PDA

View Full Version : கை வந்த கழுகுகள்



ஓவியன்
09-05-2007, 04:26 AM
அன்பர்களே!!
என் கவிப் பயணத்தில் அடுத்ததாக ஒரு புரட்சிக்கவிதை - ஒரு ஈழத் தமிழனாக

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்
இன்னும் பல பெயர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்

வீசிய குண்டுகளில்
அவை காவிய உயிர்கள்
எத்தனை - சென் பீட்டர்ஸ்,
செஞ்சோலை என தொடர்கதை
அவர் தம்
வெறியாட்டங்கள்

காயங்கள் கண்டதும்
காற்று மறு திசை வீசியதும்
பழங் கதை ஆயின
இன்று திறமையையும்
பலத்தையும் பரீட்சிக்கும்
புதுக் கதை, ஆம்
எங்களிடமும் கழுகுகள்.

இப்போதெல்லாம் இருட்டினாலே
சிவராத்திரியாமே உங்களுக்கு?
எத்தனை இரவுகள்
தொலைத்திருப்போம் எம்
தூக்கங்களை.
கொஞ்சம் அனுபவித்து தான்
பாருங்களேன் நாம் பட்ட
வலிகளையும்.

வாங்கிக் கட்டியதாமே
வன்னி வந்த
ஒரு பேய்க் குஞ்சு.
வரவுமில்லை
வாங்கவுமில்லை என்று
போட்டீர்களே ஒரு
அசத்தல் கரணம்.

சிறகிழந்த பறவையை
நீர் மறைக்கலாம்.
சிறகுவிரித்த எம் மறவரை
நீர் மறக்கலாமோ?

இறுதியாகச் சொல்கிறோம்
உங்கள் பிஞ்சுகளைக்
கொத்தா எங்கள் கழுகுகள்
இல்லாது போனால்
இல்லாமலே போய்விடுமே
வித்தியாசம்
உங்களுக்கும் எங்களுக்கும்.

பிச்சி
09-05-2007, 05:11 AM
காரமா இருக்கு வார்த்தைகள். கவி அருமை. நீங்க ஓவியன்+காவியன்.

ஷீ-நிசி
09-05-2007, 05:32 AM
ஓவியரே! பிரமாதமாயிருக்கு வரிகள்.. நல்ல முன்னேற்றம் தெரிகிறது... வாழ்த்துக்கள்!

poo
09-05-2007, 05:45 AM
வீரிய வரிகளில் மறைந்திருக்கும் சோகத்தின் கோபம் கனலாய் கொதிக்கிறது...

நிறைய எழுதுங்கள் ஓவியன்...

ஓவியன்
09-05-2007, 08:29 AM
காரமா இருக்கு வார்த்தைகள். கவி அருமை. நீங்க ஓவியன்+காவியன்.

நன்றிகள் பிச்சி

உங்கள் கவி வரிகளால் பாராட்டைக் கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

ஓவியன்
09-05-2007, 08:31 AM
ஓவியரே! பிரமாதமாயிருக்கு வரிகள்.. நல்ல முன்னேற்றம் தெரிகிறது... வாழ்த்துக்கள்!

நன்றிகள் ஷீ!
இன்னும் நல்லா முன்னேறணும் ஷீ
உங்கள் எல்லோரதும் ஆதரவில் அது ஈடேறுமென்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.

ஓவியன்
09-05-2007, 08:35 AM
வீரிய வரிகளில் மறைந்திருக்கும் சோகத்தின் கோபம் கனலாய் கொதிக்கிறது...

நிறைய எழுதுங்கள் ஓவியன்...

நன்றி அண்ணா!

இந்த மன்றத்தில் வரும் ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் சோகத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன. அது தான் ஒரு மாறுதலாக ஒரு ஆக்ரோசக் கவிதை. இதற்கு அண்மையில் ஈழத்தில் நடந்த சம்பவங்கள் கருவாயின.

அக்னி
09-05-2007, 09:42 AM
"அவலத்தைத் தந்தவனுக்கே அவலத்தை திருப்பிக் கொடு"
எனது வரிகள் அல்ல...
ஆனால், நிதர்சனமான வரிகள்...

ஓலமிட்டு கதறிய கணங்கள்...
முறையிட்டுக் களைத்த வலிகள்...
எல்லைவரை பொறுத்திருந்த அமைதி...
இவையெல்லாம் உதறப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பின்னர், சிறகுவிரித்தது தமிழர் சேனை...

