PDA

View Full Version : லண்டனில் ஒருநாள் - பகுதி 2

ஆதவா
10-05-2007, 10:16 AM
(விமான நிலையம் டூ அக்கா வூடு)

மெதுவா விமானம் கெளம்பிருச்சு.. மொதமுறையா ஆதவன் பறக்கறான்... எனக்கு ஒரே குதூகலம். என் சீட்டுக்கு முன்னாடி ஒரு திரை இருந்துச்சு. அதுல படம் பாத்துக்கலாம்னு சொன்னாங்க.. இதைவிடக் கொடுமை ஒன்னு சொல்றேன். நீங்க நம்ப மாட்டீங்க.. எனக்கு பக்கத்திலயே ஒரு பொண்ணு உக்காந்துருச்சி. அடடா.. இதுதாண்டா சான்ஸ் னு விசாரிச்சேன்.

" ஹாய்!" அப்படீன்னேன். அவளும் பதிலுக்கு

" ஹாய் " என்றாள்.

" எங்க போறீங்க?"

" லண்டேன். யூ?"

" நானும் லண்டன் தான். ஊரைச் சுத்திப்பாக்க டிக்கெட் கெடச்சுது. அதான் போய்ட்டு இருக்கேன். "

" ஐ சி."

கொஞ்ச நேரமா எதுவுமே பேசாம அந்த பொண்ணு ஏதோ ஆங்கில புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்திச்சு. எனக்கு பொறுமை இல்லை. திரும்பவும் கூப்பிட்டேன்

" எக்ஸ்க்யூஸ்மீ. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"

" சித்ரா,. யூ?"

" ஆதவன்."

" நைஸ் நேம். என்ன பண்ணீட்டு இருக்கே?"

" தோ உங்க கூட பேசிட்டு இருக்கேன்.."

" ஓ மேன். என்ன ஒர்க் பண்றே?"

" பேசிட்டு இருக்கற ஒர்க் பண்றேன்,."

"ஷிட்.. உன்னோட பிஸினஸ் என்ன?"

" ஓ டெக்ஸ்டைல் டிசைனிங். ஐம் த ஓனர் ஆப் தெ கிரேட் டிசைனிங்க் கம்பெனி இன் திருப்பூர்,..."

" ரியலி..."

" ஆமாம் சுண்டெலி.."

இப்படியே போய்ட்டு கடைசியில விட்டேன் பாருங்க.... எனக்கு கவிதை எழுதத் தெரியும்னு.... அந்த பொண்ணுக்கு கவிதைன்னா உசிரு போல. உடனே ஒரு கவிதை எழுதுன்னு பேனாவை நீட்டினா. நானும் எழுதி காமிச்சேன்.. அந்த பொண்ணு மிரண்டுட்டா.... சூப்பர்ப் சூப்ப்ர்ப் எக்ஸலண்ட் அப்படீன்னு ரொம்ப்ப பாராட்டீட்டு கடைசியில இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா பாருங்க... அப்படியே நொந்து போய்ட்டேன்.. இப்படியே நல்லா கடலை போட்டுட்டு தூங்கிட்டேன்..

முழிச்சுப்பார்த்தா, லண்டன் நெருங்கிட்டதா அனவுன்ஸ் பண்ணாங்க.. எனக்கு கனவு வேற... லண்டன்ல முகம் தெரியாத ஓவியாக்கா கூட்டிட்டு போய் சுத்தறமாதிரி கனவு.. அப்படியே களைச்சுப் போய் எழுந்து படிக்கட்டுல நடந்து வந்தா, என்னை வரவேற்கறதுக்கு ஓவியா அக்கா வந்திருந்தாங்க. ஆனா அவுங்க முகத்தை நான் பார்த்ததே இல்லையே! இருந்தாலும் கண்டுபிடிச்சேன்... எப்படீன்னு நினைக்கிறீங்களா?

சிவப்புக்கலர்ல சேலை கட்டிட்டு ஒரு ஓரமா சோகமா நின்னுட்டு இருந்தாங்க ஒரு பொண்ணு. முகம் இந்தியா முகம் அப்படியே இருந்தது. இவுங்க தான் ஓவியான்னு முடிவு பண்ணி ஹலோ ஓவி அக்கா. அப்படீன்னு கேட்டேன்... பேந்த பேந்த முழிச்சாங்க.. அய்யய்யோ அப்ப ஓவியா வரலையான்னு பயந்துபோய்ட்டேன்.. நல்லவேளை அவுங்க தமிழ்தான்... ஹி ஹி பேரு மணிமேகலைன்னு சொன்னாங்க.. எங்கயோ கேள்விபட்டமாதிரி இருக்கே...

ஓவியா வந்துருவாங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க ஆதவன் அப்டீன்னாங்க. சரின்னு ஒரு சேர்ல உக்காந்திட்டு இருந்தேன். திடீர்னு வந்து நின்னாங்க ஓவியா... கையில பொக்கே யோட.. அப்பத்தான் அக்காவை நேர்ல பார்க்கறேன்.

நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க.. முடியை பின்னாம அப்படியே தொங்கவிட்டு இருந்தாங்க. நல்ல நிறம். பச்சைக் கலர்ல சேலை கட்டி இருந்தாங்க,.. அந்த முகத்தைப் பார்க்கனுமே... அப்படி ஒரு பொலிவு.. ஏதோ வறுமையில அடிபட்டவன் கூட சந்தோசப்படவைக்கும் முகம்.. குரல் ரொம்ப மிருதுவா இருந்தது... (டேய் டேய் ரொம்ப கதை உடாதே!!) பொக்கே எல்லாம் வாங்கி பழக்கமில்லை. இருந்தாலும் சும்மா வாங்கி இடுக்குல வச்சுகிட்டேன்.. போலாமா னு இரண்டு பேரும் கேட்டாங்க, சரி அக்கா அப்படீன்னு ஒரு பயபக்தியோட சொன்னேன்.. பின்னே.. எம்மாம் பெரியவங்க... நம்மள வரவேற்க நிற்கறாங்கன்னா சும்மாவா?

லண்டன் விமான நிலையம் பேரு ஹெத்ரூ ஏர்போர்ட். உலகத்திலயே பிஸியான ஏர்போர்ட்டாமாம்... ஓவி அக்காதான் சொன்னாங்க.. பின்ன நம்ம ஊர் மாதிரியா? ஈ காக்கா ஓட்டிகிட்டு.... விமான நிலையத்து விட்டு வெளியே வந்தும் அதே வெப்பம்... சரியான அளவில் குளிர் இருந்தது. டாக்ஸியை கூப்பிட்டாங்க.. ஏதோ தஸ்புஸ்னு பேசி என்னை உள்ளார உக்காரவெச்சுட்டாங்க. லண்டன் டாக்ஸி நம்ம ஊருமாதிரி கருப்பு கலர் இல்லை. சுத்தமா மஞ்ச கலர். மேல லைட் இருந்தது.. டாக்ஸி ஓட்டினது ஒரு பொண்ணு.. ஹி ஹி ரொம்ப அழகா இருந்தது.. எனக்கு மட்டும் இங்கிலீசு கொஞ்சம் நல்லா தெரிஞ்சிருந்தா ஹி ஹி அந்த பொண்ன செட் பண்ணியிருப்பேன்... லண்டன் வீதிகள்லாம் அதிசுத்தமா இருந்தது. நிறைய இடத்தில பச்சை கலர்ல சிக்னல் போர்ட் வெச்சுருந்தாங்க. மாளிகைகள்லாம் பாக்கரதுக்கு அதி சூப்பரா இருந்துச்சு. ஆனா ஒன்னு சொல்றேனுங்க... லண்டன சுத்திப் பாக்க ஒருநாள் நிச்சயம் பத்தாது.. அதுலயும் என்னை மாதிரி ஆளுங்களுக்கு பத்து பதினஞ்சு நாள் வேணும்.. சரி வேறவழி. ஓசியில சுத்தறோம்ல... அதெல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா...

டாக்ஸி நேரா ஓவியாக்கா வீட்டுக்கு போச்சு. சும்மா சொல்லக்கூடாதுங்க... ஓவியாக்கா பெரும் பணக்காரிதான்.. ரொம்ப பெரிய வீட்ல இருக்காங்க. ம்..... ஆனா ஏர்போர்ட்ல இருந்து இவங்க வீட்டு வந்துசேரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சு. எங்கயோ ஒரு மூலைல இருக்குங்க இவங்க வீடு... உள்ளே போனேன்... ஹி ஹி வலது கால வெச்சு... பின்னே.. எது பண்ணாலும் யோசிச்சு பண்ணுவோம்ல... அதுசரி.. இது வரைக்கும் ஓவியாக்கா சும்மாதான் இருந்தாங்க.. அப்பறம்தானே ஆட்டமே!!

தொடரும்..

gragavan
10-05-2007, 10:20 AM
அப்பாய்.....லண்டன் உண்மையாவே போனியா? போட்டோவக் காட்ட மாட்டேங்குறயே. இது நியாயமா?

அந்தச் சின்னத்திரையில என்ன படம் போட்டாங்கன்னு பாக்கலையா? அநேகமா தமிழ்ப்படம் ஒன்னு போட்டிருப்பாங்க.

ஏர்ப்போர்ட்டிலிருந்து டிரெயின் இருந்திருக்குமே. பிறகெதுக்கு டாக்சி. ஏனென்றால் ஐரோப்பாவில் டாக்சி ரொம்ப விலை.

தாமரை
10-05-2007, 10:21 AM
நானும் ஓவியாவும் சந்தித்த கதையை கேட்கலியா? ஓவியா கதை கதையா சொல்லுவாங்களே!!

ஆதவா
10-05-2007, 10:27 AM
போட்டா பிற்பாடு விடப்படும்.... சின்னத்திரையில் நாமே என்ன படம் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனா நாந்தான் கடலை போட்டுட்டு தூங்கிட்டேனே.

முதல்ல எனக்கும் ரயில்ல போகணும்னு தான் ஆசை. அதிலயும் பாதாள ரயில் வேற... இதுவரைக்கும் போனதில்லை... அன்றியும் போனேன்.. அதைப் பற்றிய விபரங்கள் பின் வரும்.....

