PDA

View Full Version : நான் கண்ட தமிழ் மன்றம்

ஓவியன்
08-05-2007, 04:39 AM
அன்பான மன்ற உறவுகளே!

இங்கே என் கவிப் பயணத்தைத் தொடங்க இருக்கின்றேன். இந்த சிறு கவிதை இந்த பகுதியில் என் முதல் குழந்தை. இந்த குழந்தை என்னையும் கவி எழுத தூண்டிய இளசு அண்ணா, சொல்லித்தந்த ஆதவன் மற்றும் ஷீக்கு சமர்ப்பணம். இன்றிலிருந்து நானும் இந்த பகுதியில் என் படைப்புக்களை பதிப்பேன்.

நான் கண்ட தமிழ் மன்றம்

பாலை வனத்தின்
பாறை இடுக்கில் முளைத்த
செடியாய் இருந்தேன்
வானமிறங்கி மழை பெய்தது போல்
தானுமிறங்கி எனை வளர்த்தது
தமிழ் மன்றம்.

ஷீ-நிசி
08-05-2007, 04:52 AM
வாழ்த்துக்கள்... ஓவியன்.. உம் முயற்சிகள் இனிதே வெற்றி பெறட்டும்...

உம் கவிதையில் அழகிய கற்பனை அடங்கியுள்ளது...

பாலைவனம் என்பது தண்ணீரற்ற ஓரிடம்.. அங்கே தண்ணீர் கிடைப்பதென்பது விலைமதிப்பற்றது.. அப்படியான இடத்தில் தமிழ்மன்றம் தண்ணீராய் ஊர்ந்து செடி என்னும் உம்மை வளர்க்கிறது.. அருமை.... வாழ்த்துக்கள்!

leomohan
08-05-2007, 04:52 AM
நன்றி ஓவியன். நல்ல துவக்கம். வாழ்த்துகள்.

ஓவியன்
08-05-2007, 04:56 AM
வாழ்த்துக்கள்... ஓவியன்.. உம் முயற்சிகள் இனிதே வெற்றி பெறட்டும்...

உம் கவிதையில் அழகிய கற்பனை அடங்கியுள்ளது...

பாலைவனம் என்பது தண்ணீரற்ற ஓரிடம்.. அங்கே தண்ணீர் கிடைப்பதென்பது விலைமதிப்பற்றது.. அப்படியான இடத்தில் தமிழ்மன்றம் தண்ணீராய் ஊர்ந்து செடி என்னும் உம்மை வளர்க்கிறது.. அருமை.... வாழ்த்துக்கள்!

ஆகா!
முதல் பின்னூட்டமே மோதிரக் கையாலா - நான் கொடுத்து வைத்தவன் தான்.

ஆமாம்!, நான் இருப்பது கூட பாலை வனம் தானே-இங்கே
தமிழ் மன்றமென்பது எனக்கு மழைதான்.

ஓவியன்
08-05-2007, 04:57 AM
நன்றி ஓவியன். நல்ல துவக்கம். வாழ்த்துகள்.

நன்றிகள் மோகன் அண்ணா!
தொடர்ந்து நிறைய எழுதணும் என்ற ஆவலைக் கூட்டுகிறது
உங்கள் பின்னூட்டங்கள்.

ஆதவா
08-05-2007, 05:21 AM
அழகிய உதாரணத்துடன் கூடிய பிரமாதமான கவிதை ஓவியன். தொடர்ந்து எழுதுங்கள்.
பாறை இடுக்கு செடிகள் என்ற அருமையான கற்பனை உதித்தபோதே நீங்கள் குழந்தை நிலையெல்லாம் தாண்டிவிட்டீர்கள் என்று தெரிகிறது.

தூணான பின் எடுக்கும் இந்த அவதாரத்திற்கு மீண்டும் வாழ்த்துக்களுடன் முதல் கவிதைக்கு பொற்காசுகள் பல....

மதி
08-05-2007, 05:29 AM
நல்லதொரு கவிதை ஓவியன்..
பாராட்டுக்கள்..!

crisho
08-05-2007, 05:44 AM
ஆஹா ஓவியரும் கவிஞ்ஞராகிட்டாரைஐயா கவிஞ்ஞராகிட்டார்!!

இன்னும் தாருங்கள் ஓவியரே... சூப்பர் கற்பனை.... :4_1_8:

ராஜா
08-05-2007, 06:03 AM
கவிஞர் ஓவியருக்கு வாழ்த்துகள்.

ஒவியக் கவிதை இன்னும் பல எழுதுங்கள்.. காவியக் கவிதையாக மிளிரட்டும்..!

