PDA

View Full Version : கவிவானில் ஓர் புதிய உதயம்



வாசகி
08-05-2007, 04:41 PM
நான் உதித்தது இலங்கையில்
பவனிவருவது புலங்களில்
நிலைத்திருக்க நினைப்பது
உங்கள் இதயங்களில்

உதயநிலா
இது தமிழுக்கு
புதுநிலா
தமிழ் மன்றத்தின்
இளையநிலா

யார்முன்னும் மண்டியிடா
முழுநிலா
தமிழுக்குத் தலைவணங்கும்
குளிர்நிலா

அநீதியை காண்கையில்
சுடுநிலா
கண்ணீர் சிந்துகையில்
கவிநிலா

வடித்திடும் கவிகளில்
காணிடும் பிழைகளை
எடுத்துரைத்திடுங்கள்
வளர்ந்திட உதவிடுங்கள்.
-------------------------


உதயநிலாவின் கவிச்சோலை
அகதியின் வேண்டுகோள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9230)
நவீனமனிதன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9307)
விழித்தெழு சகோதரா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9305)

ஷீ-நிசி
08-05-2007, 04:47 PM
அடடா.. அறிமுக கவிதை கணஜோர் உதய நிலா....

இனி எல்லோர் மனதிலும் இடம்பிடித்து எங்களின் இதய நிலா வாக வாழ்த்துக்கள்!

மதுரகன்
08-05-2007, 05:50 PM
வாருங்கள் உதய நிலா
உங்கள் படைப்புக்களை அள்ளி வீச வாழத்துகிறேன்....
அப்படியே மற்றவர்கள் படைப்புக்களையும் படித்து பின்னூட்ல்களை வழங்குங்கள்...
விமர்சனங்கள் தான் கலைஞர்களை வாழவைக்கும்..

poo
09-05-2007, 05:46 AM
அசத்தல் அறிமுகம்...மன்றத்தில் நல்ல பரிச்சயம். அளவில்லா திறமை..குறையில்லா ஆர்வம்..

உங்கள் வரவால் மன்றம் பெருமைப்படட்டும்...

வாழ்த்துக்கள்... எங்களோடு வளர்வதற்கு!!

ஓவியன்
09-05-2007, 07:37 AM
அறிமுகமே அசத்தல் கவிதையா?

உங்கள் காவிய பவனி இங்கே அரங்கேறப் போகிறது.
அதைக் காண மகிழ்வுடன் காத்திருக்கிறேன்.

ஆதவா
11-05-2007, 01:39 AM
கவிஞர்கள் அறிமுகத்தில் கவிதையில் ஒரு அறிமுகம்.. சில கவிதைகள் படித்தேன்.. பிரமாதமாக இருக்கிறது. நெஞ்சை அள்ளும் கவிதைகள்.. இன்னும் நிறைய எழுதி மன்றத்தில் தனி இடம் பிடிக்கவேண்டுமென்பதே என் வேண்டுகோள்... நிச்சயம் நிலவுக்கு மன்ற வானில் தனி இடமுண்டு.

lolluvathiyar
11-05-2007, 02:08 PM
அற்புதமான அறிமுகம்
சாரி கவிதை
சாரி உன்மை
சாரி உங்கள் குணம்
எதுவோ இன்றே என் இதயத்தில்
இடம் பிடித்து விட்டது உன் வாக்கியங்கள்

அக்னி
11-05-2007, 04:29 PM
புதிதாய் வந்த நிலா...
கவியாய் தோன்றும் உதயநிலா...
அறிமுகம் புதுமை. வரிகளோ அருமை. பெறவேண்டும் பெருமை.

என்றும் வாழ்த்துக்கள்...

மனோஜ்
14-05-2007, 09:41 AM
புதிதாய் உதித்த உதய நிலா
இன்று இதயம் பிடித்த இதய நிலா
விரைவில் மன்றம் நிரையும் கவிதைநிலா
முடிவில் பிரியா வரியில் உதிக்கும் நிலா
நிலவுக்கு உள்ள குணங்கள் அனைத்தும்
உம் கவிதையில் வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
14-05-2007, 11:41 AM
உதயநிலா...
என்றும் பௌர்ணமியாய்
எங்கள் உள்ளத்தில்
உங்கள் கவிதை ஒளி வீச
வாழ்த்துக்கள்...!

நிறைய கவிதைகள் இன்றும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஆர்.ஈஸ்வரன்
10-12-2007, 10:13 AM
உதய நிலாவிற்குள் இத்தனை நிலாக்களா?

யவனிகா
10-12-2007, 11:22 AM
அறிமுகம் நன்றாக இருக்கிறது...வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.

சுகந்தப்ரீதன்
11-12-2007, 08:35 AM
கவிதை வடிவிலான கவி அறிமுகம் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் உதயநிலா.. நாளும் உதிக்கட்டும் உங்கள் கவிதைகள் மன்றத்தில்..!

IDEALEYE
12-12-2007, 06:31 AM
கவி நிலா,
உதய நிலா
எல்லா நிலாவும்
இங்கே
ஒரு நிலாதான்
வாருங்கள்
வாழ்த்துக்கள்
ஐஐ

ஜெகதீசன்
16-12-2007, 07:12 AM
இளைஞ்சனே ☺☺

நம்பிக்கைகளால்
கதவு செய்
உன் வருமைச் சனியன்கள்
வாசலோடு ஓடிப்போகும்....

இவன் ஜெகதீசன்
சோதனைகள் அனைத்தும் ஓருநாள் சாதனைகளாகும்.



அன்பிற்கினிய அன்னப்பறவைகளே..
அடிக்கடி பறக்கிறேன்
கால்களின்றி.........கற்பனைவானில்
மிதக்கின்றேன்..........................

ஆம் நான்ஓரு மன்றத்தின்
ப்ஓற்க்கூறை என்று.

இவன் இனிய தமிழ் மன்றத்தின்
ப்ஓற்கூறை ஜெகதீசன்