PDA

View Full Version : விலங்குகளும் மனிதனும்



மனோஜ்
07-05-2007, 10:22 AM
கழுதை (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Donkey.jpg)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Donkey.jpg

கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை ஏன்?
கற்பூரத்திற்கு தெரியுமா
கழுதையின் யோசனை?

கழுதை அறிவு
குறைவுதான் ஆனால்
குறைவில் நிறைவடைகிறான்.
மனதில் மகிழ்கிறான்
சிலருக்கு உதவுகிறான்

ஓவியன்
07-05-2007, 10:34 AM
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை ஏன்?
கற்பூரத்திற்கு தெரியுமா
கழுதையின் யோசனை

கழுதை அறிவு
குறைவுதான் ஆனால்
குறைவில் நிறைவடைகிறான்
மனதில் மகிழ்கிறான்
சிலருக்கு உதவுகிறான்

ஆமா யாரைச் சொல்லுறீங்க மனோஜ்??:lachen001:

கற்பூரத்திற்கு தெரியுமா?
கழுதையின் யோசனை - நியாயமான கேள்விதான்.

தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் மனோஜ், கொஞ்சம் எழுத்துப் பிழைகளிலும் கவனமெடுத்தால் எங்கேயோ போயிடுவிங்க.

ஷீ-நிசி
07-05-2007, 10:36 AM
என்ன மனோஜ்.. திடீர்னு கழுதைப் பற்றின கவிதையில் இரங்கி விட்டீர்கள்... நன்றாகவே உள்ளது...

மனோஜ்
07-05-2007, 10:38 AM
கழுதை என்று பிறரால் எண்ணப்படுபவர்கள் சிலர், அவர்களுக்காக
நன்றி ஓவியரே

மனோஜ்
07-05-2007, 10:39 AM
என்ன மனோஜ்.. திடீர்னு கழுதைப் பற்றின கவிதையில் இரங்கி விட்டீர்கள்... நன்றாகவே உள்ளது...
இல்ல எதாவது வித்தியாசமா எழுததான் இப்படி
நன்றி ஷீ

ராஜா
07-05-2007, 10:40 AM
கழுதைக் கவி அருமை..

அடுத்த கவி எருமை..?

மனோஜ்
07-05-2007, 10:47 AM
கழுதைக் கவி அருமை..

அடுத்த கவி எருமை..?

நன்றி ராஜா அண்ணா ( நீங்க கோடு போட்டிங்க நான் ரோடு போடுகிறோன்)

மனோஜ்
07-05-2007, 04:11 PM
சில நேரம்
சில வார்த்தைக்கு
எருமையின் குணம்
சில பணிக்கு
சில வழிக்கு
எருமையின் மனம்
சில வலிக்கு
சில மொழிக்கு
எருமையின் வழி
சில நேரம்
சில மனிதர்கள்
எருமைகள்

தாமரை
08-05-2007, 03:33 AM
கழுதைகளும் எருமைகளும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன
பழமொழிகளில்

அக்டோபர் 16, 2500.

மனோஜ்
08-05-2007, 02:20 PM
கருத்துக்கு நன்றி தாரை செல்வன் அவர்களே

சுட்டிபையன்
08-05-2007, 02:28 PM
என்ன மனோஜ் அண்ணா கித்துவம் எல்லாம் சொல்ல தொடங்கீட்டீங்களே........?

தாமரை
08-05-2007, 02:29 PM
கருத்துக்கு நன்றி தாரை செல்வன் அவர்களே
தாரை செல்வன் = தாரையின் மகன் = அங்கதன்..

எந்த விசயத்தையும் அங்கேயே அதன் தீர்வு செய்வதால் என்னை அங்கதன் என்றும் கொள்ளலாம் தான் தவறில்லை

மனோஜ்
08-05-2007, 02:34 PM
தாரை செல்வன் = தாரையின் மகன் = அங்கதன்..

எந்த விசயத்தையும் அங்கேயே அதன் தீர்வு செய்வதால் என்னை அங்கதன் என்றும் கொள்ளலாம் தான் தவறில்லை

பிழைக்கு வருந்துகிறேன் அதையும் அழகாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி செல்வன் அவர்களே

ஜோய்ஸ்
08-05-2007, 02:51 PM
நல்லவிதமான ஆராய்சி மனோஜ்.நீங்கள் குறிப்பிடுவதிலும் காரியம் உள்ளது.

ஆதவா
09-05-2007, 07:54 PM
அய்யா! இதற்குப் பொருள் என்னவென்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்... ஹிஹி நமக்கு கொஞ்சம் புத்தி கம்மி... :D

மனோஜ்... உங்கள் பதிவுகளில் பிழையில்லா பதிவுகள் தேடவேண்டும் என்று நினைக்கிறேன். பதியும் போது நன்றாக ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் உங்களின் எல்லா பதிவுகளிலும் மேற்கண்ட சிவப்பு வண்ணத்தில் பிழை சொல்லப்பட்டு திருத்தப்படும்... அது உங்கள் பதிவுகளின் தரத்தையும் குறைத்துவிடும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.... உங்கள் நலமே மன்ற நலம்... உங்கள் பிழையற்ற பதிவுகளே மன்றத்தில் நலமான பதிவுகள்......

அறிஞர்
09-05-2007, 08:04 PM
கழுதை, எருமை வந்துவிட்டது.......

நாய், புலி, சிங்கம்.. எப்ப வரும்.....

வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்...