சிறகுவிரித்த எம் மறவரை
நீ மறக்கலாமோ?


கவிதை என்றால் பொய் அழகு என்பார்கள்...

ஆனால், உண்மை, கவிதையாகும்போது மெய் சிலிர்த்துப்போகும் என்பது இந்தக் கவிவரிகளில் எனது அனுபவம்...

உணர்ச்சியா... புரட்சியா... எழுச்சியா...
தனித்தனியே போகும் புள்ளிகளை, எளிமையான வரிகளில், ஒன்றாக வரித்து வடிக்கப்பட்ட, இக்கவிதை... தமிழனின் வீரத்திற்கு தாங்கள் சேர்க்கும் பெருமை...
வாழ்த்துக்கள்...

ஓவியன்
09-05-2007, 10:06 AM
கவிதை என்றால் பொய் அழகு என்பார்கள்...

ஆனால், உண்மை, கவிதையாகும்போது மெய் சிலிர்த்துப்போகும் என்பது இந்தக் கவிவரிகளில் எனது அனுபவம்...

உணர்ச்சியா... புரட்சியா... எழுச்சியா...
தனித்தனியே போகும் புள்ளிகளை, எளிமையான வரிகளில், ஒன்றாக வரித்து வடிக்கப்பட்ட, இக்கவிதை... தமிழனின் வீரத்திற்கு தாங்கள் சேர்க்கும் பெருமை...
வாழ்த்துக்கள்...
நன்றிகள் அக்னி!
புரட்சியில் தான் நாமில்லை,
எங்கள் வரிகளாலே
புரட்சி செய்வோமே
என்று எழுதியது அது.
ஓலமிட்டு கதறிய கணங்கள்...
முறையிட்டுக் களைத்த வலிகள்...
எல்லைவரை பொறுத்திருந்த அமைதி...
இவையெல்லாம் உதறப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பின்னர், சிறகுவிரித்தது தமிழர் சேனை.
அருமை அக்னி,
குட்டக் குட்ட குனிபவனல்ல தமிழன்,
நம் வயல்,
நாம் தானே விதைத்து
அறுவடை செய்ய வேண்டும்
விதைத்து விட்டோம்
இப்போ அறுவடைக் காலம்

அக்னி
09-05-2007, 10:21 AM
[COLOR="DarkRed"]புரட்சியில் தான் நாமில்லை,
எங்கள் வரிகளாலே
புரட்சி செய்வோமே
என்று எழுதியது அது

தெளிவான சிந்தனை... விரைவில் நானும் உங்கள் வழி தொடர்கின்றேன்...
கரங்களில், ஆயுதம் தூக்கிப் போராடுவது மட்டும் போராட்டமல்ல...
மை தொட்டு உரிமைக்ககாக எழுதிப் போவதும், நவயுகத்தில், கணினிகளில் தட்டிப் போவதும், மனதால் உணர்வுகளில் ஒன்றிப்பதும், யாவுமே விடுதலைக்குக் கிடைக்கும் புத்தூட்டம்தான் ஓவியன்... இராமருக்கு அணில் மண் சுமந்த்துபோல... நாங்கள் உணர்வுகளால் பங்களிப்போம்...

ஓவியன்
09-05-2007, 10:25 AM
நவயுகத்தில், கணினிகளில் தட்டிப் போவதும், மனதால் உணர்வுகளில் ஒன்றிப்பதும், யாவுமே விடுதலைக்குக் கிடைக்கும் புத்தூட்டம்தான் ஓவியன்... இராமருக்கு அணில் மண் சுமந்த்துபோல... நாங்கள் உணர்வுகளால் பங்களிப்போம்...

உண்மைதான் அக்னி!

நாம் எங்கள் உயிரை அங்கே விட்டு விட்டு
உடலை மட்டும் தானே சுமந்து
இங்கு வந்தோம்.

mravikumaar
09-05-2007, 12:34 PM
கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் ஓவியன்

அன்புடன்,
ரவிக்குமார்

அன்புரசிகன்
09-05-2007, 04:53 PM
[COLOR="Blue"]கை வந்த கழுகுகள்

ஆரம்பத்திலேயே பயப்படுத்துகிறீர்களே...




