PDA

View Full Version : ஆதவருக்கு ஒரு கவிதை

தாமரை
10-05-2007, 05:30 AM
கவிதை என்பது இயல்-ஆதவரே
கண்மூடி நடக்க இயலாதவரே
கவிக்கு அழகு இசை-ஆதவரே
கேடுகள் செய்ய இசையாதவரே

ஆடலும் பாடலும் கலை-ஆதவரே
ஆசைகள் வந்து கலையாதவரே
ஊடல்கள் கூடல்கள் இல்-ஆதவரே
ஊக்கத்தில் குறைவு இல்லாதவரே

உணர்வுகள் இல்லாதது கல்-ஆதவரே
உண்மைக்கு ஒவ்வாதது கல்லாதவரே
மணக்கும் மல்லிகை மலர்-ஆதவரே
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே

மொழிகளின் தொடக்கம் சொல்-ஆதவரே
மெய்யினை அன்றி சொல்லாதவரே
அழியும் உயிர்முதல் செல்-ஆதவரே
அல்லது பக்கம் செல்லாதவரே

ஆமையிடம் தோற்றது முயல்-ஆதவரே
அடுக்காய் தோற்பர் முயலாதவரே
பூமியை காத்தல்நம் பணி-ஆதவரே
புல்லர்கள் யார்க்கும் பணியாதவரே

அணிவதில் உயர்ந்தது உடை-ஆதவரே
அன்பன்றி எதற்கும் உடையாதவரே
மனிதம் உயர்ந்தது அறிவில்-ஆதவரே
மனிதம் மறந்தோர் அறிவில்லாதவரே

praveen
10-05-2007, 05:43 AM
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே என்று போட்டு ஆதவனுக்கு புகழ்ச்சி மாலையா?

உண்மையில் மேலே கூறப்பட்டவைகள் அனைத்தும் நிஜம். ஆதவனுக்கு பொருந்தும்.

நண்பர் தாமரை செல்வனுக்கு பாராட்டுக்கள். ஆதவன் விரைவில் பதில் பதிப்பார்.

ஜோய்ஸ்
10-05-2007, 05:52 AM
ஆதவவுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?
நியாயமாகவே தகும் என்பது என் கணிப்பு.

ஷீ-நிசி
10-05-2007, 05:58 AM
செல்வன் இதைவிட சிறப்பாக ஆதவாவிற்கு ஒரு கவி இயற்றமுடியும் என்று தோன்றவில்லை.. பழகியவரையில் சொல்கிறேன்.. இக்கவிதையின் எல்லா இடங்களிலும் கேள்வியின்றி பொருந்தக்கூடியவர் ஆதவா...

அருமை செல்வன்.... வாழ்த்துக்கள் ஆதவா....

மதி
10-05-2007, 06:17 AM
ஆதவருக்கு ஒரு வாழ்த்துக்கவிதை.
அற்புதம் செல்வரே...!
இதிலுள்ள அனைத்து விடயங்களும் ஆதவருக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளன... வாழ்த்துக்கள் ஆதவா....

ஆதவா
10-05-2007, 06:37 AM
செல்வன் அண்ணாவுக்கு..

முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வரிகள் கண்டு
வியப்படைகிறேன். தமிழ் உங்களிடம் எப்படி சரளமாக விளையாடுகிறது!!!
ஒரு வார்த்தை அதற்கு இருவேறு அர்த்தங்கள்... அதிலே பல
ஆலோசனைகளும் அறிவுரைகளும் புகழ்ச்சிகளும்..... உடன் எதுகைகள்
இருப்பது ஆச்சரியம்... என்னே அறிவு.!!!

ஊடல் கூடல் இல் - (வீட்டில்) இந்த வரியை ரசித்தேன்... அதற்குக் கீழாக
இல்லாதவரே என்று வந்திருக்கும் காரணத்தால்.

ஆனால் இது தனிப்பட்டு எனக்கு எழுதவில்லை என்பது போலில்லாமல் பொதுப்படையாக எழுதப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து.... இருந்தாலும் ஆதவருக்கு ஒரு கவிதை என்ற தலைப்பே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அதனாலேயே இந்த கவிதையை நான் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறேன்... அதிலும் உங்கள் போன்றோர் வாயிலிருந்து வந்தமைக்கும்.....

