PDA

View Full Version : சிலை...



பிச்சி
09-05-2007, 09:49 AM
கண்ணீரற்ற
உடலை
கொத்தி கொத்தி
பிணமாக்குகிறார்கள்.
முடிவில் கிடைக்கிறது
அழகிய உருவம்!
..

ஓவியன்
09-05-2007, 09:54 AM
அருமை பிச்சி!

கொத்தும் போது வலிதான்
ஆனால் கொத்தினால் தானே-சிலை

சிலையாக வேண்டுமென்றால் சிற்பிகளின் கொத்தலைத் தாங்கித் தானாக வேண்டும்.

ஷீ-நிசி
09-05-2007, 10:00 AM
கவிதை நன்றாக உள்ளது பிச்சி.. அது ஏன் கண்ணீரற்ற உடல் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்... விளக்கினால் நன்றாக இருக்கும்.

பிச்சி
09-05-2007, 10:00 AM
நன்றீண்ணா. சிலைக்கு உயிர் இருந்தால் அது கெஞ்சியிருக்கும் அப்பறம் அதுவே சந்தோசம் படும்.

பிச்சி
09-05-2007, 10:01 AM
நன்றி ஷீ அண்ணா.பாறையில் தண்ணீர் நிக்காதுல. தவறா?

ஷீ-நிசி
09-05-2007, 10:16 AM
கண்ணீரற்ற உடலா, தண்ணீரற்ற உடலா பிச்சி....

gragavan
09-05-2007, 10:18 AM
கொத்துதல் உளிக்கின்பம்
கொத்தி முடித்தபின் சிலைக்கின்பம்

பிச்சி
09-05-2007, 10:20 AM
கண்ணீர் அற்ற உடல். தண்ணீர் இல்லைனா கண்ணீர் இல்லை சிலை வடிக்கறபப அது கண்ணீர் விடாதெ.

பிச்சி
09-05-2007, 10:21 AM
நன்றி ராகவன் அண்ணா. அந்த கவிதை சூப்பர். :)

ஓவியன்
09-05-2007, 10:27 AM
கொத்துதல் உளிக்கின்பம்
கொத்தி முடித்தபின் சிலைக்கின்பம்

பிச்சியின் கவி எங்களுக்கு இன்பம்
ராகவனின் பின்னூட்டம் எல்லோருக்கும் இன்பம்.

ஷீ-நிசி
09-05-2007, 10:29 AM
ம்ம்ம்..... புரிந்தது...

கண்ணீரற்ற உடல்.. கொத்தும்போது வலித்தாலும் வெளிக்காட்ட இயலாது கண்ணீரற்ற கண்கள் என்பதால், கண்ணீர் வராததாலேயே சிற்பி தொடர்ந்து கொத்துகிறான்.. அதற்கு வலிக்கவில்லை என்றென்னி.....
கொத்தி கொத்தியே பிணமாக்கினான்.... முடிவில் அது அழகிய உருவம் ஆனது......

கற்பனை நன்றாக உள்ளது பிச்சி.... வாழ்த்துக்கள்!

பிச்சி
09-05-2007, 10:34 AM
நன்றிண்ணா

அக்னி
09-05-2007, 12:36 PM
பிச்சி தந்த கவிதை... ஷீ-நிஷி தந்த விளக்கம்...
இரண்டும் சேர்ந்து கொள்ளையடித்தன...
எங்கள் மனதை...
நன்றியும் பாராட்டுக்களும்...

தாமரை
09-05-2007, 02:08 PM
கல்லாய் கிடந்தேன்...
யாரோ பிளந்தான்..
ஒன்றும் உணர்ந்தேனில்லை
யாரோ செதுக்கினான்
ஒன்றும் உணர்ந்தேனில்லை
யார் யாரோ புகழ்ந்தனர்
யார் யாரோ மாலையிட்டனர்
காக்கையும் புறாக்களும் தம் பங்கிற்கு
எச்சமிட்டு போயின
ஒன்றும் உணர்ந்தேனில்லை
யாரோ வந்து செருப்பு மாலையிட்டார்
யாரோ வந்து உடைத்துச் சென்றார்
ஒன்றும் உனர்ந்தேனில்லை
கல் நான்
என்னிடம்
கல் நீ..
..

அக்னி
09-05-2007, 02:17 PM
அற்புதம் செல்வன்... வாழ்த்துக்கள்...
ஆனால் கல்லிடம் எதனைக் கற்கவேண்டும்?
பொறுமையையா அல்லது இறுக்கத்தையா அல்லது உணர்வின்மையையா?
இது என் குழப்பமே அன்றி, உங்கள் கவிதைக்கு விமர்சனம் அன்று...

தாமரை
09-05-2007, 02:27 PM
கல்லாய் தான் இருந்தது..
சிலையாய் ஆனது
கல்லாய் மீண்டும் ஆனது
கல்லுக்கு அதனால்
கர்வமுமில்லை
கவலையுமில்லை..
கல் அன்றும் கல்லாய்தான் உணர்ந்தது
இன்னும் கல்தான்
மாற்றங்கள் பார்த்தவர்களிடம்தான்
நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
அது அதுவாக் இருந்தால்
இது இதுவாக இருந்தால்
நாம் நாமாக இருக்கலாம்...

sarcharan
09-05-2007, 02:45 PM
நன்றிண்ணா
உங்களது avatar படம் சூப்பர்...

