PDA

View Full Version : நிர்வாக குழுவில் புதுவரவு



இராசகுமாரன்
07-05-2007, 11:01 AM
இனியவர்களே,

இன்று (07/மே/2007) முதல் நமது தமிழ் மன்றத்தின் நிர்வாக குழுவில் இன்னொரு இலை துளிர்த்துள்ளது.

அது உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமான "நவரசகக் கவிஞன்" என்னும் நமது தமிழ் மன்றத்து இளங் கன்று, ஆதவன்.

மன்றத்து நிர்வாக உறுப்பினர்கள் பலர் விடுப்பில் உள்ளபடியாலும், ஊக்கமுள்ள ஒரு உறுப்பினரை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் நிர்வாக ஆலோசகர்களின் ஆலோசனைப் படி இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

அவர் ஈடுபடும் நிர்வாக பணியில் அவருக்கு உங்கள் உதவிகளை தாராளமாக செய்யவும். (இனி பயம் வேண்டாம்.. ஐ-கேஷ் கொடுங்கள் என்று மிரட்ட மாட்டார் என நம்புவோம்).

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!!!

இராசகுமாரன்

மனோஜ்
07-05-2007, 11:07 AM
வாழ்த்துக்கள் ஆதவா
நன்றி இராசகுமாரன் அண்ணா
சரியான நிர்வாகிதான் தேர்தேடுத்துள்ளீர்கள்

இணைய நண்பன்
07-05-2007, 11:09 AM
அன்பின் இராசகுமாரன் அவர்களே உங்கள் புது ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது.ஆதவன் அவர்களை நிர்வாக உறுப்பினராக அன்புடன் வரவேற்கிறோம்.

ஷீ-நிசி
07-05-2007, 11:09 AM
வாழ்த்துக்கள் ஆதவா.... கடினமான பணிதான்.. சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்!

ஓவியன்
07-05-2007, 11:14 AM
ஆகா!

கேட்கவே காதில் தேன் பாய்கிறதே........

எனதருமைக் காவியன் இன்று பதவியேற்கிறாரா?

அவரது இந்த அவதாரமும் வெற்றி நடை போடட்டும் இந்த மன்றிலே.

ஓவியன்
07-05-2007, 11:17 AM
இந்த சந்தோசமான தருணத்தில் ஆதவாவின் மிரட்டலுக்குப் பயந்து(சும்மா ஜாலிக்காக, ஒரு பொய்) அவருக்கு 100 பணம் வெகுமதியாகக் கொடுக்கிறான் இந்த ஓவியன்.

அன்புரசிகன்
07-05-2007, 11:20 AM
அடுத்த மேற்பார்வையாளருக்கு எனது வாழ்த்துக்கள்.

அக்னி
07-05-2007, 11:50 AM
எழுத்தாளராக மன்றில் புகழ் பெற்ற நீங்கள், மேற்பார்வையாளராக இன்னமும் சிறப்புப் பெற வாழ்த்துக்கள்...

"என் கடன் பணி செய்து கிடப்பதே"
என்ற தாரக மந்திரத்திற்கேற்ப, மன்றத்தில் சேவை செய்யும் மற்றோருடன், உங்கள் இணைவும் ஒரு புத்துணர்ச்சியாக மன்றத்திற்குப் பயன்பட வாழ்த்துகின்றேன்...

ராஜா
07-05-2007, 11:53 AM
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்..

பொருத்தமான தேர்வு. வாழ்த்துகள் ஆதவா..!

crisho
07-05-2007, 12:20 PM
வாழ்த்துக்கள் ஆதவா!!

உம் தொண்டு சிறக்கட்டும்..... :thumbsup:

mania
07-05-2007, 12:27 PM
வாழ்த்துகள் ஆதவா...!!!:4_1_8:
அன்புடன்
மணியா...

பாரதி
07-05-2007, 12:56 PM
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதவா..!

