PDA

View Full Version : இரு வரிக் கவிதைகள்



சூரியன்
08-05-2007, 10:07 AM
கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்

அன்புடன்
மீக்கி :icon_give_rose:

umakarthick
08-05-2007, 10:10 AM
கவிதை பிரப்பதும் பென்னால்
கவிதை இரப்பதும் பென்னால்

அன்புடன்
மீக்கி :icon_give_rose:

கவிதை செத்தே பிறந்தது
எழுத்துப் பிழைகளால் !

ஷீ-நிசி
08-05-2007, 10:12 AM
கவிதை செத்தே பிறந்தது
எழுத்துப் பிழைகளால் !

இருவரியில் கவிதை பிறந்தது
இருவரியில் கவலை தெரிந்தது

பிச்சி
09-05-2007, 05:17 AM
உயிர்பித்த கவிதைகளைப்
புதைத்துவிடுவது ஆணே
சிறகிழந்த ஜீவன் கதைகளை
சிரித்துக் கேட்பதும் ஆணே
பாஷைகளை நொதித்து
சிதைப்பதும் ஆணே
வந்து கதைத்து பெண்ணைக்
குறைப்பதும் ஆணே!

சுட்டிபையன்
09-05-2007, 05:30 AM
உயிர்பித்த கவிதைகளைப்
புதைத்துவிடுவது ஆணே
சிறகிழந்த ஜீவன் கதைகளை
சிரித்துக் கேட்பதும் ஆணே
பாஷைகளை நொதித்து
சிதைப்பதும் ஆணே
வந்து கதைத்து பெண்ணைக்
குறைப்பதும் ஆணே!


காதலை கவிதையாக போற்றுவது ஆண்தான்
காதலை செருப்பாக தூற்றுவது பெண்தான்

ஷீ-நிசி
09-05-2007, 05:39 AM
காதலை கவிதையாக போற்றுவது ஆண்தான்
காதலை செருப்பாக தூற்றுவது பெண்தான்

தனிமனித நிகழ்வே
தரணியின் நிகழ்வெனவாகாது!

சுட்டிபையன்
09-05-2007, 05:42 AM
தனிமனித நிகழ்வே
தரணியின் நிகழ்வெனவாகாது!

தனி மனித இயக்கமே
தரணியினது இய்கக்கம்:cool008:

பிச்சி
09-05-2007, 05:53 AM
சுட்டி அண்ணா. நான் சொன்னதுல தப்பு இருக்கா? மன்னிச்சுக்கோன்க

நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். ஆண்கள்தான் ஏமாத்துவாங்க.

ஷீ-நிசி
09-05-2007, 06:06 AM
சுட்டி அண்ணா. நான் சொன்னதுல தப்பு இருக்கா? மன்னிச்சுக்கோன்க

நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். ஆண்கள்தான் ஏமாத்துவாங்க.


மன்னிப்பு கேட்டுட்டாயே -பின்
கடைசியில் ஒரு பிட்டை போட்டாயே...

அக்னி
09-05-2007, 12:10 PM
என் இதயம் கொண்ட காயம்..,
உன் இதயம் தந்த அடையாளம்..!

அக்னி
09-05-2007, 12:11 PM
என் கண்ணீரின் ஈரம்..,
என் தலையணையின் பாரம்..!

அக்னி
09-05-2007, 12:12 PM
என் மனதோடு நான் கொண்ட காதல்..,
என் விழியோடு நீ தந்த கண்ணீர்..!

அக்னி
09-05-2007, 12:15 PM
உன் விழிகளுக்கு என்னை மறைக்கத் தெரியவில்லை..,
என் விழிகளுக்கு உன்னை மறுக்க முடியவில்லை..!

ஆதவா
09-05-2007, 07:29 PM
கலக்குங்க சாமிகளா!!
துலக்கறேன் சிலசமயம்..

அக்னி
10-05-2007, 01:16 PM
உன் மடி கண்டதும்..,
நான் மடிவதும் சுகமே..!

வெற்றி
10-05-2007, 01:20 PM
கைவண்டிகாரர் முகத்தில் பெருமிதம்
புதிய செருப்பு...

சுட்டிபையன்
10-05-2007, 01:21 PM
சுட்டி அண்ணா. நான் சொன்னதுல தப்பு இருக்கா? மன்னிச்சுக்கோன்க

நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். ஆண்கள்தான் ஏமாத்துவாங்க.


பிச்சி ஆண்டி ஆண்கள் ஏமாற்றுவதில்லை, அப்படி ஏமாற்றினாலும் பெண்களால் ஏமாற்ற வைக்கப் படுகிறார்கள் என்றுதான் அர்த்தம்

வெற்றி
10-05-2007, 01:21 PM
எங்கே என் பேனா??
அவள் என்னை பார்த்து சிரித்தாள்...

அரசன்
10-05-2007, 01:23 PM
தனிமனித நிகழ்வே
தரணியின் நிகழ்வெனவாகாது!


"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்" ஏற்றுக்கொள்வீர்களா

அக்னி
10-05-2007, 01:29 PM
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்" ஏற்றுக்கொள்வீர்களா

"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்"
அதனால் குடம் முழுதும் பாலில்லை என்றாகிவிடுமா..? அல்லது குடம் முழுதும் விஷம் என்றாகிவிடுமா..? பால் விஷத்தன்மை பெறுவதுதான் உண்மை. தனி மனித நிகழ்வும் பாதிப்புத் தரும் அவன் கொண்ட குடும்பத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ...

எனவே,
நன்மை என்றால்..,
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
தீமை என்றால்..,
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்"

சந்தர்ப்பங்கள்தான் தீர்மானிக்கும்...

ஷீ-நிசி
10-05-2007, 05:08 PM
கலியமூர்த்திக்கு பிறந்தது கேள்வி
வலியவிடை தந்தது வேள்வி (அக்னி)

அரசன்
10-05-2007, 06:03 PM
இருண்டு கிடந்த என் வாழ்வில்
ஒளியேற்றியவள் - அந்த ஜோதி!

