PDA

View Full Version : என் சிறுகதை கலக்க்ஷன்ஸ்



umakarthick
07-05-2007, 08:12 AM
ஒரு ஊரில் நான்....









பட்டுக்கோட்டை பிரபாகர்


இருட்டு. ஒரே இருட்டு. கறுப்புதான் சக்தியா? அதுதானே எல்லா வர்ணங்களையும் விழுங்குகிறது? கறுப்புக் கோட்டு வக்கீல்கள் அனைத்து திசைகளிலும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் கைகளில் மட்டும் தராசு. கண் கட்டிய நீதி தேவதைகளின் கைகளில் தராசைக் காணவில்லை.

காணவில்லை. உயரம் ஐந்தடி நான்கு அங்குலம். மாநிறம். நீளமான கூந்தல். அதில் கேசவர்த்தினி வாசத்தோடு கொஞ்சம் மல்லிகை வாசமும், கொஞ்சமே கொஞ்சமாக மென்த்தால் சிகரெட் வாசம். அய்யய்யோ, நான் பிடிப்பது கோல்ட் ஃபிளேக் கிங்ஸ் லைட்ஸ் அல்லவா? ஆவேசமாக விரல்கள் அளைந்தபோது, ஹேர்பின் கீறி சின்ன கோடு. மெல்லிசாய் ரத்தம்.

ரத்தம். பி பாசிட்டிவ். ரெண்டு பாட்டில் போதுமா டாக்டர்? | போதும். அலர்ஜி எதுவும் இருக்கா? | ஆமாம் | என்ன? | ரத்தத்தைப் பார்த்தா மயக்கம் போட்ருவார்! | நான் கேட்டது அந்த அலர்ஜி இல்லை. ஃபர்கெட் இட்! | திட்டுத் திட்டாக, தீவுத் தீவாக, உருகி ஓய்ந்த மெழுகுத் திப்பிகளாக... அய்யோ, எவ்வளவு ரத்தம்! சரி, எங்கே மீசை?

மீசை. பாரதியார். ஹிட்லர். வீரப்பன். மீசை கம்பீரமா? எனில், கிரண் பேடிக்குக் கம்பீரம் இல்லையா? கலாமுக்கு இல்லாத கம்பீரமா? பென்சில் கோடு மீசை முதலில்.அப்புறம், நாடகத்தில் மை மீசை. நீர்தான் ஜாக்சன்துரை என்பவரோ? | துடிக்கிறது மீசை. அதை அடக்கு அடக்கு என்று... | ஆனால், அடக்க முடியாமல் வரு கிறதே! சில சமயம் சாலை ஓரங்களில்... சில சமயம் டவுசரில்! இப்போது பெட் பேனில். உங்க மீசை ரொம்ப அழகா இருக்குங்க! | நினைத்தாலே இனிக்கும்ல ரஜினிகாந்த் மாதிரி எடுத்துத் தனியா குடுத்துடட்டுமா? ஆனால், அவனுக்கு மீசை இல்லையே? பின் எப்படி?

எப்படி? டைப்ரைட் டிங் கற்றுக் கொள்வது எப்படி? கிதார் வாசிப்பது எப்படி? சமைஞ்சது எப்படி? ஏன், எதற்கு, எப்படி? காதலிப்பது எப்படி? முத்தம் கொடுப்பது எப்படி? துரோகம் செய்வது எப்படி? என்னது புதுசா லிப்ஸ்டிக்? நீ போட மாட்டியே? | இந்த ஷாம்பு வாங்கினா, இந்த லிப்ஸ்டிக் இலவசம்!

இலவசம். சோப்பு வாங்கினால் சீப்பு. புத்தகம் வாங்கினால் தகடு. காதல் வாங்கினால் கல்யாணம். கணவன் வாங்கினால் காதலனா? கண்ணன் என் காதலன். ஷங்கரின் காதலன். வெர்ஜின் டெஸ்ட் பண்ணுங்க டாக்டர் கற்புச் சோதனை கன்னிக்கே அபத்தம். மனைவிக்கெப்படி? கண்ணாடி போட்ட டாக்டரம்மா கையில் உறை மாட்டுகிறாள். இப்படிப் படுத்துக்கம்மா.

