PDA

View Full Version : ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )தங்கவேல்
09-05-2007, 03:27 AM
ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )

இரு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது ஆகையால் கன்செஸன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தொயவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும்.விபரம் தொயாமல் போர்வை, காற்று தலைகாணி எல்லாம் எடுத்து சென்றேன். ஆனால் அங்கு இதெல்லாம் கொடுத்தனர். முதன் முதலில் ஏசியில் பயணம் அல்லவா ? தொய வில்லை. சா இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. கழிவரை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். அதனால் இயலவில்லை. வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டு விட்டு படுத்தாகி விட்டது. ஒரு மணி. இயற்கை உபாதை அழைக்க, மெதுவாக தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே....எப்படி கையை கீழே வைப்பது..? சுத்தப்படுத்தாமல் உண்மையான நரகத்தினை அங்கு கண்டேன். வருத்ததுடன் படுக்கைக்கு திரும்பி வந்து, இயற்கை உபாதையை கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்கு தான் தொயும். விடிகாலை... சென்னை வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். எப்படி.. தவழ முடியுமா ? இயலாது. போர்டரை அழைத்து ஒரு நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்கு தொயாது என்றார். இந்த களேபரத்திலும் குளிர் காற்றை அனுபவித்து கொண்டு இருந்தேன். என்ன செய்வது ? என்னை போல இருப்போருக்கு கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டியதுதான். சுற்றுலாவது ஒன்னாவது ? எங்கே செல்ல இயலும். ஒரு வழியாக என்ன கேட்கிறீங்க என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்க , எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்டான் திட்டினை வாங்கி கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன். அடுத்து ஆட்டோ. பேரம். நூறு ரூபாய்க்கு படிந்தார். இரவு நேரம். மீண்டும் இரயில் நிலையம். எனது நண்பர் நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். பத்து மணிக்கும் இரயில். ஏழு மணி அளவில் எழும்பூர் நிலயத்தின் படியில் அமர்ந்தேன். மணி ஒன்பது இருபது. ஒரு ஓட்டை நாற்காலியினை வேர்க்க விரு விருக்க கொண்டு வந்தார் நண்பர்.

ஸ்டேசன் மாஸ்டாடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினை கொடுத்து இருக்கிறார். அதற்க்குள் போர்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் நண்பாடம் இந்த நாற்காலி வி ஐ பிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினை பிடுங்கி உள்ளே வைத்து விட்டார். அந்த சமயத்தில் வந்த ஒரு போர்டர் அந்த நாற்காலியினை எடுத்து சென்று விட்டாராம். அதற்கு பாஸ்கர் சார் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினை தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால் இல்லாதவருக்கு. என்னை போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளி சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவான் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்து விட்டார். அவாடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தார் எனது நண்பர் இரு ஊனமுற்றவர்களுடன்.

வி ஐ பி க்கு மட்டும் தான் பணம் கட்டுகிறாரா ? வி ஐ பிக்கு மட்டும் தான் நல்ல நாற்காலியா ? எனக்கும் அவருக்கும் ஒரே ரத்தம் தானே. எங்களுக்கு உதவதானே அரசாங்க பணியாளர்கள் இருக்கின்றார்கள். அரசியல் சட்டத்தில் வி ஐ பிக்கு ஒரு நடை முறையும் எனக்கும் ஒரு நடை முறையும் பின் பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா ? ( எனக்கு தொயவில்லை,அப்படி ஏதேனும் இருக்கின்றதா ?). இப்படி என்னனவோ கேள்விகள் மனதினுள். என்ன செய்ய இயலும் என்னால். எளியோரை வாதிப்பது வலியோருக்கு வாடிக்கையா ? கால்கள் ஊனமாக பிறந்தது குற்றமா ? அப்படி குற்றமெனில் அரசாங்கமே எங்களை கருணை கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ? அரசு அதிகாகளே, என்னை போன்றோரை பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாக போகும். கலெகடர் அலுவலகத்தில் கணிபொறி பணி காலி இடம் இருப்பதாக கேள்விப்பட்டு மனு கொடுக்க சென்று இருந்த போது, அங்கிருந்த அதிகாகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்து விட்டனர். ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்க பணம், அப்புறம் ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் கைஎழுத்து வாங்கினால் தான் அட்டை செல்லும் என் கின்றனர். அந்த மருத்துவர் அந்த சமயத்தில் அங்கு இருந்தால், வீண் அழைச்சல் இல்லை. இப்படி எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தபடும் , உதாசீனபடுத்த படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள்.