அக்னி
11-05-2007, 09:53 AM
உன்னை பார்த்ததும் என் மனது தொலைந்தது..,
என்னை பார்த்ததும் உன் மனது கலைந்ததா..?

ஓவியன்
14-09-2007, 07:03 PM
இந்த இரு வரிக் கவிதைத் திரியினை தொடர்கவிதைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்,
தொடர்ந்து இங்கே இரு வரிக் கவிதைகளைத் தொடருவோம் நண்பர்களே.....:)

ஓவியன்
14-09-2007, 07:06 PM
ஒரு வரி, இரு வரியானது
முடி(றி)ந்து போன காதலாக.....

அமரன்
14-09-2007, 07:13 PM
ஒருவரிக் கவிதை காதல்
இருவரிக் கவிதை இல்லறம்

ஓவியன்
14-09-2007, 07:21 PM
இரு வரிகள் ஒரு வரியாயின,
காதல் கல்யாணமாக கனிந்த போது....

ஓவியன்
15-09-2007, 06:08 AM
பசி தீர்க்க வேண்டி வீசிய வலை, அள்ளி வரும்
பசி தீரா மீன்களை.......!

பூமகள்
15-09-2007, 06:39 AM
எல்லோருக்குமாய் உணவு சமைக்கும்
கைகளுடைய வயிற்றிற்கு உணவில்லையே....

ஓவியன்
15-09-2007, 06:41 AM
ஆகா அழகான ஒரு முரண் கவிதை பூமகள் - பாராட்டுக்கள்!

பூமகள்
15-09-2007, 06:43 AM
நன்றிகள் அண்ணா
அடுத்து கொடுங்க... நீங்களும்...!!

ஓவியன்
15-09-2007, 06:51 AM
எல்லோருக்குமாய் உணவு சமைக்கும்
கைகளுடைய வயிற்றிற்கு உணவில்லையே....

உறங்கியிருப்போர் கைகள், உயிர்ப்புடனே எழுந்து விட்டால்,
உணவு கிடைக்கும் உலகத்திற்கே........!

சிவா.ஜி
15-09-2007, 06:59 AM
தனக்கென கசிந்தால் கண்ணீர்
பிறர்கென அழுதால் நன்னீர்!

அமரன்
15-09-2007, 08:02 AM
சிவா அருமை...
இருவரி தாண்டி மூவரியில் அதை உள்ளட்டகினார் எப்படி இருக்கும்..

கரிக்கும் கண்ணீரில்
இனிப்புக் கலந்ததுவோ
மனிதம் உயிர்க்கையில்...!

சிவா.ஜி
15-09-2007, 08:14 AM
சிவா அருமை...
இருவரி தாண்டி மூவரியில் அதை உள்ளட்டகினார் எப்படி இருக்கும்..

கரிக்கும் கண்ணீரில்
இனிப்புக் கலந்ததுவோ
மனிதம் உயிர்க்கையில்...!

மிக அருமை அமரன். மனிதம் உணர்த்தும் மூவரிகள்.

தளபதி
15-09-2007, 08:15 AM
காதல் என்பது எதுவுமில்லை
காதலிக்கும் வரை.

சிவா.ஜி
15-09-2007, 08:20 AM
இருந்து இறந்திருப்பதைவிட
இறந்தும் இருப்பது மேன்மை!

ஜெயாஸ்தா
15-09-2007, 08:35 AM
வெளியே மனதை புதைத்த மனிதர்கள்...!
பயதில் சுடுகாட்டு ஆவிகள் கூட...!

ஜெயாஸ்தா
15-09-2007, 08:38 AM
மனிதக் குழந்தை குப்பை தொட்டியில்...!
கங்காரு குட்டியோ பாதுகாப்பாய்...!

சிவா.ஜி
15-09-2007, 08:44 AM
பிறந்ததும் தாய்க்கு பாலூற்றுகிறது
பிரசவத்தில் இறந்த தாயின் தலைச்சன் குழந்தை!

பூமகள்
15-09-2007, 10:07 AM
மனிதக் குழந்தை குப்பை தொட்டியில்...!
கங்காரு குட்டியோ பாதுகாப்பாய்...!

அசத்தலான நிதர்சன கவி..! பாராட்டுக்கள் ஜே.எம் சகோதரரே..!!:icon_b:

பூமகள்
15-09-2007, 10:10 AM
இருந்து இறந்திருப்பதைவிட
இறந்தும் இருப்பது மேன்மை!

அற்புதம் சிவா அண்ணா. :aktion033:
இறந்தும் இறவாமல் இருப்பது அமரத்துவம் அல்லவா???!!:icon_clap:

க.கமலக்கண்ணன்
15-09-2007, 10:17 AM
இறந்த பின்னும் அவனுடைய கண்கள்

இன்றும் மற்றவர்களை பார்த்து கொண்டு இருக்கிறது. கண் தானம்...

ஓவியன்
15-09-2007, 11:31 AM
அதிரடி ஆட்டக் காரர் ஆட்டமிழந்தார்
கழுத்திலே கல்யாண மாலை.....!!! :D

kampan
15-09-2007, 11:43 AM
காதலிக்க தெரிந்தவன் கவிஞன்
கவிதையை காதலிக்க தெரிந்தவன் கலைஞன்.

ஜெயாஸ்தா
15-09-2007, 11:56 AM
அதிரடி ஆட்டக் காரர் ஆட்டமிழந்தார்
கழுத்திலே கல்யாண மாலை.....!!! :D

ரசிக்கத்தக்க நகைச்சுவை கவிதை....ஓவியன்!

அக்னி
15-09-2007, 12:18 PM
வாசனைப்பூ வாடியதும் நாறியது..,
வலிதரும் முள்ளோ கருகியும் வலித்தது...