வீசிய குண்டுகளில்
அவை காவிய உயிர்கள்
எத்தனை - சென் பீட்டர்ஸ்,
செஞ்சோலை என தொடர்கதை
அவர் தம்
வெறியாட்டங்கள்
அவர்கள் வீசியது குண்டுகளை மட்டுமல்ல...
காமவலைகளையும் தான்...
உதாரணம் கூறி அந்த உயிர்களின் மானத்தை வாங்க விருப்பமில்லை.



காயங்கள் கண்டதும்
காற்று மறு திசை வீசியதும்
பழங் கதை ஆயின
இன்று திறமையையும்
பலத்தையும் பரீட்சிக்கும்
புதுக் கதை, ஆம்
எங்களிடமும் கழுகுகள்.

இவ்வளவு கலமும் எம்மீது காட்டியது அவர்களின் திமைகளையும் பலத்தையுமா...
எங்களின் கழுகுகள் பலத்தை பரீட்ச்சிக்க அல்ல. ஆணிவேரையே பிடுங்குவதற்கு. கழுகுகளின் தரிப்பிடமே மாற்ற விஷேட கூட்டம் வேற...
சர்வதேச கழுகு தரிப்பிடத்தையே உலுக்கிவிட்டது நம்ம கழுகு கூட்டம்.



இப்போதெல்லாம் இருட்டினாலே
சிவராத்திரியாமே உங்களுக்கு?
எத்தனை இரவுகள்
தொலைத்திருப்போம் எம்
தூக்கங்களை.
கொஞ்சம் அனுபவித்து தான்
பாருங்களேன் நாம் பட்ட
வலிகளையும்.

அரிக்கன் விளக்கை சுழகால் மூடியதும் குப்பி விளக்கை படிக்கும் புத்தகத்தால் மூடி மறைத்ததும்.... இதையெல்லாம் அனுபவிக்கவேண்டாமா...
சாபமல்ல... நமது உள்ளத்தின் வேகம்.



வாங்கிக் கட்டியதாமே
வன்னி வந்த
ஒரு பேய்க் குஞ்சு.
வரவுமில்லை
வாங்கவுமில்லை என்று
போட்டீர்களே ஒரு
அசத்தல் கரணம்.

சிறகிழந்த பறவையை
நீ மறைக்கலாம்.
சிறகுவிரித்த எம் மறவரை
நீ மறக்கலாமோ?

காரணம் கூறுவது அவர்களுக்கேது புதுசு....
வரிகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

ஆதவா
09-05-2007, 07:18 PM
கை வந்த கழுகுகள்

நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பார்த்தேன் ஓவி. கை வந்த கழுகுகள்.???? புரியல... புரிந்தும் புரியாதமாதிரி
இருக்கு....

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்
இன்னும் பல பெயர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்

முதலில் உங்கள் கவிதைக்கு என் வந்தனம். வரிகளில் ஆக்ரோசம் தெரிகிறது. அருமையான கவிஞரப்பா நீர்.
இத்தனை நாள் எழுதாமல் ஏமாற்றிவந்துவிட்டீர்... உங்கக்கா தான் இப்படி எழுதாமல் எழுதி ஏமாற்றினார்...
அவர் பேரை வைத்துக் கொண்ட நீங்களும்........... உங்கள் வரிகள் கொதிக்கிறது சாரே! (பெயர் = Name, பேர் = Person)

வீசிய குண்டுகளில்
அவை காவிய உயிர்கள்
எத்தனை - சென் பீட்டர்ஸ்,
செஞ்சோலை என தொடர்கதை
அவர் தம்
வெறியாட்டங்கள்.

காவிய உயிர்கள் ???? அர்த்தமென்ன? கவ்விய வா? (காவு - சாவுபெறு, சாவடி, ) அருமையான துவக்கத்தோடு அருமையான நடை. நம்
உயிர் மீது விளையாடும் நாசர்களை இப்படித் திட்டுவதில் தவறில்லைதான்.

காயங்கள் கண்டதும்
காற்று மறு திசை வீசியதும்
பழங் கதை ஆயின
இன்று திறமையையும்
பலத்தையும் பரீட்சிக்கும்
புதுக் கதை, ஆம்
எங்களிடமும் கழுகுகள்.

காலத்தின் சுழற்சி... உங்களிடம் கத்தி என்றால் எங்களிடமும் கத்தி.... வரிகள் மின்னுகின்றது ஓவியன்.
கழுகுகள் என்பது சரியான வார்த்தையாகத் தெரிகிறது. தொடருங்கள்.