என்னவோ தெரியல.. பிரைவேசி விரும்பனாங்க போல./.. டாக்ஸியில தான் கூட்டிட்டு போனாங்க.... எனக்கும் தெருவெல்லா பாத்தமாதிரி ஆச்சு...
-------------------------------
ஓ!!! ஓவியா அவர்கள் சொல்லவே இல்லையே! சரி சரி... இன்னொருநாள் லண்டனுக்கு இலவச டிக்கெட் கிடைச்சா நிச்சயம் கேட்டுக்குவேன்...

மன்மதன்
10-05-2007, 11:02 AM
ஹ்ம்ம்.. பேராசை பெரியசாமி !! நன்றாகவே செல்கிறது பதிவு.. மொத்தம் எத்தனை அநியாயம்பா ...ஓ சாரி..அத்தியாயம்பா.:D :D

ஆதவா
10-05-2007, 11:03 AM
அநியாயங்களும் அத்தியாயங்களும் நிறைய இருங்குங்க,..

அன்புரசிகன்
10-05-2007, 11:04 AM
இதைவிடக் கொடுமை ஒன்னு சொல்றேன். நீங்க நம்ப மாட்டீங்க.. எனக்கு பக்கத்திலயே ஒரு பொண்ணு உக்காந்துருச்சி.
பழக்கதோஷம் விட்டிருக்காதே?

" ஹாய்!" அப்படீன்னேன். அவளும் பதிலுக்கு
" ஹாய் " என்றாள்.
" எங்க போறீங்க?"
" லண்டேன். யூ?"
" நானும் லண்டன் தான். ஊரைச் சுத்திப்பாக்க டிக்கெட் கெடச்சுது. அதான் போய்ட்டு இருக்கேன். "
" ஐ சி."

அது தானே பார்த்தேன். ஆதவனாவது விடுறதாவது.
ஏன் 15/3 டிக்கட் என சொல்லவில்லையா?

கொஞ்ச நேரமா எதுவுமே பேசாம அந்த பொண்ணு ஏதோ ஆங்கில புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்திச்சு. எனக்கு பொறுமை இல்லை. திரும்பவும் கூப்பிட்டேன்
எப்படி பொறுமை வரும். ஆண்டவன் வந்து எழும்பி வா நான் உனக்கு 1 கோடி அமெரிக்க டொலர் தாறன் என்று சொன்னாலும் எழும்பியிருப்பீர்களா?

" எக்ஸ்க்யூஸ்மீ. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"
" சித்ரா,. யூ?"
" ஆதவன்."
" நைஸ் நேம். என்ன பண்ணீட்டு இருக்கே?"
" தோ உங்க கூட பேசிட்டு இருக்கேன்.."
" ஓ மேன். என்ன ஒர்க் பண்றே?"
" பேசிட்டு இருக்கற ஒர்க் பண்றேன்,."
"ஷிட்.. உன்னோட பிஸினஸ் என்ன?"
" ஓ டெக்ஸ்டைல் டிசைனிங். ஐம் த ஓனர் ஆப் தெ கிரேட் டிசைனிங்க் கம்பெனி இன் திருப்பூர்,..."
" ரியலி..."
" ஆமாம் சுண்டெலி.."
கடலை போடல் ஸ்டார்ட்டட். ஆமா உண்மையில சுண்டெலி சொன்னீங்களா? நம்பமுடியவில்லை... :1:

கடைசியில இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா பாருங்க... அப்படியே நொந்து போய்ட்டேன்
அந்தப்பொண்ணுக்குமா? உண்மையிலே கொடுமைதான்.

முழிச்சுப்பார்த்தா, லண்டன் நெருங்கிட்டதா அனவுன்ஸ் பண்ணாங்க.. எனக்கு கனவு வேற...
முளிச்சா..? நீங்களா... இன்னமும் கனவை விட்டெழும்பவே இல்ல.

லண்டன்ல முகம் தெரியாத ஓவியாக்கா கூட்டிட்டு போய் சுத்தறமாதிரி கனவு..
இது மட்டும் உண்மை.

அப்படியே களைச்சுப் போய் எழுந்து படிக்கட்டுல நடந்து வந்தா,

பொறுங்க பொறுங்க. களைப்பா... விமானத்தில இருந்தா? அல்லது கடலை போட்டா?

சிவப்புக்கலர்ல சேலை கட்டிட்டு ஒரு ஓரமா சோகமா நின்னுட்டு இருந்தாங்க ஒரு பொண்ணு. முகம் இந்தியா முகம் அப்படியே இருந்தது.
:cool-smiley-016: இப்படியா?

இவுங்க தான் ஓவியான்னு முடிவு பண்ணி ஹலோ ஓவி அக்கா. அப்படீன்னு கேட்டேன்... பேந்த பேந்த முழிச்சாங்க..
:Nixe_nixe02b:

ஓவியா வந்துருவாங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க ஆதவன் அப்டீன்னாங்க. சரின்னு ஒரு சேர்ல உக்காந்திட்டு இருந்தேன். திடீர்னு வந்து நின்னாங்க ஓவியா... கையில பொக்கே யோட.. அப்பத்தான் அக்காவை நேர்ல பார்க்கறேன். நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க..
:medium-smiley-029: :icon_give_rose: இதில ஏதாச்சும் கவித சொல்லலாமே...