மனோஜ்
09-05-2007, 08:18 PM
நாய்
http://upload.wikimedia.org/wikipedia/ta/b/b1/YellowLabrador.jpg

நன்றியை காட்டுவது நாய்
நன்றி என்பது மறப்பது மனிதன்
வீட்டினைக் காப்பது நாய்
வீட்டினைக் கட்டுவது மனிதன்
இருவருக்கும் ஒரு வித்தியாசம்
நாய் பலன் எதிர்பார்க்காது
மனிதன் அனைத்திலும்
எதிர் பார்ப்பவன்....(கவிதையா இது தெரிய வில்லை)


புலி (http://upload.wikimedia.org/wikipedia/commons/4/49/Panthera_tigris_tigris.jpg)


பசித்தாலும் புல்லை தின்னாது புலி
பசிக்காக தன்னையும் இழப்பவன் மனிதன்
புலிக்கு பிறந்தது பூனைஆகாது
புலிக்கு பிறந்தாலும் பூனைஆவது நிச்சயம்

சிங்கம் (http://upload.wikimedia.org/wikipedia/commons/1/10/Lion_waiting_in_Nambia.jpg)
சிங்கத்தை வீரத்திற்கு ஓப்பிடுவர்
சிங்கம் அசிங்கமாகாது ஆனால்
மனிதன் எதற்கு ஒப்]பிடமுடியும்
அவனுக்கு நிகர் அவன்ஆனாலும்
நடத்துவது என்பது அசிங்கமாய்

மிக்க நன்றி அறிஞரே( நீங்க கொடுத்ததிற்கும் எழுதிவிட்டேன்)

அறிஞர்
09-05-2007, 08:25 PM
குறுகிய நேரத்தில் நன்றாக யோசிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள்...

எழுத்துப்பிழைகளை களைந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

தாமரை
10-05-2007, 02:02 AM
கரடியும் முதலையும்
நாயும் நரியும்
சிங்கமும் குரங்கும்
எருமையும் கழுதையும்
மனிதனுக்கு
உதாரணங்களாகிப் போயின..

மனிதத்துக்கு உதாரணமாய்
ஒரு மனிதன்
இல்லாது போனான்

மனோஜ்
10-05-2007, 07:28 AM
கரடியும் முதலையும்
நாயும் நரியும்
சிங்கமும் குரங்கும்
எருமையும் கழுதையும்
மனிதனுக்கு
உதாரணங்களாகிப் போயின..

மனிதத்துக்கு உதாரணமாய்
ஒரு மனிதன்
இல்லாது போனான்
காந்தியும் நேருவும்
உதாரணமாய் மனிதனுக்கு
தனது வாழ்க்கையை பிறருக்கு
உதாரணங்கள் ஆக்கியே
உயிருடன் வாழ்கின்றனரே
இன்னும் சிலர் வாழ்கின்றனர்
உதாரணமாய் மறந்திடல்
கூடுமே செல்வரே

தாமரை
10-05-2007, 07:37 AM
காந்தியும் நேருவும்
உதாரணமாய் மனிதனுக்கு
தனது வாழ்க்கையை பிறருக்கு
உதாரணங்கள் ஆக்கியே
உயிருடன் வாழ்கின்றனரே
இன்னும் சில் வாழ்கின்றனர்
உதாரணமாய் மறந்திடல்
கூடுமே செல்வரே

கண்மணியின் கீழ்கண்ட பதிவைப் படியுங்கள். உதாரண மனிதர்கள் கொல்லப்பட்டு எஞ்சி நிற்பது விலங்குகள் மாத்திரமே...!!!

-----------------------------------------
காந்திக்கு மீசை உண்டா?
அலுவலகத்தில் கேட்டபொழுது

உண்டென்றவர் - இருவர்
இல்லையென்றவர் - 7 பேர்
தெரியலையே என குழம்பினவர் - 32
100 ரூபாய் பணத்தில் தேடியவர் - 12
__________________
உங்கள் கண்மணி


உடலின் உறுதிக்கு உடற்பயிற்சி
மனதின் உறுதிக்கு உண்மைப்பயிற்சி..
--------------------------------------

மனோஜ்
10-05-2007, 07:44 AM
இந்த கவிதையில் அவர் கூறுவது
உதாரணங்கள் மறக்கப்பட்டது
ஆனால் உதாரணங்கள் உயிருடன்
மாற்றங்கள் உன்டே செல்வரே

தாமரை
10-05-2007, 07:47 AM
சுறுசுறுப்புக்கு உதாரணம் - எறும்பு
உழைப்புக்கு உதாரணம் - எருது
நன்றிக்கு உதாரணம் - நாய்
எதற்கு உதாரணம் - மனிதன்???

மனோஜ்
10-05-2007, 07:51 AM
மனிதனுக்கு மனிதனே உதாரணம் செல்வரே
அதைதான் இங்கு நான் குறிப்பிடுவது

தாமரை
10-05-2007, 07:54 AM
நாய்க்குணம் எல்லா நாய்களுக்கும் பொதுவானது
மனிதகுணம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதா?

மனோஜ்
10-05-2007, 08:00 AM
இல்லை தான் ஆனால்
மனிதனுக்கு ஆறறிவு உள்ளது
சிந்தித்து செய்ல்படுபவன் அந்த சிந்தனையில்
சில மனிதர் உதாரணங்களாய்
இல்லையா செல்வரே ?

தாமரை
10-05-2007, 08:41 AM
உதாரணமாக்க மனிதனுக்கு என்று தனிப்பண்பு பரவலாய் இல்லை
உதாரணமாகும் சிலரையும் கொன்று மறந்துவிடுகிறோம்

ஆதவா
10-05-2007, 08:41 AM
ஹி ஹி.. எல்லா மிருகங்களும் இணைந்தாலே மனிதந்தான்.....

தாமரை
10-05-2007, 08:43 AM
மனிதன்தான்
மனிதன் தான் என்பதை
மறந்து விட்டால்

மனோஜ்
10-05-2007, 08:53 AM
மனிதன் தான் மனிதன்
என்பதை மறந்தால்
நடப்பது சில காரியங்கள்
கெலை கொள்ளை
சிறப்பது இறைவன் முடிவுகள்

தாமரை
10-05-2007, 08:59 AM
மனிதன் "தான்"
என்பதை மறந்தால் நன்று
தான் மனிதன்
என்பதை மறந்தால் தீது
மனிதன் மனிதன் தான்

மனோஜ்
10-05-2007, 09:03 AM
உனர்திடும் மனங்கள்
உறவினில் மயங்கிடும்
மறந்திடும் மனங்கள்
மனிதானாய் இருக்குமோ

தாமரை
10-05-2007, 09:08 AM
உணர்ந்தாலும் மறந்தாலும்
உறவிலே மயங்கினாலும்
மனதிற்கும் மூளைக்கும்
எட்டாத தூரமய்யா
இரத்தம் பாய்ச்சி
இதயம் சொன்னாலும்
மூளைக்குள்ளே
முடங்கிப் பொகிறதே
மனிதம்

