PDA

View Full Version : தமிழ்வானில் ஒரு புதிய உதயம்



வாசகி
07-05-2007, 03:35 PM
வணக்கம். நான் உதயநிலா. தவறுதலாக உதயநிலாநிலா எனப் பதிந்து விட்டேன். எனது தாய்நாடு இலங்கை. ஆம் நான் இலங்கையின் இளநிலா. இந்த நிலாவுக்கு கதை சொல்லத்தெரியும். கொஞ்சம் கவிபாடத்தெரியும். நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுக்கும் அறியாதவற்றை உங்களைக் கேட்டு தெரிந்துகொள்வதுக்கும் இங்கே முயல்கின்றேன். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் தமிழ் உறவுகள் என்னையும் ஆதரிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவைநாடும்,

அறிஞர்
07-05-2007, 03:36 PM
வாருங்கள் உதயநிலா...

ஒரிரு நாளில் பெயர் மாற்றம் செய்யப்படும்.

சுட்டிபையன்
07-05-2007, 03:44 PM
வணக்கம் உதயநிலா அன்புடன் வர வேற்கின்றோம் உங்களை!

ஆதவா
07-05-2007, 03:47 PM
அழகிய அறிமுகம். தலைவர் அதை சரி செய்வார் கவலைப் படாதீர்கள் நண்பரே!. இலங்கை நிலவை ஆதவன் வரவேற்கிறான்,... நல்வரவு

leomohan
07-05-2007, 03:48 PM
வணக்கம். நான் உதயநிலா. தவறுதலாக உதயநிலாநிலா எனப் பதிந்து விட்டேன். எனது தாய்நாடு இலங்கை. ஆம் நான் இலங்கையின் இளநிலா. இந்த நிலாவுக்கு கதை சொல்லத்தெரியும். கொஞ்சம் கவிபாடத்தெரியும். நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுக்கும் அறியாதவற்றை உங்களைக் கேட்டு தெரிந்துகொள்வதுக்கும் இங்கே முயல்கின்றேன். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் தமிழ் உறவுகள் என்னையும் ஆதரிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவைநாடும்,

நல்வரவு உதயநிலா.

நிர்வாகி உங்கள் பெயரை திருத்த உதவுவார்.

படையுங்கள், படியுங்கள். நன்றி.

வாசகி
07-05-2007, 03:50 PM
நன்றி அறிஞரே! என்னை முதன்முதலாக வரவேற்ற உப்க்களுக்கு என் நன்றிகள். பெயர்மாற்றத்தை எதிபார்த்துக் காத்திருக்கின்றேன்.

அக்னி
07-05-2007, 03:52 PM
கவரும் அறிமுகம்... கவர்ச்சியான வார்த்தைப் பிரயோகங்கள். மன்றத்தில் என்றும் பௌர்ணமியாக மிளிர, வாழ்த்தி, வரவேற்கின்றேன்...

வாசகி
07-05-2007, 03:55 PM
தமிழர்கள் வரவேற்பதில் என்றுமே முண்ணனியில் இருக்கின்றார்கள் என்பது மீண்டும் ஒருதடவை நிரூபணம் ஆகியுள்ளது. பதிந்த சில நிமிடங்களில் நால்வரின் வரவேற்பு வாழ்த்து. நன்றி சுட்டிப்பையனே. உங்கள் கையெழுத்தில் இருக்கும் வாக்கியம் மெய்வாக்கியமாக வாழ்த்துகள்.
ஆதவனுக்கும் எனது நன்றி. நிலவினை வரவேற்று ஆதவனின் பதிவு. அற்புதம். அடுத்த நண்பன் மோகன். உங்களை நண்பன் என்று விளிப்பதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே. உங்கள் வரவுப்பதிவுக்கும் எனது நன்றிகள்.

வாசகி
07-05-2007, 04:08 PM
இதோ நன்றிகூறிப் பதிவதுக்குள் அடுத்த வரவேற்பு. குளிர்நிலவை அக்னி வரவேற்றிருக்கின்றார். நன்றி அக்னி. கவிகளுடன் அக்னியும் என்றபகுதியைப்படித்தேன். தவறு நுனிப்புல் மேய்ந்தேன். ஆழமாகப் படித்துவிட்டு என் கருத்தை வரைகின்றேன்.

