PDA

View Full Version : முத்திரை கவிதைகள்



umakarthick
07-05-2007, 07:19 AM
முத்திரை கவிதைகள்
---------------------------------------------------

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருதார்.

- நடைபாதை ஓவியன், எம். மாரியப்பன்

---------------------------------------------------

தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.


- விற்ற காசு, ந.கண்ணன்


---------------------------------------------------

பிரகாரம் நிழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.

- மாற்றங்கள், புன்னகை சேது ---------------------------------------------------



மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
- குழந்தை, பி.பழனிச்சாமி
---------------------------------------------------

சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என

பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.


- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி

---------------------------------------------------

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
- வலி, ஜி.ஆர்.விஜய்


நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு

umakarthick
07-05-2007, 07:20 AM
காபி வித் அனு:கனிமொழி

காபி வித் அனுவில் கடந்த வாரம் கனிமொழியும் ,பாம்பே ஜெயஸ்ரீயும் பங்கு பெற்றார்கள்.வழக்கம் போல் இருவருக்கும் இடையே இருந்த நட்பினால்,இருவரும் இணைந்து பணியாற்றியிருப்பதாலும் அவர்கள் அன்று அழைக்கப் பட்டிருந்தனர்.

கனிமொழி ஆங்கிலமும் நன்றாக பேசினார்.அவரிடம் அனுஹாசன் கேட்ட கேள்விகளுக்ககு திறம் பட பதில்கள் சொன்னார்.உதாரணத்துக்கு அனு கேட்ட 'உங்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை/எண்ணமிருக்கிறதா என்ற கேள்விக்கு, 'இதற்க்கு முன்னால் வரை அரசியலில் கண்டிப்பாக ஈடுபடும் எண்ணமிருந்ததில்லை,ஆனால் இப்போதுஅந்த மாதிரி ஒரு எண்ணமில்லை என்றார்.

நிகழ்ச்சியில் பங்கு பெறும் பிரபலங்களை பற்றிய விவரங்களை முதலிலியே தொகுத்து அதை வைத்து கேள்விகள் கேட்பது தான்வழக்கம்.கனிமொழி வேகமாக பைக் ஓட்டும் பழக்கமுடையவராம்.

'இப்போது எப்படி பைக் வேகமாக ஓட்டுவீர்களா?' என்ற கேள்விக்கு'ஒரு வேளை அப்படி ஓட்டி ஏதும் பிரச்சினை ஆகி விட்டால் அதையே நாளை தலைப்பு செய்தி ஆக்கி விடுவார்கள் என்பதால் இப்போதெல்லாம்வேகமாக ஓட்டுவதில்லை ' என்றார்.

அதன் பின் வந்த பாம்பே ஜெயஸ்ரீயிடம் சில பார்மல் கேள்விகள் கேட்டார் அனு. பாம்பே ஜெயஸ்ரீ முதன் முதலில் பாடிய பாடல் 'மின்னலே' படத்தில்வரும் 'வசீகரா' என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் .ஆனால் அதில்லை!!. அவரின் முதல் பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுடன் ஒரு படத்திற்க்கு பாடியபாடல் தான்.அந்த படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.அந்த பாடலை பாடிக் காட்டும் படி அனுவும்,கனிமொழியும் கேட்கஇவர் அழகாக பாடிக்காட்டினார்.

அந்த படத்தின் பெயரை அவர் ஒரு விளம்பரத்திற்க்கு அப்புறம் சொல்வதாக சொன்னார்.அதற்க்குள் என் அறை நண்பர்கள்'பூப்பறிக்க நீயும் போகாதே' னு பாடிக்கொண்டிருந்த த்ரிஷாவை பார்த்து ஜொள்ளு வடிக்க அதற்குள் விளம்பரம் முடிந்து அவர் அந்த படத்தின் பெயரையும் சொல்லி முடித்துவிட்டார்.யாரேனும் அந்த நிகழ்ச்சியை பார்த்திருந்தால் தயவு செய்து எல்லாருக்கும்,எனக்கும் சொல்லவும்.

அப்புறம் கனிமொழியின் கவிதைகள் பற்றி பேச்சு திரும்பியது.தன் கவிதைகளை அப்பா படித்து விமர்சனங்கள் செய்வார் என்றும்,தனக்கு கவிதை எழுதுவது தான் மிகவும் பிடித்தமான விஷயம் என்றார்.உடல் அங்கங்களை வைத்து கவிதை எழுதிய பெண் கவிஞர்களை பற்றி பேசும் போது, ஆண் கவிஞர்கள் பெண்களை பற்றி அருவருக்கத்தக்க வரிகளை எழுதுவதை சாடினார்.அந்த கவிதை புத்தகம் பற்றிய சர்ச்சையின் போதுஒரு ஆண் கவிஞர் ,அந்த கவிதை எழுதியவரை ,அவர் பெண்ணே இல்லை என்றெல்லாம் பேசியதை குறிப்பிட்டார்.

