விழிக்க வைக்கும்
வரிகளோடு.

aren
17-08-2007, 05:25 PM
வரிகள்
நீ எனக்கு எழுதிய
வரிகள்
இன்னும் என் நெஞ்சில்
நீங்காது இருக்கின்றன.

நான் எழுதிய
காதல் கடிதத்திற்கு
என்னை பிடிக்கவில்லை
என்று நீ எழுதிய
வரிகள்
இன்றும் என் மனதில்!!!!

பூமகள்
17-08-2007, 05:26 PM
புரியாமல் நான்
மறுபடியும்
உன் முகம் பார்த்தேன்..
நீயோ வானம்
பார்த்தாய்...
எல்லாம் புரிந்தது
பின்பு தான்
நீ தனியே
எனை
போகச்சொன்ன போது...

aren
17-08-2007, 05:28 PM
போகச்சொன்ன போது
நீ போகவில்லை
வரச்சொன்னப் போது
நீ வரவில்லை
உன் மனதில் என்ன
நினைத்துக்கொண்டிருக்கிறாய்

நான் இருந்தால்
வந்துவிடு
உன்னை வாழவைக்கிறேன்
நானும்
வாழ்ந்து கொள்கிறேன்
இப்படி
உயிரோடு என்னை கொல்லாதே!!!

தீபா
17-08-2007, 05:33 PM
அழித்துவிடுங்கள்.

தீபா
17-08-2007, 05:34 PM
போகச்சொன்ன போது
நீ போகவில்லை
வரச்சொன்னப் போது
நீ வரவில்லை
உன் மனதில் என்ன
நினைத்துக்கொண்டிருக்கிறாய்

நான் இருந்தால்
வந்துவிடு
உன்னை வாழவைக்கிறேன்
நானும்
வாழ்ந்து கொள்கிறேன்
இப்படி
உயிரோடு என்னை கொல்லாதே!!!

கொல்லாதே நிமிடங்களை
கரைந்தொழுகும் காரணிகளை
கொன்று வீசிய பின்னர்
தேடுவாய்
அன்று கொன்ற காலத்தையும்
ஒழுகிக் கொண்டிருந்த காரணியையும்..

பூமகள்
17-08-2007, 05:41 PM
காரணிகளைத் தேடித்தேடி
காயமாக்கியது போதும்..
காரணிகன் யாருமில்லை..
காதலோடே வருவாயோ???


காரணிகன் = மத்தியஸ்தம் செய்பவர்.

aren
17-08-2007, 05:45 PM
வருவாயோ
என்னுடன்
வருவாயோ
நான் உன்னை
உயிருக்குயிராக
நேசிக்கிறேன்
என்னுடன்
வந்துவிடு
உன்னை கண்போல
காப்பாத்துகிறேன்
வருவாயா
என்னுடன்
வருவாயா!!!!

தீபா
17-08-2007, 05:49 PM
வருவாயா என்
உயிரைக் குடிப்பவனே!
மணம் உண்டு
மகிழ்வுண்டு வாழும் சிலராலே
மனமின்றி
மகிழ்வின்றி தவிக்கும்
என்னைப் போலுள்ளவர்களை
எரிக்கத்தான் வருவாயா

பூமகள்
17-08-2007, 05:50 PM
என்னுடன் வருவாயென*
வந்தேன் க*ன*வுக*ளோடு...
வ*ந்த*தும் சென்றாய்
விட்டுவிட்டு என்னை...!!
சமுதாடு பாய்ச்சியே...!

aren
17-08-2007, 05:53 PM
பாய்ச்சியவளே
என் மனதில்
அம்பைப்
பாய்ச்சியவளே!!

இன்று
உன்னை எதிர்பார்த்து
காத்திருக்கும் வேலையில்


என்னைப் பார்க்க
வந்தாய்
கையில் உன்
திருமண அழைப்பிதழுடன்
என்னை அழைக்க!!!

பூமகள்
17-08-2007, 05:56 PM
என்னை அழைக்க*
வந்தாய்...
மகிழ்ந்தேன்....

விடை கொடுக்க*வா
அழைக்க* வ*ந்தாய்...
அதிர்ந்தேன்..!

aren
17-08-2007, 06:00 PM
அதிர்ந்தேன்
திருமண அழைப்பிதழைப்
பார்த்தவுடன்

என் கையில் கொடுத்தள்
என்னுடைய திருமணம்
அழைப்பிதழ் இதோ
உங்களுக்கு என்றாள்

கையில் வாங்கி
பிரித்தேன்
மணமகள்: மேகலை
மணமகன்: மோகன் (என் பெயர்)

ஆச்சர்யம் எனக்கு

எனனவள் சிரித்துக்கொண்டே
இந்த சாம்பிள் அழைப்பிதழ்
ஓகேயா என்றாள்

கட்டித்தழுவினேன்
தெருவென்றும் பாராமல்
கண்களில்
ஆணந்தக்கண்ணீர்!!!!

பூமகள்
18-08-2007, 05:55 AM
ஆனந்தக்கண்ணீர்
அரும்பியது கோடி...
உணவு கொடுக்கையில்
முதன் முதலாய்
ஆர்வத்தோடு
கை கொடுத்து
நன்றி சொன்ன
ஊனமுற்ற குழந்தையின்
உள்மனம் காணுகையில்....!

aren
18-08-2007, 11:11 AM
உள்மனம் காணுகையில்
உன்மனம் தெரிகிறது

என்னை உதட்டளவில்
வெறுக்கும் நீ
மனதினில் என்னை
குடிவைத்திருக்கிறாய்
யாருக்கும்
தெரியாமல்!!!!

பூமகள்
18-08-2007, 01:27 PM
தெரியாமல்
தெரிவிக்கும் உன்
தேன்விழிகளுக்குச்
சொல்லி வை...
கண்ணின் மணியே
நாந்தான் என்று...!

aren
19-08-2007, 12:53 PM
நாந்தான் என்று
உன் மனதில்
இருப்பவன்
நாந்தான் என்று
நினைத்திருந்தேன்
பக்கத்துவீட்டில்
ஒரு புது இளைஞன்
குடிவரும்வரை!!!

kampan
19-08-2007, 12:57 PM
தெரியாமல்
தெரிவிக்கும் உன்
தேன்விழிகளுக்குச்
சொல்லி வை...
கண்ணின் மணியே
நாந்தான் என்று...!


என்று உன் விழிகள்
இமைக்கத்தொடங்கியதோ?
அன்று என் மொழிகள் − உனை
உரைக்கத்தொடங்கியது

ஓவியன்
19-08-2007, 02:38 PM
தொடங்கியது
நாம் என்பதால்
முடித்து வைப்பதும்
நாமாகவே இருப்போம்.
எம் சந்ததியாவது
நிம்மதியாக வாழட்டும்....

இனியவள்
19-08-2007, 05:52 PM
வாழட்டும் எம் மக்கள்
விதையாய் போன எம்
உயிர்களின் மூலம் உருப்பெறும்
மரங்களின் நிழலில் விடட்டும்
நிம்மதி மூச்சுக்காற்று
கொட்டட்டும் சமாதான முரசு

ஓவியன்
19-08-2007, 06:03 PM
சமாதான முரசாக
சாயம் பூசி,
தாளம் போட்டு
மாக்கள் ஆக்க
மக்களிடம் வருகிறது
போர் முரசு.............

இனியவள்
19-08-2007, 06:06 PM
முரசு கொட்டி
அச்சு அடித்து
கையொப்பம் இட்ட
சமாதானம் இன்று
முடங்கிக் கிடக்கின்றது
அரசியல் கட்சிகளின்
கைகளுக்குள்

ஓவியன்
19-08-2007, 06:11 PM
கைகளுக்குள்
சிறையாகவே
ஓடி வந்தேன்,
நீ இப்படி
கைவிரிப்பாய்
என்று தெரியாமலேயே........

இனியவள்
19-08-2007, 06:13 PM
தெரியாமலேயே செய்துவிட்டேன்
உன்னை திருமணம்
தெரிந்தே போட்டுவிட்டேன்
கையெழுத்தை விவாகரத்துப்
பத்திரத்தில்

ஓவியன்
19-08-2007, 06:16 PM
பத்திரத்தில்
கையெழுத்திட்டு கடன்
வாங்குகையில்
தெரியவில்லை.
நான்
கையெழுத்திட்டது
அடிமை சாசனமென்று......

இனியவள்
19-08-2007, 06:18 PM
சாசனமென்று நினைத்து
சாக்கடையில் விழுந்து
எழுந்து நிற்கின்றேன்
என்னையே தொலைத்து

ஓவியன்
19-08-2007, 06:21 PM
தொலைத்து நின்ற
வாழ்க்கைக்குள்
வசந்தத்தைத் தேடும்
வானம்பாடிகள் நாம்........

இனியவள்
19-08-2007, 06:32 PM
நாம் தொலைத்த
சுகந்தத்தை எம்
வருங்கால சந்ததியினர்
பெறுவார்கள் என்ற
நிம்மதியோடு முடித்துக்
கொள்கின்றோம் எம் மூச்சுக்காற்றை
போர்க்களத்தில்

ஓவியன்
19-08-2007, 06:39 PM
போர்க்களத்தில்
நாம் தொலைத்த
உறவுகள் எல்லாம்
எம் சந்ததியின்
பூபாளத்திற்கே.......

இனியவள்
19-08-2007, 06:45 PM
எம் சந்ததியிம்
பூபாளத்திற்காய் காற்றோடு
கலந்து விட்ட உயிர்கள்
துடிக்கின்றன சூறாவளியாய்
சந்ததிகளும் அழிந்து கொண்டிருக்கும்
கோலம் கண்டு

ஓவியன்
19-08-2007, 06:51 PM
கண்டு
கேட்டு
பழகிப்
பார்த்து
பின் விட்டுப்
போனது
என் காதல்,
என்னிதயத்தை.........

இனியவள்
19-08-2007, 06:53 PM
இதயத்தை கொடுத்து
இன்பத்தைக் கொடுத்து
வாழ்வை பறித்துச்
செல்கின்றது காதல்
பிரிவென்னும் கல்லை வீசி

ஓவியன்
19-08-2007, 07:03 PM
கல்லை
வீசிப் போனாலும்
பரவாயில்லை,
இப்படி
சொல்லை
வீசிப் போகாமல்....

இனியவள்
19-08-2007, 07:15 PM
போகாமல் போகின்றாய்
சொல்லாமல் சொல்கின்றாய்
கொல்லாமல் கொல்கின்றாய்
பிரிவென்னும் பூட்டைப் போட்டு
வாழ்வை சிறைக்கூடமாக்கி
செல்கின்றாய்

aren
19-08-2007, 11:44 PM
செல்கின்றாய்
என் மனதை
சிறகொடிந்த
பறவையாய்
ஆக்கிவிட்டு

காதலிக்கும் பொழுது
பெற்றோர் நினைவு
வரவில்லை
பெற்றோர்
ஒரு அழகான இளைஞனைக்
காட்டும்பொழுது
காதலன் நினைவு
உனக்கு வரவில்லை!!!

ஓவியன்
20-08-2007, 01:53 AM
வரவில்லை இன்னமும் எம்
கேள்விகளுக்குப் பதில்கள்!.
வரவில்லை இன்னமும் எம்
வேள்விக்கு விடைகள்!.

ஆனாலு தளரவில்லை
ஓயாமல் வேள்வி செய்யுது
எப்படியாவது பெற்று விடுவோம்
எம்
கேள்விகளுக்குப் பதில்கள்!.

பூமகள்
20-08-2007, 04:45 AM
பதில்கள் தேடியே
பாதி உயிர்
போன*தென்ன...???

பாதி உயிர்
போன* பின்னும்
நீ
மீதி உயிர்
ப*றித்த*தென்ன...???!!

சிவா.ஜி
20-08-2007, 04:49 AM
பறித்ததென்ன
பஞ்சைகளின்
மிச்சமுள்ள
கந்தைகளையும்....
சோற்றுப்பானையில்
ஒட்டியுள்ள
எச்சில் பருக்கைகளையும்...
தங்கள் சுயநல
சுரொட்டியை
துடைத்து ஒட்ட...!

பூமகள்
20-08-2007, 05:34 AM
ஒட்டிய வயிறாயினும்
ஒட்டவில்லை
ஒட்ட எத்தனித்தும்
ஓட்டமெடுத்தது என் மனம்...!
ஓட்டுச் சந்தையில்,
பிரியாணிக்காய்
விற்றுப் போன
ஏழையின்
ஓட்டு கண்டு...!

ஓவியன்
20-08-2007, 06:35 AM
கண்டு கொண்ட
காகிதங்களில்
கண்ணீராலே
காவியம் எழுதிவிட்டுக்
காத்திருக்கின்றனர் நம்
மக்கள் ஒரு
விடியலுக்காக...........!

பூமகள்
20-08-2007, 06:47 AM
விடியலுக்காக பார்த்திருக்கும்
மக்களின்
விம்மல் ஒலி
அடங்கவில்லை..
விடிய வைக்க
விரைந்து வாரும்
வீரர்களே...!

kampan
20-08-2007, 06:52 AM
வீரர்களே நீங்கள்
வீரத்தின்
விழைநிலங்கள்
கைகால் தொடங்கி
கப்பல் பீரங்கி வரைக்கும்
செப்பும் உங்கள் வீரத்தை

ஓவியன்
20-08-2007, 06:56 AM
வீரத்தை விதைத்தோம்.
வீரமாகவே விளைகிறது
நம் தேசத்தின்
மூலை முடுக்குகளிலெல்லாம்....

சிவா.ஜி
20-08-2007, 06:57 AM
வீரத்தைக்காட்டும்
நேரமென்று எதுவுமில்லை,
உடன்பிறப்பாய்
உன்னுடன் வைத்திரு
வீரத்தை....அது
தானே தீர்மானிக்கும்
வெளிவரும் நேரத்தை!

பூமகள்
20-08-2007, 07:02 AM
நேரத்தைக் காட்டும்
கடிகாரம் சொல்லும்
கணப்பொழுதின்
மகத்துவத்தை....!
வீரத்தோடே
விரைந்து வா
வெற்றி கொள்ளும்
தத்துவத்தோடே..!

kampan
20-08-2007, 07:06 AM
வீரத்தைக்காட்டும்
நேரமென்று எதுவுமில்லை,
உடன்பிறப்பாய்
உன்னுடன் வைத்திரு
வீரத்தை....அது
தானே தீர்மானிக்கும்
வெளிவரும் நேரத்தை!

நேரத்தை கணித்தறிந்து
கண நேரத்தில் களமிறங்கி
பகைவன் நேரத்தை முடிப்பவரே
ஒப்பிலா தியாகத்தின் சிற்பங்கள்

பூமகள்
20-08-2007, 07:09 AM
சிற்பங்கள்
சிதைக்கப் பட்டாலும்
நம் முன்னோரின்
சிதை சொல்லும்
வீரத்தின்
வெற்றிகளை...!

ஓவியன்
20-08-2007, 07:16 AM
வெற்றிகளை
தேடியவனிடம்
வெற்றிக் களை,
தேடாதவனிடம்
வெற்றுக் களை!

kampan
20-08-2007, 07:21 AM
வெற்றிகளை
தேடியவனிடம்
வெற்றிக் களை,
தேடாதவனிடம்
வெற்றுக் களை!

களை என்பது
காளைக்கு இல்லை
இலட்சியம் என்பதே அவன்
காணுகின்ற எல்லை.

ஓவியன்
20-08-2007, 07:27 AM
எல்லைகளைத்
தொடத் துணிந்தாலே
எல்லைகளுக்கு
ஏது
எல்லை?

சிவா.ஜி
20-08-2007, 07:32 AM
எல்லைகளைத்
தொடத் துணிந்தாலே
எல்லைகளுக்கு
ஏது
எல்லை?

எல்லை
எல்லாவற்றுக்கும் இல்லை..
இட்ட எல்லைகள்
இருக்கட்டும் ஒருபக்கம்
இட்டுக்கொள்ள வேண்டிய
எல்லைகள்
இனி உன்பக்கம்..!

பூமகள்
20-08-2007, 07:32 AM
எல்லை கோடால்
இரண்டானதோ மனம்..
இல்லை கோடெங்கள்
இதயங்களோடே..!

kampan
20-08-2007, 07:42 AM
எல்லைகளைத்
தொடத் துணிந்தாலே
எல்லைகளுக்கு
ஏது
எல்லை?

எல்லை இல்லையென கடல் கடந்த
தொல்லை தேடுவதோ!
கண்ணை பறிகொடுத்து
காரிகையின் காட்சி தேடுவதோ?

சிவா.ஜி
20-08-2007, 07:54 AM
எல்லை இல்லையென கடல் கடந்த
தொல்லை தேடுவதோ!
கண்ணை பறிகொடுத்து
காரிகையின் காட்சி தேடுவதோ?

தேடுவதோ எந்நாளும்
தொலந்துபோன தன் வாழ்வை...
தொலைந்ததா..தொலைத்ததா
எனத்தெரியாமலேயே.....!