மனோஜ்
10-05-2007, 09:16 AM
மூடங்கிப் பொவது மனிதஇயல்பு
தட்டி எழுப்புவது காலத்தின் நியதி
வாழ்க்கை மாற்றம் மாறுதல்
நிகழ்திடும் மனதினில் மூடங்கிடும்
இயல்புகள் மலர்திடுமே

தாமரை
10-05-2007, 09:20 AM
காலம் உன்னை எழுப்பு முன்
காலன் தூங்க வைத்து விடுகிறான்

மனோஜ்
10-05-2007, 09:25 AM
காலன் வருமுன் உனர்திடும்
மனங்கள் அதிகமே
காலம் கடந்தாலும்
கடைசியில் கிடைப்பது
மனித வரலறே

தாமரை
10-05-2007, 09:29 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6067

gragavan
10-05-2007, 09:31 AM
மனிதன் எதற்கு எடுத்துக்காட்டு தெரியுமா? பாலியல் வன்புணர்ச்சி. வேறெந்த விலங்கும் இதைச் செய்வதாகத் தெரியவில்லை.

மனோஜ்
10-05-2007, 09:38 AM
உயிரின் மதிப்பு அது சிறந்தது மனதினில்
உறுத்திடும் மனித குணம்
ஊறுதிபடுத்திடும் கடவுள்
வார்த்தைகள் தினம்
மனதில் மாற்றம்
உற்றவன் மனம்
மகிழ்திடும் தினம்

கவிதையில் மனிதனின்
உடல் ஊறு பெற்றுள்ளது
ஊறுதியில் கூறிட மனிதன்
சில மனிதனின் உதாரணம்

மனோஜ்
10-05-2007, 09:41 AM
மனிதன் எதற்கு எடுத்துக்காட்டு தெரியுமா? பாலியல் வன்புணர்ச்சி. வேறெந்த விலங்கும் இதைச் செய்வதாகத் தெரியவில்லை.

விலங்கிலும் உன்டே வன்புணர்ச்சி
மனதனில் சிலறும் செய்புணர்ச்சி
ஒதிக்கிட உன்டே உள் உனர்ச்சி
உறிந்திடும் உலகில் கால வளர்ச்சி

ஆதவா
10-05-2007, 10:04 AM
அழகான கவிதைப் பதில்கள்... போட்டிபதில்கள்....

வாழ்த்துக்கள் அண்ணாவுக்கும், மனோஜ் க்கும்..

தாமரை
10-05-2007, 10:10 AM
மனம் + தன்
மனிதன்
மனம் போன போக்கில்

மனோஜ்
10-05-2007, 10:37 AM
மனம் போன போக்கில்
என்றாலும் கட்டிபடுத்தல்
சிலநேரிகள் உன்டே
மாற்றிட முயல்தல்
சாலசிறந்ததே

தாமரை
10-05-2007, 11:31 AM
கட்டுவதும் மனமே
வெட்டுவதும் மனமே
ஒட்டுவதும் மனமே
குட்டுவதும் மனமே
மனம் நம் போக்கில் போகிறதென
சாளர வழி பார்த்தேன்
புரிந்தது
கண் முன் விரிந்தது
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம்

மனோஜ்
10-05-2007, 01:39 PM
தங்களுக்கும் புரிந்ததே
தத்துவங்கள் சிறந்ததே
இதனிலும் சிறந்தது
மனிதனின் இயல்புகலே
இன்னமும் செல்கிறோன்
மனிதன் ஒரு உதாரணமே

mravikumaar
11-05-2007, 04:02 AM
அனைத்து கவிதையும் தூள்

அன்புடன்,
ரவிக்குமார்

மனோஜ்
12-05-2007, 01:56 PM
நன்றி ஆதவா நன்றி ரவிக்குமார்
செல்வன் அண்ணா கவிதைக்கு நன்றி

மனோஜ்
21-05-2007, 08:31 AM
பூனை (http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3a/Cat03.jpg)

புரிந்து கொன்டால் பாசம் காட்டும்
புரியாவிட்டால் மீசை காட்டும்
பசீயேடுத்தால் பால் குடிக்கும்
பரிவுகாட்டினால் அன்பு செலுத்தும்

கொபம் வந்தால் பதம்பார்க்கும்
கொபம் தனிந்தால் காலடியில்
விட்டில் எலிகள் இதன் எதிரிகள்
நாட்டின் நாய்கள் இதன் பகையாளிகள்

அக்னி
21-05-2007, 10:25 AM
மிருகங்களுக்குள் மனித இயல்புகள்... அருமையான திரி...

அத்துடன்,
மனோஜ், செல்வன் இடையேயான கவியாடல்கள் அருமையான போர்...

வாழ்த்துக்கள்...

மனோஜ்
26-05-2007, 08:06 AM
நன்றி அக்னி

மனோஜ்
31-05-2007, 07:37 AM
ஒட்டகம்
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Dromedary.02.jpg

குனத்தில் எப்போழுதும சாதுவாய்
சில விலங்கில் இன்றும் உயரமாய்
பாலைவனத்தில் என்றும் உதவியாய்
தோலில் என்றும் வலிமையாய்

மனிதன் உயர்வில் என்றும் உயர்வாய்
பாலைவனமம் வாழ்வில் உறுதியாய்
ஒட்டககுனமாம் சேமிப்பில் உதரனமாய்
உதவிடு பிறருக்கு இவ்விதமாய்

மனோஜ்
31-05-2007, 08:33 PM
பன்றி (http://upload.wikimedia.org/wikipedia/commons/5/59/Sow_with_piglet.jpg)

நாங்கள் ஊதாரனங்கள் ஆகிறோம்
சாக்கடையில் அழுக்கானவர்கள் என்று
நான் விலங்கினில் கொட்டவன்
உழன்றிடும் புழுதியில் உறைபவன்

குறைகள் அடுக்கும் மனிதன்
எடுத்து காட்டாக அமைவது
அனைத்தும் இழிவுகள் ஆனால்
சிலருக்கு எங்கள் மமிசம் இனிக்கிறதாம்

அக்னி
31-05-2007, 10:25 PM
உங்கள் ஒப்பீடுகள் யாரையும் சிந்திக்கத் தூண்டும்.
உங்கள் சிந்தனையின் வித்தியாசமான கோணத்தில் அதிசயிக்கின்றேன்.
ஒவ்வொரு பொருளும் ஓர் அர்த்தம் தாங்கி மண்ணில் உள்ளது என்பது,
உங்கள் கவிதைகளிலிருந்து புலப்படுகின்றது.

