PDA

View Full Version : இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமிலĮ



சுட்டிபையன்
09-05-2007, 01:21 PM
இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமில்லை

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகின் செல்வந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் சபையில் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய நாணயப்படி 1.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 1.600 கோடி ரூபாவில் இருந்து 1.800 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண தொடர் முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண தொடர் வரையான காலப் பிரிவுக்கான இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த காலப்பிரிவில் இந்திய அணி 5 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் நவம்பர் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப் பயணம், ஜனவரி பெப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.இந்திய கிரிக்கெட் சபை சம்பளத்தை காலதாமதமாக வழங்குவது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் உடற்பயிற்சி இயக்குனராக இருந்த அன்ட்ரூ வைபஸ் தனது பதவிக் காலத்தில் 5 மாதத்துக்கு பின்னரே சம்பளம் பெற்றார். அதேபோன்று பயிற்சியாளராக இருந்த ஜோன் ரைட்டுக்கு 7 மாதம் கழித்துத்தான் சம்பளம் வழங்கப்பட்டது.

இது குறித்து இந்திய அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி அளித்த போது, இந்திய அணிக்காக நான் பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். பல முறை சம்பளம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் பெற்றுள்ளேன் என்றார்.

எனினும், இது பிரச்சினையே அல்ல என இந்திய கிரிக்கெட் சபை பிரதி தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்திய அணியினருடனான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அவர்களின் சம்பளம் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படும். வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது தயாராகி வருகிறது. மற்றபடி இது பிரச்சினையே அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா (இந்திய நாணயப்படி) சம்பளமாக வழங்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இது தவிர வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் மற்றும் போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வீரகேசரி

aren
09-05-2007, 02:06 PM
இது ஒரு பிரச்சனையேயில்லை நம் வீரர்களுக்கு, ஏனெனில் கிரிக்கெட் ஆடுவது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. நிரந்தர தொழில் விளம்பரம். அதில் அவர்கள் கிரிக்கெட் விளையாடி வரும் பணத்தைவிட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆகையால் அவர்களை டீமில் வைத்திருந்தாலே நம் வீரர்களுக்கு போதுமானது. சம்பளம் தேவையேயில்லை.

எப்பொழுது இடம் போய்விடுமோ என்ற கவலை வரும்பொழுது ஒரு 50 அல்லது 100 அடித்துவிடுவார்கள். பந்து வீச்சாளர்களாக இருந்தால் ஒரு மூன்று அல்லது நான்கு விக்கெட் எடுத்துவிடுவார்கள். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆட்டத்திற்கு கவலையில்லை. அதன்பிறகு மறுபடியும் மேலே சொன்னபடி செய்யவேண்டும். அப்படி செய்துவிட்டால் அவர்களுடைய இருக்கை மறுபடியும் காப்பாற்றப்படும். இடையிடையே ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற தொடர்கள் மூலம் கொஞ்சம் கனிசமாக ரன் குவிக்கலாம். இதைத்தானே நம் வீரர்கள் இதுவரை செய்துவருகிறார்கள். இது ஒன்றும் மாறப்போவதில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

வாசகி
10-05-2007, 07:12 AM
உழைப்புக்கு ஊதியம். இதுதான் எனது கொள்கை. இந்த ஏழு வருட காலத்தில் இந்திய அணியினர் உழைத்தது குறைவு. அதனால் சம்பளம் வழங்கவில்லையோ? ஒருவேளை சம்பளம் ஒழுங்காக வழங்கப்படிருந்தால் உலகக்கிண்ணத்தை தட்டி வந்திருப்பார்களோ? எது எப்படியோ இந்திய கிரிக்கட் அணி எல்லாப்பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு எழுந்து வந்தால் சந்தோசமே.