ஓவியன்
08-05-2007, 06:25 AM
அழகிய உதாரணத்துடன் கூடிய பிரமாதமான கவிதை ஓவியன். தொடர்ந்து எழுதுங்கள்.
பாறை இடுக்கு செடிகள் என்ற அருமையான கற்பனை உதித்தபோதே நீங்கள் குழந்தை நிலையெல்லாம் தாண்டிவிட்டீர்கள் என்று தெரிகிறது.

தூணான பின் எடுக்கும் இந்த அவதாரத்திற்கு மீண்டும் வாழ்த்துக்களுடன் முதல் கவிதைக்கு பொற்காசுகள் பல....

நன்றிகள் ஆதவா!

உங்கள் அருமையான பின்னூட்டங்கள் என்னை மேன் மேலும் செம்மைப் படுத்தும்.

ஆகா!

எனக்கும்(ராகவன் அண்ணா போல) சுக்கிரதிசை போல...
பொற்காசுகள் வந்து கொட்டுகின்றன நன்றிகள் ஆதவா.:nature-smiley-007:

ஓவியன்
08-05-2007, 06:34 AM
நல்லதொரு கவிதை ஓவியன்..
பாராட்டுக்கள்..!

நன்றிங்க!

என்ன உங்கள் இ-ஐ காஷ் ரொம்ப குறைவாயிருக்கு, கொஞ்சம் கூட்டி விடுகிறேனே :grin:

poo
08-05-2007, 06:43 AM
இப்போதுதான் வாழ்த்தில் சொல்லிவிட்டு வந்தேன்..

ஆல்போல் தழைக்க வாழ்த்துகிறேன்...

உங்கள் கவிதை நிஜம் சொல்கிறது.. அகமும் புறமும் வறண்டு போனாலும் ஈரம் சொட்ட மன்றம் இருக்கிறது என்ற உண்மை சொல்கிறது...

இன்னும் நிறைய எழுதுங்கள் ஓவியன்..

ஓவியன்
08-05-2007, 06:57 AM
ஆஹா ஓவியரும் கவிஞ்ஞராகிட்டாரைஐயா கவிஞ்ஞராகிட்டார்!!

இன்னும் தாருங்கள் ஓவியரே... சூப்பர் கற்பனை.... :4_1_8:

ஆகா நன்றி கிஷோர்!:nature-smiley-008:

ஓவியன்
08-05-2007, 06:59 AM
கவிஞர் ஓவியருக்கு வாழ்த்துகள்.

ஒவியக் கவிதை இன்னும் பல எழுதுங்கள்.. காவியக் கவிதையாக மிளிரட்டும்..!

அண்ணா!

உங்கள் எல்லோருடைய அன்பிலே தான் இந்த ஓவியன் காவியனாகும் முயற்சியில் இறங்கியுள்ளான்.

அந்த அன்பிற்கு நன்றிகள் கோடி!.

ஓவியன்
08-05-2007, 07:01 AM
இப்போதுதான் வாழ்த்தில் சொல்லிவிட்டு வந்தேன்..

ஆல்போல் தழைக்க வாழ்த்துகிறேன்...
உங்கள் கவிதை நிஜம் சொல்கிறது.. அகமும் புறமும் வறண்டு போனாலும் ஈரம் சொட்ட மன்றம் இருக்கிறது என்ற உண்மை சொல்கிறது...
இன்னும் நிறைய எழுதுங்கள் ஓவியன்..

நன்றிங்க அண்ணா!

உங்களது வேண்டு கோளை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு - நிறையவே.

franklinraja
08-05-2007, 07:13 AM
அருமையான துவக்கம்...
பெருமையாய் இருக்கிறது எனக்கும் ! :D

ஓவியன்
08-05-2007, 07:15 AM
அருமையான துவக்கம்...
பெருமையாய் இருக்கிறது எனக்கும் ! :D

நன்றிங்க!:nature-smiley-008:

அன்புரசிகன்
08-05-2007, 08:52 AM
உங்கள் பயணம் வெற்றிபெற எனதிறைவனை இறைஞ்சுகிறேன்.

நித்திரையில் தோன்றுவதை (கவிகளை மட்டும்) தவறவிடாமல் பதிக்கவும்.

குறிப்பு: எனக்கும் உம்மை குட்டவேணும் போல் உள்ளது. நானும் தங்க மோதிரம் போட்டிருக்கிறேன். மாட்டினீர்.... திமிரு படத்தில் வடிவேலின் கதிதான்.

ஓவியன்
08-05-2007, 12:55 PM
உங்கள் பயணம் வெற்றிபெற எனதிறைவனை இறைஞ்சுகிறேன்.

நித்திரையில் தோன்றுவதை (கவிகளை மட்டும்) தவறவிடாமல் பதிக்கவும்.