தளபதி
15-09-2007, 01:41 PM
பட்டதும்தான் தெரிந்தது − படி
சற்று உயரம் என்று.

சிவா.ஜி
15-09-2007, 01:48 PM
அவசரத்தில் எடுத்துவைக்கும் அடியால் அடிதான்,
அளந்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிக்கொடிதான்!

தளபதி
15-09-2007, 01:54 PM
உந்தி நடக்க வைத்தது − உள்ளே
குந்தி இருந்த முள்.

ஓவியன்
15-09-2007, 02:30 PM
உந்தி நடக்க வைத்தது − உள்ளே
குந்தி இருந்த முள்.

அடடே அருமை தளபதி!

சும்மா அசத்துறீங்களே.........
வார்த்தைப் பொருத்தம் மிகப் பிரமாதம்.........

தொடர்ந்து கவிதையில் கலக்க எனது வாழ்த்துக்கள்.......!

ஓவியன்
15-09-2007, 02:33 PM
பிறந்ததும் தாய்க்கு பாலூற்றுகிறது
பிரசவத்தில் இறந்த தாயின் தலைச்சன் குழந்தை!

நெஞ்சை உருக்கும் ஒரு முரண்கவி.......

இறந்து பிறந்தது தலைச்சன் குழந்தை,
கொள்ளி வைக்க வேண்டி கண்ணீருடன் தகப்பன்.....

தளபதி
15-09-2007, 02:36 PM
அடடே அருமை தளபதி!

சும்மா அசத்துறீங்களே.........
வார்த்தைப் பொருத்தம் மிகப் பிரமாதம்.........

தொடர்ந்து கவிதையில் கலக்க எனது வாழ்த்துக்கள்.......!

நன்றி ஓவியரே!! ஹார்லிக்ஸ் குடித்தது போல் உள்ளது தங்கள் வார்த்தைகள்.

சிவா.ஜி
15-09-2007, 02:39 PM
நன்றி ஓவியரே!! ஹார்லிக்ஸ் குடித்தது போல் உள்ளது தங்கள் வார்த்தைகள்.

இதெல்லாம் குடிக்கக்கூடாது....அப்படியே சாப்பிடனும்...உடனே அடுத்த கலக்கல் கவிதையோட ஓடி வாங்க பாக்கலாம்.இன்னொரு ஹார்லிக்ஸ் பாட்டில் என்கிட்ட இருக்கு

தளபதி
15-09-2007, 02:46 PM
ஒருமுறை காதலால் கட்டி அணை!!
நதியிடம் சொன்னது கரை.

ஓவியன்
15-09-2007, 02:49 PM
ஒருமுறை காதலால் கட்டி அணை!!
நதியிடம் சொன்னது கரை.

ஒரு முறை கவிக்கோ ஒரு கவியரங்கிலே காதல் செய்ய எங்கே போவது எனக் கேட்டதற்கு..........

"வை கை,
அணை, கட்டு,
எனச் சொல்லும்
வைகை அணைக்கட்டுக்கு போகச் சொல்வேன்"

என்றார், அதனை மீண்டும் என மனதிலே நிழலாட வைத்த உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் தளபதி!.

தளபதி
16-09-2007, 10:12 AM
அழகு ஓவியரே!! எவ்வளவு அழகாக பிரித்து சேர்த்திருக்கிறார். நன்றிகள்.

தளபதி
16-09-2007, 10:12 AM
பார்த்ததும் கட்டி அணைத்தோம்
பழகிய பழைய நண்பன்.

சூரியன்
16-09-2007, 02:17 PM
தனக்கென கசிந்தால் கண்ணீர்
பிறர்கென அழுதால் நன்னீர்!

அழகான வரிகள் சிவா.

சிவா.ஜி
16-09-2007, 02:25 PM
அழகான வரிகள் சிவா.

நன்றி சூரியன்...உங்கள் வரிகளையும் பதிக்கலாமே..

சூரியன்
16-09-2007, 02:30 PM
கண்டதும் விரைந்த வண்டு
தொட்டதும் சுட்டது பூ.

சிவா.ஜி
16-09-2007, 02:37 PM
அசத்தல் சூரியன்..பிரமாதம்.

ஓவியன்
18-09-2007, 05:47 AM
சளைத்துப் போனவரை கை கழுவிப் போகும்
'காயலான்' கடையா முதியோர் இல்லங்கள்...?

kampan
18-09-2007, 06:07 AM
மனங்கள் கட்டப்பட்டவன் காதலன்
கைகள் கட்டப்பட்டவன் கணவன்

ஓவியன்
18-09-2007, 06:44 AM
தவறுதலாகத் தவறிப் பிழைத்த
ஒரு சரி - தொட்டில் குழந்தை..

சுகந்தப்ரீதன்
18-09-2007, 06:54 AM
ஒரு வரி, இரு வரியானது
முடி(றி)ந்து போன காதலாக.....

முடிந்துபோன காதலே..
முடியாத நினைவுகளாக!

ஆதவா
18-09-2007, 07:27 AM
கலியமூர்த்திக்கு பிறந்தது கேள்வி
வலியவிடை தந்தது வேள்வி (அக்னி)

இதுக்கு பேரு டைமிங்க கவிதையா?

அக்னி
18-09-2007, 05:19 PM
நீ என்னை மறந்த நிமிடங்களை..,
மறக்க முடியாமல் நான்...

பூமகள்
18-09-2007, 05:22 PM
தீரா உன் நினைவு
தீரும் நிமிடங்களில்..

ஓவியன்
18-09-2007, 07:20 PM
என் காதலியைத் தரிட்சிக்கப் போகிறேன்..
ஆமாம், தூங்கப் போகிறேன்..........:D

பூமகள்
22-09-2007, 07:59 AM
தூங்கினாலும் தூங்காமல் சிமிட்டும்
உன் கண்கள் என் இமையில்....!

