PDA

View Full Version : சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மலட்டுத்தனஜோய்ஸ்
07-05-2007, 06:34 AM
சர்க்கரை நோயாளிகளுக்கு, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இந்தியாவில் 20முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு இந்த ஆபத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்பார்வை பாதிப்பு, சிறுநீரக கோளாறு உட்பட சில பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. "சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்' என்று கண்டுபிடித்துள்ளதாக, பிரிட்டன் நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். உலகில் மிக அதிக சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் தான் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 20 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. இவர்களில் இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை கணிசமான பேர் உள்ளனர்.

டில்லி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்பரீஷ் மிட்டல் கூறுகையில், "சர்க்கரை நோயாளிகளில் 50 சதவீதம் பேருக்கு, சர்க்கரை நோய் பாதிப்பால், மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்தும் உண்டு. ரத்தத்தில், சர்க்கரை அதிகம் உள்ளதால், விந்து செல்கள் குறைகிறது. அதனால், மலட்டுத்தன்மை அதிகரிக்க வாய்ப்புண்டு' என்றார். "மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு, மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. மலட்டுத்தன்மை போக்க, எங்களிடம் சிகிச்சைக்கு வந்த இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுபோல, வயாக்ரா மாத்திரை பயன்படுத்தும் இளைஞர்கள் 30 சதவீதம் பேர், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது' என்று மும்பை லீலாவதி மருத்துவமனை டாக்டர் நந்திதா தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமலர்.

Gobalan
15-05-2007, 05:11 PM
ஜாய்ஸ், நீங்கள் சொல்வது சரி!

"டையாபடீஸ் ஒரு ஊமை கொல்லி" (ஆங்கிலத்தில் "diabetes is a silent killer" என்று சொல்வார்கள், அதன் தமிழாக்கம்).

இது ஒரு நம் அன்றாட பழக்க வழக்கங்களினால் வரும் வியாதி. இதை தவிர்க்க முடியும் ஒருவன் தன் பழக்க வழக்கங்களை மாற்றி கொண்டால். இந்த வியாதி வயதானவர்களுக்கு தான் வரும் என்று எண்ணி, நம்மில் பலர் சின்ன வயதில் உண்டாகும் தேவையற்ற பழக்கங்களைபற்றி கவலை படுவதில்லை. இதன் விளைவு தான் ஒரிரு-பத்தாண்டுகளில் சக்கிரை வியாதியாக உறுவிடுக்கிறது. ரத்த-அழுத்தம், obesity,etc. இவைகளும் உண்டாகின்றன. நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்திறுக்கிறது. ஆதலால் நம் அன்றாட பழக்க-வழக்கங்களும் வெகுவாக மாறிவிட்டிறுக்கிறது. இதன் ப்ரதிபலிப்பு தான் மிக குறைந்த வயதில் டையபடீஸ் (டைப் இறண்டு) என்னும் சக்கிரை வியாதி வர தோன்றிருக்கிறது.

டையாபடீஸ் வரும் பத்தாண்டுக்குள் உலகில் இருமடங்கு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, வளை-குடா நாடுகள் மற்றும் அமேரிக்காவில் டையாபடிஸின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆதலால் இந்தியாவிலும், அமேரிக்கா, வளை-குடா நாட்டில் வாழும் நம் தமிழ் இளைங்கியர்கள் இப்போதிலிருந்தே இடையும், எடையும் பெருகாமல் இருக்க, நல்ல பழக்கங்களை (உடற்பயர்ச்சி போன்ற) ஏற்படுத்திகோண்டால் டையாபடீஸ் வருவதையும் அதன் பின் விளைவுகளையும் (கண்பார்வை பாதிப்பு, சிறுநீரக கோளாறு, மலட்டுத்தன்மை, etc.) தடுத்து கொள்ளலாம்.

நன்றி, கோபாலன்.

namsec
16-05-2007, 01:40 PM
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி மேலும் இதை வராமல் தடுக்க வழிமுறைகள் தெரிந்தவர்கள் தாங்களுக்கு தெரிந்ததை பதிக்கவும்

vichu49
17-05-2007, 10:12 AM
எனக்கு தெரிந்தவற்றை இங்கே பதிக்கிறேன்

நான் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டது 1984இல்.அல்லோபதி யில் தீர்வு கண்டாலும் எனக்கு சர்க்கரை குறைந்த மட்டத்தில் இருந்துவருவதின் காரணம் நாவல் பழத்தை தினமும் சாப்பிடுவதால் தான். இது கோடை தவிர பிற காலங்களில் கிடைக்காது அதனால் சேமித்து வைக்கிறேன்.