கனிமொழியும்,பாம்பே ஜெயஸ்ரீயும் இணைந்து சிலப்பதிகார பாடல்களுக்கு இசையமைத்து ,கனிமொழி கவிதை எழுத,ஜெயஸ்ரீ பாடியுள்ளார்கள்.அதில் இருந்து கனிமொழி ஒருகவிதை வாசிக்க,ஜெயஸ்ரீ அழகாக பாடிக் காட்டினார்.தன் அம்மாவின் விருப்பதிற்க்காக தான் ஆரம்ப காலங்களில் தான் பாட ஆரம்பித்ததாக ஜெயஸ்ரீ சொன்னார்.சில பாடல்களை பாடியும் காட்டினார்.

அடுத்து அந்த பிரபலங்களை பற்றி அவர்களின் நண்பர்கள்,கணவன்/மனைவி,நண்பர்கள் சொல்லும் அந்த பார்ட்டில், கனிமொழியை பற்றி சுஜாதா பேசினார்.கனிமொழியை பிரபலபடுத்தியதில் சுஜாதா பங்கிருக்கிறது என்றால் மிகையாகாது.'கற்றதும் பெற்றதும்' ல் பல தடவை கனிமொழி பற்றி எழுதியுள்ளார்.

'கனிமொழி நீண்ட காலம் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன்,அவர் சீக்கிரமே அடுத்த நிலைக்கு சென்று விடுவார்' என்றார் சுஜாதா.மேலும் கனிமொழியின் 'கருவறை வாசனை' தொகுப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசினார்.சுஜாதவால் தொடர்ச்சியாக,கோர்வையாக பேச முடியவில்லை,வார்த்தைகள் மாற்றி மாற்றி போட்டுபேசினார்,இவரால் எழுதும் போது எப்படி இவ்வளவு இளமையாக,கோர்வையாக எழுத முடிகிறது என நினைத்து பார்த்துக் கொண்டேன்.

கனிமொழியின் பேச்சும்,அந்த நளினமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டதென்னவோ உண்மை தான்.அதனால் அவரை பற்றியும்,அவரின் 'கருத்து.காம்' வெப்சைட்டையும் பற்றியும் கூகிலில் தேடியெடுத்துபடித்து உங்களுக்காகவும் இங்கே படைத்திருக்கிறேன்.

தோழி.காம் -ல் அவர் ஒரு காலம்(பத்தி) எழுதுகிறார்.அவரை பற்றி பல ப்ளாகர்கள் நல்ல விதாமாக எழுதவில்லை,பெரும்பாலம் அவரின் தந்தையை சார்ந்து அவரை விமர்சித்தும்,அரசியலோடு தொடர்பு படுத்தியுமே எழுதியிருந்தார்கள்.அவரின் கவிதைகளை பற்றி ஒரு சிலர் எழுதியிருந்தார்கள்.எல்லாவற்றியும் இங்கே மொத்தமாக கொடுத்திருக்கிறேன்.

கனிமொழியை பற்றி வேறு விவரங்கள்,அவரது கவிதைகள் யாருக்காவது படிக்க கிடைத்தால் தயய் செய்து பகிர்ந்து கொள்ளவும்.இனி அவரின் கவிதைகளை படியுங்கள்.

அவளின் கருவறை மனத்தை
அள்ளி அள்ளி என்
வீடெங்கும் தெளித்து
சுருண்டு படுத்துத் தூங்கிப்போகவேண்டும்

உதவி:
http://mahendhiran.blogspot.com/2006/05/blog-post_25.html

மூடிய விழிகளைத் தாண்டி
துளைக்கின்றது குத்திட்ட பார்வை
அசைவற்ற முகதில் உறைந்து
கிடக்கிறது புன்னகை.
சொல்லொணாப் பதற்றங்கள்
நிறைக்கின்றன என்னை.
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்
குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு
குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு
நடந்த சாலைகளை
ஓய்ந்து விரிந்த இரவுகளில் கனவாய்
வேண்டுதலாய் யாசித்துசிறு
பிசிறில்லாமல் ஒத்திகை
பார்க்கப்பட்ட இத்தருணம்
சிதறி உருள்கிறது
தானேவகுக்கும் பாதைகளில்
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்து பேழைகள் திறக்கின்றன
பேய்களும் தேவதைகளும் ஒருங்கே
அலையும் காடுகளில் முகையும் பூக்களின்
மணம் திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித்துவளும்
கரங்கள்.