இப்போதெல்லாம் இருட்டினாலே
சிவராத்திரியாமே உங்களுக்கு?
எத்தனை இரவுகள்
தொலைத்திருப்போம் எம்
தூக்கங்களை.
கொஞ்சம் அனுபவித்து தான்
பாருங்களேன் நாம் பட்ட
வலிகளையும்.

இருட்டும் சிவராத்திரி.... அருமையான வரிகள். நாம் தொலைத்த இரவுகளை அவர்கள் அனுபவித்த இரவுகளை
காலம் கொஞ்சம் மாற்றிப் போட்டு காண்பிக்கிறது பாருங்கள். காலசுழற்சி. அதென்ன கொஞ்சம்
அனுபவித்து???? நிறையவே அனுபவிக்கட்டும்.

வாங்கிக் கட்டியதாமே
வன்னி வந்த
ஒரு பேய்க் குஞ்சு.
வரவுமில்லை
வாங்கவுமில்லை என்று
போட்டீர்களே ஒரு
அசத்தல் கரணம்.

இந்த செய்தி எனக்குத் தெரியாது என்றாலும் வரியமைப்பு அருமையப்பா... தூள்... கடைசி வரிகளில் கரணமும்
ஓகே காரணமும் ஓகே... சரியா ஓவியன்?

சிறகிழந்த பறவையை
நீ மறைக்கலாம்.
சிறகுவிரித்த எம் மறவரை
நீ மறக்கலாமோ?

கூடாது.. அது அவர்களால் முடியாது. எதுகையமைப்பு மிக அருமை.. திடீரென்று இங்கு ஒருமையில் அழைப்பதேன்? இதற்கு முன்வரை நீங்கள், உங்கள் என்ற வரிகளே மிகுந்தன.

இறுதியாகச் சொல்கிறோம்
உங்கள் பிஞ்சுகளைக்
கொத்தா எங்கள் கழுகுகள்
இல்லாது போனால்
இல்லாமலே போய்விடுமே
வித்தியாசம்
உங்களுக்கும் எங்களுக்கும்.

அதுவும் சரிதான்... வித்தியாசமில்லாமல் போய்விடும்...

ஓவியன். கவிதை அருமை. கொஞ்சம் அல்ல நிறையவே ஆக்ரோஷத்தைக் கலந்து தெளித்துள்ளீர். ஆனால்
கொஞ்சம் அல்ல நிறையவே பிழைகளையும் சேர்த்து தெளித்துவிட்டீரே!!

கவிதைகளைப் பொருத்தவரை பிழைகளை ஒருமுறைக்கு இருமுறை கவனித்து களையவேண்டும்... ஏனெனில்
அர்த்தங்களே மாறிவிடும் வாய்ப்புண்டு. மற்றபடி குறையின்றி அழகாய் மின்னுகிறது.. ஈழத்து பாசமும் தான்..

அறிஞர்
09-05-2007, 07:27 PM
புரட்சிகரமான வீரிய வார்த்தை..
இத்துயரை கண்டு பாதிக்கப்பட்டவரே
இவ்வாறு எழுத இயலும்....

ஆதவன் போல் எனக்கும் சந்தேகம் தலைப்பிற்கு இதற்கும் எப்படி தொடர்பு வருகிறது.

ஆதவா
09-05-2007, 07:33 PM
அறிஞரே! ஒருவேளை சிறகு முளைத்த கழுகுன்னு போடலாமோ??? அப்படியும் தப்பாச்சே... கை வந்த என்றால் ....... ஓவியரே!! வந்து விளக்குங்கள்.

அக்னி
10-05-2007, 01:07 PM
அறிஞரே! ஒருவேளை சிறகு முளைத்த கழுகுன்னு போடலாமோ??? அப்படியும் தப்பாச்சே... கை வந்த என்றால் ....... ஓவியரே!! வந்து விளக்குங்கள்.

"தமிழன் கை வந்த கழுகுகள்"
எனப் பொருள்படுமோ...?

