PDA

View Full Version : சர்க்கரை மருந்து!.



poo
12-05-2003, 04:17 PM
சர்க்கரை வியாதிக்கு ஹைதரபாத் ரெட்டி மருந்து நிறுவனத்தார் புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து(DRF2725) இன்சுலின் சென்சிடைஸர் என்னும் கட்டமைப்பை சேர்ந்தது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவல்லது. உடல் தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் எடுப்பதை தவிர்க்கவும், அதிகமாக பயன்படுத்துவதை குறைக்கவும் உதவுகிறதாம்!!

இளசு
12-05-2003, 05:05 PM
புழக்கத்துக்கு வரட்டும்.... அதுவரை
முன்னெச்சரிக்கை கலந்த வாழ்த்துகள் ரெட்டி லேபுக்கு...

pnk
13-05-2003, 05:27 AM
இஇனிப்பு வியாதியஸ்தர்களுக்கு இஇனிப்பான செய்திதான்...

karikaalan
14-05-2003, 11:01 AM
நோவா நார்டிஸ்க் கம்பெனிக்காரர்கள் இந்த மருந்து செய்முறைக்கான லைஸென்ஸ் வாங்கி சோதனைகள் செய்யத் துவங்கியபின்னர் சில முரண்பாடுகள் கண்டறிந்தனால், கை விட்டுவிட்டதாக செய்தி. இதற்குப் பின்னர் Dr.ரெட்டி ஷேர் விலைகள் கணிசமாகக் குறைந்தது.

ஒரு முரண்பாடு -- உபயோகிக்க முன்வந்த guineapig மனிதர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமானதாகச் செய்தி.

===கரிகாலன்

Emperor
14-05-2003, 11:45 AM
கண்டதை வாங்கி போட்டுக்கொண்டு பத்தோட பதினொன்னு அத்தோட இதுவும் ஒன்னு என்ற மாதிர இருக்குற வியாதியோட வேற வியாதியையும் வாங்கிட்டு, இதெல்லாம் தேவைதானா?
அது அங்கிரிக்கப்பட்டு வெளியில் வந்தால் பார்க்கலாம், எனக்கு தெரிந்த பல பேருக்கு இந்நோய் உள்ளது, அவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாக அமைந்தால் மகிழ்வார்கள்.

pgk53
15-05-2003, 04:47 PM
நல்ல செய்திதான்....ஆனால் என்ன விலையில் கொடுக்கப்போகிறார்களோ?
எளியவர்களும் பயன்படுத்தும் வகையில் குறைவான விலையில் கிடத்தால் நல்லது.
நன்றி.

விகடன்
21-08-2008, 10:53 AM
சர்க்கரைவியாதியோடு சம்பந்தப்பட்டதால் உலகில் அதிகமானோரிற்ற்கு இது உதவும். ....

Tamilmagal
17-04-2009, 04:21 PM
தற்பொழுது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன (இன்னும் வந்த வண்ணம் உள்ளன)
ஆனால், சர்க்கரை நோயை மருந்தால் மட்டும் கட்டுபடுத்த முடியாது.
மருந்து மற்றும் நல்ல உணவுப்பளக்கம், சீரான உடல்பயிற்ச்சி மூலமே இந்நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கோள்ள முடியும்.