-கனிமொழி


விழி நிறைய விடியும் என்ற
கனவுகளோடு காத்திருக்கிறோம்
வழி நெடுகிலும் நட்சத்திரங்களின்
அணிவகுப்பு
தங்கத் தாரகைகள், புதிய சூரியன்கள்
புயல்கள், காட்டாறுகள்,சிகரங்கள்
மாவீரர்கள்,அறிவுஜீவிகள், அறிஞர்கள்
வாய் பிளந்து நிற்கிறோம்
பொங்கிப் பிரவாகமாகும் நெகிழ்ச்சியோடு
சிலிர்த்து,உச்சம் தொடும் உணர்வோடு
வெடித்து வானம் கிழிக்கும்
வாத்தியங்களோடு காய்ந்து
சிறுத்த நாபிகள் கிழித்துச்
சிதறும் வாழ்த்தொலிகள்
குளிர்ப் பொய்கையைப்போல்
குழந்தையின் மென்ஸ்பரிசம் போல்,
மகரந்தம் சுமக்கும் தென்றலைப் போல்
மெல்லிய பட்டின் இழைகளைப்போல்,
எங்களை உயிர்வரைதழுவிச் செல்கிறது
அவர்களின் ஆகர்ஷம் மிகு பார்வைகள்.
உயிர்ப் பூக்கள் சிலிர்த்து
எழுந்து சுவாசப்பைகளை அடைக்கின்றன
காதலும் காமமும் தொடாத
சிகரங்களில் உறைகிறது காலம்.
நேர்த்தி மிகுந்த விளிப்புகள்,
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள்,
எனக்கே எனக்கேயானதாகிறது.
எனது செவிகளை, புலன்களை
செயல்களை வருடி நிறைக்கிறது.
இனி என் வித்துக்கள்
உனது நிலங்களில் மட்டுமே
விதைக்கப்படும்.நடுநிசிக் களவில் உயிர்க்கும்
முகமற்று நொதிக்கும் வாழ்வு
விடிந்தபின் விரியும் கள்ளிப்
பாலையின் வெடித்த நிலங்கள்
புழுதிக் காற்றில் அலையும் காய்ந்தவிந்துகள்
வண்புணர்வில் புழை கிழிந்துகதறும்
சிறுமியைப்போல்மருண்டு அழுகிறேன்
இருண்மையின் இருள்சூழ்ந்த
பகல்பொழுதுகளில் உனது
வித்துக்கள் எப்போதும்
வேலிகளைத் தாண்டுவதே இல்லை.

-கனிமொழி

உதவி:

http://www.alaikal.com/net/index.php?option=com_content&task=categoryionid=2&id=16&Itemid=41

அவரை பற்றிய அறிமுகக் கட்டுரை
http://www.maraththadi.com/article.asp?id=1650


மேலும்
http://pksivakumar.blogspot.com/2004_08_01_pksivakumar_archive.html

தோழி.காமில் அவரது பத்தி
http://www.thozhi.com/issue11/kanimozhi.php.

umakarthick
07-05-2007, 07:21 AM
படித்ததில் பிடித்தது
-----*----------
கடைசி வரிகள்
---------------------


ஒன்றரை வருடங்களுக்கு
முன்நீ எழுதியகடைசிக் கடிதத்தின்
கடைசி வரிகள்..
"இனிமேல் இத்தகைய
இடைவெளி இருக்காது
அடிக்கடி கடிதம் எழுதுவேன்."

------*--------

காலி
-------
கூட்ட மிகுதியிலும்
காலியாயிருந்தது
அரவாணியின்
பக்கத்து சீட்.

------***-----

புறக்கணிப்பு
------------------

அழுக்குச் சட்டைக்காரனை
புறக்கணித்து
அடுத்தச்சீட்டில்
அமர்ந்தேன்.
என்னை தாண்டி
முன்சீட்டில் அமர்ந்தவன்
எந்தக் குறையை
கண்டான் என்னிடம்?


கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

-------- ப்ரியன்
-*---

ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்.

நீயோ பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்.

--*--

ஒழுங்கான வளைவுகளோடு
தெருநெடுக
நீர்க்கோடு தெரிகிறது
நின்றுமோள முடியாமல்
வண்டியிழுத்துப்
போகின்றதொரு மாடு.