நன்றி
தம்பி ஆதவன்.

வாசகி
10-05-2007, 06:54 AM
என்னே அதிசயம்!
உலகமுதல்வன் ஆதவனின் பெயர்கொண்ட இவருக்கு தமிழ்மன்ற முதல்வன் இராசகுமாரனிடத்திலிருந்து நிர்வாகக் குழுவில் புதியவரவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9191)என்ற அறிவிப்புத்திரியில் நவரசக்கவிஞன் என்றபட்டம். இங்கே இன்னொரு சக தோழனிடத்திலிருந்து வாழ்த்துக்கவி. புதியவன் எனக்கு இவரைபற்றி அதிகம் தெரியாது. ஆனால் நான் சுட்டிய இரண்டுமே இவரை எனக்கு அடையாளம்காட்டி விட்டது.

தாமரை
10-05-2007, 07:07 AM
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே என்று போட்டு ஆதவனுக்கு புகழ்ச்சி மாலையா?

உண்மையில் மேலே கூறப்பட்டவைகள் அனைத்தும் நிஜம். ஆதவனுக்கு பொருந்தும்.

நண்பர் தாமரை செல்வனுக்கு பாராட்டுக்கள். ஆதவன் விரைவில் பதில் பதிப்பார்.

அவர் கவிதைக்கு ஒரு சன்மானமும் தரவில்லை என்பதிலேயே மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே என்பது உண்மை என்பது புரியவில்லையா?

மனோஜ்
10-05-2007, 07:14 AM
கவிதையில் மகிழவைத்திர் செல்வன் அவர்களே
கருவினில் ஆதவன் மகிழவே
மன்றத்தில் உமது பணிகள் தொடரவே
மகிழ்ந்து வாழ்த்துகள் செல்வரே

தாமரை
10-05-2007, 07:14 AM
செல்வன் அண்ணாவுக்கு..

முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வரிகள் கண்டு
வியப்படைகிறேன். தமிழ் உங்களிடம் எப்படி சரளமாக விளையாடுகிறது!!!
ஒரு வார்த்தை அதற்கு இருவேறு அர்த்தங்கள்... அதிலே பல
ஆலோசனைகளும் அறிவுரைகளும் புகழ்ச்சிகளும்..... உடன் எதுகைகள்
இருப்பது ஆச்சரியம்... என்னே அறிவு.!!!

ஊடல் கூடல் இல் - (வீட்டில்) இந்த வரியை ரசித்தேன்... அதற்குக் கீழாக
இல்லாதவரே என்று வந்திருக்கும் காரணத்தால்.

ஆனால் இது தனிப்பட்டு எனக்கு எழுதவில்லை என்பது போலில்லாமல் பொதுப்படையாக எழுதப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து.... இருந்தாலும் ஆதவருக்கு ஒரு கவிதை என்ற தலைப்பே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அதனாலேயே இந்த கவிதையை நான் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறேன்... அதிலும் உங்கள் போன்றோர் வாயிலிருந்து வந்தமைக்கும்.....

நன்றி
தம்பி ஆதவன்.

இந்தக் கவிதைத் திரி எரிய பொறியாய் இருந்தது...

ஞானப்பிரகாசம் = ஞானம் + பிரகாசம்
ஞானம் = அறிவு
பிரகாசம் = சூரியன்
சூரியன் = ஆதவன்
ஞானம் + பிரகாசம் = அறிவு + ஆதவன் = அறிவில் ஆதவன் = அறிவில்லாதவன்..

ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன்.. இன்னைக்குத் தான் முடிந்தது

ஆதவா
10-05-2007, 07:19 AM

அறிவு + ஆதவன் = அறிவில் ஆதவன் (அறிவிலே சூரியனுக்கு நிகர்)
அறிவில் ஆதவன் = அறிவில்லாதவன் ??? இங்கே இடிக்குதே!!!

