PDA

View Full Version : வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது!



ஜோய்ஸ்
07-05-2007, 07:15 AM
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.

இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.

சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.

தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.

தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.

அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார்.
நன்றி- அன்பழகன்.

வெற்றி
09-05-2007, 01:22 PM
மொக்கச்சாமி: அவுக சொல்லுரதுல்ல ஒரு நியாயம் இருக்கில்லா!!!!
கைப்புள்ள : இன்னாபா ...ரவுசு வுடுரியே...அப்பால நம்ம லாங்வேஜ் மேலே எப்ப்ப்டி ரெஸ்பெக்டு வரும்...
மாப்பு: மருவாதிங்கிறது அழகான மொழியிலே தானுங் வரும்...பிச்சி பிச்சி பேசினா இருக்கிற மருவாதியும் போயுடுங்...ஏனுங்க நான் சொல்லுறது சரி தானுங்களே???
வடிவேலு: என்ன பேசுதே??? தமில்லே தானே பேசுதோம்..புறவு என்ன??
(இது உங்களை புண்படுத்த அல்ல ...வட்டாரத்தமிழும் தமிழே...அந்த பதிவுகளும் தேவை என்பது இந்த அடியேனின் ஆசை)

அறிஞர்
09-05-2007, 01:24 PM
மொழியை பாதுகாக்க நல்ல திட்டம் தான்.. சிறுகதைகளில் வட்டார மொழிகளை கைகொள்ளலாம்.

நூல்கள், பெரிய நாவல்களில்.... மொழிகளை பாதுகாக்க வேண்டும்.
----
மொக்கை ரவுசு தாங்கலப்பா...

சுட்டிபையன்
09-05-2007, 01:29 PM
வட்டாரச்சொல்லில் நூலகள் எழுதாமல் விடலாம், ஆனால் அவர்கள் வட்டாரப் பேச்சை மாற்ற முடியுமா........?

சிதம்பரம்
21-05-2007, 06:23 AM
ஒரு இடத்தில் நடப்பதாக சொல்லப்படும் கதையை அந்த வட்டார வழக்கில் சொல்லாமல் எந்த வழக்கில் சொல்லுவது...

நடைமுறையில் சாத்தியமில்லை

lolluvathiyar
21-05-2007, 08:56 AM
வட்டார தமிழில் எழுதுவது தவறென்று எப்படி கூறலாம்
சரி வட்டார தமிழில் நான் எழுத மாட்டேன் என்றே எழுதி விடுங்கள்.
ஆனால் நீங்கள் மட்டுமே அதை படித்து விடுங்கள்

ஒன்றை சொல்ல ஆசை படுகிறேன் கோவை தமிழ் வட்டார தமிழ்தான்
ஆனால் அதை கோவை வட்டாரம் தவிர வேறு வட்டாரமும் புரிந்து கொள்ள முடியும்

பாரதி
21-05-2007, 05:46 PM
அன்பழகனின் கூற்று ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து..!

(இப்பதிவு ஏன் இப்பகுதியில் உள்ளது..?)

மனோஜ்
21-05-2007, 06:23 PM
வட்டராத் தமிழ் என்பது எந்த வகையிலும் தமிழைபதிப்பதில்லை

ஜோய்ஸ்
23-05-2007, 09:06 AM
வட்டராத் தமிழ் என்பது எந்த வகையிலும் தமிழைபதிப்பதில்லை

மனோஜ் அண்னா,
தமிழை பாதிப்பதில்லை என்றல்லவா இருக்க வேண்டும்!

இது அன்பழகனார் கூற்றே அல்லாது நம் கூற்று அல்லவே.அவரின் சொந்த கருத்தாகும் என்றே நினைக்கிறேன்.

மருதம்
04-08-2007, 09:41 AM
ஜாய்ஸ் கருத்துக்களில் எழுபதுக்கு சதவீதத்தில் வாக்களிக்கின்றேன்.


எப்படி என்கிறீர்களா.

உலக மயமாக்கலான தமிழ் மொழிக்கு இருக்கும் நடை பொதுநடை.அப்படி இருக்கும்போது வட்டார பேச்சிலோ நடையிலோ கதைகள் இருக்கும்போது அங்கே
தற்போதையா சினிமாத்துறையில் வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் மதுரைத்தமிழின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது என்பேன்.

அதேபோல் தமிழ் நடையில் வட்டார்த்தமிழ் வந்துவிட்டால் ஆக்கிரமிப்புத்தன்மையில் வட்டாரப்போட்டி நிலவி கடைசியில் யார் செல்வாக்கானவர் என்ற பாதைக்கு திரும்பி வளர வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

வட்டாரத்தமிழ் இருக்கவேன்டியதுதான் அதாவகு
ஜெயகாந்தன் எப்படி அவர் கதைகளில் சென்னை சேரித்தமிழ் நடையில் ஒன்றிரண்டை எழுக்டினாரோ அதுபோல் இருக்கலாம்.

இது யாரையும் புண்படுத்தாது என நினைக்கிறேன்.