PDA

View Full Version : இந்தியா-வங்காளதேசம்



அறிஞர்
07-05-2007, 02:19 PM
இந்திய கிரிக்கெட் அணி... நேற்று வங்காளதேசத்திற்கு 3 ஒருநாள், 2 டெஸ்ட் விளையாடசென்றது.

முழுவதும் எந்த தொடரை வெற்றிக்கொள்ளுமா...

ஒருநாள் போட்டிகள்
மே 10 மிர்பூர்
மே 12 மிர்பூர்
மே 15 சிட்டாகாங்க்

டெஸ்ட் போட்டிகள்
மே 18-22 சிட்டாகாங்க்
மே 25-29 மிர்பூர்

http://www.dinakaran.co.in/epaperdinakaran/752007/DN_07-05-07_E1-%2013-09%20CNI.jpg

ஆதவா
07-05-2007, 03:13 PM
வங்காளதேசத்தினரின் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்மாட்கள் தோற்றுவிடுவார்கள் போலிருக்கிறதே...

ராஜா
07-05-2007, 03:28 PM
என்னுடைய கணிப்பு...

ஒருநாள் போட்டிகள் ; இந்தியா 2, வங்க தேசம் 1.

டெஸ்ட் போட்டிகள் ; இந்தியா 1, வெற்றி தோல்வியின்றி 1.

sarcharan
07-05-2007, 03:31 PM
தாகூர் இந்த இரு தேசத்துக்கும் தேசியகீதம் எழுதியுள்ளார்.

மனோஜ்
07-05-2007, 05:36 PM
இதில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் இல்லாவிட்டால்
இவர்கள் நிலை என்னவென்று இவர்களுக்குத் தெரியும்

franklinraja
08-05-2007, 07:22 AM
உபரித் தகவல்:

இந்தத் தொடரை இந்தியாவில், ராஜ் டீவி ஒளிபரப்ப உள்ளதாம்..! :D

::: செய்தி ::: (http://thatstamil.oneindia.in/news/2007/05/07/cricket.html)

aren
08-05-2007, 08:09 AM
நம்மளோட மத்த வேலையைப் பார்க்கலாமே. சும்மா நாம் ஏன் நம்முடைய நல்ல நேரத்தை விரயம் செய்யவேண்டும்.

ஓவியன்
08-05-2007, 08:28 AM
நம்மளோட மத்த வேலையைப் பார்க்கலாமே. சும்மா நாம் ஏன் நம்முடைய நல்ல நேரத்தை விரயம் செய்யவேண்டும்.

அண்ணா!

நீங்களே இப்படிச் சொல்லலாமா?

கிரிக்கற் வீரர்கள் வருவார்கள் போவார்கள்
ஆனால் கிறிக்கற் நிலைத்து நிற்க வேண்டுமல்லவா??
புதியவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்போம்.
சிலிர்த்து நிற்கும் வங்க வீரர்களின் திறனையும் பேதமின்றி வாழ்த்துவோம்.
அது தானே கிறிக்கற்றிற்கும் நல்லது.

ஷீ-நிசி
08-05-2007, 08:40 AM
இந்தியா போராடியே தொடரை கைப்பற்றும் என்று எண்ணுகிறேன்.. பார்க்கலாம்.. ஒவியன் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது..

அன்புரசிகன்
08-05-2007, 01:52 PM
அண்ணா!

நீங்களே இப்படிச் சொல்லலாமா?

கிரிக்கற் வீரர்கள் வருவார்கள் போவார்கள்
ஆனால் கிறிக்கற் நிலைத்து நிற்க வேண்டுமல்லவா??
புதியவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்போம்.
சிலிர்த்து நிற்கும் வங்க வீரர்களின் திறனையும் பேதமின்றி வாழ்த்துவோம்.
அது தானே கிறிக்கற்றிற்கும் நல்லது.

கிரிக்கட்டுக்கு மட்டுமல்ல. அதுதான் விளையாட்டின் அடிப்படைத்தத்துவம் கூட. வென்றவர்களை வாழ்த்தியாகவேண்டும். அதற்காக தோற்ப்பவர்களை தூற்றவேண்டுமென்றல்ல.