தொடருங்கள் நண்பரே...

மனோஜ்
09-06-2007, 02:27 PM
தங்களின் ஊக்கிவிப்பில் என்றும் தொடருவேன் அக்கனி நன்றி

மனோஜ்
18-06-2007, 08:45 AM
கரடி (http://upload.wikimedia.org/wikipedia/commons/6/6b/Kodiak_Brown_Bear.jpg)

இறைவன் கொடுத்தான் நீன்டநாள்
உறுதியில் இன்றும் மீளாது நான்
தேனை விரும்பி உன்டிடுவேன்
காடை வீடாய் கொண்டிருந்தென்

மனிதன் காட்டை அழித்து விட்டான்
என்னை வீட்டில் கட்டி வைத்தான்
சபையில் என்னை ஆட்டிவைத்தான்
இறைவா இல்லைஎனக்கு சுதந்திரமே

அக்னி
18-06-2007, 05:14 PM
கரடி பேசமுடிந்தால் இதைத்தான் பேசியிருக்குமோ?
மனிதர்களைப் பற்றியே சிந்திக்க மறக்கும்,
மனிதரிடையே,
மிருகங்களுக்காய் கவிதையில் உணர்த்தும்,
மனோஜ்..!
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.
மௌனத்தால், மனதில் உயர்த்துகின்றேன், உங்களை...

மனோஜ்
18-06-2007, 05:20 PM
எனது வித்தியசமான என்னங்களுக்கு வித்திட்ட அக்னிக்கு மிக்க நன்றி
தங்கள் ஆதரவில் இதை மேலும் தொடர்வேன் நன்றி நண்பரே

மனோஜ்
23-06-2007, 09:38 AM
நரி
http://upload.wikimedia.org/wikipedia/ta/4/43/Fox_Vulpes_vulpes_sitting.jpg

தந்திரத்தின் ராஜா நான்
தரத்தினிலே குறைந்தவன்
தரனியிலே ஒன்றி பிழைப்பவன்
இறவினிலே ஓலம் இடுபவன்

நான் இந்நிலை எனினும்
என்னிலும் கொடுயர் மானிடர் சிலர்
நயவஞ்சகத்தில் என்னிலும் பலமாய்
உறுஞ்சவதில் என் தந்திரதிலும்
பல மையில் அதிகமாய்

அமரன்
23-06-2007, 09:41 AM
மானோஜ் மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள். தொடருங்கள்

மனோஜ்
23-06-2007, 09:45 AM
மீண்டும் என்று இல்லை நண்பா
தொடர்ந்து வாரம் ஒரு மிருகத்தை எடுத்து எழுதாலாம் என்று எழுதுகிறோன் தங்கள்ஆதரவுக்கு நன்றி

மனோஜ்
24-06-2007, 03:01 PM
இது வரை

கழுதை
எருமை
நாய்
புலி
சிங்கம்
பூனை
ஒட்டகம்
பன்றி
கரடி
தொடரும்....

மனோஜ்
04-07-2007, 10:50 AM
குரங்கு
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/94/Monkey_batu.jpg

குதித்து தான்டும் மரங்களுடன்
குசியாகி வாழம் வாழ்க்கை
எங்களில் பிறந்தவன் மனிதனாம்
எங்களுக்கு உள்ள அன்பும் சில
மானிடரிடத்தில் இல்லையே

எங்கள் மனம்
நல்லவனுக்கு இல்லையாம்
இடத்திற்கு இடம்
தாவுவது எங்கள் வழுக்கம் அதுவே
மனிதனின் குணமாய் மாறியது கொடுமையே

அக்னி
04-07-2007, 04:32 PM
ஒவ்வொரு மிருகத்தையும் மனிதனோடு இணைத்து சீர்தூக்கும் கவிதைகள்,
உலகில் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்...

மனோஜ்
05-07-2007, 01:37 PM
அக்னி நீங்ளாவது ஊக்கமளித்தீர்களே நன்றி

அக்னி
05-07-2007, 01:43 PM
அக்னி நீங்ளாவது ஊக்கமளித்தீர்களே நன்றி

மனோஜ் அவர்களே.., எத்தனயோ புதுப் படைப்புக்கள் தினமும் மன்றில் அரங்கேறுகின்றன.
அதனால், விடுபட்டுப் போவது வழமை.
தெரியவரும்போது, அனைவருமே, புகழ்ச்சி செய்வார்கள்.
அந்த நாள் விரைவில் மலரும்.
சலிப்படையாமல், தொடர்ந்தும் படையுங்கள்...
துணையாக வருவேன். வருவார்கள். வெல்வோம்...
நன்றி!

அன்புரசிகன்
05-07-2007, 03:23 PM
எங்கள் மனம்
நல்லவனுக்கு இல்லையாம்
இடத்திற்கு இடம்
தாவுவது எங்கள் வழுக்கம் ஆதுவே
மனிதனின் குணமாய் மாறியது கொடுமையே

ஆசையை அடக்க
நாம் புத்தரல்ல
ஆசை இல்லாதவன்
மனித குலத்தில் இல்லை

நன்றாக உள்ளது மனோஜ்

ஓவியன்
05-07-2007, 04:14 PM
குரங்கு

குதித்து தான்டும் மரங்களுடன்
குசியாகி வாழம் வாழ்க்கை
எங்களில் பிறந்தவன் மனிதனாம்
எங்களுக்கு உள்ள அன்பும் சில
மானிடரிடத்தில் இல்லையே


மரத்திற்கு மரம் தாவுகிறது மந்தி!
ஆனால்
மனத்திற்கு மனம் தாவுகிறானே மனிதன்!