அதனால் தான் சொல்லுகிறேன் எனது அருமை நண்பர்களே....

பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எதையும் அனுபவித்து பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி வழி விட்டால், எனது இந்த கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு.. என்ன செய்வீர்களா ???

அன்புடன்,
தங்கவேல்.

ஷீ-நிசி
09-05-2007, 03:50 AM
நண்பரே! உங்கள் வேதனை மனம் கணக்க வைககிறது.. காலிருப்பவனாலேயே ஈடுகொடுக்கமுடியாது அரசாங்க ஊழியர்களின் அலைக்கழிப்பை.. இதில் உங்களைப்போன்றவர்கள் என்னதான் செய்யமுடியும்.. இலஞ்சம் வாங்கி ஊழியம் செய்யும் உத்தமர்கள், குறைந்தபட்சம் உங்கள் போன்றவர்களுக்காவது தன் கடமையை செய்து செய்யும் பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ளக்கூடாதா...

நண்பரே! ஏன் தெரியுமா இறைவன் சிலருக்கு ஊனத்தை படைத்திருக்கிறார்? காரணம் தன்னைப்போலவே எதையும் தாங்கும் மனவலிமையும், திட மனதும் அந்த சிலருக்கு மட்டுமே இருப்பதனால்தான்..

இனி எங்காவது ஊனமுற்றவர்களை சந்திக்க நேர்ந்தால் மனம் இன்னும் கொஞ்சம் கனக்கும்..

வருத்தம் வேண்டாம் தோழரே, காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது..

உங்களுக்காக, நண்பர் மனோஜ் அவர்கள் ஏற்படுத்தின ஒரு ஊக்கப்படுத்தும் திரியின் சுட்டி கீழே உள்ளது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8054

தாமரை
09-05-2007, 04:23 AM
பல மனிதர்களின் இப்போக்கு மன வருத்தத்தையே அளிக்கிறது. தமிழ் மன்ற உறுப்பினர்கள் தம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு உதவிகள் அளித்து கனிவுடன் நடத்துவோம். எமது கண்ணெதிரில் இவ்வகை அரக்கத்தனங்கள் நடந்தால் தட்டிக் கேட்போம்.

மதி
09-05-2007, 04:28 AM
மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. நடைமுறையில் இன்று இலஞ்சம் மிகவும் பெருகிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அது போகட்டும் என்றால் மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதென்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும் மனிதாபிமானமும் எங்கோ அதல பாதாளத்தில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறது. மனிதன் மனிதத்தை இழந்துக் கொண்டிருக்கிறான்.

ஆயினும் செல்வர் சொன்னது போல் நம் மன்றத்தினர் அனைவரும் மற்றவருக்கு முடிந்தவரையில் உதவுவோம் என உறுதிமொழி எடுப்போம்.

leomohan
09-05-2007, 05:14 AM
மனிதனே மனிதனை மதிப்பதில்லை.

poo
09-05-2007, 05:50 AM
இலஞ்சத்திற்கு கண்கள் இல்லை..இதயம் இல்லை..ஈரம் இல்லை..

வருந்தவேண்டாம் நண்பரே... ஈனப்பிறவிகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் நடையினைத் தொடருங்கள்...

Gowthami555
11-05-2007, 10:33 AM
உங்கள் அனுபவங்களை படித்தபின் மனசில் பாரம்..உடல் ஊனமுற்றவர்களுக்கு அடிப்படை மனிதாபிமானம் காட்டாத கல் நெஞ்சர்களும் இருக்கிறார்களே..இவர்கள் எல்லாம் எப்போதுதான் மாறுவார்களோ..

அறிஞர்
11-05-2007, 12:53 PM
தங்களின் செய்தி மிகவும் மனதை பாதித்தது.