தோல்விதானே வெற்றிகளின் படிகள்.:sport-smiley-013:

சுட்டிபையன்
08-05-2007, 02:00 PM
என்னைப்பொறுத்த வரை இந்திய அணியே இந்தத் தொடரில் வெற்றி பெறும், இழந்த பலத்தை மீளப்பெற்றிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்

mravikumaar
08-05-2007, 02:09 PM
இந்திய அணியில் இளம்வீரர்கள் இருக்கிறார்கள்.

பீல்டிங் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்தியா அனைத்திலும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்

அன்புடன்,
ரவிக்குமார்

அறிஞர்
08-05-2007, 02:12 PM
இந்தியர்கள் சரியாக விளையாடினால்.. எளிதில் வெற்றி பெறலாம்.

எப்படி இருந்த இந்தியா.. இப்படி ஆயிடுச்சே...

பங்களாதேஷ் தொடரை கைப்பற்றுவதற்கு இப்படி பாடுபடவேண்டியிருக்கிறது.

அடுத்து... எதிர்காலத்தில் ஸிம்பாவே, அயர்லாந்து, கென்யா... தொடரை கைப்பற்ற இந்தியா பாடுபடும் எனத்தோன்றுகிறது.

சுட்டிபையன்
08-05-2007, 02:38 PM
இந்தியர்கள் சரியாக விளையாடினால்.. எளிதில் வெற்றி பெறலாம்.

எப்படி இருந்த இந்தியா.. இப்படி ஆயிடுச்சே...

பங்களாதேஷ் தொடரை கைப்பற்றுவதற்கு இப்படி பாடுபடவேண்டியிருக்கிறது.

அடுத்து... எதிர்காலத்தில் ஸிம்பாவே, அயர்லாந்து, கென்யா... தொடரை கைப்பற்ற இந்தியா பாடுபடும் எனத்தோன்றுகிறது.

ஏறி விழுந்தவனை மாடேறி மிதிச்சதைப்போல உலகக்கிண்ணத்தில் விழுந்த இந்தியாவை ஒரேடியாக எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள், இந்த தொடரில் இந்திய அணி நிச்சையம் வெற்றி பெறுவார்கள்:icon_v:

aren
08-05-2007, 03:04 PM
ராகுல் திராவிடாவில் ஆடமுடியவில்லையென்றால் ஷேவாக் காப்டனாக இருப்பாராம். எப்படியெல்லாம் காதில் பூ சுற்றுகிறார்கள் பாருங்கள். எல்லாமே கண்துடைப்புதான். இளைஞர்களுக்குத்தான் சீட் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு அனைவரையும் டீமீலே இன்னும் வைத்திருக்கிறார்கள்.

நம் இந்தியா டீம் இப்படியேதான் இருக்கும். சுதப்பல் டீமிடம் நன்றாக ஆடுவார்கள். ஆடவேண்டிய மாட்ச்களில் ஆட்டம்கண்டுவிடுவார்கள். இதுதான் இந்திய டீமின் பழக்கம்.

இவர்களுக்கு போய் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள். நம் வேலையை கவனிக்கலாமே.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
08-05-2007, 03:25 PM
இந்த போட்டித் தொடரை இழந்தால் நன்றாக இருக்கும்...

பழையவர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பலாம்.

வாசகி
08-05-2007, 03:26 PM
பங்களாதேஷ் அணியில் இருப்பவர்கள் எல்லாம் பயமறியாத இளங்கன்றுகள். இந்திய அணியில் புதுரத்தம் குறைவானாலும் அத்தனையும் இளரத்தம். மொத்தத்தில் இரு அணிக்கும் திண்டாட்டம்; நமக்கு கொண்டாட்டம்.

poo
09-05-2007, 06:09 AM
ஒரு போட்டியையாவது இந்தியா இழக்குமென்றே நினைக்கிறேன்.... அதுதான் நமக்கும் நல்லது.. இல்லாவிட்டால் ரொம்ப ஏறிடும்!..

