PDA

View Full Version : நான் படித்த சுவையான சம்பவம்ஸ்

umakarthick
07-05-2007, 08:16 AM
கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது Уஎன் அப்பன் முருகனின் தந்தை யார் என தெரியுமா?Ф என கேட்டிருக்கிறார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர், முந்தைய இரவு திருவிளையாடல் பார்த்துவிட்டு வந்திருந்தார் போல, УசிவாஜிФ என சத்தமாக கூறி இருக்கிறார். அதற்கு கூட்டமே ஹோ வென சிரித்துவிட்டதாம். அதற்கு வாரியார் Уஎதற்கு சிரிக்கின்றீர்கள்?. அவர் சொன்னது சரியான பதில் தான். நீங்க காந்தியை காந்திஜி, நேருவை நேருஜி என்று ஜி போட்டு அழைப்பதை போல சிவாவை சிவாஜி என அழைத்துள்ளார்Ф என சொன்னாராம்

umakarthick
07-05-2007, 08:17 AM
நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் துடுக்குத்தனமான, குறுப்புத்தனமான மேடை பேச்சை நான் என்றுமே ரசிப்பேன்.. அதில் சுவை இருக்கும்.. கேட்போரை கவரும் வல்லமை இருக்கும். ஒரு முறை கருணாநிதிக்கு திரைஉலகம் எடுத்த விழாவில், எல்லோரும் பாடல், ஆடல் என்று தங்களது திறமைகளை காண்பித்துக்கொண்டிருக்க, இவர் செய்தது ஒரு சின்ன புதுமையான விஷயம். கலைஞர் இதுவரை அதிகமுறை மேடைபேச்சு பேசியிருப்பார். அதையெல்லாம் முன்னிருக்கும் எல்லோருக்கும் வாங்கி கொடுப்பது ஒலிவாங்கி(மைக்) தான். அந்த ஒலிவாங்கி கருணாநிதியை பார்த்து பேசினால் எப்படி இருக்கும் என்பதான ஒரு கற்பனை பேச்சு. நமது சிறு வயதில் நான் சென்று வந்த சுற்றுலா, நான் ஆறு பேசுகிறேன் என்னும் கட்டுரை தமிழ் பாடத்தில் எழுதியது போல, அந்த ஒலிவாங்கி அதனுடைய கண்ணோட்டத்தில் கருணாநிதியை பற்றி சொல்வது போல ஒரு சின்ன நிகழ்ச்சி. அருமையான கற்பனை.

ஏதாவது ஒரு விழாவில் அவர் பேசுவதாக தெரிந்தால், அதை ஆவலோடு பார்ப்பேன். சமீபத்தில் மாயக்கண்ணாடி பாடல் தொகுப்பு விழாவில் அவர் பேசுவதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்பவும் போல அவரது பாணி பேச்சு.. ஒலிவாங்கியை பிடித்தவுடன், அவர் சொன்னது.. மாலை வணக்கம்.. இதுல வணக்கம் உங்களுக்கு, மாலை இளையராஜாவுக்கு.. முன்னே இருந்த கூட்டம் தன்னை மறந்து கைதட்டியது.. சாதாரண ஒரு வணக்கத்தில் இப்படி ஒரு மேட்டரா.. நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும் நானும் என்னை மறந்து கைதட்டினேன்.

இது போல பல விஷயங்கள். இளையராஜா ஜெயா டிவிக்கு செய்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான். நிகழ்ச்சியை இவரது பேச்சு இன்னும் உயிரோட்டமாக நடத்தி சென்றது. நிச்சயமாய் இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும் பார்த்திபனின் பேச்சற்றல் சில நினைவுக்கு வரலாம். பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே.