இந்தியாவில் ஏன் இந்த கொடுமை.....

நான் சென்ற பல வெளிநாடுகளில் முதல் முன்னுரிமை... உடல் ஊனமுற்றவர்களுக்கு தான்.

நாற்காலி கொடுக்காமல் அலைய வைத்த ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு என்று தான் நல்ல புத்தி வருமோ.

லல்லூ பிரசாத், இணை மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பலாம். குப்பைக்கு அனுப்பாமல் இருக்கனும்..

மனோஜ்
11-05-2007, 01:57 PM
உண்மையில் நண்பரே இப்படி பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்றும் என்மனம் என்னை தட்டி எழுப்பி கொண்டுருக்ம் எனது முக்கிய வாழ்வின் நோக்கம் ஆனாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவுவதே
விரைவில் அதன் வழி பிறக்கும் என்று இறைவனில் என்னுகிறோன்
என்னால் முடிந்ததை செய்ய....

lolluvathiyar
11-05-2007, 02:56 PM
கொள்ளை அடிக்கவே தோண்றியது அரசு
அதில் ஊழியம் செய்யும் நபர் மட்டும் என்ன
உத்தமனாகவா இருக்க முடியும்.

இவர்களை திருத்த முடியாது
முடிந்தால் துஷ்ட்டனை கண்டால்
தூர விலகு என்று வாழ வேண்டும்

அனைவரும் ஒரு சபதம் எடுப்போம்
பாவ கறையும் சாபமும் நிறைந்த அரசு வேலை தேட கூடாது
அரசு வேலையிலிருக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பது கொடுப்பது வேண்டாம்
அந்த பாவம் நம் சந்ததியரை சேர வேண்டாம்

அறிஞர்
11-05-2007, 03:01 PM
அனைவரும் ஒரு சபதம் எடுப்போம்
பாவ கறையும் சாபமும் நிறைந்த அரசு வேலை தேட கூடாது
அரசு வேலையிலிருக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பது கொடுப்பது வேண்டாம்
அந்த பாவம் நம் சந்ததியரை சேர வேண்டாம்
ஆஹா இது ஒரு புதுக்கொள்கையாக இருக்கே....
அரசு ஊழியர் அனைவரும் கெட்டவர்கள் இல்லையே..

lolluvathiyar
11-05-2007, 03:06 PM
அரசு ஊழியர் அனைவரும் கெட்டவர்கள் இல்லையே..

அரசு என்பது பொதுமக்களின்
உழைப்பை வரி என்ற பெயரில் அளவுக்கு மீறி
சுரண்டி அதை கனக்கு எழுதியே
ஆடம்பரமாக கொண்டாடும் ஒரு கொள்ளை கூட்டம்
எந்த வரியும் இன்முகமாக கொடுபதில்லை
வயிரு எரிந்து தரபட்ட வரியில் தான்
அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்
அந்த ஒரு பாவமே போதும் நான் எடுத்த சபதத்துக்கு

ஷீ-நிசி
11-05-2007, 04:29 PM
கொள்ளை அடிக்கவே தோண்றியது அரசு
அதில் ஊழியம் செய்யும் நபர் மட்டும் என்ன
உத்தமனாகவா இருக்க முடியும்.

இவர்களை திருத்த முடியாது
முடிந்தால் துஷ்ட்டனை கண்டால்
தூர விலகு என்று வாழ வேண்டும்

அனைவரும் ஒரு சபதம் எடுப்போம்
பாவ கறையும் சாபமும் நிறைந்த அரசு வேலை தேட கூடாது
அரசு வேலையிலிருக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பது கொடுப்பது வேண்டாம்
அந்த பாவம் நம் சந்ததியரை சேர வேண்டாம்

பெற்றவர் செய்யும் தவறுக்கு அவரின் பிள்ளைகள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்... அந்த கயவர்களை மட்டும் தண்டிக்கலாம்.

