PDA

View Full Version : சிறகறுந்த கவிதை..



ப்ரியன்
08-05-2007, 12:36 PM
கைகள்
உதிர்ந்து தொலைய
மென்மையான இறக்கைகள்
முளைக்கின்றன பக்கமாய்!

மெல்ல மெல்ல
அசைவு பழகி
சிறு குஞ்சென
தத்தி
தவறி விழுந்து
பின் மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
எட்டா உயரம்
கடந்திடும் வேகத்தோடு!

காடுகள்
வயல்கள்
நதிகள் , நகரங்கள்
கடந்து மறைகின்றன
காலடியில் சடுதியில்!

அசைவின் வேகத்தில்
சிறகொன்று
உதிர்ந்து நழுவ
காற்று காதோரம் வந்து
கிசுகிசுக்கிறது
கிச்சுகிச்சு மூட்டுவதை
நிறுத்தென!

தூரம்
காலம் மறந்து
திரிகிறேன்
கரிய வானெங்கும்
பறத்தலின்
சுகம் சுகித்து பருகி!

சிறகுகளில் வலியில்லை
பறத்தல் சலிக்கவில்லை
ஆனாலும்
விழி வழி
செவி வழி
சிறகேறி உலகம் அமர
பாரம் தாங்காமல்
தரையிறங்குகிறேன்;
அறுபட்டு எங்கோ
விழுந்து தொலைகிறது சிறகு!

அதோடு சேர்த்து
பறத்தல் சுகம் பேசிய
இக்கவிதையும் முடிகிறது
அவசரமாய் இத்தோடு!

என்றாலும்
என்றாவது ஒரு நாளில்
பறவையாகும் பாக்கியம்
கிடைத்தால் எழுதுகிறேன்
மிச்சத்தை!

- ப்ரியன்

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Siragaruntha_Kavithai.jpg
....

மதுரகன்
08-05-2007, 06:51 PM
அற்புதமான கவிதை வரிகள் ப்ரியன்...
அற்புதமான கவிதைக்களம்....
முதல் ஆளாய் வாழத்துவதையிட்டு மகிழ்வடைகிறேன்...
தொடருங்கள் மேலும் பலவற்றை..

poo
09-05-2007, 06:04 AM
மனம் கொள்ளைகொள்ளும் வரிகள்.. முடித்தவிதம் அருமை...

வாழ்த்துக்கள் ப்ரியன்... உங்கள் வரவால் கவிதைத் தோட்டத்தில் வசந்தம் வீசுகிறது..கோடைக்காலமிது...வரவேண்டும் அடிக்கடி...வருவீர்களென நம்புகிறேன்..

kavitha
10-05-2007, 11:47 AM
என்றாலும்
என்றாவது ஒரு நாளில்
பறவையாகும் பாக்கியம்
கிடைத்தால் எழுதுகிறேன்
மிச்சத்தை!

- ப்ரியன்
இறுதிவரிகள் மனதைப்பிசைந்தன.

புதிய இறக்கைகள் விரைவில் முளைக்கட்டும்
செல்லும் திசை நோக்கி காற்றும் வீசட்டும்
உச்சந்தலை விண்ணை முட்டட்டும்
வாழ்த்துக்களோடு.....

சுட்டிபையன்
10-05-2007, 12:54 PM
பிரியன் இப்படி ஒரு அழகான கவிதையை படிக்க வழி செய்தமைக்கு நன்றிகள்,

வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவி சேவையை அடியேன் தங்கள் ரசிகன்