சுட்டிபையன்
10-05-2007, 01:16 PM
ஓவி இப்போதுதான் இந்தக் கவிதையை படித்தேன்

பழைய நிகழ்வுகள் எல்லாம் நிழலாடியது, எத்தனை நவாலி எத்தனை நாகர்கோவில் எத்தனை முல்லை தீவுகளில் நம் பிஞ்சுகள் கதறக் கதற துடித்து இறந்திருப்பார்கள் எழுதும் போதே என் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கிண்றன

அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வா

வினை விதைத்தவை வினை அறுப்பான்
அது பழ மொழி அதுதான் இப்போது நடக்கிறது

தலைவன் சொல்லுன் வசனம் அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பக் கொடு அதுதான் தற்போது நடக்கிறது, சிங்கள தேசத்தின் அழிவு ஆரம்பமாகிவிட்டது

பிணந்த்திண்ணி கழுகுகள் கொத்தித் திண்ற எமது பிஞ்சுகளின் ஆதமா சாந்தியடையும்

சுட்டிபையன்
10-05-2007, 01:31 PM
இப்படி ஒரு அழகான கவிதையை வடித்த கவியை வெறூம் கையுடன் அனுபலாமா....................?

சுட்டியின் குட்டி வெகுமானம் ஓவியனுக்கு 1000பணம்

ஓவியன்
12-05-2007, 08:57 AM
ஆரம்பத்திலேயே பயப்படுத்துகிறீர்களே.

அன்பு!

ஒரு ஈழத் தமிழனாக உங்களது நிதர்சனமான விமர்சனங்களுக்கு கோடி நன்றிகள்.

ஓவியன்
12-05-2007, 09:08 AM
கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் ஓவியன்

அன்புடன்,
ரவிக்குமார்

நன்றி ரவி!

வாசகி
12-05-2007, 09:19 AM
உண்மைதான் ஓவியன்.

தொடர்கதையாக இருந்த
நம்மவர் அவலங்கள்
முடியும் தறுவாயில்
புதிய தொடராக
அரச அரக்கனுக்கு
அதிரடி அவலம்.

பால்குடிக்கும் பருவத்தில்
பாழாகிய பிஞ்சுகள்
பள்ளி செல்லும் வயதில்
கள்ளிகளாகிய குஞ்சுகள்.
அத்தனைக்கும் காரணம் இக்கழுகுகள்

மலராக இருக்கும் மங்கைகள்
பூச்சூடாமல் இருப்பது எதனாலே?
கொள்ளி வைக்கும் பிள்ளையை
மண்ணுக்கு விதைத்தது எதனாலே
அத்தனையும் இக்கழுக்குகளினாலே

அத்தனைக்கும் சாவுமணி
அடித்தது தமிழரணி
அதிர்ந்தது கொழும்பு
ஆடியது பொருளாதாரம்
அடங்கட்டும் அவர்கள் கொட்டம்.

ஓவியன்
12-05-2007, 09:48 AM
விரிவான விமர்சனத்திற்கு நன்றி ஆதவா!

நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பார்த்தேன் ஓவி. கை வந்த கழுகுகள்.???? புரியல... புரிந்தும் புரியாதமாதிரி
இருக்கு......
''கையில் வந்த கழுகுகள்'' அத்துடன் ''கைதேர்ந்த(கைவந்த) கழுகுகள்'' என்று இரு அர்த்ததில் தலைப்பு சூட்டினேன்.


முதலில் உங்கள் கவிதைக்கு என் வந்தனம். வரிகளில் ஆக்ரோசம் தெரிகிறது. அருமையான கவிஞரப்பா நீர்.
இத்தனை நாள் எழுதாமல் ஏமாற்றிவந்துவிட்டீர்... உங்கக்கா தான் இப்படி எழுதாமல் எழுதி ஏமாற்றினார்...
அவர் பேரை வைத்துக் கொண்ட நீங்களும்........... உங்கள் வரிகள் கொதிக்கிறது சாரே! (பெயர் = Name, பேர் = Person)..
ஓவியாவின் தம்பி தானே - அது தான்!

ஹி!,ஹி!



காவிய உயிர்கள் ???? அர்த்தமென்ன? கவ்விய வா? (காவு - சாவுபெறு, சாவடி, ) அருமையான துவக்கத்தோடு அருமையான நடை. நம்
உயிர் மீது விளையாடும் நாசர்களை இப்படித் திட்டுவதில் தவறில்லைதான்...