தாமரை
10-05-2007, 07:22 AM
இருட்டிலேயும் பார்க்க முடியாது ஒண்ணும் தெரியாது
ஓவர் வெளிச்சத்திலும் பார்க்க முடியாது..கண்ணு கூசும்

அளவாய் இருந்தால் தான் இன்பம்.
அதனால் தான்

அறிவு + ஆதவன் = அறிவில் ஆதவன் (அறிவிலே சூரியனுக்கு நிகர்)
அறிவில் ஆதவன் = அறிவில்லாதவன் ???

ஆதவா
10-05-2007, 07:28 AM
ஓ நீங்க அப்படி வரீங்களா?

நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லையே! அனுபவிக்கத்தானே வேண்டும்... காற்று கண்ணுக்கே தெரிவதில்லை அதற்காக அதையும் அப்படி சொல்லமுடியாதே! ஆதவனுக்கு அறிவிருந்து நாம் பார்ப்பது போலிருந்தால் நம்மாட்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.... அங்கேயும் குடித்தனம் செய்யமுடியுமா என்று யோசிப்பார்கள்.

அந்தவகையில் அறிவில்லாதவன் ஆதவன் என்ற வார்த்தையை மறுக்கிறேன்.

தாமரை
10-05-2007, 07:32 AM

அங்கேயும் அப்படித்தான் ஆதவா..
ஆதவன் இல்லாவிட்டால் குளிர்..தாங்க முடியாது
ஓவராய் சுள்ளென அடித்தாலோ தாங்க முடியாது
சூரியன் அறிவில்லாத ஒன்றா என்று கணிப்பது இயலாத காரியம்..
எந்தப் பத்தினி அங்கே கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறாளோ
யாருக்குத் தெரியும்???:ohmy:

gragavan
10-05-2007, 09:10 AM
மிகவும் அருமையான பாராட்டுக் கவிதை. சொல்விளையாட்டை மிகவும் ரசித்தேன். அனைவரையும் கவிதையால் வெல் ஆதவர் இனியும் வெல்லாதவர் உண்டோ! வாழ்த்துகள் ஆதவரே. தாமரையின் பாராட்டுக் கவிதை மிகப் பொருத்தம். கவிதைக்கு அணி செய்ய கவிதையே வந்தது.

தாமரை
10-05-2007, 09:18 AM

பாராட்டுக் கவிதையா?? நான் கன்னா பின்னான்னு திட்டி அல்லவா இருக்கிறேன்

இயலாதவரே
இசையாதவரே
கலையாதவரே
இல்லாதவரே
கல்லாதவரே
மலராதவரே
சொல்லாதவரே
செல்லாதவரே
முயலாதவரே
பணியாதவரே
உடையாதவரே
அறிவில்லாதவரே

இதெல்லாம் பாராட்டுவதா?.. பாரு என கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதா??

gragavan
10-05-2007, 09:42 AM
பாராட்டுக் கவிதையா?? நான் கன்னா பின்னான்னு திட்டி அல்லவா இருக்கிறேன்

இயலாதவரே
இசையாதவரே
கலையாதவரே
இல்லாதவரே
கல்லாதவரே
மலராதவரே
சொல்லாதவரே
செல்லாதவரே
முயலாதவரே
பணியாதவரே
உடையாதவரே
அறிவில்லாதவரே

இதெல்லாம் பாராட்டுவதா?.. பாரு என கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதா??
வஞ்சப்புகழ்ச்சி என்றாலே தாமரை என்று ஆகிவிட்ட நிலையில் பாராட்டியே நீர் பார் ஆட்டுவது தெரியாமலா போகும்!

ஆதவா
10-05-2007, 10:00 AM
அட! அருமையான கேள்வி பதில் இருவரிடமிருந்தும்.....

மன்மதன்
10-05-2007, 02:34 PM
மிகவும் அருமையான பாராட்டுக் கவிதை. சொல்விளையாட்டை மிகவும் ரசித்தேன். அனைவரையும் கவிதையால் வெல் ஆதவர் இனியும் வெல்லாதவர் உண்டோ! வாழ்த்துகள் ஆதவரே. தாமரையின் பாராட்டுக் கவிதை மிகப் பொருத்தம். கவிதைக்கு அணி செய்ய கவிதையே வந்தது.

நான் சொல்ல வந்ததை முன்கூட்டிய ராகவன் சொல்லிட்டார்..

நல்ல கவிதை.. ரசிக்க வைத்த கவிதை.. ரசிகனின் கவிதை..

