PDA

View Full Version : உலகம் சுற்றியும்.....leomohan
08-05-2007, 01:36 PM
என் பணி நிமித்தமாகவும் பயிற்சி அளிக்கவும் (to deliver lectures & training), பயிற்சி பெறவும் (to get trained), வியாபார பெருக்கவும் (business development) சுமார் 15 நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக்கு.

பல சமயம் அதை பற்றிய அனுபவக் கட்டுரைகள் எழுத நினைத்தும் எழுத முடியாமல் போனது.

காதல் தோல்வி கவிதைகளை படிப்பதில் எனக்கு பொறுமை இல்லை.

அதிகம் எழுதுவதா படிப்பதா என்ற பிரச்சனையில் எப்போதும் மாட்டிக் கொள்வேன். ஞானி கட்டுரைகள் - மூன்றாம் பாகத்தில் நிற்கிறது.

ஞானி கட்டுரைகள் யாராலும் விமர்சிக்க படாமல், கேள்விகளுக்கு அப்பால் இருக்க வேண்டும் என்பதாலும் அனைவராலும் உடனடியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நடுநிலை கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதாலும் அழுத்தம் திருத்தமான கரு கிடைக்கும் வரை காத்திருப்பேன்.

முதல் ஞானி கட்டுரை 1990ல் வந்தது. இரண்டாவது ஒரு ஆண்டுக்கு முன்பும் மூன்றாவது சமீபத்திலும் வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது இவ்வாறு இருக்க கல்வியிலும் வேலையிலும் என்னுடைய பயணம் தடைகளற்ற பயணம் என்று சொல்வதற்கில்லை. தடைகளற்ற பயணம் யாருக்கும் கிடைகப்பெறுவதில்லை. ஆனால் தடைகள் மட்டுமே நிறைந்த பயணம் என்னுடையது.

ஆனால் நான் எப்போதும் ஒரு optimist. அதனால் அனைத்து விஷயங்களிலிருந்தும் positive ஆன விஷயங்களை மட்டும் கிரஹித்துக் கொள்ளும் பழக்கம் உடையவன்.

கடுமையான உழைப்பாளி என்று சொல்லிக் கொள்ளலாம். காரணம் தடைகள் இருந்ததால் அதிக உழைப்பும் தேவைபட்டது.

அனுபவக்கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வயதானவனோ அல்லது முதிர்ச்சி பெற்றவனோ என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த குறைந்த வயதில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது உண்மை.

மேலும் எழுதுகிறேன்.

leomohan
08-05-2007, 01:36 PM
http://leomohan.etheni.com/t/mohan1.jpg

தமிழ் மற்றும் ஆங்கில மீடியங்களில் மாற்றி மாற்றி படித்ததாக முன்பே கூறியிருந்தேன் அல்லவா. அணுக்கருஉலை என்று படித்து விட்டு மீண்டும் Atomic Reactor என்று படித்து ஒரே குழப்பம் தான்.

சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிற மொழிகளும் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தேன்.

பள்ளிப்பருவத்தில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பட்டிமன்றம், நாடகம், வில்லுப்பாட்டு என்று பல விஷயங்களில் நாட்டும் உண்டு.

படிப்பையும் மீறி இவை இன்று சோறு போடுகின்றன எனக்கு என்று சொன்னால் மிகையாகாது.

மேலே உள்ள படம் நிறுவனத்தின் ஆண்டு விழாவை நடத்தும் நடத்துனராக நான் பங்காற்றிய போது எடுத்தது.

leomohan
08-05-2007, 01:38 PM
http://leomohan.etheni.com/t/mohan-sudan.jpg

இந்த படம் சுடானில் எடுத்தது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

துபாயிலிருந்து கிளம்பிய எங்கள் விமானம் சுடானின் தலைநகரம் கார்தூமை நெருங்கும் போது மணல் காற்றால் விமான நிலையம் சரியாக தெரியாததால் இரண்டு மணி நேரம் வானில் வட்டமிட்டு மீண்டும் துபாய் வந்து சேர்ந்தது.

துபாயில் இல்லாதவர்களுக்கு விடுதி கொடுக்கப்பட்டது. நான் துபாயில் இருந்ததால் வீட்டுக்கு வந்துவிட்டேன். மறுநாள் என்னால் போக முடியவில்லை. அதற்கு மறுநாள் விமானத்தில் போய் சேர்ந்தேன்.

ஆனால் என்னுடைய பொருட்கள் மாட்டிக் கொண்டன. துபாயில் கேட்ட போது சுடானுக்கு அனுப்பிவிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். சுடானை சென்று அடைந்தால் கோராத பொருட்கள் இருக்கும் அலுவலகம் விடுமுறையில் இருந்தது. போட்டுக் கொண்டு போன ஒரு துணியோடு சரி. வேறு மாற்று துணியில்லை.

பிறகு என்னுடைய வாடிக்கையாளர் அழைத்து சென்று சுடானில் ஒரு உடை வாங்கி தந்தார். அவர்கள் வழக்கமாக அணியும் உடை. ஒரு பீஸ். நேராக தலையின் வணியாக அணிந்துக் கொள்ள வேண்டியது தான்.

இதை போட்டுக் கொண்டு ஒரு நாள் சுற்றினேன் அங்கு. வாங்கும் போது செட்டாக வாங்கினால் தானே நல்லது. அதனால் தலை குல்லாயும் வாங்கினேன்.

மத நல்லிணக்கம் பிற மொழிகளை மதிப்பது, பிறருடைய உணர்வுகளை மதிப்பு அனைவருடைய உணவு வழக்கங்கள் எண்ணங்கள் இவ்வாறாக மனம் விரிவடைந்துக் கொண்டே சென்றது ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது.

ஓடையாக விழுப்புரத்தில் ஹிந்து, தமிழன், தமிழ் குறுகிய கண்ணோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த நான் வடக்கு சென்றதால் நதியாகி வெளிநாடுகளுக்கு சென்றதால் சமுத்திரமாக மாறியது இந்த பயணங்களில் தான். இந்த பயணங்களில் மதங்களை பற்றிய விவாதங்கள் என்ன, பிற நாகரீகம் கலாச்சாரங்களை பற்றி அறிந்தது என்ன - விரிவாக பேசலாம்.

leomohan
08-05-2007, 01:40 PM
http://leomohan.etheni.com/t/mohan-bahrain.jpg
கிறிஸ்துவ பள்ளியிலும் பிறகு நாகையில் அரசாங்க மேல் நிலை பள்ளியில் படித்ததால் இஸ்லாமிய கிறிஸ்துவ நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்களும் என்ன ஆரம்ப காலத்தில் இருந்தே மற்ற மதங்களின் மேல் அன்பும் மரியாதையும் உள்ள ஒரு இளைஞனாக உருவாக்கியிருந்தது. இருப்பினும் நம்முடைய மதத்தில் அதிக பற்று உள்ளது இயல்புதானே.

இது இவ்வாறு இருக்க என்னுடைய முதல் வெளிநாட்டு பணி கணினி போதகராக கிடைத்தது. இஸ்லாமிய நாட்டில் படிப்பு சொல்லித்தரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் மத உணர்வுகளை கேலி செய்துவிடக்கூடாது என்பதற்காக திருக்குரானின் தமிழாக்கம் படிக்க துவங்கினேன்.

மேலும் பஹ்ரைன் சென்றடைந்ததும் Discover Islam ல் டாக்டர் ஜாகீர் ஹீசைனின் வீடியோக்களையும் எடுத்து படிக்க துவங்கினேன்.

என்னுடைய வகுப்புகள் எப்போதும் களை கட்டியிருக்கும். மாணவர்களை எப்போதும் சிரிப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பேன். இதற்காக எத்தனை மணிநேரம் பாடம் நடத்தினாலும் யாரும் எழுந்து போக மாட்டார்கள்.