நன்றி அன்பு!

மனோஜ்
08-05-2007, 02:47 PM
வாழ்த்துக்கள் செடியாய் இருக்கும் நீங்கள் மரமாய் மாறுவதற்கு

அறிஞர்
08-05-2007, 02:49 PM
நான் கண்ட தமிழ் மன்றம்

பாலை வனத்தின்
பாறை இடுக்கில் முளைத்த
செடியாய் இருந்தேன்
வானமிறங்கி மழை பெய்தது போல்
தானுமிறங்கி எனை வளர்த்தது
தமிழ் மன்றம்.
அழகான வரிகள்...

வளர துடிக்கும் செடிகள் எங்கிருந்தாலும்
வளர உதவும்... மன்றம்.....

செடிகள் பல உருவாகி... மன்றம் இன்னும் அதிகமாக செழிக்கட்டும்.

ஓவியன்
09-05-2007, 04:07 AM
வாழ்த்துக்கள் செடியாய் இருக்கும் நீங்கள் மரமாய் மாறுவதற்கு

நன்றிகள் மனோஜ்!

ஓவியன்
09-05-2007, 04:09 AM
அழகான வரிகள்...
வளர துடிக்கும் செடிகள் எங்கிருந்தாலும்
வளர உதவும்... மன்றம்.....
செடிகள் பல உருவாகி... மன்றம் இன்னும் அதிகமாக செழிக்கட்டும்.

உண்மை தான் அண்ணா.

உங்கள் அன்புக்கு ந்ன்றிகள்.

அமரன்
28-07-2007, 07:59 PM
போர்களத்தில் முதலடி மரணஅடியாக இருக்கவேண்டும்..
கவிக்களத்தில் முதல் கவியும் அப்படியே...
படிப்பவர்களுக்கு சுகமாக வலிக்கவேண்டும்..
ஓவியன் முத்திரை பதிப்பதற்கு அசத்தல் ஆரம்பம் இது...
பலகாலத்தின்பின்னர் படித்த கவிதை..
பழையகள்ளின் போதை என்னுள்.

அக்னி
31-07-2007, 11:31 AM
அடடே இதுதான் ஓவியரே, உங்கள் முதற்கவியா...
அசத்தல்...
நகலெடுத்து வையுங்கள்... காலப்பதிவாக...
முதல்கவிக்கு வாழ்த்த காலம் கடந்துவிட்டது... அதான் இப்போ கவிஓவியராக கலக்குகின்றீர்களே...
மேலும் சிறப்புப் பெற வாழ்த்துகின்றேன்...

ஓவியன்
02-08-2007, 09:25 AM
ஓவியன் முத்திரை பதிப்பதற்கு அசத்தல் ஆரம்பம் இது...
பலகாலத்தின்பின்னர் படித்த கவிதை..
பழையகள்ளின் போதை என்னுள்.மிக்க நன்றி அமரா!

இந்த மன்றத்திலே என்னால் மறக்கப் பட முடியாத கவிதை இது.....!

ஓவியன்
02-08-2007, 09:27 AM
அடடே இதுதான் ஓவியரே, உங்கள் முதற்கவியா...
அசத்தல்...
நகலெடுத்து வையுங்கள்... காலப்பதிவாக...
முதல்கவிக்கு வாழ்த்த காலம் கடந்துவிட்டது... அதான் இப்போ கவிஓவியராக கலக்குகின்றீர்களே...
மேலும் சிறப்புப் பெற வாழ்த்துகின்றேன்...
கவிதைக்கு உடனே வாழ்த்துக் கிடைப்பதிலும் பல காலங்களின் பின் கிடைப்பதில் இன்னமும் சுகமுள்ளது அக்னி!.
நீங்கள் கூறியது போன்றே நகலெடுத்து வைத்துள்ளேன் - மன்றத்தில் இது என் முதல் கவி அடியல்லவா......!

விகடன்
02-08-2007, 09:38 AM
மழுங்கிக்கொண்டு சென்ற தமிழ் அறிவையும் புலமையையும் தட்டி நிமிர்த்தி ஊட்டமும் ஊக்கமும் அளித்து வளர்த்த தமிழ் மன்றத்திற்கு பாமாலையால் அலங்கரிப்பு.
அற்புதம் ஓவியன்.
பாராட்டுக்களுடன் வளர வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்
நான்

aren
02-08-2007, 09:42 AM
ஓவியன் − டாப் கிளாஸ்ப்பா. முதல் கவிதை என்று நன்றாகவே புருடா விட்டிருக்கிறீர்கள்.