ஷீ-நிசி
07-05-2007, 04:31 PM
உதயநிலாவிற்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

மதுரகன்
07-05-2007, 06:44 PM
வாங்க உதயநிலா நானும் இலங்கைதான்....
இங்கு இலங்கை இந்தியா என்ற பாகுபாடின்றி மொழியால் ஒன்றிணைவோம்.....
வாழ்த்துக்கள்...

மனோஜ்
07-05-2007, 07:00 PM
வருக வருக உதயநிலா வாழ்த்துக்கள்
தருக தருக உங்கள் கவிதை கதைகளை நன்றி

வாசகி
07-05-2007, 08:33 PM
:smilie_flags_kl: ஆம். மதுரவன். நீங்கள் கூறுவது உண்மைதான். நாட்டால் பிளவுபட்ட மதத்தால் பிளவுபட்ட நாம் மொழியால் இணைந்துள்ளோம்.தமிழ்மொழி எம்மை இணைத்துள்ளது. ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் என வகைப்படுத்திய அரசியல்சக்திகளால் தமிழர் என்பதை வகைப்படுத்த முடியவில்லை. உங்கள் வரவேற்புக்கு நன்றி.

அன்புரசிகன்
07-05-2007, 09:01 PM
வாங்க இளையநிலா...

இளையநிலா... உங்கள் பதிவுகளை பொழியுங்கள்.
(மோகனுக்காக பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் தான் ஞாபகம் வருகிறது)...

வாழ்த்துக்கள்.

வாசகி
08-05-2007, 04:48 PM
நன்றி அன்புரசிகன். உங்கள் வரவேற்புக்கு எனது நன்றிகள்..

ஆதவா
08-05-2007, 08:20 PM
இடம் : தமிழ்தாய் மடி.... என்னே ஒரு அழகிய அறிமுகம்...... வணங்குகிறேன் தலைவா!!!

மலர்
09-05-2007, 07:05 AM
வாருங்கள் நிலா உங்களை வரவேற்கிறோம்

ஓவியன்
09-05-2007, 09:46 AM
உதய நிலா வாங்கோ!, வீட்டில எல்லோரும் சுகம் தானே!

உங்கள் அறிமுகத்தைப் பார்க்கும் முன்னே உங்கள் ஆக்கங்களைப் பார்த்து பிரமித்தேன்.

எனக்கு அம்மா நிலாவைக் காட்டித் தான் கதை சொன்னவா, ஆனால் இங்கே நிலாவே வந்து கதை சொல்கிறேன் என்கிறது.

உங்கள் கவி மழையில் நனைந்த நான் கதை மழையிலும் நனைய காத்திருக்கிறேன்.

mravikumaar
09-05-2007, 10:06 AM
வாருங்கள் உதயநிலா

அன்புடன்,
ரவிக்குமார்

ஓவியா
09-05-2007, 08:30 PM
வணக்கம் நண்பரே,

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக :music-smiley-008: :music-smiley-008:

உதயனி(நி)லாவை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்

நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

வாசகி
11-05-2007, 07:39 PM
நன்றி ஓவியா. உங்களைப்போன்றவர்கள் வரவேற்கும்போது நாமும் ஏதாவது சாதிக்கலாம் என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது.

Gobalan
12-05-2007, 06:20 PM
வாருங்கள் உதயநிலா. மொழியினால் இங்கு கூடுகிறோம். நானும் இங்கு சேர்ந்தது என் தமிழ் மொழியின் அறிவை வளர்த்து கொள்வதர்காக. உங்கள் தமிழ் மிக அறுமையாக இருக்கிறது. உங்கள் பதிப்புகளை ஆரம்பியுங்கள். அதை படிப்பதினால் என் தமிழ் கற்றுகொள்ளும் ஆர்வம் இன்னும் மேலோங்கும் என்று நம்பிகிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நன்றி. கோபாலான்.

அமரன்
14-05-2007, 01:51 PM
வாருங்கள் உதயநிலா. உங்கள் படைப்புகளை தாருங்கள். மன்றத்தின் விதிமுறைப்படி நடந்து நீங்களும் வளருங்கள் தமிழையும் வளருங்கள்.

சூரியன்
15-05-2007, 04:41 PM
வணக்கம் உதயநிலா அன்புடன் வர வேற்கின்றோம் உங்களை!

பிச்சி
17-05-2007, 10:18 AM
வாருங்கள் உதயநிலா பிச்சிக்கு நிலான்னா ரொம்ப புடிக்கும்..