பாடம் நடத்தும் போது நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். மேல உள்ள படம் என்னுடைய முதல் பஹ்ரைன் பயணம் 1997. வெறும் 60 கிலோ மட்டுமே இருந்தேன். இது சத்தியமாக என் படம் தான். நம்புங்கள்

leomohan
08-05-2007, 01:48 PM
http://leomohan.etheni.com/t/mohan-egypt.jpg
இந்த படம் 2004ல் எகிப்த் நாட்டில் எடுத்தது. என் தந்தை ராணுவத்திற்காக பணியாற்றினார். இந்திய அமைதிப்படையின் சார்பாக அவர் லெபனான் சென்றிருந்தார் அறுபதுகளில். எகிப்திற்கும் சென்றார் அவர் சென்ற அதே இடத்தில் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பியது ஒரு இனிமையான அனுபவம்.
அந்த படத்திற்கும் இதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
சைவ உணவை உட்கொள்ளும் பழக்கம் உடைய நான் எகிப்தின் அக்டோபர் 6 நகரத்தில் தங்கியிருந்தேன். வெஜிடேரியன் என்று சொல்லி புரிய வைக்க மிகவும் கஷ்டப்பட்டு பிறகு போனிலே சமையல்காரரை சமைக்க வைத்தேன்.
முதலில் லென்டில் சூப் எடுத்துக் கொள், பிறகு அதில் உப்பை போடு, மிளகாய் பொடி போடு, பிறகு அதில் கறிவேப்பிலை போடு, பிறகு வெள்ளை சாதத்தை போடு பிசைந்து கொண்டு வா என்று தால் ஃப்ரை செய்ய வைத்தேன் என்றால் பாருங்களேன்.
உணவை கொண்டு பல இடங்களில் நான் கஷ்டப்பட்டதுண்டு. ஆனால் இன்று வரை கொள்கையை விடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இணைய நண்பன்
08-05-2007, 01:51 PM
உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.கிடைக்கும் சொற்பநேரத்திலும் உங்கள் அனுபங்களை மன்றத்தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.சந்தோசம்.நன்றி

ஓவியன்
08-05-2007, 01:51 PM
மோகன் அண்ணா! - அருமையான தொடர் இது, தொடர்ந்து உங்கள் சுவராசியமான அனுபவங்களைத் தாருங்கள்.

leomohan
08-05-2007, 02:03 PM
http://leomohan.etheni.com/t/mohan-singapore.jpg
இது 2005ல் சிங்கப்பூர் சென்ற போது எடுத்தது.
முதல் முறையாக மஞ்சள் நிற மக்கள் வாழும் நாட்டிற்கு சென்ற அனுபவம். பௌத மத விவாதங்கள், அரசியல் பேச பயப்படும் மக்கள், கடமையே கண்ணாகவும் காலந்தவறாமையும் கடைபிடிக்கும் மக்கள், அவர்களுடைய ஆங்கிலம், அவர்கள் மற்ற நாடுகளை பற்றி நினைக்கும் விஷயங்கள், கம்யூனிசம் பற்ற அவர்கள் பார்வை என்று பல அனுபவங்கள் கிடைத்து.
லிட்டில் இண்டியாவுக்கு தினமும் சென்று நம்மூர் உணவகங்களில் உண்டது, தமிழ் புத்தகங்கள், வீடியோ காஸெட்டுகள், மேலும் டிரெயினில் தமிழில் அறிவிப்புகள் கேட்ட அனுபவங்கள் என்றும் நினைவில் நிற்பவை.
முதல் நாளாக அங்கு சென்றதும் லிட்டில் இண்டியாவில் உள்ள அனைத்து கோவில்களுகம் சென்றேன்.
http://leomohan.etheni.com/t/mohan-singapore-temple.jpg
நம்மூர் மக்களை ஒரே சேர காணுவதற்கும் தமிழ் பண்பாடு கலாச்சாரங்கள் ஓங்கியிருக்கும் இடமொன்று கோவில்கள் தானே.

leomohan
08-05-2007, 02:04 PM
மிக்க நன்றி ஓவியன்.

மிக்க நன்றி விஸ்டா.

leomohan
08-05-2007, 02:10 PM
http://leomohan.etheni.com/t/mohan-holland.jpg
பிரம்மாண்டமான விளக்குகள். ஒளிரும் கடைகள். வேகமாக ஓடும் மனிதர்கள். நிமிடத்திற்கு நிமிடம் வந்திறங்கும் விமானங்கள். எல்லாம் வணிக மயம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தின் விமானதளத்தில் எடுத்தது.

leomohan
08-05-2007, 02:16 PM
புது ஊராக இருந்தால் என்ன. புது பாஷையாக இருந்தால் என்ன. டாக்ஸியில் செல்வதை விட பேருந்தில் சென்றால் தானே ஊரை பார்க்கலாம்.

இப்படியாக முற்றிலும் பாஷை அறியாத ஸ்பெயின் நாட்டில் ஒரு பெயர் கொண்ட பல இடத்தில் பல கிளைகள் கொண்ட ஒரு விடுதியின் தேடலில் நானும் என் நண்பரும்.

விமானதளத்தில் இருந்து செல்லும் பேருந்தில் மோகன்.


http://leomohan.etheni.com/t/mohan-spain-bus.jpg

மனோஜ்
08-05-2007, 02:36 PM
மோகன் அண்ணா மலைத்து போனோன் எவ்வளவு ஆனுபவங்கள்
பகிந்தமைக்கு நன்றிகள்

மயூ
08-05-2007, 02:50 PM
நீங்க சகலகலாவல்லவர்
வாழ்க வளர்க!!!

leomohan
08-05-2007, 03:00 PM
நன்றி மயூரேசன்.

உங்கள் தளத்தை சென்று பார்த்தேன். அருமை. Feedback தரும் தொடுப்ப இல்லாததால் ஒன்றும் எழுதி வரவில்லை.

நன்றி மனோஜ்

சுட்டிபையன்
08-05-2007, 03:12 PM
மோகண் அண்ணா மென்மேலும் பல ஊர்கள் போய் பலவற்றை பழகி எங்களுடன் பகிர வாழ்த்துகள், ப்கிர்ந்தமைக்கு நன்றிகள்

மயூ
08-05-2007, 03:21 PM
நன்றி மயூரேசன்.

உங்கள் தளத்தை சென்று பார்த்தேன். அருமை. Feedback தரும் தொடுப்ப இல்லாததால் ஒன்றும் எழுதி வரவில்லை.

நன்றி மனோஜ்
நன்றி மோகன் அவர்களே!!!
உண்மையில் அது பற்றி நான் யோசிக்கவே இல்லை... ஆனாலும் வலைப்பதிவை நோக்காகக் கொண்டு ஆரம்பித்ததால், அது பற்றி தொன்றவிலலை என்று நினைக்கின்றேன்!!!!:redface:

leomohan
08-05-2007, 03:26 PM
நொறுங்கிய நகரம் - காபூல்
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழக்கு - காபூல் செல்கிறாயா என்று கேட்டதும் முன்பே சென்று வந்த என் தம்பியின் சொற்கள் நினைவுக்கு வந்தது.
பாதுகாப்பற்ற நகரம். எங்கும் குண்டுவெடிப்புகள். வெளிநாட்டவர்கள் கடத்தல்.
சற்று நேரம் யோசித்தேன். திரும்பி வந்தால் நம் வீரகதைகளை நம்மக்களிடம் சொல்வோம். திரும்பி வராவிட்டால் சரித்திரத்திரத்தில் இடம் பெறுவோம். சரியென்றேன்.
சில மாதங்களுக்கு பிறகு சூரியநாராயணன் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தாலிபான் அல்லது பாகிஸ்தானத்தின் ஐஎஸ்ஐ வெறியர்களால் கழுத்து துண்டாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதை கேள்விபட்டிருப்பீர்கள். அவர் எங்கள் நிறுவனத்தின் ஊழியர் தான்.
மலைகளுக்கு இடையே தரை இறங்க முயற்சி விமானம் இப்போது அப்போது நொறுங்கிவிடும் போலத்தான் சென்று இறங்கியது. அங்கிருந்த மூன்று நாட்கள் அனுபவம் மறக்க முடியாதவை.
பாதுகாப்பில்லாமல் எங்கள் விடுதிக்கு சென்றடைந்தோம். அங்கு ஏற்கனவே எங்களுடைய ஊழியர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களை சந்தித்தோம். பிறகு வரும் போது 100-150 டிவிடிக்கள் வாங்கி வந்தது வேறு கதை. மேலும் சொல்கிறேன்.


