PDA

View Full Version : "பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்"



umakarthick
08-05-2007, 09:50 AM
"பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்"
தமிழ் மணம், தேன்கூடு மற்றும் நிறைய வலைபதிவர்கள் மூலமாக நான் இந்த 6 மாதங்களில் நிறைய புத்தங்கள் படித்தேன்.

சுஜாதாவின்
--------------

நகரம்-சிறுகதை தொகுப்பு

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-முதல் ,இரண்டாம் பாகம்

சிறுசிறு கதைகள்

நகரம்

இன்னும் சில



ஆதியில் சொற்கள் இருந்தன-ஆ.வெண்ணிலா

அகத்திணை-கனிமொழி

அ ன்னா ஆ வன்னா-நா.முத்துக் குமார்

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்-நா.முத்துக் குமார்

தீபாவளி விகடன் -2003,2004

ரஜினி சப்தமா ,சகாப்தமா

அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ-தபூ சங்கர்

கதாவிலாசம்-எஸ்.ராம கிருஷ்ணன்

இன்னும் நிறைய..

இவற்றுள் கவிதை புத்தக மதிப்புரைகளை மட்டும் இப்போதைக்கு எழுதப் போகிறேன்.

இந்த வாரம் நா.முத்து குமாரின் "பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்" புத்தகம் பற்றி எழுதியுள்ளேன் கவிதைகளை நீங்களும் ரசியுங்கள்.

1) மாபெரும் அறைக்கூவலுக்கு பின்
உலக தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்
லெனின் சொன்னான்
என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.


கம்யூனிசம் பற்றிய ஒரு அருமையான கவிதை இது.சமுதாயத்தின் மீது தமக்குள்ள் கோப தாபங்களை தம் கவிதைகளில் உலவ விட்டிருக்கிறார் கவிஞர்.

இது இவரின் ஐந்தாம் தொகுப்பு..பச்சையப்பன் கல்லூரியில் படித்த் போது தான் கலந்து கொண்ட பட்டி மன்றங்கள்,கவியஙரங்களில் பாடிய ,எழுதிய கவிதைகளை தான் இந்த தொகுப்பில் தொகுத்துள்ளார்.

வழக்கம் போல தன் சினிமா உலக குரு எழுத்தாளர் சுஜாதா முற்றும் கவிஞர் அறிவுமதிக்கு நன்றி கூற மறக்க வில்லை.

2)'சுமைதாங்கி' என்னும் கவிதை

வருத்தபட்டு
பாரஞ்சுமப்பவர்களே
என்னிடத்தில் வாருங்கள்
இளைப்பாருதல் தருவேன்
ஆண்டவர் அழைத்தார்
பள்ளிக் குழந்தைகள்
புத்தக மூட்டையுடன் சென்றன.


இந்த கவிதையில் பள்ளிக் குழந்தகளின் சுமை பற்றி அருமையாக எழுதியுள்ளார்.நன்றாக தெரிந்த நடைமுறைக்கு ஏற்ற வழக்கமான விஷயங்களோடு தன் கருத்தை ஏற்றி கவிதை வடித்திருப்பது நல்ல முயற்சி.


பெரும்பாலான கவிதைகள் சினிமா,டிவி நிகழ்ச்சிகள்,தினத்தந்தி பேப்பர் பற்றியே இருக்கிறது


சில சென்யுரிக்கள் மற்றும் ஹைகூக்களையும் இதில் எழுதியுள்ளார்.


3)கண்டுபிடித்ததில் இருந்தே
தப்பாட்டம் ஆடுகிறார்கள்
அணு ஆயுத பந்தில்


என்னும் ஹைக்கூ பணக்கார நாடுகளை பற்றி எழுத பட்டிருக்கிறது

4)இன்னொரு ஹைக்கூ

கட்டை வண்டிக்கு
ஆக்சிலேட்டர்
மாட்டின் வால்

இவ்வாரு ஆங்கில கலப்பு இருந்தாலும் அது திகட்டும் அளவுக்கு இல்லை என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.


படித்து சுவைக்க நல்லதொரு புத்தகம்.வாழுத்துக்கள் நா.முத்து குமார்.


அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்துடன்..கார்த்திக்

இராசகுமாரன்
08-05-2007, 10:30 AM
நண்பரே, இந்த பகுதியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

மற்ற கவிஞர்களின் படைப்புகளை அறிமுகப் படுத்தும் பகுதி அல்ல இது.

கவிஞாரான உங்களை, கவிதைகள் எழுதிய பின், அறிமுகப் படுத்திக் கொள்ளும் பகுதி இது.

இந்த திரி பிறகு தக்க பகுதிக்கு மாற்றப் படும்.