ஒரு சம்பவம்:

ஆமாங்க அவர் ஒரு பல்முக திறமையாளர்

அவர் கவிதைகள், பேச்சு எல்லாரையும் சீக்கிரமே வசீகரிக்கும்

அவர் சொளந்தர்யாவின் இழப்புக்கு பின் விகடனில் ஒரு கட்டுரை எழுதினார்

அதில் அவர் சொலியிருப்பார், சொளந்தர்யாவை கடைசியாக ஏர்போர்டில் இவர் வழியனுப்ப சென்ற போது , அவர் இவரிடன் ஒரு கவிதை எனக்காக சொல்லுங்களேன் என கேட்க்க

இவர்

"உன்னை இங்கே விட்டு விட்டு
என்ன எடுத்து செல்கிறேன் நான் என்னோடு ??"

அப்படினாராம்

அவர் தொடர்ந்து கலக்கட்டும்

umakarthick
08-05-2007, 06:34 AM
இதை யாரும் பார்க்கலையா

роЕро░роЪройрпН
08-05-2007, 06:43 AM
கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது Уஎன் அப்பன் முருகனின் தந்தை யார் என தெரியுமா?Ф என கேட்டிருக்கிறார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர், முந்தைய இரவு திருவிளையாடல் பார்த்துவிட்டு வந்திருந்தார் போல, УசிவாஜிФ என சத்தமாக கூறி இருக்கிறார். அதற்கு கூட்டமே ஹோ வென சிரித்துவிட்டதாம். அதற்கு வாரியார் Уஎதற்கு சிரிக்கின்றீர்கள்?. அவர் சொன்னது சரியான பதில் தான். நீங்க காந்தியை காந்திஜி, நேருவை நேருஜி என்று ஜி போட்டு அழைப்பதை போல சிவாவை சிவாஜி என அழைத்துள்ளார்Ф என சொன்னாராம்

தவறுதலாக வந்த விடையென்றாலும். சமயோசிதமாக பதிலலித்த கிருபானந்தர் கிருபானந்தர்தான். தொடருங்கள் கார்த்திக் இந்த பகுதி நன்றாக இருக்கிறது.

роЕро░роЪройрпН
08-05-2007, 06:51 AM
நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் துடுக்குத்தனமான, குறுப்புத்தனமான மேடை பேச்சை நான் என்றுமே ரசிப்பேன்.. அதில் சுவை இருக்கும்.. கேட்போரை கவரும் வல்லமை இருக்கும். ஒரு முறை கருணாநிதிக்கு திரைஉலகம் எடுத்த விழாவில், எல்லோரும் பாடல், ஆடல் என்று தங்களது திறமைகளை காண்பித்துக்கொண்டிருக்க, இவர் செய்தது ஒரு சின்ன புதுமையான விஷயம். கலைஞர் இதுவரை அதிகமுறை மேடைபேச்சு பேசியிருப்பார். அதையெல்லாம் முன்னிருக்கும் எல்லோருக்கும் வாங்கி கொடுப்பது ஒலிவாங்கி(மைக்) தான். அந்த ஒலிவாங்கி கருணாநிதியை பார்த்து பேசினால் எப்படி இருக்கும் என்பதான ஒரு கற்பனை பேச்சு. நமது சிறு வயதில் நான் சென்று வந்த சுற்றுலா, நான் ஆறு பேசுகிறேன் என்னும் கட்டுரை தமிழ் பாடத்தில் எழுதியது போல, அந்த ஒலிவாங்கி அதனுடைய கண்ணோட்டத்தில் கருணாநிதியை பற்றி சொல்வது போல ஒரு சின்ன நிகழ்ச்சி. அருமையான கற்பனை.

ஏதாவது ஒரு விழாவில் அவர் பேசுவதாக தெரிந்தால், அதை ஆவலோடு பார்ப்பேன். சமீபத்தில் மாயக்கண்ணாடி பாடல் தொகுப்பு விழாவில் அவர் பேசுவதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்பவும் போல அவரது பாணி பேச்சு.. ஒலிவாங்கியை பிடித்தவுடன், அவர் சொன்னது.. மாலை வணக்கம்.. இதுல வணக்கம் உங்களுக்கு, மாலை இளையராஜாவுக்கு.. முன்னே இருந்த கூட்டம் தன்னை மறந்து கைதட்டியது.. சாதாரண ஒரு வணக்கத்தில் இப்படி ஒரு மேட்டரா.. நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும் நானும் என்னை மறந்து கைதட்டினேன்.