விச்சு

வெற்றி
17-05-2007, 02:06 PM
வெந்தயம் ஒரு அருமருந்து...வாரம் ஒரு முறையேனும் உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரைநோய்(நீரழிவு) யில் இருந்து காத்துக்கொள்ளலாம்..
ஏற்க்கனவே பாதிக்கப்பட்டவர்கள்..ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெந்தயம் உணவில் சேர்த்தால் கட்டுப்பாட்டில் இருக்கும்..

சுட்டிபையன்
17-05-2007, 02:19 PM
நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டுமா?
அப்படியானால், இளைய வயதில் இருந்தே யோகா செய்யுங்கள், எதுவும் உங்களை அண்டாது என்பதை ஏற்காதவர்கள் இல்லை.
நமக்கு எல்லாமே, உள்ளூரில் சொன்னால், கடவுள், பூதம் என்று ஒதுக்கி விடுகிறோம்; ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்வதை பார்த்து செய்யும் போது தான், அடடா! இது நம் பெரியவர்கள் கற்றுத்தந்த முறை தானே...' என்று புத்தி வருகிறது. அப்படித் தான் யோகா என்ற அற்புத உடற்பயிற்சி முறை, நம்மால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இப்போது தான் பலருக்கும் புரிகிறது.
பதஞ்சலி என்ற மாமுனிவர், சிவனுக்கு கற்றுத்தந்தது தான் யோகக்கலை என்று தான் புராணங்கள் சொல்கின்றன. அந்த யோகா தான், இப்போது பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது. அந்த அளவுக்கு அது வியாபாரப் பொருளாகி விட்டது. பதஞ்சலி எழுதி வைத்ததே, இது மனித குலத்துக்கு பயன்பட வேண்டும், அதற்காக பணம் வாங்கக்கூடாது என்று யோகிகளுக்கு எழுதி வைத்துச் சென் றுள்ளார். ஆனால், இன்று, யோகா பயிற்சிக்கென ஆயிரம் கொண்டா, இரண்டாயிரம் கொண்டா என்று வலுக்கட்டாயமாக வாங்கு கின்றனர்.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் குறைக்கவும், மருந்துகளுடன் யோகா மிக முக்கிய பங்கை செலுத்துகிறது என்பது டாக்டர்களின் ஆலோசனை. குறிப்பாக, ஆறு யோகா பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.
சூர்ய நமஸ்கார்: பெரியவர்களை மதிக்கி றோம் என்பதற்காகத்தான் காலில் விழுந்து வணங்கும் முறையை கடைப்பிடிக்கிறோம். ஆனால், குனிந்து, நிமிர முடியாது என்பதால், இப்போதெல்லாம், லேசாக தலையை குனிந்து கையை குவித்து விடுகிறோம்.
ஆனால், உண்மையில், சரியாக விழுந்து வணங்கினால், அதுவே பயிற்சி தான். யோகா வில் அது தான் சூர்ய நமஸ்கார். இதை கற்றுக் கொண்டால், தரையில் விழுந்து வணங்கு வதில் இவ்வளவு நுணுக்கம் இருக்கிறதா என்று நினைப்பீர்கள்.
இதை கற்றுக்கொண்டால், நீங்களே பெரிய வர்களை கண்டால், இப்படித்தான் வணங்கு வீர்கள். தினமும் சூர்ய நமஸ்கார் செய்தால், உடலில் எல்லா அங்கமும் ஏதோ புத்துணர்வு ஏற்பட்டது போல உணர்வீர்கள். ஆசனங்கள்: கையை, காலை நீட்டி, மடக்கி, வளைப்பது தான் யோகா. நோகாமல் செய்ய முடியாது. சில அடிப்படைப் பயிற்சிகள் கற்றுக்கொண்டு, அதை செய்துவந்தாலே போதும். ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு,தசை பிரச்சினைகள் ஓடிப் போய்விடும்.
பிராணாயாமம்: தமிழில் சொன்னால், மூச் சுப் பயிற்சி. நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கிய மான பயிற்சி. மூச்சை இழுத்து விட வேண்டும். சுவாசம் சீராகும்.
தியானம்: கண்களை மூடி சில நிமிடங்கள், நமக்கு பிடித்ததை நினைத்து, அப்படியே உட்கார்ந்திருப்பது. தனி அறையில் அமர்ந்து செய்ய வேண்டும். அடுப்பை அணைத்தேனா தபால்க் காரன் வந்திட்டானா, போன் அலறுதே...' என்றெல் லாம் கவலை வரக்கூடாது. அந்த அள வுக்கு அமைதியான சூழ்நிலை தேவை.
யோகநித்திரை: நித்திரை என்கிற போதே, தூங்கும் பயிற்சி என்று தெரியும். ஆம், இது மிக மிக முக்கிய மான யோகா. முழுமையான அளவில் உடலை "ரிலாக்ஸ்' செய்வது.
சுத்திகரிப்பு: ஷுத்தி க்ரியா என்று சமஸ்கிருதத்தில் சொல்வர். உடல், மனதை சுத்தப்படுத்துவது. இதற்கு யோகாவில் பயிற்சி உள்ளது.
இந்த ஆறு யோகா பயிற்சிகளையும், யோகா நிபுணர் மூலம் கற்று, தினமும் செய்துவந்தால் போதும், அடடா, சிறிய வயதிலேயே கற்காமல் விட்டுவிட்டு, இப்போது, உடலில் "அங்கே பிடிக்குது... இங்கே பிடிக்குது...' என்று புலம்பு கிறோமே என்று உணரத் தோன்றும்.
உ<ங்களுக்கு நீரிழிவு வியாதி, ரத்த அழுத்தம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக யோகா கற்றுக்கொள்ளுங் கள். உங்கள் பிள்ளைகளையும் அனுப் புங்கள். உடல் மட்டுமல்ல, மனதும் சமப்படும்.
சைக்கோ சொமாட்டிக்.. நம் உடலில் ஏற்படும் கொலஸ்ட்ரோல், நீரிழிவு எல்லா வற்றுக்கும் மனதுதான் காரணம் என்று மருத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொள்வர். பலநோய்களுக்கு காரணம், "சைக்கோ சொமாட் டிக்' காரணம் உள்ளது என்பர். சைக்கோ என்பது மனம். சொமாட்டிக் என்பது உடல். மனது சரியாக இருந்தால், உடலில் எந்த கோளாறும் வராது. அதெப்படி என்று கேட்கலாம்?
"ஸ்ட்ரெஸ்...டென்ஷன்...' என்று சொல்கி றோமே அதற்குக்காரணம் என்ன, மனது தானே! மனது என்பது குப்பைத்தொட்டி போன்றது. கம்பியூட்டர் மொழியில் சொன் னால், "ரீசை கிளபிள' என்று கூறலாம். ஆனால், கம்பி யூட்டரில் வேண்டியதை திரும்ப எடுத்துக் கொள்ள, அந்த "போல்டர்' பயன்படுகிறது. ஆனால், மனதில் உள்ள அழுக்கை நீக்கினால் மீண்டும் வரவே கூடாது. அதை கற்றுத்தருவது தான் யோகா. மனது, உடல் வலுப்பட்டால், அப்புறம் ஏன் வரப்போகிறது இருதயக் கோளாறும், நீரிழிவு நோயும்...!"
நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், முடியும்

