PDA

View Full Version : உதவி: என்ன படிக்கலாம்?



அரசன்
06-05-2007, 12:51 PM
மன்ற நண்பர்களுக்கு,

நான் பி.எஸ்.சி., கணிதப் பாடப்பிரிவில் தொலைத்தூரக் கல்வி முறையில் படித்திருக்கிறேன். எனக்கு கணினி துறையில் வேலை செய்ய விருப்பம் இருக்கிறது. ஆனால் எனக்கு கணினியில் ஃபேசிக் நாலெட்ஜ் மட்டுமே தெரியும். நான் எந்த கம்ப்யூட்டர் கோர்ஸும் இதுவரை பண்ணியதில்லை. நான் கணினி துறையில் வேலை செய்ய வேண்டுமெனில் எந்த கோர்ஸில் சேர வேண்டும். எந்த கோர்ஸ் படித்தால் என்ன வேலைக் கிடைக்கும்.

மன்ற நண்பர்களின் உதவியை எதிர்ப்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறேன்.

leomohan
06-05-2007, 02:51 PM
மன்ற நண்பர்களுக்கு,

நான் பி.எஸ்.சி., கணிதப் பாடப்பிரிவில் தொலைத்தூரக் கல்வி முறையில் படித்திருக்கிறேன். எனக்கு கணினி துறையில் வேலை செய்ய விருப்பம் இருக்கிறது. ஆனால் எனக்கு கணினியில் ஃபேசிக் நாலெட்ஜ் மட்டுமே தெரியும். நான் எந்த கம்ப்யூட்டர் கோர்ஸும் இதுவரை பண்ணியதில்லை. நான் கணினி துறையில் வேலை செய்ய வேண்டுமெனில் எந்த கோர்ஸில் சேர வேண்டும். எந்த கோர்ஸ் படித்தால் என்ன வேலைக் கிடைக்கும்.

மன்ற நண்பர்களின் உதவியை எதிர்ப்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறேன்.

மூர்த்தி அவர்களே

கணினி துறையில் நான்கு முக்கிய துறைகள் உண்டு

Hardware - வன்பொருள் - இதில் வாய்ப்புகள் குறைந்துக் கொண்டு வருகிறது
Software - மென்பொருள் - இதில் நல்ல வாய்ப்புகள் எப்போதும் உண்டு. இதில் இரண்டு வகைகள் உண்டு
1. Programming
2. Database Administration

முதல் துறையில் செல்ல நல்ல கணினி அறிவும் பகுத்தறிவும் - logical thinkingம் வேண்டும். அதாவது ஒரு problem இருந்தால் அதற்கு எவ்வாறு விடை கிடைக்கும் என்று ஆராயும் திறன்.
இந்த துறையில் செல்ல விரும்பினால் Microsoft .Net பாடங்களில் சேர்ந்து MCSD ஆக முயலுங்கள்.

இரண்டாவது Oracle அல்லது Microsoft பாடங்கள் எடுத்து Oracle Database Administrator அல்லது Microsoft SQL Administrator ஆகலாம். இதற்கு நல்ல சம்பளம் உண்டு.

மூன்றாவது துறை Networking
இதற்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. MCSE - Microsoft அல்லது Cisco CCNA விலிருந்து துவங்கலாம்.

நான்காவது Security
இதற்கு Firewall போன்ற பாடங்கள் பயில வேண்டும். இதற்கு முதலில் நெட்வொர்க்கிங்க பயின்று வருவது நல்லது.

நீங்கள் கணினியில் ப்ரோகிராமிங்க செய்ய விரும்பினால் இரண்டாவது துறையை எடுத்து துவங்குங்கள்.

அல்லது மூன்றாவது-நான்காவது துறையை எடுத்து துவங்குங்கள்.

சுமார் ஒருவருட படிப்பு பயிற்சிக்கு பிறகு நீங்கள் 20-30,000 வரை துவக்க சம்பளத்தில் வேலையை எதிர்பார்க்கலாம்.

இரண்டு அல்லது மூன்றாண்டுகள் வேலைக்கு பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு அதற்கான தொடுப்புகள் தருகிறேன். மேலும் கேள்வி இருந்தால் தாராளமாக கேளுங்கள்.

அரசன்
06-05-2007, 04:00 PM
விவரமான தகவல் கொடுத்தமைக்கு நன்றி.

அப்புறம் எனக்கு .நெட் படிக்கலாம்ன்னு ஒரு ஐடியா இருக்குது. அப்பறம் நெட்நொர்க்கிங்ன்னா அது ஒரு வருட படிப்பா? அதில் என்ன படிக்கணும். இதுல ஒரு சின்ன அறிமுகம் மட்டும் கொடுங்க. மற்ற சந்தேகங்களை நான் பிறகு கேட்கிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி

ஓவியா
06-05-2007, 04:06 PM
மோகன் சூப்பர் ஆரம்பம்.

நல்ல நல்ல தகவல். இப்படியே கட்டூரை போல் தொடருங்களேன்.

உங்கள் எழுத்துதிறன் அனைவரையும் கவரும். இந்த பகுதியை இப்படியே தொடருங்கள்.

நன்றி

leomohan
06-05-2007, 04:41 PM
நன்றி ஓவியா.

.நெட் படிக்க வேண்டும் என்றால் www.microsoft.com (http://www.microsoft.com) தளத்திற்கு சென்று Education, Certification போன்ற தொடுப்புகளை ஆராயுங்கள்.

எந்த Programming Language படிப்பதற்கு முன் Programming Logics & Techniques (PLT) மிகவும் அவசியம்.

இந்த தலைப்பில் இணையத்தில் நிறைய விஷயங்கள் கிடைக்கும். அதாவது மென்பொருள் தயாரிக்கும் அடிப்படை தத்துவம் எந்த மென்பொருள் மொழி சாராமல் சொல்லித்தருவதே இதன் நோக்கம்.

உதாரணமாக இரண்டு எண்களை கூட்ட வேண்டும் என்றால் அதன் கூட்டிய தொகையை இன்னொரு எண்ணில் சேமிக்க வேண்டும். இது எல்லா மொழிகளுக்கும் பொது. அதை எளிமையாக விளக்குவார்கள்.

உதாரணமாக

5 ஐ A வில் சேமி
10 ஐ B வில் சேமி
இவையிரண்டையும் கூட்டி வரும் விடையை C யில் சேமி.

A=5;
B=5;
C=A+B;
Print C;

இவ்வாறு துவங்கி பல அடிப்படைய விஷயங்களை கற்ற பிறகு உங்கள் ப்ரோகிராமிங்க் பயணம் துவங்கும்.

வாழ்த்துகள்.