ஓவியன்
20-08-2007, 08:05 AM
தெரியாமலே
செய்த தவறுக்காக
உயிரையே கொடுத்தது
வலையில் மாட்டிய மீன்!

kampan
20-08-2007, 08:07 AM
தெரியாமலேயே வடிக்க மறந்த கவிதைகள் எத்தனை
வடித்தவைகளில் அவளிடம் கொடுக்க மறந்தவை எத்தனை
கொடுத்தவைகளில் அவள் படிக்க மறந்தவை எத்தனை
படித்தவைகளில் அவள் ரசிக்க மறந்தவை எத்தனை
ரசித்தவைகளில் என் பெயர் பதிக்க மறந்தேனே.

பூமகள்
20-08-2007, 08:22 AM
மறந்தேனே பதில்களை
உன் வினாக்களுக்காக..
வினாவே பதில் ஆனதெப்படி..!!!
விடை சொல்லும்
வில்லான உன் புருவமே..!

இனியவள்
20-08-2007, 09:20 AM
உன் புருவமே
வில்லாய் மாறி
உன் பார்வை வீச்சு
அம்பாய் மாறி
கொய்து சென்று விட்டது
என் இதயத்தை

சிவா.ஜி
20-08-2007, 09:23 AM
இதயத்தை
குப்பைகளின்
கூடையாய் ஆக்காமல்
மலர்களின்
மேடையாய் ஆக்கினால்
நினைவுகளிலும்
செயல்களிலும்
நறுமணம் கமழும்!

தீபா
20-08-2007, 09:37 AM
இதயத்தை
குப்பைகளின்
கூடையாய் ஆக்காமல்
மலர்களின்
மேடையாய் ஆக்கினால்
நினைவுகளிலும்
செயல்களிலும்
நறுமணம் கமழும்!

நறுமணம் கமழும்
வசீகரம் மிகும்
வார்த்தைகள் ஒடியும்
கவிதைகள் பிறக்கும்
கருவிழியின் ஓரம்
மழைத் துளி காத்திருக்கும்
காதல் சாரலில்
தலைமுடி நர்த்தனமிடும்

அங்கொருத்தி பசியோடு
சோறிட, கூப்பிடுவாள்.
ஒழுகும் வாய்த்திரவத்தில்
ஒட்டாது போகும்
ஒருவன் மனம்.

kampan
20-08-2007, 09:52 AM
நறுமணம் கமழும்
வசீகரம் மிகும்
வார்த்தைகள் ஒடியும்
கவிதைகள் பிறக்கும்
கருவிழியின் ஓரம்
மழைத் துளி காத்திருக்கும்
காதல் சாரலில்
தலைமுடி நர்த்தனமிடும்

அங்கொருத்தி பசியோடு
சோறிட, கூப்பிடுவாள்.
ஒழுகும் வாய்த்திரவத்தில்
ஒட்டாது போகும்
ஒருவன் மனம்.

மனம் போடும் கணக்கெலாம்
தினம் விலைபோகும் கணங்களே
வலி தேடும் கவிகளெலெல்லாம்
காதலில் பறிபோன மனங்களே

மனோஜ்
20-08-2007, 10:03 AM
மனங்களே இனைந்துவிட்டால்
மனிதர்கள் என்ன செய்ய
மனிதர்கள் நினைத்துவிட்டால்
காதலர்களை பிரிக்கலாம்
காதலை பிரிக்க முடியுமா

பூமகள்
20-08-2007, 11:06 AM
பிரிக்க முடியுமா உன்னால்...???!!!!
என்னுள் உயிராகி,
உணர்வாகி,
வினாடிப்பொழுதில்
பல்லாயிரம்முறை நினைக்க*
வைக்கும் உன் நினைவை....!

kampan
20-08-2007, 11:31 AM
பிரிக்க முடியுமா உன்னால்...???!!!!
என்னுள் உயிராகி,
உணர்வாகி,
வினாடிப்பொழுதில்
பல்லாயிரம்முறை நினைக்க*
வைக்கும் உன் நினைவை....!

உன் நினைவை
மறப்பதென்றால்
கடல் அலை உறவை
மறப்பதன்றோ!

பூமகள்
20-08-2007, 11:51 AM
உன் நினைவை
மறப்பதென்றால்
கடல் அலை உறவை
மறப்பதன்றோ!

கடல் அலை உறவை
மறப்பதன்றோ...
நீ என் உறவை
மறப்பது...???!!! :icon_shok:

என்ன சொல்லி
தேற்றுவேன்
நிதம் உயிர்
தேடும் உன்
வாச*த்தை.....???!! :confused:

kampan
20-08-2007, 11:58 AM
கடல் அலை உறவை
மறப்பதன்றோ...
நீ என் உறவை
மறப்பது...???!!! :icon_shok:

என்ன சொல்லி
தேற்றுவேன்
நிதம் உயிர்
தேடும் உன்
வாச*த்தை.....???!! :confused:[/COLOR][/B]

வாசத்தை தேடி
சுவாசத்தை இழக்கும்
வண்டுகளலல்ல நாம்

தேசத்தின் விடுதலைக்காய்
தேகத்தையே கருக்கும்
தியாகிகள் நாம்

பூமகள்
20-08-2007, 12:39 PM
நாம் தேடிய கல்லறை
சொல்லும்
தீரத்தின் திணவுகளை...
தேடும் எதிரியின் படையை
திணிகம் கொண்டு
வீழுத்துவோம் தலைகளை...!!


அர்த்தம்:

திணிகம் − போர்

kampan
20-08-2007, 12:49 PM
தலைகளை நிமிர்த்தி
தமிழினை உரைத்து
சாவிலும் வாழ்வோமென
காவியம் படைக்கும் நம்
வீர நாயகர்கள்

பூமகள்
20-08-2007, 12:58 PM
வீர நாயகர்கள்
விளைவித்த இன்னிலம்....
விளையுமோ இன்னலும்
இனி எம்மண்ணிலும்????

அமரன்
20-08-2007, 01:11 PM
மண்ணிலும் விண்ணிலும்
பிரித்து வைத்த கவிதை
உன்கண்களில் கண்டேன்
உவர்ப்புடன்...

kampan
20-08-2007, 01:12 PM
எம் மண்ணிலும் விடியும்
எம் மைந்தர்கள் மடியில்
வெற்றிகள் குவியும்
பூட்டிய குகைக்குள்
நீட்டிய வேல்கள்
பகை மூட்டியே தீரும்

அமரன்
20-08-2007, 01:16 PM
பகை மூட்டியே தீரும்
புகைப்பிடிக்கும் உன்பழக்கம்
புழங்கிக்கொண்டிருக்கும் நுரையீரலுக்கும்
உனக்குமிடையே..

பூமகள்
20-08-2007, 01:21 PM
உனக்குமிடையே ஒளிந்து
கொள்ள எத்தனித்து
உனக்கு இடையே
ரகசியமாய்
நிரம்பிக்
கொண்டது காற்று...!!

சிவா.ஜி
20-08-2007, 01:27 PM
நிரப்பிக்கொண்டது காற்று
உன் சுவாசத்தை...
உலகம் மலர் வாசனையின்றித்
தவிக்கிறதாம்!

பூமகள்
20-08-2007, 01:32 PM
தீரும் நிமிடங்களோடு
தீரா உன் நினைவு
தீர்ந்தும் தீரா எனக்கான பயணம்
தீரும் நிலை நோக்கி..

இனியவள்
20-08-2007, 03:16 PM
தோக்கி இருக்கும்
சாக்கடை போல்
தேங்கி இருக்கிறது
சாமாதன ஒப்பந்தமும்

kampan
21-08-2007, 08:58 AM
தோக்கி இருக்கும்
சாக்கடை போல்
தேங்கி இருக்கிறது
சாமாதன ஒப்பந்தமும்

ஒப்பந்தமும் ஓருங்கிணைப்புமென
என் அப்பத்தா காலம் முதல்
காட்டுகின்ற பந்தா இது

பூமகள்
21-08-2007, 09:14 AM
இது நம் நாடென்ற
நிலை மறந்தா போச்சு....??
எது உம் நாடியின்
சத்தம் மாற்றிற்று??
தேசமிங்கே இல்லையெனில்
நீ இங்கே ஏது....??
இதை உணராது நீ
இருந்தால்
விடிய*ல் இங்கே ஏது.....???

சிவா.ஜி
21-08-2007, 09:37 AM
இங்கே ஏது சுதந்திரமென
கேட்போரே....
இப்படிக் கேட்பதே
சுதந்திரமென
அறியமாட்டீரோ....?

kampan
21-08-2007, 09:41 AM
ஏது இல்லை
நம் நாட்டில்
வீதி தோரும்
சாவின் ஓரம்
திண்ணையில் இருந்தவனும்
சீற்றூர்தியில் சென்றவனும்
கல்லூரியில் கற்றவனும்
கண்மூடி உறங்கியவனும்
காணமல் போவதும்
கரையினில் தானாக ஒதுங்குவதும்
நாள்தோறும் நாம் காணும் நிகழ்ச்சிகளே.

