PDA

View Full Version : உறக்கம் தொலைத்த இரவுகளில்



umakarthick
07-05-2007, 08:27 AM
இந்த பிரிவில் என் கவிதைகளை இடுகிறேன் படியுங்கள்...

இவையாவும் என் உறக்கம் தொலைத்த இரவுகளில் எழுதியவை.....



எதை வைத்து நியாபகம் கொள்வது?



ஆபாச படம் பார்க்கப் போய்
பாம்பு தீண்டி இறந்த போன சீனிவாசன்

அடக்க முடியாமல் வகுப்பிலேயே
ரீசஸ் போன பிரபா

முழுத்தேர்வில் காப்பி அடித்து
மாட்டிய கிருஷ்ணன்

என்று ஒவ்வொருவரையும் ஒரு
சம்பவத்தை வைத்து நியாபக படுத்திக் கொள்கிறேன்

என்னை எல்லாரும் எந்த சம்பவத்தை வைத்து
நியாபக படுத்திக் கொள்வார்கள்??

சேக்முகமதுவை சாக்கடையில் தள்ளிவிட்டதை வைத்தா?

இல்லை.... நித்யாவுக்கு கடிதம் கொடுத்ததை வைத்தா?

umakarthick
07-05-2007, 08:28 AM
இரவில் மின்சாரம் தடைபடும்

கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்

தவளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்

குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்

தூங்கிப் போன பின்னரவில்

திடீரென வரும் மின்சாரம்

முழிப்பு தட்டிய நிமிடங்களில்

நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியே

தெருவை பார்க்கும் போது

யாருமில்லாமல் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை!

umakarthick
07-05-2007, 08:30 AM
வலி & கார்த்திகை மாதம்:
1.வலி:

அக்கா பையனின் முதல் பிறந்த நாளுக்கு
எல்லா வேலைகளையும் ஓடியாடி
செய்து கொண்டிருந்த போது அவசரமாய்
அம்மா தனியாக அழைத்து
ஐமபது ரூபாய் நோட்டை கையில் திணித்து
குழந்தைக்கு கொடுக்கச் சொன்ன போது
உறுத்தியது வேலையின்மையின் வலி.


2. கார்த்திகை மாதம்:



ஓவ்வொரு நாளும் அலுவலகத்திலிருந்து
தாமதாக கிளம்பி வீட்டிற்க்கு போகும் வழியில்
அந்த நாயை சந்திக்க நேரிடும்
என் செருப்பு சத்ததிற்கு விருட்டென்று
எழுந்து குரைக்க ஆரம்பிக்கும்
சில நாட்கள் இருந்த இடத்தில் இருந்தே
சில நாட்கள் காலருகில் வந்தும்
என் செருப்பு சத்தமும்,அதன் குரைப்பும்
பழகி விட்டது இருவருக்கும்.
நேற்றும் வழக்கம் போல் அந்த
பாதையை கடந்த என்னை பார்த்தும்
பார்க்காத மாதிரி ஓடிப் போனது
அந்த நாய்க்கூட்டத்தின் பின்னால்.

umakarthick
07-05-2007, 08:32 AM
கவிதை என்றால் எனக்கு உயிர்
கவிதை என்றால் எனக்கு உயிர்

என் இளம் வயதில் இருந்தே கவிதை எழுதுவது கதைகள் படிப்பதில் மிக ஆர்வமுண்டு...


ஆதலால் கவிதைகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன் அவைகளை சேகரிக்கவும் ஆரம்பித்தேன். பெரும்பாலான
கவிதைகளை என் மனதில் சிலவற்றை என் டைரிகளில்..


கற்பனை கவிதைகள் எழுதும் காலம் போய் தற்போது கவிதைகள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் இருந்து தான் எடுத்தாளப்படுகிறது.

உதாரணத்துக்கு கவிதையை எழுதுவதை பற்றிய ஒரு கவிதை

" கவிதை எழுத பேராற்றல் வேண்டும்
இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை
கவிதை உன்னில் என்னில் ஏன் நம் மூச்சு காற்றில் கூட
கலந்திருக்கிறது .."