மனோஜ் விலங்குகளை வைத்து வித்தியாசமாகக் கவிப் படைப்புக்களைத் தந்து வரும் உங்கள் முயற்சி அருமையானது!.

தொடருங்கள் தோள் கொடுக்கக் காத்திருக்கிறான் இந்த ஓவியன்!.

ஷீ-நிசி
07-07-2007, 02:58 AM
மனோஜ்! வித்தியாசமாக ஆரம்பித்து இன்று பல விலங்கினங்களுக்கும் கவிதை எழுதி போய்கொண்டிருக்கிறீர்கள்...

இதில் விஷேஷம் என்னவென்றால், ஒவ்வோர் விலங்கையும் மனிதனோடு ஒப்பிட்டு கவிதை ஒரே சாயலில் செல்வதுதான்...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

அமரன்
07-07-2007, 08:13 AM
இன்றுதான் அனைத்து கவிதைகளையும் படித்தேன். மனோஜ் ஒவ்வொன்றையும் கவனித்து எழுதுகின்றீர்கள். இடைக்கிடை தாமரை அண்ணாவின் நறுக்ஸ். பாராட்டுகள் மனோஜ்.

மனோஜ்
09-07-2007, 09:31 AM
இன்று மணம் குளிர்ந்தது இத்தனை உள்ளங்கள் ஒன்று சேர்ந்து எனது வித்தியாசமான படைப்பை பராட்டியது
தொடர்வேன் இந்த உக்கத்திலேயே நன்றி மனமார நன்றி அனைவருக்கும்

மனோஜ்
10-07-2007, 08:57 AM
குதிரை (http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d1/Holsteiner_Apfelschimmel-2005.jpg)

விரைவிற்கு நாங்கள் எடுத்துகாட்டு
வீரத்திற்கு ஒரு முன்மாதிரி
படையில் நாங்கள் முதல்வர்கள்
படைப்பிலும் நாங்கள் சிறந்தவர்கள்

கட்டுகடங்காது கடக்கும் பொழுது
கடிவாளம இட்டு கட்டுபடுத்தும் மனிதர்கள்
தங்கள் மனம் கட்டுகடங்காது செல்லும்
பொழுது கட்டுப்படுத்த முயலாதவர்கள்

எங்களை வாகனமாக உபயோகிக்கும் நீ
எங்கள் அன்பையும் விரைவையும்
எங்கு துலைத்தாய் உன்னில் ஏற்படுத்த
சிந்தி செயல்படு

அக்னி
10-07-2007, 09:06 AM
அருமை மனோஜ்...
கட்டுப்பாடு போட்டு, கடிவாளம் போட்டு,
விலங்கை அடக்கும் மனிதன்,
தனது மனதை கட்டவிழ்த்து, தறிகெட்டுத் திரிய
விட்டிருப்பது,
அழுத்தமான சாடல்..
தொடரட்டும் உங்கள்... விலங்கே மனிதனும்...
நன்றி!

மனோஜ்
15-07-2007, 06:12 PM
பசு

இரத்ததை பாலக்கி
சானத்தை உறமாக்கி
தோலினை பதமாக்கி
தொல்லை தரும் மனிதா

அன்பினை மனமாக்கி
உண்மையை மணியாக்கிய
உண்மைகதை அறிவாய
உறவை இழந்து நிற்க

உண்மையை நிலைநாட்டிய
மனுநிதியை அறிவாய
உள்ளம் கள்ளமாக
உறவினை துச்சமாக
நினைப்பது சரியா ?

ஓவியன்
15-07-2007, 06:23 PM
அன்பான மனோஜ்!

இப்படிப் மிருகங்கள் கேள்விகேட்க வெளிக்கிட்டால் மனிதனால் பதில் கூற முடியாமல் தலை குனிந்து தான் நிற்க முடியும்.

தோலினைப் பதமாக்கி என்ற உங்கள் வரிகளைப் பார்த்ததும் அண்மையில் நான் பார்த்த ஒரு விபரண ஒளிப்பதிவு ஞாபகத்திற்கு வருகிறது. அது விலங்குகளிலிருந்து தோல் உரித்து எடுப்பது பற்றிய விபரணம். பார்த்துக் கொண்டிருந்த போது என்னால் சகிக்கவே முடியவில்லை.

விலங்குகள் உயிரோடு இருக்கும் போதே தோலை உரித்தால் அந்த தோல் நன்றாக இருக்கும் என்பதற்காக உயிருடன் தோலை உரிக்கும் கொடூரம் அரங்கேறி இருந்ததைக் காட்சிப் படுத்தி இருந்தனர்.

விலங்குகள் தங்கள் தோலினை இழந்து இன்னமும் இறக்காமல் துடித்துக் கொண்டிருக்கும் கொடுரம்.............

நான் நாகரீகமடைந்தவர் தானா என்ற வினாவை என் மனதில் எழுப்பத் தவறவில்லை..............

தோலினால் செய்த பொருட்கள் மீது ஆர்வமாக இருந்த என் மனதில் ஒரே பாரம்.........

இப்போது இங்கே உங்கள் கவி வரிகளைக் கண்ட போதும்...................

பாராட்டுக்கள் மனோஜ்! − இன்னமும் நிறையத் தாருங்கள்!.

மனோஜ்
15-07-2007, 07:22 PM
நன்றி ஓவியரே தங்கள் பாரட்டுக்கு
உண்மைதான் அந்த கொடுரத்தை திருச்சியில் அதிகமாக செம்பட் என்ற பகுதியில் செய்கிறார்கள் அதனால் தான் அந்த வரி என் மனதில் வந்தது

அமரன்
15-07-2007, 07:48 PM
மனோஜ்...

பொம்மை மகவைக்காட்டி
ஏமாத்திப் பால்கறக்கும்
மனிதர்களை விட.....

அழகு கெட்டுவிடுமென*
மழலைக்கு பாலூட்டமறுக்கும்
மனிதர்களை விட...

மேலானவை பசுக்கள்.
பாராட்டுக்கள் மனோஜ்.

அக்னி
15-07-2007, 08:46 PM
பசுவின் கதறல்...
மனிதனின் மிருகவதை மீதான சாடல்...
சுடர்கிறது கவிதை...
பாராட்டுக்கள் மனோஜ்...

