PDA

View Full Version : தவறு செய்யும் கட்சியை தடை செய்ய அதிகாரம்



mgandhi
07-05-2007, 05:45 PM
தவறு செய்யும் கட்சியை தடை செய்ய அதிகாரம்


தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல்


தவறு செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறினார்.

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் தவறு செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை சஸ்பெண்ட் செய்வதற்கும் அல்லது சின்னத்தை முடக்கி வைப்பதற்கும் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு தற்போது அதிகாரம் உள்ளது. அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை இல்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால் தவறு செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் முன்வைத்து வருகிறது.
வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தருவது, தேர்தல் சமயத்தில் பிரச்னையை தூண்டும் விளம்பரங்களை செய்வது மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது போன்ற அவலங்களை எதிர்த்து போராட தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்.
வேட்பு மனுவில் தவறான தகவல் தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்கள் படி நீண்ட காலம் ஆகிறது. இதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான தகவல் தருவதை குற்றமாக அறிவிக்க வேண் டும். இதற்காக தேர்தல் ஆணைய சட்டங்களில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தவறு செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும்.
தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினருக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால் அவர்கள் விஷயத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இவ்வாறு கோபால் சாமி கூறினார்.

ஆதவா
07-05-2007, 05:47 PM
இச்செய்தியின் மூல இடம் எது நண்பரே!! உங்கள் திரி ஒன்று ஒட்டியாக்கப்பட்டதற்கு என் வாழ்த்துக்கள்.

leomohan
07-05-2007, 06:20 PM
இது செய்தால் நாடு சொர்க்கமாகும். செய்வார்களா.

அறிஞர்
07-05-2007, 08:58 PM
இது செய்தால் நாடு சொர்க்கமாகும். செய்வார்களா.
கட்சிகாரர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து விளையாடுவார்கள் நம் அரசியல்வாதிகள்...