ம்ம்ம்ம்ம். அதெல்லாம் நம்ம நாட்டில நடக்காதுங்க வாத்தியாரே.. இதமாதிரி பேசிப்பேசி மனம் வெறுத்துவிட்டது....

gragavan
11-05-2007, 04:50 PM
மிகவும் வருந்தத்தக்க செயல். இந்திய அரசு அதிகாரிகள் சீரழிந்து ஆண்டுகள் பலவாயின நண்பரே. இங்கு அரசு ஊழியர்கள் யாரும் இருந்தால் சண்டைக்கு வராதீர்கள். உண்மை நிலவரம் அதுதான். நாங்களும் நிறைய பட்டிருக்கிறோம். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னுடடய அத்தையார் ஒருவர் பிறப்பால் மனவளம் குன்றியவர். ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறந்தவர். அவருக்கு அரசாங்கம் ரயிலில் சலுகைக் கட்டணம் கொடுத்திருக்கிறது. அதற்கான மருத்துவச் சான்றிதழைக் கொண்டு சென்று டிக்கெட் பதியும் பொழுது அந்த அதிகாரி பேசிய பேச்சு. அப்பப்பா! ஏதோ அவரது சொத்தைப் பிடுங்கித் தின்பது போல. எனக்கு ஆத்திரம் வந்து "இந்தக் கஷ்டம் ஒங்களுக்கு வந்தாத்தான் தெரியும்" என்று திட்டி விட்டேன். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த வயது. ஆகையால் அப்படித் திட்டினேன். ஆனால் இப்பொழுது திட்டியிருக்க மாட்டேன். ஏனென்றால் அந்தக் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது.

Manimegalai
11-05-2007, 07:27 PM
மனம் கணக்கிறது...தங்கவேல்.....

இரக்கமற்ற இந்த மனித பிறவிகளை விழுங்க காத்திருக்கிறது நரகம்....

கடவுள் பார்வையில், எங்கள் பார்வையிலும் உங்களைப் போன்றோர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் தெரியுமா?

மனம் சோர்வடையாதீகள்...தங்கவேல்......

.:icon_give_rose:

:music-smiley-019:

அறிஞர்
11-05-2007, 07:29 PM
மணிமேகலையை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.. உங்களின் உற்சாக வார்த்தைகள் தங்கவேலிற்கு டானிக்காக மாறும் என நம்புகிறேன்.

Manimegalai
11-05-2007, 07:53 PM
மணிமேகலையை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.. உங்களின் உற்சாக வார்த்தைகள் தங்கவேலிற்கு டானிக்காக மாறும் என நம்புகிறேன்.


நன்றி அறிஞர் அவர்களே!

தங்கவேல்
12-05-2007, 04:39 AM
தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன். இன்னும் ஒரு நிகழ்ச்சி மனதில் இருந்து விலகாமல் இருக்கிறது. அது...

கல்லூரி படிக்கும் போது, ஒரு முறை டவுன் பஸ்ஸில் பயணித்தேன். கடைசி இருக்கை. பஸ்ஸும் விரைவாக சென்று கொண்டு இருந்தது. திடீரென்று ஓட்டுனர் ஒலிப்பானை அலற விட்டார். பஸ்ஸில் இருந்த அனைவரும் ஒவ்வருவராக வெளியில் குதித்து விட்டனர். காரணம் பஸ்ஸில் பிரேக் பிடிக்க வில்லை. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எதிரே வந்த வாகானங்கள் விலக, எங்கும் மோதாமல் ஓட்டுனர் பஸ்ஸை வழி நடத்தினார். ஓட்டுனர் என்னை பார்த்து கத்துகிறார். " யோவ் கீழே இறங்குய்யா " வெளியில் இருந்து எல்லாம் திட்டுகின்றனர். அவர்களுக்கு என்னை பற்றி தெரியவில்லை. ஓட்டுனருக்கு ஆத்திரம். இவ்வளவு தூரம் கத்துகிறோம் இவனுக்கு திமிரை பார் என்று. இருந்தும் பஸ்ஸை திறமையாக வழி நடத்தி, ஓரிடத்தில் குதித்து விட்டார். நான் மட்டும் பஸ்ஸுக்குள். எனது எதிரே இருந்த கம்பியினை இருக்க பிடித்து கொண்டு பஸ்ஸின் தரையில் அமர்ந்து விட்டேன். ஓட்டுனர் இன்றி சென்ற பஸ் ஓரிடத்தில் மரத்தின் மீது மோதி நின்று விட்டது. ஒருவர் ஆத்திரத்துடன் என்னை அடிக்க வந்தவர் பார்த்து விட்டு கதி கலங்கி நின்றார். ஓட்டுனர் என்னை பார்த்து அழுது விட்டார். பலர் எனக்கு சோடா வாங்கி தந்தனர். சிலர் என் அருகில் அமர்ந்து ஆறுதல் வார்த்தை சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி சொன்னேன். அந்த ஆக்சிடன்டில் எனக்கு ஒன்றும் ஆக வில்லை. அந்த நேரத்தில் எனது மனம் என்ன பாடு பட்டு இருக்கும். இருந்தாலும் , தன்னம்பிக்கை குறையாமல் இன்னும் வாழ்க்கையோடு போராடுகிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன்.