சுட்டிபையன்
07-05-2007, 01:12 PM
ஆஹா வாழ்த்துக்கள் ஆதவன்

இனியவர்களே,

. (இனி பயம் வேண்டாம்.. ஐ-கேஷ் கொடுங்கள் என்று மிரட்ட மாட்டார் என நம்புவோம்).



ஆனால் இந்த சுட்டியை வெருட்டுறாரே இந்த வெருட்டி தனது கையொப்பத்தில் வேறு வெருட்டுறாரு:1:

ஆதவா
07-05-2007, 01:51 PM
வணக்கம்.
நான் ஆதவன்,.. புது நிர்வாக உறுப்பினன்.

மன்றம் ஒரு வீடு என்பதை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். சில நேரங்களில் இந்த வீட்டின் தூணாக நாம்
தாங்கும் நிலை வர நேரும்.. நம்மை வளர்த்த நம் வீட்டிற்கு நாம் தூணாக இருக்க வேண்டாமா? ஆம்.. நிச்சயம்
வேண்டும். டிசம்பர் 15 ஆம் தேதி என் பதிவுகள் ஆரம்பித்தது.. முதன் முதலில் என்னை வரவேற்றவர் மீரா என்ற
சகோதரி. பிறகு அன்றிருந்த எல்லாருமே... மிகச் சாதாரணமாக எதுவும் எதிர்பாராமல் உள்ளே நுழைந்தேன்.
கவிதைக்கு இடும் பின்னூட்டங்கள் கண்டு மேலும் எழுதி நல்ல பேர் வாங்கவேண்டும் என்ற துடிப்பு இருந்தது..
அது மட்டும் தான் இருந்தது.

அறிஞர் என்ற மேற்பார்வையாளர் (அன்று) என்னை ஆரம்பம் முதல் கவனித்தார்.. என்னை மட்டுமல்ல
எல்லாரையும் தான். முதல் தனிமடல் எனக்கு அவரிடமிருந்து.. பாராட்டு மடல். முதல் ஊக்கம்.. தனிப்பட்ட
ஊக்கம். குளிர்ந்த விஷயங்கள் பல.. தனிமடல் எனக்கு அதிகம் வந்திருக்கும் என்றால் அது அறிஞரிடம்
இருந்துதான். பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் நான் பாட்டுக்கு ஏதாவது எழுதிவிட்டு வந்துவிடுவேன். அப்போதே
சில விஷயங்களுக்கு எதிர்ப்பும் ஆதரவும்.. மெல்ல எல்லாருமே அறிமுகமானார்கள்.

இராசகுமாரன் தலைவர்... பல நாட்களாக எனக்குத் தெரியாமலே இருந்தவர்... கம்ப்யூட்டரை இயக்கும்
ப்ராசசர் போல.... பின்புலமாக பல மன்ற வேலைகள் நடத்தியவர்... மன்றத்தின் தோற்றத்திற்கும், மன்றத்தின்
புதுமைக்கும். காரணமான தலைவருக்கு நன்றி சொல்லாவிடில் மனம் ஆறாது. ஒரு மன்றத்தினை மிக அழகாக
இயக்குவது சுலப காரியமல்ல.. எத்தனை பிரச்சனைகள்... செர்வர், விபி போன்ற பணம் செலுத்தும்
பிரச்சனைகள் இருந்தும் நமக்காக தோள்கொடுக்கும் தலைமை நிர்வாகி... வேலைப் பளுவினால் பல முறைகள்
வராமல் போனாலும் அவர் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் நடக்கும் என்பது தெளிவு..

அறிஞர் முன்பே இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியம்... என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, பற்று அன்பு
எல்லாம் எவ்வளவு உண்மை பாருங்கள். உண்மையில் மன்றத்தில் மறக்க முடியாத மனிதர் அறிஞர். எனக்காக
பெயரை பரிந்துரை செய்த அறிஞருக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இளசு அண்ணா... வேண்டாம் மக்களே... அண்ணலைப் பற்றி சொன்னால் உண்மையில் இன்னொரு திரிதான்
போடவேண்டும். அத்தனை இருக்கிறது.

