PDA

View Full Version : இதையாவது அறிவாயா?

mravikumaar
06-05-2007, 03:44 AM
நீ வருவதை
என் மனம் அறியும்
நீ அறிவாயா?

நீ சிரித்தால்
என் மனம் துள்ளும்
நீ அறிவாயா?

நீ பேசும் அழகை
என் மனம் ரசிக்கும்
நீ அறிவாயா?

நீ சோகமாயிருப்பதை
என் மனம் உணரும்
நீ அறிவாயா?

முதலில்
என் காதலையாவது
நீ அறிவாயா?

அன்புடன்,
ரவிக்குமார்

ஓவியன்
06-05-2007, 05:46 AM
நீங்கள்
இந்தக் கவி எழுதியதை
அவள் அறிவாளா?

நித்தம் நீ(ங்கள்)
அவள் நினைப்பில் நனைவதை
அவள் அறிவாளா?

உங்கள்
கனவுகள் கூட அவள்
நினைவுகளால் நிரம்புவதையாயினும்
அவள் அறிவாளா??

ஓவியா
06-05-2007, 06:51 PM
ரவி,
உங்கள் கவிதை நல்ல ரசனையா இருக்கு. பலே

ஓவியன்,
உங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்

இரண்டு கவிதையும் மிகவும் அருமை,
மன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.

உங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.

இருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.

இரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு. :musik010:

ஓவியன்
07-05-2007, 04:17 AM

ஆகா! - என் கிறுக்கலுக்கும் ஒரு அங்கிகாரமா?
மிக்க நன்றி அக்கா!

தொடர்ந்து ஜமாய்ப்போம்.

mravikumaar
08-05-2007, 01:50 PM
ஓவியன்,
உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.

பலே சொன்ன ஓவியாவிற்கு நன்றி

தங்களுக்கு கிடைக்கும் பின்னூட்டம்தான் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கிறது.

அன்புடன்,
ரவிக்குமார்

poo
09-05-2007, 06:06 AM
கடையதை அறிந்துவிட்டால்.. கடைவிரிக்காமலே அனைத்தும் அறிந்துபோவாளே...

காத்திருப்பும் சுகம்...

வாழ்த்துக்கள் நண்பரே..

mravikumaar
09-05-2007, 08:51 AM
நன்றி பூ

அன்புடன்,
ரவிக்குமார்

ஓவியன்
09-05-2007, 08:58 AM
ஓவியன்,
உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.

நன்றி ரவி!

உங்களுடையதும் அருமை தான்
உங்கள் வரிகள் தான் என்னையும் எழுதத் தூண்டியது.