அமரன்
22-09-2007, 08:06 AM
தூக்கத்திலும் விழித்திருக்கும் பெண்கள்
நத்தையின் மூதாதையரோ?

ஓவியன்
22-09-2007, 08:07 AM
சோதனைகளும் வேதனைகளும் ஓயாமல்
புணர்ந்தமையால் மலர்ந்ததா சாதனைகள்...?

பூமகள்
22-09-2007, 08:11 AM
ஆழவிழியால் சிமிட்டாமல் பார்க்கும் ஆண்கள்
ஆந்தையின் அண்ணன்மார்களோ???!!!

அமரன்
22-09-2007, 08:14 AM
அகம் காட்டா முகம்
கேடயமாக சில கணங்களில்...

அமரன்
22-09-2007, 08:17 AM
ஆழ்மனக் கிணறின் தூர்வாரலில்
பீறிடுகின்றன வீரிய கவிதைகள்..!

பூமகள்
22-09-2007, 08:19 AM
கவிதைகள் விதையாகி
தைக்கும் நெஞ்சங்களை..!!

இனியவள்
22-09-2007, 08:22 AM
காயத்தின் மருந்து -காலத்தின்
விருந்து கவிதை

தளபதி
22-09-2007, 08:24 AM
என்னுள் விழுந்துவிட்ட ஒரு விதை − அதை
உன்னுள் எவ்வாறு உதிக்கச் செய்வேன்!!

அமரன்
22-09-2007, 08:24 AM
மங்கையின் விழியோரத்தில் கண்ணீர்
சிரிப்பு தரும் சிக்கலின் அச்சம்.

பூமகள்
22-09-2007, 08:26 AM
என்னில் விதைத்த விதை
உன்னில் மரமானது எப்படி?

தளபதி
22-09-2007, 08:26 AM
கைகளை அகல விரித்தேன் − அட!!!
வானம் வசப்பட்டது!!

இனியவள்
22-09-2007, 08:27 AM
அச்சம் கொண்டு இருகரம் நீட்டாதே
அன்பு கொண்டு இரு கரம் நீட்டு

பூமகள்
22-09-2007, 08:28 AM
வசப்பட்டும் வானமே நீ
என் வசமாகும் போது..!!

இனியவள்
22-09-2007, 08:28 AM
என்னில் மரமான உன் விதை
வளர்ந்து நிழல் தரும் உன் வாழ்வில்

தளபதி
22-09-2007, 08:30 AM
சிறிதுநேரம் கண்மூடி இருக்க*
சிறிதாய் கண்ணீர்ரேகை − கண்ணோரத்தில்.

பூமகள்
22-09-2007, 08:34 AM
வண்ணவோவியம் காவியமாக
சின்னத்தூரிகை தேய்ந்ததுவே...!!

இனியவள்
22-09-2007, 08:36 AM
கண்மூடினேன் உலகம் இருண்டது
மூடிய கண்களுக்கும் ஓளியாய் நட்பின் கரம்

பூமகள்
22-09-2007, 08:44 AM
இருள் களைந்து விடியும் வானம்
துயர் துடைக்கும் அன்பின் பானம்..!!

பூமகள்
22-09-2007, 08:55 AM
தூரிகை துப்பட்டாவில்
தலைதுவட்டும் வண்ணங்கள்..!!

பூமகள்
22-09-2007, 08:57 AM
சன்னலோர சாரல் விடும் தூது
மழைத்துளி சிதறல்களாய் என்னுள்..!!

தளபதி
22-09-2007, 09:31 AM
என் காதல் கடிதத்தின் கடைசிவரி.
"என்பேனாவில் மை தீர்ந்துவிட்டது"!!

ஓவியன்
22-09-2007, 09:40 AM
என் காதல் கடிதம் என் காதலைப் போலவே
கரைந்து போனது நனைந்த மழையில்.....

தளபதி
22-09-2007, 10:09 AM
காலை கழுவும் அலை − அதன்
அடியில் நழுவும் மணல்.

பூமகள்
22-09-2007, 10:13 AM
மணலோடு முத்தமிடும்
புனலோடு வரும் மீன்கள்..!!

தளபதி
22-09-2007, 10:16 AM
என்காதலி என்னிடம் பேசிய*
முதல் வார்த்தை − "SORRY".

அமரன்
22-09-2007, 10:55 AM
களனிப் புதல்வனின் கரங்களில்
நாட்டு ஆயுள்ரேகை....

பூமகள்
22-09-2007, 11:12 AM
ஆயுள்ரேகையாய் மாறிப்போன
கையின் காப்புக்கள்..!!

தளபதி
22-09-2007, 11:26 AM
பூவிதழின் ஓரத்தில் பனித்துளி
என்காதலி முகத்தில் மூக்குத்தி.

ஓவியன்
22-09-2007, 11:37 AM
என்னவள் மூக்கில் கரும்புள்ளி
அது ஆண்டவன் தந்த மூக்குத்தி... :)

அக்னி
22-09-2007, 11:39 AM
விழிகளுக்கும் முகம் உண்டா..?
அடிக்கடி கழுவிக்கொள்கின்றனவே...

அமரன்
22-09-2007, 11:40 AM
காப்புக் கரங்களில்
எத்தனை கனவுகள்..!

தளபதி
22-09-2007, 11:56 AM
மூக்கிற்கு எதற்கடி முற்றுப்புள்ளி? − என்னவளின்
மூக்கின் முடிவில் மச்சம்.

ஓவியன்
01-10-2007, 04:14 AM
மூக்கிற்கு எதற்கடி முற்றுப்புள்ளி? − என்னவளின்
மூக்கின் முடிவில் மச்சம்.

என்னவள் அழகுக்கு திருஸ்டிப் பொட்டு
அவள் மூக்கின் நுனி இருக்கும் மச்ச புள்ளி....!