படுத்துக்கம்மா! இல்லை, படுத்துக்கடி! இல்லை, படுத்துக்க டார்லிங்! முதலில் சேலை. கோ|ஆப்டெக்ஸில் பண்டிகை காலத் தள்ளுபடி. சிவப்பு கலரு ஜிங்குச்சா. பச்சைக் கலரு ஜிங்குச்சா. சேலையிலே வீடு கட்டவா? சின்ன வீடா? கடன்காரன் | கடன்காரி. திருடன் | திருடி. கள்ளன் | கள்ளி. சின்ன வீட்டுக்கு ஆண் பால் என்ன?

என்ன? என்னயோசனை? இந்த சேலை ஏதுன்னு கேட்டேன்? | அதான் சொன்னேனே, ஆபீஸ்ல தவணைல வாங்கினேன்னு! | எப்ப சொன்னே? | உங்களுக்கு ஞாபக மறதி!

மறதி! யாருக்கு மறதி? பன்னிரண்டு வயசில், எதிர்வீட்டு வாசலில், குனிந்து கோலம் போட்டுக்கொண்டு இருந்த ரத்னாக்காவை அங்கே பார்த்து, சீ! தப்பு என்று சாமிக்கு முன் கன்னத்தில் போட்டுக்கொண்டது மறக்கவில்லையே! அப்புறம்... சினிமா சரோஜாதேவி. புத்தக சரோஜாதேவி. எதிர்வீட்டு சரோஜாதேவி. சைக்கிள். லூனா. பஜாஜ் சேடக், பென்சில் மீசை. பக்கா மீசை. கிருதா. ஜீன்ஸ். காலேஜ். சிகரெட். பியர். வேண்டாண்டா! | சீ! இதுல ஒண்ணும் தப்பு இல்ல. சும்மா வாடா! | நாளைக்கு நம்ம பொண்டாட்டியை மட்டும் சுத்தமா எதிர்பார்க்கலாமா? | டேய்... அப்படில்லாம் எதிர்பார்க்காதே. ஏமாந்துடுவே! | சிரிக்கிறான்.

சிரிக்கிறான். சிரிக்கிறார்கள். ஹாஹ்ஹா... ஹாஹ்ஹா... தெற்றுப் பல்லுடன், தங்கப் பல்லுடன், கோணல் பல்லுடன்... அடச் சீ! சிரிக்காதீர்கள்! இது ஆஸ்பிடல்! நோயாளிகள் உறங்குகிறார்கள். வாந்தி எடுக்கிறார்கள். இருமுகிறார்கள். ஊசி போட்டுக் கொள்கிறார்கள். கர்ப்பம் கலைத்துக் கொள்கிறார்கள். கர்ப்பம் கலைத்து... கொல்கிறார்கள். கொலை!

கொலை. நம்பிக்கை மீது டுமீல்! இது சைலன்ஸர் பொருத்தின துப்பாக்கி. குண்டு துப்பும். புகை வரும். துளைக்கும். ரத்தம் வரும். உயிர் துடிக்கும். மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும். வட்ட வட்ட மாத்திரைகள்... தோட்டா மாதிரி! என்ன மாத்திரை இது? எதுக்குச் சாப்பிடறே? | விட்டமின். அனீமிக்கா இருக்கேன்ல? | சரி! எதுக்கு உறை கிழிச்சு பாட்டில்ல போட்டு சீரகம், சோம்பு மாதிரி கிச்சன்ல வெச்சிருக்கே? | ஒவ்வொரு தடவையும் உறை கிழிக்கச் சோம்பேறித் தனம்! எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மாத்திரைகள். செரிமானம் ஆகாத மாத்திரைகள். கசக்கும். துப்பு!

துப்பு. துப்பறி! துப்பறியும் சாம்பு. சங்கர்லால். கணேஷ்& வசந்த். அலமாரிகளில் தேடு. புடவை மடிப்புகளில். நகைப் பெட்டிகளின் வெல்வெட்டுக்கு அடியில். துண்டுச் சீட்டு. ஞாயிறு காலை பத்து மணி. ஆட்டீன். ஆட்டீன். அம்பு துளைத்த ஆட்டீன். முதுகில் அம்பறாத்தூணியோடு வேடன் வருகை. புள்ளி மான்கள் சிதறி ஓடுகின்றன. நீ ஏன் ஓடவில்லை கண்ணே?