நல்லா கதவுடுறீங்க.. ச்சீ... நல்லா உங்க சுவையான சம்பவத்தை பகிர்ந்தீங்க. நிஜமாகவே நன்றாக இருந்தது.

தொடருங்கள்.

மதி
10-05-2007, 11:07 AM
அட..அட..
நல்லாருக்குங்க உங்க பயண அனுபவம்..
ஹ்ம்ம்..
ஓவியாக்காவை பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இவ்ளோ சீக்கிரமே கிடச்சுடுச்சே...

செல்வர் கூட ஓவியாக்காவை பார்த்தை சொல்லவில்லை..!

ஆதவா
10-05-2007, 11:16 AM
பழக்கதோஷம் விட்டிருக்காதே?

ஹி ஹி... என்னைப் பத்தி கரேட்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க... சபாஷ்..

அது தானே பார்த்தேன். ஆதவனாவது விடுறதாவது.
ஏன் 15/3 டிக்கட் என சொல்லவில்லையா?

இதென்ன 15/3 டிக்கெட். அந்த நேரத்தில அதெல்லாம் ஞாபகம் இல்லீங்க அன்பு..

எப்படி பொறுமை வரும். ஆண்டவன் வந்து எழும்பி வா நான் உனக்கு 1 கோடி அமெரிக்க டொலர் தாறன் என்று சொன்னாலும் எழும்பியிருப்பீர்களா?

ஆமாமா.... சரியா சொன்னீங்க...

கடலை போடல் ஸ்டார்ட்டட். ஆமா உண்மையில சுண்டெலி சொன்னீங்களா? நம்பமுடியவில்லை... :1:

ஹி ஹி... கொஞ்சம் அடக்கி சொன்னேன்.. அந்த பொண்ணோட காதுல விழுந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.

அந்தப்பொண்ணுக்குமா? உண்மையிலே கொடுமைதான்.

என்ன பண்றது ரசிகரே! இதுக்குத்தான் ரொம்ப தற்பெருமை பேசக்கூடாதுங்கறது.... அந்த இடத்திலதான் நான் மாட்டீட்டேன்

முளிச்சா..? நீங்களா... இன்னமும் கனவை விட்டெழும்பவே இல்ல.

கனவுல கண்டது சொன்னா நிஜத்தைச் சொன்னதுமாதிரியே ஆயிடும்னு தான் சொல்லவே இல்லை... ஆனா உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.. பக்கத்தில அந்த பொண்ண வெச்சுகிட்டு அவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்திருக்கேன்... :ohmy:

பொறுங்க பொறுங்க. களைப்பா... விமானத்தில இருந்தா? அல்லது கடலை போட்டா?

இரண்டும்தான்

:cool-smiley-016: இப்படியா?

:D :D

:Nixe_nixe02b:

:aktion033:

:medium-smiley-029: :icon_give_rose: இதில ஏதாச்சும் கவித சொல்லலாமே...

ஏற்கனவே கவிதை சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கிகட்டிட்டது பத்தாதுங்களா?

நல்லா கதவுடுறீங்க.. ச்சீ... நல்லா உங்க சுவையான சம்பவத்தை பகிர்ந்தீங்க. நிஜமாகவே நன்றாக இருந்தது.

எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதினா நீங்க சாதாரணமா கதை உடறதா சொல்றீங்க ...:spezial: .. ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.

கதையைப் பிரிச்சு விமர்சனம் செய்த முதல் ஆளே நீர்தான்... வந்தனம் :aktion033:

ஆதவா
10-05-2007, 11:17 AM
அட..அட..
நல்லாருக்குங்க உங்க பயண அனுபவம்..
ஹ்ம்ம்..
ஓவியாக்காவை பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இவ்ளோ சீக்கிரமே கிடச்சுடுச்சே...

செல்வர் கூட ஓவியாக்காவை பார்த்தை சொல்லவில்லை..!

நன்றிங்க மதி... நம்ம மன்றத்தில இன்னும் சிலரைப் பார்த்திட்டேனா போதும்.. நிறையபேரை பார்த்த முதல் ஆளுன்னு பேரு கிடைக்கும்... ஏற்கனவே அறிஞரைப் பார்த்தேன்... இன்னும் இருக்காங்க... அது அடுத்த மாசம் சொல்றேன்...

