PDA

View Full Version : எம்.எஸ். எக்ஸெலில் (MS Excel) உதவி



அன்புரசிகன்
08-05-2007, 11:04 AM
சாதாரணமாக MS Word இல் page setup செய்யும் பொழுது வித்தியாசமான முறையில் ஒவ்வொரு பக்கத்தையும் அமைக்கவேண்டுமாயின் (page No, Hedder and footing) section break கொடுத்து செயல்ப்படுத்த முடிகிறது.

அது போல் MS Excel ல் செய்ய முடியுமா... அதாவது ஒரே work sheet ல் 1A 2A 3A 4A 5B 6B 8C 10D இந்தமாதிரியாக பக்க இலக்கங்களை கொடுக்க முடியுமா...?

சுருக்கமாக கூறினால் Hedder and Footer ஐ வித்தியாசமாக ஒரே sheet ல் தயாரிக்க முடியுமா?

கணணி ஜாம்பவான்கள் கடைக்கண் காட்டுங்கள்.:)

மதி
08-05-2007, 02:45 PM
நானறிந்த வரையில் எக்ஸலில் ஒரே Worksheet-க்கு Header/Footer தனியாக கொடுக்க இயலாது.

அந்த worksheet முழுக்க ஒரே Header/footer தான் வரும். ஆனால் பல டேட்டாக்களை நீங்க வெவ்வேறு Header/footer-ல் பிரிண்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு கடினமான வழியை பயன்படுத்தலாம்.
எதை பிரிண்ட் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செலக்ட் செய்து
File --> Set Print Area என கொடுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு தக்க Header/footer-ஐ கொடுங்கள்.
பிரிண்ட் செய்யுங்கள்.
பின் வேறொரு பகுதியை செலக்ட் செய்து Set Print Area என கொடுங்கள்.

இந்த முறை தங்களுக்கு உபயோகமாக இருக்குமா..?

அன்புரசிகன்
08-05-2007, 08:25 PM
தகவலுக்கு நன்றி அண்ணா...

முயன்று பார்த்து கூறுகிறேன். ஆனாலும் உங்களின் முறைப்படி முதலிலேயே தயார்பண்ணி வைத்து விட்டு செய்ய முடியாதே.

உங்கள் வழியிலும் தனித்தனி sheet ல் செய்தால் இலகுவாக இருக்கும். ஓரே sheet ல் முடிந்தால் இன்னமும் இலகுவாக இருக்கும்.

மதி
09-05-2007, 04:05 AM
எனக்குத் தெரிந்தவரையில் MS-Excel 2003-ல் அந்த வசதி இல்லை. Vista-ல் நான் முயன்று பார்த்ததில்லை.

leomohan
09-05-2007, 05:12 AM
இந்த தொடுப்பை பாருங்கள் அன்பு ரசிகன் அவர்களே

http://exceltips.vitalnews.com/Pages/T0816_Changing_Section_Headers.html

மதி
09-05-2007, 07:08 AM
தகவலுக்கு நன்றி மோகன்.

இதை நான் முயற்சி செய்து பார்த்தேன். சில லாஜிக்குகளை சரி பார்த்து, பிரிண்ட் செய்கையில் டைனமிக்காக Header-களை மாற்றுகிறது. ஆனால் எல்லா பக்கங்களிலும் ஒரே Header தான் பிரிண்ட் ஆகிறது. இதிலேயே மேக்ரோ மூலமாக பயன்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.

leomohan
09-05-2007, 07:19 AM
தகவலுக்கு நன்றி மோகன்.

இதை நான் முயற்சி செய்து பார்த்தேன். சில லாஜிக்குகளை சரி பார்த்து, பிரிண்ட் செய்கையில் டைனமிக்காக Header-களை மாற்றுகிறது. ஆனால் எல்லா பக்கங்களிலும் ஒரே Header தான் பிரிண்ட் ஆகிறது. இதிலேயே மேக்ரோ மூலமாக பயன்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.

ஓ அப்படியா. நானும் செய்து பார்த்து சொல்கிறேன் ராஜேஷ். நன்றி.

அன்புரசிகன்
09-05-2007, 07:42 AM
தகவலுக்கு நன்றி மோகன். முயற்சித்து கூறுகிறேன்.

நான் பாவிப்பது Microsoft Office 2007 Enterprise Edition. இலகு வழியேதுமிருப்பின் கூறுங்கள் - உதவுங்கள்.

ஓவியன்
09-05-2007, 07:55 AM
அட இது எனக்கும் உள்ள ஒரு பிரச்சினை ஆயிற்றே!

மோகன் அண்ணாவின் தகவலை உபயோகித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

விகடன்
06-08-2007, 07:49 AM
இப்போதுதானே நான் இந்த திரியை பார்த்திருக்கிறேன். பரீட்சித்து பார்த்துவிட்டு வருகிறேன்.