PDA

View Full Version : உரிமையுடன் வம்பிழு - பாகம் 5



lenram80
08-05-2007, 12:18 PM
விருந்துக்கு வந்த நண்பர்கள் என்னவளது சமையல் திறனைப் பாராட்ட....

அட, நீங்க வேற!
நான் கொடுத்த சின்ன சின்ன் டிப்ஸ் எல்லாம்
சிறு துளி பெரு வெள்ளமாகி
ருசியான சாப்பாட வருது!
இல்லாட்டி,
வெல்லக்கட்டி பண்ணாள்னா கூட வேப்பங்கட்டி மாதிரி தான் வரும்!

சும்மா பொய் சொல்லாதிங்க!
என் சமையல் எப்பவும் தனி ருசி தான்!
அதை சாப்பிட்ட எல்லோரும் ஒரே குஷி தான்!

அடியே! யாரு பொய் சொல்றது?
முதன்முதலா நீ போட்ட டீ கூட உப்பா இருந்துச்சே, அது ஏன்?
சர்க்கரைக்குப் பதில் உப்பு தானே போட்டே?

அது உப்பாலே இல்லடா செல்லம்!
இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு
ஏங்கி விட்ட கண்ணீராலே!

என்ன செய்வது என்னவளே!
எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் மூளை வேளை செய்வதில்லை!
மூளை கூட சில பேருக்கு சும்மா பேருக்கு தான் இருக்கிறது!
இல்லையென்றால்,
நீ என்னையோ, நான் உன்னையோ
காதலித்து, கல்யாணம் வேறு செய்திருப்போமா?

இதைக் கேட்டு எல்லாரும் சிரிக்க
நான் மட்டும் அவள் சிரிப்பை வெறித்து ரசிக்க
இதைக் கண்ட அவள் மூக்கு கணநேரம் என்னை பார்த்து முறைக்க
உடனே நான் என்னை வேறுபக்கம் மறைக்க

அடடா... அடடா...
காதல் குறும்பு தான்!
கட்டிக் கரும்பு தான்!

=============================================

டேய்!
சீக்கிரம் இங்கே வாடி!
உங்க குடும்பத்தை டிவியிலே காமிக்கிறாங்க!
உங்க அம்மா, அப்பா, உன் தங்கச்சி மாதிரி தெரியுது!

என் தங்கச்சியும் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருமே!
எங்க...? இந்தா வாரேன்!
எங்கம்மா கூட காலையிலே ஃபோன்லெ சொன்னாங்க!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எங்க குடும்பத்தோட போனப்ப
டிவிலெ வந்து இண்டர்வியூ பண்ணாங்களாம்!

அப்படியா! இது கோவில் மாதிரி இல்லையே!
ஏதோ பூங்கா மாதிரி இல்லெ தெரியுது!

இதைக் கேட்டதும் சந்தேகம் அவள் கண்களில்!
சந்தோஷம் என் கண்களில்!

அருகில் வந்து பார்த்த அவளின் கண்கள் சிவந்தது சூடேரி!
அங்கே டிஸ்கவரியில் குரங்குகளைப் பற்றிய கவர் ஸ்டோரி!

ஹாய்! இங்கப் பாரு இப்ப!

நெற்றிக் கண் திறந்து பெண் வேடமிட்ட சிவனாய்
என்னவள் எனைப் பார்த்து
"எதுக்கு என்னை பாருங்குரே?"

கோபத்தில் வார்த்தைகளையும்
அதோடு சேர்த்து மரியாதையும் குறைக்கும் அவளிடம்

இல்ல... உன் குடும்ப ஜாடை உன் முகத்துலேயும் இருக்கான்னு பார்த்தேன்!"

என்று சொன்னேனே பார்க்கலாம்!
அடுத்த கணமே என்னருகில் வந்து
நகங்களைக் கொண்டு பிராண்ட ஆரம்பித்தாள்!

"கன்ஃபார்ம்" என்றேன்!

"என்ன கன்ஃபார்ம்?" என்றாள்!

"முகம் மட்டுமல்ல!
உன் குணாதிசியங்களும் உன் குடும்பத்தோடு ஒத்துபோகிறது!" என்றேன்!

இதைக் கேட்டு அடிக்க வந்தவளை அப்படியே கட்டி அணைத்தேன்!
என் அரவனைப்பில் அவள் கோபம் அணைத்தேன்!
அட! வாயே படாமல் இந்த வாழ்வில் தான் எத்தனை தேன்!
இந்த தேன்களைத் தான் இந்தக் கவிதையில் கூற எத்தனித்தேன்!!!

அறிஞர்
08-05-2007, 12:23 PM
இளம் தம்பதியினரின்
காதல் குறும்புகள்... அருமை....

ஒருத்தரை ஒருத்தர் சீண்டுவது....
அலாதி இன்பம் தான்..

தொடரட்டும் லெனினின் அனுபவங்கள்.
-------------
தாங்கள் சொன்னது கட்டிக் கரும்பு தானே.. லெனின்.

இராசகுமாரன்
08-05-2007, 12:32 PM
இல்லாளுடன் வம்பிழுக்காமல்
வேறு யாரிடம் வம்பிழுக்க போகிறோம்.

அருமையாக கொஞ்சி விளையாடியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.. லெனின்.

ஓவியன்
08-05-2007, 12:36 PM
அருமை லெனின் அன்பளிப்பாக இ-பணங்கள்.

lenram80
11-05-2007, 12:39 AM
நன்றி அறிஞர், ராஜகுமாரன் & ஓவியன்

மனோஜ்
11-05-2007, 02:39 PM
கவிதை அருமையாக உள்ளது கருத்து ரசிக்கும் வன்னம் உள்ளது
லெனின் வருங்களாத்திற்கு உதவியாக இருக்கும் நன்றி