என்ற கவிதை தான் எனக்கு நியாபகம் வருகிறது.


கவிதையை பற்றிய வரையரைகள் நிறைய உண்டு. உதாரணத்திற்க்கு இங்கே சில வரையரைகள் & கவிதைகள் :-


கற்பனைகளின் கபடி விளையாட்டு என்பதற்க்கு.....

" நிலா தட்டு நட்சத்திர சோறு ,

கைகழுவ கடல், கைத்துடைக்க மேகம்,

கனவின் விழிப்பில் கக்கத்தில் நீ. "


உணர்ச்சிகளின் ஊற்று என்பதற்க்கு....

"இத வலி எனக்கு பிடித்திருக்கிறது

காரணம்

இது நீ தந்தது !"


உவமைகளை உருக்கி செய்தது என்பதற்க்கு.......

" நிறை மாத கர்ப்பிணியாய்

நின்று நின்று நகரும் பேருந்து

அதில் வாழ்வின் உபரியாய் ஒரு கிழவன் ."


யதார்த்தத்தை சொல்லும்....

" நெடுநாள் கழித்து

சொந்த ஊருக்கு செல்பவர்கள்

சின்னதாகி போன

பால்ய வயதின் சட்டைக்குள்

வளந்த உடலுடன் நுழைகிறார்கள். "



கல்லூரி காலங்களில் கல்லூரியில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளில் என் கவிதைகள் இடம்பெற்றுள்ளன...

ஒரு கட்டத்தில் எனக்கு கவிதை எல்லாம் எழுத வராது என அறிந்து கொண்டேன் அதற்கு பின்னர் கவிதைகளை படிப்பதோடும் பரிமாறிக்கொள்வதோடும் நிறுத்தி கொண்டேன்.

உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா.............?. எனக்கு இன்ஃபோசிஸ்-ல் வேலை கிடைக்கவே
நேர்முக தேர்வில் நான் எழுதிய கவிதை தான் காரணம்!!!!!!


இன்ஃபோசிஸ் இன்டெர்வியூவில் கலந்து கொள்வதற்கு முன்னால் எப்படியோ தெரியாது ஆனால் அதற்கு பிறகு கவிதை என் வாழ்வில் இருந்து பிரிக்க முடியா ஒரு அங்கமாகி விட்டது......



நன்றி இன்ஃபோசிஸ்க்கும், கவிதைகளுக்கும்...!!

ஓவியன்
07-05-2007, 08:33 AM
உங்கள் முதல் கவிதையை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை, இரண்டாவது அருமையாக உள்ளது - பாராட்டுக்கள்.


இரவில் மின்சாரம் தடைபடும்
கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்
தவளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்
குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்
தூங்கிப் போன பின்னரவில்
திடீரென வரும் மின்சாரம்
முழிப்பு தட்டிய நிமிடங்களில்
நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியே
தெருவை பார்க்கும் போது
யாருமில்லாமல் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை!

பாம்பை வம்புக்கு இழுக்கும் தவளைகள் - ரொம்ப ரசித்தேன் கார்த்திக்.
அழகான சிந்தனை, தெளிவான நடை வாழ்த்துக்கள் நண்பரே!!

umakarthick
07-05-2007, 08:41 AM
நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்
ஆழ்ந்து படியுங்கள் புரியும் , பிடிக்கும்

அதாவது ஒவ்வொரு நண்பரையும் ஒரு சம்பவத்தை வைத்து நியாபகம் வைத்து கொள்கிறோம்..மற்ற நண்பர்கள் நம்மை எந்த சம்பவங்களை வைத்து
நியாபகம் வைத்துக் கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு ..அதே இங்கே கவிதையாய்


விளங்குதா?