அன்புரசிகன்
10-05-2007, 11:25 AM
எல்லாம் ஒரு அன்புதான் ஆதவா.. எல்லாரிடமும் ஷேஷ்டைகள் புரியமுடியாதே...
உண்மையில் கதை அருமை.
15/3 = O/C. (15, 3வது ஆங்கில எழுத்துக்களை சேருங்கள். அதாவது இலவசம்)

மனோஜ்
10-05-2007, 11:25 AM
மனோ!! இந்த விஷயத்தை மதுகிட்ட கேட்டேன்... ஹி ஹி ஹி.. மனோக்கு அனுப்பவேண்டிய டிக்கெட்ட் கொஞ்சம் மாறுதலா உனக்கு வந்துருச்சு... சமாளின்னுட்டாரு.. இதுக்குத்தான்.. ஒம்பது மணிவரைக்கும் தூங்கன்னும்கிறது....
என் வாய்ப்பை நீங்கள் பயன்டுத்தி விட்டதால் இந்த கதையில் நான் எங்காவத ஒரு இடத்தில் வரவேன்டும் ஆமா
இல்லனா சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும்:D :D :D

mania
10-05-2007, 11:46 AM
கலக்கல் க(கா)தை.....:D :D
அன்புடன்
மணியா....:D

மதி
10-05-2007, 11:52 AM
நன்றிங்க மதி... நம்ம மன்றத்தில இன்னும் சிலரைப் பார்த்திட்டேனா போதும்.. நிறையபேரை பார்த்த முதல் ஆளுன்னு பேரு கிடைக்கும்... ஏற்கனவே அறிஞரைப் பார்த்தேன்... இன்னும் இருக்காங்க... அது அடுத்த மாசம் சொல்றேன்...
அப்போ நம்ம சந்திப்பு எப்போ..???:ohmy: :ohmy:

ஆதவா
10-05-2007, 12:37 PM
ஓ! 15/3 க்கு இதுதான் அர்த்தமா? தெரிஞ்சிருந்தா அந்த பொண்ணுகிட்ட சொல்லியிருப்பேனே!!!
--------------------------------------------
என்னங்க மனோ! நான் போன இடம் இலண்டன்.. நீங்க இருக்கிற இடமே வேற,,, அதெப்படி உண்மைக் (:D) கதையில் நீங்க வரமுடியும்???? :D
--------------------------
தலை!! ஒரு வரி என்றாலும் நச்!!
-----------------------------
மதியண்ணே!!! விரைவில் சந்திப்போம்.... நன்றி அனைவருக்கும்...

மனோஜ்
11-05-2007, 02:12 PM
என்னங்க மனோ! நான் போன இடம் இலண்டன்.. நீங்க இருக்கிற இடமே வேற,,, அதெப்படி உண்மைக் கதையில் நீங்க வரமுடியும்????
என்ன ஆதவா லண்டனிலிருந்து சவுதி ரியாத் வழியாதானே இந்தியா போனிங்க அதுகுள்ள மறந்திட்டிங்களே நான்குட ஏற்போட்டில் வந்து உங்களை பார்த்தனே மறந்து விட்டீர்களா

ஷீ-நிசி
11-05-2007, 03:56 PM
நன்றிங்க மதி... நம்ம மன்றத்தில இன்னும் சிலரைப் பார்த்திட்டேனா போதும்.. நிறையபேரை பார்த்த முதல் ஆளுன்னு பேரு கிடைக்கும்... ஏற்கனவே அறிஞரைப் பார்த்தேன்... இன்னும் இருக்காங்க... அது அடுத்த மாசம் சொல்றேன்...

இதுல அறிஞரைப் பார்த்தது உண்மை.. ஓவியாவை பார்த்தேனென்பது பேரு(க்கு)ண்மை..... ---- சொன்னா பொருந்த சொல்லனும் ஆதவா....

ஆங்...... மாட்டிக்கினியா............:sport009:

பரவாயில்லை கதை ஜூப்பராதான் கீதுப்பா.....:cool-smiley-008:

ஆதவா
11-05-2007, 04:15 PM
மனோஜ்... திரும்பி வரும்போது பார்த்துக் கொண்டோம்... அது சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்றுதான் சொல்லவில்லை... மற்றபடி ஒன்றூமில்லை...

ஆதவா
11-05-2007, 04:16 PM
ஷீ-நிசி... என்னங்க நீங்க... நம்ப மாட்டேங்கிறீங்க... நெசமாத்தான் சொல்றேன்....

அன்புரசிகன்
11-05-2007, 06:21 PM
என்னங்க மனோ! நான் போன இடம் இலண்டன்.. நீங்க இருக்கிற இடமே வேற,,, அதெப்படி உண்மைக் (:D) கதையில் நீங்க வரமுடியும்???? :D

புரிஞ்சிடுச்சு....

Gobalan
13-05-2007, 08:27 AM
கவிதை படைக்கும் தமிழில், லண்டன் பயணத்தை பற்றி ஒரு பதிப்பு. ஆகா, என்ன அழகாக வர்ணித்திருக்ரீர்கள் உங்கள் எண்ணங்களையும், பயணத்தை பற்றியும். நகைசுவை பாங்காக எழுதின விதம் பிரமாதம். உங்கள் லண்டன் பயணத்தை தொடருங்கள். நன்றி. கோபாலன்.

ஓவியா
13-05-2007, 11:10 AM
ஆதவா நன்றிகள் பல.

உன் கற்பனை அழகின் உச்சாம்.

வார்தைகளை ரசித்தேன். தமிழில் சும்மா புகுந்து விளையாடுகிறாய். நவரச கவியே உம்மைக் காண எனக்கு பொறாமையாகதான் இருக்குலே.

அப்ப நிஜமாக தங்கள் இங்கு வந்தால் நான் இப்படிதான் கவணிக்கனுமா!!!!!!

