PDA

View Full Version : ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடசுட்டிபையன்
09-05-2007, 01:17 PM
ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை

ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.

35 வயதாகும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 674 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 455 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், அவர் ஓய்வின் பின்னர் கிரிக்கெட் தொடர்பான எந்தவித பொறுப்பையும் ஏற்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த விசேட பேட்டி ஒன்றின்போது கூறியதாவது:

நான் தொடர்ந்து கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் நான் 6 அல்லது 7 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடிவருகிறேன். எனவே, நான் எப்போது ஓய்வு பெற முடிவு செய்கிறேனோ, அப்போது கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகிவிடுவேன். அதன் பின்னர் அதனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன். கிரிக்கெட்டை தவிர வாழ்க்கையில் நிறையவிடயங்கள் இருக்கின்றன. ஒரு வேளை சலிப்பு ஏற்பட்டால் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் கழகத்துக்கு சென்று ஆடிக்கொள்வேன்.

எனக்கு சமீபத்தில் தான் 35 வயது பிறந்துள்ளது. என்னால் 37 வயது வரை ஆட முடியும். தேவைப்பட்டால் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன்.

அதன் பிறகு விளையாடும் எண்ணம் இல்லை. நான் நினைத்தது போல் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தால் தொடர்ந்து விளையாடுவேன். ஆனால் எதிர்பாராத தவறான முடிவுகள் கிடைக்கும் போது எல்லோருக்கும் நன்றி கூறி விட்டு அத்துடன் விடைபெற்று சென்று விடுவேன்.

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடுவேன். 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிக்கு நீண்ட காலங்கள் உள்ளன. இதில் நான் ஆடுவேனா என்பது அணியின் செயற்பாட்டை பொறுத்துதான் அமையும். தற்போதைய அவுஸ்திரேலிய அணி தோற்கடிக்கப்படக்கூடிய அணிதான். வோர்னுக்கு பின்னர் அந்த அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்றார்.
வீரகேசரி

அறிஞர்
09-05-2007, 01:22 PM
தேவையான பணம், அருமையான குடும்பம் உள்ளது.

அதை கவனிக்க வேண்டுமே..... டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 விக்கெட் வீழ்த்திவிட்டு... வீட்டில் ஓய்வெடுக்கட்டும்.

வாசகி
10-05-2007, 07:20 AM
இது தவறான முடிவு. முரலீதரன் தனது ஓய்வின் பின்னர் பல புதிய இளம் வீரர்களை உருவாக்குவதற்கு முயற்சிக்கலாம். அவரால் முடியும். தனது நாட்டுக்கும் தன்னை வளர்த்த கிரிக்கட்டுக்கும் அவர் செய்யும் அளப்பரிய தொண்டாக அல்லது நன்றிக்கடனாக இது அமையும். அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் இலக்குகளை வீழ்த்த முடியும். அதில் சந்தேகமில்லை. அதே வேளை ஒருநாள் போட்டிகளிலும் அவர் உலகசாதனையின் விளிம்பில் நிற்கின்றார். அதையும் ஒரு கைபார்க்கலாமே.

poo
14-05-2007, 08:47 AM
அவருக்கும் குடும்பம் இருக்கிறது... அதை கவனிக்க வேண்டாமோ.. சரியான முடிவு!

ஷீ-நிசி
14-05-2007, 09:10 AM
அவர் சரியான முடிவெடுத்திருக்கிறாரா, இல்லையா என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது...

முரளிதரன் ஒரு சிறந்த வீரர்.. என்னை பொருத்தவரை அவர் பல இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் ஓய்வுக்குப் பின்னர்.....

ஓவியன்
14-05-2007, 09:17 AM
உண்மைதான் ஷீ பலர் படித்து தேற வேண்டிய சுழற் பந்து பல்கலைக் கழகம் அவர்.

அன்புரசிகன்
14-05-2007, 06:04 PM
இலங்கை துடுப்பாட்டவீரர்களில் பிந்தியவயதில் திருமணம் செய்தவர் முரளீதரன். அவர் ஒரு மாஜாஜால வித்தைக்காரர் என் சொல்லவேண்டும். பந்து அவரின் கையில் விளையாடும் அழகே தனி.
குடும்பத்தையும் பார்வையிடவேண்டும். அவரிலும் வயது -அனுபவம் குறைந்தவர்கள் அணித்தலைவராக உபதலைவராக வந்துசென்றுள்ளனர். அவரிடமிருந்து திறமையை மட்டும் பெற விரும்புவரா?