--*--

'நல்வரவு' எழுதிய கயிற்று மிதிபாய்
கொறித்துக் கொறித்துக் கொண்டு போய்
கூடு சமைக்கிறது அணில்
மனைவியும் பணிக்குப் போகும் பகல் நேர வீடு

umakarthick
07-05-2007, 08:22 AM
படித்ததில் பிடித்தது
கண்ணாடி - கவிதை
----------------------------


எப்போதும் எதையாவது
பிரபலித்துக் கொண்டிருக்கிறது
சில நேரங்களில் தேவையானதை
பல நேரங்களில் தேவையற்றதை


அன்றொருநாள் உள்நுழைந்த குருவியொன்று
இரண்டே நொடிகளில் சட்டென தரைதட்டியது
இரத்தச் சிதறல்களுடன்
கண்ணாடியில் தான் பார்த்தேன்

பின்பொரு சமயம்
தங்கை அவசர அவசரமாய்
என் நண்பனுக்கு முத்தம் கொடுத்துப் போனாள்
செய்வதறியாமல் சலனங்களின்றி நானும் கண்ணாடியும்

இன்னொரு சமயம்
போர்வை கசங்கும் என் முதல் வேகத்தில்
ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொண்டிருந்தபோது
கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்ததை
நான் பார்த்தேன் கொஞ்சம் லஜ்ஜையோடு

இந்தக் கண்ணாடி அலுப்புக்குரியது
கால நேரங்களின்றி கட்டுப்பாடின்றி
பிரதிபலித்து பிரதிபலித்து
நாம் பார்க்காத நேரங்களில்
கண்ணாடி பிரதிபலிப்பதில்லை என்ற
புனைவை ஏற்றி வைத்தேன்
குறைந்தபட்சம் என் சுவாரஸ்யத்திற்காகவேணும்

----*----

கேட்க தோன்றுதே
கீழ்த்தெரு பைத்தியம் சொல்லிக்கொண்டு போனான்
அண்ணா போல் அறிவை தேடாதே
பெரியார் போல் பகுத்தறிவை பேசாதே
எம்ஜிஆர் போல் ஏழைக்கு உதவாதே
காமராஜ் போல் காரியத்தில் மூழ்காதே
கண்ணகி போல் கற்ப்பாயிருக்காதே
கண்ணதாசன் போல் கவிதையாய் கொட்டாதே
களிப்பாய் இரு தினமும் களிப்பாய் இரு
அதிகமாய் போனால் உலகம் என்ன செய்யும்?
சிலை வைக்கும்.

------*---------

அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.


--------*-----------

எண்ணிப் புள்ளி வைத்த
இழைக் கோலம் மறந்து போகும்.
உண்ணச் சோறு எடுத்தால்
உன் நினைப்பால் புரைக்கேறும்
தண்ணீருக்கு உருளும் ராட்டை
உன்னைப் போல் முரடாய் பேசும்
துணி உலர்த்தும் கொடிக் கயிற்றில்
அணி வகுக்கும் அண்டங் காக்கை
உன் பெயரைச் சொல்லிக் கரையும்
பாடத்தில் வரிகள் மாறிபாதியில்
உன் முகம் தெரியும்
உனக்கென்ன புத்தகம் கவிதையொன்று
எப்படியோ பொழுது போகும்.........எனக்கு?
உன் நினைவே கவிதையாகும்.
--மாலன்

-------****-------

பிரிவுகள்
----------------

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

--thamarai

--*----

" இந்த இல்லறக் கிரிக்கட்டில்
கட்டிலறைக்கும் சமயலறைக்கும்
ரன்-கள் எடுத்தே ரணமாய்ப்போனவள்"