கண்ணே பட்டுவிடும். திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்! கல்யாண ரிசப்ஷனில் மட்டுமல்ல, தினம் தினம்! மெல்லிசை. நூறாண்டு காலம் வாழ்க! யாரோடு? நோய் நொடி இல்லாமல் வளர்க! அதெப்படி நோய் வராமல் போகும்? பார்சலில் சுற்றின பரிசுகள். டேய், நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரண்டா! உன் வொய்ஃப் ரொம்ப அழகு! பாராட்டுக்கள். நெஜம்மாவா? தோல் அழகா, சுளை அழகா? குணம்?

குணம்? யாருக்கு வேண்டும் குணம்? போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மாதா மாதம் பணம் போதும். தீபாவளிக்குப் புடவை போதும். சம்மருக்கு ஊட்டி போதும். போனஸ் வந்தால் வளையல் போதும். போதாக் குறைதான் என்ன? காவியத்தில் என்றால், மாசறு பொன்னே எனலாம். வலம்புரி சங்கே எனலாம். கொஞ்சல்! கொஞ்சும் தமிழ்! வாழ்க தமிழ்! ஒழிக இந்தி!

இந்தி மேல் தார் பூசுகிறார்கள். கோஷம் போடுகிறார்கள். கைதாகிறார்கள். ஆராதனா, பாபி, ஹம் ஆப்கே... நமஸ்தே! தூர்தர்ஷன். இந்திப் பிரசார சபா. ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ்தாதா! ரகு தாத்தா இல்ல, ரஹ்தாதா! இப்ப எதுக்கு இந்தி படிக்கணும்? | ஒருவேளை நார்த்ல டிரான்ஸ்ஃபர் போட்டா? | இப்பவே ஆறு மணிக்கு வர்றே. இன்னும் லேட்டாகுமே? | அதுக்கு என்ன பண்றது? மீசை இல்லாத இந்தி மாஸ்டர். இந்திப் புத்தகத்துக்குள் அவன் போட்டோவும் இலவச இணைப்பா? அச்சா! அச்சா! சே! ஒரு அபிமானம்ங்க. தொட்டதுக்கெல்லாம் சந்தேகமா! | தொடறானான்னுதான் சந்தேகம்! | இப்ப என்ன, தீக்குளிக்கணுமா? | வேணாம். சோப்பு போட்டுக் குளி. சிகரெட் வாசனை! | அது உங்களால! | நான் மென்த்தால் சிகரெட் பிடிக்கிறதில்லை! | அம்மா வீட்டுக்குப் போயிடவா? | அங்கேர்ந்து அவன் வீடு கிட்டேயா? நம்புங்க ப்ளீஸ்! | வேற வழி? இன்னும் கண்ணால் பார்க்கலையே!

பார்க்கலையே! பார்த்தால் மட்டும் பசி தீருமா? தீராது. ஆத்திரப் பசி தீராது. பார்த்தாலே பரவசம் வராது. ஆத்திரம்தான் வரும். அவமானம் வரும். உடல்கள். சதைகள். வியர்வைகள். ஓசைகள். சமுத்திரம். கோயில் மணி. டெலிபோன். வயலின். சிற்றோடை. கொலுசு. கொசு. மின் விசிறி. பேருந்து. ரயில். ஏரோப்ளேன். கப்பல். கார். ஹாரன். டேய் சைக்கிள், ஒதுங்குடா! டேய்! டேய்! ரத்தம்! திட்டுத் திட்டாய். தீவுத் தீவாய். சிவப்புக் கொண்டையுடன் ஆம்புலன்ஸ். மஞ்சள். சிவப்பு. பச்சை. பச்சை பெயின்ட். பச்சை திரைச் சீலைகள். எப்படி ஆச்சும்மா? | வேகமா ஓட்டுவாரு. சொன்னாலும் கேக்கறதில்லை டாக்டர்! | ஆபரேஷன் தியேட்டர்ல மயக்க மருந்து கொடுத்தப்ப, ஏதாச்சும் பேசுங்கன்னதுக்குக் கெட்ட கெட்ட வார்த்தையா சொன்னாரும்மா! அப்படி என்ன கோபம்? | டாக்டர், எப்ப கண்ணைத் தொறப்பார்? | மயக்கம் தெளிஞ்சதும்! | இந்த ஆஸ்பத்திரி பத்திக் கேள்விப்பட்டுதான் இங்க வந்து சேர்த்தேன். கொஞ்சம் தனியா பேசலாமா? | பரவால்ல, சொல்லுங்க மேடம்! | டார்ச்சர் தாங்கலை. ஏதாச்சும் ஊசி கீசி போட்டு... ஒரு லட்சம் ஆனாலும் சரி! | நான்சென்ஸ்! என்ன நினைச்சீங்க? | ஸ... ஸாரி! | என்ன ஸாரி... ஒரு லட்சம் ரொம்பக் கம்மி! | பயந்தே போனேன்! கடவுளே!