காவிய-''காவிச் சென்ற'' என்றும் பொருள் படுமே


[I][COLOR=darkslateblue]இப்போதெல்லாம் இருட்டினாலே
இருட்டும் சிவராத்திரி.... அருமையான வரிகள். நாம் தொலைத்த இரவுகளை அவர்கள் அனுபவித்த இரவுகளை
காலம் கொஞ்சம் மாற்றிப் போட்டு காண்பிக்கிறது பாருங்கள். காலசுழற்சி. அதென்ன கொஞ்சம்
அனுபவித்து???? நிறையவே அனுபவிக்கட்டும்...
ஆமாம் அனுபவிக்கட்டுமே!!


இந்த செய்தி எனக்குத் தெரியாது என்றாலும் வரியமைப்பு அருமையப்பா... தூள்... கடைசி வரிகளில் கரணமும்
ஓகே காரணமும் ஓகே... சரியா ஓவியன்?..
வன்னியில் தாக்கச் சென்ற ஒரு அரச விமானம் போராளிகளிடம் அடி வாங்கி கடலில் விழுந்தது என்பது கடந்த வாரச் செய்தி.

கூடாது.. அது அவர்களால் முடியாது. எதுகையமைப்பு மிக அருமை.. திடீரென்று இங்கு ஒருமையில் அழைப்பதேன்? இதற்கு முன்வரை நீங்கள், உங்கள் என்ற வரிகளே மிகுந்தன...

மரியாதையாக நீர் என்ற்று மாற்றி விட்டேன்.



அதுவும் சரிதான்... வித்தியாசமில்லாமல் போய்விடும்...

ஓவியன். கவிதை அருமை. கொஞ்சம் அல்ல நிறையவே ஆக்ரோஷத்தைக் கலந்து தெளித்துள்ளீர். ஆனால்
கொஞ்சம் அல்ல நிறையவே பிழைகளையும் சேர்த்து தெளித்துவிட்டீரே!!

கவிதைகளைப் பொருத்தவரை பிழைகளை ஒருமுறைக்கு இருமுறை கவனித்து களையவேண்டும்... ஏனெனில்
அர்த்தங்களே மாறிவிடும் வாய்ப்புண்டு. மற்றபடி குறையின்றி அழகாய் மின்னுகிறது.. ஈழத்து பாசமும் தான்..
நன்றி ஆதவா!, உங்களது விமர்சனம் என்னை மெருகேற்றும்

பி.கு-பிழைகளைத் திருத்தியுள்ளேன்.

ஓவியன்
12-05-2007, 09:57 AM
இப்படி ஒரு அழகான கவிதையை வடித்த கவியை வெறூம் கையுடன் அனுபலாமா....................?

சுட்டியின் குட்டி வெகுமானம் ஓவியனுக்கு 1000பணம்

நன்றிகள் சுட்டி!

இந்த மன்றில் உங்களிடமிருந்து அதிகளவு பணம் பெற்றது நானாகத் தானிருப்பேனோ?:wub:

ஓவியன்
12-05-2007, 09:59 AM
புரட்சிகரமான வீரிய வார்த்தை..
இத்துயரை கண்டு பாதிக்கப்பட்டவரே
இவ்வாறு எழுத இயலும்....

ஆதவன் போல் எனக்கும் சந்தேகம் தலைப்பிற்கு இதற்கும் எப்படி தொடர்பு வருகிறது.

நன்றிகள் அறிஞரே!

கை வந்த - கையில் வந்த, கைதேர்ந்த.. என்று எடுத்துக் கொண்டேன்.

ஓவியன்
12-05-2007, 10:00 AM
அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வா

வினை விதைத்தவை வினை அறுப்பான்
அது பழ மொழி அதுதான் இப்போது நடக்கிறது

தலைவன் சொல்லுன் வசனம் அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பக் கொடு அதுதான் தற்போது நடக்கிறது, சிங்கள தேசத்தின் அழிவு ஆரம்பமாகிவிட்டது

பிணந்த்திண்ணி கழுகுகள் கொத்தித் திண்ற எமது பிஞ்சுகளின் ஆதமா சாந்தியடையும்

உமது கருத்திற்கு நன்றிகள் சுட்டி!

ஓவியன்
12-05-2007, 10:02 AM
உண்மைதான் ஓவியன்.

தொடர்கதையாக இருந்த
நம்மவர் அவலங்கள்
முடியும் தறுவாயில்
புதிய தொடராக
அரச அரக்கனுக்கு
அதிரடி அவலம்.