http://leomohan.etheni.com/t/mohan-afghanistan.jpg

http://leomohan.etheni.com/t/mohan-afghanistan-people.jpg

leomohan
08-05-2007, 03:51 PM
இந்த பயணங்களில் பல மதத்தினரையும் பல மொழி பேசுபவர்களையும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளவர்களையும் சந்திக்க நேர்ந்தது.
ஒரு முறை சௌதி அரபியாவிலிருந்து பஹ்ரைன் வரும் போது பல நாட்களாக உணவு சரியாக கிடைக்காமல் காய்ந்துப் போயிருந்தேன். விமானத்திலாவது ஏதாவது கிடைக்கும் என்று காத்திருந்தேன். வழக்கமாக நான் சைவம் என்று சொல்லி பயணச்சீட்டு வாங்கும் என் காரியதரிசி இம்முறை கோட்டைவிட்டிருந்தாள்.
சைவம் இல்லை என்று சொன்னதும் நொந்து போனேன். சரி பழரசம் மட்டும் தாருங்கள் என்று சொல்லி அமர்தேன். என் அருகில் இருந்தவருக்கு மாட்டிறைச்சி அளிக்கப்பட்டது. அவர் இஸ்லாமியர். அரபியர். பஹ்ரைனை சேர்ந்தவர். நான் ஒன்றும் வேண்டாம் என்றதும் அவரும் தன் உணவை திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய செய்கைக்கும் நான் உணவு வேண்டாம் என்று சொன்னதற்கும் ஏதோ தொடர்பு இருந்ததால் ஐயா நான் தான் சைவம் ஆனால் என் அருகில் இருப்பவர்கள் உண்டால் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னேன்.
அதற்கு அவரோ அரை மணிநேரம் உண்ணாவிட்டால் ஒன்றும் ஆகாது. இஸ்லாத்தில் பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றார்.
வியப்பில் ஆழ்ந்த என்னை நீ ஹிந்துவா. நீங்கள் பசுமாட்டை வழிபடுபவர்களா என்று பல கேள்விகள் கேட்க அங்கு ஒரு மத ஞான பரிமாற்றமே நடந்தது. நாங்கள் பிரியும் போது நல்ல நண்பர்களாக வியாபார அட்டைகளை பரிமாறிக் கொண்டு பிரிந்தோம்.
இங்கு நாம் கோவிலை இடிப்பதை பற்றி பேசுகிறோம். அங்கோ குறுகிய மனங்கள் விரிவடைந்து வருகிறது. இங்கு பரந்த மனமான இந்தியர்களின் மனம் குறுகி வருகிறது. இது என் நினைவில் என்றும் நின்ற ஒரு அனுபவம்.

leomohan
08-05-2007, 03:58 PM
பசு மாட்டை வணங்குவது முட்டாள்த்தனம் இல்லையா. கடவுள் உருவமற்றவர் அவரை எதனோடும் ஒப்பிட முடியாது. இதை தான் எங்கள் நூல் சொல்கிறது என்றார் அவர்.
நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்கிறேன். ஒவ்வொரு மதமும் கடவுளை ஒருவொருவகையில் பார்க்கின்றன.
எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றேன்.
கேளுங்கள் என்றார்.
கடவுள் சர்வ சக்தி படைத்தவராக நீங்கள் நம்புகிறீர்களா
ஆம்
கடவுள் எதுவும் செய்யக்கூடியவரா
ஆம்
கடவுள் ஒரே நேரத்தில் எங்கும் இருக்கக்கூடியவரா
ஆம்
அப்படியென்றால் கடவுள் இப்போது இந்த பழரச கோப்பையில் இருக்கிறார். இதை வணங்குங்கள் என்றேன்
அவர் திகைத்து போனார்.
ஐயா இந்து மதத்திலும் கடவுள் ஒருவரே அவர் உருவமற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மக்கள் அவரை எந்த உருவத்திலும் வணங்க வசதி இருக்கிறது. எப்படி மாட்டில் கடவுள் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களோ அது போலவே மாட்டின் உள்ளும் கடவுள் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்றேன்.
நண்பரே இதை யாரும் தெளிவாக எனக்கு சொன்னதில்லை. அதனால் தான் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டேன். மன்னிக்கவும் என்றார்.
நீங்கள் கேட்டதில் தவறே இல்லை ஐயா. கடவுள் உட்பட எதைபற்றியும் கேள்விகள் கேட்கவும் விவாதம் செய்யவும் இல்லை இருக்கிறது என்று சொல்லவும் எங்கள் மதத்தில் இடம் உண்டு என்றேன்.

மதி
08-05-2007, 03:58 PM
நல்ல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றீர் மோகன். மேலும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இங்கு பலருக்கு வழிகாட்டியாக இருக்கும்.

leomohan
08-05-2007, 03:59 PM
நன்றி ராஜேஷ்.

நன்றி சுட்டிபையன்

leomohan
08-05-2007, 04:04 PM
ஒரு முறை சௌதி அரபியோவில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். முழுவதும் உள்ளூர்காரர்கள். உதாரணம் கொடுக்கும் போதெல்லாம் உங்களிடம் இரண்டு கார்கள் உண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவர் வழிமறுத்தி ஏன் நீங்கள் எப்போதும் இரண்டு கார்கள் என்று சொல்கிறீர்கள் இரண்டு பெண்கள் என்று சொல்ல வேண்டியது தானே என்றார்.
நான் வகுப்புகளில் மிகவும் நக்கல் நையாண்டி செய்வது வழக்கம். அன்றும் அதே குறும்பில் சட்டென்று - நான் எவற்றை பார்க்க முடியுமா அதை பற்றி தானே பேச முடியும். உங்கள் நாட்டில் தான் பெண்களை பார்க்கவே முடிவதில்லை என்றேன் சிரித்துக் கொண்டே. பிறகு தான் உணர்ந்தேன் ஒருவேளை அபாய பகுதியில் காலை வைத்துவிட்டேனோ என்று.
அவர்கள் அனைவரும் சிரித்து அந்த நகைச்சுவையை ரசித்தது சற்று ஆறதலாக இருந்தது.

அறிஞர்
08-05-2007, 04:15 PM
உலகம் சுற்றும் வாலிபரே.... தங்கள் கட்டுரைகள் பலருக்கு உபயோகமாக இருக்கும். படங்கள் அருமை...

இனம், மதம், ஜாதி பாகுபடின்றி.... தங்களை போன்று அனைவரும் பழகும் சமுதாயம் உருவாகவேண்டும்...

leomohan
08-05-2007, 04:17 PM
உலகம் சுற்றும் வாலிபரே.... தங்கள் கட்டுரைகள் பலருக்கு உபயோகமாக இருக்கும். படங்கள் அருமை...

இனம், மதம், ஜாதி பாகுபடின்றி.... தங்களை போன்று அனைவரும் பழகும் சமுதாயம் உருவாகவேண்டும்...

மிக்க நன்றி அறிஞரே.

leomohan
08-05-2007, 05:17 PM
மூன்று முறை மொரீஷியஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 8ம் வகுப்பில் மொரீஷியஸ் பயணக்கட்டுரையை ஒரு அமைச்சர் எழுதியிருந்தார். சிறிய ஊர். 5 மணிக்கு காலையில் எழுந்து 7 மணிக்கு மாலையில் உறங்கிவிடும் ஒரு ஊர். எங்கு பார்த்தாலும் கரும்பு தோட்டங்கள், எரிந்துக் கொண்டிருக்கும் பழைய கரும்பு காடுகள், நிறைய தமிழ் பெயர்கள் கொண்ட மக்கள் ஆனால் யாருக்கும் தமிழ் பேச தெரியாது. வாரும் ஒரு முறையில் அவர்கள் தொலைகாட்சியில் தமிழ் படம் - ஆங்கில பிரெஞ்ச் சப்-டைட்டிலுடன்.
ஆனால் ஞாயிறு காலையில் கோவிலில் பார்க்கலாம். கஞ்சி என்று பிரசாதத்தை சொல்கிறார்கள். கஞ்சி சாப்பிட கோவிலுக்கு வா என்று அழைப்பார்கள்.

ரூபாய் நோட்டிலும் தமிழ்.
மிகவும் பெருமையாக இருந்தது.

இந்தியர்களை மதிக்கும் ஒரு நாடு. சுகந்திரமான நாடு - அதே சமயத்தில் பழைமை கட்டுபாடு எல்லாம் உண்டு. இந்திய வம்சாவழியினர் ஆட்சியிலும் முதன் மந்திரிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

இந்திய வம்சாவழியினர் வடக்கு, தமிழ், பிரெஞ்ச் என்று குழுக்களாக கட்சிகள் கொண்டுள்ளார்கள்.

கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய சென்ற நம்மக்கள் தமிழ் உடை கலாச்சாரத்தையும் கோவிலுக்கும் போகும் பழக்கத்தையும் விடவில்லை.

அதிகம் பிரெஞ்சில் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுபவர்களும் புரிந்துக் கொள்பவர்களும் உண்டு. இங்கும் எனக்கு சைவ உணவு பிரச்சனை தான். ஒரிரு இந்திய உணவகங்கள் உண்டு.

பஸ்சில் பயணம். டாக்ஸி அதிகம் இல்லை. இந்த அனுபவங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. அஷோக் லேலாண்டின் பஸ்சுகளும் லாரிகளும் அதிகம் பார்க்கலாம். அவர்களுடைய அலுவலகம் கூட உண்டு.

ரொட்டியில் சட்னியை கலந்து தருவார்கள். தெரு ஓர கடைகள். அது தான் என் உணவு. ஒரு மொரீஷியஸ் ரூபாய்க்கு அப்போது 1.60 இந்திய ரூபாய்கள் கிடைக்கும். வித்தியாசம் அதிகம் இல்லை.

எங்கு பார்த்தாலும் நீலக்கடல். பெரிய மரங்கள். பாய்ந்து செல்லும் நீரோடைகள். இயற்கை எழில் கொஞ்சம் நாடு.