கடவுளே! கழுத்தில் நெளிவது பாம்பா? இல்லை. ஸ்டெதாஸ்கோப். ஒரு சின்ன இஞ்செக்ஷன். தூக்கத் துக்கு! | நோ! | பயப்படக்கூடாது! | நோ!! | சரியாப் போயிடும்! புன்னகையோடு அவள். சுருக்! சுருக்கெழுத்து. கையெழுத்து. தலை எழுத்து. எழுத்தில் புள்ளி. புள்ளியில் கறுப்பு. கறுப்பு பரவிப் பரவி... இருட்டு!

umakarthick
07-05-2007, 08:15 AM
இரண்டு வார்த்தை கதைகள்- என் முயற்சி
விகடன் ,குமுதமில் சுஜாதா எழுதி வாசகர்களை எழுத சொன்ன இரண்டு வார்த்த சி சி கதைகள் டைப்ல நானும் எழுதினேன் , விகடனுக்கும் அனுப்பினேன் , ஒன்னும் பதிலில்லை

முதலில் சி சி அதாவ்து சிறு சிறு கதைகள் னா என்னான்னு சொல்லிற்றென்..அதாவது இரண்டு வார்த்தை கதை , இரண்டு வார்த்தை தன் இருக்கனும் ,த்லைப்பில் முக்காவாசி கதையயை சொல்லிடனும்

உதாரணத்துக்கு

தலைப்பு:ஆபிசில் எத்தனை ஆம்பிளங்க?

கதை:முதலிரவில் கேள்வி


கதை புரியுதா? ஒரு இதை வைத்து நாம் ஒரு கதையே பின்னி விடலாம் , இதே மாதிரி நானும் டிரை பண்ணிருக்கேன், படிச்ச்சிட்டு எப்படி இரூக்குன்னு சொல்லுங்க.


1.

தலைப்பு:தறிகெட்டு வரும் லாரி

கதை:ஐய்யோ குழந்தை!!



2.

தலைப்பு:சச்சின் நூறு அடித்தார்

கதை:இந்தியா தோல்வி

3.



தலைப்பு:மெரினாவில் உனக்காக காத்திருப்பேன்

கதை: சென்னையில் சுனாமி

4.



தலைப்பு:ஒரு வேலையும் கிடைக்க வில்லை

கதை:ஜனாதிபதிக்கு இமெயில்

umakarthick
07-05-2007, 08:18 AM
ம்ம தலைவர் சுஜாதாவின் சிறு சிறுகதைகள் புத்தகம் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது....அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்- னு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

இந்த புத்தகத்தில் இருந்து இரண்டு வார்த்தை கதைகளை மட்டும் இங்கே இடுகிறேன்..மீதிக் கதைகளை உங்கள் பின்னூட்டத்தை பார்த்த் பின்னே இடுவேன்..

படிச்சிட்டு சொல்லுங்க..

இரண்டு வார்த்தை கதைகள்:

1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"

2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"

3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"

4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"

5.தலைப்பு : விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"

6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"

7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி

8.தலைப்பு : ஆபிஸி எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

umakarthick
07-05-2007, 08:24 AM
உலகத்தின் மிகச் சிறிய சஸ்பென்ஸ் கதை.
கதை:

உலகத்தின் கடைசி மனிதன் அந்த இருட்டு அறையில் இருந்த போது ,அறையின் கதவு தட்டப் பட்டது.

ஓவியன்
07-05-2007, 08:27 AM
இரண்டு வார்த்தை கதைகள்- என் முயற்சி
விகடன் ,குமுதமில் சுஜாதா எழுதி வாசகர்களை எழுத சொன்ன இரண்டு வார்த்த சி சி கதைகள் டைப்ல நானும் எழுதினேன் , விகடனுக்கும் அனுப்பினேன் , ஒன்னும் பதிலில்லை


உங்கள் முயற்சி நன்றாக இருந்தது கார்த்திக்!

தொடர்ந்து முயல வாழ்த்துக்கள்.:nature-smiley-008:

umakarthick
07-05-2007, 08:32 AM
வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, அதிலிருந்து ஃப்ரிஜ்ஜும் டி.வி.யும் இறக்கப்பட்டதை ப்ருந்தா வேடிக்கை பார்த்தாள். யார் வீட்டிலேயோ புதுப் பணம் வந்திருக்கிறது போலும் என்று எண்ணினாள்.

