PDA

View Full Version : பூமியில் ஒரு வானவில்!



ஷீ-நிசி
07-05-2007, 07:06 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Pair1.jpg

வளைந்திருக்கவேண்டிய
வானவில்லொன்று,
கலைந்துப் போனதில்..
வானம் வர்ணமானது!

கலைந்துபோன
வானவில்லைக் கண்டு!
சற்றே கலங்கினர்
கடற்கரை காதலர்கள்!

எண்ணற்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றும் வானவில்லை,

மண்ணென்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றவைப்போமா?!

காதலன் முடிக்குமுன்பே
தயாரானாள் காதலி,
வானவில்லைப் பெற்று
தாயாகிட....

மண்ணில் கால் பதித்தனர்.
கண்ணில் கண் பதித்தனர்,
உயரே கரம் பதித்தனர்!

விழுந்தால்.....

நீ என்மீது,
நான் உன்மீது!
நாம் மண்மீது! -என்ற
இடைவெளியில்
விலகி நின்றனர்

ஆர்வம் தாளாமல்,

கடலுக்கடியிலிருந்த
கற்பாறைகளெல்லாம்
சிரமம் பார்க்காமல்
சிரம் நீட்டின வெளியே,

கட்டியணைக்காத
காதலர்கள் வழியே.
கட்டியெழுப்பிய
கரங்களின் வழியே,

உருக்குலைந்த வானவில்
உருப்பெற்றது மீண்டும்!

இம்முறை
பூமி வர்ணமானது!

ஓவியன்
07-05-2007, 07:44 AM
மண்ணென்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றவைப்போமா?!

காதலன் முடிக்குமுன்பே
தயாரானாள் காதலி,
வானவில்லைப் பெற்று
தாயாகிட....

.............
உருக்குலைந்த வானவில்
உருப்பெற்றது மீண்டும்!

இம்முறை
பூமி வர்ணமானது!


படத்திற்கு கவிதையா ஷீ?
உங்கள் கவி வரிகளால் அந்த படம் மேலும் அழகு பெறுகிறது.

''கட்டியணைக்காத
காதலர்கள் வழியே.
கட்டியெழுப்பிய
கரங்களின் வழியே,


இந்த வரிகள் என் மனசைக் கொள்ளை கொண்டு தொல்லை தருகின்றன:D

கடைசியாகக் கண்டு கொண்டேன் ஷீயால் வரிகள் அழகு பெறும் என்று

இரசித்தேன்,
இரசிக்கிறேன்,
இரசித்துக் கொண்டே இருப்பேன்.........
காலமெல்லாம் உங்கள் வரிகளை ஷீ.

ஷீ-நிசி
07-05-2007, 08:48 AM
நன்றி ஓவியன்..

உம் அன்பிற்கு என்னிடம் இல்லை வார்த்தைகள்....

சுட்டிபையன்
07-05-2007, 12:29 PM
உங்கள் படத்திற்கேற்ற கவிதை அழகானது
அற்புதமான வரிகள்
மேலும் பல கவிதைகள் எழுதுங்கள்

ஷீ-நிசி
07-05-2007, 03:24 PM
நன்றி சுட்டிப்பையன்

ஆதவா
07-05-2007, 03:34 PM
சான்ஸே இல்லைங்க ஷீ!!!... காட்சிக்கவிதை வெகு பிரமாதம்... அப்பா... வொண்டர். பிரமாதம். ஒவ்வொரு
பதிவுகளும் நுணுக்கமாக பதியப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்... என் மனதில் இடம் பிடிக்கும் கவிதைகளில்
இதுவும் நிச்சயம் ஒன்று. கவிஞருக்கே உண்டான நயம் அழகாக இருக்கிறது. எதுகைகள் இலக்கணத்தைச்
சொல்லுகிறது... சூப்பர்....

வளைந்திருக்கவேண்டிய
வானவில்லொன்று,
கலைந்துப் போனதில்..
வானம் வர்ணமானது!

அந்த படத்தில் இருப்பது அப்படித்தான். வெகு பிரமாதம்.. காட்சிக்குக் காட்சி இப்படியே சொல்லலாம்..
வர்ணமான வானத்தை கலைந்துபோன வானமாக கற்பனை செய்வது ம்ம்ம்... நமக்கு வராது சாரே!

கலைந்துபோன
வானவில்லைக் கண்டு!
சற்றே கலங்கினர்
கடற்கரை காதலர்கள்!

இருக்காதா பின்னே? கடற்கரைக் காதலரெனும்போதே பாத்திர அறிமுகமாயிற்று.. யதார்த்தமான பதிவுகள்...

எண்ணற்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றும் வானவில்லை,
மண்ணென்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றவைப்போமா?!

அருமையான எதுகை... அழகான பொருத்தம். சுட்டுபோட்டாலும் நமக்கு வராது.. விமர்சனம் எழுதவே
தயங்குகிறேனப்பா... சரி தோன்ற வையுங்கள்... அடுத்து...

காதலன் முடிக்குமுன்பே
தயாரானாள் காதலி,
வானவில்லைப் பெற்று
தாயாகிட....

பல்வேறு அர்த்தம் கொடுக்கிறது. தயாராகிடவா தாயாகிடவா? என் அர்த்தம் இருக்கட்டும். இங்கே மட்டும்
விளக்கம் கொடுத்துவிடுங்கள்... ஆனால் வரியமைப்பு சூப்பர்

மண்ணில் கால் பதித்தனர்.
கண்ணில் கண் பதித்தனர்,
உயரே கரம் பதித்தனர்!

அந்த படத்திற்குத் தக்க... என்னமா எழுதிறீங்க..