மன்மதன்
09-05-2007, 11:14 AM
அனைத்தையும் வெற்றி பெறும் என்று எழுத நினைத்தால் அறிஞரின் கையொப்பம் என்னை பார்த்து சிரிக்கிறது....!!
அதிகமான எதிர்பார்ப்பு
ஏமாற்றத்தைக் கொண்டுவரும்

ராஜா
09-05-2007, 12:11 PM
இந்த போட்டித் தொடரை இழந்தால் நன்றாக இருக்கும்...

பழையவர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பலாம்.

இழக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்..!
ரசிகர்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் தொடராகவே இது இருக்கும். என்ன விலை கொடுத்தாவது வெற்றியைப் பெற்று விடுவார்கள்..

ரசிகர்களிடம் தன் பெருமையை நிலைநாட்டுவதைவிட ஸ்பான்சர்களிடமும், வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் சார்ந்த நிறுவனங்களிடமும் வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

சுட்டிபையன்
09-05-2007, 01:09 PM
இது பழிதீர்க்கும் தொடரல்ல

பங்களாதேஷ் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று அணித்தலைவர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் காலை டாக்கா சென்று சேர்ந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெறாத சச்சின், முன்னாள் அணித் தலைவர் கங்குலி, கும்ப்ளே, லக்ஷ்மன், ஜாபர், ராஜேஷ் பவார், ரமேஷ் பொவார், வி.ஆர்.வி.சிங் ஆகியோர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் மே 15 ஆம் திகதி பங்களோதேஷ் செல்கின்றனர்.

டாக்கா சென்று சேர்ந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் டிராவிட் கூறியதாவது: பங்களாதேஷ் அணியுடனான இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்திய வீரர்கள் எல்லோரும் இந்த சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளனர். எனினும் இதை பழிதீர்க்கும் தொடராகக் கருதவில்லை.

சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் தகுதியும் திறமையும் இந்திய அணிக்கு உள்ளது. இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும். நமக்கு முன் உள்ள மிகப் பெரிய சவால், முழு திறமையையும் வெளிக்கொண்டு வருவதுதான் என்று வீரர்களிடம் கூறியுள்ளேன். நீண்ட கிரிக்கெட் பருவகாலத்தை எதிர்நோக்கி உள்ளோம். மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. வெற்றிப் பயணத்தை பங்களாதேஷ் தொடரில் இருந்து தொடங்குவோம்.

என்னுடைய காயம் ஓரளவுக்கு குணமாகியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என நம்புகிறேன் என்றார். இந்தியபங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நளைபெறவுள்ளது. 2 ஆவது ஒருநாள் போ ட்டி மே 12 ஆம் திகதியும் 3 ஆவது போட்டி மே 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. ]

வீரகேசரி

அறிஞர்
09-05-2007, 01:11 PM
சுட்டி.. இந்த தொடருக்காக தனித்திரி முன்பே தொடங்கப்பட்டுள்ளது.. அதில் செய்தியை தொடர்ந்தால் நன்றாக இருக்குமே.

சுட்டிபையன்
09-05-2007, 01:15 PM
தவறுக்கு மன்னிக்கவும், இங்கே சேர்த்தமைக்கு நன்றொஇ அறிஞர் ஐயா!

அறிஞர்
10-05-2007, 12:36 PM
தட்டு தடுமாறி இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ளது.

முதலில் டாஸில் வெற்றி பெற்ற வங்காளதேசம் துடுப்பாடி 250/7 (47 ஓவர்) எடுத்தது.

பிறகு இந்தியா 144/5 (28.1 ஓவர்) தடுமாறிய போது தோனியும் (91), கார்த்திக்கும் (58) நிலைத்தாடி வெற்றி இலக்கை (251) 46 ஓவரில் அடைந்தனர்.

தோனியின் ஆட்டம் அருமை.. ஆட்ட நாயகன் அவர்தான்.

1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலை.

ஆதவா
10-05-2007, 12:47 PM
இந்திய அணியினருக்கு என் பாராட்டுக்கள். அதைவிட அழகாக ஆடிய வ.தேசத்திற்கு அதிகப்படியான பாராட்டுக்கள்.... இந்த பக்கம் மொத்தமே 9 பேர் தான் வந்துள்ளார்கள்... இதிலிருந்தே தெரிகிறது கிரிக்கெட்டில் இந்திய ஆட்டம் பலருக்குப் பிடிக்கவில்லை என்று...