காதில் பென்சில் வைத்துக் கொண்டிருந்தவன், அவளிடம் வந்து மிஸ்டர், ராஜாராம்ங்கறவரு ஃப்ளாட் எதுங்க?

எங்க வீட்டுக்காரர் பேரு ராஜாராம். எதுக்கு கேக்கறீங்க?

ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து டெலிவரி பண்ண வந்திருக்கோம்.

தப்பா வந்திருக்கிங்க. நாங்க எதும் ஆர்டர் பண்ணலைப்பா.

அவன் தன் டெலிவரி சலானை மறுபடி பார்த்தான். செல்போனில் எண்களை ஒத்தினான்.

பார்ட்டி ஆர்டர் இல்லைங்கறாங்க. கருமாதிங்களா விலாசம் தப்பா?

.

பேசுங்க என்று அவளிடம் கொடுத்தான்.

அம்மா நான் ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து மேனேஜர் முத்துராகவன் பேசறேன். மிஸ்டர் ராஜாராமன் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி மாடல் ப்ரிஜ்ஜும், ஒரு 28 இன்ச் டிவியும் ஆர்டர் செய்திருக்கார். நீங்க டெலிவரி நோட்ல கையெழுத்துப் போட்டு பொருளை வாங்கிட்டா போதும். கேயரண்டி கார்டுங்களும் மேன்யுவலும் கொடுப்பாங்க.

இத பாருப்பா! எங்கயோ தப்பு நேர்ந்திருக்கு. நாங்க யாரும் எதும் ஆர்டர் செய்யலை.

இதற்குள் ராஜு டூவீலரில் வந்து இறங்கினான். இங்க பாருங்க என்னவோ சொல்றான். ஃப்ரிஜ்ஜாம் டி.வி.யாம்.

ராஜு அவளைக் கவனிக்காமல், ஓ வந்தாச்சா! இந்த வீடுதாம்பா உள்ள கொண்டு போங்க.

ப்ருந்தாவுக்குத் திக்கென்றது.

இரண்டு சாதனங்களும் ரொம்ப பெரிசாக இருந்தது.

பழைய டி.வி.யை இப்பவே எடுத்துக்கிட்டு போயிர்றிங்களா, இடம் இல்லை.

அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அறையில் ப்ளாஸ்டிக் உறைகளும் தர்மகோல் அட்டைப்பெட்டி எல்லாம் நிறைந்து உட்கார இடம் இல்லாமல் ப்ருந்தாவுக்கு எதும் புரியவில்லை. ஏது காசு இவருக்கு? மாசம் பதினெட்டாயிரத்தில் இருபதாம் தேதி தாண்டவே சிங்கியடிக்கிறதே.

ஏ.சி எப்பப்பா வரும்?

கோடவுன்ல சொல்லிருக்குங்க.

இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்தது?

இவாளை முதல்ல கையெழுத்து போட்டுட்டு அனுப்பிச்சுர்றேன். தாங்கஸ்ப்பா

நலுங்காம நசுங்காம கொண்டாந்திருக்கோம். ஏதாவது போட்டுக் கொடுங்க, ரெண்டுபேர் இருக்கோம்.

அவளை அடுத்த அறைக்கு அழைத்தான். ப்ரு! அம்பது ரூபா இருக்கா?

பத்து ரூபாதான் இருக்கு. காப்பி பொடி வாங்கணும்.

சரி அதைக் குடுத்துடு.

இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.

அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு முகம் இறுகி முணுமுணுத்துக் கொண்டே, லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்குவீங்க. பத்துரூபா தருவீங்களாம்மா. வச்சுக்கங்க. எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டீங்க என்று புறப்பட்டான்.

றீ றீ றீ

என்னங்க இதெல்லாம்?

பாத்தா தெரியலை ஃப்ரிஜ், டீ.வி

ஏது காசு?

காசா? லோன்மேளா, ப்ரமிளா ஏஜென்சி கூவிக்கூவி, கூப்ட்டு கூப்ட்டு குடுக்கறான். ஒரே ஒரு டோக்கன் பேமெண்ட் வாங்கிண்டு சாலரி சர்டிஃபிகேட் காட்டினா போதும். மாசா மாசம் கட்டி கழிச்சுக் கட்டிருவேன்.