பூமகள்
21-08-2007, 12:14 PM
காணும் நிகழ்ச்சிகளே..
கனவாகிப் போனதென்ன...??
நிஜமே நிஜமாய்
நினைவாகிப் போனதென்ன...??
நீயின்றி நித்த*ம்
நிக*ழ்வின்றிப் போவ*தென்ன...??
நிஜ*மில்லை ஆனாலும்
நீ அணுவும்
நிழ*லாகிப் போன*தென்ன*....???

kampan
21-08-2007, 01:01 PM
நிழலாகிப் போனதென்ன என் நிஜ வாழ்க்கை
விழலுக்கு இறைத்த நீர் போல் என் வாழ்க்கை
உன் வரவுக்காய் காத்து விறைத்துப் போனது

பூமகள்
21-08-2007, 01:19 PM
போனது இருண்டகாலம்
வந்தது வசந்தகாலம்
வாழ்க்கையே போர்க்காலம்
அமைதியே பொற்காலம்
புரிந்தால் பூக்கோலம்
இல்லையேல் நீர்க்கோலம்..!!

அரசன்
21-08-2007, 02:39 PM
உன் பார்வை தண்மையா தனலா?
விளங்காமல்
தவிக்கிறேன்...
விளங்க வைக்க
வருவாயோ − இல்லை
விலக்கி விட்டு போவாயோ??

போவாயோ பூமகளே!
பூத்திருக்கும் இந்த*
மலர்களை விட்டு!

aren
21-08-2007, 03:40 PM
மலர்களை விட்டு
மலர்கள் தாவும்
வண்டுகள் போல
என் மனம்
ஒவ்வொரு
பெண்ணைப்
பார்க்கும்போதும்

உன்னைப் பார்த்ததுமுதல்
என் மனம்
உன்னைச் சுற்றியே
வருகிறது

இதுதான் காதலா!!!!!

jpl
21-08-2007, 04:03 PM
காதலின் உத்வேகம் மனதில் குதியாலாட,
காத்திருந்த கண்களோ எங்கும் அலைபாய,
காணாமல் கண்டுவிட,செவியும் நாசியும்,
காற்றில் கண்டுணர,தென்றலாய் வந்தாள்
காலமகள் கோலம் எழுதிய பூமகள்.

paarthiban
21-08-2007, 04:14 PM
கண்களுக்கும் செவிக்கும் நாசிக்கும்
தென்றலாய் வந்தவள்
மெய்க்கும் நாவுக்கும்
விருந்தாவது எப்பொழுதாம்?


ஐம்புலனுக்கும் என அய்யன் வள்ளுவன் சொல்லியிருக்காரே!

அமரன்
21-08-2007, 04:22 PM
எப்பொழுதாம்
பொழுதெல்லாம் விடிகின்றது
கேட்கிறாள் என்மகள்.

பகலவன் வருகையிலா
பகலது வருகையிலா
விடியல் பிறக்கிறதென
நீ கேட்பது போல்...?

நூலைபோல சேலையா
எண்ணம்போல வண்ணமா
புரியாத புதிருடன் நான்
வாழ்க்கைப் பாதையில்...!

சுகந்தப்ரீதன்
22-08-2007, 04:25 AM
நூலைபோல சேலையா
எண்ணம்போல வண்ணமா
புரியாத புதிருடன் நான்
வாழ்க்கைப் பாதையில்...!

பாதையில் செல்லும்போது
பாதமோ பாதையின் மேல்
பார்வையோ பாவையின் மேல்
எதிரே வந்தவனுக்கு என்ன கோபமோ?
இடித்துவிட்டு சொன்னான்
பாத்துபோட பரதேசின்னு?!

பூமகள்
22-08-2007, 12:52 PM
பரதேசின்னு பட்டம் கட்டி
விஞ்ஞானி
ஐன்சிடீனையே பழித்துரைத்தது
இவ்வுலகம்..
பின் மெய்யறிந்து
போற்றுகிறது
அவர் போன பின்பு...!!

kampan
22-08-2007, 01:21 PM
அவர் போன பின்பு அவள் கதை
சுவர் போன பின் சித்திரமானது
தினம் அவர் நினைவிலிலே அவள்
மனம் பவர் போன பட்டாம்பூச்சியானது

அமரன்
22-08-2007, 01:29 PM
பட்டாம்பூசியானது- சில
மக்கள் மனங்கள்
புதிய தலைநகரம்
அறிவிப்பைக் கேட்டதும்
அஸ்திவாரம்
ஆடப்போவது புரியாமல்

பூமகள்
22-08-2007, 02:15 PM
ஆடப்போவது புரியாமல்
ஆட்டம் போடும் மனித இனம்
ஆட்டம் கண்ட* மறுகணமே..
ஆட்டம் நின்று போனதென்ன?

kampan
23-08-2007, 09:37 AM
போனதென்ன பூமகளே
பொங்கி வரும் உன் புலமையில்
தேங்கி விழும் அருவிகளாய்
ஓங்கி ஒலிக்கும் உன் வரிகள்

சிவா.ஜி
23-08-2007, 09:49 AM
உன் வரிகள் வாழவைக்கும்
சில வாழ்விழந்தோரையென்றால்,
வரட்டும் அந்த
வரலாற்று வரிகள்
வற்றாத நதியாக!

kampan
23-08-2007, 09:56 AM
நதியான உன் இடையில் சுற்றும்
கொடியாக நான் வேண்டும்
விடைதேடி அலைகின்றேன்
எங்கே என் உயிர் நாடி

பூமகள்
23-08-2007, 10:29 AM
உயிர் நாடி
உரைத்த முழக்கம்
உப்புக்காற்றில்
உறைந்து போகுமோ?
எதிரி தம்மை
எதிரித்தக் கலகம்
மறைத்து விடுபோ
உணர்ச்சிப் பிழம்பை??

அமரன்
23-08-2007, 10:35 AM
தீ பிழம்பை உமிழ்ந்தமலை
பனி மலையானது
பஞ்சு மெத்தையில் உன்
பிஞ்சுப்பாதங்களின் தொடுகையில்.

எங்கே கத்துக்கொண்டாய்
இந்த வித்தையை
சொல்ல்வி விடு தத்தையே...!

பூமகள்
23-08-2007, 10:43 AM
சொல்லி விடு தத்தையே..
பிஞ்சு மொழியில்
வையம் வியக்கும்
பிரமாண்ட வித்தையை
எங்கு கற்றாய்??

அமரன்
23-08-2007, 10:50 AM
எங்கு கற்றாய் நீ
மூன்றெழுத்தில் எனைத்திருட.
சொன்ன கணத்திலிருந்து
தமிழை மறந்தேன்
ஆனாலும் ஒரு சொல்
கடலைலைபோல என்னுதட்டில்.

உலகை மறந்தேன்
அப்படியும் உன்னுருவம்
பிளாஸ்டிக்போல
உருக்குலைந்து போகாமல்...

அம்மாவுக்கு அத்தனை வலுவா?

kampan
23-08-2007, 10:56 AM
வலுவாக வளைத்துப் போட்டு
அலுவா கொடுக்கும் நங்கையர் மத்தியில்
சிலுவாயாய் சிக்கித் தவிக்கும்
சில் வண்டுகளா நாம்?

பூமகள்
23-08-2007, 11:18 AM
சில் வண்டுகளா நாம்..??
விண்ணை முட்டும்
வீரம் மிக்க*
சீற்றமிகு
சிறுத்தையன்றோ..??
வெற்றி காண*
விரைந்து வா
வேல் கொண்டே
வீழ்த்தவே...!

இனியவள்
23-08-2007, 06:18 PM
வீழ்த்தவே செய்து
கொண்டாய் யுத்தப்
பிரக்டனம் வீழ்ந்து
போய் கிடக்கின்றாய்
நீ விரித்த வலையிலே
இன்று

அமரன்
23-08-2007, 06:33 PM
இன்று
சொட்டும் காலத் துளிகளை
சேர்த்து வைத்துவிடு.
தவறின் தவறும்
நாளைய வசந்தம்...!

இனியவள்
23-08-2007, 06:40 PM
வாசந்தம் வீசும்
நாளையென எண்ணி
இன்றைய சோகத்தைக்
கண்ணீரில் புதைக்கின்றாய்
நாளைய விடியலும்
கண்ணீரைப் பரிசளித்துச்
செல்லும் என்பதனை அறியாமல்

அமரன்
23-08-2007, 06:49 PM
அறியாமல் வைகிறாய்
அன்பின் ஆழம்.

வற்றிய ஆற்றின்
மணற்படுக்கையிலும்
ஈரமுண்டு...!

இனியவள்
23-08-2007, 06:59 PM
ஈரமுண்டு கல்லாய்போன
என் மனதினிலும்
மருந்தாகும் விஷம் போல்

aren
23-08-2007, 11:49 PM
விஷம் போல்
என் மனதில்
வேகமாக ஏறியது
உன்னிடம் இருக்கும்
என் காதல்!!!