பூமகள்
01-10-2007, 07:54 AM
என்னவள் அழகுக்கு திருஸ்டிப் பொட்டு
அவள் மூக்கின் நுனி இருக்கும் மச்ச புள்ளி....!
அஹா...அருமை ஓவியரே...!!:icon_wink1:

ஓவியன்
01-10-2007, 08:04 AM
அஹா...அருமை ஓவியரே...!!:icon_wink1:

ஹீ,ஹீ!!!

ச்சும்மா, எழுதினேன்....!!! :D

பூமகள்
01-10-2007, 08:07 AM
ஹீ,ஹீ!!!

ச்சும்மா, எழுதினேன்....!!! :D

சும்மா:sport-smiley-019: தான் எழுதினீங்கன்னு எனக்குதான் தெரியுமே....!!:icon_dance::sport-smiley-018:

சிவா.ஜி
01-10-2007, 08:11 AM
சீரியலுக்குப் பிறகுதான் சாப்பாடு
பெண்ணுரிமை நிலைநாட்டல்....வீட்டில்..!

ஓவியன்
01-10-2007, 08:11 AM
சும்மா:sport-smiley-019: தான் எழுதினீங்கன்னு எனக்குதான் தெரியுமே....!!:icon_dance::sport-smiley-018:

சரி, சரி நான் இந்த விளையாட்டுக்கு வரலை... :D
யாராவது அடுத்த கவிதையை அவிழ்த்து விடுங்க..... :)

ஓவியன்
01-10-2007, 08:14 AM
சீரியலுக்குப் பிறகுதான் சாப்பாடு
பெண்ணுரிமை நிலைநாட்டல்....வீட்டில்..!

என் பசியை மறந்து தொலைத்தாள் என் மனைவி,
சீரியல் குழந்தையின் பசிக்காக பரிதாபப்பட்ட போது....!

சிவா.ஜி
01-10-2007, 08:19 AM
சீரியல் மாமியார் இறப்புக்கு இனிப்பு சாப்பிடும் மருமகள்
சிம்பாலிக் எச்சரிக்கை இருக்கும் மாமியாருக்கு!

அமரன்
01-10-2007, 08:20 AM
தொடரில் தொடரும் இழுவை
தொடர்கிறது இல்லறத்தில்..

ஓவியன்
01-10-2007, 08:21 AM
சமயலறைக் கத்தியை எடுத்து ஒளித்து வைத்தேன்
சீரியல் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்ததால்.....!

சிவா.ஜி
01-10-2007, 08:21 AM
இல்லற இழுவை இன்பம்
தொடரில் இழுவை இம்சை

ஓவியன்
01-10-2007, 08:24 AM
பழக்கமானது சீரியல் இடைவேளைகளில்
மட்டும் சாப்பாட்டைச் சாப்பிட்டு.......!

இனியவள்
01-10-2007, 08:27 AM
இல்லறத்தில் அல்லல் படுகின்றனர்
இல்லத்தலைவர்கள் தமது உரிமையை
தொலைக் காட்சியிடம் தொலைத்து விட்டு :D

ஓவியன்
01-10-2007, 08:30 AM
இல்லறத்தில் அல்லல் படுகின்றனர்
இல்லத்தலைவர்கள் தமது உரிமையை
தொலைக் காட்சியிடம் தொலைத்து விட்டு :D

இனி இங்கே கவிதை வரிகள் இரு வரிகளுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும், இருந்தாலும் உங்கள் கவிதை அழகு!.

இனியவள்
01-10-2007, 08:33 AM
இனி இங்கே கவிதை வரிகள் இரு வரிகளுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும், இருந்தாலும் உங்கள் கவிதை அழகு!.

அங் மறந்திட்டன் ஓவியரே
இரு வரிக் கவிதை
மூன்று வரிக் கவிதையாய் மாறிட்டு :icon_rollout:

யாழ்_அகத்தியன்
04-10-2007, 05:06 PM
என் கனவுகள் நிறைவேறியது
உன் மடியில் இமைமூடிய போது

பூமகள்
04-10-2007, 05:31 PM
"உன் புன்னகையின் நிழலில் நான்
என் இமைகளின் நிழலில் நீ"

பூமகள்
03-11-2007, 07:24 AM
திரையில் நிழலசைவு நின்றதும்
நிஜ அசைவு தொடங்கியது வீட்டில்..!

அமரன்
03-11-2007, 09:51 AM
நிழலாக அவள் வெள்ளோட்டம்
நிஜத்தில் கண்களின் வெள்ளவோட்டம்...!

கஜினி
03-11-2007, 11:00 AM
நனைவதற்கு மழை வருவதில்லை
வரும்போது நனைந்தால் தவறில்லை.

ஓவியன்
03-11-2007, 01:58 PM
மையில்லா பேனையும் எழுதுகிறதே
எழுதுவது காதல் கடிதமென்றால்.....!!

அமரன்
03-11-2007, 04:07 PM
உன்னுதட்டோரப் புன்னைகையில் என்னுயிர்
உழலும் என் இதயத்தில் உன்னுயிர்..!

ஓவியன்
03-11-2007, 06:23 PM
நம்மை சேர்த்து வைத்த காதல்
பிரித்து வைத்தது நம் குடும்பங்களை..!!

james
19-12-2007, 03:02 PM
இது நல்லாயிருக்கே. இப்படியே கவிதையை தொடர்ந்து கொண்டு செல்வோம்.

பூமகள்
19-12-2007, 05:42 PM
நம்மை சேர்த்து வைத்த காதல்
பிரித்து வைத்தது நம் குடும்பங்களை..!!
சேராத காதல்
சேர்த்தது வலிகளை..!!

ஆதி
19-12-2007, 06:04 PM
நீ உதட்டைப் பிதுக்கையில்
உடைந்தன வார்த்தைகளும் காதலும்..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:03 AM
எத்தனை ஆண்களை எடை போட்டு இதை எழுதினீர்கள்?