தாமரை
11-05-2007, 01:29 AM
வஞ்சப்புகழ்ச்சி என்றாலே தாமரை என்று ஆகிவிட்ட நிலையில் பாராட்டியே நீர் பார் ஆட்டுவது தெரியாமலா போகும்!
வஞ்சப் புகழ்ச்சி மஞ்சப் புகழ்ச்சி கஞ்சப் புகழ்ச்சி என புதுப் புது அணிகளை உருவாக்கினோமே! நினைவு இருக்கிறதா?

leomohan
11-05-2007, 04:24 AM
செல்வனின் பாராட்டு கவிதை அற்புதம்.

இரண்டு சொல்லின் செல்வர்களின் வார்த்தை விளையாட்டு ரசிக்கும்படி இருந்தது. எங்கே சொல்லின் செல்வர் இளசு missing in action?

செல்வன் பின்னூட்டம் இட்டாலே அந்த திரி அவசியம் படிக்கவேண்டும். இதில் அவர் திரியே துவக்கியுள்ளார் என்றால் ஆதவனுக்கு இது கிடைத்து கௌரவம் இது.

அனைவரின் இதயத்தையும் வென்ற ஆதவனுக்கு வாழ்த்துகள்.

அறிஞர்
11-05-2007, 04:28 AM
வாவ் சிறந்த கவிதை.....

நல்ல சொல் விளையாட்டு......

தொடருங்கள்.. செல்வன்.....

சன்மானம் 200 அளிக்கப்படுகிறது.

அல்லிராணி
14-05-2007, 04:43 AM
குட்டு மோதிரக் கையால்! ஆகா ஆதவரே!! (கையாலாகாதவரே???)

poo
14-05-2007, 05:38 AM
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கிறேன்...

ஒவ்வொரு வரியிலும் ஆதவன் நிற்கிறார்.. அவருக்குப் பின்னே செல்வன்.. வெற்றியில் வியக்கிறேன் நண்பரே...

உங்கள் திறமையில் விக்கித்து நிற்கிறேன்.. இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன்...

தாமரை
14-05-2007, 05:41 AM
பொன்னொளி மின்னும்
ஆதவன்
வெறும் நிழலாய் நான்
என் அவதாரில்

ஓவியன்
14-05-2007, 05:49 AM
செல்வன் அண்ணா!

என்னதான் வைரம் வரமென்றாலும்
அது மணி மகுடத்தில் ஏறுவதே அதற்கு சிறப்பு.

எங்கள் வைர ஆதவரை
தன் கவி வரிகளால் மணி மகுடத்தில் ஏற்றிய செல்வர் வாழ்க.

அல்லிராணி
14-05-2007, 06:24 AM
அவர் சொன்னது அவரது அவதார் - ஆதவர் இல்லை
நெடில் இடம் மாறி விளையாடுது பாருங்கள்.

ஓவியன்
14-05-2007, 06:28 AM
அவர் சொன்னது அவரது அவதார் - ஆதவர் இல்லை
நெடில் இடம் மாறி விளையாடுது பாருங்கள்.

ஆமாம் சொற்களில் விளையாடுவதே எம் செல்வரின் பொழுது போக்கு.
அது அவருக்கு கைவந்த கலையும் கூட

ஓவியா
01-09-2007, 01:06 AM
கவிதை, பின்னூட்டம் அனைத்தும் அட்டகாசம்.

தூள் திரி. :4_1_8:

இதுவரை இக்கவிதையை படிக்காத மக்களே, வாருங்கள்.
அனைத்தையும் படித்து பின் எங்கள் ஆதவா புகழை பாடுங்கள்.

lolluvathiyar
04-09-2007, 12:50 PM
அற்புதமான கவிதை. ஒரே வாக்கியத்தை பிரிக்காமல் இருக்கும் போது வரும் அர்த்தமும் பிரித்த பின் வரும் நேர் மாரான அர்த்தமும் அற்புதம். அதுவும் அனைத்துமே ஆதாவன என்று முடித்த விதம் நல்ல அர்த்தமும் கொடுத்து நம் ஆதவரை ஒரு கிறங்கு கிறக்கி விட்டது.
ஒரு சின்ன சந்தேகம் கவிதையில் நீங்கள் தந்த நிறத்தையும் ஆதவர் என்று முடிவதை பார்த்தால் உதயசூரியனை சின்னமாய் கொண்ட திமுக கட்சியின் கொடி கலர் போலவே தெரிகிறது.

