PDA

View Full Version : நான் கவிஞனல்ல..



மதுரகன்
06-05-2007, 05:59 PM
மன்றத்தின் கவிதைக்காதலர்களே...

எனக்கு தெரிந்தவரை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை
யதார்த்தத்தை செப்பனிடும் ஓர் ஓவியனாகவே என்னை எண்ணிக்கொள்கிறேன்...

ஏனெனில் கவிதை என்ற உலகில் நான் கற்பனைக்கு எட்டாத பொருளை தேடவில்லை மாறாக என் இதயம் உணர்த்தும் வெளிப்பாடுகளை கவிதை என்ற வாசலில் கோலமிட்டு வரவேற்கிறேன்....

நான் கவிதைகளுக்காக காத்திருப்பதில்லை பல அவற்றை பலவந்தமாக வெளிக்கொணர முயல்வதுமில்லை...

என்னுடைய மூடிவைக்கப்பட்ட ஒவ்வொரு மெளனமும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன....

நான் கவிதை எப்படி எழுத ஆரம்பித்தேன்..
ஒருமுறை என்னுடைய உள்ளத்தின் மொழியை அப்படியே தாள்களில் பதிந்தபோது புலப்பட்டது என் முதல் கவிதை...

மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளும் உள்ளத்தில் அடைபடும்போது வார்த்தைகளுக்கு பதில் கவிதைகள் உதிக்கும் அதை கவனமாக வெளிக்கொணர்பவனை கவிஞன் என்கிறீர்கள்...

ஆனால் நான் உணர்கிறேன் கவிதை என்பது எம்மிலிருந்து மாறுபட்டது கிடையாது...
எம்முடைய நிஜம் எம்முடைய யதார்த்தம் அதை செப்பனிடுங்கள் வார்த்தைகள் மிளிரும்...

"தன்னுடைய சேலைத்தலைப்பை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளும் பெண் போல தன்னுடைய வார்த்தைகளை அவ்வப்போது எச்சரிக்கையுடன் சரிபார்த்துக்கொள்கிறான் கவிஞன்"


என்னுடைய இணைப்புகள் இதோ உங்களுக்காக..
மதுரகன் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7528)

ஓவியா
06-05-2007, 06:13 PM
அருமை தம்பி, அன்பு மதுரகனுக்கு என் வாழ்த்துக்கள்.:icon_give_rose: :icon_give_rose:

உங்கள் கவிதையை ரசிக்காத ஆளே மன்றத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்க்கு ஒவ்வொரு கவிதையும் தித்திப்பாக இருக்கும்.

பல விசயங்களைத்தொட்டு வடிக்கும் உன் கவிதைகள் பலசுவையில் இருக்கும்.

நீங்கள் எழுதிய இலங்கைத்தமிழனின் சுதந்திரதினம் கவிதை என்றும் என் நினைவில் பசுமை.

நீர் வாழியே, உன் கவித்திறன் வாழியே.

நன்கு படித்து சிறந்த மருத்துவராக வர எனது ஆசிகள். :icon_03:

மதுரகன்
06-05-2007, 06:18 PM
நன்றி ஓவியா அக்கா...

அக்னி
06-05-2007, 10:41 PM
அழகான, அடக்கமான அறிமுகம். அனுபவங்களையே கவிதைகளாக்குபவர்கள்தான் உலகில் அதிகம். ஆனால் அதிலும் கவரும் தன்மை இருத்தல் அவசியம். அது உங்களிடம் இருக்கிறது. உங்கள் ஒரு கவித்துளியை அறிமுகப்பகுதியில் ருசித்தேன். மீதத்தையும் தரிசிக்க, சுட்டிகளை இணைத்திடுங்கள்.

என்றும் சிறக்க வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
07-05-2007, 03:46 AM
வாழ்த்துக்கள் மது... நல்லதொரு அறிமுகம்...தொடர்ந்து பவனி வாருங்கள்....

ஓவியன்
07-05-2007, 03:55 AM
மன்றத்தின் கவிதைக்காதலர்களே...

எனக்கு தெரிந்தவரை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை
யதார்த்தத்தை செப்பனிடும் ஓர் ஓவியனாகவே என்னை எண்ணிக்கொள்கிறேன்...


நண்பரே கவிஞனல்ல என்று அவைக்கு அடங்கியுள்ள நீர், இந்த ஓவியனுக்கு ஒரு கவிஞனாகவே அறிமுகமானீர் ((நட்புக் கவிதைகளில் என்று நினைக்கின்றேன்). உமது வரிகளை இரசித்தேன், தொடர்ந்து இரசிக்க ஆவலாயுள்ளேன்.

உங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களும் பெருக என் வாழ்த்துக்கள்.

ஓவியன்
07-05-2007, 03:56 AM
மதுரகா உங்கள் கவியுலகப் பயணத்திற்கு என் காணிக்கை 100 காசுக்கள்.

மனோஜ்
07-05-2007, 03:40 PM
மதுரகான் அவர்களுக்கு என்வாழ்த்துக்கள்
மென்மேலும் கவிதைகள் பிறக்க

மதுரகன்
07-05-2007, 05:55 PM
அனைவருக்கும் நன்றி...
என்னுடைய பெரும்பாலான கவிதைகள் அனைத்துக்கும் இணைப்பு விரைவில் மேலே தரப்படவுள்ளது..

poo
08-05-2007, 06:50 AM
பெயரிலும் கவிதையை ஒளித்து வைத்திருக்கும் மதுரகன்..