ஆதி
20-12-2007, 09:08 AM
எத்தனை ஆண்களை எடை போட்டு இதை எழுதினீர்கள்?

யாருக்கான கேள்வி இது ஈஸ்வரன் ?

-ஆதி

பூமகள்
20-12-2007, 10:27 AM
வேலையில்லாப் பட்டதாரி புன்னகை
புகைப்படத்தில் மட்டும் மிச்சமாய்..!!

ஆர்.ஈஸ்வரன்
06-01-2008, 09:23 AM
ஒருவனின் கண்கள்
இரண்டு பார்வைகளானது

பூமகள்
29-01-2008, 10:51 AM
சாம்பலின் விளிம்பில்
உலகம் புரிந்தது..!

வாசகி
29-01-2008, 11:06 AM
உன்னுதடு பிளக்கையில்
வேரோடுகிறது எனது வாழ்வு.

sarcharan
29-01-2008, 11:28 AM
திரிசா சாமியாடினால் பார்க்கிறான்
மனைவி சாமியாடினால் முறைக்கிறான்.

அனுராகவன்
22-05-2008, 12:53 AM
என் கைகள் வலியால் துடிக்குது...
கணவனின் அடியால்..

meera
22-05-2008, 08:07 AM
கடவுள் வலம் வருகிறார்
காவலர் துணையுடன்.............

umesh
22-05-2008, 09:49 AM
தரையைத் தொடும் அலைகளை போல
கலந்த்துவிட்டேன் உன்னுடன் நானே

அக்னி
22-05-2008, 12:47 PM
கடவுள் வலம் வருகிறார்
காவலர் துணையுடன்.............
காவலர் வலம் வருகின்றனர்,
கடவுளே துணை என்று வேண்டியபடி...

aren
22-05-2008, 12:53 PM
காவலர் வலம் வருகிறார்
பக்கிரியே துணை என்று வேண்டியபடி (கைமாத்து வாங்க!!!)

aren
22-05-2008, 12:54 PM
பக்கிரி வலம் வருகிறார்
யார் பையை அடிக்கலாம் என்ற நினைத்தபடி!!!

aren
22-05-2008, 12:55 PM
மக்கள் பதுங்கி வருகிறார்கள் (பையை பிடித்தபடி)
பக்கிரி கண்னிலிருந்து தப்பிக்க!!!

aren
22-05-2008, 12:57 PM
அலுவலகத்தின் வாசலில் பத்தான்
வட்டியை வசூல் செய்ய!!!

(பத்தான் - வட்டிக்கு பணம் கொடுப்பவன்)

aren
22-05-2008, 12:58 PM
கடன் வாங்கியவர்கள் பின்வழியாக ஓட்டம்
பத்தானிடமிருந்து தப்பிக்க!!!

aren
22-05-2008, 12:58 PM
மனைவி வீட்டின் வாசலில் காத்திருக்கிறாள்
கணவரின் சம்பளப் பையை வாங்க!!!

அறிஞர்
22-05-2008, 12:59 PM
வாவ் தொடர் இருவரிகள் கலக்கலாக இருக்கிறது...

meera
22-05-2008, 01:56 PM
காவலர் வலம் வருகின்றனர்,
கடவுளே துணை என்று வேண்டியபடி...

அட இப்போ எல்லாம் கடவுள் தாங்க காவலரை நம்பி இருக்கார்.:mini023:

meera
22-05-2008, 02:07 PM
மனைவி வீட்டின் வாசலில் காத்திருக்கிறாள்
கணவரின் சம்பளப் பையை வாங்க!!!


அண்ணா, கொஞம் மூச்சு வாங்கீட்டு கவிதை சொல்லுங்க அண்ணா.

அழகான தொடர் கவிகள்.

ஆமா இந்த கடைசி கவிதை யாருக்காக அண்ணா????????? :sprachlos020::sprachlos020:

aren
23-05-2008, 03:35 AM
அண்ணா, கொஞம் மூச்சு வாங்கீட்டு கவிதை சொல்லுங்க அண்ணா.

அழகான தொடர் கவிகள்.

ஆமா இந்த கடைசி கவிதை யாருக்காக அண்ணா????????? :sprachlos020::sprachlos020:

எழுத்தை எழுத்தாக மட்டுமே படிக்கவும். வேறு விதமாக எண்ண வேண்டாம் (உங்ககிட்டே கொஞ்சம் பயம் எனக்கு)

meera
23-05-2008, 04:33 AM
ஐய்யோ அண்ணா, நான் கிண்டலாய் கேட்டேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.தவறெனில் மன்னிக்கவும்.

இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரூ அண்ணா. உங்களை பார்த்து நாங்கள்ள மிரண்டு போய் இருக்கோம் :traurig001::traurig001:

நம்பிகோபாலன்
28-05-2008, 11:44 AM
புகைத்தேன்
எரித்தார்கள்...

ஆதி
28-05-2008, 11:48 AM
புகைத்தேன்
எரித்தார்கள்...

நறுக்கு இருக்கு நம்பி கவிதை

பாராட்டுக்கள்..

மன்மதன்
28-05-2008, 12:23 PM
புகைத்தேன்
எரித்தார்கள்...

அசத்தல்...:icon_b:

நம்பிகோபாலன்
29-05-2008, 05:40 AM
ஆதி மற்றும் மன்மதன் அவர்களுக்கும் என் நன்றி...

நாகரா
18-07-2008, 03:01 AM
கவிந்த இருளில் உலகம்
கவிதை ஒளியில் மனம்

நாகரா
18-07-2008, 03:10 AM
இருதயக் காதலால் உயிர்கள் ஒன்றக்
அறவழிக் காமத்தால் மெய்கள் ஒன்றின

நாகரா
18-07-2008, 03:14 AM
புகைத்தேன்
எரித்தார்கள்...