தாமரை
09-11-2007, 12:23 PM

கலர்க் கொடி
மலர்க் கொடி
கோடி காட்டினாலும்
கோடியைக் காட்டினாலும்

எழுமுன் கருப்பு
எழும்பொழுது சிவப்பு
என வண்ண வேடிக்கை
செயற்கையல்ல
ஆதவனின் இயற்கை..

பூமகள்
09-11-2007, 03:31 PM
ஆஹா...!! இத்தனை நாள் இந்த கவிதையை படிக்கத்தவறிவிட்டேனே..!!
அழகுக் கவி..!! தமிழ் வார்த்தைகள் தாமரை அண்ணாவிடன் கைப்பூங்காவில் தான் விளையாடும் போல தெரிகிறது..!

மிகவும் ரசித்தேன்..!!
பாராட்டுகள் கவிதை வடித்த தாமரை அண்ணாவுக்கும் ஆதவாவுக்கும்...!!

இ-பணம் 1000 பரிசு கவிதைக்காக..!!

மீனாகுமார்
09-11-2007, 03:44 PM
அட அருமையான கவிதை.. சபாஷ்..

அறிவில்லாதவன் என்பதற்கு இதுதான் அர்த்தமோ ? என்னை சிலர் இப்படி சொல்லும் போது என்னைத் திட்டுகிறார்கள் என்றல்லவோ எண்ணிக் கொண்டிருந்தேன்.

meera
17-11-2007, 06:52 AM
அட நாந்தான்பா லேட்டா வந்துட்டேன் இந்த இடத்துக்கு.
அண்ணா சூப்பரோ சூப்பர். வேற என்ன சொல்ல???
ஆதவா ட்ரீட் எங்க வச்சுக்கலாம்.????

சூரியன்
17-11-2007, 10:38 AM
நல்லதொரு கவிதை.

தாமரை
20-08-2010, 12:45 PM
கவிதை என்பது இயல்-ஆதவரே
கண்மூடி நடக்க இயலாதவரே
கவிக்கு அழகு இசை-ஆதவரே
கேடுகள் செய்ய இசையாதவரே

ஆடலும் பாடலும் கலை-ஆதவரே
ஆசைகள் வந்து கலையாதவரே
ஊடல்கள் கூடல்கள் இல்-ஆதவரே
ஊக்கத்தில் குறைவு இல்லாதவரே

உணர்வுகள் இல்லாதது கல்-ஆதவரே
உண்மைக்கு ஒவ்வாதது கல்லாதவரே
மணக்கும் மல்லிகை மலர்-ஆதவரே
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே

மொழிகளின் தொடக்கம் சொல்-ஆதவரே
மெய்யினை அன்றி சொல்லாதவரே
அழியும் உயிர்முதல் செல்-ஆதவரே
அல்லது பக்கம் செல்லாதவரே

ஆமையிடம் தோற்றது முயல்-ஆதவரே
அடுக்காய் தோற்பர் முயலாதவரே
பூமியை காத்தல்நம் பணி-ஆதவரே
புல்லர்கள் யார்க்கும் பணியாதவரே

அணிவதில் உயர்ந்தது உடை-ஆதவரே
அன்பன்றி எதற்கும் உடையாதவரே
மனிதம் உயர்ந்தது அறிவில்-ஆதவரே
மனிதம் மறந்தோர் அறிவில்லாதவரே

இந்தக் கவிதையை ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதினேன். ஆதவனைப் பாராட்டி இருக்கேன் என்று சிலரும்.. திட்டி இருக்கேன் என்று சிலரும் எடுத்துகிட்டு இருப்பாங்க. ஆதவன் இது அவனைப் பற்றிய கவிதை இல்லைன்னு தெரிஞ்சுகிட்டான்.. ஆனால் இந்தக் கவிதை எதைப் பற்றியது?