தங்கவேல்
12-05-2007, 04:48 AM
அறிஞர் அவர்களே, நீங்கள் அமெரிக்காவிலா இருக்கின்றீர்கள். எனக்கு ஒரு கனவு இருக்கின்றது. என்றாவது ஒரு நாள் அமெரிக்கா சென்று அந்த ஊரின் அழகினை ரசிக்க வேண்டும் என்று. இந்த பிறப்பில் முடியாது. அடுத்க பிறப்பில் பார்ப்பேன் என நம்புகிறேன். ஏதாவது வெப் சைட் இருந்தால் பி எம் அனுப்புங்கள். பார்த்து ரசிக்கிறேன்.

praveen
12-05-2007, 05:12 AM
நண்பர் தங்கவேல், உங்கள் இறுதி பதிவில் உங்கள் மனஉறுதி (நடப்பது நடக்கட்டும், நம்மால் முடிந்தவரை நம்மை பாதுகாப்போம் என்று தரையோடு பஸ் கம்பியை பிடித்து இருந்தது) மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த நேரத்தில் பல நூறு சிந்தனைகள் தோண்றி மறைந்திருக்கும்.

உங்களுக்கு பெரிதாக ஒன்றும் அந்த விபத்தில் நடக்கவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.

balasubramanian
21-06-2007, 04:07 PM
தங்கவேல் அவர்களே,

இந்த மாதிரி நடப்பவர்களுக்கு, அன்னியன் படத்தில் தண்டனை கொடுப்பது போல கொடுத்தால் தான் திருந்துவாங்க. இந்த மாதிரி நடக்கும் போது பாரதியார் பாடிய சில பாடல்களை நினைத்து கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை இழந்து விடாதிர்கள். கணிணி துரையில் நல்ல தேர்ச்சி பெறுங்கள். வாய்ப்புகள் பல. இந்த துறையில் உடல் ஊனம் ஒரு பொருட்டு அல்ல. இது எனது கருத்து. தவறு ஏதெனும் இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
பாலா.ரா

ஓவியா
21-06-2007, 05:39 PM
தங்கவேல் அண்ணா. இவ்வலவு இம்சைகளை கடந்து இன்னமும் மனம் தளராமல் வாழும் உங்களை பாராட்டுகிறேன்.

உங்களுக்கு நடந்த அந்த 2 விசயங்களுக்கும் எனது வருத்தங்கள்.

போராடி வாழ்வதே சிறந்த வாழ்க்கை. இது என் அனுபவத்தில் நான் கண்டவை.

தங்கவேல்
22-06-2007, 02:08 AM
நன்றி மணிமேகலை....
நன்றி பாலா ...
நன்றி ஓவியா....

எனது வாழ்க்கை நண்பர்களால் உருவாக்கப்படுகிறது.

aren
22-06-2007, 05:52 AM
மனம் கனமாகிவிட்டதால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

மிகவும் கொடூரம் தங்கவேல் அவர்களே. என்று நம் அரசாங்க அதிகாரிகள் திருந்துவார்கள் என்று தெரியவில்லை. சர்வாதிகார ஆட்சி வந்தால் திருந்துவார்களா?