சுட்டிபையன்
17-05-2007, 02:21 PM
* புதிய ஆய்வு தகவல்
:"காபி குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது; சில வகை புற்றுநோய்களும் வராமல் தடுக்க முடியும்' என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில், "எக்ஸ்பெரிமென்டல் பயாலஜி 2007' கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், "ஹார்வார்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்'தைச் சேர்ந்த டாக்டர்கள் உட்பட பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது, காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.காபி சாப்பிடுவது மற்றும் நீரிழிவு நோய் குறித்து நுற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொண்ட வேன் டாம் கூறுகையில், "காபியை புதிய ஆரோக்கிய பானமாக நாங்கள் ஊக்குவிக்கவில்லை. எனினும், காபியை விரும்பாதவர்கள், அவர்கள் ஆரோக்கியத்திற்காக காபியை குடிக்குமாறு வலியுறுத்துகிறோம். காபி குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது. ஆனால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் காபியை அளவோடு குடிப்பது நல்லது' என்றார்.காபி குடிப்பதற்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து 400 பேரிடம் ஆய்வு மேற்கொண்ட லேனுர் அராப் கூறிய போது, " காபி குடிப்பதால் உடலில் கொழுப்பு அளவு, பித்த நீர் சுரப்பது ஆகியவை குறையும். அதன் மூலம், பெருங்குடல் மற்றும் அதன் அடிப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்க முடியும். எனினும், காபி குடித்தால் ரத்தப் புற்றுநோய், வயிற்றில் புற்றுநோய் ஆகியவை அதிகரிக்க வாய்ப்பு உண்டு' என்றார்.

நன்றி dinamalar.com