வாழ்த்துக்கள் கவிஞரே..

மதுரகன்
08-05-2007, 06:08 PM
நன்றி பூ இத்தனை நாளில் என் பெயருக்குள் கவிதை ஒளிந்திருப்பதை நானே அறிந்து கொள்ளவில்லை.

"தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் குழந்தையும்
அம்மா சொல்லித்தான் தெரிந்துகொள்கிறது.
கண்ணாடியில் தெரிவது தன்முகம் என்பதை..."

leomohan
08-05-2007, 06:14 PM
வாழ்த்துகள் மதுரகன். கவிதைகள் தொடரட்டும்.

மதுரகன்
09-05-2007, 05:06 PM
நன்றி மோகன் அண்ணா...

ஆதவா
11-05-2007, 01:28 AM
அழகான வாசிப்புத்திறன் அடங்கிய கவிதைகள்.. இடையே ஏற்பட்ட இடைவெளியில் பல நமக்குக் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்...எனினும் சில வரிகள் என் நெஞ்சைவிட்டு நீங்காதவைகள்... நேரம் இருக்கும்போது குறிப்பிடுகிறேன்.. மதுரகன் மசாலா பத்திரைக்கைகளுக்கு எழுதும் சாதா கவி அல்ல... அசாதாரணத் திறமையை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே ஒவ்வொன்றாய் விடும் அருமையான கவிஞர்... எழுதுங்க மதுரகன்...இன்னும் நிறைவாய்

தாமரை
11-05-2007, 01:38 AM
எண்ணங்கள் வண்ணமாய் தீட்டப்பட
கவிதைகள் பிறக்கின்றன.
நல்ல கவிதைகளின் கரு
நொடியில் பிறந்து விடுகிறது..
வார்த்தைகளை தேடிப் போகாமல்
எழும் உணர்வ்களை
எழுதக் கற்றுக்கொண்டால்
கவிமழை பொழியும்

lolluvathiyar
11-05-2007, 02:10 PM
மதுரகன்
பெயரே ஒரு கவிதை
அறிமுகம் அபாரம்
அதில் பாடம் எடுத்து விட்டாய்

மதுரகன்
12-05-2007, 05:41 PM
ஆதவா நன்றி உங்கள் கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் உங்கள் தயவை தொடர்ந்து உதவுங்கள்....
செல்வன் அண்ணா நீங்கள் எனக்கு இராவணன் பற்றிய விவாதத்தில் அறிமுகமானதை மறக்க முடியாது...
தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் லொள்ளு வாத்தியார் அவர்களுக்கும் நன்றி..

மருதம்
04-08-2007, 09:09 AM
ஆகா! கவிஞன் எப்படி என்பதை கற்பனைகலக்காத கவித்துவமாய் சொன்ன மதுரகன் நிஜத்தில் நீ ஒரு வித்தகன்!

ஓவியன்
04-08-2007, 09:12 AM
மருதம் புதியவரான உங்கள் தமிழ் அருமையாக உள்ளதே − பாராட்டுக்கள்.

உங்களை அறிமுகம் செய்வது எப்படி என்பது பற்றி அறிவுறுத்தியுள்ளோம், உங்கள் தனி மடலைப் பாருங்கள் அல்லது உங்களது முதாலவது பதிப்பைப் பாருங்கள்.

மதுரகன்
20-06-2008, 05:47 AM
சில பொழுதுகள் மறக்க முடியாதவை.
சுமைகள் நிறைந்த இந்த நேரங்களிலும் கண்ணில் விழுந்த தூசி போல உறுத்திக்கொன்டிருக்கும் தமிழ் மன்றத்தில் தவழ்ந்த பொழுதுகள் மறக்க முடியவில்லை மீள வருகின்றேன் என் புத்தக சுமைகளிலிருந்து துளிர்த்து எழுகிறேன்..
"மேகங்கள் உரசிக்கொள்ளும் போது பிறக்கும் மின்னல் போல என் நினைவுகள் உரசிக்கொள்கையில் பிறக்கும் கவிகள்"

ஆதவா
20-06-2008, 06:02 AM
சில பொழுதுகள் மறக்க முடியாதவை.
சுமைகள் நிறைந்த இந்த நேரங்களிலும் கண்ணில் விழுந்த தூசி போல உறுத்திக்கொன்டிருக்கும் தமிழ் மன்றத்தில் தவழ்ந்த பொழுதுகள் மறக்க முடியவில்லை மீள வருகின்றேன் என் புத்தக சுமைகளிலிருந்து துளிர்த்து எழுகிறேன்..
"மேகங்கள் உரசிக்கொள்ளும் போது பிறக்கும் மின்னல் போல என் நினைவுகள் உரசிக்கொள்கையில் பிறக்கும் கவிகள்"

அடிக்கடி வாப்பா! உன்னோட எழுத்துக்கள் நிச்சயம் இம்மன்றத்திற்குத் தேவை.