என்னுடைய பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
02-08-2007, 09:43 AM
ஓவியன் உங்களின் முதல் கவிதையை படித்து சுவைக்க சந்தர்ப்பமளித்த அமரனுக்கு நன்றி. கவிதையை படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஓவியன்
02-08-2007, 10:57 PM
தமிழ் மன்றத்திற்கு பாமாலையால் அலங்கரிப்பு.
அற்புதம் ஓவியன்.
பாராட்டுக்களுடன் வளர வாழ்த்துக்களும்

மிக்க நன்றிகள் விராடன்!
உங்கள் உற்சாகப் பாராட்டு என்னை இன்னும் இன்னும் எழுத வைக்கும்......!.

ஓவியன்
02-08-2007, 10:59 PM
ஓவியன் − டாப் கிளாஸ்ப்பா. முதல் கவிதை என்று நன்றாகவே புருடா விட்டிருக்கிறீர்கள்.
என்னுடைய பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
மிக்க நன்றிகள் அண்ணா!

உண்மையாகவே இது முதல் கவிதை தான் அண்ணா!
திரையுலக இயக்குனர்களின் முதல் படம் பெரும்பாலும் நன்றாகவே அமைவதைப் போல இதுவும் அமைந்துவிட்டது போல....!. :sport-smiley-018:

ஓவியன்
02-08-2007, 11:00 PM
ஓவியன் உங்களின் முதல் கவிதையை படித்து சுவைக்க சந்தர்ப்பமளித்த அமரனுக்கு நன்றி. கவிதையை படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சிவா!
எல்லோரையும் போலவே எனக்கும் இந்த முதல் கவிப் படைப்பின் மேல் அளவற்ற காதல்......!

paarthiban
03-08-2007, 12:10 PM
மிக அருமை ஓவியன் அவர்களே. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஓவியன்
03-08-2007, 01:36 PM
மிக அருமை ஓவியன் அவர்களே. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி பார்த்தீபன்!.

kalaianpan
09-08-2007, 06:44 PM
என்ன நன்பரே நீரும் மத்திய கிழக்கா....
பாலலைவனத்தில் ஆரம்பம்
whistling: :whistling: :whistling:

ஓவியன்
09-08-2007, 09:26 PM
மிக்க நன்றி கலை...........

பாலையில் இருந்து இந்த சாலை தேடி வந்துள்ளேன், என் கலைப் பயணத்திற்காக..............

ஓவியா
01-09-2007, 12:51 AM
அன்பான மன்ற உறவுகளே!

இங்கே என் கவிப் பயணத்தைத் தொடங்க இருக்கின்றேன். இந்த சிறு கவிதை இந்த பகுதியில் என் முதல் குழந்தை. இந்த குழந்தை என்னையும் கவி எழுத தூண்டிய இளசு அண்ணா, சொல்லித்தந்த ஆதவன் மற்றும் ஷீக்கு சமர்ப்பணம். இன்றிலிருந்து நானும் இந்த பகுதியில் என் படைப்புக்களை பதிப்பேன்.

நான் கண்ட தமிழ் மன்றம்

பாலை வனத்தின்
பாறை இடுக்கில் முளைத்த
செடியாய் இருந்தேன்
வானமிறங்கி மழை பெய்தது போல்
தானுமிறங்கி எனை வளர்த்தது
தமிழ் மன்றம்.

முதல் கவிதயே முத்தாய் விழுந்துள்ளது. பாராட்டுக்கள்.

ஆட்டோ வருவதற்க்குள் அடுத்த முத்தை எடுத்து போடுங்கள் ஓவியன் சார்.

ஓவியன்
22-09-2007, 02:34 PM
முதல் கவிதயே முத்தாய் விழுந்துள்ளது. பாராட்டுக்கள்.
ஆட்டோ வருவதற்க்குள் அடுத்த முத்தை எடுத்து போடுங்கள் ஓவியன் சார்.

நான் எடுத்துப் போட்டுக் கொண்டு தானிருக்கின்றேன்...
அது முத்தா இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க நீங்க தான் வரமாட்டேன் எங்கிறீங்களே.....????

பூமகள்
29-09-2007, 10:29 AM
முதற்கவியே மன்றத்துக்கு அற்பணிப்பு.. அழகான சிந்தனை.. அப்படியே அமைந்த கவிதை...!
கலக்கிட்டீங்க ஓவியன் அண்ணா.
முதற்கவி என்று நம்பவே முடியலை. அற்புதமான கற்பனை...!
பாராட்டுகள் அண்ணா.

ஓவியன்
29-09-2007, 11:21 AM
மிக்க நன்றி தங்கையே....!!!

சிறு விதையில் இருந்து வளர்ந்து கொண்டிருக்கின்றேன், அந்த விதை விதைக்கப் பட்டது இந்த திரியிலேயே....