நீ சரியென்று
சொல்லி
எனக்கு மருந்தாகி
என்னை
குணப்படுத்திவிடு
விரைவில்!!!

பூமகள்
24-08-2007, 02:39 PM
விஷம் போல்
என் மனதில்
வேகமாக ஏறியது
உன்னிடம் இருக்கும்
என் காதல்!!!

நீ சரியென்று
சொல்லி
எனக்கு மருந்தாகி
என்னை
குணப்படுத்திவிடு
விரைவில்!!!

விரைவில் வளரும்
வினாடித்துளிகளாய்
வியர்வை வளரும்
மானிட உழைப்பால்..
வையகம் வளரும்
சூத்திரம் பாரீர்..!

ஓவியா
24-08-2007, 03:17 PM
பார்
அன்று
பாருக்குள்ளே பாரதம்
இன்று
'பாரு'க்குள்ளே பார*த*ம்

பூமகள்
26-08-2007, 05:54 AM
பாரதம் இங்கே
பாருக்குள்ளே..
குப்பிறக் கிடக்கும்
இளைஞரை நம்பி
பொழிவின்றி
பார்க்கிறது உலகை..!
'பாரு'க்கு பாரதம் விற்ற*
பதர்களை வீறுகொண்டே
பதம் பார்ப்போம்!!

kampan
26-08-2007, 06:27 AM
பதம் பார்ப்போம் என நீர் பதற்றுவதை
தினம் பார்க்கிறோம்
சினம் கொண்டு நீர்
கதம் எடுக்கும் வரை இந்த
பதர்களை அகற்றவே முடியாது

சுகந்தப்ரீதன்
26-08-2007, 09:41 AM
பதம் பார்ப்போம் என நீர் பதற்றுவதை
தினம் பார்க்கிறோம்
சினம் கொண்டு நீர்
கதம் எடுக்கும் வரை இந்த
பதர்களை அகற்றவே முடியாது

அகற்றவே முடியாது...
பாருக்குள்ளே பாரதத்தையும்
'பாரு'க்குள்ளே பா ரதத்தையும்
பாடுங்கள் நீங்கள் பா ரகங்களை
பாடுபடும் பாவப்பட்ட மக்களுக்கு!

ஓவியா
26-08-2007, 12:30 PM
மக்களுக்கு மழைநீர் சேமிப்புத்திட்டம்
மாண்புமிகு அமைசருக்கு − ஃபாஃரின்
சோமபாணம் சேமிப்புத்திட்டம் − மொத்த்தில்
த*மிழ் நாட்டில் த*ண்ணிர் ப*ஞ்ச*ம்

இனியவள்
26-08-2007, 08:36 PM
தண்ணிர் பஞ்சம் தாங்காது
தாகத்தில் தவிக்கின்றனர் ஏழைகள்
பன்னீரில் குளிக்கின்றனர்
பணமுதலைகள்

சுகந்தப்ரீதன்
27-08-2007, 04:33 AM
தண்ணிர் பஞ்சம் தாங்காது
தாகத்தில் தவிக்கின்றனர் ஏழைகள்
பன்னீரில் குளிக்கின்றனர்
பணமுதலைகள்

பணமுதலைகள் பன்னீரை
மட்டுமல்ல ஏழைகளின்
செந்நீரையும் சேர்த்தே
குடிக்கின்றன குதுகுலத்தில்!

ஓவியன்
27-08-2007, 11:05 AM
குதுகலத்தில்
தலை கால்
தெரியாமற் போனதில்
முற்றுப் புள்ளி
தலையங்கமானது
என் கவிதையில்!

அக்னி
27-08-2007, 11:06 AM
கவிதையில்,
காதலித்தேன்...
காதலில்,
கவிதையானேன்...

ஓவியன்
27-08-2007, 11:10 AM
கவிதையானேன்
கதையானேன்
கடைசியில்
விதையானேன்
வாழ்க்கையில்......!

அக்னி
27-08-2007, 11:15 AM
வாழ்க்கையில் காதல்
வைத்திருந்தேன்...
வாழ்க்கை இனித்தது...
உன்னில்,
காதல் கொண்டேன்...
வாழ்க்கை சிதைந்தது...

பூமகள்
27-08-2007, 11:26 AM
வாழ்க்கையில் காதல்
வைத்திருந்தேன்...
வாழ்க்கை இனித்தது...
உன்னில்,
காதல் கொண்டேன்...
வாழ்க்கை சிதைந்தது...

வாழ்க்கை சிதைந்தது − உன்
வார்த்தை வசியத்தால்..
விசயம் தெளிந்தேன்..
வாழ்க்கை இசைந்தது...!!

சிவா.ஜி
27-08-2007, 01:20 PM
இசைந்தது வாழ்க்கையென*
இறுமாந்தேன்...
இறுதியில் அறிந்தேன்
இசைத்தது முகாரியென்று..!

அக்னி
27-08-2007, 01:55 PM
முகாரியென்று
இசைந்தது,
என் வாழ்வின்
இறுதிநொடிகளின்,
முகவரி...

இனியவள்
27-08-2007, 06:15 PM
(உன்)முகவரி தேடித் தேடி
அலைந்தேன் − கடைசியில்
என் முகவரியைத் தொலைத்து விட்டு
தவிக்கின்றேன்

சுகந்தப்ரீதன்
28-08-2007, 03:48 AM
(உன்)முகவரி தேடித் தேடி
அலைந்தேன் − கடைசியில்
என் முகவரியைத் தொலைத்து விட்டு
தவிக்கின்றேன்

தவிக்கின்றேன்
கன்றியந்த பசுவாய்
தினம்தினம் உன்னை
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
எப்போது நீ திரும்பி
வருவாயென....!

aren
28-08-2007, 08:38 AM
நீ திரும்பி வருவாயென
இன்றும்
நான் காத்திருக்கிறேன்
ஒரு நாள் வருவாய்
எனக்காக நீ வருவாய்
என்னுடையவளாவாய்!!!

பூமகள்
28-08-2007, 08:53 AM
என்னுடையவளாவாய் என்று
எப்போதும் சொல்லி
ஏங்க வைத்து
ஏய்க்கும் வித்தை
எங்கு கற்றாயடா??

aren
28-08-2007, 09:06 AM
எங்கு கற்றாயடா
என்று என்
நையாண்டிகளையும்
நகைச்சுவைகளையும்
பார்த்து
என்னவள் கேட்டாள்!!!

எல்லாம் உனக்காகத்தானடி
உன் சந்தோஷத்துக்காகதானடி
என் உள்ளத்திலிருந்து
ஊற்றாக வந்து
உன் உள்ளத்தில்
பாய்கிறது!!!!

சிவா.ஜி
28-08-2007, 09:31 AM
பாய்கிறது
வற்றாத ஜீவ நதிகள்
நம் நாட்டில்...
அப்படியும்
விற்கிறது ஏராளமாய்
குடிநீர் பாட்டில்..!

மனோஜ்
28-08-2007, 09:31 AM
பாய்கிறது அன்பு
அனையற்ற ஆறாக
பாய்கிறது இன்பம்
அழுகு மிகு அருவியய்
எப்படி சொல்வேன் உன்
சேவையை இன்னும் நான் குழுந்தை
நீர் என் அன்னை

இனியவள்
28-08-2007, 09:42 AM
அன்னை அவள்
பாதச்சுவடு தொடர்கின்றது
என் பாதச் சுவடுகளோடு
துன்பத்திலும் இன்பத்திலும்

சுகந்தப்ரீதன்
28-08-2007, 09:43 AM
பாய்கிறது அன்பு
அனையற்ற ஆறாக
பாய்கிறது இன்பம்
அழுகு மிகு அருவியய்
எப்படி சொல்வேன் உன்
சேவையை இன்னும் நான் குழுந்தை
நீர் என் அன்னை

அன்னையாக நீ
அன்பு குழந்தையாக நான்
இந்த பிறவி மட்டுமல்ல!
ஏழேழு பிறவிக்கும்
கிடைக்குமா தாயே
உன்பிள்ளைக்கு வரம்?

இனியவள்
28-08-2007, 09:52 AM
வரம் ஒன்று கேட்கின்றாய்
பாராமாய் இருக்கிறது மனதெனக்
கூறி உன் வார்த்தையை நிறைவேற்றி
உன் பாரத்தை இன்று நானல்லவா
சுமந்து திரிகின்றேன் இறக்க
இடமில்லாது

சுகந்தப்ரீதன்
28-08-2007, 09:59 AM
வரம் ஒன்று கேட்கின்றாய்
பாராமாய் இருக்கிறது மனதெனக்
கூறி உன் வார்த்தையை நிறைவேற்றி
உன் பாரத்தை இன்று நானல்லவா
சுமந்து திரிகின்றேன் இறக்க
இடமில்லாது

இடமில்லாது திரிகின்றன*
எத்தனை எத்தனை ஜீவன்கள்
என்னை சுற்றியும் என்
எண்ணங்களை சுற்றியும்!
என்று நிற்கும் என்
பிர*பஞ்சத்தின் சுழற்சி?