அக்னி
22-06-2007, 12:54 PM
தங்கவேல் அவர்களே...
முதலில் உங்கள் உறுதி கொண்ட நெஞ்சத்திற்கு தலைவணங்குகின்றேன்...
நான் இந்த பதிவை என்றோ பார்த்துவிட்டேன்...
பதிவை எவ்வாறு இடுவது என்று தெரியாமல் இதுவரை தவிர்த்து வந்தேன்...

ஆனால், எனது பதிவை ஒரு உறுதிமொழியாக இப்போது இடுகின்றேன்...

அங்கவீனமுற்றவர்களுக்கு என்னால் உதவ முடியாவிட்டாலும்கூட, உபத்திரவமாவது கொடுக்காது இருப்பேன். அவர்கள் மனம் நோக நடந்து கொள்ளமாட்டேன் என்று, உங்கள் முன்னிலையில் உறுதி கூறுகின்றேன்...

ஆனால்,
பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எதையும் அனுபவித்து பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி வழி விட்டால், எனது இந்த கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு.. என்ன செய்வீர்களா ???

உங்கள் உறுதியான மனதில், இந்த வேதனையான கருத்துக்களையும், எதிர்பார்ப்பையும் களைந்து விடுங்கள்...
அன்பான வேண்டுகோள் வைக்கின்றேன்...

நன்றி!

namsec
22-06-2007, 01:09 PM
இதை படித்தவுடன் உங்களின் ந்லமை நன்றாக விளங்குகிறது கலங்கவேண்டம் ஒரு சிலர் அப்படித்தான் இருப்பார்கள் அதர்க்காக ஒட்டுமொத்தமாக தவ்ராக என்ன வேண்டாம் உதரனத்திற்க்கு உங்களுடைய நண்பரை எடுத்து கொள்ளுங்கள் சலைக்காது உதவி செய்யவில்லையா அவரைபோன்று இன்னும் சிலர் இந்தமண்ணில் உண்டு. அதேபோல் அதரபூர்வமாக கட்டுரை வெளியிட்ட நீங்கள் ஏன் புகார் அளிக்ககூடாது. உலகம் இப்பொழுது நம்கையில் உக்கார்ந்த இடத்தில் இருந்தது இ−மெயில் மூலம் புகார் அளிக்களாம்

maxman
22-06-2007, 04:38 PM
நன்பரின் ஆதங்கம் மற்றும் வேதனை எனக்கு நன்கு புரிகிறது, என் நெருங்கிய நன்பரும் ஒரு ஊனமுற்றவர்தான்(இரு கால்களும் போலியோவில் இழந்தவர்) சிறு வயது முதல் நல்ல பழக்கம் அதோடு மட்டுமில்லாமல் வெளியூர் செல்லும்போதெல்லாம் நாங்கள் பட்ட அனுபவம் சொல்லி முடியாதது. இப்பொழுது நன்பருக்கும் திருமனமாகிவிட்டது பனியின் கராணமாக இப்பொழுது நானும் அவரும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறோம் எப்போதவது சந்திப்பதொடு சரி.

உதவுங்கள் அதன் இன்பம் கண்டிப்பாக நீங்கள் அனுபவிப்பீர்கள்!