இந்த சமயத்தில் ஓவியா அக்காவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. எத்தனையோ பேருக்கு
வழிகாட்டுதலாக இருப்பது மட்டுமல்லாமல் இன்றைய ஆதவன் வழி பிறழாமல் இருந்தமை முற்றிலும்
அக்காவையே சாரும். எங்காவது ஒரு தவறு நிகழ்ந்திருக்க எழுதியிருப்பேன். தக்க சமயத்தில் மடலனுப்பி
காப்பாற்றுவார்.. ஒரு நிலைக்கு என்னை அனுப்பிய பெருமை இவர்களையே சாரும். மன்றத்தில் பல முக்கிய
பதிவுகள் பதில்கள் சிறந்த பதிவுகள் நிறைய கொடுத்திருக்கிறார். அதெல்லாவற்றையும்விட மிகச் சிறந்த
வழிகாட்டியாகவும் இருக்கிறார்....

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள்.... மாதம் 600 பதிவுகள் கொடுத்ததில் ஒரு அர்த்தம் இன்று உணருகிறேன்.
எனக்கு ஊக்கமிட்ட, பதிவுகளைப் பார்வையிட்ட மன்றத்தின் மூவாயிரம் பதிவர்களுக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

பலரைப் பற்றி பல முறை சொல்லிவிட்டமையால் தவிர்க்கப்பட்ட பெயர்களுக்கு நான் வருந்துகிறேன்.

சுட்டிபையன்
07-05-2007, 02:01 PM
புதிய மேற்பார்வையாளரை பாரட்டுவதற்க்காகவும் அவரை ஊக்கிவிப்பதற்க்காகவும் அவருக்கு என்னிடமிருந்த 3000 பணத்தை அன்பளிப்பாகக் கொடுக்கிண்றேன், ஹீ ஹீ வெருட்டலுகு பயந்து போட்டம் :D

ஆதவா
07-05-2007, 02:04 PM
அடடே சுட்டிப்பையரே!! அது சும்மா வெளையாட்டுக்கு எழுதினது... இருந்தாலும் நீர் கொடை வள்ளல்.... சரி சரி... அதை உமக்கே தந்துவிடுகிறேன். பாதியாக.. நல்ல பதிவுகள் என்று தோன்றினால் அள்ளி இறையுங்கள்.... ஊக்கத்திற்குக் குறைவின்றி இருக்கணும்

pradeepkt
07-05-2007, 02:05 PM
ஆதவா,
என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மன்றத்தின் இன்னொரு தூணாக என்றென்றும் கலந்திருக்க வாழ்த்துகள்.

சுட்டிபையன்
07-05-2007, 02:06 PM
உங்கள் கவிதைக்கு கொடுப்பதென்றால் 30000 பணமே பத்தாது தலைவா :D

சக்தி
07-05-2007, 02:10 PM
வாங்க தல

இது வரைக்கும் சும்மாவே மிரட்டீட்டுருந்திங்க இப்ப தடி வேற கொடுத்துட்டாங்க. இனி நம்ம பாடு திண்டாட்டம் தான். வாழ்த்துக்கள் தல சும்மா வெளுத்துக் கட்டுங்க.

சுட்டிபையன்
07-05-2007, 02:12 PM
அட தலை 1500ஐ திருப்ப கொடுத்து விட்டீர்களா

அறிஞர்
07-05-2007, 02:33 PM
வாழ்த்துக்கள் ஆதவா...

என் நம்பிக்கைகுரிய தம்பி நிர்வாக குழுவில் இணைவது... மிக்க மகிழ்ச்சி..