*****

ஓவியன் உங்கள் நிஜக்குறிப்போடு வந்த பின்னூட்டம் சிறப்பு...

*****


அழகு கெட்டுவிடுமென*
மழலைக்கு பாலூட்டமறுக்கும்
மனிதர்களை விட...

இந்த வரிகளில் அடக்கப்பட்ட உண்மை..,
மனிதர்களின் மிருகபுத்தியையும்,
மிருகங்களின் மனிதசுபாவத்தையும்,
சுட்டிக்காட்டிச் சுடுகின்றது...
பாராட்டுக்கள் அமரன்...

மனோஜ்
16-07-2007, 09:20 AM
அருமையான உங்கள் வரிகளுக்கு நன்றி உண்மை வரிகள் நன்றி நண்பரே
மனோஜ்...

அழகு கெட்டுவிடுமென*
மழலைக்கு பாலூட்டமறுக்கும்
மனிதர்களை விட...

மேலானவை பசுக்கள்.
பாராட்டுக்கள் மனோஜ்.

மனோஜ்
18-07-2007, 09:54 AM
பசுவின் கதறல்...
மனிதனின் மிருகவதை மீதான சாடல்...
சுடர்கிறது கவிதை...
பாராட்டுக்கள் மனோஜ்...
...

நன்றி அக்னி :angel-smiley-026:

மனோஜ்
22-07-2007, 02:33 PM
ஆடு (http://upload.wikimedia.org/wikipedia/commons/8/85/Domestic_goat_May_2006.jpg)

ஆடுகளில் நாங்கள் பலஇனம்
ஆனால் இறைவன் படைப்பில்ஒரு இனம்

அமைதிக்கு செம்மரிஆடு
சுருசுருப்பிற்கு வெள்ளாடு இப்படி
எங்களுக்குள் பல இனம் இருபினும்
ஒரே குணம் அன்பு உதவி இதுவே

மனதை அடக்காவிட்டால் நீ வெள்ளாடு
மனதினை அடக்கிவிடால் நீ செம்மரிஆடு

உலகில் ஆடுபவர் பல ஆடிமுடித்து
அடங்கும் பொழுது யோசிக்காதே
அடங்கிவிடும் வாழ்க்கை
அடக்கும் முன்யோசி அடக்கத்தை யாசி

அமரன்
22-07-2007, 02:38 PM
ஐந்தறிவு என்று சொல்லப்படும் ஆட்டை வைத்து ஆறறிவு என்று சொல்லப்படும் மனிதனுக்கு கருத்துச் சொன்ன மானோஜுக்கு நன்றி.
வெள்ளாடு-அடங்காமை
செம்மறியாடு-அடக்கம்
இது எனக்கு புதியது

ஓவியன்
22-07-2007, 02:40 PM
ஆட்டை வைத்து மனிதா வீணாக ஆடாதே என்று சொல்லி வைத்த மனோஜுக்காக இந்த ஆட்டம். :icon_dance:

அக்னி
23-07-2007, 10:57 PM
உலகில் ஆடுபவர் பல ஆடிமுடித்து
அடங்கும் பொழுது யோசிக்காதே
அடங்கிவிடும் வாழ்க்கை
அடக்கும் முன்யோசி அடக்கத்தை யாசி

இந்த வரிகளின் உண்மைத்தன்மை மனதில் பதியவேண்டிய தத்துவமே...
வாழ்த்துக்கள் மனோஜ்...

மனோஜ்
26-07-2007, 08:58 AM
மிக்க நன்றி அமரன் ஓவியன் அக்னி
தங்கள் கருத்து இன்னும் என்னை எழுத செய்யும்

lolluvathiyar
26-07-2007, 10:17 AM
ரெண்டு மாதமாகியும் இந்த கவிதை திரி ஓயாமல்
பறவைகள் போல பறந்து கொண்டே இருகிறதே.
ஆச்சரியம் தான் மனிதனுக்கு விலங்கின் மீது உள்ள பாசம் தெரிகிறது

மனோஜ்
31-07-2007, 01:39 PM
நன்றி லொள்ளுவாத்தியார் இது தொடர்ந்து எழுதுவேன்
தொடர்ந்து வந்து உற்சாகம் தாருங்கள்

சிவா.ஜி
31-07-2007, 01:43 PM
ஒவ்வொரு விலங்கினத்தைப்பற்றியும் இத்தனை அழகாக விரிவாக எப்படித்தான் எழுத முடிகிறதோ? மனோஜ் உண்மையிலேயே அதிசயித்துப்போகிறேன்.பாராட்டுக்கள் மனொஜ்.

அக்னி
31-07-2007, 01:49 PM
ஒவ்வொரு விலங்கினத்தைப்பற்றியும் இத்தனை அழகாக விரிவாக எப்படித்தான் எழுத முடிகிறதோ? மனோஜ் உண்மையிலேயே அதிசயித்துப்போகிறேன்.பாராட்டுக்கள் மனொஜ்.

அதிசயித்துப் போகாதீங்கோ... அடிக்கடி வாங்கோ... :p :p :p

மனோஜ்
31-07-2007, 01:53 PM
நன்றி சிவா தொடர்ந்து வந்து படித்து பாருங்கள்
நன்றி அக்னி

அக்னி
31-07-2007, 01:55 PM
நன்றி சிவா தொடர்ந்து வந்து படித்து பாருங்கள்

சிவா தொடர்ந்து வாசி...
நன்னாருக்கே இது...

சிவா.ஜி
31-07-2007, 01:55 PM
கண்டிப்பாக அதிசயிக்க வருகிறேன் மனோஜ்.

