PDA

View Full Version : WinRAR கடவுச்சொல் பிரச்சினை..?



இதயம்
09-05-2007, 02:54 PM
நண்பர்களே..!
இணையத்திலிருந்து ஆங்கிலப்படங்களை இலவசமாக பதிவிறக்கினேன். அவை WinRAR கோப்பாக இருந்தன. பதிவிறக்கிய பிறகு தான் தெரிந்தது, அவை அனைத்தும் கடவுச்சொல்லோடு உள்ளன.

1. கடவுச்சொல்லை கண்டுபிடிக்கும் செயலி இருந்தால் தெரிவிக்கவும் அல்லது வேறு தீர்வு இருந்தாலும் சொல்லவும்.

2.ஆங்கில படங்களை இலவசமாக பதிவிறக்க வேறு வலைதளங்கள் இருந்தாலும் தெரிவிக்கவும். கடவுச்சொல் உள்ளது மற்றும் Rabidshare , மெகாஅப்லோட் வேண்டாம் (இங்கு தடுக்கப்பட்டிருக்கிறது)
நன்றி

leomohan
09-05-2007, 03:31 PM
Passware எனும் மென்பொருளால் அதை உடைக்க முடியும்.

suraj
09-05-2007, 03:56 PM
நிறைய செயலிகள் உள்ளன.
அவை அனைத்தும் Brute force முறையில் செயல்படக் கூடியவை ,அதனால் கண்டுபிடிக்கலாம்
எளிதில் 4/5 எழுத்துக்குள் இருந்தால், அதுவும் எழுத்துக்கள் ஆங்கிலம் + எண்

கடினம்:
அதற்கு மேல்(5+) மற்றும் வேறு மொழி கடவு சொல்.
ஆதாரம்:
இந்த .rar கோப்பை காண்க: அளவு : 8KB
suraj4u.org/csestars/forums/Help/photo.rar
csestars.org/forums/Help/photo.rar

ஆதலால் செயலிகள் வைத்து உடைப்பது 1% தான் சாத்தியம்

அறிஞர்
09-05-2007, 03:58 PM
உடைக்கும் தொழில் பற்றி தமிழிலே கூறுங்கள்...

suraj
09-05-2007, 04:09 PM
ஆதாரம்:
இந்த .rar கோப்பை காண்க: அளவு : 8KB
suraj4u.org/csestars/forums/Help/photo.rar
csestars.org/forums/Help/photo.rar


இதன் கடவு சொல் qw(ஆங்கிலம்) அல்ல.அப்புறம் என்ன இருக்கும்னு யோசிகிறீங்களா...
ஃந் -----இது தான் அதன் கடவு சொல்.இப்படி வேற்று மொழியில் இருந்தால் நிச்சயமாக உங்களால் கண்டுபிடிக்க .................முடியாத காரியம்.

நான் செய்தியை தந்துள்ளேன்...தவறிருப்பின் சுட்டிக்காட்டவும்.
---------------------------------------------------------

vijayan_t
09-05-2007, 08:27 PM
இறக்கப்ட்ட RAR கோப்பின் பெயர் அல்லது அதற்க்கு பயன்பட்ட torrent பெயர் மற்றும் "password" என்ற வார்த்தை இவ்விடண்டையும் பயன்படுத்தி கூகிளில் தேடுங்கள் கன்டிப்பாக கிடைக்கும். நான் இப்படித்தான் நிறைய படங்களுக்கான கடவுச்சொற்கள் கிடைக்கப்பெற்றேன்.