PDA

View Full Version : பொய்க்கா(ல்) குதிர பாகம் 2ஆதவா
07-05-2007, 06:12 PM
கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..

" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"

" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"

" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."

" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..

" சரிங்க சாமி"

கருங்குதிர ஆகாசத்துல பறந்தான்... பின்ன,, புதுக்குதிர வருதுல்ல... கெழவிகிட்ட சொன்னா அது சிரிக்கும்... நல்ல சோறு நாலு நாளைக்கு கெடைக்கும். மிச்ச காசு இருந்திச்சினா, மதுர போய்ட்டு வரணும். கெழவி ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்திச்சி.. அது மண்டையபோடரதுக்குள்ள மீனாச்சி அம்மனை கண்ணுல காமிச்சரனும்... பாவம்.. அப்பன் இருந்தப்பவும் அழுகுது. மகன் இருந்தப்பவும் அழுகுது. சந்தைல காயை வித்துட்டு வூட்ட நெருங்கினான்..

கெழவி கயித்துக்கட்டில்ல படுத்துகிட்டி இருந்துது. காதுல வெசயத்த போட்டுட்டம்னா கொஞ்சம் சந்தோசப்படும்னு கருங்குதிர வெசயத்தைச் சொன்னான்.. கெழவி அன்னிக்கித்தான் பொறந்துச்சு போல... மூஞ்சி இளசாயிருச்சு..

அன்னிலிருந்து கருங்குதிரைக்கு அயிரமீனுதான்,வெள்ள சோறுதான், ஒரே கூத்து தான் போங்க.. கவுண்டரு சொன்ன நாளு வந்திச்சி. நல்லா மாப்ள கணக்கா துணியைப் போட்டுட்டு கவுண்டரு ஊட்டுக்குப் போனான்.

" சாமி. குதிரைக்கு காசு கொடுக்கம்னு சொன்னிங்க.. "

" ம்ம்.... வட்டிப் பணம்டா... வெள்ளனே கொடுத்துடு. இல்லாட்டி ஊட்டை எழுதி வாங்கிப்புடுவேண்டா.... "

" இல்லசாமி. சரியா கொடுத்தறேன்."

" ஏ தேவி.. இந்த கருவாயன் வந்து நிக்கான். அந்த பணத்தைக் கொடுடி.."

தேவி கவுண்டரு சம்சாரம்.. நல்லா கொழுகொழுன்னு இருக்கும் கழுத... கவுண்டரு நல்லவரு. இந்தம்மா நேரெதுக்கே. காசை அவன் கையில லொட் டுனு திணிச்சுட்டு மொறைச்சுட்டு போயிருச்சு..

" தோ பார்றா... அடுத்தவன் காலை மிதிச்சேன், கைய மிதிச்சேனுட்டு குதிரய ஒடச்சுப் போடாதடா.. அம்புட்டுத்தான் சொல்லுவேன்."

" வரேங் சாமி"

கையில் காசு, கண்ணுல கனவு... கருங்குதிர இப்ப நெசமாவே குதிர ஆயிட்டான்.. ஒன்னும் புடிக்க முடியல. பயபுள்ள கெழவிகிட்ட போய் காசக் கொடுத்தான்.. கெழவி அம்புட்டு காசப் பாத்ததே இல்ல.. ரொம்ப இல்லசாமி, ரெண்டாயிரம் ரூவா. எங்கிட்டு போய் சம்பாரிக்க,? எப்படி அடைக்க?.. குதிரை ஆயிரம் ரூவாக்கு வாங்கிப்புடலாம். மீதி என்ன செய்யறது?.

" கெழவி. என்னை நம்பி கவுண்டரு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தாரு தெரியும்ல.. நம்ம பேரைக் கேட்டாலே கவுண்டரு நடுங்குறாரு தெரியுமா.. சரி சரி. சந்தையீல மாடன் இருப்பான். அவண்ட சொன்னா குதிர செஞ்சு கொடுப்பான்.. என்ன, கொஞ்சம் காசு செலவாகும். தண்ணி வாங்கி கொடுத்தா கொள்ள அழகா செஞ்சு கொடுப்பான்.. என்ன சொல்ற கெழவி?"

" தே, நேரா மதுரைக்கு போவோம்டா. அங்கிட்டுதான் நல்ல கட்டை விக்கிறானுங்க. மாடஞ் சொன்னான், மண்ணாங்கட்டி சொன்னான்னு காச கரியாக்காதே. "

" அதுவுஞ் சரிதான். "

(தொடரும்)

ஓவியா
09-05-2007, 09:36 PM
கதை சிறப்பாக செல்கின்றது. நன்றி ஆதவா.

ஏன் மிக குறைவான பத்திகளே இருகின்றன?

ஆதவா
10-05-2007, 12:50 AM
என்னவோ தெரியலீங்கக்கா, நன்றி.

பாரதி
10-05-2007, 12:55 PM
நல்ல முறையில் கதையை சொல்கிறீர்கள் ஆதவா. தொடருங்கள். அடுத்த பகுதியை படிக்க காத்திருக்கிறேன்.

ஆதவா
10-05-2007, 01:26 PM
நன்றி அண்ணா

ஓவியா
10-05-2007, 01:29 PM
என்னவோ தெரியலீங்கக்கா, நன்றி.

ரொம்ப சிரம்ப்பாட்டு தான் பதில் சொல்லறீங்க. மிக்க நன்றிங்க.

.இதன் அர்த்தம்


.இதெல்லாம் ஒரு பதிலா :violent-smiley-010: :violent-smiley-010: .

ஆதவா
10-05-2007, 01:33 PM
நன்றி அக்கா