மாசம் எத்தனை?

ஆறாயிரம் அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?

எப்படிங்க நம்ம சம்பளத்தில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா? மது ஸ்கூல் பீஸ் கட்டியாகணும்

உனக்கு எதுவுமே தேவையில்லை. தினம் தேங்கா தொவையலும் சீராமிளகு ரசமும் போறும்.

ஆறாயிரம் சம்பளத்தில கழிச்சுட்டா எப்படி நான் குடித்தனம் நடத்தறது?

பயப்படாதே உனக்கு மாசாமாசம் கொடுக்கற எட்டாயிரத்தைக் குறைக்கமாட்டேன்.

எட்டாயிரமா, பன்னண்டாயிரங்க.

கவலையை விடு. எனக்கு அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. அப்புறம் உத்தண்டி ப்ராபர்ட்டிக்கு பஞ்சாயத்துல என்ஓசி வந்துட்டா, சுளையா நம்ம ஷேர் முப்பது லட்சமாவது வரும். நம்ம ஸ்டேட்டஸ் எங்கயோ போய்டும்.

ஆமாம். பதினெட்டு வருஷமா வராதது

அவன் முகம் சுருங்கி எல்லாத்தையும் நெகட்டிவ்வாவே பார்க்காதே லைஃப்ல பாசிட்டிவ்வா யோசி. இங்கிலீஷ்ல கில்ஜாய்ம்பா. அது நீதான். எதுக்கெடுத்தாலும் நொள்ளை

அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

அவன் தொடர்ந்து, மனுசனுக்கு மனைவி உற்சாகம் தரணும். நம்பிக்கை தரணும். எல்லாத்தையும் கலைக்கிறதில கெட்டிக்காரி நீ!

இல்லை, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியாவே வரலையே. எனக்கு நீங்க செய்யற காரியம் வயத்தைக் கலக்கறது.

நாளைக்கு ஏ.சி.காரன் வருவான் க்ரில் போட.

மது மரக்கட்டை பேட்டுடன் உள்ளே வந்து ஐ! டீ.வி. ஏதுப்பா? அவ்வளவு காசு நம்ம கிட்ட? என்றான்.

அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கியேடா. மதுக்கண்ணா உங்கப்பா ஒண்ணும் அத்தனை புவர் இல்லை. முதல்ல இந்த லோகிளாஸ் லொகாலிட்டியை விட்டு ஓடணும். எம்.ஆர்.சி. நகர்ல பெரிய வீடு பாத்துண்டிருக்கேன்.

றீ றீ றீ

ராஜாராமன் ஆபிஸ் போயிருந்தான். பெரிய டி.வி.க்கும் குளிர்பெட்டிக்கும் இடம் பண்ணிக் கொடுத்து மிச்சமிருந்த இடத்தில் பிரம்பு நாற்காலி போட்டு மத்யானம் அணில்கள் ஓய்ந்துவிட்ட வேளையில், நடிகை பார்த்துக் கொண்டிருக்க நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி ஒரு கிராம மாது விளக்கிக் கொண்டிருந்தாள்.

மது கோழிக்கு வலிக்காதாம்மா? என்று கேட்டான்.

வலிக்காம கழுத்தை திருகுவா உங்கப்பா மாதிரி. பால்கனியிலிருந்து விளையாடி விட்டு வந்தான். அம்மா அந்தாளு இங்கயே பாத்துண்டிருக்கான்ம்மா. அப்பாவைக் கூப்பிடறார்.

யாருப்பா என்றாள் பால்கனியிலிருந்து.

வாட்டசாட்டமாக இருந்தான். காலர் இல்லா சட்டையை மீறி புலிநகம் போட்ட சங்கிலி தெரிந்தது. முழங்கைவரை முறுக்கிவிட்ட புஜத்தில் தாயத்து கட்டிய இடத்தில் தசைநார்கள் பீறிட்டன. மீசை கன்னம்வரை வழிந்திருந்தது. ஜிம்மிலிருந்து வந்தவன் போலத் தோன்றினான்.

ப்ரமிளா ஏஜென்சிலருந்து வர்றன். உன் புருசன் ராஜாராமனைப் பார்க்கணும்.

ஆபீஸ் போயிருக்காரே!

ஆபீஸ்ல வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னாங்க

இல்லையே ஒரு வேளை வருவாரா இருக்கும்.

சரி காத்துட்டிருக்கேன்.

என்ன விஷயம்?

