PDA

View Full Version : இன்றும் வாசகர்களை கவரும் புதுமைப்பித்தன



ஜோய்ஸ்
08-05-2007, 01:54 PM
சிறுகதை உலகின் மன்னன் என்று வர்ணிக்கப்படும் புதுமைப்பித்தனின் புத்தகங்களை வாங்க இளைஞர்களி டம் அதிக ஆர்வம் காணப்படு கிறது. வெகுஜன இலக்கியங்களுக்கு இணையாக முற்போக்கு இலக்கியங் களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் நாவல் உலகில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றவர் சோ.விருத் தாச்சலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். நாடகங்கள், கட்டுரைகள், கதைகள் என்று இலக் கிய உலகின் பல்வேறு கிளைகளில் புதுமைப்பித்தன் தடம் பதித்திருந் தாலும் சிறுகதை உலகின் சிகரமாய் அவரது நூல்கள் திகழ்கின்றன.

"காஞ்சனையின் கனவு', "கபாடபுரம்', "ஆற்றங்கரை பிள்ளையார்' உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகள் இன்றும் வாசகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது. சென்னை சேத்துப்பட்டில் நடை பெற்று வரும் 30வது புத்தக கண் காட்சியில் மொத்தம் 474 விற்பனை அரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 400க்கும் அதிகமான விற்பனை அரங்குகளில் வெகுஜன வாசகர்களை சென்றடையத்தக்க வகையில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பிட்ட ஒருசில விற்பனை அரங்குகளில் மட்டுமே முற்போக்கு இலக்கியங்கள் என்று கருதப்படும் நூல்கள் விற்பனைக்கு உள்ளது. இவற்றில் காலச்சுவடு பதிப்பகம், உயிர்மெய் பதிப்பகம், கவிதா பப்ளிகேஷன் ஆகியவற்றில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட ஆசிரியர்களின் நூல்கள் அதிகமாக விற்பனைக்கு உள்ளது.

காலச்சுவடு பதிப்பகத்தில் இடம் பெற்றுள்ள வெங்கடாச்சலம் எழுதிய புதுமைப்பித்தன் பற்றிய செம்பதிப்பு நூல்கள் இளம் வாசகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விலையை பற்றி கவலைப்படாமல் 20 வயது நிரம்பிய இளைஞர்கள் கூட அப்புத்தகங்களை வாங்கிச் செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
நன்றி: மாலைசுடர்.

பாரதி
08-05-2007, 04:38 PM
மிக நல்ல செய்தி.
அவருடைய காலத்திலேயே பலப்பல புதுமைகளை செய்தவர் அவர்..! பல கதைகளும் மிகச்சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. இன்றும் சிறப்பாக கதை எழுத விரும்புபவர்கள் அவருடைய கதைகளை படித்தால் நல்லது.

அறிஞர்
08-05-2007, 06:28 PM
ரசிகர்களுக்கு பிடித்த முறையில் எழுதினால் வெற்றி பெற முடியும் என நுணுக்கத்தை அறிந்தவர்.... அவர் நூல்கள் பலருக்கும் உபயோகமானது.

விகடன்
05-08-2007, 07:15 PM
வாசகரை அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் புத்தகங்கள் படித்திருக்கிறேனா? என்றுதான் தெரியவில்லை. ஒரு காலங்களில் படைப்பளிகள் பற்றி அதிக அக்கறை காட்டாமல் உள்ளடக்கத்தை மட்டும் படித்த காலமும் உண்டு. அந்தக்காலத்தில் தட்டுப்பட்டிருக்கலாம் என்றி நினைக்கிறேன். ஆனால் சரிவர ஞாபகமில்லை