PDA

View Full Version : மனம்



மனோஜ்
10-05-2007, 09:00 AM
மனம்
பிறக்கின்ற பருவத்தில் தவழ்திடும்
வளர்கின்ற பருவத்தில் மகிழ்திடும்
பள்ளி செல்லும் பருவத்தில் ஏங்கிடும்
உயர்கல்வியில் உருகிடும்.
உறவுகளில் மகிழ்ந்திடும்

மனம்
மாறிடும் பருவத்தில் மயங்கிடும்
மதிப்பிடும் பருத்தில் குழம்பிடும்
வேலை பருவத்தில் விரும்பிடும்
திருமணத்தில் இணைந்திடும்
குடும்பத்தில் கலந்திடும்

மனம்
திருமகன் பிறப்பினில் குதுகலித்திடும்
திருமகள் பிறப்பினில் ஆனந்தப்படும்
பிள்ளைகள் பருவத்தில் முதிர்ந்திடும்
வீட்டினில் விசும்பிடும்
உலகினில் உழைத்திடும்

மனம்
கடமையை செய்திட உருகிடும்
கட்டுக்குள் இருத்திட நினைத்திடும்
கவலைகள் போக்கிட விரைந்திடும்
பலனை நோக்கிடும்
பலவீனம் அடைந்திடும்

மனம்
உழைப்பில் ஓய்வு பெற்றிடும்
உள்ளம் குழுந்தையாய் மாறிடும்
உலகத்தை மறந்திட நினைத்திடும்
உதிரிந்திடும் மனங்கள்
இறைவனில் இனைந்திடும்

மனோஜ்
12-05-2007, 10:22 AM
மனம்
மன்றத்தில் ஒரு மனதாய்
மகிழ்திட பதிவுகள் தந்து
மாறாமல் தொடர்ந்து வந்து
மகிழிகிறோம் பதிகிறோம்
அன்பையும் பன்பையும்

அமரன்
12-05-2007, 10:33 AM
மனம்

உண்மைதான் மனோஜ். நாம் குழந்தையாக இருக்கும்போது மனமும் ஒரு குழந்தையாக இருக்கின்றது. பிறந்ததும் தவழும் குழந்தை நடப்போரைப்பார்த்து ஏங்கும். அதுவே நடக்க ஆரம்பிக்கும் போது நானும் நடக்கின்றோம் என மகிழும். உறவுகளில் மகிழும் அதே வேளை புதிய உறவுகளுக்காக் ஏங்கிடும். அதன் எக்கம் கண்களில் தெரியும்.

அந்த ஏக்கத்தில் பருவ காலத்தில் காணும் எதிர்ப்பாலில் மதிமயங்கி பலகுழப்பங்களைச் சந்திக்கும். நல்லது எது கெட்டது எது என்ற குழப்பத்திலும் சரியா தவறா என்ற கலக்கத்திலும் இருக்கும் மனது வேலையைத்தேடி அதில் நிலைத்ததும் சிந்திச்சுச் செயல்படத்தொடங்கிவிடும். நம்பிக்கை இளி பரவ ஆரம்பித்து கல்யாணத்தில் கலந்து வாழ்க்கையை ஆரம்பித்துவிடும்.

ஆம் கல்யாணத்தின் பின்னரே செல்வத்துள் சிறந்த செல்வமாம குழந்தைச்செல்வம் கிடைக்கின்றது. அந்தச்செல்வத்தில் கட்டுப்பாட்டை வலியுறுத்தி திருமகன் திருமகள் என இருமையாகக்கூறியுள்ள மனோஜ் மனம் முதிர்கின்றது என்கின்றார். உண்மைதான் குழந்தைகள் கிடைத்ததும் மனிதன் முழுமையடைகின்றான். மனம் முதிர்ச்சி அடைகின்றது. அவ்வாறு முதிர்ச்சி அடைந்த மனம்கூட சில நேரங்களில் கலங்கக்கூடும். வாழ்வின் நிஜத்தை சுட்டியுள்ளார்.

வாழ்த்துகள் மனோஜ்.

மனோஜ்
12-05-2007, 01:53 PM
மிக்க நன்றி அமரன்
தங்களின் விமர்சனத்தில் மகிழ்ந்தேன்
இந்த கவிதை நமது வாழ்க்கையில் மனம் எவ்வறு செயல் படுகிறது என்பதை விளக்கி உள்ளேன் அதை அழகாய் வியக்கியதற்கு நன்றி

mravikumaar
12-05-2007, 02:15 PM
நாம் பிறந்தது முதல் இறக்கும்வரை
மனம் எப்படியெல்லாம் நினைக்கும் என்பதை அழகாக கூறியுள்ளீர்
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவிக்குமார்

ஷீ-நிசி
12-05-2007, 03:59 PM
மனம் என்ன நினைக்கும் என்று உங்கள் மனம் நினைத்ததா மனோஜ்...


மனம்
திருமகன் பிறப்பினில் குதுகலித்திடும்
திருமகள் பிறப்பினில் ஆனந்தப்படும்

இந்த வரிகளின் அமைப்பு அழகாக இருக்கிறது மனோஜ்... நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்!

