PDA

View Full Version : முதலும் முடிவும் ஆனாய்



சக்தி
06-05-2007, 03:29 PM
எங்கோ
எனை மறந்து
வாழ்ந்திருந்தேன்
எதுவும்
எனக்கில்லை- என
துறவறம்
பூண்டிருந்தேன்
கடமைகளில்
என்னை
தொலைத்திருந்தேன்

எந்த துளை
வழியே- என்னுள்
வந்தாய்
எப்படி எனை - நீ
தின்றாய்

தெரியாமல்
வந்தேன் - என
அறியாமல்
சொல்வாயோ
தெரியாமல்
வருவதற்கு
என் இதயமென்ன
சத்திரமா?
அன்றி
(நான்) அறியாமல்
செல்வது தான்
சாத்தியமா?

புரியாமல்
கேட்கின்றேன்
புரிந்துதான்
சொல்வாயொ?

வேண்டாமடி
எள்ளாதே
எனை - நீ
தள்ளாதே
விழியாலே
கொல்லாதே
முகவரியின்றி
தவிக்கும்
மனிதன் போல்
எனை செய்யாதே

கற்சிலையான
என்னை
உயிர்ப்பித்தவளே
நீயே - என்
முதலும் முடிவும் ஆனாய்.

இணைய நண்பன்
06-05-2007, 03:58 PM
ஆஹா அருமை......அருமை ..பாராட்டுக்கள்

ஓவியன்
07-05-2007, 04:38 AM
தெரியாமல்
வந்தேன் - என
அறியாமல்
சொல்வாயோ
தெரியாமல்
வருவதற்கு
என் இதயமென்ன
சத்திரமா?
அன்றி
(நான்) அறியாமல்
செல்வது தான்
சாத்தியமா?

புரியாமல்
கேட்கின்றேன்
புரிந்துதான்
சொல்வாயொ?


எதுகை மோனையில் பிச்சு உதறி இருக்கிறீங்க ரோஜா!!

''தெரியாமல் வருவதற்கு என் இதயம் என்ன சத்திரமா?''

சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் வரியது. :ernaehrung004:

பிரமிக்க வைக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.

சக்தி
07-05-2007, 06:06 AM
விஷ்டா மற்றும் ஓவியன் அவர்களுக்கு என் நன்றிகள்

poo
09-05-2007, 07:38 AM
வாழ்த்துக்கள் ரோஜாவின் ராஜா...

கவிதை நடை அட போட வைக்கிறது...

தொடருங்கள்.

ஆதவா
09-05-2007, 08:04 PM
ரோசா.... அருமையப்பா!! காதல் கவிகள் உங்களுக்கு சரளமாக வரும்போல... வாழ்த்துக்கள்

சக்தி
15-05-2007, 04:51 PM
எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.

ஷீ-நிசி
15-05-2007, 05:06 PM
வேண்டாமடி
எள்ளாதே
எனை - நீ
தள்ளாதே
விழியாலே
கொல்லாதே
முகவரியின்றி
தவிக்கும்
மனிதன் போல்
எனை செய்யாதே

ரசித்தேன் நண்பரே!

மனோஜ்
15-05-2007, 07:16 PM
அருமை
முதலும் முடிவும்
முற்சியில் கவிதையானது

mravikumaar
16-05-2007, 01:30 PM
அருமையான கவிதை வாழ்த்துக்கள் ரோஜா

அன்புடன்,
ரவிக்குமார்

சக்தி
20-05-2007, 06:23 AM
ஷி-நிசி,மனோஜ் மற்றும் ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி.