PDA

View Full Version : கணனியா? கணினியா?

தீபன்
05-05-2007, 07:54 PM
கணனி சரியா..? கணினி சரியா..?

கணினி என்பதே சரியானதென நான் படித்திருக்கிறேன்.. ஆனால் மன்றத்தில் பல இடங்களிலும் கணனி என்றே பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறு..?

pradeepkt
05-05-2007, 08:10 PM
கணிப்பொறி... என்பதே சரி...
கணிதம் செய்யும் பொறி அல்லது கருவி என்பதே கணினி..

அக்னி
05-05-2007, 08:43 PM
computer ஐ தானே கேட்கின்றீர்கள். நான் கணனி என்றுதான் பயன்படுத்துவதுண்டு. சரியாகத் தெரியவில்லை. மன்ற உறுப்பினர்கள் சரியான பதிலைத் தருவார்கள். பொறுத்து பார்ப்போம்...

இணைய நண்பன்
05-05-2007, 10:13 PM
கணனி - calculator, கணினி -Computer என்றும் தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எல்லோரும் Computer ஐ கணனி என்றே அழைக்கிறார்கள்.ஏன் என்று புரியவில்லை?

பாரதி
06-05-2007, 01:35 AM
கணினி என்பதே சரி.

சுட்டிபையன்
06-05-2007, 03:13 AM
கணினி - computer
மீக்கணினி - Super computer
ஏட்டுக்கணினி - Notebook
ஒத்திசை கணினி - Analog Computer
இலக்கமுறை கணினி - Digital Computer

ராஜா
06-05-2007, 07:09 AM
மடிக் கணினி ; லேப் டாப்.

மடியிலும் வைத்துக் கொள்ளலாம். மடித்தும் [மூடியும்] வைத்துக் கொள்ளலாம்.

ஓவியன்
06-05-2007, 07:14 AM
மடிக் கணினி ; லேப் டாப்.

மடியிலும் வைத்துக் கொள்ளலாம். மடித்தும் [மூடியும்] வைத்துக் கொள்ளலாம்.

அப்ப,
கையடக்க கணினி - Palmtop

அரசன்
06-05-2007, 04:20 PM
கணனி என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. கணினி என்பதே சரி.

அக்னி
06-05-2007, 10:13 PM
கணினி - computer
மீக்கணினி - Super computer
ஏட்டுக்கணினி - Notebook
ஒத்திசை கணினி - Analog Computer
இலக்கமுறை கணினி - Digital Computer
மடிக் கணினி - Laptop
கையடக்க கணினி - Palmtop

மேலே கூறியவற்றையெல்லாம் ஒன்றாக்கிவிட்டேன். கணினி சந்தேகம் தீர்ந்தது. நன்றி நண்பர்களே...

ஓவியா
06-05-2007, 10:16 PM
சும்மா தூள் கெளப்பீடீங்க அக்கினியாரே.

சபாஷ். நன்றி. பலே.

அக்னி
06-05-2007, 10:21 PM
சும்மா தூள் கெளப்பீடீங்க அக்கினியாரே.

சபாஷ். நன்றி. பலே.

தங்களின் பாராட்டு மேலே விளக்கம் தந்த நண்பர்களுக்குச் சேர்வதாக...

ஓவியா
06-05-2007, 10:26 PM
அப்படியே ஆகட்டும்.

தீபன்
07-05-2007, 06:04 PM
விளக்கங்கள் எல்லாம் அருமையாகத்தான் உள்ளது.. ஆனால், சரியெனத் தெரிந்த பின்பும் மன்றத்தின் வகைப்படுத்தல்களிலும் நிர்வாகத்தினரின் உபயோகத்திலும் இன்னமும் கணனி என்றே உள்ளதே..? அதை யார் திருத்துவது..?

poo
09-05-2007, 07:29 AM
நானும்கூட பல இடங்களில் பலவாறாக உபயோகித்திருக்கிறேன்.. மன்னிக்கவும் நிர்வாகிகளே...

தீபன்.. நிச்சயமாக கண்காணிப்பாளர்களுக்கு நேரம் கிடைக்கும்போது திருத்தி விடுவார்கள்..

தீபன்
10-05-2007, 05:22 PM
இது நேரம் கிடைக்கும்போது செய்யவேண்டிய திருத்தங்கள் அல்ல... தமிழை வளர்க்கும் தமிழ் மன்றத்தின் தலைப்புகளிலேயே தவறுகள் இருக்கலாமா..? அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக திருத்தவேண்டாமா..?

விகடன்
13-05-2007, 02:37 PM
கலைச்சொற்களின் தெளிவுபடுத்தலிற்கு கோடி நன்றிகள்

அமரன்
15-05-2007, 05:13 PM
இது நேரம் கிடைக்கும்போது செய்யவேண்டிய திருத்தங்கள் அல்ல... தமிழை வளர்க்கும் தமிழ் மன்றத்தின் தலைப்புகளிலேயே தவறுகள் இருக்கலாமா..? அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக திருத்தவேண்டாமா..?

மாற்றி விட்டார்களே தோழா. தவறைச்சுட்டிக்காடிய நீங்கள் திருத்திக்கொண்டதற்காக ஒரு வாழ்த்தோ நன்றியோ கூறிப் பதியவில்லையே. நன்றி கூறுவதும் வாழ்த்துக்கூறுவதும் தமிழனின் பண்பாடல்லவா?

தீபன்
16-05-2007, 06:15 PM
மாற்றி விட்டார்களே தோழா. தவறைச்சுட்டிக்காடிய நீங்கள் திருத்திக்கொண்டதற்காக ஒரு வாழ்த்தோ நன்றியோ கூறிப் பதியவில்லையே. நன்றி கூறுவதும் வாழ்த்துக்கூறுவதும் தமிழனின் பண்பாடல்லவா?

கவனிக்கவில்லை தோழரே.. ஆனால் நன்றி கூறவேண்டியட்து நானல்ல... ஒருவகையில் பார்க்கப்போனால் எனக்குத்தான் நீங்கள் கூறவேண்டும்... தவறை சுட்டிக்காட்டியதிற்கு. நிர்வாகிகள் தங்கள் தவறை திருத்த உதவியது நான்.. பிறகு நானே நன்றி கூறாமல் உள்ளேனென்று குறை கூறலாமா..? ஆனால், உடனடியாக தவறை திருத்திக்கொண்ட மன்ற நிர்வாகிகளிற்கு என் பாராட்டுக்களை சொல்லிக்கொள்கிறேன்...

(இந்தவிடயத்திற்கே தமிழரின் கலாசாரம் பண்பாடென்று கதைக்கின்ற நீங்கள் எங்கள் அவல ஓலங்களிற்கு ஆதராவாக என்ன செஇகிறீர்கள் நண்பரே..?

அமரன்
16-05-2007, 06:18 PM

முதலில் மன்றத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
அடுத்த விடயம் உங்கள் அடைப்புக்குறிக்குள் இருக்கும் கேள்விக்கு பதிலளிக்க மன்றத்தின் விதிமுறைகளில் இடமில்லை. அதனால் தவிர்த்துவிடுகின்ரேன். வேண்டுமானால் எனது இலத்திரன் அஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

தீபன்
16-05-2007, 06:25 PM

நன்றிக்கு நன்றி நண்பரே... சரி, நேரம் கிடைக்கயில் உங்களை தொடர்புகொள்கிறேன்.