பால்குடிக்கும் பருவத்தில்
பாழாகிய பிஞ்சுகள்
பள்ளி செல்லும் வயதில்
கள்ளிகளாகிய குஞ்சுகள்.
அத்தனைக்கும் காரணம் இக்கழுகுகள்

மலராக இருக்கும் மங்கைகள்
பூச்சூடாமல் இருப்பது எதனாலே?
கொள்ளி வைக்கும் பிள்ளையை
மண்ணுக்கு விதைத்தது எதனாலே
அத்தனையும் இக்கழுக்குகளினாலே

அத்தனைக்கும் சாவுமணி
அடித்தது தமிழரணி
அதிர்ந்தது கொழும்பு
ஆடியது பொருளாதாரம்
அடங்கட்டும் அவர்கள் கொட்டம்.

கவியால் கவி விமர்சனமா??

உங்கள் விமர்சனக் கவியால் மெய்சிலிர்த்தேன் நிலா!

நன்றிகள் கோடி.

அமரன்
14-05-2007, 12:11 PM
முதலில் இந்த அவலங்களை அனுபவித்தவன் என்ற முறையில் ஓவியனுக்கெ எனது நன்றிகளும் வாழ்த்துகளும். செஞ்சோலையிலும் பாடசாலைகளிலும் நாளைய மன்னர்களை தமிழ்ப்பிஞ்சுகளைக் கொன்று குவிக்கும் இனவாதப் பேயின் ஆதர்ச தூதுவனே இந்த விமானக்கழுகுகள். அவர்கள் ஆடிய ஆட்டத்தின் அவலங்களை கண்முன் மீண்டும் ஒரு முறை நிழலாடச் செய்துவிட்டது உங்கள் கவிதை. கவிதையின் இறுதி வரிகள் ஒரு டச்சைக் கொடுக்கின்றன. மனிதர்களை அழிப்பதல்ல போராட்டம். மக்களைக் காப்பதே போராட்டம். அவர்கள் போராடுகின்றனர்.

உங்களளவிற்கு இல்லாவிடினும் என் பங்கிற்கு சிறு துளி.

கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள்
துள்ளி எழுந்து துள்ளித்திரிந்தவர்
பற்களை உடைத்துள்ளனர்
எலியென நினைத்தவர்கள்
புலியெனப் பாய்ந்து
கிலிகொள்ள வைக்கின்றனர்.

ஓவியன்
19-05-2007, 09:52 AM
கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள்
துள்ளி எழுந்து துள்ளித்திரிந்தவர்
பற்களை உடைத்துள்ளனர்
எலியென நினைத்தவர்கள்
புலியெனப் பாய்ந்து
கிலிகொள்ள வைக்கின்றனர்.

அருமை அமரன்!

உங்கள் பின்னூட்டத்திற்கு கோடி நன்றிகள்.

மனோஜ்
19-05-2007, 10:06 AM
அருமை கவிதை உண்மையை உருக்கி வைத்து எழுதியது

இறுதியாகச் சொல்கிறோம்
உங்கள் பிஞ்சுகளைக்
கொத்தா எங்கள் கழுகுகள்
இல்லாது போனால்
இல்லாமலே போய்விடுமே
வித்தியாசம்
உங்களுக்கும் எங்களுக்கும்.
முடிவு வரிகள் அருமை ஓவியரே

ஓவியன்
19-05-2007, 10:09 AM
அருமை கவிதை உண்மையை உருக்கி வைத்து எழுதியது

முடிவு வரிகள் அருமை ஓவியரே

நன்றிகள் மனோஜ்!!

உண்மைகள் எப்போதும் கூர்மையானது மனோஜ்!

இனியவள்
12-07-2007, 06:31 PM
கவிதை அருமை ஓவியன்
இப்பொழுது தான் பார்த்தேன்

எம்மை அழிக்க நினைத்து
உன்னை நீயே அழிக்கின்றாய்
உன் கை கொண்டே
உன்னை அழிக்கின்றேன்
இனியும் மோதாதே
எங்களிடம் கைக் கட்டி
பார்த்துக் கொண்டு
இருப்பதற்கு நாம் இன்னும்
பொம்மைகள் அல்ல
நீ ஒரு அடி அடித்தால்
பத்து அடி அடிக்கும்
வீர மக்கள் நாம்

ஓவியன்
12-07-2007, 06:35 PM
கவிதை அருமை ஓவியன்
இப்பொழுது தான் பார்த்தேன்

எம்மை அழிக்க நினைத்து
உன்னை நீயே அழிக்கின்றாய்
உன் கை கொண்டே
உன்னை அழிக்கின்றேன்
இனியும் மோதாதே
எங்களிடம் கைக் கட்டி
பார்த்துக் கொண்டு
இருப்பதற்கு நாம் இன்னும்
பொம்மைகள் அல்ல
நீ ஒரு அடி அடித்தால்
பத்து அடி அடிக்கும்
வீர மக்கள் நாம்

நன்றி இனியவள்!

எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை இருக்கு − அது தாண்டப்படுகையில் புழுவும் புயலாகச் சீறுவது தவிர்க்கப் பட முடியாத ஒன்று!.

எம் மீதான அடக்கு முறைகள் அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி வெகு காலம் − அது தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!.

இனியவள்
12-07-2007, 06:46 PM
நன்றி இனியவள்!

எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை இருக்கு − அது தாண்டப்படுகையில் புழுவும் புயலாகச் சீறுவது தவிர்க்கப் பட முடியாத ஒன்று!.

எம் மீதான அடக்கு முறைகள் அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி வெகு காலம் − அது தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!.

ம்ம் ஆமாம் ஓவியன்

அனுபவி ராசா அனுபவி
நாம் பட்ட துன்பங்களை
நீயும் கொஞ்சம் அனுபவி
நிலா பார்த்து சோறு உண்ட
எம்மை விமானம் வந்து
தாக்குமோ என்று அச்சப்
பட்டு வானத்தைப் பார்த்து
பயந்து ஓட வைத்த நீங்களும்
அனுபவிக்க வேண்டாம எம்
வேதனைகளை

பிள்ளைகளின் சிரிப்புக் குரல்
கேட்டு களிப்புற்று இருந்த
எம்மை அவலக் குரலால்
ஜடமாக்கவைத்த எமது
வேதனைகள் நீங்கள் காண
வேண்டாமா

அனுபவி ராசா அனுபவி

நேற்றுப் பிறந்த மழலை முகம்
கண்டு களிப்புற்ற அன்னையவள்
அடுத்த நாள் விமான வீச்சில்
பிணமாய்ப் போன பிள்ளையினைக்
கட்டிப் பிடித்த காட்சியினை கண்டு
பதை பதைக்கும் எங்களைப் போல்
நீங்களும் பதை பதைத்து ஓட வேண்டாமா

இது பழிக்கு பழியல்லவே நாங்கள்
பட்ட துன்பத்தை நீங்கள் அனுபவித்தாவது
பார்க்க வேண்டாமா உங்கள் உடமைகளையோ
உயிர்களையோ நாம் பறிக்கவில்லை நாம்
பட்ட துன்பத்தை கஷ்டத்தை அனுபவி ராசா
நீங்களும் அனுபவி...

பறக்கும் விமானத்துக்கே இப்படி
கிலி கொள்ளும் கேழைகளே
குண்டு வீச்சு விமானத்தை கண்டு
நெஞ்சுரத்தோடு நிற்கும் வீரமக்கள்
நாங்களல்லவோ .....

அனுபவி ராசா அனுபவி
நாங்கள் பட்ட துன்பத்தில்
பாதியாவது அனுபவி

எதோ உணர்ச்சி வேகத்தில் மனதில் பட்டதை எழுதியது யாருடைய மனமாவது புண்பட்டால் இந்தப் பதிவை நீக்கலாம் நன்றி

ஓவியன்
12-07-2007, 06:50 PM
அனுபவித்தேன் உங்கள் வரிகளை இனியவள்!, நகைச்சுவை மாதிரியே சுடும் நிஜங்களைச் சொல்லும் உங்களது பாணி அருமை − பாராட்டுக்கள்!.

இனியவள்
12-07-2007, 06:53 PM
அனுபவித்தேன் உங்கள் வரிகளை இனியவள்!, நகைச்சுவை மாதிரியே சுடும் நிஜங்களைச் சொல்லும் உங்களது பாணி அருமை − பாராட்டுக்கள்!.

நன்றி ஓவியன்

மனதில் அக் கவிதையைப் படித்தவுடன் மனதில் தோன்றியதை அப்படியே பதிந்து விட்டேன் சின்ன நெருடல் யாருடைய மனதையாவது புண்படுத்திவிடுமா என்று