ஆதவா
07-05-2007, 08:43 AM
அக்கா பையனின் முதல் பிறந்த நாளுக்கு
எல்லா வேலைகளையும் ஓடியாடி
செய்து கொண்டிருந்த போது அவசரமாய்
அம்மா தனியாக அழைத்து
ஐமபது ரூபாய் நோட்டை கையில் திணித்து
குழந்தைக்கு கொடுக்கச் சொன்ன போது
உறுத்தியது வேலையின்மையின் வலி.


இந்த கவிதை தங்களுடையதா? ஏதாவது பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கிறதா....?

விமர்சனங்கள் பிறகு செய்கிறேன் நண்பரே!

umakarthick
08-05-2007, 06:34 AM
ஆமா என்னுடைவ்யே நம்ப மாட்டீங்களா என் பிளாக் பாருங்க

poo
08-05-2007, 07:17 AM
உங்களுக்குள்ளே ஊறிப்போகி இருக்கிறது.. வலியும்.. சுகமும்...அதை வரியாக்கிவிட்டீர்கள்... எளிமையாக.. அதைப் படிக்கும்போது உணர்கிறோம்.. வலிமையான கவிதையாக..

(இன்போசிஸ் கவிதை தொடர்பு நிச்சயம் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது... கூடவே நம்பிக்கையையும்...)

ஷீ-நிசி
08-05-2007, 07:27 AM
--------------------------------------------------------------------------------

இந்த பிரிவில் என் கவிதைகளை இடுகிறேன் படியுங்கள்...

இவையாவும் என் உறக்கம் தொலைத்த இரவுகளில் எழுதியவை.....



எதை வைத்து நியாபகம் கொள்வது?



ஆபாச படம் பார்க்கப் போய்
பாம்பு தீண்டி இறந்த போன சீனிவாசன்

அடக்க முடியாமல் வகுப்பிலேயே
ரீசஸ் போன பிரபா

முழுத்தேர்வில் காப்பி அடித்து
மாட்டிய கிருஷ்ணன்

என்று ஒவ்வொருவரையும் ஒரு
சம்பவத்தை வைத்து நியாபக படுத்திக் கொள்கிறேன்

என்னை எல்லாரும் எந்த சம்பவத்தை வைத்து
நியாபக படுத்திக் கொள்வார்கள்??

சேக்முகமதுவை சாக்கடையில் தள்ளிவிட்டதை வைத்தா?

இல்லை.... நித்யாவுக்கு கடிதம் கொடுத்ததை வைத்தா?

நண்பரே! இந்தக் கவிதை நான் எங்கோ படித்தது போல் தோன்றுகிறது.... இது ஆனந்த விகடனில் வெளிவந்ததா?

எல்லாமே 'அட' போட வைக்கின்றன...

அந்த இன்ஃபோசிஸ் கவிதை தாருங்கள்....

மனோஜ்
08-05-2007, 08:10 AM
கவிதைகள் அனைத்தும் அருமை மிகவும் ரசிக்க குடியதாகவும் எளிமையாகவும் உள்ளது நன்றி

ஆதவா
08-05-2007, 08:49 AM
நண்பர் உமாகார்த்திக் அவர்களே!. உங்கள் கவிதைகள் எந்த புத்தகத்திலாவது வெளி வந்திருக்கிறதா? இருப்பின் எந்த புத்தகம் என்று சொல்லுங்கள். என்னை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். எங்கோ படித்த ஞாபகம். அவ்வளவுதான்....

umakarthick
08-05-2007, 09:27 AM
இதில் தப்பாக எடுத்து கொள்ள என்ன இருக்கிறது..குங்குமத்தில் வந்திருக்கிறது
அப்புறம் நிறைய மின்இதழ்களில்...

umakarthick
08-05-2007, 09:32 AM
நண்பரே! இந்தக் கவிதை நான் எங்கோ படித்தது போல் தோன்றுகிறது.... இது ஆனந்த விகடனில் வெளிவந்ததா?

எல்லாமே 'அட' போட வைக்கின்றன...

அந்த இன்ஃபோசிஸ் கவிதை தாருங்கள்....