அக்னி
28-08-2007, 10:06 AM
சுழற்சி...
உன் கண்களுக்குள்...
என்னைக் கவர்ந்திழுத்த சுழி
அல்லவா...
மீள வழி தெரியவில்லை...
இல்லையில்லை,
தெரிய விரும்பவில்லை...

சிவா.ஜி
28-08-2007, 10:35 AM
விரும்பவில்லை
அவள் என்பதற்காக
விழுந்துவிடவில்லை நான்...
திரும்பவும் விரும்புவேன்
அவள் விரும்பும்வரை
விரும்புவேன்...வெட்கமில்லாமல்..!

பூமகள்
28-08-2007, 10:53 AM
விரும்பவில்லை
அவள் என்பதற்காக
விழுந்துவிடவில்லை நான்...
திரும்பவும் விரும்புவேன்
அவள் விரும்பும்வரை
விரும்புவேன்...வெட்கமில்லாமல்..!
வெட்கமில்லாமல் இருக்க*
நினைக்கும் மனம்
உன்னை பார்க்கையில்...!
வெட்கிச் சிவக்கும் முகம் − உன்
விழி பார்க்கையில்...!

அக்னி
28-08-2007, 11:01 AM
பார்க்கையில் உயிர்த்தேன்...
நீ பார்க்காமையால்,
பார் கைக்குள்,
உறங்குகின்றேன்...

பூமகள்
28-08-2007, 12:24 PM
உறங்குகின்றேன் உன்
உள்ளத்தின் அடிப்பக்கம்..
கொஞ்சம் எட்டிப்பார்
என் பக்கம்
உயிரோடு தான் நான்
இருக்கேனா...???

aren
28-08-2007, 01:39 PM
இருக்கேனா
நான் இன்னும்
உயிரோடு
இருக்கேனா!!!

நீ என்னை
உதறிவிட்டு
இன்னொருத்தனுடன்
சென்ற பிறகும்
உயிரோடு
இருக்கேனா
என்று பார்க்கவந்தாயா!!

இருக்கேன்
உயிரோடு இருக்கேன்
நடைபிணமாக
உன்னை
மறக்கமுடியாமல்!!!!

சிவா.ஜி
28-08-2007, 02:16 PM
மறக்கமுடியாமல்
தொடர்ந்து துரத்தும்
அரக்க நினைவுகள்....
எத்தனை விரட்டியும்
விடாது கையேந்தும்
பிச்சைக்காரனைப்போல்...

பூமகள்
28-08-2007, 02:22 PM
பிச்சைக்காரனைப்போல் உன்
அன்பிற்காய் பிச்சையெடுத்தது
ஒரு காலம்...!!
மோசக்காரன் நீயென்று
அவளோடு பார்த்தபோது
இச்சையின்றி வந்தேன்
இது என்
நற்காலம்..!

சிவா.ஜி
28-08-2007, 02:30 PM
நற்காலம்
நாம் நேசித்த காலம்
பொற்காலம்
நாம் இல்லறத்தை வாசித்த காலம்!

அக்னி
28-08-2007, 04:17 PM
காலம்,
முழுதும் உன்னை தாங்க,
நினைக்கின்றேன்...
உன் மௌனத்தால்,
பூமி என்னைத் தாங்க,
வைத்திடாதே...

aren
29-08-2007, 01:58 AM
வைத்திடாதே
அவன்மேல்
உன் காதலை
வைத்திடாதே
அழித்துவிடுவான்
என்னை
அழித்ததுபோல்!!!!

அக்னி
29-08-2007, 02:39 AM
அழித்ததுபோல்,
ஆக்கப்படுமாம்,
எங்கள் வாழ்வாதாரங்கள்...
அழிக்கப்பட்ட,
உயிர்களும்,
திரும்ப வருமா..?

பூமகள்
29-08-2007, 11:17 AM
அழித்ததுபோல்,
ஆக்கப்படுமாம்,
எங்கள் வாழ்வாதாரங்கள்...
அழிக்கப்பட்ட,
உயிர்களும்,
திரும்ப வருமா..?

திரும்ப வருமா..
மிடுக்காய் சீருடையும்,
மின்மினி மனமுடனும்
அம்மா முந்தானை பிடித்து
எல்.கே.ஜி போகும்
அந்த நாட்கள்????!!!!!!!

ஓவியன்
29-08-2007, 11:26 AM
அந்த நாட்கள்
இன்னமும் பசுமையாக
மனதில்
இருப்பதால் தான்
இந்த நாட்கள்
அந்த நாட்கள் போல்
வறண்டிருக்கவில்லை!.

பூமகள்
29-08-2007, 12:06 PM
வறண்டிருக்கவில்லை...
நீ தீ வைத்துப் போன பின்னும்...
என் உயிர் நதி இன்னும்..
வறண்டிருக்கவில்லை...!!

aren
29-08-2007, 12:16 PM
வறண்டிருக்கவில்லை
உன் நெஞ்சம்
உன் கண்கள்
அதை வெளிப்படுத்திவிட்டது
உன் நெஞ்சில்
நான் இருக்கிறேன்
இன்னும் என்று!!!

சிவா.ஜி
29-08-2007, 02:01 PM
இன்னும் என்று
எதைக் கேட்கிறாய்...
என்னில் இருக்கும்
அன்பனைத்தும் உனக்குதானே
என்னில் இருக்கும்
காதலனைத்தும் உனக்குத்தானே..
நான் முழுதும் நீயாகிவிட்ட பின்
எனக்குத் தேவைப்பட்ட
அன்பை நீதான் தர வேண்டும்..!

பூமகள்
29-08-2007, 02:48 PM
வேண்டும் என்று
கேட்டுப் பெறா
வரம் நீ...!
வேண்டினாலும் கிடைக்கா
அற்புதம் நீ தான் அம்மா!

இனியவள்
29-08-2007, 05:08 PM
அம்மா உன்னைத்
தேடுகின்றேன் இருட்டில்
ஓளியாய் பகலில் இருட்டாய்
தரிசாய் போய் விட்ட என்
மனதை உன் தரிசனம் தந்து
விதையை விதைத்து விடு

பூமகள்
29-08-2007, 05:31 PM
விடுவாதாய் இல்லை நான்!!!
விடாது படிந்திருக்கும்
உனக்கான நினைவுகளை
விடுபட வைக்கும் வரை
விடுவதாய் இல்லை நான்
என் இதயத்தை...!

இனியவள்
29-08-2007, 05:33 PM
என் இதயத்தை
பூவாய் சமர்ப்பிப்பதற்கு
நீ தெய்வமும் இல்லை
நான் பக்தனும் இல்லை
நினைவு என்னும் மாயக்கண்ணாடியில்
சிக்குண்டு தவிப்பதற்கு நான்
பறவையுமல்ல

மாதவர்
29-08-2007, 05:33 PM
விதை தான் பழுது
நிலம் எப்பொழுதும் நல்லதுதான்

ஓவியன்
30-08-2007, 04:17 AM
என் இதயத்தை
பூவாய் சமர்ப்பிப்பதற்கு
நீ தெய்வமும் இல்லை
நான் பக்தனும் இல்லை
நினைவு என்னும் மாயக்கண்ணாடியில்
சிக்குண்டு தவிப்பதற்கு நான்
பறவையுமல்ல

பறவையுமல்ல
விலங்குமல்ல
உன் சிறைகளில்
நான்
அடை பட்டிருக்க...

என்று
வீறாப்புடனிருந்த
என்னை கைகால்
கட்டி உன் அன்பால்
சிறையெடுக்க
எப்படித்தான் முடிந்ததோ?

சிவா.ஜி
30-08-2007, 04:41 AM
எப்படித்தான் முடிந்ததோ
உற்சாகமாயிருந்த
உயிர்களை கருக்க...
மகிழ்வான மாலையை
மரண மாலையாய் மாற்ற....
மனிதனைக் கொன்று
மனிதத்தை தின்னும்
ஈரமில்லா இதயங்களில்
அன்பு சுரப்பதென்று..?

பூமகள்
30-08-2007, 08:11 AM
முதியோர் இல்லம்
அன்பு சுரப்பதென்று...??
ஆரும் அற்று விடப்பட்டு
இன்னலில் இடர்பட்டு அனாதை
இல்லத்தில் சேர்க்கப்பட்ட எங்களின்
இளங்கன்றுகளின் இதயத்தில்
அன்பு சுரப்பதென்று...????