அறிஞர்
10-05-2007, 12:52 PM
விளம்பரங்களுக்கு பணம் குறைத்தும் விளம்பரங்கள் சரியாக வருவதில்லையாம்....

மதி
10-05-2007, 01:11 PM
எப்படினாலும் சரி..
ஜெயிச்சுருக்காங்க..
இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்...

அரசன்
10-05-2007, 02:43 PM
இன்று தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றுள்ளது. மிர்பூரில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வங்க தேசத்தை எதிர் கொண்டது. இந்த மைதானத்தில் இந்தியா பங்கேற்கும் முதல் ஒரு நாள் போட்டி இதுவே ஆகும்.

மழைக்காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியதால் 47 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது. டாஸ் வென்ற வங்க தேசம் முதலில் பேட் செய்தது. ஆரம்ப முதலே இந்திய பந்து வீச்சுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். பிறகு இந்திய சுழல் பந்து வீச்சுக்கு தடுமாறி நிதானமாக ஆடினார். நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்தது. 47 ஓவர்களில் 251 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்தியா பேட் செய்ய தொடங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களான சேவாக்கும். காம்பீரும் அதிரடியாக விளையாடினார்கள். அதே சமயம் விரைவில் பெவிலியன் திரும்பினார்கள். 2 விக்கெட்டுக்களுக்குப் பின்னர் இந்திய அணியினர் நிதானமாக விளையாடினார்கள். அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பரான தோனி நின்று விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 253 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தோனி 93 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் அரை சதத்துடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்க தேசத்தில் நடைப்பெற்ற ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற புள்ளிகளைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

அக்னி
10-05-2007, 02:46 PM
தோல்விகளில் துவண்டு போன இந்திய அணிக்கு ஒரு புத்துணர்ச்சி. மீண்டும் பழைய கம்பீரத்தோடு பவனி வர வாழ்த்துக்கள்...

அறிஞர்
10-05-2007, 02:46 PM
நண்பர்களே இந்த இந்தியா-வங்காளதேச தொடரை பற்றிய செய்திகளை ஒரே இடத்தில் பதிக்கலாம். விளையாட்டு பகுதியில் அதற்கென திரி உள்ளது.

அரசன்
10-05-2007, 02:48 PM
நண்பர்களே இந்த இந்தியா-வங்காளதேச தொடரை பற்றிய செய்திகளை ஒரே இடத்தில் பதிக்கலாம். விளையாட்டு பகுதியில் அதற்கென திரி உள்ளது.


அப்படி என்றால் மாற்றுவது எப்படி? இனிமேல் சரியாக பதிக்கிறேன். இந்த முறை மாற்றிவிடுங்கள்!

சுட்டிபையன்
10-05-2007, 02:49 PM
வாழ்த்துக்கள் இந்தியா அணிக்கு

அறிஞர்
10-05-2007, 03:19 PM
என்ன பெருந்தன்மை மதிக்கு.....

ஷீ-நிசி
10-05-2007, 04:44 PM
தோத்திருக்க வேண்டிய போட்டி இது... எப்படியோ ஜெயிச்சாங்க... தோணிக்கு அவர் வீட்டின் முதல் மாடி கட்டிக்கொண்டிருக்கும் ஞாபகம் வந்திருக்கும்..

மதுரகன்
10-05-2007, 04:47 PM
நானும் இந்திய அணியை வாழ்த்துகிறேன்...

அறிஞர்
10-05-2007, 04:51 PM
இப்படி விளையாடினாதானே.. அடுத்த வருட விளம்பரங்கள் கிடைக்கும்.

அறிஞர்
19-05-2007, 07:21 PM
யாருக்கும் விளையாட்டில் விருப்பம் இல்லை போல....

டெஸ்ட் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியா துடுப்பெடுத்து ஆடி.. 2ம் ஆட்ட முடிவில் 384/6 எடுத்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படுகிறது... கங்குலி, டெண்டுல்கர் சதம் அடித்து வெளியேறினர்.