இதன் புகைப்படங்கள் தேடும் நேரத்தில் இணையத்தில் கிடைத்ததை இடுகிறேன்.

leomohan
08-05-2007, 05:18 PM
http://www.africanluxuryholidays.net/images/mauritius-waterfall.jpg

பல இடங்களில் இது போன்ற நீர்வீழ்ச்சிகளை காணலாம்.

leomohan
08-05-2007, 05:18 PM
http://www.namnewsnetwork.org/images/mauritius_money.gif

தமிழ் பேசும் ரூபாய் தாள்

பாரதி
08-05-2007, 05:30 PM
அருமை மோகன்,
படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பரந்த மனப்பான்மையை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய வேண்டுகோள்: இப்போது சொல்வதையே, வரிசைக்கிரமமாக, மறக்க முடியாத அல்லது பாதித்த அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை ஒவ்வொரு நாடாக சொல்ல இயலுமா..? உங்களுக்கு சிரமம் எனில் இப்படியே தொடருங்கள். தொடர்ந்து படிக்க மன்ற உறவுகளுடன் நானும் காத்திருக்கிறேன்.

அருமை மேற்பார்வையாளர்களே,
இதை சுவையான சம்பவங்கள் பகுதிக்கு மாற்றி விடலாமே..!

leomohan
08-05-2007, 05:40 PM
அருமை மோகன்,
படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பரந்த மனப்பான்மையை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய வேண்டுகோள்: இப்போது சொல்வதையே, வரிசைக்கிரமமாக, மறக்க முடியாத அல்லது பாதித்த அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை ஒவ்வொரு நாடாக சொல்ல இயலுமா..? உங்களுக்கு சிரமம் எனில் இப்படியே தொடருங்கள். தொடர்ந்து படிக்க மன்ற உறவுகளுடன் நானும் காத்திருக்கிறேன்.

அருமை மேற்பார்வையாளர்களே,
இதை சுவையான சம்பவங்கள் பகுதிக்கு மாற்றி விடலாமே..!

நன்றி பாரதி. நாடுவாரியாக சொல்ல முயல்கிறேன். இதை எழுத துவங்கியதும் சட்டென்று நினைவில் வருபவை மற்றும் என் வெளி-வன்தட்டில் கிடைத்த புகைப்படங்களை வைத்து எழுத துவங்கிவிட்டேன்.

ஷீ-நிசி
08-05-2007, 05:59 PM
உங்கள் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அருமை மோகன்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே....

leomohan
08-05-2007, 06:19 PM
நன்றி ஷீநிசி.

Mathu
08-05-2007, 11:20 PM
திட்டமிட்ட அனுபவ பயணம் மோகன். தொடரட்டும் உங்கள் தேடல் வெற்றி பாதையில்.
நீங்கள் சென்ற பல நகரங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன் பார்த்து பிரமித்திருக்கிறேன்,
நினைவாக படங்கள் எடுத்து கொள்ளும் பழக்கம் உண்டு, ஆனால் என்னையே எடுத்து கொள்வது குறைவு.

:medium-smiley-029:

leomohan
09-05-2007, 06:18 AM
நன்றி மது. ஆம். தனியாக சென்றால் நம்மை அந்த இடத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது இயலாத காரியமாகிறது.

ஒரு முறை நான் லண்டனுக்கு சென்றிருந்த போது ஒரு ஊருக்கு வெளியே இருக்கும் tube station - Ealing Broadway என்று நினைக்கிறேன். வண்டியில் உட்கார்ந்த நான் அங்கிருந்த ஒரு வெள்ளைகார சிறுவனிடம் என்னுடைய Sony DSC-F505 Digital Camera கொடுத்து என்னை ஒரு படம் பிடியுங்கள் என்றேன்.

அவர் படம் பிடித்துவிட்டு இதுபோல காமிராக்களை யாரிடமும் கொடுக்காதீர்கள். எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார்.

வளர்ந்த நாடுகளிலும் ஏழ்மையும் பிரச்சனைகளும் இருப்பதை அன்று உணர்தேன்.

மலர்
09-05-2007, 07:19 AM
மோகன் தகவலுக்கு நன்றி

leomohan
13-05-2007, 02:54 PM
இந்தியாவில் இருந்த போது ஒரு முறை உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்திருந்தாலும் அது மும்பையிலிருந்து தில்லிக்கு சிறிது நேரமே. முதன் முறையா பஹ்ரைன் வெளிநாட்டு பயணம் மிகவும் ஆவலாக எதிர் பார்த்திருந்தேன்.

தில்லியில் குடியுரிமை அதிகாரிகளை கடந்து பாதுகாப்பு சோதனைக்கு சென்றதும் அங்கிருந்த அதிகாரி என்னுடைய பாஸ்போர்டில் முதன் முறையாக வெளிநாடு செல்வதை அறிந்து - அடே முதன் முறையாக வெளிநாடு செல்கிறாய். எங்களுக்கு ஸ்வீட்டுக்கு காசு கொடு என்றார். 100 ரூபாய் எடுத்து நீட்டினேன். இது பத்தாது நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம் என்றார். காசு பண்ண இப்படி ஒருவழியா என்று யோசித்து அப்பா இப்போது தான் நான் சம்பாதிக்க போகிறேன் வரும் போது நிறைய தருகிறேன் என்றுவிட்டு விலகினேன்

leomohan
13-05-2007, 02:55 PM
முதன் முறையாக Gulf Airல் பயணம். வண்டியில் உட்கார்ந்தவுடன் இனிப்பு தருவார்கள் என்று சினிமாவில் பார்த்தது. அதை போலவே ஒரு சிறிய பெட்டியில் எல்லோருக்கும் எதையோ தந்தார்கள். சிறிய சாக்லேட் போல இருந்தது. பெயர் எதுவும் இல்லை. வெறும் Gulf Air என்று எழுதியிருந்தது. ஒரு ஓரத்தில் பிரித்து வாயில் வைத்தேன். கடிக்க முடியவில்லை. சற்றே கசந்தது. பிறகு சுற்றுமுற்றும் பார்த்தேன். அனைவரும் அதனை பிரித்து கைகுட்டை போல முகத்தை துடைத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அது perfumed facial tissue. சிறியதாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. என் தலையில் நானே கொட்டிக் கொண்டேன். இனி எது செய்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து தெரிந்துக் கொண்டு செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். இன்று நினைத்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது.

leomohan
13-05-2007, 02:56 PM
என்னை அழைத்து செல்ல என்னுடன் பணி புரிபவர் வந்திருந்தார். மே மாதம் 17ம் தேதி. 1997. நல்ல வெயில். சென்றிறங்கியதும் சுட்டது. 48 டிகிரிகள் இருக்கும் போல. ஏன்டா வந்தோம் என்றிருந்தது. நேராக என்னை அழைத்துக் கொண்டு ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றார். மேலும் சென்ற காரில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்று வேறு மன்னிப்பு கேட்டார். தொப்பலாக போய் இறங்கியதும் நல்ல பசியில் நன்றாக சாப்பிட்டேன். அவர் பஹ்ரைனை பற்றி சொல்ல நானும் சேகரித்த பல விஷயங்களை சொன்னே. அட பரவாயில்லையே பஹ்ரனை பற்றி இத்தனை விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாயே என்றார். அங்கு வேலை கிடைக்கும் முன்பு வரை பஹ்ரைன் தலை நகரம் மனாமா என்று பல வருடங்களுக்கு முன்பு மனப்பாடம் செய்தது மட்டும் தான். அது எங்கிருக்கிறது என்று கூட தெரியாது. அப்பா வரைபடத்தில் தேடி ஒரு புள்ளியை காட்டினார். மிகவும் சிறிய ஊர் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து அவரிடமே ஒரு முட்டாள்தனமான கேள்வியும் கேட்டேன். ஐயா பஹ்ரைன் 33 தீவுகளால் ஆனது அல்லவா. ஒரு தீவிற்கும் மற்றொரு தீவிற்கும் எப்படி போகிறீர்கள் என்று கேட்டேன். அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல். காரில் செல்வோம். பிறகு காரை நிறுத்திவிட்டு போட்டில் செல்வோம். திரும்ப வந்து காரில் வந்துவிடுவோம் என்றார். நானும் பல நாட்கள் வரை அதை நிஜம் என்று நம்பியிருந்தேன். அதை இன்னொரு நண்பரிடம் சொல்லப்போக விழுந்து விழுந்து சிரித்தார். அடேய் 33ல் கிட்டதட்ட அனைத்து தீவுகளும் சாலை வழியாக இணைக்கப்பட்டுவிட்டன என்றார். எனக்கு முகம் எல்லாம் சிவந்து போய்விட்டது. அடிக்கடி போட்டில் போகலாம் எனும் கனவிலும் மண் விழுந்தது. அந்த நண்பர் பல மீட்டிங்குகளில் இதை சொல்லி மக்களை சிரிக்க வைப்பார்.

leomohan
13-05-2007, 03:06 PM
பஹ்ரைன் - வெறும் 700 கிலோ மீட்டர் பரப்பளவு. 6 லட்சம் மக்கள் தொகை. அதில் பாதி வெளிநாட்டவர்கள். மனாமா தலைநகரம். இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் பிலிப்பினோ பங்களாதேஷிகள் மற்றும் இலங்கையை சேர்ந்து வெளிநாட்டவர்கள்.