தங்களின் பதிவுகள் மன்றத்தை இன்னும் சிறப்பான நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

உம் முயற்சிகள் தொடர்ந்து வெற்றியை கொண்டு வரட்டும்.

leomohan
07-05-2007, 03:22 PM
இனியவர்களே,

இன்று (07/மே/2007) முதல் நமது தமிழ் மன்றத்தின் நிர்வாக குழுவில் இன்னொரு இலை துளிர்த்துள்ளது.

அது உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமான "நவரசகக் கவிஞன்" என்னும் நமது தமிழ் மன்றத்து இளங் கன்று, ஆதவன்.

மன்றத்து நிர்வாக உறுப்பினர்கள் பலர் விடுப்பில் உள்ளபடியாலும், ஊக்கமுள்ள ஒரு உறுப்பினரை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் நிர்வாக ஆலோசகர்களின் ஆலோசனைப் படி இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

அவர் ஈடுபடும் நிர்வாக பணியில் அவருக்கு உங்கள் உதவிகளை தாராளமாக செய்யவும். (இனி பயம் வேண்டாம்.. ஐ-கேஷ் கொடுங்கள் என்று மிரட்ட மாட்டார் என நம்புவோம்).

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!!!

இராசகுமாரன்

ஆஹா, அருமையான தேர்வு, இளம் வயதில் பக்குவம் கொண்ட மனிதர். அனைவரையும் அனுசரித்து செல்வர். தமிழின் மேல் பற்றுக் கொண்டவர்.

வாழ்த்துகள் ஆதவன்.

ஆதவா
07-05-2007, 03:49 PM
நன்றி அறிஞரே! என் மீதுள்ள முழு நம்பிக்கைக்கு பங்கமிருக்காது,.

மோகன்... நேற்று சொன்னீர்கள்... இன்று நடந்துவிட்டது.... உங்கள் வாய்முகூர்த்தம் எப்படி நடக்கிறது பாருங்கள்.. நன்றி

Mano.G.
07-05-2007, 03:50 PM
நமது தமிழ் மன்றம் ஒரு முத்து மாலை போல
ஒவ்வொன்றாக தரம்பார்த்து சேர்க்கப்படும் முத்துக்களை
போல மற்றுமொரு அருமையான முத்து
இந்த சுடாமல் சுட்டெரிக்கும் ஆதவன்

"கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே"
எனும் கூற்றுப்போல

பலன் உன்னை தானாக தேடி வந்துள்ளதற்கு

மனமார்ந்த வாழ்த்துக்கள்

மனோ.ஜி

ஆதவா
07-05-2007, 04:07 PM
ஆம் மனோ அண்ணா.. நான் எதிர்பார்த்தது வெறும் பின்னூட்டங்கள்.. ஆனால் கிடைத்தது மகுடம்.. உழைப்பு ஒன்றுதான் ஊதியம் தரும்...

உங்கள் வரிகள் வயிரம்

ஜெயாஸ்தா
07-05-2007, 04:54 PM
சுறுசுறுப்பான ஆதவனுக்கு உளம் கனிந்த நல்வாழத்துக்கள்.

mukilan
08-05-2007, 12:47 AM
மனங்கனிந்த பாராட்டுக்களும் தொடர்ந்த ஒத்துழைப்பும் உங்களுக்கு ஆதவன்.

poo
08-05-2007, 05:21 AM
வாழ்த்துக்கள் ஆதவன்.. சரியான நேரத்தில் கிடைத்துள்ள கௌரவம்..

அரசன்
08-05-2007, 05:27 AM
வாழ்த்துக்கள் ஆதவா. சரியான தேர்விற்கு ராசகுமாரண்ணாவிற்கு நன்றி.

ஆதவனின் ஒளி தேசமெங்கும்(தமிழ் மன்றம்தான்) வீசட்டும்.