உன் புருசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு. அதை அவர்கிட்ட காட்டி உடனே ஆபீசுக்கு வந்து கேஷ் கட்டு. இல்லை பொருளை எடுத்துட்டுப் போயிருவோம்னு சொல்லு.

சரிப்பா, அவர் வந்த உடனே சொல்றேன்.

ஒண்ணும் பிரச்னை இல்லை. அரை மணியில மறுபடி வரேன் சொல்லிவை.

அவன் போனதும் ராஜு பெட்ரூமிலிருந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தான். போய்ட்டானா?

நீங்க எப்ப வந்தீங்க? ஆபீஸ் போகலை?

அப்பவே வந்துட்டேனே. கிச்சன்ல பிசியா இருந்தே.

என்னவோ செக்குங்கறான் பவுன்ஸ்ங்கறான். ஒண்ணும் புரியலை. வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன்

அது ஒண்ணுமில்லை கண்ணு. பன்னண்டு போஸ்ட் டேடட் செக் பன்னண்டாம் தேதி போடுறான்னா, பத்தாம் தேதியே போட்டிருக்கான். பேங்க்ல ஆனர் பண்ணலை போல இருக்கு. இத்தனைக்கும் சேஷாத்ரிகிட்ட சொல்லியிருந்தேன். ஒருவேளை சிக்னேச்சர் மேட்ச் ஆகலையோ என்னவோ நான் உடனே பேங்க் போய் அதைச் சரி பண்ணிடுவேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.

ப்ருந்தா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

றீ றீ றீ

ராஜு மத்யானம் திரும்ப வந்தபோது எல்லாம் சரியாய்டுத்து. அவன்கிட்ட போய் சத்தம் போட்டுட்டு வந்தேன். படவா ராஸ்கல்! ரவுடிகளைல்லாம் அனுப்பறயே என்ன கம்பெனி நீ, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்னு. அவன் பயந்துண்டு மன்னிப்பு கேட்டு, இனி அந்த மாதிரி நடக்காதுன்னான். ஜாக்கிரதை, ஆர்.ஏ.புரத்தைவிட்டே உன் கடை இல்லாம பண்ணிடுவேன். கபர்தார் என்னை என்னன்னு நினைச்சிண்டிருக்கே பத்மாஷ்னு

பணம் கொடுத்தாச்சா?

கட்டியாச்சுடி மூதேவி சனியனே!

நவம்பர் 14.

வைதேகியின் பெண் சீமந்தத்துக்கு தங்க வளையலும் ரெட்டை வடசங்கிலியும் எடுத்துக்கொள்ள பீரோவைத் திறந்தபோது, சங்கிலியைக் காணோம். வேலைக்காரியைக் கூப்பிட்டு செவலா! நீ வீடு பெருக்கி துடைக்கறப்ப பீரோ திறந்திருந்தது. எதையாவது தெரியாம எடுத்தேன்னா சொல்லிடு என்றாள்.

அவள் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், இத்தனை வருசம் உங்கிட்ட வேலை செய்யறேன். இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட பத்தியா? நாங்க ஏளைங்கதாம்மா, திருடங்க இல்லை.

இப்ப நான் என்ன கேட்டுட்டேன். எடுக்கலைன்னா எடுக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன்.

நவம்பர் 15

வேலைக்காரி நின்று விட்டாள்.

ராஜுவிடம் சொன்னபோது, அவளை அப்படி கேட்டிருக்கக் கூடாது, நான் ஆர்.ஏ.புரம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துர்றேன். சாவியை வேலைக்காரி பார்க்கறமாதிரி கண்ட கண்ட இடத்தில வெக்கக்கூடாது. இது ஒரு பாடம். போனாப் போறது நா உனக்குப் புதுசு வாங்கித்தரேன் என்றான்.

சாயங்காலம் மது அப்பா பீரோ சாவியை அம்மா எங்க வெப்பான்னு கேட்டிண்டிருந்தாம்மா. தலைகாணிக்கு அடிலன்னு சொன்னேன்

டிசம்பர் 12

சாயங்காலம் டெலிபோன் ஒலித்தபோதே அதில் மிரட்டல் இருந்தமாதிரி தோன்றியது, ப்ருந்தாவுக்கு. எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தாள். ராஜு வேறு இல்லை. அடித்து நின்றுவிட்டு உடனே மறுபடி அடிக்கத் தொடங்கியது.

அலோ.