Gobalan
24-06-2007, 06:07 PM
உங்களுக்கு நடந்த சம்பவம் மிக வருந்தத்ககவை. ரொம்ப மட்டமான செயல் அந்த ரைல்வே அதிகாரிகள் உங்களுடன் நடந்து கொண்ட விதம். இது தான் இந்தியாவின் நிலை. உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது. உங்கள் இந்த அனுபவத்தை படித்த நம் உறிப்பினர் யாவரும் அங்ககீனமற்றோரகளுக்கு நிச்சியம் உதுவுவார்கள். கவலை படாதீர்கள். நல்ல எண்ணங்களுடைவர்கள் நம் நாட்டீல் இருக்கத்தான் செய்கிரார்கள். நம் அதிகாரிகளை ஈவு இரக்க மற்றவர்களாக ஆக்கி விட்டார்கள் நம் சுயநலம்போற்றும் தலைவர்கள். இந்த நிலை மாறும். முன்னேற்றமும், படிப்பும் இந்தியாவில் விருவுபட ஆரம்பித்து இருக்கிறது. படிப்புடன் கூடிய நல்ல எண்ணங்க*ளும் விருவுபடும் நம் இந்தியர்களிடத்தில். அப்போது வரை காத்திருக்கவேண்டியது தான்.
உங்கள் மனதை திடமாக ஆக்கி கொள்ளுங்கள். இந்த வேதனை தறும் நிகழ்ச்சியை மறந்து உங்கள் லட்சியங்களை இன்னும் உயர்த்திகொள்ளுங்கள். உங்களை போல் இருக்கும் பலர் உலகில் பல சாதனை படைத்திருக்கிறார்கள். இவ்வளவு அழகாக உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிருந்து கொண்டிருக்ரீர்கள். இந்த பதிப்பில் உங்கள் சிந்தனை திறன், எழுத்து திறன் நன்கு புலபடுகிறது. மிக சிறந்த எதிர் காலம் காத்து கொண்டிருக்கிறது உங்களுக்கு. தளர்ச்சி அடையாதீர்கள். நன்றி.

இதயம்
25-06-2007, 06:07 AM
அன்பு நண்பர் தங்கவேல் அவர்களே,
நீங்கள் ஊனமுற்றவர் என்பது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. காரணம், உங்கள் பதிவுகளில் நான் ஊனமில்லாத கருத்துக்களை கண்டவன் நான். ஊனம் என்பது உங்களைப்போன்றவர்களுக்கு ஒரு சில காலங்களுக்கு மட்டும் தான் கஷ்டமாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் இயல்பாகிவிடுவீர்கள். ஆனால், ஊனத்தை சமுதாயம் ஒரு இழிவாக பார்க்கும் போது தான் மனம் இரணப்படும். இது நான் என் ஊனமுற்ற நண்பன் மூலம் அறிந்த செய்தி. ஊனமென்பது சங்கடமில்லை, அதை வைத்து சாதிக்கவும் முடியும் என்று உலகில் பலரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஊனம் என்பதை ஒரு குறையாக நினைப்பதை விட்டொழியுங்கள். இறைவனின் கருணையும், மனிதாபிமான மனிதர்களும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்கள். குழந்தைகளும், ஊனமுற்றவர்களும் கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். காரணம், குழந்தைகள் அறிந்து தவறு செய்வதில்லை. ஊனமுற்றவர்களின் ஊனம் அவர்கள் விரும்பி வந்ததுமில்லை. நண்பர்கள் சொன்னது போல் வெளிநாடுகளில் எல்லா இடங்களிலும் ஊனமுற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், இந்தியாவில் தான் இந்த இழிநிலை. பொது நலம் குறுகி, சுயநலம் பெருகியதன் விளைவு தான் இது.

உங்களின் பஸ், ரயிலில் ஏற்பட்ட இரு நிகழ்வுகள் படித்து மனம் கனத்துப் போனேன். உங்களைப்போன்றவர்களை கஷ்டப்படுத்தும் இழிபிறவிகளை பற்றி என்ன சொல்ல..? என்னைக்கேட்டால் உண்மையில் ஊனமுற்றவர்கள் அவர்கள் தான். ஆமாம்.. மன ஊனமுற்றவர்கள்..!! உங்களிடம் அப்படி நடந்து கொண்டவர்களின் தவறுக்காக ஒரு இந்தியன் என்கிற முறையில் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்கு போனாலும் அங்குள்ள சூழ்நிலைகள், நடைமுறைகளை தெரிந்து அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு நடந்துகொள்வது உங்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவும். போகுமிடங்களுக்கு (மனைவி, அம்மா, சகோதரன், மகன் போன்ற) நெருங்கிய உறவில் உள்ளவர்களை துணைக்கு அழைத்துப்போவது நல்லது. திருமணம் ஆகியிருந்தால் மனைவி மிகச்சிறந்த துணை. உங்கள் உடம்பில் தான் பலவீனம், உள்ளத்தில் இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் இருக்கும் வரை எந்த கஷ்டமும் உங்களை அண்டாது. உங்களுக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை பயணம் இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.