1970 வரை ஆங்கிலேயேர் ஆட்சி. இந்திய ரூபாய் தான் புழக்கத்தில் இருந்த பணம். அதனால் கடைகளில் ரூபாய் என்று இன்னும் சொல்வார்கள். டாக்ஸி ஓட்டுனர்களில் பலருக்கு ஹிந்தி தெரியும். அவர்கள் ராஜ் கபூர் படங்களை விரும்பி பார்ப்பவர்கள்.

எங்களை முதல் நாளாக அலுவலகம் அழைத்து செல்ல ஒரு கார் வந்திருந்தது. அதை ஓட்டி வந்தவர் நல்ல செக்கசெவேலாக இருந்தார்.

நான் 30 நாட்களில் அரபிய மொழி எனும் புத்தகம் வாங்கி ஏதோ படித்து வைத்திருந்தேன்.

வண்டியில் உட்கார்ந்ததும் சலாம் அலைகும் கே ஃபிலால் - வணக்கம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் பதில் கூறினார்.

சரிதான் ஒரு அரபு மொழிகாரரை குஷிப்படுத்திவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு ஆங்கிலத்தில் அவர் பெயர் என்ன என்று கேட்க அவர் அசீஸ் என்றார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்ட அலுவலகம் வந்து சேர்ந்தோம். இறங்கும் போது அவர் ஹிந்தியில் எப்போது மீண்டும் வரட்டும் என்று கேட்டார். அடே நன்றாக ஹிந்தி பேசுகிறீர்களே என்று பாராட்டினேன். அட நான் இந்தியன் தானே என்றார். அடப்பாவி எந்த ஊர் என்று கேட்டேன். அவர் கேரளா என்றார்.

அடப்பாவி ஹிந்தி அரபிக் இரண்டும் நன்றாக பேசுகிறாயே என்று கேட்க இங்கு வந்த பிறகு எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியது தான் என்றார்.

அவர் உடையும் நிறத்தையும் வைத்து அவரை அரபிக்காரர் என்று முடிவு செய்ததை நினைத்து இன்றும் சிரிப்பேன்.

அது மட்டும் அல்ல என்னை பொறுத்தவரையில் ஷேக் என்றால் அந்த உடை அணிந்து தலையில் கட்டிக் கொண்டிருப்பவர் என்று தான் நினைப்பு. அங்கு போனபின் தான் எல்லாரும் அப்படி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அப்படி கட்டிக் கொள்பவர்கள் அனைவரும் ஷேக் இல்லை என்பதும் தெரிய வந்தது.

உள்ளூரில் இருந்து கிட்டாத ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் கிட்டி வந்தது.

leomohan
13-05-2007, 04:00 PM
சுமார் இரண்டு ஆண்டுகள் கார் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்றால் வாங்கும் அளவுக்கு சம்பளமும் இல்லை. Hotmail Reminder - 7th of every month - Send Money to Dad என்று வைத்திருப்பேன். 7ம் தேதி மாதாமாதம் அப்பாவிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று.
முதலில் Room Sharing basis ல் இருந்தேன். ஒரு தமிழருடன். மும்பையில் பிறந்து வளர்ந்த பாலகாட்டு தமிழர். அவர் பேசும் தமிழ் கேட்க இனிமையாக இருக்கும். வார நாட்களில் சமைத்து உண்பவர். என்னையும் சமையல் வேலையில் சேர்ந்துக் கொள்ள சொன்னார். என்னுடைய வேலை காரணமாக சமைப்பதோ பாத்திரம் கழுவுவதோ சாத்தியமாகாது என்று விட்டுவிட்டேன். காலையில் 7 மணிக்கு பாடம் துவங்கினால் சில நேரம் 9.00 மணி இரவு ஆகிவிடும்.
பாடம் நடத்துவது மிகவும் கடினமான வேலை தான். பல விஷயங்களை குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும். எத்தனை களைப்பு இருந்தாலும் மாணவர்களிடம் காட்டிக் கொள்ள முடியாது. நகைச்சுவையுடன் பேசவேண்டும். புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.
இந்தியாவில் பாடம் நடத்தி பழகிய நான் இதை சுலபமாகவே செய்து வந்தேன்.
எனக்கு வேலை கிடைத்ததும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தான். எனது நேர்முக தேர்வு தில்லியில் நடந்தது.
சுமார் 7 படிகள் எழுத்து மற்றும் பேச்சு தேர்வுகளுக்கு பிறகு நேர்முக தேர்வு. முதல் கேள்வி Tell me something about yourself என்று கேட்டார் தேர்வாளர். மன்னிக்கவும் என்றேன். மீண்டும் சொன்னார். என் காதில் சரியாக விழவில்லை. மீண்டும் மன்னிக்கவும் என்றேன்.
நான் பேசுவதே உனக்கு புரியவில்லை என்றால் அரபிக்காரர்கள் பேசுவது எப்படி உனக்கு புரியும் என்றார். அவ்வளவுதான் என்று முடிவு செய்துக் கொண்டேன். மீண்டும் உறக்க கேட்டார். பிறகு என்னை பற்றி சரளமாக சொன்னேன்.
கணினியில் முதல் பாடம் என்று இருந்தால் என்ன நடத்துவாய் என்று கேட்டார்கள்.
மனிதனின் முகம் வரைந்து இதில் கண்களும் காதுகளும் தான் Input Unit, மூளை தான் Central Processing Unit, வாயும் கைகளும் தான் Out Put Unit என்று விளக்கினேன். அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நீ எதாவது கேள்வி கேட்க விரும்புகிறாயா என்று கேட்டார்கள். 24 வயது. தன்னம்பிக்கை அதிகம். தைரியம் அதிகம். சட்டென்று ஒரு கேள்வி கேட்டேன். வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் நீ போகலாம் என்று ஊற்றி மூடியிருப்பார்கள் என் கதையை.
இது தான் நான் கேட்ட கேள்வி - ஐயா வருடத்திற்கும் 3000 மாணவர்களை உருவாக்கும் உங்கள் கல்வி நிறுவனத்தில் உங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்ற ஒருவரை போதகராக எடுத்திருக்கலாமே. அதை விட்டு உங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலாத என்னை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த அவர் மெல்ல சிரித்துவிட்டு நீ போய் வா என்றார்.
அடுத்த வாரம் அந்த நேர்மைக்கும் தைரியத்திற்கும் ஒரு பாராட்டு கிடைத்து. என்னை அரபிய நிறுவனத்தின் முதலாளியை சந்திக்குமாறு அழைப்பு வந்திருந்தது.

leomohan
13-05-2007, 04:08 PM
http://leomohan.etheni.com/t/dic.jpg
Dubai Internet City (www.dubaiinternetcity.ae (http://www.dubaiinternetcity.ae)) - பறவையின் பார்வையில்


http://leomohan.etheni.com/t/mohan-dic.jpg
Dubai Internet Cityல் பணிபுரியும் போது அதன் வளாகத்தில் நான்

leomohan
13-05-2007, 04:18 PM
குறும்புத்தனத்தில் எப்போதுமே குறை வைத்ததில்லை. அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை வைத்து குறுநாடகங்கள் - skits எழுதுவதும் கேலிசித்திரங்கள் போடுவதும் மற்றவர்களை போல் மிமிக்கிரி - குறிப்பாக மேலாளர்களை போல் செய்து காட்டுவதும் எப்போதும் நானும் கலகலப்பாக இருந்து சூழலையும் கலகலப்பாக வைத்திருக்கும் பழக்கம் உடையவன்.
இங்கு உடன் பணிபுரிந்த இரண்டு இரானியர்களின் முகத்தையும் என் முகத்தையும் சேர்த்து Three Stooges இதோ உங்களை மகிழ்விக்க.
http://leomohan.etheni.com/t/mohan-threestooges.jpg

leomohan
13-05-2007, 04:20 PM
நையாண்டி பண்ணுவதில் இன்னொரு விதம் உண்டு. அது ஆங்கில ஹிந்தி பாடல்களை உல்டா செய்து வம்பு செய்வது.

Stevie Wonderன் புகழ் பெற்ற I Just Called To Say I Love You பாடல் என்ன பாடுபடுகிறது இங்கே பாருங்கள.