குரலே கன்னத்தில் அறைந்தது. என்ன மாதிரி டுபாக்கூர் பார்ட்டிம்மா நீங்க உன் வீட்டுக்காரரு இந்த முறையும் செக் பவுன்ஸ் ஆய்டுச்சாம். நீங்க சோறு திங்கறீங்களா, வேற எதாவதா மானம், வெக்கம், சூடு, சுரணை வேண்டாம்? ஆபீஸக்கு போன் போட்டா எடுக்கறதே இல்லை. தபாரு டி.வியையும் ப்ரிஜ்ஜையும் எடுத்துட்டு வரும்படி முதலாளி ஆர்டர். அரைமணியில டெம்போ வரும். ஒயரை எல்லாம் புடுங்கி தயாரா வச்சிரு. காசில்லைன்னா ஏன் பொருள் வாங்கறீங்க? வாயையும் பொத்திகிட்டு தயிர் சாதம் தின்னுகிட்டு, படுத்துக் கிடக்கிறதுதானே உங்க மாதிரி ஆளுங்கள்ளாம்.. சரி உட்டுரு துரைராஜ் என்ற மற்றொரு குரல் கேட்க வந்துகிட்டே இருக்கோம் என்று முடித்தான்.

உடம்பெல்லாம் வியர்த்தது. நாக்கு வறண்டு நடுங்கும் விரல்களுடன் ராஜுவுக்குப் போன் செய்தாள்.

எங்க போய்த் தொலைஞ்சிட்டீங்க..? அவன் பாட்டுக்குப் போன்ல கண்டகண்டபடி திட்டறான். அப்படியே உடம்பெல்லாம் கூசறது. அரைமணில டெம்போ எடுத்துண்டு வரானாம்.

அப்டியா? நீ என்ன பண்றே.. அவா வரதுக்குள்ள கதவைப் பூட்டிண்டு உங்க அக்காவாத்துக்கு போய்டு. நான் அந்த முட்டாள் பசங்களைப் போய் பாத்து ஒண்ணுல ஒண்ணு தீர்த்துட்டுத்தான் மறுகாரியம்.

உடனே வாங்க எனக்குப் பதர்றது, பயத்தில புடவைல

எல்லாம் வரேன். நீ கதவைப் பூட்டிண்டு வைதேகி வீட்டுக்குப் போயிடு. என்ன அசடு அசடு! நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஒரு லாயர் நோட்டீஸ் அனுப்பிருக்கேன். ஃப்ரிஜ் சரியா வேலை செய்யலை. ஐஸ் க்யுப் பார்ம் ஆறதில்லை. டி.வி. க்ளாரிட்டி இல்லை. அதனால பேமெண்டடை நிறுத்தி வச்சிருக்கேன்னு அப்படியே கதிகலங்கிப் போய்டுவான். ஒரு மசுத்தையும் பிடுங்க முடியாது. என்னன்னு நினைச்சிண்டிருக்கான். ஸ்கவுண்ட்ரல்.

எப்ப வர்றீங்க?

எம்.ஆர்.சி. நகர் போய்ட்டு வந்துர்றேன்.

எம்.ஆர்.சி. நகர்ல என்ன?

சொன்னனே ஒரு புது ஃப்ளாட் பாத்துண்டிருக்கேன். அப்படியே உண்டாய் கம்பெனி ஷோ ரூமுக்குப் போய்ட்டு மத்யானம் உங்கக்கா வீட்டுக்குச் சாப்பிட வந்துர்றேன். பருப்பு உசிலி பண்ணி வைக்கச் சொல்லு. உங்கக்கா நன்னா பண்ணுவா.

உண்டாய் கம்பெனியா?

ஆமாம் டூவீலர் நம்ம ஸ்டேட்டஸ்க்குச் சரியில்லை. ஒரு கார் வாங்கப் போறேன் என்றான்.

umakarthick
08-05-2007, 06:32 AM
இதை யாரும் பார்க்கலயா?

மனோஜ்
08-05-2007, 08:58 AM
அருமை கார்த்தி தற்பொழுது நடைபொரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கதையாக வடித்துள்ளது அருமை தொடருங்கள்...

umakarthick
08-05-2007, 09:24 AM
யாரும் படிக்கலை போல ..நன்றி உங்கள் வரவுக்கு

sns
15-05-2007, 09:46 AM
ரொம்ப நல்ல கதை, இன்னும் தொடர்ந்து எழுத வழ்த்துக்கல்