PDA

View Full Version : இரவல் நிலா!

ஷீ-நிசி
08-05-2007, 04:31 AM
நண்பர் murthykmd அவர்களின் ஹைக்கூவிலிருந்து பிறந்தது

இரவில் மட்டும் ஒளிர்கிறதே,
இதென்ன.......
இரவில் நிலாவா?!
இரவல் நிலாவா?!

ஆதவா
08-05-2007, 08:56 PM
அடடே!! ஷீ!! நான்கு வரிகளில் அருமையாக மின்னுகிறதே!! சூப்பர் போங்கள்....

மோனை அடுக்கள் வெகு பிரமாதம். எதுகைகள் அருமை...

ஷீ-நிசி
09-05-2007, 03:25 AM
நண்பர்கள் இதை பார்க்கவில்லையே என்றிருந்தேன்... நன்றி ஆதவா....

ஓவியன்
09-05-2007, 03:55 AM
அருமை ஷீ!

பகலில் சொந்தக் காரனோடு போய்விடுகிறது போல....

வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
09-05-2007, 03:58 AM
அருமை ஷீ!

பகலில் சொந்தக் காரனோடு போய்விடுகிறது போல....

வாழ்த்துக்கள்.

சொந்தக் காரனோடா, சொந்தக் காரங்களோடா, சொந்தக் காரணங்களோடா.....

ம்ம்ம்ம்... அது அந்த நிலாவுக்குதான் வெளிச்சம்....

நன்றி ஓவியன்

ஓவியன்
09-05-2007, 04:01 AM
சொந்தக் காரனோடா, சொந்தக் காரங்களோடா, சொந்தக் காரணங்களோடா.....

ம்ம்ம்ம்... அது அந்த நிலாவுக்குதான் வெளிச்சம்....

நன்றி ஓவியன்

சொந்தக் காரனோடா,
சொந்தக் காரங்களோடா,
சொந்தக் காரணங்களோடா.....

ஆட

இதுவும் நன்றாக்தானே இருக்கிறது.

ஷீ-நிசி
09-05-2007, 04:08 AM
அட! அதையே ஒரு குறுங்கவிதையா ஆக்கிட்டீரா நீர்... போதும்.. ஓவியரே! மக்கள் யார்னா நம்மை அடிக்க வரப்போறாங்க....

poo
09-05-2007, 05:34 AM
சூரியனின் ஒளியை வாங்கிக்கொண்டுதான் இரவில் நிலா வருகிறது என சிறிய வயதில் நினைப்பேன்...

கவிஞர் குழந்தையாக எழுதியிருக்கிறார்...குதூகலிக்க வைக்கிறது..

ஷீ-நிசி
09-05-2007, 05:42 AM
நன்றி பூ! ஆனால் வேதாகமத்தில் பார்த்தால், இறைவன் பகலை ஆள ஒரு சுடரையும், இரவை ஆள ஒரு சுடரையும் என இரு பெரிய சுடர்களைப் படைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.. இதில் எது உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...

பிச்சி
09-05-2007, 06:14 AM
கவிதை நல்லா இருக்க்குண்ணா.

ஷீ-நிசி
09-05-2007, 06:34 AM
நன்றி பிச்சி....

அக்னி
11-05-2007, 04:11 PM
இந்தச் சிறு கவியில் படைப்பின் ஒரு பெரும் அதிசயத்தை அடக்கிவிட்டீர்கள்...

ஷீ-நிசி
11-05-2007, 04:14 PM
இந்தச் சிறு கவியில் படைப்பின் ஒரு பெரும் அதிசயத்தை அடக்கிவிட்டீர்கள்...

ஒரு பெரும் அதிசயம்
இச்சிறு கவிக்குள்
அடங்குமானால்..

நிச்சயம் இது பெரும் அதிசயக் கவிதான்.... :icon_wink1:

நன்றி நண்பரே!

அரசன்
12-05-2007, 12:11 PM
நண்பர் murthykmd அவர்களின் ஹைக்கூவிலிருந்து பிறந்தது

இரவில் மட்டும் ஒளிர்கிறதே,
இதென்ன.......
இரவில் நிலாவா?!
இரவல் நிலாவா?!

அருமை நண்பரே அசத்திவிட்டீர்கள். சந்தேகங்கள் சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும். பாராட்டுகள்!

ஷீ-நிசி
12-05-2007, 12:14 PM
அருமை நண்பரே அசத்திவிட்டீர்கள். சந்தேகங்கள் சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும். பாராட்டுகள்!

உண்மைதான் நண்பரே! என்னை சிந்திக்க வைத்தது உங்கள் கவிதை... அந்த விதையிலிருந்து வளர்ந்ததே இந்தக் கவிதை.. நன்றி நண்பரே!