தாமரை
09-05-2007, 04:37 PM
கல்லாய் தான் இருந்தது..
சிலையாய் ஆனது
கல்லாய் மீண்டும் ஆனது
கல்லுக்கு அதனால்
கர்வமுமில்லை
கவலையுமில்லை..
கல் அன்றும் கல்லாய்தான் உணர்ந்தது
இன்னும் கல்தான்
மாற்றங்கள் பார்த்தவர்களிடம்தான்
நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
அது அதுவாக இருந்தால்
இது இதுவாக இருந்தால்
நாம் நாமாக இருக்கலாம்.


நான் நானாக இருந்து
நீ நீயாக இருந்து விட்டால்
அது இதுவாக இருந்தாலென்ன
இது அதுவாக இருந்தாலென்ன
நாம் நாமாகத்தானே இருப்போம்னு
ஒரு கேள்வி எதிர்பார்த்தேன்
கல்லில் இருந்து
கற்றுக் கொண்டவர்
யாருமில்லை..
..

மனோஜ்
09-05-2007, 05:05 PM
கல்லிலே கலைவண்ணம கண்ட பிச்சிக்கு வாழ்த்துக்கள்
விளக்க கவிதை அளித்த செல்வன் அவர்களுக்கும் நன்றிகள்

sarcharan
09-05-2007, 05:07 PM
கல்லாய் கிடந்தேன்..
கல் நான்
என்னிடம்
கல் நீ

உங்களிடம் மதி கற்றதை என்னன்னு சொல்ல..

தாமரை
10-05-2007, 01:58 AM
உங்களிடம் மதி கற்றதை என்னன்னு சொல்ல..
உம்ம ஜாதகம் பார்க்கணுமா வேண்டாமா?

பிச்சி
13-05-2007, 02:41 PM
எஸ்டிசெல்வன் அண்ணாவின் பதில்கவிதை சூப்பர. என்னோட கவிதை நல்லா இருக்கா? சொல்லலியே

பிச்சி
13-05-2007, 02:42 PM
சார்சாரன் மனோஜ் எல்லாருக்கும் என் நன்றி

விகடன்
13-05-2007, 02:46 PM
கல்லை வைத்து எழுதிய செல்வனின் கவி சிந்தனையைத்தூண்டும் வகையில் உள்ளது.

ஆனால்
சிந்திக்க வேண்டுமே...
சிந்திக்க வேண்டியவர்கள்.

sarcharan
14-05-2007, 02:59 PM
உம்ம ஜாதகம் பார்க்கணுமா வேண்டாமா?
ஆஹா??? இது என்ன கூத்து??

lolluvathiyar
14-05-2007, 03:31 PM
சிலை கவிதை அருமை பிச்சி
அதன் பின்னூட்ட கவிதைகளும் சூப்பர்



முடிவில் கிடைக்கிறது
அழகிய உருவம்.


அதுதான் உங்கள் அழகான அவதாரோ

பிச்சி
17-05-2007, 09:06 AM
சிலை கவிதை அருமை பிச்சி
அதன் பின்னூட்ட கவிதைகளும் சூப்பர்



அதுதான் உங்கள் அழகான அவதாரோ
நன்றி லொல்லுவாத்தியார் அண்ணா... உங்க பேரு ரொம்ப ஜோக்கா இருக்கு.. நீங்க வடிவேலு மாதிரி லொல்லு பண்ணுவீஙல?

சூரியன்
17-05-2007, 12:57 PM
சிலை கவிதை அருமை பிச்சி
பிச்சி உருவம் கிடைத்ததா?

பிச்சி
25-05-2007, 07:17 AM
நன்றி mickysluck

அமரன்
17-07-2007, 10:17 AM
பிச்சியின் சிலைக் கவிதை சூப்பர்...கண்ணீரற்ற உடலை என்னும் பதத்தில் சற்றுக்குழம்பினாலும் பின்னர் கிடைத்த மின்னூட்டங்கள் விளக்கின. அசந்தேன் பிச்சி...பாராட்டுகள்..

ராகவன் அண்ணாவின் ஈரடி இன்பம்....

அமரன்
17-07-2007, 10:20 AM
கல் நான்
என்னிடம்
கல் நீ

தாமரை அண்ணாவின் பதில் கவிதையில் பாடம் பல கற்றேன்...
கல்லிடம் கற்கவேண்டியவை பல......
அதை அடுத்த கவிதையில் கற்றேன்..தேர்ந்தேனா தெரியவில்லை....

lolluvathiyar
17-07-2007, 10:25 AM
நன்றி லொல்லுவாத்தியார் அண்ணா... உங்க பேரு ரொம்ப ஜோக்கா இருக்கு.. நீங்க வடிவேலு மாதிரி லொல்லு பண்ணுவீஙல?

ஜோக் ஓரளவுக்கு பன்னுவேன்,
ஆனா இந்த மன்றத்தில் நான் ஜோக் பகுதியில் அவ்வளவாக இருப்பதில்லை, சற்று சீரியசான ஏரியாவில் தான் சுத்துவேன்.

இங்க ஜோக்குக்கு நிரைய ஜாம்புவான்கள் இருகிறார்கள்.

அமரன்
17-07-2007, 10:26 AM
வாத்தியாரே...சிலைன்னு அடுத்த கவிதை எழுதுவீங்களோ...

பிச்சி
25-07-2007, 12:24 PM
அனைவருக்கும் மீண்டும் நன்றி

அன்புடன்
பிச்சி