கவிதை என்பது இயல்-ஆதவரே
கண்மூடி நடக்க இயலாதவரே

கவிதை என்பது இலக்கியமாக இருக்க வேண்டும் ஆதவனே.. கண்ணை மூடிக் கொண்டு எதையெதையோ எழுதினால். .அவர்கள் காவியம் படைக்க இயலாதவர்கள் ஆவர்கள்..

கவிக்கு அழகு இசை-ஆதவரே
கேடுகள் செய்ய இசையாதவரே

அப்படிப் பட்ட கவிதையின் அழகு இசையாகும். இசையோடு கூடிய கவிதைகள் நிலைக்கும். தளைகளும் தொடையும் பொருந்தி வருமாயின் கவிதையில் இசை வெளிப்படும். அப்படி தளை - தொடைகளில் தவ்றுகள் செய்பவர்கள் ஒத்துவரமாட்டார்கள்..

ஆடலும் பாடலும் கலை-ஆதவரே
ஆசைகள் வந்து கலையாதவரே

இசை நிறைந்த கவி பாடலாகும். பாடல் வந்தால் உடன் ஆடல் வரும். இவைகள் தான் கலை எனப்படும். அப்படிப் பட்ட கலையைக் கொடுப்பவர்கள் அது மாதிரி இது மாதிரி என ஆசைகளினால் பாடல்களின் இசையை தொடுப்பை கலைக்க மாட்டார்கள்...

ஊடல்கள் கூடல்கள் இல்-ஆதவரே
ஊக்கத்தில் குறைவு இல்லாதவரே

அவர்களுக்கு உணர்ச்சிகள் மிக அதிகம். அதனால் சில சமயம் கொஞ்சுவார்கள். சில சமயம் கோபமாய் எழுதுவார்கள்.. அவர்கள் உணர்ச்சிகளின் இருப்பிடம். ஆனால் எழுதுகின்ற ஊக்கத்தில் கொஞ்சமும் குறைவு இல்லாமல் இருப்பார்கள்..

உணர்வுகள் இல்லாதது கல்-ஆதவரே
உண்மைக்கு ஒவ்வாதது கல்லாதவரே

ஏனென்றால் உணர்ச்சி இல்லாதவை கல்... இவர்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மனிதர்கள்.

உண்மைக்கு ஒவ்வாதது என்பது பொய் அல்ல. சிறு சிறு பொய்கள் இன்பம் கொடுக்கலாம். ஆனால் உண்மைக்கு ஊறு விளைவுக்கும் புளுகுகளுக்கும் இந்தப் பொய்களுக்கும் வித்தியாசம் உண்டு. நல்ல விசயத்திற்கும், இன்பத்திற்கும், சுவைக்கும் கவிஞர்கள் பொய் சொல்லலாம். ஆனால் தீய விளைவுகளை உண்டாக்கும் பொய்யை இந்த உண்மைக் கவிஞர்கள் சொல்ல மாட்டார்கள்.

மணக்கும் மல்லிகை மலர்-ஆதவரே
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே

அவர்கள் மணம் பரப்பும் மல்லிகை போன்ற புகழ் மணம் வீசுபவர்கள். ஆனால் வஞ்சனையான போலிப் புகழ்ச்சியை அடையாளம் கொள்வார்கள்.

மொழிகளின் தொடக்கம் சொல்-ஆதவரே
மெய்யினை அன்றி சொல்லாதவரே

சொல் பிறந்தவுடன் மொழியும் பிறந்து விடுகிறது. அந்தச் சொல்லிற்கு அர்த்தம் உள்ளடங்கும் போது.. அந்தச் சொல் மெய்ச்சொல் ஆகிறது. அப்படி அர்த்தம் பொதிந்த உண்மைச் சொற்களை மட்டுமே அவர்கள் சொல்வார்கள். அர்த்தமற்ற லோலாக்கு டோல் டப்பிமான்னு என்றெல்லாம் எழுத மாட்டார்கள்.

அழியும் உயிர்முதல் செல்-ஆதவரே
அல்லது பக்கம் செல்லாதவரே

அழிகின்ற உயிர் இருக்கிறதே அதுதான் அவர்களுக்குப் போகும். அவரது புகழ் நீண்ட நாளைக்கு வாழ்ந்து பிறகே போகும். அப்படி புகழ் தரக் கூடிய காரியம் இல்லாவிட்டால் உண்மைக் கலைஞர்கள் அதன் பக்கம் செல்ல மாட்டார்கள்.