மனோஜ்
12-05-2007, 07:20 PM
நாம் பிறந்தது முதல் இறக்கும்வரை
மனம் எப்படியெல்லாம் நினைக்கும் என்பதை அழகாக கூறியுள்ளீர்
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவிக்குமார்
மிக்க நன்றி ரவி தங்களின் கருத்துக்கு

ஓவியா
12-05-2007, 07:32 PM
மனம் ஓரு குரங்கு. தேவைக்கேற்ப தத்தித்தாவும். ஒவ்வொரு பருவத்திலும் அதன் சூழ்நிலையிலும் தாவிக்கொண்டே இருக்கும்.

மனோஜின் கவிதை அந்த தத்தித்தாவும் பருவதில் என்னென்ன ஆசைகள் தேவைகள், கடமைகள் நம்முல் புத்தைந்துள்ளன என்று மிகவும் அழகாக காட்டியுள்ளன.

நல்ல கவிதை, கவிதை உலகில் தவழ்ந்துதான் நடக்க முடியும் என்பதனை நினைவூட்டும் வகையில் அமைந்த கவிதை.

இப்படியே மூயன்று ஒரு நாள் ஆதவா, பிச்சி, ஷீ போல் சிறந்த கவிஞராக வாய்ப்பு பிரகாசமாக இருகின்றது.

வாழ்துக்களுடன் ஆசிகளும். :icon_08:

ஆதவா
12-05-2007, 07:49 PM
அடடா! இந்த பதிவை தவற விட்டுவிட்டேன்... நிறைய இடும் கள் இருக்கே!! என்ன கவிஞரே!! எம்மை பீட் செய்ய ஓவியனால் உருவாக்கப்பட்ட ஓவியமா நீங்கள் ? ஹி ஹி... ஆதவனா கொக்கா... (சும்மா)

பட்டியல் இட்டும் சொல்லும் திறமைகள் எல்லாருக்கும் அமைந்துவிடாது.. உங்க்ளுக்கு அது அழகாக அமைந்துவிடுகிறது... கவிச்சமரில் உங்கள் கவிதைகள் ரசித்தேன் மனோ.... விமர்சனமில்லை என்று எழுதாமல் விடாதீர்கள்.. அதில் உள்ளது கற்கவேண்டிய பல விஷயங்கள்.

இத்தனைநாள் ஏன் கவிஞர் என்ற திரையோடு மூடியிருந்தீர்? திரை விலக வேண்டியதுதானே!!! சரி சரி... இப்போதுதான் விலகியாச்சே!!

உங்களுக்கு என் பணமும் கூட.. :D :D

ஆதவா
12-05-2007, 07:52 PM
இப்படியே மூயன்று ஒரு நாள் ஆதவா, பிச்சி, ஷீ போல் சிறந்த கவிஞராக வாய்ப்பு பிரகாசமாக இருகின்றது.

வாழ்துக்களுடன் ஆசிகளும். :icon_08:

இதை யாருங்க சொன்னாங்க? ஆதவன் ஒரு சாதா கவி.. பிச்சியையும் ஷீநிசியையும் சொல்லுங்க...இதோ நம்ம மனோஜ் உருவாகிட்டு இருக்கார்... இன்னொன்னு சொல்லட்டுங்களா? இந்த அளவுக்கு அடுக்கி எனக்கு எழுதத் தெரியாது... பின்ன எப்படி நான் சிறந்த கவிஞன் ஆகமுடியும்?
அந்த அளவு ஞானம் நமக்கில்லீங்க.... முயலுகிறேன்....

நன்றி

ஓவியா
12-05-2007, 08:05 PM
இப்படி ஒரு பதிவ போட்டு இல்லனு சொன்னா ஊர் நம்புமா என்ன!!!

சரிதான், உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பதான்..

மனோஜ்
12-05-2007, 08:17 PM
நன்றி ஓவியக்கா உங்கள் கருத்திற்கு உண்மையில் இந்த கவிதை எனக்கு மிகவும பிடித்து என் என்றால் என்னை அறியாமலே அழகாக எழுதியது முக்கிய காரணம் மன்றம் மிக்க நன்றி

மனோஜ்
13-05-2007, 09:29 AM
ஆதவரே மிக்க நன்றி நீர் எங்கு இருக்கிறீர் நான் எங்கு எதொ இரண்டு வரி எழுதினால நான மிக நல்ல கவியா இல்லவே இல்லை தாங்கள பொன்று ஒரு சிறு கவிதை குட என்னால எழுத முடியாது இது 100 க்கு 100 உண்மை தங்களின் கருத்தில் தட்டி கொடுத்து வளர்ந்தவன் நான் உங்கள் நிகர் ஷீ பிச்சி சரியானவர்கள் நான் அந்த வரிசையில் கடைசில கூட நிர்கமுடியாது

leomohan
17-05-2007, 07:38 PM
மனம்
கடமையை செய்திட உருகிடும்
கட்டுக்குள் இருத்திட நினைத்திடும்
கவலைகள் போக்கிட விரைந்திடும்
பலனை நோக்கிடும்
பலவீனம் அடைந்திடும்



அற்புதமான வரிகள். வாழ்த்துகள் மனோஜ்.