:icon_drunk: :icon_drunk: :icon_drunk:

ஆதவா
08-05-2007, 05:36 AM
நன்றி ஜே.எம். முகிலன் அண்ணா, பூ அண்ணா, மூர்த்தி

உங்கள் ஆதரவு என்றும் தேவை

aren
08-05-2007, 05:47 AM
வாருங்கள் ஆதவா. உங்களை மேற்பார்வையாளர் குழுவில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மதி
08-05-2007, 06:20 AM
ஆதவா..
முதலில் பிடியுங்கள் என் வாழ்த்துக்களை..
மன்றம் வந்த நாள் முதலாய் மன்றத்தோடு ஒன்றி பலவகையான படைப்புக்களையும் பதிவுகளையும் கொடுத்துள்ளீர்கள்.. உங்களை நிர்வாகக் குழுவில் சேர்த்தது சரியான தேர்வு.
மன்றத்தில் தங்கள் பணியினை செவ்வனே புரிய என்றென்றும் உறுதுணையாக இருப்போம்..!

franklinraja
08-05-2007, 08:16 AM
வாழ்த்துக்கள் ஆதவா... :)

paarthiban
08-05-2007, 11:21 AM
வாழ்த்துக்கள் ஆதவா அவர்களே

மதுரகன்
08-05-2007, 07:38 PM
ஐயோ எனக்கு தெரியாதே..
எத்தனைபேர் வாழ்த்தியிருந்தாலும் அதற்கு முதல் வாழ்த்து ஆதவா..

ஆதவா
10-05-2007, 11:40 AM
மீண்டும் வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி... உங்கள் பேராதரவில் தானே எனக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது... உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு ஒன்றே எனக்குப் போதுமானது...

நன்றி நன்றி நன்றி...

மன்மதன்
10-05-2007, 03:29 PM
ஆதவருக்கே வாழ்த்தா?? அனைவரையும் வாழ்த்தும் உள்ளமே... வருக வருக.. உங்கள் சேவையை மன்ற உறவுகளுக்கு தருக!!

ஓவியா
10-05-2007, 04:23 PM
அன்னைத்தமிழுக்கு தொண்டு புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதவா. :icon_give_rose: :icon_give_rose:

இளசு
07-06-2007, 11:35 PM
இனிய இளவல் ஆதவனுக்கு வாழ்த்துகளும் அண்ணனின் அன்பான ஆதரவும்...

ஆழ்ந்த ஈடுபாடு, ஆற்றலான பங்களிப்பு, மாறா மன்றப்பாசம் கொண்ட
ஆதவனுக்கு தக்க நேரத்தில் அளிக்கப்பட்ட அங்கீகாரம்..
தலைவருக்கும் அறிஞருக்கும் நன்றியும் பாராட்டுகளும்...

ஆதவா
08-06-2007, 03:43 AM
மன்மதன், ஓவியா, இளசு அண்ணா எல்லாருக்கும் எனது நன்றிகள் பல. நீங்களே எல்லா வகையிலும் இந்த உயர்வுக்கு காரணமாகிறீர்கள்..

கண்மணி
08-06-2007, 04:16 AM
வாழ்த்துக்கள் ஆதவரே!

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா!
பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேந்தும் தோழா!

இந்தப் பாடல் உங்கள் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கட்டும்.:icon_shades:

ஷீ-நிசி
08-06-2007, 04:54 AM
எமது எழுத்துக்கள்
ஏங்குகிறது
இளமையின்
பார்வைக்கு...
-----------------------

எழுத்துக்களின் பக்கம்
என் பார்வையைத் திரும்பவிடு
எத்தனை நாள்தான்
உன் முகத்தையே
பார்த்துக் கொண்டிருப்பது?

கண்மனி, கவிதைகளை பதிக்கும்போது அதற்கென உரிய இடத்தில் பதியுங்கள்.. மேற்பார்வையாளர்களே இத்திரியை இடம் மாற்றிவிடுங்கள்!