PDA

View Full Version : புறநானூறு பற்றி சுஜாதா....lavanya
13-05-2003, 01:52 PM
புறநானூறு பற்றி சுஜாதா....

குறுந்தொகை இலக்கியப் பாடல்களை நண்பர் பேரரசர் அள்ளி வழங்குவதன் மூலம் தமிழ் மன்றத்தின்
இன்றியமையாத நபராக ஆகியிருக்கிறார்..அவருக்கு இக்கணத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக்
கொள்கிறேன்... அவர் தரும் குறுந்தொகைப் பாடல்களுக்கு விளக்கமும் எளிதாக இருக்கிறதால்
அனைவரையும் கவர்கிறது...ஆனால் குறுந்தொகை புறநானூற்றில் என் அறிவு சாரம் மிக குறைவே....
அதை பள்ளி நாட்களில் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று "அறம் பாடியே கொல்லும்" என்
ஆசிரியைக்காகவே அதை பிடிக்காமல் போனது.... பின் தமிழ் மேல் ஈடுபாடு கொண்ட காலத்தில்
குறுந்தொகை புறநானூறு சொல்லித்தர ஆளில்லை...

சமீபத்தில் சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் படிக்க நேர்ந்தது... புறநானூறு பற்றிய
அவர் எண்னங்களை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....

புறநானூற்றை ஆழமாகப் படிக்க சந்தேகங்கள் எழுந்தன. ஏன் நானூறு? காலம் என்ன? திணைத்
துறைப்படுத்தியவர் யார்? ஏன் பெரும்பாலான பாட்டுக்களில் அரசர்களை இரவலர்கள் பிய்த்துப் பிடுங்கு
கிறார்கள்..? உன்னைப் போல் உண்டா நீ தருவாய் தராமலா இருப்பாய் எவ்வளவோ தந்தவனாச்சே நீ
என்று சோப்பு வைத்து "என்னைப் பார் நெடுந்தூரம் வந்திருக்கிறேன். வயறு ஒட்டியிருக்கிறது.எலும்பு
தெரிகிறது எனக்கு தெரியும் உன்னைப் புகழாமலேயே கொடுப்பாய்..நீ பெரிய ஆள் ..என்ற பாடல்கள்
நிறைந்த புறநானூற்றுக் காலம் பஞ்ச காலமா...?

இன்னும் சில விஷயங்களும் தெரிகின்றன.ஈசல்,முயல்,இறைச்சி இதெல்லாம் ரசித்து சாப்பிட்டிருக்கிறார்கள்
சகுனம் பார்த்திருக்கிறார்கள்.பரிசு கேட்குமுன் கள்ளுண்டிருக்கிறார்கள்.வடக்கிருந்திருக்கிறார்கள்..பரிசு
கொடுக்க தாமதித்தால் "போடா நீயும் உன் பரிசிலும்..."என்று திட்டுவதிலும் புலவர்கள் தயங்க வில்லை...
எல்லாப் பாடல்களிலும் நேரிசை ஆசிரியப்பா வருகிறது..பொதுவாக உணர்ச்சிக் கலக்காத தன்மை
போரில் இறந்து போன கணவனுக்கு ஒப்பாரிப் பாட்டிலும் இயற்கை வர்ணனை-சில திரும்ப திரும்ப
வரும் சொற்றோடர்கள்.இவைகள் எல்லாம் பார்க்கையில் ஒரே ஆள் எல்லாப் பாடல்களும் எழுதியிருக்க
கூடும் என சந்தேகம் வருகிறது... உதாரணம் ஒரு நல்ல பாட்டு

காவற்பெண்டின் பாட்டு. சோழன் போர்வைக்கோப் பெருநன் கிள்ளியின் தாயார் பாடியதாக வரும் பாட்டு

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ?என வினவுதி,என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்
புவி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறே இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!
பொருள் : புலி கிடந்து வெளியேப் போன மலைக்குகைப் போல் என் வயிறு.அவன் எங்கே என்று தெரியாது
போர்க்களத்திற்கு நிச்சயம் வருவான் என் மகன் அங்கே போய் பார் என்றாளாம் தாய்

ஆனால் இதை யார் எழுதியிருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்..தாயா? கேள்வியையும் கேட்டுக்
கொண்டு பதிலையும் சொல்வாளா..?