இது போல பல விஷயங்கள். இளையராஜா ஜெயா டிவிக்கு செய்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான். நிகழ்ச்சியை இவரது பேச்சு இன்னும் உயிரோட்டமாக நடத்தி சென்றது. நிச்சயமாய் இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும் பார்த்திபனின் பேச்சற்றல் சில நினைவுக்கு வரலாம். பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே.

ஒரு சம்பவம்:

ஆமாங்க அவர் ஒரு பல்முக திறமையாளர்

அவர் கவிதைகள், பேச்சு எல்லாரையும் சீக்கிரமே வசீகரிக்கும்

அவர் சொளந்தர்யாவின் இழப்புக்கு பின் விகடனில் ஒரு கட்டுரை எழுதினார்

அதில் அவர் சொலியிருப்பார், சொளந்தர்யாவை கடைசியாக ஏர்போர்டில் இவர் வழியனுப்ப சென்ற போது , அவர் இவரிடன் ஒரு கவிதை எனக்காக சொல்லுங்களேன் என கேட்க்க

இவர்

"உன்னை இங்கே விட்டு விட்டு
என்ன எடுத்து செல்கிறேன் நான் என்னோடு ??"

அப்படினாராம்

அவர் தொடர்ந்து கலக்கட்டும்

பார்த்திபனின் மேடைப்பேச்சி மட்டுமல்ல அவர் சாதாரண வாழ்க்கையிலும் அப்படிதான் பேசுவாராம். நானும் அவரது மேடைப்பேச்சிகளையும், உரையாடல்களையும் விரும்பி பார்ப்பேன். நிகழ்ச்சி முழுவதும் சிரிச்சிகிட்டே இருப்பேன். யதார்த்தமான வாழ்க்கையில் யதார்த்தமாக வாழ்வது ஒரு பெரிய விசயம் இல்லையா.

மேலும் தொடருங்கள். படித்து மகிழ்கிறோம். வாழ்த்துக்கள்

ро╖рпА-роиро┐роЪро┐
08-05-2007, 07:20 AM
பார்த்திபன் சிறந்த டைமிங் பேச்சாளர்... அவரின் ரசிகன் நான். எதிலும் வித்தியாசம் செய்பவர்..

இயக்குனர் டி.பி. கஜேந்திரனின் மகள் திருமணம்.. மணமகன் என் நண்பர். அங்கு பார்த்திபன் வந்திருந்தார்.. அவர் மணமக்களுக்கு அளித்த பரிசு என்னவென்றால்.. ஒரு வேஷ்டி துண்டு, ஒரு கூரைப் புடவை துண்டு இரண்டின் மூலையையும் முடிபோட்டு, மற்ற மூலைகளை போட்டோவின் ஓரத்தில் அடித்து, அதை அழகான பிரேம் போட்டு போட்டோவாக கொடுத்திருந்தார்.. நான் அசந்து விட்டேன் அதைப் பார்த்து...

அவரின் கிறுக்கல்கள் புத்தகத்தை படிக்க சொல்லி கலைஞரிடம் கொடுத்தாராம்...

பார்த்திபன் கலைஞரிடம் கேட்டாராம்.... என் கிறுக்கலகளைப் படித்தீர்களா என்று..

கலைஞர் சொன்னாராம்...
தம்பி,

உன் கவிதைகளைப் படித்தேன்..
உன் கவிதைகள் ஒவ்வொன்றும் படி தேன்.. என்றாராம்....