We Just Called To Say You Are Fired ( Composition - MS )

No Annual day to celebrate
No increment letters to give away
No first of month
No promotion to give
In fact here's just another ordinary day

No April Bonus
No change from buffoon
No picnic Saturday within the month of June
But what it is, is something true
Made up of these three words that We must say to you

We just called to say You are Fired
We just called to say how much we hate
We just called to say You are Fired
And We mean it from the bottom of HR

No allowances hike
No increase in pay
No branches to say we are multinational
No Overseas trips
No training trips
Not even time for in-house training

No products team
No Support is keen
No giving thanks to all the AMCs you bring
But what it is, though old so new
To fill your heart like no three words could ever do

We just called to say You are Fired
We just called to say how much we hate
We just called to say You are Fired
And We mean it from the bottom of HR

We just called to say You are Fired
We just called to say how much we hate, we do
We just called to say You are Fired
And We mean it from the bottom of HR
Of HR,
...... of HR


We Just Called To Say You are Fired
( Stevie Wonder )

No New Year's day to celebrate
No chocolate covered candy hearts to give away
No first of spring
No song to sing
In fact here's just another ordinary day

No April rain
No flowers bloom
No wedding Saturday within the month of June
But what it is, is something true
Made up of these three words that I must say to you

I just called to say I love you
I just called to say how much I care
I just called to say I love you
And I mean it from the bottom of my heart

No summer's high
No warm July
No harvest moon to light one tender August night
No autumn breeze
No falling leaves
Not even time for birds to fly to southern skies

No Libra sun
No Halloween
No giving thanks to all the Christmas joy you bring
But what it is, though old so new
To fill your heart like no three words could ever do

I just called to say I love you
I just called to say how much I care
I just called to say I love you
And I mean it from the bottom of my heart

I just called to say I love you
I just called to say how much I care, I do
I just called to say I love you
And I mean it from the bottom of my heart
Of my heart,
...... of my heart

leomohan
13-05-2007, 04:25 PM
வெளிநாட்டவர்களிடம் பழக பழக அவர்களுடைய உணவு பழக்கம் நாகரீகம் கலாச்சாரம் அவர்களுடைய ஆங்கிலம் பேசும் விதம் எதை வைத்து அவர்கள் கோபம் கொள்வார்கள் எதை சொன்னால் சிரிப்பார்கள் அவர்களுடைய மதம் மற்றும் கடவுளின் பார்வை என்ன அவர்கள் இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று இப்படி பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் நம்முடைய அறிவும் நாம் உலகத்தவரை பார்க்கும் பார்வையும் விரிவடைகிறது.

இதோ ஒரு பிரெஞ்ச்காரருடன் நான். பிரெஞ்ச்காரர்கள் பேசும் ஆங்கில கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பழகுவதற்கும் மிகவும் நல்ல மனிதர்கள். இந்தியர்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

http://leomohan.etheni.com/t/mohan-french.jpg

leomohan
17-05-2007, 12:37 PM
காலையில் 7 மணி வகுப்பிருக்கும் போது 6 மணிக்கு எழுந்து தயாராகிவிடுவேன். வீட்டின் அருகில் இருந்த பலசரக்கு கடையில் ஒரு Flavored Milk - வாழைபழம் ஸ்டராபெர்ரி அல்லது சாக்லேட் கலந்த பால் பாக்கெட். பிறகு ஒரு sweet bread. இது தான் என் காலை உணவு. அன்றும் அது போல வழக்கமாக வாங்கி கொண்டு என்னுடைய வாகன ஓட்டுனர் வரும்வரையில் ஹாயாக ரோட்டில் நின்று பால் அருந்திக் கொண்டிருந்தேன். அவரும் தமிழர் தான். பெயர் பாண்டியன். அவரை பற்றி இன்னொரு பதிவில் இடுகிறேன். அற்புதமான மனிதர். எந்த பிரச்சனை வந்தாலும் முகத்தில் சிரிப்பை விடாதவர். அவரிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

அன்று என்னை அழைக்க வந்த அவர் மோகன் என்ன செய்யறீங்க. சீக்கிரம் உள்ளே வாங்க என்றார் பதட்டத்துடன். நான் ஹாயாக என்ன பாண்டியன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.

டென்ஷனா உங்களை உள்ளே தூக்கி போட்டிருப்பாங்க ஜெயில்ல. இது ரமதான் மாசம். வெளியே எதுவும் சாப்பிடக்கூடாது என்றாரே பார்க்கலாம்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. மனிதன் வாழ் நாளில் நீதிமன்றமும் காவல் நிலையத்திற்கும் செல்ல விரும்புவதில்லை. அதிலும் மொழி தெரியாத காவல் நிலையம் என்றால் கேட்க வேண்டுமா. அது மட்டும் அல்லாமல் பஹ்ரைன் காவல் துறையினர் பெரும்பான்மையான பாகிஸ்தான் காரர்கள் என்றும் அவர்கள் இந்தியர்கள் மாட்டிக் கொண்டால் அவ்வளவு நன்றாக நடத்துவதில்லை என்றும் கேள்விபட்டிருந்தேன்.

உள்ளே வந்ததும் கையில் இருந்த தின்பண்டங்களை கீழே வைத்துவிட்டு சற்றே மூச்சு விட்டுக் கொண்டேன்.

leomohan
17-05-2007, 12:38 PM
சாப்பாடு எப்போதுமே ஒரு பிரச்சனை தான். மதியத்தில் ஒரு கேரள உணவகம். 710100 எண் இன்றும் நினைவிருக்கிறது. சரியாக 12.30 மணிக்கு போன் போடுவேன். அவர்களிடத்தில் காலர் ஐடி இருந்ததால் என் எண்ணை பார்த்தும் ஒன் தால் ஒன் ப்ளெயின் ரைஸ் ஓகே என்பார். ஆம் என்பேன். சரியாக 30 நிமிடத்திற்குள் வந்துவிடும். சொந்தமாக வாகனம் இல்லாததால் செஞ்சுரிதான் பெற்றோராக இருந்து பேச்சுலர்களை காக்கும். சுமார் ஒன்றரை வருடம் இதையே உண்டேன் என்றால் நம்புவீர்களா.

பேச்சுலர் என்றதும் எஸ்வி சேகரின் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.

காலேஜ் என்பது தமிழ் வார்த்தை என்பார். உடனே நிருபர் அப்படியா என்று ஆச்சர்யப்பட

ஆமாய்யா ஒரு மனுஷனுக்கு 100 வயசுன்னா அதில் கால் பங்கு 25 வருஷம் அவன் படிச்சிகிட்டே இருக்கான். அது தான் கால் ஏஜ்.

சார் பேச்சுலர்னா என்ன

அதுவும் தமிழ் தான்ய்யா. பேச்சுலர்னா பேச்சு துணைக்கு ஆள் இல்லாதவர். பேச்சு இலர் என்பார்.

ஆனால் எனக்கோ போதும் போதும் எனும் அளவிற்கு பேச்சு துணைக்கு ஆட்கள். மாணவர்கள் மாறி மாறி ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மதிய உணவிற்கு அழைப்ப விடுப்பர்.

குறிப்பாக நான் சைவம் என்பதால் ஒரு பாகிஸ்தான் மாணவியின் குடும்பத்தில் உணவுக்கு அழைப்பு வந்தபோது புதிய தட்டு மற்றும் குடிக்க குவளைகள் வாங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

leomohan
17-05-2007, 12:38 PM
இங்குள்ளவர்களால் பல் எனும் வார்த்தையில் உள்ள பவை உச்சரிக்க முடியாது. Parking Playing Pepsi போன்ற வார்த்தைகளை இவர்கள் உச்சரிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் Barking Blaying Bebsi என்பார்கள். நாங்கள் வேண்டுமென்றே இந்த வார்த்தைகள் பதிலாக வருமாறு எதையாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.

அறிஞர்
17-05-2007, 04:56 PM
வாவ் தொடரும் சுவையான சம்பவங்கள் மனதை கொள்ளை கொள்கிறது...

ஒவ்வொரு நாட்டினருடன் பழகும் போது.. புது புது அனுபவங்கள் தான்.. தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்

ஷீ-நிசி
17-05-2007, 05:19 PM
இங்குள்ளவர்களால் பல் எனும் வார்த்தையில் உள்ள பவை உச்சரிக்க முடியாது. Parking Playing Pepsi போன்ற வார்த்தைகளை இவர்கள் உச்சரிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் Barking Blaying Bebsi என்பார்கள். நாங்கள் வேண்டுமென்றே இந்த வார்த்தைகள் பதிலாக வருமாறு எதையாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.

ம்ம்ம்ம்.... ரசிக்கும்படி இருக்கிறது உலகம் சுற்றிய தொகுப்புகள்.... BEBSI :food-smiley-008: என்று சொல்வதை கேட்டால் சிரிப்புத்தான் வரும்... தொடருங்கள் மோகன் அவர்களே!

lolluvathiyar
17-05-2007, 05:20 PM
உங்கள் அனுபவம்
என்னை மெய்சிலிர்க்க
வைக்கிறது,
உங்களை எப்படி பாராடுவது
என்றே தெரியவில்லை
உங்களை நன்பராக
அடைந்ததில் மகிழ்ச்சி

அக்னி
17-05-2007, 05:22 PM
சம்பவக் கோர்வைகளை, சுவையாக விறுவிறுப்பாகத் தருகிறீர்கள். மேலும் தொடருங்கள் நண்பரே...