ஆமையிடம் தோற்றது முயல்-ஆதவரே
அடுக்காய் தோற்பர் முயலாதவரே

முயல் ஆமையிடம் தோற்றதற்கு காரணம்.. முயலாமை.. இப்படி மேலே சொல்லப்பட்ட பல தகுதிகள் இருந்தாலும் பல நல்ல கலைஞர்கள் தோற்கின்றனர். ஓரிரு தோல்வி சகஜம்தான். ஆனால் முயலாமல் இருந்தால் தொடர்ச்சியாய் தோல்விகள் வரும்.

பூமியை காத்தல்நம் பணி-ஆதவரே
புல்லர்கள் யார்க்கும் பணியாதவரே

இக்கலைஞர்களின் பணி பூமியை, உலகை உய்விக்கப் பாடுதல். தவறு செய்கின்றன, வஞ்சகமான புல்லர்கள் யாருக்கும் இந்த நல்ல கவிஞர்கள் பணிய மாட்டார்கள்.

அணிவதில் உயர்ந்தது உடை-ஆதவரே
அன்பன்றி எதற்கும் உடையாதவரே

நாம் அணியும் அத்தனையிலும் சிறந்தது உடை. ஏனென்றால் அது மானங்காக்கும். உடலைக் காக்கும். அப்படிக் காக்கும் குணம் கொண்டது உடை.

அதே போல் அன்பு என்பதுதான் உலகின் உடையாகும். அன்பில்லாவிட்டால் பாதுகாப்பு எதற்கும் கிடையாது. இங்கு உடை யாது அவரே(விளிச்சொல்) எனச் சிலேடையாகவும்..

புல்லர்களுக்கு பணியாமல் பூமியைக் காக்கும் தம் பணியை நல்ல கவிஞர்கள் செய்வார்கள். இவர்கள் எளிமையானவர்கள். இவர்கள் அணியும் அணிகலங்களில் உயர்ந்தது உடை மட்டுமே.. அப்படி ஏழ்மையில் இருந்தாலும் அன்பைத் தவிர வேறு எதற்கும் பணியமாட்டார்கள் என மறு பொருளும் தரும்.

மனிதம் உயர்ந்தது அறிவில்-ஆதவரே
மனிதம் மறந்தோர் அறிவில்லாதவரே

இப்படிப் பட்ட நல்ல கவிஞர்களின் அறிவினால் தான் மனிதம் உயர்ந்தது. மனிதப் பண்புகள், குண நலன்கள் வளர்ந்தன. அப்படிப்பட்ட இந்த நல்லக் கவிஞர்களை மறப்போர்கள் அறிவில்லாதவகளாகத்தான் இருக்க முடியும்..

இப்படி ஆதவரிடம் கவிஞர்களின் பெருமையைச் சொல்வதாக எழுதப்பட்டது இந்தக் கவிதை..

அதனாலதான் ஆதவருக்கு ஒரு பாராட்டு, வாழ்த்து, இந்த மாதிரி தலைப்பு தராமல்,

ஆதவருக்கு ஒரு கவிதை என்று
ஒரு கவிதை
ஆதவனிடம்
உண்மைக் கவிஞர்கள் பற்றிப் பேசுவதாக அமைத்திருக்கிறேன்.

சிலேடையில் அது ஆதவனைப் புகழ்வதாக அமைக்கப் பட்டது.

வஞ்சப் புகழ்ச்சியில் ஆதவனைத் திட்டுவதாக புலப்படும்..

இதுக்கெல்லாம் நாம ஒண்ணும் செய்ய முடியாது.. அதுவா வருது!!!

ஆதவா
20-08-2010, 01:17 PM
மூன்று வருடங்களுக்கு முன்னர் நீங்கள் (என்னை வஞ்சப்புகழ்ந்து) எழுதியது!! இப்போதும் அந்த தருணங்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது...
இதைக் கொண்டு நானும் தாமரைக்கு ஒரு கவிதை எழுதிய ஞாபகம் இருக்கிறது!!!