-----*---
நான் இந்தக் கவிதை வரிகளைப் படித்திருக்க வேண்டும்.
ஒரு தேவதையின் நகல் பனியில் உருகுவதைப் போன்ற
மெழுகுவர்த்தியின் நிழலில் துடிக்கும் என் நிழல் போன்ற
இசைஞனின் கையசைவில் உடனிழையும் இசை போன்ற
எனது பள்ளிக்காலப் பழைய புகைப்படைத்தைப் போன்ற
உணவிற்குப் பின் விரும்பிக் கேட்கப்படும் இசை போன்ற
என்னைக் கடந்து செல்லும் இனிய நறுமணம் போன்ற
உறக்கத்தைக் கலைக்கும் இரட்டைச் சிந்தனை போன்ற
பாம்பின் வழவழப்பையும், குளிர்ச்சியையும் போன்ற
தீக்குச்சியிலிருந்து திரிக்குத் தாவும் நெருப்பு போன்ற
பார்வையற்ற ஒருவனின் அழகற்ற மனைவி போன்ற
மற்றவர்க்கு நிரூபிக்க வாழும் ஒரு வாழ்க்கையைப் போன்ற
இனி சோதித்துப் பார்க்க ஒன்றுமில்லாத ஒன்றைப் போன்ற
விரும்பிய செயல்களைச் சாதனையாக எண்ணுவது போன்ற
யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு உண்மையைப் போன்ற
அன்பிற்கும், தர்க்கவாதத்திற்கும் இடையிலான தேர்வு போன்ற
இந்தக் கவிதை வரிகளை நான் படித்திருக்க வேண்டும்.

umakarthick
08-05-2007, 06:29 AM
இதை யாரும் படிக்க வில்லையா இன்னும்?

umakarthick
08-05-2007, 09:36 AM
நீங்க மிஸ் பண்ணுறீங்க இதை

ஷீ-நிசி
08-05-2007, 10:04 AM
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

முத்திரைக் கவிதைகளைப் படித்திருக்கிறேன்..... அதில் இது டாப்.. இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாத கவிதை...

இன்னொன்று ஒன்று உண்டு முத்திரைக்கவிதையில்...

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும
அப்பா..

அதற்காகவேனும் அவனுடன்
ஓடிவிட தோணுகிறது...

என்று வரும்.. அந்தக் கவிதை இருந்தால் இடுங்கள் நண்பரே!


அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.



" இந்த இல்லறக் கிரிக்கட்டில்
கட்டிலறைக்கும் சமயலறைக்கும்
ரன்-கள் எடுத்தே ரணமாய்ப்போனவள்"

ரசித்தேன்.....

மற்றவர்கள் ரகசியமாய் ரசிக்கிறார்களோ என்னவோ..
பார்க்கவில்லையென்று கவலைப்படாதீர்கள் நண்பரே!

தரமான பதிவுகள் அழகான பெண்ணைப் போல, கண்டிப்பாய் உற்றுநோக்க வருவார்கள்...

umakarthick
08-05-2007, 10:10 AM
கண்டிப்பாக இடுவேன் ..கொஞ்சம் கொஞ்சமாக இடுவேன்.

poo
09-05-2007, 07:08 AM
முத்திரைக் கவிதைகள் அருமை.. ஷீ- சுட்டிய கவிதை எனக்கும் ரொம்பப் பிடித்திருந்தது.. அப்புறம் அந்த கோயில்-பக்தன் நச்...


கொஞ்சம் கொஞ்சமாக இட்டீர்களானால் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டோம்.. கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.. படிக்க ஆரம்பித்தால் விடமுடியவில்லை.. ஆனால் படிக்க ஆரம்பிக்கவே தயக்கமாக இருக்கிறது.. பிரித்துக் கொடுங்கள் நண்பரே..

umakarthick
09-05-2007, 08:23 AM
கண்டிப்பாக செய்கிறேன் நண்பரே

umakarthick
09-05-2007, 08:26 AM
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
- குழந்தை, பி.பழனிச்சாமி
---------------------------------------------------

சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என

பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.


- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி

---------------------------------------------------

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
- வலி, ஜி.ஆர்.விஜய்


நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு

umakarthick
10-05-2007, 06:09 AM
தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!


- புண்ணியம், க.பாலவெங்கடேசன்
---------------------------------------------------

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு


- குற்ற மனசு, ஜெ.முருகன்

---------------------------------------------------

வலங்கைமான்
பாடைகட்டி மாரியம்மன் திருவிழால
கலர் கலரா வாங்கின
வளையலும்
டவுன்காரங்க கொண்டாந்து போட்ட
சீனா சர்க்கஸூம்
கோயிலைச் சுத்தி வந்த பொறவு
சுத்தின குடைராட்டினமும்
வெயிலுக்கு இதமா கடிச்ச
குச்சி ஐஸும் தந்த
எல்லா சந்தோஷமும்
குழந்தையின் ஒரு கொலுசோடு
தொலைஞ்சு போயிடுச்சு..
கூட்டத்தில்!

- தொலைத்தல், விஷாலி


---------------------------------------------------

கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!

தேடல், வெ.கிருஷ்ணவேணி

---------------------------------------------------

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி

கவனம், சே.சதாசிவம்

---------------------------------------------------

முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"


- முரண், பி.மணிகண்டன்