PDA

View Full Version : சில.....



ஆதவா
07-05-2007, 08:50 AM
அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்...
:music-smiley-012:

ஓவியன்
07-05-2007, 08:52 AM
அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்.
:music-smiley-012:

மனதை உறுத்தும் ஒரு முரண்!

உண்மைகள் எப்போதும் கூர்மையானது ஆதவா!

ஆதவா
07-05-2007, 08:53 AM
உடனடி பதிலுக்கு நன்றியும் ஆர்வமிகுந்த ஆச்சரியுமும்....

ஷீ-நிசி
07-05-2007, 08:54 AM
ஆதவா.. முரண் கவிதையா... ரசித்தேன்....

மனோஜ்
07-05-2007, 09:30 AM
மிக அருமை ஆதவா

ஷீ-நிசி
07-05-2007, 09:49 AM
எழுத்துப்பிழைகளை திருத்தியதற்கு நன்றி மனோஜ்

ஆதவா
07-05-2007, 09:57 AM
மனோஜ்.. என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலை என்றாலும் நன்றி...

தாமரை
08-05-2007, 03:35 AM
மஹா அலெக்ஸாண்டரையும், ராஜ ராஜ சோழனையும் வைத்தா சொல்கிறீர்கள்?

வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்


கொல்லப்பட்டது வெற்றிபெற்றவர்களா
இல்லை வெல்லப்பட்டவர்களா?

அலெக்ஸாண்டரும் புருஷோத்தமரும் போரிட்டனர். அலெக்ஸாண்டர் வென்றார். அப்போ வென்றவர் அலெக்ஸாண்டர். அவரை கொன்றார்களா? இல்லை...

வெற்றிபெற்றது அலெக்ஸாண்டர். அவர் வென்றது புருஷோத்தமரை. அலெக்ஸாண்டர் தாம் வென்றவரை கொன்றாரா?

ஆதவா
08-05-2007, 04:19 AM
இல்லை அண்ணா... நான் அந்தகாலத்திற்கே செல்லவில்லை...

என் உதாரணம் : அன்றைய அரசியல் வாதியான மோகந்தாஸ் காந்தியும் இன்றைய அரசியல்வாதிகளும்...

நன்றி அண்ணா

இனியவள்
08-06-2007, 09:35 AM
அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்.
:music-smiley-012:

வெல்வதற்கென்றே கொன்றார்கள் வென்று விட்டார்கள் ஆதவா
கவிதையின் கருத்து நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

இணைய நண்பன்
08-06-2007, 09:45 AM
சில....சிலவரிகள் என்றாலும் ஆழமான கருத்து.நன்றி

அறிஞர்
08-06-2007, 02:02 PM
தற்காலத்திலும் இது போன்ற சம்பவங்களை நினைவுகூறவைக்கிறது...

அமெரிக்கா வென்ற கதைதான் என் நினைவுக்கு வருகிறது....

வாழ்த்துக்கள் ஆதவா..

ஓவியா
08-06-2007, 03:06 PM
அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்.
:music-smiley-012:

என்ன அழகான வார்த்தை விளையாட்டு, நவரசக்கவியே சபாஷ்

கவிதையே ஆதவனை பாராட்டும்.

நன்று ஆதவா.


தமரையண்ணாவின் பின்னூட்டம் அருமை.

இளசு
08-06-2007, 11:40 PM
லிங்க்கனும் காந்தியும்
சித்துவும் சிபுசோரனும்
மனதில் வந்து போனார்கள் ஆதவா......

குறைந்தபட்சம் கொள்ளை வழக்குகள் இருந்தால்
இந்தப் பாடாவதி தேர்தல்களில் வெல்ல முடியும்
என்பதற்கு மாயாவதிகளே சாட்சி!

அண்மையில் இவர் மீதான சிபிஐ வழக்கே தோற்றுப்போனது!

ஆதவா
09-06-2007, 03:25 AM
அனைவருக்கும் எனது நன்றிகள். இளசு அண்ணாவின் உளி இப்போது மீண்டும் சிலை செதுக்க வந்திருக்கிறது... அண்ணா.. உங்களுக்காக என் எழுத்துக்கள் காத்துக் கிடக்கின்றன...

நன்றி நண்பர்களே!

சிவா.ஜி
09-06-2007, 04:41 AM
சில வரிகளில் பல சிந்தனை. ஆதவனுக்கு அருகில் ஏன் போக முடிவதில்லை என்று இப்போதுதான் தெரிகிறது.பாராட்டுக்கள் என்ற வார்த்தையை கணிணியின் நினைவில் இட்டு அடிக்கடி ஆதவனுக்கு அர்பணிக்க வேண்டியதுதான்.

ஆதவா
09-06-2007, 05:54 AM
அப்படியெல்லாம் இல்லிங்க சிவா. நினைவுக்கு வருவதை எழுதுகிறோம்.. இதில் நெருங்கும் அளவுக்கு எழுதிவிடவில்லை... நீங்கள் என்னோடே பயணித்து வருகிறீர்கள்.. நாம் இலக்கை அடைந்து கொண்டிருக்கிறோம்.. அவ்வளவுதான்...
நன்றிங்க.

இதயம்
09-06-2007, 06:00 AM
உட்கருத்து பொதிந்த தெளிவான சிந்தனையுடன் கூடிய உங்கள் கவிதை முரண்பாடான நிகழ்வை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆதவனுக்கு வெளிச்சம் ஒன்றும் புதிதில்லையே..!

ஆதவா
09-06-2007, 06:01 AM
இதயம் தொடுகிறீர்கள்.. நன்றி....