PDA

View Full Version : அம்மாவுக்கு ஒரு குட்டி கவிதை



சுட்டிபையன்
07-05-2007, 12:27 PM
தெய்வம் நீயம்மா
ஈரைந்து மாதம் சுமந்து
இந்த உலகத்திற்க்கு
என்னை அறிமுகப்படுதிய
உனக்கு என்ன செய்வேனோ.......?
என் தெய்வத் தாயோ.......
என் தாயாகி, குருவாகி
நண்பியாகி,காதலியாகி
என்னுள் வாழ்பவளே
எந்தன் உயிர் நீ கொடுத்த
பிச்சைதான் தாயே
என்னுயிரை எடுக்கும்
உரிமையும் உனக்கு மட்டும்தான்
என் தாயே.........
என்னை ஒரு தடவை
பார்த்து விடு உன்
கண்ணைத் திறந்து.....

poo
08-05-2007, 06:57 AM
அம்மா... உச்சரிக்கும்போதே நம்மைச்சுற்றி இருப்பதெல்லாம் மறைந்துபோகும் உணர்வு எழும்...

தாமரை
08-05-2007, 07:09 AM
தெய்வம் நீயம்மா
ஈரைந்து மாதம் சுமந்து
இந்த உலகத்திற்க்கு
என்னை அறிமுகப்படுதிய
உனக்கு என்ன செய்வேனோ.......?
என் தெய்வத் தாயோ.......
என் தாயாகி, குருவாகி
நண்பியாகி,காதலியாகி
என்னுள் வாழ்பவளே
எந்தன் உயிர் நீ கொடுத்த
பிச்சைதான் தாயே
என்னுயிரை எடுக்கும்
உரிமையும் உனக்கு மட்டும்தான்
என் தாயே.........
என்னை ஒரு தடவை
பார்த்து விடு உன்
கண்ணைத் திறந்து.....


சுட்டி டிவி யில் ஒரு அரட்டை அரங்கம். ஒரு பெண் அவரின் அம்மாவைக் கேட்கிறார்..

10 மாதம் சுமந்து கஷ்டப்பட்டோம்னு சொல்றீங்களே! நாங்க உள்ள சுகமா வா இருந்தோம்.. உள்ள் ஒரு ஏ.சி உண்டா, காலை நீட்டி மடக்க எடம் உண்டா.. நினைச்சத சாப்பிட முடிந்ததா.. நாங்க பட்ட கஷ்டத்தை யார் நினைச்சுப் பார்க்கிறாங்க..

தாய் சுமந்து பெற்றால் என்பதால் தாயை வணங்குகிறோம் நாம். இது சுயநலம்.. பெண்ணினத்தையே வணங்குதல்தானே சரி..

பெண்களை, அடிமைகளாய், போகப் பொருளாய் மதிக்கும் ஒருவர் தாயை வணங்குவதால் பாவங்கள் தீர்ந்து விடுவதில்லை. தாயை மதிப்போர் தாரத்தையும், மகளையும், மருமகளையும் அதே மரியாதையாய் பார்த்திடல் வேண்டும்..

ஷீ-நிசி
08-05-2007, 07:12 AM
பெண்களை, அடிமைகளாய், போகப் பொருளாய் மதிக்கும் ஒருவர் தாயை வணங்குவதால் பாவங்கள் தீர்ந்து விடுவதில்லை.தாயை மதிப்போர் தாரத்தையும், மகளையும், மருமகளையும் அதே மரியாதையாய் பார்த்திடல் வேண்டும்..


நல்ல கவிதை சுட்டி....

செல்வன் அவர்களே! முற்றிலும் ஏற்றுக்கொள்ளகூடிய, யோசிக்கவேண்டிய கருத்து இது...

ஓவியன்
08-05-2007, 07:13 AM
உண்மை தான் அண்ணா!
அப்படி பெண்கள் எல்லோரையும் மதிக்கும் நிலை ஒன்று வந்தால்
உலகில் பல பிரச்சினைகள் மறைந்துவிடும்.