இது தான் அந்த ஹைக்கூ

இன்போசில் தேர்வில் எழுதியது

அரசியல்:

இது வரை துப்புறவு தொழிலாளர்களால்
சுத்தம் செய்யப் படாத
ஒரே சாக்கடை

ஷீ-நிசி
08-05-2007, 09:51 AM
நன்றாக உள்ளது நண்பரே!

umakarthick
08-05-2007, 09:54 AM
நன்றாக உள்ளது நண்பரே!

உண்மையாவா நக்கல் பண்ணாதீங்க

ஷீ-நிசி
08-05-2007, 09:57 AM
அட இதிலென்னங்க நக்கல்.. நன்றாகவே இருக்கிறது..

umakarthick
08-05-2007, 10:03 AM
அப்படின்னா நன்றிங்க

umakarthick
09-05-2007, 06:33 AM
."நம் காதல் விஷயம் பள்ளியில் பரவ
ஆரம்பித்த சில நாட்களில் பள்ளியின் ஆண்டுவிழா வந்தது..'

கலைநிகழ்ச்சியில் அடுத்ததாக
தனி நடனம் -பரதநாட்டியம்'
என்று உன் பெயரை அறிவித்த உடனே
பள்ளி மாணவர்கள மட்டுமின்றி
ஆசிரியர்களும் என்னை திரும்பி பார்த்தார்களே நினைவிருக்கிறதா......?"

poo
09-05-2007, 06:58 AM
உங்கள் கவிதைகள் புத்தகங்களில் வந்திருக்கிறதாவென மீண்டும் மீண்டும் கேட்பது, நாங்கள் மகிழ்ந்து கொள்ளத்தான் நண்பரே..

நேரிடைக் கேள்விகளுக்கு நீங்களும், ஆமாம் நிறைய பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன் என நேரிடையாக சொல்லிவிட்டிருக்கலாம்... ஏனெனில் இந்தப் பதிவுகள் விமர்சனத்திற்க்காக காத்திருப்பதாகத் தோணுகிறது... இடையில் எழுந்த கேள்விகளால் நண்பர்கள் பலரால் விமர்சிக்க முடியவில்லையென நினைக்கிறேன்..

umakarthick
09-05-2007, 08:28 AM
உங்கள் கவிதைகள் புத்தகங்களில் வந்திருக்கிறதாவென மீண்டும் மீண்டும் கேட்பது, நாங்கள் மகிழ்ந்து கொள்ளத்தான் நண்பரே..

நேரிடைக் கேள்விகளுக்கு நீங்களும், ஆமாம் நிறைய பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன் என நேரிடையாக சொல்லிவிட்டிருக்கலாம்... ஏனெனில் இந்தப் பதிவுகள் விமர்சனத்திற்க்காக காத்திருப்பதாகத் தோணுகிறது... இடையில் எழுந்த கேள்விகளால் நண்பர்கள் பலரால் விமர்சிக்க முடியவில்லையென நினைக்கிறேன்..

அடக் கொடுமையே நான் அப்ப்டி ஒன்றும் பெரிய ஆளில்லை ..இரண்டு கவிதைகள் மட்டும்
குங்குமத்தில் வந்திருக்கு..மற்றவை மின் இதழ்களில் அவ்வளவே

இதில் மறைக்க என்ன இருக்கிறது எனக்கு ஒன்றும் புரிய வில்லை

umakarthick
10-05-2007, 06:29 AM
தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்
நான் உனை கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்.

umakarthick
11-05-2007, 05:31 AM
யாரும் பார்க்கலையா?

ஆதவா
11-05-2007, 05:43 AM
கவனிப்பார்கள் நண்பரே!! உங்கள் அளவில் வேகம் எங்களுக்கு இல்லை... கவலை வேண்டாம்... கவிதைகள் நன்றாக இருக்கிறது... சற்று நீளமாக இருப்பின் தனித்திரியாக பதிக்கலாமே? பார்வையிடுபவர்கள் பதில் எழுதக்கூடும்... அதோடு....

இதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்...
கவியிடம் கண்ணுக்குக் கிட்டுமா என்று.....

umakarthick
07-06-2007, 06:29 AM
சரிங்க