உதடுகளுக்கிடையே பற்ற வைத்தது
மெய்யுடம்பையே பற்ற வைத்தது

நறுக்கென்ற இரு வரிக்கு நன்றி நம்பி

நாகரா
18-07-2008, 03:25 AM
சாம்பலின் விளிம்பில்
உலகம் புரிந்தது..!

சாம்பலாக்கும் நெருப்பில்
சாம்பலாகாப் பெருவெளி

இரு வரியில் உலகைப் புரிந்த உன் ஞானம் அருமை, பூ மகளே!

நாகரா
18-07-2008, 03:36 AM
காகிதப் பேனாக் காமப் புணர்ச்சி
வாழ்விக் குதேநற் காதல் உணர்ச்சி

நாகரா
18-07-2008, 03:42 AM
கவிதைகள் விதையாகி
தைக்கும் நெஞ்சங்களை..!!

விதைக்கக் கவிதைகள்
அறுவடைக்கு நெஞ்சங்கள்

இரு வரியில் நெஞ்சைத் தைத்தாய் நீ, என் தங்காய்

நாகரா
18-07-2008, 03:48 AM
உயிர்மெய் ஒருமை
பிடிபடா வெறுமை

ஓவியா
18-07-2008, 10:06 AM
வந்தாய் இருள் இறந்தது
சென்றாய் ஒளி மடிந்தது

- பௌர்ணமி

நாகரா
18-07-2008, 10:31 AM
வந்தாய் இருள் இறந்தது
சென்றாய் ஒளி மடிந்தது

- பௌர்ணமி

வந்தாய் ஒளி இறந்தது
சென்றாய் இருள் மடிந்தது

- அமாவாசை

(இது எப்படி இருக்கு, ஓவியா)

ஓவியா
18-07-2008, 10:38 AM
வந்தாய் ஒளி இறந்தது
சென்றாய் இருள் மடிந்தது

- அமாவாசை

(இது எப்படி இருக்கு, ஓவியா)

சூப்பர் அண்ணா சூப்பர். :D:D:D

ஆதி
18-07-2008, 10:39 AM
மழைக்கு வானம்
போட்ட தொப்பி (பிடிக்கும் கொடை) - வானவில்

arsvasan16
18-07-2008, 12:45 PM
ஒன்றன் பின் ஒன்றாய்..
வழக்குகள் (அரசியல்வாதி)

....புகைத்தேன்..
....எரித்தார்கள்...
வரிகளின் ஆழம் இறுதி வரை அழுத்தியது மனதை ..
நானும் முயல்கிறேன் உங்கள் அளவுக்கு இல்லாவிடிலும் என் அளவுக்கு...

என்றும் அன்புடன்.....
உங்கள் நண்பன்.

arsvasan16
18-07-2008, 12:53 PM
நான் சாய்ந்த தோள்களில்
எனது உயிரும்

நாகரா
18-07-2008, 05:03 PM
புறப்பட்டாயிற்று...வாழ
அவகாசமில்லை...சாக

mgandhi
18-07-2008, 05:32 PM
கடந்த பாதையை நோக்கினால்-இனி
கடக்கும் பாதை இணித்திடும்

நாகரா
19-07-2008, 03:12 AM
கடந்த பாதையை நோக்கினால்-இனி
கடக்கும் பாதை இணித்திடும்

கடக்கும் பாதை வாழ்விலே நாட்டமாய்க்
கடத்துள் ஓடும் வாசியை வாசிநீ

சிவா.ஜி
19-07-2008, 04:23 AM
இரவலில் ஒளிப்பான், இரவினில் ஒளிர்வான்
பகலினில் இறப்பான், பகலவன் பிறப்பால்-நிலா

பூமகள்
19-07-2008, 05:34 AM
வாவ் சூப்பர் சிவா அண்ணா...!!

கலக்கல் இருவரிக் கவிதை..!! :)

சிவா.ஜி
19-07-2008, 05:37 AM
ரொம்ப நன்றிம்மா பூ.

நம்பிகோபாலன்
12-08-2008, 09:56 AM
ஒவ்வொரு விடியலிலும்
என் வாழ்வின் தேடல்.

poornima
12-08-2008, 09:59 AM
நீ மகிழ்கையில் நான் நீயானேன்,,
நீ பிறழ்கையில் நான் நாயானேன்..

சும்மா ஒரு எகனை மொகனைக்காக எழுதினேன்..கலாய்ச்சுறாதீங்க மக்கா..

poornima
12-08-2008, 10:03 AM
மேல் இதழ் நீ கீழ் இதழ் நான் இணைந்தால் ஒரு முத்தம்..
ஒருவரி நீ மறுவரி நான் திருக்குறளாய் நம் சொந்தம்.

ஆர்.ஈஸ்வரன்
24-08-2008, 12:25 PM
மகன் கொடுக்காததை
கொடுத்தது மரம்

குணமதி
29-12-2009, 04:18 PM
மேல் இதழ் நீ கீழ் இதழ் நான் இணைந்தால் ஒரு முத்தம்..
ஒருவரி நீ மறுவரி நான் திருக்குறளாய் நம் சொந்தம்.

மிக அருமை!

குணமதி
29-12-2009, 04:22 PM
தெளிவாகச் சொன்னான்; உளறலென்றார்கள்!

களிமயக்கில் உளறினான்; உண்மையென்றார்கள்!

சரண்யா
02-01-2010, 12:09 PM
நினைவுகள் தம் நிழல் போல
தொடரும் மனமதை....

வானதிதேவி
02-01-2010, 12:51 PM
மனமதை(மமதை) கட்டுக்குள்
வைத்தவன் வையகக் கூட்டுக்குள் வாழ்கிறான்

சரண்யா
04-01-2010, 10:24 AM
கூட்டிற்குள் வாழ்பவன் விட்டுக்கொடுத்தால்
மட்டுமே வாழ்வில் வசந்தம்.