சுட்டிபையன்
30-08-2007, 08:24 AM
அன்பு சுரப்பதென்று...????
அன்பால் சுரப்பதென்று.........?
அன்பாய் சுரப்பதென்று...?
அன்பும் சுரப்பதென்று....?
யாவும் காதலே

இனியவள்
30-08-2007, 08:59 AM
காதலே யாவுமென*
நினைத்து உறவுகளை
நிந்தித்து மமதையில்
அலைந்து இன்று
உறவுமின்றி காதலுமின்றி
கண்ணிழந்த ஓவியனாய்
உன் வாழ்க்கை இருட்டில்
தத்தளிக்கின்றது....

ஓவியன்
30-08-2007, 09:05 AM
தத்தளிக்கிறது
என் காதலுடன்
என் எதிர்காலமும்.....
துடுப்பெனும்
நம்பிக்கையால்
எப்போது என்னைக்
கரையேற்றுவாயோ?

இனியவள்
30-08-2007, 09:11 AM
கரையேற்றுவாயோ அலையாய்
மாறியென கடலைப்
பார்த்துக் கேட்கின்றாய்
கரத்தைத் துடுப்பாக்கி
நம்பிக்கையை ஓடமாய்
மாற்றி நீ கரையேற
முயற்ச்சிக்காமல்

kampan
30-08-2007, 09:13 AM
கரையேற்றுவாயோ கலைமகளே என
கையேந்துவது ஏனோ?
கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள்
வாய்க்கு எட்டியது வயிற்றுக்கெட்டவில்லையே

kampan
30-08-2007, 09:20 AM
கரையேற்றுவாயோ அலையாய்
மாறியென கடலைப்
பார்த்துக் கேட்கின்றாய்
கரத்தைத் துடுப்பாக்கி
நம்பிக்கையை ஓடமாய்
மாற்றி நீ கரையேற
முயற்ச்சிக்காமல்

முயற்ச்சிக்காமல் முன்னேற வழியெது
கயிறு கழுத்திலே சிக்கினால்தான்
சிங்கத்தின் சினம் தெரியும்
உன் கழுத்தில் சிக்கியது காதல் கயிறு
கழற்றுவதும் இறுக்குவதும் உன் பொறுப்பே.

மனோஜ்
30-08-2007, 09:24 AM
பொறுப்பே கடமையாய்
கடமையை பொருமையாய்
பொருமையும் மென்மையாய்
மென்மையும் வளிமையாய்
வளிமையும் இனிமையாய்
இனிமையும் வாழ்கையாய்

இனியவள்
30-08-2007, 09:28 AM
இனிமையும் வாழ்க்கையாய்
அமைந்ததால் துன்பத்தின்
சுவடுகளறியாமல் வாழ்ந்து
விட்டேன் துன்பம் அலைகடலென
வந்து அலைமோதும் போது
கடலில் கலந்த மணலாய்
கரைந்து விட்டேன்

சுகந்தப்ரீதன்
30-08-2007, 09:34 AM
இனிமையும் வாழ்க்கையாய்
அமைந்ததால் துன்பத்தின்
சுவடுகளறியாமல் வாழ்ந்து
விட்டேன் துன்பம் அலைகடலென
வந்து அலைமோதும் போது
கடலில் கலந்த மணலாய்
கரைந்து விட்டேன்

கரைந்து விட்டேன்
அன்பின் அரவணைப்பில்
புரிந்துகொண்டேன்
எல்லாம் சில நொடியில்
புரிகிற*தா என் வ*ருத்த*ம்
நீர்வ*டியும் என்விழியில்?

இனியவள்
30-08-2007, 09:38 AM
விழியில் வழிதேடினாய்
இருட்டில் ஒளியாய்
என் விழிகள் உனக்கு
வழித்துணை செய்ய
என் பாதையை தொலைத்து
அலைகின்றேன்

சிவா.ஜி
30-08-2007, 09:53 AM
அலைகின்றேன்
பித்தனாய் புரியப்பட்டு
சித்தனாய் என்னுள் அறிய
எங்கெங்கோ தேடி
உள்ளதை அறியாது
இல்லாததை நாடி....

இனியவள்
30-08-2007, 09:59 AM
இல்லாததை நாடி
அலைகின்றேன் இருப்பதை
விட்டு விட்டு இருந்ததும்
போய் இல்லாமல் அலைகின்றேன்
இப்பொழுது........

பூமகள்
30-08-2007, 10:02 AM
நாடி வந்து
நாளும் பல கதைபேசி
நாதி இன்றி
நிற்க வைப்பர்..
நம்பாதே தோழி...!!

kampan
30-08-2007, 10:07 AM
நம்பாதே தோழி என
ஏணி வைப்பது போல்
சாணி பூசிடுவர்
நாதை இன்றி தோழியா?
இல்லை அவளை நாடிவந்தனால்
அநாதையானது தோழனா?

பூமகள்
30-08-2007, 10:12 AM
தோழனாய் நீ
தோள் கொடுத்த
நொடியில் தானடா
தோழமையில்
தாய்மை கண்டேன் நான்!

kampan
30-08-2007, 10:22 AM
நான் கொண்ட காதல்
தோழமையானது
சொந்தத்திற்காக அல்ல
உன் புது சொந்தத்திற்காக.

சிவா.ஜி
30-08-2007, 11:13 AM
புது சொந்தத்திற்காக
பழம் உறவுகள்
பழுதாகிவிடுமா..?
இவள் என் மனைவியாகுமுன்
நீ என் தோழி...
இன்று முதல்
இருவருக்கும் நீ தோழி!

பூமகள்
30-08-2007, 11:19 AM
நீ தோழி
என்றுரைத்து
என்னவன் சென்றான்...!
காதலி தோழி
என்று உருமாறுவதெப்படி??
புரியாமல் நான்..!

சிவா.ஜி
30-08-2007, 11:25 AM
புரியாமல் நான்
காத்துக்கொண்டிருக்கிறேன்
போனவள் வருவாளென
பொழுது சாயும்வரை..
அவள் விளையாட
நானொரு பொம்மையென
புது மஞ்சளை
அவள் முகத்தில் பார்த்து
புரிந்து கொண்டேன்!

பூமகள்
31-08-2007, 12:01 PM
புரிந்து கொண்டேன்
புதிரான மனிதத்தையும்
புதிதான மன கணிதத்தையும்
பதரான பலரது புதினங்களையும்
புதிதாய் நான்
புயலாய் தனியாய்
பயணிக்கையில்...!!

இனியவள்
31-08-2007, 03:04 PM
தனியாய் பயணிக்கையில்
நிழலாய் வரும் நினைவுகள்
என் தனிமையின் கொடுமையை
மேலும் அதிகரிக்கின்றனவே....

ஓவியன்
31-08-2007, 03:18 PM
அதிகரிக்கின்றனவே உன் ஞாபகங்கள்
உன்னை மறக்கவேண்டுமெனும் போது!
அதிகரிக்கின்றனவே உன் காதலும்
உன்னை மறக்கவேண்டுமெனும் போது!

அறிஞர்
31-08-2007, 03:24 PM
மறக்கவேண்டுமென
மற்றவர் சொல்ல*
மனமோ
மறக்க ம*றுக்கின்றது...

ஓவியன்
31-08-2007, 03:45 PM
மனமோ
மறக்க மறுக்கின்றது
காதலை.........
மறுக்க நினைக்கின்றது
யதார்த்த்தை......!

பூமகள்
31-08-2007, 06:08 PM
யதார்த்தத்தை மறுக்கும்
யாதுமறியா மனம்..!!
பட்டுத் தெளியும்
உலகத்தின் குணம்...!!

ஓவியன்
31-08-2007, 06:19 PM
குணம்
குற்றம்
குறை
மூன்றுமே தெரியாமல்
உன்னைக்
காதலித்ததால் தானா
இன்று என்னிடம்
குணம்
குற்றம்
குறை
பார்கிறாய்.........?

இனியவள்
31-08-2007, 08:44 PM
குறை பார்க்கின்றாய்
குற்றமற்ற இதயத்தில்
நிறை காண்கின்றாய்
வஞ்சகமே உருப்பெற்ற
கபட நாடகத்தில்

ஓவியா
01-09-2007, 12:25 AM
நாடகத்தில்
நடிகருண்டு
ந*டிக*யுண்டு
ந*லின*முன்டு
நடனமுண்டு
ந*ஞ்சுண்டு
நல்லோருமுண்டு − அவ்வப்போது
கரைசேரா காதலுமுண்டு

aren
01-09-2007, 03:15 AM
கரைசேரா காதலுமுண்டு
என்று சொல்லியே
என்னுடைய காதலை
நிராகரித்தாய்!!!

இன்று நிர்கதியாய்
அனைவராலும்
நிராகரிக்கப்பட்டு
நீ இருக்கிறாய்!!!!