மனோஜ்
31-07-2007, 01:57 PM
வாரம் ஒரு முறை
ஒரு விளங்கு என்று எழுதி வருகிறொன்
நன்றி சிவா தொடர்ந்து வருவதற்கு

மனோஜ்
03-08-2007, 04:24 PM
மான் (http://upload.wikimedia.org/wikipedia/ta/2/20/TrincomaleeDeer.JPG)

நாங்கள் நீரேடையை விரும்புபவர்கள்
அமைதி எங்கள் குணம்
கல்லகபடமற்றவர்கள் என்று சரிந்திரங்கள்
எங்களை என்றும் புகழ்கிறது
பெண்ணுடன் ஒப்பிடுகிறது

அன்புடனும் பன்புடனும் சுத்ததுடனம்
சுத்திவரும் எங்களை
இறையாக்கி இன்பமாய் உண்ணும் விலங்குகளுக்கு
அமைதயே எங்கள் எதிர்ப்பு

பாவபட்ட ஜென்மங்கள் நாங்கள்
எங்களுக்குள் சன்டைகள் வந்தாலும்
ஜென்மத்திலும் பிரிவதில்லை
எங்களை வேட்டையாடி மகிழும் மனிதா
எங்களை பொன்று அமைதியாய் இருக்க பழுகிகோள்

அமரன்
03-08-2007, 04:31 PM
சபாஷ்....மான்வடிவத்தில் மானிடனுக்கு கருத்து விதைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இறுதி ஐந்து வரிகள் நச். அமைதியான எதிர்ப்பு. நல்ல விடயம் சாத்தியமா தெரியவில்லை. "மான்"இயல் சுவை.(மான்கறி போலவே)

ஓவியன்
03-08-2007, 06:21 PM
அழகு!
அமைதி!
வேகம்!

இவை மூன்றும் மானின் சிறப்பியல்புகள்.........!
அவற்றைக் கொண்டு கருத்துச் சொன்ன மனோஜூக்குப் பாராட்டுக்கள்!

சிவா.ஜி
04-08-2007, 04:40 AM
மான் உரைக்கும் மகத்தான உண்மைகளை இந்த மனிதன் உணரும் காலம் எப்போது வரும்.அதன் அமைதியையே அனுமதியாய் எடுத்துக்கொண்டு வேட்டையாடும் மனித மிருகங்கள்.என்னவென்று சொல்ல. வாழ்த்துக்கள் மனோஜ்.

மனோஜ்
12-08-2007, 08:48 AM
அமரன் − நன்றி மான் கருவை கறியாய் சுவைத்ததற்கு
ஓவியன் − அமைதி மானின் குணம் மனிதன் குனம் மாற தந்தது நன்றி
சிவா.ஜி − உணருட்டும் நண்பரே வெகுவிரைவில்

அக்னி
12-08-2007, 01:32 PM
மானின் வேகம், பொறுமை இரண்டையும் முயற்சியால் பெற்றிடலாம் மனிதன்...
இரண்டும் வந்திட்டாலே, அழகாய் ஜொலித்திடலாம்...
பாராட்டுக்கள் மனோஜ்... தொடர வாழ்த்துக்கள்...

மனோஜ்
25-08-2007, 01:52 PM
மானின் வேகம், பொறுமை இரண்டையும் முயற்சியால் பெற்றிடலாம் மனிதன்...
இரண்டும் வந்திட்டாலே, அழகாய் ஜொலித்திடலாம்...
பாராட்டுக்கள் மனோஜ்... தொடர வாழ்த்துக்கள்...
மிக சரியாக சொன்னீர்கள் அக்னி மிக்க நன்றி

மனோஜ்
06-10-2007, 09:41 PM
எலி

எங்கும் காணலாம் என்
சோட்டைகளை வீட்டின்
மூலைகள் என் உறைவிடங்கள்
சுற்றுவேன் ஓடுவோன் உறங்குவேன்

என்னை கண்டால் என் எதிரிக்கு அல்வா
அவனைகண்டால் எனக்கு பீதி
பாய்வேன் பதுங்குவேன்
இந்த விளையாட்டு இன்றைய
குழுந்தையின் இன்ப காட்சிகள்

மனிதா ஒன்றிற்கும்
நான் பயணில்லை ஆனாலும்
என் உருவத்தால் மனிதன்
இன்றைய உலகில் என்னை
இயந்திரம் மாக்கிவிட்டான்
உன்னில் ஒன்றும் இல்லாவிட்டாலும்
ஒரு நாள் பயனலிப்பாய் முன்னோறு.....

மனோஜ்
29-10-2007, 08:33 AM
முயல்
http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4f/Wild_rabbit_us.jpg

அழகு மிக்க எங்களை
அடக்கியாளும் மனிதனே
ஆழுந்து சிந்தித்து பாத்தாயா
அமைதிஎங்கள் வாழ்க்கையே

சுத்தபத்தமாகவே சுற்றத்துடன்
வாழ்ந்த என்னையே
சுத்தமில்லா கூண்டுக்குள்
அடைத்து வைத்த கொடுமையை
அறியநீயும் முயற்சிசெய்

அன்பாய் வந்தால் அடங்குவோம்
எதிர்த்துவந்தால் ஓடுவோம்
இதுவே எங்கள் செய்கையே
இனிமை எங்கள் வாழ்க்கையே

அமரன்
29-10-2007, 08:43 AM
அடக்கி ஆள விழையும்
ஆலமான வினைச் சிந்தனையே
ஆழத்துக்கு இட்டுச் செல்கிறது-உயர்(???!!!)
குலத்தின் உச்சமெனும் மனிதத்தை....

அவர்களுக்கு புரிவிப்பது
முயல்கொம்பாக இருக்கும் போது
முயலே விளம்புவது போல கவி..

சற்று இடைவெளி விட்டு
மனோஜின் கச்சிதமான குட்டு.

உளி இன்னும் பலமாக விழுந்திருக்கலாமோ?

ஓவியன்
29-10-2007, 03:16 PM
முயலார் முயலுகிறார் என்று ஒரு கதையை சிறுவயதில் நாடகமாக்கின்னோம், சிங்கத்தால் துன்புறும் காட்டு மக்களுக்கு விடி கொண்டு வரவென முடிவெடுத்த ஒரு முயலார் சிங்கத்தை கிணற்றினுள் தள்ளும் பாலர் கதையது, மீண்டும் அந்த ஞாபகங்களைக் கிளறியது மனோஜின் முயல் கவிதை....

பாராட்டுக்கள் மனோஜ், சின்ன முயலிடம் மனிதர் நாம் கற்கவேண்டியவை இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளது....! :)

பூமகள்
29-10-2007, 03:34 PM
கழுதை
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை ஏன்?
கற்பூரத்திற்கு தெரியுமா
கழுதையின் யோசனை?

