PDA

View Full Version : ஒரு அகதியின் வேண்டுகோள்வாசகி
08-05-2007, 03:16 PM
உலகவல்லரசுகளே!-உங்களிடம்
கட்டிக்கொள்ளப் பட்டுத்துணி
கேட்கவில்லை

படுத்துறங்கப் பஞ்சுமெத்தை
கேட்கவில்லை

குடிப்பதுக்கு வைன்போத்தல்
கேட்கவில்லை

அடிப்பதுக்கு சென்ட்போத்தல்
கேட்கவில்லை

களிப்பதுக்கு டாலர்கள்
கேட்கவில்லை

அழிப்பதுக்கு அனுகுண்டு
கேட்கவில்லை

உங்களிடம் கேட்பது
ஒன்றுமட்டும்தான்

உலகத்தின் பசுமைக்காக
சமாதானம் கேட்கின்றேன்

நீங்கள் சொல்கின்றீர்கள்
ஆயுத சமப்படுத்தலில்தான்
சமாதானம் மலருமென்று
மனிதகுலக் குருதியில்
சமாதானம் மலருமா?

நீங்கள் சொல்கின்றீர்கள்
ஆயுத உற்பத்திதான்
பொருளாதாரத்தின் ஆதாரமென்று
உலக அழிவிலா-உங்கள்
பொருளாதாரம் கட்டப்படுகின்றது

நீங்கள் நினைக்கலாம்
சமாதானம் கேட்கும்
இவன் யாரென்று?
நான்...
இலங்கை அரசியல் அகதி

அகதி..
படித்துக் பெறாத பட்டம்
பதிக்கக் கூடாத முத்திரை
அழிக்கவேண்டிய வியாதி
ஒழிக்கவேண்டிய கிருமி

அதனால்
அரசியல்வாதிகளே!
கொடிய யுத்தம் வேண்டாம்
குருதிவெள்ளமும் வேண்டாம்
சமாதானம் வேண்டும்
இது
ஒரு அரசியல் அகதியின்
அடிமன வேண்டுகோள்.

மனோஜ்
08-05-2007, 03:25 PM
அருமையான கவிதை அமைதியை விரும்பும் நிலாவிற்கு
விருப்பம்போல் அமைய கடவுள் துணைபுரிய பிரார்த்திக்கிறேன்

poo
09-05-2007, 05:59 AM
உங்கள் வேண்டுதலில் குரல் இணைப்பதைத் தவிர்த்து வேறென்ன செய்வது...

நிறைய எழுதுவதற்கு வாழ்த்துக்கள் உதயநிலா..

ஷீ-நிசி
09-05-2007, 06:10 AM
வாழ்த்துக்கள் உதயநிலா....

விடியல் வரும்! கனவுகள் மெய்ப்படும்!

ஓவியன்
09-05-2007, 07:23 AM
உதய நிலா உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

கேட்கும் மட்டும் கேட்டு விட்டோம்,
கேட்டுக் கேட்டு எங்கள்
குரல் தேய்ந்து போனதே மிச்சம்.

இப்போது இருப்பது ஒரே ஒரு வழி
அது கேட்டுப் பெறுவதல்ல
தானாகவே எடுத்துக் கொள்வது.

ஆதவா
09-05-2007, 07:42 PM
முதலில் கவிதை பிரமாதம்....

நான் கவனிக்கும் உங்களின் முதல் கவிதை இது. இதைப் படித்ததும் வெள்ளைப்புறா என்ற ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.. வயிரமுத்துவினுடையது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து அதை சற்று உரசுவது போல் இருந்தாலும் இலங்கை அரசியல் அகதி என்று தனிமுத்திரை காண்பிக்கிறீர்கள்./

ஆனால் ஒன்று.. தலைப்பு சற்று பொருந்தாமல் இருப்பதாக எனக்குப் படுகிறது. இது என் கருத்து மட்டுமே.

இந்த வல்லரசுகள் கையில் இருந்தாலும் தரமாட்டார்கள்.. சமாதானமே ஆயினும் பிச்சை தானே அது.. கேட்டுப் பெறுவது.

சில விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை. ஆயுத சமத்தில் சமாதானம் இருப்பதாக நாடுகள் சொல்லித் திரிவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அதை அருமையாக கோர்த்துவிட்டிருக்கிறீர்கள்.. அதற்கடுத்த பொருளாதார ஆதார வரிகளும் நச்...

ஆனால் இதை குறுகிய வட்டமாக நின்று, அதாவது இலங்கை அகதியாக கேட்காமல் பொதுவாக, பாதிக்கப்பட்டவர் நிலையில் நின்று கேட்டிருக்கலாம். ஆனால் அதையும் அடுத்த வரிகள் சுட்டுகிறது,. அகதியைப் பற்றிய நிலைகள்... உங்கள் வேண்டுகோள் கூடியவிரைவில் நிறைவேறவேண்டும்... இது ஒவ்வொரு உண்மை குடிமகனுக்கும் உண்டான வேண்டுகோள்..

கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் சாவு என்பார்கள்.. அதை நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும்... ஆயுத உற்பத்தியைக் குறைத்து நிறுத்த வேண்டும்... சரி சரி.. முடியாத செயலைப் பேசி என்ன பிரயோசனம்?

அறிஞர்
09-05-2007, 07:56 PM
அடிமனதின் ஆழத்திலிருந்து
எழும் குரல்...
அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

பிரச்சனைகளை வைத்து
விளையாடும் அரசியல்வாதிகள்
என்றுதான் சமாதானத்திற்கு
ஒரு வழி உண்டாக்கப்போகிறார்களோ.

வாசகி
10-05-2007, 07:42 AM
பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது நன்றிகள்.

ஓவியன் உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகின்றேன்.

நாம் சுவாசிக்கும் காற்றைக்கூட
போராடியல்லவா சுவாசிக்க வேண்டியிருக்கின்றது
போராடாமல் அவனியில் கிடைப்பது ஏது?
போராடினால்தான் எல்லாமே கிடைக்கின்றது

ஆதவா!
கவிதையை ஆழ்ந்துபடித்து கருத்துச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். கவிதைக்கு தலிப்பு பொருத்தம் குறைவுதான். எனக்கும் அது நெருடலாகவே இருக்கின்றது. மூளையைக் கசக்கியும் எதுவும் பிடிபடவில்லை. ஒரு உதவியாகவே உங்களிடம் கேட்கின்றேன். தலைப்பு ஒன்று தர முடியுமா? பணக்காரன் ஏழ்மையைப்பற்றிப் பேசுவதைவிட ஏழை ஏழ்மையைப் பற்றி ப்பேசுவது பொருத்தமானது அல்லவா?. அது போல இலங்கை அகதி சமாதானம் வேண்டிப் விண்ணப்பது சிறந்தது என்று நினைத்தேன். அதனால் அவ்வரிகளை இணைத்தேன்.

சுட்டிபையன்
10-05-2007, 01:26 PM
உதய நிலா உங்கள் கவிதையைப் படித்தேன் , இரசித்தேன், பெருமைப்பட்டேன் ஒரு ஈழத்தமிழனாக

காலம் கடந்து விட்டது

கேட்டுப் பெறுவதில்லை விடுதலை என்ற ஒரு கட்டத்திற்க்கு எங்கள் தலமை வந்து விட்டது, இனிமேலும் இப்படி கெஞ்சுவதில் பிரயோசனமில்லை