PDA

View Full Version : முற்கள்..!



ஆதவா
07-05-2007, 08:51 AM
வெறும்
முற்களுக்குப் பயந்து
பாதையில்
பாதம் இடாமலிருக்கலாமா?.

ஓவியன்
07-05-2007, 08:55 AM
வெறும்
முற்களுக்குப் பயந்து
பாதையில்
பாதம் இடாமலிருக்கலாமா?

உண்மைதான் ஆதவா!
முள்லிருந்தாலென்ன, கல்லிருந்தாலென்ன இலட்சியப் பயணங்கள் என்றுமே தடைப்படாது.

அவை தடைகளாலும் தடங்கல்களாலும் மேன் மேலும் வலுப்பெறும்-இது நான் நேரே பார்த்து அறிந்த உண்மை

ஷீ-நிசி
07-05-2007, 08:57 AM
வெறும்
முற்களுக்குப் பயந்து
பாதையில்
பாதம் இடாமலிருக்கலாமா?
...
கவித்துவமான வரிகள்தான், உண்மைதான் ஆதவா...

ஆதவா
07-05-2007, 08:58 AM
நன்றி ஓவியன்... இது கடலில் கல்லெறியும் மானிடர்களுக்குண்டான கவிதை... ஈசனே நினைத்தாலும் பூமியைத் திருப்பமுடியாது...

ஆதவா
07-05-2007, 08:58 AM
ஆம் ஷீ!! உங்களுக்குத் தெரியாததா?... நன்றி

மனோஜ்
07-05-2007, 09:32 AM
பாதையில் முற்கள் இல்லாவிட்டால் சாதிப்பதில் அர்த்தமில்லையே ஆதவா

ஆதவா
07-05-2007, 07:04 PM
ஹி ஹி... நிசம்தான்....

தாமரை
08-05-2007, 03:30 AM
வெறும்
முற்களுக்குப் பயந்து
பாதையில்
பாதம் இடாமலிருக்கலாமா?

முயற்சிகள் உடைபட்டு சிதறினால்
மிஞ்சுவது முற்கள்...
நெஞ்சில் குத்தி....

ஆதவா
08-05-2007, 04:21 AM
நெஞ்சில் குத்தும் முற்களோடு
போராடுவதில் சுகமில்லை....
வீரமில்லை.
அது சவாலுமில்லை.

அரசன்
08-05-2007, 04:22 AM
வெறும்
முற்களுக்குப் பயந்து
பாதையில்
பாதம் இடாமலிருக்கலாமா?

உண்மைதான். முட்களைப் பார்த்து ரோஜாவை ரசிக்காமலா இருக்க முடியும்

ஆதவா
08-05-2007, 04:23 AM
இந்த கோணமும் அருமைதான்... நன்றி மூர்த்தி.

தாமரை
08-05-2007, 06:32 AM
நெஞ்சில் குத்தும் முற்களோடு
போராடுவதில் சுகமில்லை..
வீரமில்லை.
அது சவாலுமில்லை.


சந்தோஷப்படுங்கள்
முற்களாவது
நெஞ்சில் குத்துகின்றன..

சில மனிதர்கள்........

ஆதவா
08-05-2007, 07:44 AM
சந்தோஷப்படுங்கள்
முற்களாவது
நெஞ்சில் குத்துகின்றன..

சில மனிதர்கள்......

நெஞ்சு பொறுப்பதில்லை
இனி
அஞ்சுதல் வேண்டாம்....

அமரன்
17-07-2007, 12:01 PM
முட்கள் இருப்பதே கவனம் கவனத்தையும்,கனத்தையும் கூட்டவன்றோ...அருமை ஆதவா..


சந்தோஷப்படுங்கள்
முற்களாவது
நெஞ்சில் குத்துகின்றன..
சில மனிதர்கள்......

ம்...ம்...முதுகில் குத்தும் மனிதர்களை விட நெஞ்சில் குத்தும் முடகள் மேல்தான்...அருமை அண்ணா