கழுதை அறிவு
குறைவுதான் ஆனால்
குறைவில் நிறைவடைகிறான்.
மனதில் மகிழ்கிறான்
சிலருக்கு உதவுகிறான்
கழுதைக்காக அர்பணித்த கவி..!
மனோஜ் அண்ணாவை பாராட்டியே ஆகவேண்டும்.
எல்லாரும் குறை கூறும் கழுதையும் கூட பளு தூக்க உதவுகிறதே..!!
குறைகளை நிறைகளாக ஆக்கிக் கொண்டவர்களை நினைவுறுத்துகிறது கவிதை..!!
அருமை...!

மனோஜ்
30-10-2007, 08:18 AM
மிக்க நன்றி அமரன் ஓவியன் பூ.......மா

மனோஜ்
17-11-2007, 02:15 PM
அணில்
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/58/Lightmatter_wild_squirrel.jpg

முதுகின் மீது மூன்றுகோடு
முதுமை வரை முயற்சியோடு
துள்ளி துள்ளி ஓடும் நாட்கள்
துரிதாமாக விதையையே
துரிவி துரிவி தின்னவே
இறைவன் படைத்த கைகளே

மரத்தில் விரைவாய் ஏறுவேன்
வீடுகட்டி குட்டியிட்டு வாழுவோன்
இறைவன் தந்த அழுகிய
வாலைகண்டு மகிழ்கிறோன்

எதிரிவந்தால் ஒலியையே
ஓங்கி ஒலித்து ஓடுவேன்
என்னை கானும் மனிதனே
இயற்கையில் வாழ கற்றுகொள்

அமரன்
17-11-2007, 06:00 PM
இவ்விழையில் கவிதை முத்துகளின் தொடர்கோர்வை நடப்பதால் தொடர்கவிதைகளுக்கு மாற்றுகின்றேன்..
==அமரன்

மனோஜ்
19-11-2007, 08:19 AM
மிக்க நன்றி அமரன்

அக்னி
23-11-2007, 11:40 AM
மனிதா ஒன்றிற்கும்
நான் பயணில்லை ஆனாலும்

எலிகள்...
மனித ஆராய்ச்சிகளின் பலி...
மனித நலனுக்காய்,
வாழ்வை அர்ப்பணிக்கும் சிபி...

பாராட்டுக்கள் மனோஜ்...

அக்னி
23-11-2007, 11:44 AM
அழகு மிக்க எங்களை
அடக்கியாளும் மனிதனே

அடக்கி ஆழ மட்டுமா செய்கின்றார்கள்...
சுருக்கிட்டுப் பிடித்து,
புசிக்கவும் செய்கின்றார்கள்...

சுதந்திர முயல்களை
வளர்ப்பிற்கெனப் பிறப்பித்து,
சுதந்திரம் ஆனால்,
மரணம் என்ற நிலையில்
ஆக்கி விட்டதும் மனிதனே...

பாராட்டுக்கள் மனோஜ்...

அக்னி
23-11-2007, 11:47 AM
என்னை கானும் மனிதனே
இயற்கைல் வாழ கற்றுகொள்
இயற்கையை உணர்த்தும் முன்னர்.
உதவும் மனம் காட்டும் பிராணி...

இராமருக்கு அணில் செய்த உதவியாக கூறி நிற்பது,
சிறு உதவியேனும், நிறைந்த மனதோடு செய் என்று...

பாராட்டுக்கள் மனோஜ்...

தொடரட்டும், உங்கள் விலங்குப்பாக்கள்...

மனோஜ்
28-11-2007, 09:26 AM
நன்றி அக்னி தங்களின் ஊக்கத்திற்கு

மனோஜ்
13-12-2007, 06:46 AM
ஒட்டக சிவிங்கி

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/Giraffe-standing.jpg

ஒட்டகச் சிவிங்கி

வயிற்றில் குட்டியுடனே
பதினான்கு மாதங்கள் கடக்குமே

எங்கள் இனம் சிவிங்கி
உண்மையில் சாது தானே
ஆனால் சாவை கண்டு அஞ்சிடோம்

உடல்முழுவதும் புள்ளிகள்
வயிற்றில் மட்டும் வெள்ளையில்
பிறந்த உடன் பால் கொடுப்போம்
எதிர்த்துவரும் துஸ்டனை
காலால் பலி வாங்கிடுவோம்
இலை தழைகளை உண்டாலும்
உலகில் உயரமாய் வளருவோம்

உயர்ந்து வளரும் முன்னரே
ஓடிவரும் துன்பத்தை
கஷ்டப்பட்டு எதிர்த்து
கனிவாய் நாமும் வளருவோம்

உணர்ந்து கெள்ளு மனிதனே
வாழ்வில் உயர்வு கடினமே
கனிவாய் நீயும் எதிர்த்துமே
வாழ்வில் என்றும் உயர்ந்திடு

மனோஜ்
07-01-2008, 03:02 PM
ஓநாய்
http://upload.wikimedia.org/wikipedia/ta/0/02/GrayWolf2.jpg
ஓநாய்

ஓடினாலும் தாவினாலும்
ஒருமனதாய் ஒன்றாய்கூடி
ஒன்றுசேர தாக்குவொம்
ஒற்றுமை எங்கள் சாதியே

குட்டியிட்டு பாலுட்டியாக
வாழ்ந்து செழிக்கும் எங்களை
வாழ வழி காட்டு பகுதி
நாட்டுபகுதி சென்றாலே
நாடிவரும் எதிர்ப்புதான்

காட்டின் வளம் நாங்களே
பசிக்காக செய்திடும்
பாழும் படுகொலைகள்
நாட்டில் வாழும் மனிதனே
நீயும் இதையும் செய்கிறாய்
உனக்கும் எனக்கும்
வித்தியாசம் எள்ளளவும் இல்லையே

ஆர்.ஈஸ்வரன்
09-01-2008, 10:49 AM
காட்டின் வளம் நாங்களே
எப்படி. ஆட்டுக்குட்டிகளை தின்றுவிடுமே.