நிச்சயம் கரை இருக்கிறது
நம் காதல் கரைசேரும்!!!

நம் காதல் கரைசேரும்
காதலில் சேரும்!!!!

பூமகள்
01-09-2007, 02:58 PM
காதலில் சேரும்
கண்கள் இரண்டும்
நீரும் சேறும்
கலந்தது போலே
இயைந்ததென்ன??

ஓவியா
01-09-2007, 03:06 PM
இயைந்ததென்ன??
என்றால் என்ன அர்த்தம்???

நன்றி.

பூமகள்
01-09-2007, 03:11 PM
இயைதல் − பொருந்துதல், இணங்குதல், ஒத்து இருத்தல், நிரம்புதல் என்று பொருள் அக்கா.

ஓவியா
01-09-2007, 03:23 PM
ஓ அப்படியா நன்றிமா.

சுகந்தப்ரீதன்
02-09-2007, 04:33 AM
காதலில் சேரும்
கண்கள் இரண்டும்
நீரும் சேறும்
கலந்தது போலே
இயைந்ததென்ன??

இயைந்ததென்ன
எம்தமிழ் மக்கள்
இழைத்ததென்ன
எம் எதிரிகள்
எங்களுக்கும் என்
தாய் தமிழுக்கும்?

பூமகள்
02-09-2007, 05:40 AM
தாய் தமிழுக்கும்
எமக்கும் தீங்கிழைக்கும்
தீயோர்
தீசுட்டு பொசுங்குவர்
தீர மறவர்களால்..!

kampan
02-09-2007, 09:35 AM
மறவர்களால் வெகு விரைவில் எமது
துறவறங்கள் களையும் நாள் வரும்
வறண்ட எம் மனங்களிற்குள்
வசந்தம் வீசும்
பிரிந்த எம் உறவுகள்
ஒன்று சேரும்
சரிந்த எம் தாய் நிலம்
தலைநிமிரும்

சுகந்தப்ரீதன்
02-09-2007, 09:37 AM
தாய் தமிழுக்கும்
எமக்கும் தீங்கிழைக்கும்
தீயோர்
தீசுட்டு பொசுங்குவர்
தீர மறவர்களால்..!

மறவர்களால்
மட்டுமல்ல!
என் தமிழ்தாயின்
மகள்களாலும் கூட*
மாற்ற முடியும்
மாக்களை மக்களாக!

சுகந்தப்ரீதன்
03-09-2007, 03:29 AM
மறவர்களால் வெகு விரைவில் எமது
துறவறங்கள் களையும் நாள் வரும்
வறண்ட எம் மனங்களிற்குள்
வசந்தம் வீசும்
பிரிந்த எம் உறவுகள்
ஒன்று சேரும்
சரிந்த எம் தாய் நிலம்
தலைநிமிரும்

தலைநிமிரும்
கோபுரங்கள்
தத்தளிக்கும்
பாய்மரங்கள்
உய*ர்ந்த* இட*ம்சேரும்
உரிய* காற்று வீசுகையில்!

அக்னி
06-09-2007, 08:27 AM
வீசுகையில் உணர்ந்தேன்,
தென்றலின் குளிர்மையை...
நீ...
பேசுகையில் உணர்ந்தேன்,
மொழியின் இனிமையை...

சுகந்தப்ரீதன்
06-09-2007, 11:03 AM
வீசுகையில் உணர்ந்தேன்,
தென்றலின் குளிர்மையை...
நீ...
பேசுகையில் உணர்ந்தேன்,
மொழியின் இனிமையை...

இனிமையை எதிர்பார்த்து
இளமையை இழக்கபார்க்கும்
இளைஞனே.....
நினைத்துபார்த்தாயா?
இதனால் இழக்கபோவது
இளமையா.... இனிமையாவென்று?

அக்னி
06-09-2007, 11:12 AM
இனிமை யாவென்று...
கேட்டேன்...
இளமை கொண்ட மனது
காதல் என்றது...
முதுமை கொண்ட மனது
சாதல் என்றது...

சுகந்தப்ரீதன்
06-09-2007, 11:22 AM
இனிமை யாவென்று...
கேட்டேன்...
இளமை கொண்ட மனது
காதல் என்றது...
முதுமை கொண்ட மனது
சாதல் என்றது...

சாதல் என்றது
சனி மூலை!
காதல் என்றது
கன்னி மூலை!
எந்த மூலையை
நம்புவது....?
என் மூளையையா?
உன் மூளையையா?

இனியவள்
06-09-2007, 04:13 PM
மூளையைக் கொண்டு
சிந்தித்து மனதின்
உணர்வுகளைக் குழைக்கின்றாய்
அசைந்து வரும் தென்றல்
அழகிய கோலத்தை கலைப்பது போல்

ஓவியன்
07-09-2007, 04:53 AM
கோலத்தைக் கலைப்பது போல்
என் உறவுகளைக் கலைத்துவிட்டு
போதாது என்று
என் வாழ்க்கையையும் கலைத்துவிட்டு
இன்னும் கலையாமல் இருக்கிறதே
என் கோபம்...................!

சிவா.ஜி
07-09-2007, 05:05 AM
என் கோபம்
என்னிடமிருந்து பறித்தது
ஏராளமானபோதும்....
உன்னையும் பிரித்தது
உச்ச இழப்பு....இன்று
கோபத்தை விலக்கிவிட்டேன்..என்
கோலமயில் இலக்கடையுமா?

ஓவியன்
07-09-2007, 05:11 AM
இலக்கடையுமா
இனியாவது
என் ஆசைகள்...

இல்லை
இலக்கின்றி,
இலக்கணமின்றி,
இலட்சியமின்றி,
போய்விடுமா
என் காதலைப் போல்......!

சிவா.ஜி
07-09-2007, 05:13 AM
என் காதலைப் போல்
இன்னொன்று இங்கில்லையென
உரத்துச் சொல்ல
ஒரு குரல் குறைகிறது
கண்ணே வருவாயா நம்
காதலைச் சொல்ல.....

பூமகள்
07-09-2007, 01:12 PM
சொல்ல
எத்தனிக்கும்
எத்தனையோ தருணங்கள்
சொல்ல முடியாமல்
தவித்துக் கிடக்கும்
என் உயிர்...!!

ஆதவா
07-09-2007, 01:17 PM
என் உயிர் பொருளின் மூலங்கள்
துளையிடப்படுகின்றன.
உள்ளுள் எழும் நெருப்புத் தனலில்
நெஞ்சம் கொதிக்க,
துளையிடப்பட்ட மூலங்களை
மூடிவிட உள்ளம் சொல்லுகிறது.
இங்கே யாவருக்கும் சொரணை இல்லை
என்னையும் சேர்த்து.

ஓவியன்
07-09-2007, 01:22 PM
சேர்த்துத் தட்டினாற் தான்
ஓசை வருமாம்........
இது கைகளுக்கு மட்டுமின்றி
வாழ்வுக்கும் பொருந்தும்,,,,,

ஆதவா
07-09-2007, 01:24 PM
சேர்த்துத் தட்டினாற் தான்
ஓசை வருமாம்........
இது கைகளுக்கு மட்டுமின்றி
வாழ்வுக்கும் பொருந்தும்,,,,,

பொருந்தும் கனவுகளின் வெடிப்பில்
சிக்கி உழலுவதில்லை எவரும்
பொருந்தா உணர்வுகளோடு வாழ்வாருக்கு நடுவே

தாமரை
07-09-2007, 01:52 PM
நடுவே போட்ட கோடுகள்
ஓரம் தள்ளப்பட்டன
அந்த நான்கு கால்கள்
இணைந்து நடந்தபோது..

aren
07-09-2007, 01:53 PM
நடுவே நான்
காதலா
படிப்பா
எதைத் தேர்வுசெய்வது
என்று தெரியாமல்
நடுவில் மாட்டிக்கொண்டு
நான்!!!

காதலும் வென்றது
படிப்பும் வென்றது
என்னவள்
எனக்காகவே வாழ்ந்த்தால்!!!

அக்னி
07-09-2007, 02:46 PM
நடுவே போட்ட கோடுகள்
ஓரம் தள்ளப்பட்டன
அந்த நான்கு கால்கள்
இணைந்து நடந்தபோது..

நடந்தபோது,
நழுவியது பூமி
பாதங்களின் அடியில்...
வலித்ததோ பூமிக்கு..?

அக்னி
07-09-2007, 02:47 PM
தமிழ்மன்றத்தில்,
கவிதைகளின் தொடர் சமராக,
4000 பதிவுகளில் வீறுநடைபோடும்,
:nature-smiley-002: கவிச்சமர்... :nature-smiley-002:
மேலும் பல்லாயிரம் சமர்க்களங்கள் தொட,
வாழ்த்துக்கள்...