விழுந்தால்.....

நீ என்மீது,
நான் உன்மீது!
நாம் மண்மீது! -என்ற
இடைவெளியில்
விலகி நின்றனர்

அடடா... சொக்குது. வரிகள் கலக்கல்... போங்க... பாராட்டி பாராட்டி எனக்கு போரடிக்குது...

ஆர்வம் தாளாமல்,

கடலுக்கடியிலிருந்த
கற்பாறைகளெல்லாம்
சிரமம் பார்க்காமல்
சிரம் நீட்டின வெளியே,

அழகிய வரிகள். கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதை அழகிய பதிவு செய்திருக்கிறீர்கள்.
காதலர்களை கல்கூட பார்க்கிறதா? ம்ம்....

கட்டியணைக்காத
காதலர்கள் வழியே.
கட்டியெழுப்பிய
கரங்களின் வழியே,

கலக்கல்... அவர்கள் கட்டியணைக்கவில்லை எனினும் கரங்கள் அணைத்திருக்கிறது. அருமை அருமை.

உருக்குலைந்த வானவில்
உருப்பெற்றது மீண்டும்!

என்ன சொல்ல நான்?

இம்முறை
பூமி வர்ணமானது!

முடிவு..... யப்பா... இதுதானே முடிவு..

ஷீ!! இந்த கவிதை என் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிதை.. அழகிய வார்த்ததக் கோர்ப்புகள், எதுகைகள்,
காட்சியைத் துள்ளியமாக படம்பிடித்தமை கவிதைத்திறன்.... எப்பா..... மலைக்கவைக்கிறது. நாளொன்றுக்கு
கவிதை எழுதும் என்னை ஒரு கவிஞன் என்று மார்தட்டுவதைவிட நாள் கணக்கானாலும் அழகிய முத்துக்கள்
தரும் உம்மை என் நெஞ்சம் தாலாட்டுதப்பா... வார்த்தைகள் இன்னும் இடச் சொல்லுகிறது உம்மைப்
பாராட்ட...

என் பார்வையில் தவறுகள் இல்லை. கவிதைக்கு 250 பணம்..

ஷீ-நிசி
07-05-2007, 03:41 PM
காதலன் முடிக்குமுன்பே
தயாரானாள் காதலி,
வானவில்லைப் பெற்று
தாயாகிட....

பல்வேறு அர்த்தம் கொடுக்கிறது. தயாராகிடவா தாயாகிடவா? என் அர்த்தம் இருக்கட்டும். இங்கே மட்டும்
விளக்கம் கொடுத்துவிடுங்கள்... ஆனால் வரியமைப்பு சூப்பர்

நன்றி ஆதவா...

அது ஒன்றுமில்லை... இருவர் சேர்ந்து உருவாக்கும் வானவில்லிற்கு அவள்தானே தாய்...

அவள் தயாரானாள் தாயாகிட.. அவ்வளவே...

விமர்சனம் மிக அருமை ஆதவா.. படம் பார்த்தவுடவே கவிதை எழுதிட தோன்றியது.. ஒரு மணி நேரத்திற்குள்ளாய் எழுதிவிட்டேன்...

நன்றி ஆதவா...

சக்தி
07-05-2007, 03:52 PM
தூள் கவிதை, படமும் சூப்பர்

மனோஜ்
07-05-2007, 04:02 PM
அருமை ஷீ
கவிதை வரிகள் அருமையாய் உள்ளது
நீ என்மீது,
நான் உன்மீது!
நாம் மண்மீது!
வார்த்தை அருமை ஷீ

ஷீ-நிசி
07-05-2007, 04:15 PM
நன்றி ராஜா, நன்றி மனோஜ்

பிச்சி
08-05-2007, 04:38 AM
எப்படி அண்ணா இப்படி எழுதிறீங்க. அடயப்பா. படத்திக்கு ரொம்ப சம்பந்தமா இருக்கு. கற்பனை தூள்.

அன்பு
பிச்சி

ஷீ-நிசி
08-05-2007, 04:46 AM
நன்றி பிச்சி....

என்ன சொல்றது... விவேக் சொல்றமாதிரு அதுவா வருது....

poo
08-05-2007, 07:23 AM
ஆதவனின் பதிலைப் படிக்கும்போதே மனம் சொல்லிவிட்டது... நீ வேற இப்படிச் சொல்லி ஷீ-யை இன்னமும் வெட்கத்தில் நெளிய வைக்கனும்னானு... உண்மையில் வியந்து போகிறேன் ஷீ.. நேர்த்தியாக எழுதுவதெப்படின்னு உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்... உங்களிடமிருந்து கவிதைகள் வெளிவர ஆகும் தாமதத்திற்கான காரணமே
அதுதானோ?!...

பாராட்டுக்கள் ஷீ... கவிதையை படித்தபின் படத்தைப் பார்க்க வேண்டாம்.. இனி கவிதையை படித்தாலே.. கற்பனையில் காட்சி தெரிகிறது.. கவிஞரை உச்சி முகரத் தோணுகிறது..

ஷீ-நிசி
08-05-2007, 07:36 AM
பூ! உங்களின் வாழ்த்துக்கள் என்னை புன்னைகைக்க வைக்கின்றன.. உங்கள் போன்ற கவி வித்தகர்களிடமிருந்து வாழ்த்துக்களை வாங்கவேண்டுமென்றுதானே ஒவ்வொரு கவிதைக்கும் பார்த்து பார்த்து வார்த்தை என்னும் ஆடைகளை அணிகிறேன்...

என்றும் வேண்டும் உங்கள் கருத்துக்கள்.. மிக்க நன்றி பூ!