ஓவியா
13-05-2007, 11:14 AM
நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க.. முடியை பின்னாம அப்படியே தொங்கவிட்டு இருந்தாங்க. நல்ல நிறம். பச்சைக் கலர்ல சேலை கட்டி இருந்தாங்க,.. அந்த முகத்தைப் பார்க்கனுமே... அப்படி ஒரு பொலிவு.. ஏதோ வறுமையில அடிபட்டவன் கூட சந்தோசப்படவைக்கும் முகம்.. குரல் ரொம்ப மிருதுவா இருந்தது... (டேய் டேய் ரொம்ப கதை உடாதே!!) .. பின்னே.. எம்மாம் பெரியவங்க... நம்மள வரவேற்க நிற்கறாங்கன்னா சும்மாவா?

[B]தொடரும்..

அச்சோ ஆதவா, என்னாமா தட்டி உடுறீக, :1: :1: கவிஞர்னா இப்படியா போட்டுவுடுறது....இதை படித்து நன்றாக சிரித்தேன். :sport-smiley-002: :sport-smiley-002:

Mathu
19-05-2007, 09:06 AM
நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க.. முடியை பின்னாம அப்படியே தொங்கவிட்டு இருந்தாங்க. நல்ல நிறம். பச்சைக் கலர்ல சேலை கட்டி இருந்தாங்க,.. அந்த முகத்தைப் பார்க்கனுமே... அப்படி ஒரு பொலிவு.. ஏதோ வறுமையில அடிபட்டவன் கூட சந்தோசப்படவைக்கும் முகம்.. குரல் ரொம்ப மிருதுவா இருந்தது... (டேய் டேய் ரொம்ப கதை உடாதே!!) .. பின்னே.. எம்மாம் பெரியவங்க... நம்மள வரவேற்க நிற்கறாங்கன்னா சும்மாவா?

இப்படி ஒருவரை தான் நானும் எதிர் பார்க்கணுமா..... ஒவியா..!

பல்லவன இங்க வரவளைக்கலாம என்ற ஜோசனையில் மதன்

:icon_shok:

ஓவியா
19-05-2007, 05:06 PM
இப்படி ஒருவரை தான் நானும் எதிர் பார்க்கணுமா..... ஒவியா..!

பல்லவன இங்க வரவளைக்கலாம என்ற ஜோசனையில் மதன்

:icon_shok:

இல்ல மது, ஆதவா சொல்வதை அப்படியே திருப்பி போட்ட தோசையாக காண்க. ஹி ஹி ஹி

அமரன்
01-06-2007, 04:40 PM
ஆதவா நன்றிகள் பல.

உன் கற்பனை அழகின் உச்சாம்.

வார்தைகளை ரசித்தேன். தமிழில் சும்மா புகுந்து விளையாடுகிறாய். நவரச கவியே உம்மைக் காண எனக்கு பொறாமையாகதான் இருக்குலே.

அப்ப நிஜமாக தங்கள் இங்கு வந்தால் நான் இப்படிதான் கவணிக்கனுமா!!!!!!
ஐய்யய்யோ! உண்மையாக இருக்கும் என ஈடுபாட்டுடன் படித்து வந்த என்னை திடீர் தடுப்புப் போட்டு நிறுத்தி விட்டது உங்கள் இந்தப்பதிப்பு. அப்போ கதை இல்லை. காதில பூவா.

ஓவியா
01-06-2007, 10:31 PM
ஐய்யய்யோ! உண்மையாக இருக்கும் என ஈடுபாட்டுடன் படித்து வந்த என்னை திடீர் தடுப்புப் போட்டு நிறுத்தி விட்டது உங்கள் இந்தப்பதிப்பு. அப்போ கதை இல்லை. காதில பூவா.

அதே அதே சபாபதி!!!

http://www.portraitshoppe.com/Images/feb2006/Flower-pot-baby.jpg

அமர் காதுலே பூ.

அன்புரசிகன்
01-06-2007, 10:38 PM
காதுல மட்டுமல்ல... தலைமுழுவதும். (முகம் மட்டும் எஸ்கேப்)

அக்னி
01-06-2007, 10:38 PM
அமர் காதில மட்டுமா....

ஆனாலும் கதை உண்மையோ பொய்யோ, நல்லதொரு பதிவு...

ஆமாம்... மீதி எங்கே...???

ஓவியா
01-06-2007, 10:39 PM
காதுல மட்டுமல்ல... தலைமுழுவதும். (முகம் மட்டும் எஸ்கேப்)

ஹி ஹி ஹி

....................................................................................................................
விடியற்காலை 3 மணிக்கு மன்றத்திலே என்னாமேன் பண்ணுரீர்??

அன்புரசிகன்
01-06-2007, 10:43 PM
விடியற்காலை 3 மணிக்கு மன்றத்திலே என்னாமேன் பண்ணுரீர்??

உங்களுக்கு தெரியாததா? உதவி தான்.

ஓவியா
01-06-2007, 10:45 PM
உங்களுக்கு தெரியாததா? உதவி தான்.

