PDA

View Full Version : லொள்ளுவாத்தியார் கவிஞரா?



lolluvathiyar
07-05-2007, 04:35 PM
லொள்ளுவாத்தியார் கவிஞரா?
இந்த கேள்விக்கு பதில் நானே கூறுகிறேன்
இதுவரை சத்தியமாக இல்லை

இதுவரை எனக்கு கவிதை என்பது ஏணி வைத்தாலும் எட்டாது

யாரோ எழுதிய கவிதையையே கூட ஒழுங்காக எனக்கு புரிந்து படிக்க தெரியாது
எழுத்து பிழை என் உடன் பிறவா சகோதரன்
இலக்கணப் பிழை எனக்குப் பிறந்த தலை மகன்

என்னைப் பத்தி ஒரு நகைச்சுவை உண்டு
நான் என் மனைவிக்கு காதல் கவிதை எழுதினா
அடுத்த நாள் அவ எழுதுவா டைவர்ஸ் கடிதம்


எதையோ கிறுக்கி அதை கவிதை
பகுதியில் பதித்து நானும் கவிஞன்
என்று என்னை அறிமுக படுத்தினால்
அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல

இந்த உலகில், உண்மையில் பல கவிகள்
இருக்க, இவர்கள் மத்தியில் நானும் அறிமுகத்திலாவது
வர ஒரு ஆசையினால் என்னை அறிமுகப்படுத்தி விட்டேன்.
மன்னிக்க முடியாத ஒரு குற்றம்தான்


இங்கு உள்ள கவிகள் அவர்கள் படைத்த கவிதைகளின்
சுட்டியை தந்திருகிறார்கள்

ஐயா நான் அப்படி சுட்டிகள் தர முடியுமா என்று எனக்கே தெரியவில்லை
ஒரு முறை ஆதவா தன்னம்பிக்கையோடு கவிதை எழுது என்று சொன்னார்

எதுக்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று
வந்து விட்டேன் முந்திரி கொட்டை போல.

ஒரு நாள் பாரதி கண்ட அக்னி குஞ்சாய் வருவேன் என்று
பகல் கணவு கானும் ஒரு மானிட குஞ்சு நான்

நல்ல படமாக இருந்தாலும் இடைவேளை வேண்டுமல்லவா டீ சாப்பிட?

தித்திக்கும் கவிதைகள் பல இருக்கும் இந்த பகுதியில்
இடைவேளையில் நான் ஏதாவது கவிதை படைந்திருந்தால்
படித்து என்னை தூக்கி விடவும்.

கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்களாம்.
நானும் ஒரு கவிஞன் என்று பொய் சொல்லி இருகிறேன்.
கவிதை இந்த ஒரு தகுதி போதாதா?

நன்றி


ஏதோ என்னால் முடிந்த சில கவிதை பயிற்ச்சிகள்
காதலித்தால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8985)
லொள்ளு வாத்தியார் அவசர அட்வைஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9289)
காலை எழுந்தவுடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9439)
ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10157)
லொள்ளுவாத்தியார் சிலையாய் நின்றார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10258)
டன்டனக்கா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10967)
என் மனைவி காதலிகிறாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9692)
சுத்தி சித்தி அடிவாங்க (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11010)
வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9733)
அழுதாய் வாழி காவேரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11081)

praveen
08-05-2007, 04:01 AM
தருமியே சற்று பொறுங்கள், நக்கீரர் யாராவது வந்து பதில் தருவர்.

பார்க்க கவிதை மாதிரி இருக்கு, படித்துப்பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது.

விமர்சனத்தில் பொய் இருக்கலாமா கவியே?

சுட்டிபையன்
08-05-2007, 04:19 AM
ஆஹா கவியே அழகான திரியை ஆரம்பித்துள்ளீர்கள்

வாழ்த்துக்கள்:062802photo_prv:

leomohan
08-05-2007, 04:50 AM
வாழ்த்துகள் வாத்தியாரே. தொடர்ந்து எழுதுங்கள்.

ஷீ-நிசி
08-05-2007, 05:33 AM
வாத்தியாரே! அறிமுகம் ரசிக்கும்படியாய் இருந்தது....

மறுபடியும் சொல்கிறேன்...