மலைக்க வைக்கிறீர்கள்...

அக்னி
17-05-2007, 05:23 PM
சம்பவங்களை, சுவையாக விறுவிறுப்பாகத் தருகிறீர்கள். மேலும் தொடருங்கள் நண்பரே...

மலைக்க வைக்கிறீர்கள்...

மனோஜ்
17-05-2007, 05:31 PM
மேகன் சார் நான் சவுதி வந்த புதிதில் உங்கள் காலை டிபன் சம்பவம் எனக்கும் நடந்தது தப்பித்தேன்
நன்றி தொடருங்கள்

leomohan
17-05-2007, 08:27 PM
ஒரு முறை இந்தியாவில் தில்லியில் இருந்த சமயம் அது. லக்னோவில் ஒரு உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்கு செல்ல நேர்ந்தது.

அப்போது அவர்களுடைய நண்பர்களுடைய வீட்டில் ஒரு பூஜை நடப்பதாகவும் அதற்கு எங்களையும் அழைப்பதாகவும் கூறினார்கள்.

குடும்பத்துடன் எப்போதாவது கோவிலுக்கு போவதோடு சரி. நானாக கோவிலுக்கு போவதோ பூஜைகளில் கலந்துக் கொள்ளும் வழக்கமோ கிடையாது.

இருந்தால் யாரை பார்க்க சென்றோமோ அவர்களே வீட்டில் இல்லாதபோது நான் மட்டும் வீட்டில் இருந்து என்ன செய்வதென்று நானும் கிளம்பினேன். மேலும் சுவையான உணவு கிடைக்குமே.

போவதற்கு முன்பே சரியான built-up. அந்த சாமியார் மனதில் நாம் நினைத்தை கூறிவிடுவார் அது இது என்று.

பூஜை முடிந்ததும் ஒவ்வொருவராக வந்து அவர் முன் நிற்க அவர் அனைவருக்கும் கையில் தாயத்து கட்டிக் கொண்டே வந்தார்.

என்னிடம் வந்ததும் - மன்னிக்கவும் எனக்கு இதில் நம்பிக்கையில்லை என்றேன்.

என்னை அழைத்து சென்ற உறவினருக்கோ முகத்தில் ஈ ஆடவில்லை. அவருடைய நண்பருக்கோ என்ன சொல்வது என்று தெரியிவில்லை. எனக்கு வயது 19 இருக்கும்.

அந்த சாமியார் என்னை உற்று பார்த்தார். எந்த ஊரு தம்பி நீ என்று கேட்டார். நான் துடுக்குத்தனம் மாறாமல் முண்டியம்பாக்கம் என்றேன்.

அது எங்க இருக்கு என்று கேட்டார்.

விழுப்புரத்திற்கு அருகில் என்றேன்.

பிறகு பேசாமல் மற்றவர்களுக்கு தாயத்து கட்டினார்.

சற்று நேரம் கழித்து யார் வீட்டில் அந்த நிகழ்ச்சி நடந்ததோ அவர் என்னருகில் வந்து முதுகில் தட்டிக் கொடுத்து - பரவாயில்லையே எத்தனை பெரியவராக இருந்தாலும் உன் மனதில் பட்டதை தைரியமாக சொன்னாயே என்று பாராட்டினார்.

பிறகு விடை பெறுவதற்கு முன் சாமியாரை வணங்கிவிட்டு அவரிடம் உங்களை பார்க்க தான் வந்தேன். அதனால் நான் பேசியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் என் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றேன்.

நீ பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்தி அனுப்பினார் அவர்.

leomohan
17-05-2007, 08:28 PM
வாவ் தொடரும் சுவையான சம்பவங்கள் மனதை கொள்ளை கொள்கிறது...

ஒவ்வொரு நாட்டினருடன் பழகும் போது.. புது புது அனுபவங்கள் தான்.. தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்

நன்றி அறிஞரே.

leomohan
17-05-2007, 08:28 PM
ம்ம்ம்ம்.... ரசிக்கும்படி இருக்கிறது உலகம் சுற்றிய தொகுப்புகள்.... BEBSI :food-smiley-008: என்று சொல்வதை கேட்டால் சிரிப்புத்தான் வரும்... தொடருங்கள் மோகன் அவர்களே!

நன்றி ஷீ.

leomohan
17-05-2007, 08:29 PM
உங்கள் அனுபவம்
என்னை மெய்சிலிர்க்க
வைக்கிறது,
உங்களை எப்படி பாராடுவது
என்றே தெரியவில்லை
உங்களை நன்பராக
அடைந்ததில் மகிழ்ச்சி

நன்றி வாத்தியாரே.

leomohan
17-05-2007, 08:29 PM
சம்பவங்களை, சுவையாக விறுவிறுப்பாகத் தருகிறீர்கள். மேலும் தொடருங்கள் நண்பரே...

மலைக்க வைக்கிறீர்கள்...

உற்சாகத்திற்கு நன்றி அக்னி அவர்களே.

leomohan
17-05-2007, 08:30 PM
மேகன் சார் நான் சவுதி வந்த புதிதில் உங்கள் காலை டிபன் சம்பவம் எனக்கும் நடந்தது தப்பித்தேன்
நன்றி தொடருங்கள்

ஓ அப்படியா. உங்கள் அனுபவங்களையும் எழுதங்களேன். நன்றி.

leomohan
17-05-2007, 08:35 PM
சரி மீண்டும் பஹ்ரைனுக்கு வருவோம்.

என்னுடை வகுப்புகளுக்கு நான் தயார் செய்யும் விதம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஒரு தனி பாணியை வளர்த்துக் கொண்டேன் என்றே சொல்லலாம்.

முதலில் என் வகுப்பில் உள்ள மாணவர்களுடைய படிப்பு வயது அவர்களுடைய பின்னனி என்று அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறந்த தேதி அவர்களுடைய ராசி போன்று விஷயங்களை கிட்டதட்ட மனப்பாடம் செய்துக் கொள்வேன். பிறகு பஹ்ரைனில் இந்தியர்களுக்கான சில directories உள்ளன. அதில் இந்த வகுப்பின் மாணவர்களின் பெயர்கள் உள்ளதா என்று பார்ப்பேன். அதில் அவர்களை பற்றிய குறிப்புகள் விருப்ப-வெறுப்புகள் பிறருக்கு உதவ அவர்களுடைய ரத்த பிரிவுகள் இவற்றின் விவரங்கள் இருக்கும். அவற்றை குறிப்பெடுத்துக் கொள்வேன்.

15 மாணவர்கள் ஒரு வகுப்பில். முதன் முறையாக நுழைவதற்கு முன்பே மேல் சொன்ன விஷயங்களை மனப்பாடம் செய்துக் கொள்வேன்.

அப்புறம் என்ன வகுப்பில் நுழைந்ததும் ஒரே கூத்து தான்.

முதல் வகுப்பில் சுமார் 15 நிமிடங்கள் அவர்களை நன்கு அறிவதில் செலவிடுவேன்.

உதாரணமாக முதல் மாணவரை பார்த்து தன் பெயரை சொல்ல சொல்வேன். இரண்டாவது மாணவர் முதல் மாணவரின் பெயரை சொல்லி தன் பெயரை சொல்ல வேண்டும். இதுபோல ஒரு சுற்று முடியும் போது முதல் மாணவர் மற்ற 14 பெயர்களை சொல்லி தன் பெயரை மீண்டும் சொல்வது போல் அமையும்.

தொடரும்...

அறிஞர்
18-05-2007, 12:16 AM
உதாரணமாக முதல் மாணவரை பார்த்து தன் பெயரை சொல்ல சொல்வேன். இரண்டாவது மாணவர் முதல் மாணவரின் பெயரை சொல்லி தன் பெயரை சொல்ல வேண்டும். இதுபோல ஒரு சுற்று முடியும் போது முதல் மாணவர் மற்ற 14 பெயர்களை சொல்லி தன் பெயரை மீண்டும் சொல்வது போல் அமையும்.

தொடரும்...
பிரம்பெடுக்காத புதிய வாத்தியார்....
பாடம் நடத்தினவுடன்.. மாணவர்களிடம் உங்களுக்கு பெயர் எப்படி...?

leomohan
18-05-2007, 08:23 AM
பிரம்பெடுக்காத புதிய வாத்தியார்....
பாடம் நடத்தினவுடன்.. மாணவர்களிடம் உங்களுக்கு பெயர் எப்படி...?