ஓ அதுவா!!! நடகட்டும் நடகட்டும். :sport-smiley-014: :sport-smiley-014:

ஆதவா
02-06-2007, 01:21 AM
ஐய்யய்யோ! உண்மையாக இருக்கும் என ஈடுபாட்டுடன் படித்து வந்த என்னை திடீர் தடுப்புப் போட்டு நிறுத்தி விட்டது உங்கள் இந்தப்பதிப்பு. அப்போ கதை இல்லை. காதில பூவா.

கதை உண்மைதான்.. ஆனால் வர்ணனை கற்பனையாம்..... பென்ஸ் அண்ணா சொன்னாரே அதுதான் நிசம்.. அவங்க மனசு கோணக்கூடாதேன்னு கற்பனையா எடுத்துவுட்டேன்..:love-smiley-073:

அமரன்
02-06-2007, 08:16 AM
அதே அதே சபாபதி!!!

http://www.portraitshoppe.com/Images/feb2006/Flower-pot-baby.jpg

அமர் காதுலே பூ.
இல்லைங்க அமரே பூவாக இருக்கிறார். ஆதவா சுத்திய பூக்களை விட இது குறைவாக இருக்கு.
அன்புடன்

அன்புரசிகன்
02-06-2007, 08:42 AM
இல்லைங்க அமரே பூவாக இருக்கிறார். ஆதவா சுத்திய பூக்களை விட இது குறைவாக இருக்கு.
அன்புடன்

இது ரொம்ப ஓவருங்கோ....

ஆதவா
02-06-2007, 08:45 AM
இல்லைங்க அமரே பூவாக இருக்கிறார். ஆதவா சுத்திய பூக்களை விட இது குறைவாக இருக்கு.
அன்புடன்

உண்மைக் கதையைச் சொன்னால் ஏன் நம்ப மாட்டேன்கிறீர்கள்????? :violent-smiley-004: வேண்டுமானால் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டா போடட்டுமா? :icon_smokeing:

அமரன்
02-06-2007, 10:15 AM
உண்மைக் கதையைச் சொன்னால் ஏன் நம்ப மாட்டேன்கிறீர்கள்????? :violent-smiley-004: வேண்டுமானால் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டா போடட்டுமா? :icon_smokeing:
அது உங்க கிறுக்கல்கள் மாதிரி இருக்காதே.

அன்புரசிகன்
03-06-2007, 07:56 AM
வேண்டுமானால் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டா போடட்டுமா? :icon_smokeing:

அது உங்க கிறுக்கல்கள் மாதிரி இருக்காதே.

ஆதவா... உங்கள் திறமைக்கு ஒரு பலப்பரீட்ச்சை. விட்டிராதீங்க. தேவைப்பட்டால் ஓவியனிடம் டிப்ஸ் கேளுங்க. அப்போதான் ஏதாச்சும் பிரச்சனை வந்தால் ஓவியனை இழுத்து விட்டுவிட்டு நீங்கள் தப்பலாம்.

அமரன்
03-06-2007, 01:24 PM
ஆதவா... உங்கள் திறமைக்கு ஒரு பலப்பரீட்ச்சை. விட்டிராதீங்க. தேவைப்பட்டால் ஓவியனிடம் டிப்ஸ் கேளுங்க. அப்போதான் ஏதாச்சும் பிரச்சளை வந்தால் ஓவியனை இழுத்து விட்டுவிட்டு நீங்கள் தப்பலாம்.
அடடா கூட்டணி இரகசியத்தை இப்படிப் பப்ளிக்காகச் சொல்லாதீங்க அன்பு.

ஓவியா
05-06-2007, 08:24 PM
கதை உண்மைதான்.. ஆனால் வர்ணனை கற்பனையாம்..... பென்ஸ் அண்ணா சொன்னாரே அதுதான் நிசம்.. அவங்க மனசு கோணக்கூடாதேன்னு கற்பனையா எடுத்துவுட்டேன்..:love-smiley-073:

குழப்புகிறாய் :love-smiley-008:

இல்லைங்க அமரே பூவாக இருக்கிறார். ஆதவா சுத்திய பூக்களை விட இது குறைவாக இருக்கு.
அன்புடன்

ஆதவாகிட்ட எப்பொழுதும் நாம தோல்விதான்....கவனிக்க, ஆனால் அந்த படம் வறையும் திரியில் இல்லை

ஆதவா
06-06-2007, 02:07 AM
[quote=ஓவியா;217968]குழப்புகிறாய்

எங்க வேலையே அதுதானே!!

ஆதவாகிட்ட எப்பொழுதும் நாம தோல்விதான்....கவனிக்க, ஆனால் அந்த படம் வறையும் திரியில் இல்லை

எப்போதும் தோல்வி என்றால் அதற்கு விதிவிலக்கே இல்லை..... உண்மை வெளியே வருது பாருங்க.

ஓவியா
06-06-2007, 12:52 PM
உண்மைக் கதையைச் சொன்னால் ஏன் நம்ப மாட்டேன்கிறீர்கள்????? :violent-smiley-004: வேண்டுமானால் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டா போடட்டுமா? :icon_smokeing:

தில்லிருந்தா போடுலே!!!

அமரன்
06-06-2007, 04:35 PM
தில்லிருந்தா போடுலே!!!
யாருக்கு தில்லு இல்லை
நாளைக்கு கிறுக்கல்ஸ் போடுவாரு.

