PDA

View Full Version : தமிழ் தட்டச்சுவான் திறந்த மூல நிரல்



vijayan_t
09-05-2007, 12:17 PM
நன்பர்களே
யுனிகோடு தமிழை ஒலி-விசைப்பலகையின் வாயிலாக தட்டச்சு செய்வதற்கான மென்பொருள் ஒன்றினை உருவாக்கியிருந்தேன். அதன் மூல நிரலை முற்றிலும் தமிழ் மயமாக்கி அதை ஒரு திறந்த மூல நிரலாக வெளியிடவேன்டும் என விரும்பி அதன்படி வெளியிட்டுள்ளேன். மூல-நிரல் தொகுப்புகள், மாதிரி திட்ட-நிரல் மற்றும் விளக்கவுரை கோப்புகள் அனைத்தையும்

http://tvijayan.tripod.com/

என்ற எனது இனைத்தளத்தினில் வெளியிட்டு இருக்கின்றேன்.

அதில் முதலில் விளக்கவுரைகள் படிக்கவும்.

சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். இம்மூல நிரலை மேம்படுத்த உங்கள் உதவி எதிர்பார்க்கின்றேன்.

மூல நிரலின் சிறப்பு.
அடிப்படை மூல நிரல்களின் பாகங்கள் அனைத்திலும் அதிக பட்சமாக, தமிழ் மொழியே பயபடுத்திருப்பது இதன் சிறப்பாகும். இதுபோல யாராவது இதற்க்கு முன்னர் தமிழ்-நிரலாக்கம் செய்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.

உபயோகப்படுத்தபட்டுள்ள நுட்பம் பற்றி.
இது வின்டோஸ் இயக்கு முறைக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு விண்டோவுக்கும் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து, தகவலை மாற்றி அனுப்பும் நுட்பததை பின்பற்றி நிரலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

உற்சாகமான மற்றும் சந்தோஷமான தமிழ் நிரலாக்கத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி
விஜயன்.

அறிஞர்
09-05-2007, 12:29 PM
தங்கள் தளத்தில் ஏற்றி.. முதலில் எங்களுக்கு இனிப்பு செய்தி கொடுத்த விஜயனுக்கு நன்றி.

பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.

உம் தமிழ் பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

vijayan_t
09-05-2007, 12:42 PM
நன்றி அறிஞர் அவர்களே. இது குறித்த விளக்கமான உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகின்றேன். எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

விஜயன்.

பாரதி
09-05-2007, 01:14 PM
மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் விஜயன்..!
மூடுமந்திரமாய் இருப்பதை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த உங்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது.
இதை வலைப்பூக்களில் இணைக்க வழியேதும் உண்டா..?

vijayan_t
09-05-2007, 01:25 PM
நன்றி பாரதி அவர்களே.
இது ஒரு திறந்த நிரலாதலால் இதை அப்படியே பதிவிறக்கம் செய்து, எங்கு வேன்டுமானாலும் பதிக்கலாம். அல்லது இத்திரி குறித்து வலைப்பூக்களில் எழுதலாம்.

பாரதி
10-05-2007, 12:43 PM
நன்றி பாரதி அவர்களே.
இது ஒரு திறந்த நிரலாதலால் இதை அப்படியே பதிவிறக்கம் செய்து, எங்கு வேன்டுமானாலும் பதிக்கலாம். அல்லது இத்திரி குறித்து வலைப்பூக்களில் எழுதலாம்.

மிக்க நன்றி விஜயன்.

உதாரணத்திற்கு வேர்ட்பிரஸ் அல்லது பிளாக்கரில் எந்த இடத்தில் எந்த நிரலை சேர்க்க வேண்டும் என்று எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும்.

ஓவியா
10-05-2007, 01:20 PM
விஜயன் அண்ணா,
சென்று கண்டேன் மகிழ்ச்சி, நேரம் இருக்கும் பொழுது உலாவுகிறேன்.

உங்க பக்கத்தின் ஊதா வர்ணம் கொஞ்சம் மந்தமாக காட்சியளிகின்றது. இன்னு கொஞ்சம் வெணிர் ஊதா கொடுத்து பாருங்களேன் அண்ணா.

வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.

vijayan_t
10-05-2007, 02:26 PM
நன்றி ஓவியா அவர்களே.
நீங்கள் சொன்னது போல, என் வலைபக்கத்தின் வாசகங்களின் நிறத்தை மாற்றியுள்ளேன்.
இந்த மூல நிரலானது VC++ நிரலாக்கம் தெரிந்தவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.

vijayan_t
10-05-2007, 02:28 PM
வேர்ட்பிரஸ் அல்லது பிளாக்கரில் எந்த இடத்தில் எந்த நிரலை சேர்க்க வேண்டும்.

பாரதி அவர்களே நீங்கள் கேட்பது எனக்கு சரியாக எட்டவில்லை.
இந்த மூல நிரலானது VC++ நிரலாக்கம் தெரிந்தவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். உங்களுக்கு VC++ நிரலாக்கம் தெரியுமா?