கவிதை ஒன்று எழுதிடும்வரை, யாருக்குமே தான் கவிஞன் என்று தெரிந்திடாது...

உங்களிடம் கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருக்கிறது... கொஞ்சம் தனிமை, நிறைய கற்பனை.. கிடைக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்.. கவிதை பிறப்பு தள்ளிப்போகாது....

வாழ்த்துக்கள்!

poo
08-05-2007, 06:17 AM
விரைவில் கவிதைக்கும் வாத்தியாராக வாழ்த்துக்கள் நண்பரே..

மனோஜ்
08-05-2007, 01:22 PM
நானும் நீங்களும் ஒன்றுதான் நாம் இந்த குறைகுடத்துடன் இருக்க
மன்றத்தில் நிரைகுடமாக மாருவோம்

மதுரகன்
08-05-2007, 05:59 PM
வாழ்த்துக்கள் வாத்தியார்...
ஒன்று கூறுகிறேன்...
கிறுக்கல்கள்தான் அழகான கவிதைகளுக்கு அத்திவாரமிடும்..
ஏனெனில் கிறுக்கல்கள் ஆம் மனதின் பாஷைகள்...
முதலில் தாழ்வு எண்ணங்களை தூர எறிந்து உங்களை முதன்மையாக எண்ணிக்கொண்டு காரியத்தில் இறங்குங்கள்...

ஆதவா
11-05-2007, 01:53 AM
எழுதிய இரு கவிதைகளும் யதார்த்தம் மிக்கதாய்... அழகான படைப்புகள்.. ஆழ்மனதில் உறங்கும் கவிஞனை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்... வாத்தியாரய்யா.... இன்னும் நிறைய எழுதவேண்டும்.. கவிதைகள் என்பது ஒரு பூ பூப்பது போல.... உடனே நிகழாது... மெதுவாகத்தான் விரியும்... பின் அது கொண்டையில் ஏறுவதும் வீணே போவதும் வேறு.... உம் கவிதைகள் கருகிவிடா பூக்கள்... எழுதுங்கள் நிறைய

தாமரை
11-05-2007, 02:01 AM
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
என்றார் கவிஞர்

ஆண் பெண்ணிலே பிறக்கிறான்
பெண்மடியில் வளர்கிறான்
அப்படியானால்
பெண் என்றால் பொய்யா??

அதனால் தான்
பெண்களை
அழகான கவிதை என்கிறார்களோ???

அக்னி
11-05-2007, 04:20 PM
லொள்ளுவாத்தியாரின் கவிதைகள்...
நகைச்சுவையில் மனதை மகிழ்வூட்டி, அதனுள் ஒரு அழகிய செய்தியை எமக்குத் தருகிறது. வாத்தியார் கவிஞரா? கேள்வியே வேண்டாம். கவிஞர்தான். மனதை திறந்து இன்னும் பல படைப்புக்களைத் தந்தால், சிரித்துக்கொண்டே சிந்திப்போம். மேலும் வளர வாழ்த்துக்கள்....

lolluvathiyar
21-07-2007, 02:14 PM
தருமியே சற்று பொறுங்கள்

எப்படிங்க அந்த உன்மைய கண்டு பிடிச்சீங்க, (சத்தமா சொல்லாதீங்க)

தங்கவேல்
24-07-2007, 10:42 AM
வாக்கியத்தை மடிச்சு மடிச்சு எழுதுவாங்களே அதுதான் கவிதையா வாத்தியார்..

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 03:05 PM
//////
எழுத்து பிழை என் உடன் பிறவா சகோதரன்
இலக்கணப் பிழை எனக்குப் பிறந்த தலை மகன்
/////////

என்ன போங்க
இப்படியா உண்மையை பொது மன்றத்தில் சொல்வது??
விவரம் தெரியாமல் இருக்கிரீங்களே????
நாங்கெல்லாம் அப்புடியா இருக்கோம்???/
கமுக்கமா கவிதைபகுதியை காலிபண்னுகிறோமல்லா.


(உங்கள் நகைச்சுவையான அறிமுகம் அருமை)

rajatemp
05-10-2008, 01:23 PM
கவிதை ஒன்று எழுதிடும்வரை, யாருக்குமே தான் கவிஞன் என்று தெரிந்திடாது...



உண்மைதான் என்று நினைக்கிறேன்