பென்ஸ்
06-06-2007, 05:14 PM
ஆதவா...
ஏன் இந்த வீண் முயற்ச்சி எல்லாம்....
பிரியா(free-ya or Priya) கொடுத்தா பினாயிலையும் குடிப்பியா....

டேய்...
ஓவியாவை நம்பி நீ லன்டன் போனியா.... ஐயோ ஐயோ...
தாமரை புத்திசாலி, எஸ்கேப் ஆயிட்டார்...

ஓவியா
06-06-2007, 05:46 PM
ஆதவா...
ஏன் இந்த வீண் முயற்ச்சி எல்லாம்....
பிரியா(free-ya or Priya) கொடுத்தா பினாயிலையும் குடிப்பியா....

டேய்...
ஓவியாவை நம்பி நீ லன்டன் போனியா.... ஐயோ ஐயோ...
தாமரை புத்திசாலி, எஸ்கேப் ஆயிட்டார்...

இதான் கதையா!!!!!

ஆதவா, பத்திரகாளி படம் வரஞ்சாரே அது அப்ப எழுத்த அவதாரம்தான்.

மயூ
14-06-2007, 05:36 AM
அதவா.. உண்மைதானே...
கூட்டம் சேர்ந்து மக்களைக் கவுக்கலியே??????

ஓவியன்
14-06-2007, 12:12 PM
அதவா.. உண்மைதானே...
கூட்டம் சேர்ந்து மக்களைக் கவுக்கலியே??????ஆனால் உம்மைக் கவுக்க அதெல்லாம் தேவையில்லையே!:natur008:

மயூ
15-06-2007, 06:28 AM
ஆனால் உம்மைக் கவுக்க அதெல்லாம் தேவையில்லையே!:natur008:
ஆமா எத்தன தடவை என்னைக் கவுத்திருப்பீர் என்று சொல்லும் பார்ப்பம்???????:spudnikbackflip:

ஓவியன்
17-06-2007, 05:44 AM
ஆமா எத்தன தடவை என்னைக் கவுத்திருப்பீர் என்று சொல்லும் பார்ப்பம்???????:spudnikbackflip:

எனக்கு என்ன வேற வேலை இல்லையா?

உம்மைக் கவுத்ததை:spudnikbackflip: எல்லாம் எண்ணிக் கொண்டிருக்க:natur008: ........

aren
14-07-2007, 06:31 PM
(விமான நிலையம் டூ அக்கா வூடு)
அந்த முகத்தைப் பார்க்கனுமே... அப்படி ஒரு பொலிவு.. ஏதோ வறுமையில அடிபட்டவன் கூட சந்தோசப்படவைக்கும் முகம்.. குரல் ரொம்ப மிருதுவா இருந்தது... (டேய் டேய் ரொம்ப கதை உடாதே!!)

தொடரும்..

ஹாய் இது பொய் தானே!! சுத்தமான பொய்.

அன்புரசிகன்
14-07-2007, 06:36 PM
ஹாய் இது பொய் தானே!! சுத்தமான பொய்.

அவர் என்ன பொய்க்கு லைவ்பாய் போட்டு கழுவினாரா?

ஆதவா
14-07-2007, 06:39 PM
ஹாய் இது பொய் தானே!! சுத்தமான பொய்.

நாங்கதான் கவிஞராச்சே!!

aren
14-07-2007, 06:40 PM
அவர் என்ன பொய்க்கு லைவ்பாய் போட்டு கழுவினாரா?

அவர்தான் ஜொல் விடராரே. லைவ்பாய் எல்லாம் அவர் தொடமாட்டார். லக்ஸ்தான். அதுதான் சினிமா நடிகைகளின் அழகு சோப்!!

aren
14-07-2007, 06:41 PM
நாங்கதான் கவிஞராச்சே!!

ஓவியாக்கா, பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட்!!!

ஆட்டோவை தயார்ப்படுத்துங்கள் ஓவியா!!!

விகடன்
26-07-2007, 03:53 AM
லண்டனிற்கு போகும் ஆகாய விமானத்திலேறி எங்கு போகிறீர்கள் என்று கேட்ட முதலாவது ஆசாமி நீராகத்தானிருப்பீர் ஆதவா.

இருக்கட்டும் இருக்கட்டும்

இது உண்மைஇயிலேயே நடந்ததா ஆதவா?
அதுதான் அக்கா திடீரென்று தன்னிடமிருந்த ஐ.காஸ் எல்லாவற்றையும் ஆளாளுக்கு பிரித்துக்கொடுத்திருக்கிறார் போலும்.

மிகவும் சுவாரஸ்யமான கதையாக(அநுபவமாக) போகிறது. அப்புறம் என்ன நடந்தது ஆதவா???

ஆதவா
26-07-2007, 07:20 PM

மேலும் படியுங்க>... இன்னும் எழுத நேரம் கிடைக்கவில்லை.. அதற்குள் போய்வந்த அனுபவங்கள் மறந்துவிடும்போல.... நிறைய சுவாரசியங்கள் இருக்கின்றன.. மெல்ல எழுதுகிறேன்... (ஓவியாக்கா திட்டாமல் இருக்க..)