சுகந்தப்ரீதன்
04-01-2010, 11:50 AM
வசந்தம் வந்தது வடக்கில்
நிசப்தம் போனது நினைவில்..!!

சரண்யா
04-01-2010, 11:55 AM
நினைவில் வந்து நிழலாடியது
பள்ளியில் செய்த குறும்புகள்

சுகந்தப்ரீதன்
04-01-2010, 12:38 PM
குரும்புகள் சில தழும்புகளாய் இப்போது
அறியாத அரும்பில் செய்தது அப்போது..!!

வானதிதேவி
04-01-2010, 04:38 PM
அப்போது சிரித்தாய் என் இதயத்தில்
இன்பவலி இப்போதும் சிரிக்கிறாய் என்னில் மரணவலி

ஜனகன்
04-01-2010, 10:48 PM
மரணவலி கரைகின்ற ஒவ்வொரு நிமிடமும்
தன் மகன் வீடு திரும்ப தாமதமெனில்

சுகந்தப்ரீதன்
05-01-2010, 04:40 AM
தாமதமெனில் தவிக்கவில்லை -
நிரந்தரமாய் என்னுடம் இருப்பாயென்று..!!

சரண்யா
05-01-2010, 08:52 AM
நிரந்தரம் என்று எதுவுமேமில்லை
நீலவானமதில் மேலே மேகம் மட்டுமில்லை.

ஆர்.ஈஸ்வரன்
29-01-2010, 09:16 AM
பூ பறிக்கலாம்
பூவே பறிக்கலாமா?

குணமதி
09-02-2010, 04:31 AM
அன்பு அளிக்க அளிக்க மகிழ்ச்சி பெருகுகிறது.

ஆசை சேரச் சேர சிறுமை பெருகுகிறது.

M.Jagadeesan
12-10-2010, 05:42 AM
கண்ணிரண்டும் கலந்தால் காதல்
கையிரண்டும் கலந்தால் மோதல்.

M.Jagadeesan
12-10-2010, 05:45 AM
ஊடலில் தோற்றவர் வென்றார்-சூது
ஆடலில் வென்றவர் தோற்றார்.

M.Jagadeesan
12-10-2010, 07:06 AM
திரைப்படம் வரும் பின்னே
திருட்டு VCD வரும் முன்னே.

யவனிகா
12-10-2010, 07:17 AM
திரைப்படம் வரும் பின்னே
திருட்டு VCD வரும் முன்னே.

எந்திரனுக்கு வருவது எப்போது
எங்க வீட்டு பசங்க கேக்குது இப்போது

M.Jagadeesan
12-10-2010, 08:19 AM
குறைவாகப் பேச வாய் ஒன்று தந்தான்
நிறைவாகக் கேட்க காது இரண்டு கொடுத்தான்.

யவனிகா
12-10-2010, 08:22 AM
யாருமே கேக்கலைன்னானும் யாருக்காக பேசுது வாய்?
இறைவன் கொடுத்த இரண்டு காதுக்கும் போரடிக்கக்கூடாதில்ல?

(ஜெகதீசன் கோச்சிக்க மாட்டீங்கல்ல)

சிவா.ஜி
12-10-2010, 10:09 AM
எதற்கு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம்
எதற்கு என யோசித்து....!!

M.Jagadeesan
12-10-2010, 04:55 PM
கெட்ட நண்பர்களை விலைகொடுத்தாவது விலக்கவேண்டும்
நல்ல நண்பர்களை தலைகொடுத்தாவது தாங்கவேண்டும்.

M.Jagadeesan
12-10-2010, 05:17 PM
ஏழையோ உணவைத் தேடுகிறான்
பணக்காரன் பசியைத் தேடுகிறான்.

muthuvel
27-11-2010, 01:29 PM
உன் பெண்பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொன்று விடு,
இல்லையேல் அவள் கற்பு பின்னாளில் சூறையாடப்படும் ,

நீ பெற்ற மகனின் மார்பை பிளந்துவிடு ,
இல்லையேல் பின்னாளில் அவன் ஆணுறுப்பு அறுபட்டுவிடும் ,

இலங்கை தமிழர்களுக்கு எதிர்கால சட்டம்

உன் பெற்றோரை பெட்ரோல் ஊற்றி பொசிக்கிவிடு ,
இல்லையேல் பின்னாளில் நீ இறந்தபின் அவர்கள் அனாதைகளாகபடுவார்கள்

இவை அனைத்தையும் செய்தபின் நீயும் தற்கொலை செய்துகொள் ,
இல்லையேல் முகாமில் மலங்கலோடும்,மனிதர்களோடும் அடைக்கபடுவாய்

ஆன்டனி ஜானி
06-12-2010, 05:18 PM
கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்

அன்புடன்
மீக்கி :icon_give_rose:

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்

இது எப்படி இருக்கு ? ஹா ஹா ஹா !!!!

பாலகன்
06-12-2010, 05:24 PM
ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்

இது எப்படி இருக்கு ? ஹா ஹா ஹா !!!!

விழுவதும் பெண்மேலே
பின்பு வெளிவருவதும் பெண்ணாலே

ஆன்டனி ஜானி
06-12-2010, 05:34 PM
உண்மைதான் நண்பா !

ஆசை பட்டு விழுகிறோம் பிறகு
அது நமக்கே கொல்லி வைக்கும் மோஹினியாக வருகிறார்கள்
இப்படியே போனால் நாம் தான் அவர்களுக்கு அடிமை

காலம் மாறி விட்டது
,பெண்கள் ஆச்சி தான் மலரப்போகுது ...

பாலகன்
06-12-2010, 05:36 PM
பெண்கள் ஆச்சியானால் முதிர்வு
பெண்கள் ஆட்சியாண்டால் அறிவு