ஹா ஹா எப்பவுமே நல்ல பெயர் தான்.

leomohan
19-05-2007, 10:32 AM
பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே ஏதாவது ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு ஒரு மாணவரிடத்திலிருந்து நகைச்சுவையாக பதில் வந்தால் - ஆ சிம்மராசிக்காரர் தானே நீங்கள். நல்ல நகைச்சுவையாக என்னை போலவே பேசுகிறீர்கள் என்பேன்.

அட நான் சிம்ம ராசி என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்பார்.

பேசுவதை வைத்தே கண்டுபிடித்துவிடுவேன் என்று கதை விடுவேன்.

உடனே சில மாணவிகள் எங்கள் ராசி என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்பார்கள்.

10க்குள் ஒரு எண் சொல்லுங்கள் என்பேன்.

அவர்கள் சொன்னது நீங்கள் மீன ராசி என்பேன். எல்லாம் முன்பே தயார் செய்து வைத்தது தானே.

ஆனால் அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். இதுபோல சிலருடைய ரத்த பிரிவுகளை சொல்லி அவர்களை அசத்துவேன்.

இதுபோன்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள். மேலும் எழுதுகிறேன்.

தொடரும்...

leomohan
22-05-2007, 11:25 AM
பல சமயம் என்னைவிட வயதில் அதிகமான மக்கள் உடைய வகுப்பிற்கு பாடம் நடக்க நேரிடும். இது போன்ற சமயங்கள் மிகவும் சவாலாக இருக்கும்.

அதற்காக பிரத்யேகமான தயாரிப்புகள் செய்ய வேண்டி வரும்.

1. மாணவர்களுடைய வேலை படிப்பை பற்றி நன்றாக ஆராயவேண்டி வரும்
2. பிறகு அவர்களை பற்றி எத்தனை தகவல் சேகரிக்க வேண்டுமோ அத்தனை தகவலும் சேகரிப்பேன். உதாரணமாக அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்தே முன்பே ஒருவர் என்னிடம் பயின்றிருந்தால் அவருக்கு போன் போட்டு சாதாரணமாக பேசிக் கொண்டே அப்துல் அடுத்த வாரம் என்னிடம் படிக்க வருகிறார். மனுஷன் எப்படி என்று கேட்பேன். ஓ அவரா பாருங்கள் உங்களை கேள்வி கேட்டு ப்ளேடு போடுவார், ஓ அவரா சாது, தொந்தரவே செய்ய மாட்டார். ஓ அவரா அவர் மிகவும் அனுபவம் வாயந்தவர். உங்களை கேள்வி கேட்டு குடைய போகிறார் என்று விதவிதமாக வரும் தகவல்களை சேகரிப்பேன்.

3. முதல் 15 நிமிடம் என்னுடைய பேருரை வைத்துக் கொள்வேன்.
அதில் குறிப்பாக கீழ்கண்ட விஷயங்களை செய்வேன்.

கையில் மார்க்கர் பேனா வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு மாணவரை பார்த்து ஒரு வட்டம் வரையச் சொல்வேன். அவரும் வந்து வரைந்து செல்வார். பிறகு வகுப்பை பார்த்து இது வட்டமா என்று கேட்பேன். சிலர் ஆம் என்பார்கள். சிலர் இது முட்டை என்று சொல்லி சிரிப்பார்கள்.

நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்பேன்.

1. நான் மார்க்கரை கொண்டு வரையச் சொன்னேனா.

2. எத்தனை ரேடியஸ் என்று சொன்னேனா

3. ஏன் அருகிலிருந்த மாணவியிடமிருந்து வளையல் வாங்கி வரையலாமே. நல்ல வட்டம் வந்திருக்குமே.

ஆக நீங்கள் கேள்வி கேட்க மறுக்கிறீ்ர்கள். ஒன்று நீங்கள் பலவற்றையும் புரிந்துக் கொண்டு செய்வதாக காரியங்கள் செய்கிறீர்கள் அல்லது பயப்படுகிறீர்கள். கேள்விகள் கேட்க வேண்டும், அதையே என் வகுப்பில் நான் விரும்புவேன் என்பேன்.

பிறகு ஒரு கோப்பை வரைந்து அதில் பாதிவரை திரவம் நிரப்பியிருப்பதுபோல் காட்டுவேன்.

மாணவர்களை பார்த்து இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பேன். சிலர் குடுவையில் தண்ணீர் பாதி நிரம்பியுள்ளது என்பார்கள். சிலர் பாதி காலியாக உள்ளது என்பார்கள்.

நான் ஒரு சிறிய விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் வருகிறது பார்த்தீர்களா. எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் உங்கள் சொந்த நிர்ணயம் எடுங்கள். உங்களால் முடியாவிட்டால் நான் சொல்வதை கேளுங்கள் என்பேன்.

மேலும் தண்ணீர் இருக்கிறது என்று சொன்ன மாணவர்களை பார்த்து, நான் அதில் உள்ள திரவம் தண்ணீர் என்று எழுதினேனா. ஏன் நீங்களே தண்ணீர் என்று நினைத்துக் கொண்டீர்கள். எதையும் ஊகிக்காதீர்கள். Don't Assume. ASSUME is making an ASS out of U and ME என்று சொல்வேன். சிரிப்பொலி எழும். அவர்களுக்கு அந்த கருத்தும் புரியும். ஆக சந்தேகத்தில் இருந்தால் கேளுங்கள் என்பேன்.

இப்படியாக அவர்களை என் பாணிக்கு தயார் செய்வேன்.

தொடரும்...

mathura
22-05-2007, 12:21 PM
ஐயா லியோ
தங்களின் பயணக்கட்டுரை (7 பாகங்கள்)
ஒரே மூச்சில் படித்து விட்டேன்
மிகவும் பயனுள்ள கருத்துக்களை மிகவும்
சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்
நன்றி

leomohan
22-05-2007, 12:28 PM
ஐயா லியோ
தங்களின் பயணக்கட்டுரை (7 பாகங்கள்)
ஒரே மூச்சில் படித்து விட்டேன்
மிகவும் பயனுள்ள கருத்துக்களை மிகவும்
சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்
நன்றி

நன்றி மதுரா. தொடர்ந்து படிக்கவும். நன்றி.

அக்னி
22-05-2007, 12:32 PM
இப்படி ஒரு ஆசான் கிடைத்தால், படிப்பு மாணவர்களுக்கு ஏன் கசக்கப் போகின்றது..?

மாணவர்களின் தன்மைக்கேற்ப, வயதுக்கேற்ப பாடம் நடாத்தும் உங்கள் திறன் ஆச்சரியம் தருகின்றது. பாடத்திற்கு ஆயத்தம் செய்வதிலும் படிப்பவர்களுக்காக ஆயத்தம் செய்யும் ஆசிரியரை இப்போதுதான் பார்க்கின்றேன்.

ஒரு படத்தில் இடம்பெற்ற வசனம். மாணவர்களுக்கு சொல்லப்பட்டது:
கஷ்ரப்பட்டுப் படிக்காதீங்க... இஷ்டப்பட்டுப் படிங்க...

உங்கள் சேவை தொடர வேண்டும்...
உங்கள் புகழ் வளர வேண்டும்...

தங்கவேல்
23-05-2007, 07:16 PM
லியோ மோகன் , அருமையான கட்டுரை. பழைய நினைவுகளை தூண்டி விடுகிறது உங்களது திரி. இன்னும் எழுதுங்கள். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

leomohan
23-05-2007, 08:12 PM
இப்படி ஒரு ஆசான் கிடைத்தால், படிப்பு மாணவர்களுக்கு ஏன் கசக்கப் போகின்றது..?

மாணவர்களின் தன்மைக்கேற்ப, வயதுக்கேற்ப பாடம் நடாத்தும் உங்கள் திறன் ஆச்சரியம் தருகின்றது. பாடத்திற்கு ஆயத்தம் செய்வதிலும் படிப்பவர்களுக்காக ஆயத்தம் செய்யும் ஆசிரியரை இப்போதுதான் பார்க்கின்றேன்.

ஒரு படத்தில் இடம்பெற்ற வசனம். மாணவர்களுக்கு சொல்லப்பட்டது:
கஷ்ரப்பட்டுப் படிக்காதீங்க... இஷ்டப்பட்டுப் படிங்க...

உங்கள் சேவை தொடர வேண்டும்...
உங்கள் புகழ் வளர வேண்டும்...

மிக்க நன்றி அக்னி

leomohan
23-05-2007, 08:13 PM
லியோ மோகன் , அருமையான கட்டுரை. பழைய நினைவுகளை தூண்டி விடுகிறது உங்களது திரி. இன்னும் எழுதுங்கள். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

நன்றி தங்கவேல் அவர்களே.

பாரதி
23-05-2007, 10:49 PM
பொதுவாக ஆசிரியர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது உங்கள் அனுபவங்கள். தொடருங்கள் மோகன். நன்றி.