புறநானூற்றின் ஆச்சரியம் அதன் காலத்தில்தான் புராதானத்தில்தான் இருக்கிறது...அதில் சொல்லப்படும் வீரம்
இன்று எழுதப்பட்டால் ராணியில் கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள்..அன்று எழுதப்பட்டதுதான் இதன்
முக்கியம்...மற்றும் சிக்கலான வரிகளின் நடுவே பளிச்சிடும் சில கவிதை வரிகள் "ஏற்றுக உலையே...ஆக்குக
சோறே.." போன்ற வரிகளில் lustiness. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனிலும்
இலமே போன்ற வரிகளின் self confidence " வேந்தர் என் குன்றும் கொண்டார்?யாம் எந்தையும் இலமே..
போன்ற வரிகளின் சிக்கனத்தில் ததும்பும் சோகம் -- என்று எழுதப்பட்டவை இவை

லாவண்யாவின் பின்குறிப்பு : இன்னும் கொஞ்சம் இருக்கிறது...இந்த கட்டுரைக்கு வரும் வரவேற்பு
பொருத்து தொடர்கிறேன்....

தஞ்சை தமிழன்
13-05-2003, 02:49 PM
அருமையாக ஒரு எழுத்தாளனின் எண்ணங்களை இங்கு தந்த லாவண்யாவுக்கு நன்றி.

இங்கு உண்மையிலேயே தமிழ் வளர்கிறது. அது தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இந்த தமிழ் மன்றத்தில் உலவுவதன் மூலம் கிடைக்கிறது.

poo
13-05-2003, 04:35 PM
உண்மையில் உயர்வான பதிவுகள் பதிப்பதில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது அக்கா...

புறநானுறுபற்றி ஒரு அழகான அலசல்.. ஆரம்பித்துவிட்டு தொடர்வதில் கேள்விக்குறியா?!!...

rambal
13-05-2003, 05:07 PM
அருமையான பதிவு..
சுஜாதாவின் பார்வை கொஞ்சம் மாறுபட்டது.
அவர் எழுத்தைப் படிக்க கசக்குமா என்ன? இன்னும் இது பற்றி நிறைய எழுதவும்..

இளசு
15-05-2003, 11:23 PM
வாழும் பேரறிவாளர் சுஜாதாவின் முத்தான கட்டுரையை
சுவையான முன்னோட்டத்துடன்
எங்களுக்காக இங்கே படைத்த லாவண்யா
அவர்களுக்கு
பாராட்டும்.. நன்றியும்...

புறநானூற்றின் மேல் சுஜாதா கொண்ட ஆர்வம் பின்னாளில்
வளர்ந்து, முதல் தொகுதியாய் 200 பாடல்களும், எளிய
இனிய விளக்கங்களும் விரிவான முன்னுரையுடன் கூடிய
<span style='color:#e30000'>"புறநானூறு - ஓர் எளிய அறிமுகம் " </span>என்ற பெயரில்
பதிப்பித்து இருக்கிறார்.

poo
16-05-2003, 07:09 AM
அதையும்.. இங்கே தருவீர்கள் என நம்புகிறேன்!!!

chezhian
16-05-2003, 01:52 PM
மிக நேர்த்தியான அலசல், கட்டுரை.
லாவுக்கு என் பாராட்டுக்கள்+ வாழ்த்துக்கள்.
தொடருங்கள். நன்றி.

M.Jagadeesan
24-05-2012, 05:39 AM
புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் ஒரே புலவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சுஜாதாவின் கருத்தை , தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.