கலைஞர் பார்த்திபனைவிட டைமிங்காய் பேசுகிறவர்....

umakarthick
08-05-2007, 09:37 AM

அட போட வைக்கும் இன்னொரு சம்பவம் சொன்னதற்கு நன்றி ..என்னை தொடர்ந்து படிங்க்க
உங்களை அனுபவிக்க வைக்கும் என் எழுத்துக்கள் நன்றி

aren
08-05-2007, 03:16 PM
கிருபானந்தவாரியாரின் சம்யோசித புத்தியைப்பற்றி படித்தவுடன் மெய்சிலிர்த்தேன். மிகவும் அருமையான மனிதர்.

பார்த்திபன் - லொல்லிற்கு கேட்கவா வேண்டும். அவர் என்ன செய்தாலும் அது கலக்கலாகவே இருக்கும்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

umakarthick
09-05-2007, 06:38 AM
சாமுராய் படத்தின் பாடல்களுக்காக ஹாரிஸ்ஜெயராஜும் , வைரமுத்துவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஆகாயசூரியனை என்று துவங்கும் பாடலுக்கான சிட்டுவேஷனை(சூழ்நிலையை) இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொல்ல,அதை கவனமாக கேட்டுக் கொண்ட வைரமுத்து பின்வருமாறு பல்லவியை எழுதினார்.

'காரோட்டும் பயணத்தில் சாலை வளைவுகள் ஜாக்கிரதை
காதல்ஒட்டும் பயணத்தில் சேலை வளைவுகள் ஜாக்கிரதை'

('ஆகாய சூரியனை' பாடல் ராகத்தில் பாடி பாருங்கள்)

வைரமுத்து பல்லவியை சொல்லிமுடிக்க , பாலாஜியும்,ஹாரிஸ் ஜெயராஜும் திருப்தியற்றவர்களாக உட்கார்ந்திருந்தார்கள்.

ஹாரீஸ் வைரமுத்துவை பார்த்து, 'சார் இந்த முதல் இரண்டு வரிகள் அந்த அளவுக்கு பொருத்தமாக இல்லை, இது எப்படி இருக்கென்று சொல்லுங்கள்

'ஆகாய் சூரியனை ஒற்றை சடையில் கட்டியவல்
நின்றாடும் விண்மீனை நெத்திச் சுட்டியில் ஒட்டியவள்'

என்றார்..

அது வைரமுத்துவுக்கும்,பாலாஜிக்கும் பிடித்து போக, அந்த இரண்டு வரிகளையே பயன்படுத்திக் கொண்டார்கள்.(நன்றி:விகடன்)

роЕро▒ро┐роЮро░рпН
10-05-2007, 01:25 PM
சுவாரய்சமான தகவல்கள்.. நன்றி நண்பரே.. தொடர்ந்து கொடுங்கள்..

பார்த்திபன் பேசியதை நீங்கள் நேரடியாக சென்று பார்த்து ரசித்து எழுதிய நபர் யார்? இதை எங்கு படித்தீர்கள் எனக்குறிப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.

umakarthick
11-05-2007, 05:04 AM
அது ஓரு தமிழ் வலைப் பதிவர்-பெயர் கார்த்திகேயன்

роЪроХрпНродро┐
21-05-2007, 03:32 PM
நல்ல படைப்பு தொடருங்கள்

роЕрооро░ройрпН
21-05-2007, 03:38 PM
சுவாரசியமான திரி. பார்த்திபனின் வித்தியாசப் பார்வை செயல் கிருபானந்த வாரியாரின் மதி நுட்பம் கலைஞரின் டைமிங் எல்லாமே சுவை. இதைத் தொடராது விட்ட காரணம் என்னவோ கார்த்திக்.

роЕроХрпНройро┐
21-05-2007, 04:08 PM
அட சுவாரசியமான திரி...
தொடருங்கள் நண்பர்களே...

рооропрпВ
21-05-2007, 04:34 PM
தொடருங்கள் நண்பரே.. நீங்கள் வலைப்பதிவரா? தமிழ்மணம் போரடிப்பதால் தமிழ்மணம் செல்லப்போவதாய் பதிவொன்றும் போட்டிருந்தீர் என்று நினைக்கின்றேன்!!!!